Jump to content

கே இனியவனின் கஸல் கவிதைகள்


Recommended Posts

நீ அழகுதான் ...
எனக்கு வேண்டாம் ....
முடிந்தால் காதல் -தா ....!!!

கடித்து 
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!!!

ஏன் தத்தளிக்கிறாய்...?
துடுப்பு நான் இருக்கிறேன் ...
உன்னை காப்பாற்றுவேன் ...!!!

கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம் 
தொடர் பதிவு கஸல் - 927

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

இதயத்தின் ஈரம் 
வற்றி துடிக்கும் 
மீன் ஆனேன் ....!!!

வைரம் 
கண்ணாடியை ....
வெட்டும் ...
மௌனம் காதலை ...
வெட்டும் .....!!!

நீ...... 
எப்போதும்... 
மென்மையானவள்.... 
கண்ணீர் 
மென்மையானது 
உன்னைப்போல் .....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 931

Link to comment
Share on other sites

காதலில் மேதை ...
ஆனவனும் உண்டு ....
போதையானவனும் உண்டு ....
நீ என்னை பேதையாக்கி 
விட்டாய் .....!!!!

காதல் தேன் கூட்டை ...
கட்டியதும் நீ 
கல்லெறிந்ததும் நீ 
காதல் தேன் போல் ....
வழிந்தோடுகிறது .....!!!

பொருள் காணாமல் ...
போனால் களவு ....
மனம் காணாமல் ...
போனால் காதலாம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 932

சூரியன் கிழக்கே ....
தோன்றி மேற்கே ....
மறையுமாம் ....
நீயும் முகத்தில் ....
தோன்றி -அகத்தில் ...
மறைந்தாய் ....!!!

நீ ஒரு விலாங்கு மீன் 
எனக்கு தலையையும் ...
குடும்பத்துக்கு ....
வாலையும் காட்டுகிறாய் ....!!!

நீ 
கலங்கரை விளக்கம் ....
நான் கப்பல் ....
உன் உதவியில்லாமல் ....
கரைசேர முடியாது .....
விட்டு விலகி விடாதே ....
எனக்கு நேராகவே இரு ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 933
 

Link to comment
Share on other sites

என்னை குப்பை ...
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!

ஒவ்வொரு..... 
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர் 
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!

காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934

Link to comment
Share on other sites

பட்ட 
மரத்தில் சிறு ஈரம்
சிறு ஈரத்தில் படரும் ....
சிறு பாசிபோல் ....
உன் நினைவுகள் ...
என்னில் ஒட்டியபடி ....!!!

என் உள்ளத்தில் ...
உறங்கிகொண்டிருந்த ....
உன் நினைவுகள் .....
மெல்ல மெல்ல இறக்கிறது ....!!!

நூல் அறுந்த பட்டம் ....
மேலும் போகாமல் ....
கீழும் விழாமல் 
தத்தளிக்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 935

Link to comment
Share on other sites

நான் மரபு - திருக்குறள்... 
நீ நவீனம் - ஹைக்கூ ...
நம் காதல் கண்ணீர்....
கஸல் ......!!!

எழுதுகிறேன் ...
எழுத்து கருவி மறுக்கிறது ....
எழுத்து பிழை -நீ ......!!!

நினைவுகள் நரகம் ....
கவிதை சொர்க்கம் .....
காதலில் சொர்க்கத்தில் ....
மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 936
 

Link to comment
Share on other sites

கண் அசைத்து ...
காதல் வானவில் ...
ஆனாய்....
இதயம் கருகி .....
இருளானேன் ....!!!

நீ 
சேற்றில் மலர்ந்த 
மலர் - நான் 
பூசாரி மலரை ....
உதிரப்பண்ணுகிறேன்....!!!

நீ ஓடம் 
நான் துடுப்பு ...
காதல் தாழமுக்கம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 937
 

Link to comment
Share on other sites

பன்னீரால் காதல் ....
மழை பொழிவாய்...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் பொழிந்தாய் ....!!!

காதல் 
சேர்ந்து வாழவே ....!
நமக்கேன் விலகி வாழ ....
ஆண்டவன் எழுதினான் ....!!!

உன் காதல் 
என் உறவுகளை....
பிரித்து வைத்துவிட்டது ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 938
 

Link to comment
Share on other sites

நீ 
என்னை 
காயப்படுத்துவது ...
எனக்கு காயமல்ல ...
என் பாவத்தின் பதிவு ....!!!

காதல் தோல்வியில் ...
ஏன் விஷம் குடிக்கிறார்கள் ...?
காதலே விஷம் தானே ....!!!

காதல் திரையை ...
கிழித்தேன் ....
என்னை மீட்டு ...
விட்டேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 939

நீ ..
காதல் ....
கல்லால் எறிந்தால் .....
காயப்பட்டிருப்பேன் ....
கற்கண்டால் அல்லவா ...
எறிகிறாய்....!!!

சுண்டினால் ஓடிவரும் ....
நாய் குட்டிபோல் ...
உன் இதயம் சுண்டியது ....
வந்துவிட்டேன் ....!!!

நீ 
என்ன ஆங்கிலேயர் ...
காலணித்துவ பெண்ணா ....
ஞாயிறு விடுமுறை    
எடுகிறாய் ....? 

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 940

Link to comment
Share on other sites

நீ ..
காதல் ....
கல்லால் எறிந்தால் .....
காயப்பட்டிருப்பேன் ....
கற்கண்டால் அல்லவா ...
எறிகிறாய்....!!!

சுண்டினால் ஓடிவரும் ....
நாய் குட்டிபோல் ...
உன் இதயம் சுண்டியது ....
வந்துவிட்டேன் ....!!!

நீ 
என்ன ஆங்கிலேயர் ...
காலணித்துவ பெண்ணா ....
ஞாயிறு விடுமுறை    
எடுகிறாய் ....? 

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 940

Link to comment
Share on other sites

உன் 
உணர்வுகளையும் 
என் 
உணர்வுகளையும் 
தொலைத்து பெற்றதே 
காதல் ....!!!

நீ 
கண்ணீரால் பேசுகிறாய் 
நான் 
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!

ஒருதலை காதல் வலி 
இருதலை காதல் வலி 
இக்கரைக்கு அக்கறை 
பச்சை .....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941
 

Link to comment
Share on other sites

நீ 
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்..... 
தீர்க்க வேண்டும் ...!!!

பிறர் துன்பத்தில் 
கண் கலங்கும் நீ 
என் துன்பத்தில் 
பங்குகொள் ......!!!

நீ 
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942

உன்னை 
காதலிக்கவேண்டும் 
என்பதற்காகவே 
காணாமல் போனவன் ...!!!

காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!

உனக்கும் 
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943

Link to comment
Share on other sites

என் மூளையை ...
பரிசோதிக்க வேண்டும் ...
என்னையே 
நினைப்பதில்லை....!!! 

என் 
கண்ணீர்த்துளிகள் ....
உனக்கு முத்துகள் ...
மாலையாய் கோர்கிறாய் ...!!!

சின்ன துவாரத்தை ...
அடைக்காமல் விட்டேன் ...
இதயத்தை விட்டு ...
வெளியேறிவிட்டாய் ....!!!
   
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 944
 

Link to comment
Share on other sites

மஞ்சள் நிறத்தில் ...
காதல் செய்தேன் ...
குங்குமம் என்னை ...
பிரித்து விட்டது ...!!!

வற்றி போகும் நதியில் ...
முத்து குளிக்க சொல்கிறாய் ....
செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!!

எல்லோர் 
காதல் வலியும்....
ஒன்றுதான் -காயங்கள்...
மட்டுமே மாறுகிறது ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 945

Link to comment
Share on other sites

நீ 
சொல்ல 
தவிர்க்கும் -சொல் 
நான் தவிக்கும் -சொல் 
காதல் ....!!!

உன்னால் 
கொஞ்சம் பன்னீர் 
கொஞ்சம் கண்ணீர் 
தவிக்கிறேன் ....!!!

இரண்டு 
இதயங்கள் கண் மூடி 
உறி உடைத்த கதை 
நம் காதல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 946
 

Link to comment
Share on other sites

நேரில் மௌனம் 
கனவில் பேச்சாளர் 
எத்தனை நாட்களுக்கு 
இந்த தண்டனை ...?

அவ்வப்போது 
முகில் வந்து நிலாவை 
மறைப்பதுபோல் ...
உன் வருகை ....!!!

பூவின் 
இதழ்கள் உதிர்வதுபோல் 
உன் நினைவுகள் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 947

எனக்கு 
காதல் புதிரானது 
கண்ணீர் பன்னீரானது
வார்த்தைகள் காயங்கள் 
ஆனது ....!!!

நான் 
உன் கண்ணில்...
ஒளியை தேடுகிறேன் ...
நீயோ என் கண்ணில் ...
ஒளியை பறிக்கிறாய் ....!!!

தயவு செய்து 
பேசிவிடாதே -உன் 
மௌனத்தில் இன்பம் 
காண்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 948

Link to comment
Share on other sites

உன்னை பகலில் ....
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்.... 
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!

காதல் குப்பை - நான் 
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!

ஆயுள் 
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார் 
என்றால் ....!!!

 ^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949

Link to comment
Share on other sites

உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!

மூச்சு 
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?

பூக்கும் 
வரை காத்திருந்த 
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950
Link to comment
Share on other sites

உன் கண்கள் ...
எனக்கு கை விலங்கு....
உன் பார்வை 
எனக்கு பாடை ....!!!

காதல் 
ஒரு வினோத உலகம் ...
கவலைகள் மூலதனம் 
கண்ணீர் அதன் சொத்து ....
மூலதனம் சொத்துக்கு
சமன் ........!!!

கண்ணீர் துளியால் 
கவிதை எழுதுகிறேன் 
பன்னீர் தெளிக்க 
ஆசைப்படுகிறாய் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 951

Link to comment
Share on other sites

நீ 
காதலை ....
சொல்லமுதல் ....
நான் இன்பமாய் ....
இருந்தேன் ....!!!

உன் பார்வை 
எனக்கு அவசர சிகிச்சை 
மருத்துவ மனை ....
உன் வார்த்தை 
நோய் காக்கும் மருந்து ...!!!

நீ 
சவக்குழி ....
நான் 
சவம் என்னை ...
உன்னில் புதைத்துவிடு ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 952

Link to comment
Share on other sites

எதற்கும் 
அஞ்சாதவன் ....
உன் கண்ணுக்கு ...
அஞ்சுகிறேன்......!!!

நான்....
காதலில்  ....
உயிரெழுத்து ......
நீ 
ஆயுத எழுத்து ....!!!

அரசியலில் -நீ 
பேசியிருந்தால் ...
வென்றிருப்பாய் ....
காதலில் பேசியதால் ...
தோற்று விட்டாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 953


 

Link to comment
Share on other sites

நான் 
சிப்பிக்குள் இருக்கும் 
முத்து 
நீ 
சிப்பிக்கு வெளியே 
சேறு.....!!!

உன்னுடன் 
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம் 
காதலுடன் வாழ்வேன் ....!!!

உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 954

இயற்கை பூவை ....
காட்டிலும் ....
நம் காதல் பூ 
விரைவாக 
வாடிவிட்டது .....!!!

நீ 
கவலையோடு ....
மூச்சு விடாதே ....
இதயம் கருகிவிடும் ....!!!

நாகம் 
கொடிய விஷம் 
யார் சொன்னது ...?
உன் 
நகம் சுண்டும் ....
ஓசையை விட வா ..?

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 955

Link to comment
Share on other sites

நீ..... 
காதல் வீட்டில் இருந்து ...
கல் எறியாதே .....!!!

என்னை காயப்படுத்தி .....
உன்னால் வாழமுடியும் ....
என்றால் இன்னும் நல்லா ...
காயப்படுத்து ....!!!

நான் ..நீ ...காதல் 
ஒரு முச்சந்தி ....
சந்தித்தே ஆகவேண்டும் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 956
 

Link to comment
Share on other sites

நீ 
ஆழ்கடல் காதல் ....
அதில் தத்தளிக்கும் ....
சிறு ஓடம் நான் ....!!!

துப்பாக்கியால் ....
காயப்படுவதும் ....
உன் " கண்" படுவதும் ....
ஒன்றுதான் ....!!!

நீ 
கனவாய் இருக்கபார் ....
இல்லையேல் தூக்கமாக ....
வந்துவிடு ...
இல்லையென்றால் ...
காதலில் என்னபயன்...?

 ^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 957
 

உன்னை நினைத்து ...
நினைத்து -நான் 
அனாதையாகினேன்....!!!

நீ 
என் கண்ணீர் துளியில் 
நீச்சல் அடிக்கிறாய் ....!!!

உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த  இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!! 
 
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 958
 

Link to comment
Share on other sites

என் கண்ணீரில் ...
பூத்த கண்மணி ..
நீ .....!!!

உன் 
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!

குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்... 
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.