Sign in to follow this  
putthan

தாடிக்கார அண்ணே

Recommended Posts

புத்தக வெளியீடு என்ற விளம்பரத்தை இணையத்தில பார்த்தவுடன் அதில் கலந்துகொள்வது எனமுடிவெடுத்தேன். மெல்பேர்னிலிருந்து எழுத்தாளர்கள் வேறு பங்குபற்றுகிறார்கள் என எழுதியிருந்தார்கள் எனவே நிச்சயம் போகவேணும் என தீர்மானித்தேன்.

அந்த நாளும் வந்தது.

கதிரவன் இளைபாறும் நேரம். மனிதர்களுக்கு அடுத்த நாள் ஒய்வு. வாயில் சுவிங்கத்தை போட்டு மென்றுகொண்டு பின்வரிசையில் போய் உட்கார்ந்தேன். முற்போக்கு பிற்போக்கு, நடுபோக்கு எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள்.

புத்தக வெளியீட்டு வைபவம் தொடங்கியது. வரவேற்புரை, மெளனஞ்சலி என சம்பிராதய சடங்குகள் முடிவடைந்த பின்பு, இப்பொழுது மெல்பேர்னிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் ,கவிஞர், நாடக நடிகர் ,பேச்சாளர் .சு.கா.....பேசுவார் என் அறிவிப்பாளர் அறிவித்தார்.

கையை கட்டிகொண்டிருந்தோர் எல்லோரும் கைக்கு சிறிய வேலைகொடுத்தனர். மண்டபம் ஒலி அலைகளை ரசித்தது. நித்திரை தூங்கியோர் திடுகிட்டு எழுந்தனர்.

 

குறுந்தாடி வைத்த, நனஷனல், பான்ட் அணிந்த 55க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதுடைய சு.கா புத்தகத்தை பற்றிய விமர்சனத்தை வைத்தார்.

பதின்ம வயதில் புத்தகங்கள் வாசிப்பு, மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்தல் போன்ற செயல்களால் சுரேஸின் சிந்தனையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முக்கியமாக அவனது இனம் வேற்று இனத்தவர்களால் ஒடுக்கப்படுவதை உணர்ந்த அவனது நண்பர்கள் போரட புறப்பட்டனர். ஒவ்வொருத்தரும் தனிநாடு வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெவ்வேறு பாதைகளில் சென்றனர்.

குகன் சுரேசின் தெருவில் வசிப்பவன். இருவரும் ஒரே வகுப்பில்தான் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். இருவரும் சுரேஸின் சைக்கிளில்தான் பாடசாலை சென்றுவருவார்கள். அன்று பாடசாலையிலிருந்து திரும்பி வரும்பொழுது

"மச்சான் இன்றைக்கு பின்னேரம் உன்ட சைக்கிளை ஒருக்கா தாடா, டவுனுக்கு போகவேணும் "

"பின்னேரம் வா தாரன்"

மூன்று தரம் கேற் கொழுக்கி தட்டும் சத்தம் கேட்டால் அது குகன் தான் என வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். அம்மா அந்த சத்தத்தை கேட்டவுடன் கேற்றடியை பார்க்காமலயே தம்பி குகன் வந்திருக்கிறான் என குரல் கொடுத்தார். அடிவளவுக்குள் ஆட்டுக்கு குழை ஒடித்து கொண்டிருந்த நான் கொக்கத்தடியை அப்படியே மரத்தில் கொழுவி விட்டு , முற்றத்தில் நின்ற சைக்கிளை வந்து எடுக்கும் படி அழைத்தேன்.. நானும் அவனுடன் வருவதாக சொல்ல தான் திரும்பி வருவதற்கு நேரம் செல்லும் என்று சொல்லி என்னை அழைத்து செல்லவில்லை.

 

கிழமையில் ஒரு நாள் எனது சைக்கிளை எடுத்து செல்வான். ஆறு மாதங்களின் பின்பு என்னை அவனுடன் அழைத்து சென்றான். என்னை ஒரு கடையில் நிற்கும் படி கூறிவிட்டு அவன் சென்று சிறிது நேரம் கழித்து ஒரு தாடி வைத்த அண்ணருடன் வந்தான். இவர் சுதா அண்ணே என எனக்கு அறிமுகம் செய்து வைத்தான் .நானும் கலோ அண்ணே என்றேன் ,அவரும் பதிலுக்கு கலோ என்றார் .தேனீர் அருந்த வருமாறு பக்கத்திலிருந்த தேனீர்கடைக்கு அழைத்து சென்றார்.

தேனீர் குடித்தபடியே "தம்பி மட்டர்ன் ரோல் சாப்பிடுவீரோ" என்றார்.

"சாப்பிடுவேன் ஆனால் இன்றைக்கு வெள்ளிக்கிழமை சாப்பிட மாட்டேன்".

"தம்பி நல்ல பக்திமான் போலகிடக்கு"

சிரிச்சு சமாளித்தேன்.

நேற்று இரண்டு தமிழ்சனத்தை பொலிஸ் சுட்டவன். அப்ப உம்மட கடவுள் என்ன கண்ணை மூடிக்கொண்டே இருந்தவர்? என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கும் சிரித்து மழுப்பினேன்.

 

அவர் கேட்ட கேள்விகளில் நியாயம் இருந்தாலும் கடவுளை எதிர்த்து கருத்து சொல்லவில்லை.

எந்த துறையில் படிக்கபோறீர் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ வரப்போறீர் என்று அடுத்த கேள்வியை கேட்டார். இல்லையண்ணே, எங்களுக்கும் அதற்கும் வெகுதூரம் கொழும்பில போய் ஐ.சி.எம்.எ செய்யலாம் என்று இருக்கிறேன் என சொன்னேன்.

 

கொழும்பிலும் தமிழன் இனிவரும் காலங்களில் வாழமுடியுமோ தெரியாது. 1977 இல் நடந்த இனக்கலவரம் பற்றி அறிந்திருப்பீர். ஒசியில லங்காராணியில் யாழ்ப்பாணத்திற்கு வரவேணும் என்றால் கொழும்பில போய் படியும் என்று நக்கலடித்தார். அவரிடமிருந்து இருவரும் விடைபெறும் பொழுது தாடிக்கார அண்ணே குகனிடன் சொன்னார் அடுத்த வகுப்புக்கு தோழரையும் அழைத்து கொண்டு வருமாறு.

"அடே குகன் என்ன வகுப்படா தாடிக்காரன் எடுக்கப்போறான்"

"அரசியல் வகுப்படா காய் பேய்காய் ,லெபனான் ரிட்டன்., ஆயுதங்கள் எல்லாம் அந்த மாதிரி கழற்றி பூட்டும்"

"ஆயுதங்களடா , ஆளைவிடடா நான் வகுப்புக்கு வரவில்லை"

"நீ பயப்பிடாத,ஆயுதம் ஒன்றும் நீ தூக்க தேவையில்லை. முதலில் போராளிகள் அரசியல் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு அந்த அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.  பின்பு மக்கள் போராட்டம் வெடிக்கும். அது ஒரு புரட்சிக வெகுஜன போராட்டமாக இருக்கும்"

எனக்கு முதலில் பயமாக இருந்தாலும் போய் பார்ப்போம் என்ன நடக்குது என்று தாடிக்கரா அண்ணேயின்ட இருப்பிடத்திற்கு போக முடிவெடுத்தேன். நேரடியாக தாடிக்கார அண்னையின்ட வீட்டை போய் அரசியல் பாடம்படிக்கலாம் என நினைத்தபடி குகனுடன் சென்றேன். என்னை பெருமாள் கோவிலடி சந்தியில நிற்க்கும் படிசொல்லிவிட்டு குகன் சென்றுவிட்டான்.

 

அரை மணித்தியாலத்தின் பின்பு தனியாக நான் நிற்க்கும் இடத்திற்கு வந்தான். எங்கயடா அண்ணையை காணவில்லை என்று கேட்க, வருவார் தோழரிட்ட சொல்லிவிட்டனான், அவர் கூட்டிகொண்டு வருவார். ஏன்டா உனக்கு அவரின்ட வீடு தெரியாதோ என நான் கேட்க, அடே அவர் என்னைப்போல உன்னைப்போல சாதாரண ஆளே? லெபனான் ரிட்டேன் காய் . அடேய்! இன்னும் கொஞ்ச நாளில் என்னை சந்திப்பதும் இலகுவாக இருக்காது என நக்கலாகவும் அதே நேரம் நம்பக்கூடிய வகையில் சொன்னான்.

தனியாக வந்த தோழர், அண்ணே வர நேரமாகுமாம் என்னை வகுப்பு எடுக்க சொன்னவர், வாங்கோ தேர்முட்டி படியடியிலிருந்து கதைக்கலாம் என எங்களை அழைத்து சென்றார். தேர்முட்டியடியில் ஏற்கனவே எனக்கு அறிமுகமில்லாத இருவர் இருந்தனர். ஆனால் குகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் போலதெரிந்தது. அவர்களின் உரையாடல் குகனை கணட அந்த இருவரும், தோழர் பீட்டர் எப்படி இருக்கின்றீர்கள் என சுகம் விசாரித்தனர். நான் குகனை திரும்பி பார்த்தேன். இங்கு எனது பெயர் பீற்றர் மச்சான் என்றான். சரி அண்ணே வரும் வரை நாங்கள் அரசியல் கலந்துரையாடுவோம் என மூத்த தோழர் தொடங்கினார்.

பேசிகொண்டிருக்கும்பொழுது எப்படி தோழர்களே என கூறிக்கொண்டு அண்ணே எமது அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.

"நாம் ஏன்போரட வேண்டும தோழர்களே" என அண்ணர் ஒரு கேள்வியை கேட்டார்.

 

ஒவ்வொருத்தரும் ஒரு பதிலை சொல்லிகொண்டிருந்தனர். எனது முறை வந்தவுடன் சொன்னேன் சிங்களவன் அடிக்கிறான் நாங்கள் அவனை திருப்பி அடிக்கவேணும் என்றேன்.

"சிங்களவன் என்று சொல்லக்கூடாது ,சிங்களவர்களிலும் நல்ல சிங்களவர்கள் பலர் உண்டு ஏன் எங்கன்ட ஆட்களை விட சிங்களவர்கள் நல்லவர்கள்".

சிறிது நேரம் மெளனமாக இருந்தது அந்த இடம். அண்ணரே மெளனத்தை கலைத்தார்.

நாளைக்கு யாரவது வெருளிகள் ஆர்மிக்கு கண்ணிவெடி வைக்குங்கள் அதில ஆர்மியும் சாகும் அதனால் எமது எமக்கு தமிழீழம் கிடைக்காது... மக்கள் போராட்டம் மூலம்தான் ஈழம் கிடைக்கும் "

கம்யுனிசம் பற்றி யாருக்கு தெரியுமோ? கம்னிஸ்ட் நாடுகள் எவை? என அடுத்த கேள்வியை அண்ணர் கேட்டார். ஒருத்தரும் பதிலளிக்காதபடியால் எனக்கு தெரிந்த இரண்டு கம்னிஸ்ட் நாடுகளாகிய சீனாவையும் ரசியாவையும் சொல்லி, எனக்கும் அரசியல் தெரியும் என்ற வகையில் அங்கு இருந்தவர்களை பார்த்து ஏளன புன்னகையை உதிர்ந்தேன்.

"தோழரே உலகத்தில் இன்னும் கம்னிஸ்ட் நாடுகள் என்று ஒன்றில்லை , எப்ப உலகம் பூராவும் சோசலிச சமதர்ம சமுதாயம் உருவாகுதோ அப்ப கம்னிஸ்ட் நாடுகள் சாத்தியம் "என்றார்  அண்ணை தோழர்.

இதென்ன கோதாரியா கிடக்குது என்றுபோட்டு அதன் பின்பு அரசியல் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துகொண்டேன். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நவகாலனித்துவம் இப்படி பல எமது பழக்கத்தில் இல்லாத சொற்களையெல்லாம் சொல்லி அரசியல் பாடம் எடுத்தார்.

 

இப்படியாக எமது அரசியல் பாடம் தொடர்ந்தது. அடுத்த வகுப்பை வேறு இடத்தில வைப்போம் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடினால் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என மூத்த தோழர் ஒருவர் கருத்து சொன்னார். அடுத்த வகுப்புக்கு மயிரத்தான் வந்தான் சிங்கன் என்று மனதில் நினைத்து விடைபெற்றேன்.

இனிமேல் குகன் சைக்கிளுக்கு வந்தால் கொடுங்கோ என்னை கூப்பிடவேண்டாம் என வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு நான் பின் வளவில் ஆடுகளுக்கு குழை ஒடிப்பதற்க்கு சென்று விடுவேன். உயர்தர பரீட்சை எடுத்து பெறுபெறுகளுக்கு காத்திருந்தமையால் பாடசாலைக்கு செல்வதில்லை இதனால் அவனை சந்திக்கும் வாய்ப்பு குறைந்திருந்தது.

ஒரு நாள் சைக்கிளை திருப்பி வீட்டை கொண்டு வந்துவிடும் பொழுது சந்திக்கவேண்டியதாகிவிட்டது. மச்சான் என்னடா உன்னை காணக்கிடைக்கிதில்லை. வகுப்புக்கு வாரது என்று சொல்லிப்போட்டு காய்வெட்டிப்போட்டாய், அடுத்த வகுப்பு எங்கன்ட அம்மன் கோயிலில் தான் நடக்குது வாடா. அண்ணரும் உன்னை கேட்டவர் என்று சொல்லியடி சைக்கிளை மாமரத்தடியில் சாய்த்து வைத்தான். பார்ப்போம் நேரம் கிடைச்சா வாறன் என சொல்லி தொடர்ந்து கதையை வளர்க்காமல் அவனை விடை பெறவைத்தேன். அவனுடன் தொடர்ந்து நற்பை வளர்ப்பதா அல்லது துண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

அன்று அம்மன் கோயில் வகுப்புக்கு போவதற்கு முடிவெடுத்தேன். வழமைபோல தோழர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். தாடி அண்ணர் எனது தோளில் கை போட்டபடி என்ன தோழர் உம்மை பிறகு காணகிடைக்கவில்லை, நீங்கள் எல்லாம் பின்நின்றால் எப்படி நாங்கள் மக்கள் புரட்சியை உருவாக்குவது? எல்லாம் வெல்லலாம் அண்ணே வகுப்பை தொடங்குங்கோ என்று கூறியபடி படிக்கட்டில் இருந்தேன்.

தொடரும்

நியானி: சீர் செய்யப்பட்டுள்ளது.

Edited by நியானி
 • Like 9

Share this post


Link to post
Share on other sites

புத்தன் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

புளட்டின் அந்தரங்கத்தை தொடருங்கோ,புத்தா

Share this post


Link to post
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் . 

Share this post


Link to post
Share on other sites

புத்தனின் இந்தக் கதையில வருகின்றவர்களை ஊரில் இருந்தபோது சந்திக்கவில்லை. தெரிந்ததெல்லாம் புலிதான்!

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

தொடருங்கள் புத்தன் :)

Share this post


Link to post
Share on other sites

-------

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

தொடருங்கள் புத்தன் :)

 

நன்றாக.... அவதானித்து, எழுதப்பட்ட கட்டுரை புத்தன்.

அதிலும்... கிருபனின், கருத்து.... என்னையறியாமல், சிரிக்க வைத்து விட்டது. :D

Share this post


Link to post
Share on other sites

சீக்கியரிடம் போய் எங்கட பிரச்சனை கதைத்தது கிருபனின் பிழை . :lol:

Share this post


Link to post
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,    :o  :D  :icon_idea: 

தொடரட்டும் புத்தர் . 

 
கிருபன், on 04 Apr 2015 - 5:53 PM, said:
புத்தனின் இந்தக் கதையில வருகின்றவர்களை ஊரில் இருந்தபோது சந்திக்கவில்லை. தெரிந்ததெல்லாம் புலிதான்!

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!  :D  :icon_idea: 

தொடருங்கள் புத்தன்  :)

Edited by seeman

Share this post


Link to post
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் .

சரி தவறவிட்டாலும் அரசியல் ஞானி ஆகிவிட்டீர்களே :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

புத்தன் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

 

நன்றிகள் பகலவன் ..... தொடரும் எனது கிறுக்கல்

Share this post


Link to post
Share on other sites

புளட்டின் அந்தரங்கத்தை தொடருங்கோ,புத்தா

 

சும்மா ஒரு பார்வையாளனாக மட்டுமே .....இயக்க முகாமில் ஒரு நாள் தங்கியவனுக்கு இருக்கும் தகுதி கூட எனக்கு இல்லை, அவர்களின் அந்தரங்கத்தை விமர்சிக்கும் தகுதி.....நன்றிகள் நந்தன் என்னை தொடர்ந்து கிறுக்க ஊக்க படுத்தியமைக்கு

Share this post


Link to post
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் . 

 

அந்த தாடிக்காரர்களில் அன்டன் பாலசிங்கமும் அடக்கம்:D நன்றிகள் அர்ஜூன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...

Share this post


Link to post
Share on other sites

தாடிக்காரர்களின் வகுப்புக்கள் கோயில் தேர்முட்டிகளிலும்
கடற்கரை வாடி வீடுகளிலும் தான் அதிகம் நடக்குமாம் உண்மையோ
புத்தரே :D

 

நானும் ஒரு நாலு வகுப்புக்குப்  போனனான்.
ஒண்டுமே விளங்கவில்லை.

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

தாடிக்காரர்களின் வகுப்புக்கள் கோயில் தேர்முட்டிகளிலும்

கடற்கரை வாடி வீடுகளிலும் தான் அதிகம் நடக்குமாம் உண்மையோ

புத்தரே :D

 

நானும் ஒரு நாலு வகுப்புக்குப்  போனனான்.

ஒண்டுமே விளங்கவில்லை.

தொடருங்கள்

 

அப்பதான் மக்களுடன் இயக்கம் மின்கில் பண்ணமுடியும்,மக்களுடன் மின்கில் பண்ணினால் மக்கள் புரட்சி வெடிக்கும் ,மக்கள் புரட்சி வெடித்தால் சோசலிச சமதர்ம ஈழம் பிறக்கும்.....ஈழம்பிறந்தால் வி ஆர் கப்பி....நீங்கள் நாலு வகுப்புக்கு போனனீங்களா? தாடி வைத்திருக்கின்றீர்களா ....அப்ப நீங்களும் புரட்சி திலகம் ..முற்போக்கு சிந்தளையாளர் ...:D

Share this post


Link to post
Share on other sites

தொடரட்டும் புத்தன்...........உங்கள் எழுத்துநடை மிகவும் சுவாரசியமானது.

Share this post


Link to post
Share on other sites

ம்.... கரத்துச் சொல்லத்தெரியேல்லை கிருபனின் நிலைதான் நம்மளதும்......புத்தனுக்கு பிடரியில சனியன் ஏதாவது ஏறிக் குந்திட்டுதோ என்னவோ :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்த பாரம்பரிய சடங்குகள் மற்றவரைப் பாதிக்கும் போது அதை பிற்போக்குத்தனமாக நான் சுட்டிக் காட்டுவதுண்டு! உதாரணமாக உங்கள் பாதுகாப்பில் இருக்கும் மைனர் பிள்ளைகளை நீங்கள் சடங்கு என்று அலகு குத்தினால் அதை யாரும் பிற்போக்கு சட்ட விரோதம் என்று சொல்ல முடியும். உங்கள் வாதப் படி மேற்கு நாடுகளில் நடக்கும் FGM ஐக் கூட நாம் தனியுரிமை என்று விட்டு விட வேண்டும்! அப்படி முடியாது! மற்றவருக்கு பாதிப்பில்லாத சம்பிரதாயங்களை அவற்றுக்கு போலி விஞ்ஞான விளக்கம் கொடுக்காமல் செய்யுங்கள்! மற்றவரைப் பாதிப்பவற்றை  செய்யும் போது கேள்விகள் வரவே செய்யும்!
  • படத்தின் காப்புரிமை Getty Images   சிரியா குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகள், தனக்கு தானே அவர் உருவாக்கிக் கொண்ட பேரழிவாக ஆகலாம் - 2020 தேர்தலில் அவருக்கு தோல்வியை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவிச் செயலர் பி.ஜே. கிரவ்லே. சிரியா தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய முடிவுகளை உள்ளடக்கிய ஷரத்து எதுவும், அவருடைய குற்றச் செயல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள பதவி நீக்கத் தீர்மானத்தில் இருக்காது. ஆனால் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிடம் சரணாகதி அடைவதைப் போன்ற அவருடைய நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள், டிரம்பின் அதிபர் பதவியின் முடிவுக்கான தொடக்கமாக இருக்கலாம். பதவி நீக்கத் தீர்மானத்தில் டிரம்ப் தப்பிவிடுவார் - குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை உள்ள செனட் அவரைத் தண்டிக்க வாய்ப்பில்லை - இருந்தாலும் அவருக்கு அவரே எதிரியாக இருக்கிறார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் பேசியது ``முழுமையாக'' அமைந்துவிட்டது என்று அதிபர் நம்புகிறார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குற்றச் செயல் நடந்திருப்பதற்கு வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது. ஆனால் உள்நாட்டு அரசியலில் மறைந்திருக்கும் விஷயங்களை வெளிக்கொண்டு வரும் பரிசோதனையாக உக்ரைன் ஏற்கெனவே மாறிவிட்டது - பதிலுக்குப் பதில் என்ற வகையில் உள்ளது. ஆனால் அதை நல்ல விஷயமாகவே டிரம்ப்பின் ஆதரவாளர்கள் இன்னும் பார்க்கின்றனர். ஆனால், சிரியா மாறுபட்டது. பராக் ஒபாமா அல்லது ஜனநாயகக் கட்சியின் மீது குற்றஞ்சாட்டக் கூடிய விஷயமாக அது இருக்காது. புதிய தடைகள் மூலம் துருக்கியை தண்டிக்க வேண்டும் என்பது டிரம்ப் நிர்வாகத்தின் எண்ணமாக இருந்தாலும், இது பெருமளவு டிரம்ப் உருவாக்கிய சிக்கலாகவே உள்ளது. சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது என்று டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலான மற்றும் அதிக செலவு ஏற்படுத்தும் மத்தியக் கிழக்கு சர்ச்சைப் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவோம் என்று தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது. ``பொருத்தமற்ற, முடிவில்லாத இந்தப் போர்களில் இருந்து நாம் வெளியேற வேண்டிய தருணம் இது'' என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும், ``நமக்கு பயன் கிடைக்கும் இடங்களில் மட்டுமே நாம் போரிடுவோம், வெற்றி பெறும் வகையில் போரிடுவோம்'' என்று ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துகளில் அவர் குறிப்பிட்டுள்ளார். பல தவறான, சர்ச்சைக்கு இடமளிக்கும் அறிக்கைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளைப் புறக்கணித்துவிடலாம் என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், இந்த விஷயத்தில் டிரம்பை ஒரு புத்தகம் போல எர்துவான் படித்து, பிடிலைப் போல அவரை பயன்படுத்திக் கொண்டுள்ளார். துருக்கி எல்லையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட குர்து பிராந்தியம் உருவாகாமல் தடுப்பதற்காக சிரியாவுக்குள் தனது படைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தொலைபேசி உரையாடலின்போது டிரம்ப்பிடம் எர்துவான் கூறியபோது, டிரம்ப் குறைந்தபட்ச எதிர்ப்பு தான் காட்டுவார் என எதிர்பார்த்தார். 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த மற்றொரு தொலைபேசி உரையாடலின் போது, சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது பற்றி டிரம்ப் கோடிட்டுக் காட்டியிருந்தார். ``ஓ.கே. அது உங்கள் பிரச்சினை. எங்கள் வேலை முடிந்துவிட்டது'' என்று டிரம்ப் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, டிரம்ப்பின் தாக்கங்களை சமாளிக்க முயற்சிக்கும் வகையில் ``முதிர்ச்சி கொண்ட'' பாதுகாப்புத் துறை அதிகாரியாக இருந்த பாதுகாப்புத் துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ராஜிநாமா செய்தார். செயலில் இறங்குவது என பத்து மாதங்கள் கழித்து, எர்துவான் முடிவு செய்தபோது, திறந்திருக்கும் கதவின் மீது மோதப் போகிறோம் என்று அவர் அறிந்திருந்தார். டிரம்ப்பின் கொள்கைக்கு இரு கட்சிகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கோன்னெல் கூட விமர்சித்தார். படைகளை வாபஸ் பெறுவதை ஆதரித்த அமெரிக்கர்கள் பலர் மத்திய கிழக்கில் போர்கள் குறித்து அஞ்சினர். ஆனால், மிக மோசமான முறையில் அதை டிரம்ப் செய்தார். ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் உருவாகிவிடாமல் தடுப்பதற்காக அமெரிக்க படையின் சிறிய ஒரு பிரிவும், பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு படைப் பிரிவுகளும் அங்கிருந்தன. சிரியா எப்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, நிர்வாகம் எப்படி நடைபெறப் போகிறது என்ற தூதரக நடைமுறை நிறைவு பெறும் வரையில் இடைக்கால ஏற்பாடாக அந்தப் படைப் பிரிவுகள் அங்கு இருந்தன. வணிகப் பின்னணி கொண்டவராக இருந்தாலும், புதிய மற்றும் மேம்பட்ட சிரியாவை உருவாக்குவதற்கு அமெரிக்காவுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் ரஷ்யா, ஈரான், ஆசாத் தலைமையிலான சிரியா நிர்வாகம் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடிக்கு தவறவிட்டு விட்டார். அமெரிக்கா வாபஸ் ஆனதால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு சிரியா மற்றும் ரஷ்யப் படைகள் சென்றுவிட்டன. துருக்கி ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, குர்து காவலில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் தப்பிவிட்டனர். ஈரானுக்கு எதிராக நெருக்கடி தரும் வகையில் எடுத்த டிரம்ப்பின் முயற்சிகள் என்ன பலனைத் தந்தன என்பதை அனைவரும் ஊகித்துக் கொள்ள முடியும்.     டிரம்ப் ஆதரவாளர்கள் படைகளை வாபஸ் பெறுவதை ஆதரிக்கின்றனர் பிபிசி செய்தியாளர் லாரென் டனரின் கருத்து ``நாம் எதற்காக உலகின் போலீஸ்காரராக இருக்க வேண்டும்?'' மத்திய மின்னியாபோலிசில் பேரணியில் கலந்து கொண்ட டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பலருக்கு, - அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதற்குப் பிறகு - சிரியா மீது துருக்கி நடத்திய தாக்குதல் பற்றிய கருத்து ஒரே மாதிரியாக இருந்தது. ``துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையிலான பிரச்சினைகளில் நமது படைகளின் தலையீட்டை நிறுத்திக் கொண்டது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன்'' என்று 24 வயதான அலெக்ஸ் லெடெஜ்மா கூறினார். ``அவர்களைக் காத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லை'' என்று அவர் குறிப்பிட்டார். ``அங்கே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நூறாண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நமது பிரச்சினை அல்லாத ஒரு விஷயத்துக்காக, நம் மக்கள் எத்தனை பேர் அங்கு உயிரிழக்க வேண்டும்? நாம் அங்கே இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்'' என்று 52 வயதான மெலிஸ்ஸா எர்ரா கூறினார். ஆனால் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற எரிக் ரட்ஜியெஜ் கருத்து வேறு மாதிரியாக உள்ளது. ``இவ்வளவு சீக்கிரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெற்றது தவறானது என்று நான் நினைக்கிறேன். ஆனால், அது மோசமாக இருந்தால், நாம் திரும்பிச் செல்ல மாட்டோம் என ஒருபோதும் கூறியது இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிச் செல்வதற்கு நாம் நீண்ட காலம் காத்திருந்தோம்.'' ``அங்கே செல்லக் கூடிய மற்ற பங்காளர்கள் உள்ளனர். உலகின் பாரத்தை எப்போதும் நாம் சுமந்து கொண்டிருக்க முடியாது'' என்றும் அவர் குறிப்பிடுகிறார். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால், அமெரிக்காவை ஒரு தோழமை நாடாகக் கருதும் நம்பகத்தன்மை, மத்திய கிழக்கு மற்றும் அதையும் தாண்டிய விஷயங்களில் கேள்விக்குறி ஆகிவிட்டது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளின் போது அமெரிக்கப் படைகளுக்கும் குர்துகளுக்கும் இடையில் உருவான உறவின் முக்கியத்துவத்தை டிரம்ப் நிராகரித்துள்ளார். ரக்கா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பகுதிகளை மீட்ட படைகளுக்கு முன்னணி படைகளாக குர்துகள் இருந்துள்ளனர். குர்துகள் ``நார்மாண்டியில் எங்களுக்கு உதவி செய்யவில்லை' என்று டிரம்ப் கூறியுள்ளார். அங்கே விவரிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது சில குர்துகள் நேசப் படையினரின் பக்கம் இருந்து பங்கேற்றனர். ஆனால் அப்போது அங்கீகரிக்கப்பட்ட குர்து அரசாங்கம் எதுவும் இல்லை, அல்லது சொல்லப் போனால் இப்போதும் கூட இல்லை. இப்போது அமெரிக்காவின் தீவிர ஆதரவாக உள்ள ஜெர்மனியும் ஜப்பானும், அப்போது எதிரெதிராக இருந்தன. மற்ற நாடுகள் - தென்கொரியா மற்றும் இஸ்ரேல் - ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன அல்லது சுதந்திர அரசுகளாக இல்லை. தங்களுடைய பாதுகாப்பு மற்றும் மனித உரிமை தொடர்பான சட்ட பூர்வ விஷயங்களை நிறைவேற்றத் தவறிய நிலையில், வடகொரியாவைக் கையாள்வதில் டிரம்ப்பின் போக்கு குறித்து ஜப்பானும் தென்கொரியாவும் ஏற்கெனவே அதிருப்தியில் உள்ளன. குர்துகள் தொடர்பாக டிரம்ப்பின் நடவடிக்கைகள், அந்தக் கவலைகளை அதிகரிப்பதாக மட்டுமே இருக்கும். மத்திய கிழக்கில் தங்கள் பாதுகாப்புக்காக அமெரிக்காவை நம்பியிருக்கும் எந்த நாட்டுக்கும் அல்லது இன்றைக்கு நேட்டோ படைகளில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கும் மறு உத்தரவாதம் தருவதாக எந்த நடவடிக்கையும் அமைந்திருக்கவில்லை. அவை டிரம்ப்பின் தீர்ப்புக்கான நாளின் பரிசோதனையில் தேறும் வகையிலும் இல்லை. அமெரிக்காவின் டிரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு பின்னர் அதை வாபஸ் பெற்ற - முரண்பட்ட நடவடிக்கைகளால் ஏற்கெனவே சவூதி அரேபியா போதிய அளவுக்கு அதிருப்தி அடைந்துள்ளது - தெஹ்ரானுடன் பின்வாசல் வழியாக பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா முயல்வதாக சவூதி கருதுகிறது. ஈரானை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, அந்தப் பிராந்தியத்தின் பிரச்சினையை டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால் அது ஜெருசலேமில் பிரச்சினையை ஏற்படுத்தும். இஸ்ரேலின் நுழைவாயிலுக்கு சிரியாவை ஈரான் கொண்டு வந்துவிடும். ஈரானை தனியே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் அதிகமாகக் கருதினால், நேரடி ராணுவ மோதல் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து, தவிர்க்க முடியாமல் அமெரிக்கா தலையிட வேண்டியிருக்கும். இந்த அழிவு சூழ்நிலையைத் தான் ஒபாமாவும் அவருடைய ஐரோப்பிய சகாக்களும் சிந்தித்து செயல்பட்டனர். அணுசக்தி ஒப்பந்தத்துக்கு டிரம்ப் முட்டுக்கட்டை போட்டதால் அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது. உலக அளவில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளின் தொடர்பு அதனுடைய தேசப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையாக உள்ளது. அவற்றின் முக்கியத்துவத்தை டிரம்ப் குறைத்து மதிப்பிட்டு வருகிறார். அதற்கான ஆதாரங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன, தெளிவாக வெளியில் தெரிகின்றன. அமெரிக்காவின் தலைமைத்துவம் குறித்த சந்தேகங்களை வெளிப்படையாக அறியச் செய்துள்ளார் டிரம்ப். அமெரிக்காவின் நலன்களை முன்னிறுத்தி, அதன் முக்கிய தோழமை நாடுகளின் நலன்களை முன்னிறுத்துவதில், தன்னுடைய முதன்மையான பணியை டிரம்ப் எவ்வளவு மோசமாக செய்து வருகிறார் என்பதை சிரியா கோடிட்டுக் காட்டியுள்ளது. உலக நாடுகள் தாங்களே தங்களை கவனித்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டு, தனது எல்லைக்குள் அமெரிக்கா படைகளை வைத்துக் கொள்ளும் வகையில், படைகளை திரும்பப் பெறுவதில் உண்மையான தாக்கங்கள் உள்ளன. பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆதரிக்கும் நிர்வாக விவகாரமாக இது இல்லை என்பது நல்ல செய்தி. சமீபத்தில் உலக விவகாரங்கள் குறித்து சிக்காகோ கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில், உலக அளவில் அமெரிக்கா அதிக தீவிர பங்களிப்பு செய்ய வேண்டும் என்று பெரும்பாலான கருத்தாளர்கள் உறுதியான முடிவை தெரிவித்திருந்தனர். பிராந்திய அளவில் கூட்டணிகள் உருவாக்கி, சர்வதேச வர்த்தகத்தில் மதிப்பை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூண்களாக உள்ள விஷயங்களை அவர்கள் நிராகரித்திருப்பதை இது காட்டுகிறது. ரஷ்யா பற்றி கண்டு கொள்ளாத செயல்பாட்டுடன், சிரியா பிரச்சினையும் சேர்ந்து, சர்வதேச உறவுகளை அவர் தவறாகக் கையாள்கிறார் என்பதை நிரூபித்துள்ளன. தனது சொந்த அரசியல் நலன்களுக்காக, நாட்டின் நலன்கள் பற்றிய விஷயங்களில் அவர் கவனம் செலுத்தத் தவறிவிட்டார். எல்லாவற்றையும் பார்த்தால், டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்படுவது பாதிக்கப்படலாம். வேறு அதிபரை, வேறு வெளியுறவுக் கொள்கையைத் தேர்வு செய்ய அமெரிக்க வாக்காளர்கள் அடுத்த நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு கெட்ட செய்தியாக உள்ளது. பி.ஜே. கிரவ்லே. அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவிச் செயலர் மற்றும் Red Line: American Foreign Policy in a Time of Fractured Politics and Failing States-ன் ஆசிரியர். https://www.bbc.com/tamil/global-50075452
  • பட்டது + படிச்சது + பிடித்தது - 197   ஆமா நாங்க தான் போட்டோம்   லட்சம் தடவை சொன்னோம் நாங்க செய்யலை என்று. நம்பவும் இல்லை குற்றம் சாட்டி கைது செய்தவர்களை விடுதலை செய்யவுமில்லை. 30 வருட சிறை வேதனை வாழ்க்கையே தொலைந்து போய் பல வருசமாச்சு.   ஓரு தடவை ஒரேயொரு தடவை ஆமாய்யா நாங்க தான் செய்தோம் என்பது மட்டும் எப்படி காதில விழுகுது???   தலைவரது செவ்வியில் இந்தக்கொலை பற்றிய கேள்விக்கு மிக பக்குவமாக மிகவும் பொறுமையுடன் ஒரு ஆயுதப்போரை நடாத்தும் தளபதியாக அது ஒரு துன்பவியல் சம்பவம் என்றார். அடுத்த கேள்வி இதற்காக உங்களை கைது செய்வார்களாம் என்பதற்கு சிரித்துக்கொண்டே நடப்பதை பேசுவோமா என்பார். அதில் எத்தனை அர்த்தங்கள்?   நான் சாதாரண பொது மகன். அந்தக்கொலை செய்யப்படவேண்டியதே. செய்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் என்னவரே.   தொடர்ந்து என்னைக்கோபப்படுத்திக்கேட்டால் ஆமாய்யா நாங்க தான் செய்தோம் இப்ப என்ன?? என்று தான் சொல்வேன். அது தான் உண்மையும் கூட. இப்ப நாங்க சொல்வதை நீங்க கேட்கும் நிலை வந்திருப்பது மட்டும் தெரிகிறது. நல்ல வளர்ச்சி தான்.
  • உங்கள் குடும்ப தொழிலை மதமாற்றிகளுக்கு கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான் அவருடைய மூதாதையர் மதமாற்றம் செய்யதமைக்கான காரணங்கள் அது
  • நாங்கள் பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சி விமானநிலையத்திற்கு அன்று பறந்தபோது தடுப்பு ஊசி ஒன்று குத்தி அனுப்பினார்கள். தற்போது சர்வதேச விமான நிலையமானதால், எந்த நாட்டுக்கு என்ன ஊசி குத்தி அனுப்புவார்களோ....!! 😲