Sign in to follow this  
Meera Kugan

ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான் தான் என்று . (காதல் கதை)

Recommended Posts

Chapter 1

அரோகரா அரோகரா என்ற ஒரே கோஷம் எல்லா திசைகளிலிருந்தும் ஒலித்துக் கொண்டு இருந்தது . மக்கள் வெள்ளம் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு முன்னேற படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தனர் . இப்போராட்டத்தில் பக்கத்தில் நிற்பவரை கூட தம்மை அறியாது காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணம் அவ்வேளையில் அவர்களுக்கு கொஞ்சமேனும் இருந்ததாக தெரியவில்லை . எப்படியும் தாங்கள் தாங்கள் முண்டியடித்து முன்னேறி முருகப் பெருமானுக்கு அருகில் சென்று தரிசனம் பெற்று விட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. நல்லூர் ஆறுமுகப் பெருமானும் அழகாக பச்சை சாத்தி மெல்ல ஆடி ஆடி அசைந்து வரும் அக்காட்சி கண்கொள்ள காட்சியாக இருந்தது . ஆதித் அம் மக்கள் வெள்ளத்தில் அகப்படாமல் ஒரு ஓரமாக நின்று மிக சுவாரசியத்துடன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தான் . அவனுக்கு அங்கு காண்பவை எல்லாம் மிக புதுமையாக இருந்தது . அவன் என்றுமே அப்படி ஒரு மக்கள் வெள்ளத்தை கண்டதில்லை . எப்படி முடியும் ? அவன் வாழும் ஜேர்மனி நாட்டில் இப்படி ஒரு திருவிழா இல்லையே ! அத்துடன் அங்கே ஒரு சில கோவில்களே காணப்பட்டாலும் அம்மாவின் கட்டாயத்தின் பேரில் அக்கோவில்களுக்கு சென்ற பொழுதெல்லாம் அக் கோவில்களில் பெரிய அளவில் மக்கள் வெள்ளம் அலை மோத சாமி சுற்றி அவன் கண்டதில்லை . யதுஷன், அது தான் அவன் சின்னம்மாவின் மகனின் வற்புறுத்தலுக்கு இணங்கி இன்று கோவிலுக்கு வந்தது ஒரு வழியில் நன்மையாக போய்விட்டது . இல்லாவிடில் இப்படியான பக்திமயமான காட்சியை அவன் தவற விட்டிருப்பான் .

பக்கத்தில் நின்ற யதுஷனிடம் இந்த பக்தர்களின் பக்தி பரவசத்தைப் பற்றி நகைச்சுவையாக குறிப்பிட திரும்பினால் அவன் பக்கத்தில் இல்லை . என்ன இது ? என்னுடன் நின்ற யதுஷன் கண் இமைக்கும் நேரத்துக்குள் எங்கே மாயமாக மறைந்து விட்டான் ? ஒருவேளை மக்கள் வெள்ளம் அவனை அடித்து சென்று விட்டதோ ? தனக்குள் கூறிக் கொண்டே மெல்ல நின்ற இடத்தை விட்டு அகன்று தேரடி பக்கமாக சென்று பாதுகாப்பாக நின்று கொண்டான் . ஆருமுகப்பெருமானும் வெளி வீதி சுற்றி கோவிலுக்குள் சென்று விட்டார் . கொஞ்ச கொஞ்சமாக பக்தர்கள் கோவில் வாசலினூடாக வெளியே வர ஆரம்பித்தனர் . யதுஷனும் நிச்சயம் தன்னை தேடி இப்பொழுது வரவேண்டும் என்ற எண்ணத்தில் கோவிலின் கோபுர வாசலை நோக்கியபடியே ஆதித் காத்திருந்தான் . யதுஷனை எதிர்பார்த்த வண்ணம் இருந்த கண்ககள் சடுதியாக கூர்மை பெற்றது . கார் மேகம் சூழ்திருந்த வானத்தை கிழித்துக்கொண்டு சூரிய கதிர் ஊடுருவது போன்று அந்த பக்தர் வெள்ளத்தின் மத்தியில் ஒரு இந்திர லோகத்து தேவதை ஒருத்தி மெல்ல அசைந்து வந்துக் கொண்டிருந்தாள் . அவளது பேரழகு ஆதித்யை ஒரு கணம் அப்படியே நிலைகுலைய வைத்தது . மிகவும் சுவாரசியமாகவும் ஆர்வமாகவும் அவளை கூர்ந்து பார்த்தான் . அம்மா எப்பொழுதும் கூறும் அந்த குத்துவிளக்கு அழகு என்பது இப்பெண் தானோ ! அந்த அழகியோ எவரையும் பொருட்படுத்தாது தன்னுடன் சேர்ந்து வந்து கொண்டு இருந்த பெண்ணிடம் ஏதோ சுவாரசியமாக அளவளாவிக் கொண்டிருந்தாள் . தனக்கு மிகவும் பிடித்த நிறமான இள நீல நிறத்தில் அப்பெண் தாவணி அணிந்திருந்தது அவனை மேலும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. எவ்வளவு நன்றாக இந் நிறம் அப்பெண்ணுக்கு பொருந்துகிறது ! அப்பெண்ணை ரசித்தபடியே பார்த்துக் கொண்டு இருந்த ஆதித் அவள் பின்னால் யதுஷன் மிக பவ்யமாக வந்து கொண்டிருப்பதை கண்டான். நேரே முன்னால் அவனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆதித்யை அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை . ஆதித்யின் மனதில்  தான் "சிறுவயதில் வாசித்த கதையான பீட்டர் பாணும் அவனது புல்லாங்குழல் இசையில் மயங்கிய எலிகளின்" காட்சி தான் நினவு வந்தது . தனக்குள் சிரித்துகொண்டு குறும்புடன் அப்பெண் அவனுக்கு அருகில் வருகையில் கொஞ்சம் தொண்டையை கனைத்தபடியே  அட , எங்கே இத்தனை காலமாய் இருந்தாய் ? உன்னை தேடி தேடியே  என் கண்கள் பூத்து போயினவே என்று மிக குறும்பாக பைந் தமிழில் கூறினான் . அப்பெண் இவனது குரலை மிக அருகில் கேட்டவுடன் ஒரு கணம் திடுக்கிட்டு தான் விட்டாள் . பின்னர் ஆதித்யை நோக்கி கோபத்துடன் முறைத்தாள் . முறைத்தது மட்டுமின்றி ஆத்திரத்துடன் அவனை நோக்கி திட்டுவதற்காக எத்தனித்த வேளையில் ஆதித் முந்திக்கொண்டு ஏய் பெண்ணே நான் உன்னை குறிப்பிட்டேன் என்றா நினைத்தாய் ? அடப் பாவமே நான் எனது நண்பனை அல்லவா தேடினேன் . உங்களுகெல்லாம் ஏன் தான் இந்த தேவை இல்லாத கர்வமோ ? நீ என்ன அப்படி ஒரு பேரழிகியோ ? ஏதோ ஆண்கள் எல்லாம் உங்களுக்கு பின்னால் சுற்றுகிறார்கள் என்று தேவையில்லாத எண்ணம் ! சீச்சீ... மச்சான் யதுஷன் எங்கேயடா போயிருந்தாய் ?  உன்னை நான் தேட, யாரோ தன்னை தான் தேடுகிறேன் என்று நினைக்கிறார்கள் . வா வா கிளம்புவோம்“, என்று சிரிப்புடன் அவளை தாண்டி யதுஷனிடம் சென்றான்.  அப்பெண்ணும் ஆதித்யை நோக்கி மீண்டும் ஒரு கடும் பார்வையை விடுத்து விட்டு விறு விறுவென்று அகன்று சென்றாள் . இவை ஒன்றையும் விளங்கிக் கொள்ளாத யதுஷன் ஆதித் நான் கோவில் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தேன் . உன்னை தவறாக எண்ணிய அப்பெண் எனக்கு அறிமுகமானவள் தான் . என்னுடன் ரியூஷன் வகுப்புக்கு வருகிறவள் . மிக நல்ல பெண். நீ அவளைப் பார்த்து கூறியதாக தவறாக நினைத்து விட்டாள் . வேறு ஒன்றுமில்லை . சரி வா , வீடு கிளம்பு முன்னர் கோவிலுக்கு பின் வீதியில் இருக்கும் கடைகளுக்கு சென்று கடலை கொஞ்சம் வாங்குவோம் . அப்படியே கொறித்துக்கொண்டே நடந்து போக நன்றாக இருக்கும் .இருவரும் கிளம்பினர் .

வீட்டில் அம்மாவிடம் நல்லூர் கோவிலில் கண்ட சன நெருக்கத்தை ஆச்சரியமாக ஆதித் குறிப்பிடுகையில் அம்மாவோ இது என்னடா கூட்டம்? காலையில் தேர் திருவிழாவுக்கு நீ வந்திருக்க வேண்டும் , வெள்ளன எழும்பும் பஞ்சியில் இழுத்து மூடிக்கொண்டு படுத்து விட்டாய் . அப்பொழுது வந்திருந்தால், நல்லூர் முருகனை நாடி அவன் அருளை பெற எட்டு திக்குகளிலிருந்தும் வந்திருந்த மக்கள் வெள்ளத்தை கண்டு ஆச்சரியப்பட்டிருப்பாய் !. நான் சிறுமியாக இந்த மண்ணில் வாழ்கையில் நல்லூர் திருவிழா தொடங்கினால் எமக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். நானும் உன்னுடைய சின்னம்மாவும் ஒரு நாள் தவறாமல் கோவிலுக்கு போவோம் . இந்த திருவிழாவை வெளிநாடு சென்ற பிறகு ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதங்களில் பார்க்க முடியாமல் எவ்வளவு வருந்தி இருப்பேன் தெரியுமா ? இந்த முறை முருகனை தரிசித்த பிறகு தான் தான் எனது ஏக்கம் கொஞ்சம் தீர்ந்துள்ளது “, என்று அம்மா தனது பழைய கதைகளில் மூழ்க ஆதித் போதும் போதும் அம்மா, உங்கள் பசுமையான நினைவுகளில் என்னை தயவு செய்து இழுத்து வாட்டாதீர்கள் என்று சிரிப்புடன் இடைமறித்தான் . அங்கு வீட்டில் கூடி இருந்த எல்லோரும் வாய் விட்டு சிரிக்க தொடங்கினர். இப்படியே எல்லோரும் கோவில் தரிசனத்தை பற்றியே கதைத்தபடியே உறங்க செல்கையில் ஏனோ ஆதித் மட்டும்  அப்பெண்ணை மீண்டும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தான்.

 

ஆதித் மீண்டும் அப்பெண்ணை சந்தித்தானா என்பதை அறிய அடுத்த வாரம் வரை காத்திருங்கள்  ......

 

Edited by Meera Kugan
 • Like 4

Share this post


Link to post
Share on other sites

ஆதித் மீண்டும் அப்பெண்ணை சந்தித்தானா என்பதை அறிய அடுத்த வாரம் வரை காத்திருங்கள்  ......

சந்தித்து சின்னாபின்னம் ஆகப்போவது உறுதி.. :o:D

Share this post


Link to post
Share on other sites

சந்தித்து சின்னாபின்னம் ஆகப்போவது உறுதி.. :o:D

சே 40தாண்டினா பொறுமை போயிட்டுதோ இசை ? :lol:  கொஞ்சம் பொறுங்கோ ஆதித் கட்டும் தாஜ்மகாலில் ஒரு கல்லாவது உங்கள் பங்குக்கு வேண்டாமா ? :lol:

மீரா குகன் அடுத்த முடிவுக்காக காத்திருக்கிறேன். கதையை பந்தி பிரித்து பதியுங்கள் வாசிக்க உதவியாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

யார் சின்னாபின்னமாகப் போகிறார்கள் என்று வெகுவிரைவில் தெரிய வரும் .

சாந்தி உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி . தொடர்ந்து என் தொடர்கதையை வாசித்து உங்கள் கருத்தை அறியத்தாருங்கள் .

Share this post


Link to post
Share on other sites

சந்தித்து சின்னாபின்னம் ஆகப்போவது உறுதி.. :o:D

 

பெண்ணும் சுண்டெலியும் ஒன்று. சிக்குவது எல்லாம் சின்னாபின்னமாவது உறுதி.  :lol:  :D

Share this post


Link to post
Share on other sites

ஏன் சின்னாபின்னமாக்குவதிலேயே குறியாக இருக்கிறீர்கள் ?

நீங்கள்  காதலில் விழாத சுண்டெலி என்று சொன்னால் யார் நம்புவார்கள் ? நிச்சயம் இல்லை . :rolleyes: :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

குத்து விளக்கு . :icon_mrgreen:

வாசிக்க கஷ்டமாக இருக்கு இன்னமும் பெரிய எழுத்தில் பதியுங்கள் . :lol:

Share this post


Link to post
Share on other sites

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே ....

அத்தியாயம் 2

 

ஆதித் விடிஞ்சு எவ்வளவு நேரமாகி விட்டது ! இன்னமும் என்ன நித்திரை ?  நான், காலை திருவிழாவுக்கு கோவிலுக்கு கிளம்புகிறேன். எழும்பி குளித்து காலை உணவை சாப்பிடுடா „! அம்மாவின் அதட்டும் குரல் மெலிதாக கேட்டது . ஒருவாறு சோம்பலை முறித்து விட்டு கட்டிலை விட்டு எழும்பினான் ஆதித் .

காலைக் கடன்களை முடித்துவிட்டு யதுஷனை தேடினான் . அவனோ எங்கும் காணோம் . சமையல் அறையை நாடினால் அங்கு சின்னம்மா மதிய உணவை தயார்படுத்திக் கொண்டு இருந்தார் . ஆதித்யை கண்டதும் தம்பி கோப்பி வைத்து தரவா ராசா“? என அன்போடு விசாரித்தார் . வேண்டாம் சின்னம்மா, எனக்கு கோப்பி குடித்து பழக்கமில்லை என்று நேரே குளிர்சாதன பெட்டியை திறந்து அவன் குடிக்கும் ஜூஸ் பெட்டியை தேடினால் அதுவும் அங்கு இல்லை .

நேற்று தான் குடித்து முடித்தது நினைவுக்கு வர சின்னம்மாவிடம் திரும்பி யதுஷன் எங்கே சின்னம்மா?“ என்று அவரிடம் வினவினான் . யதுஷன் ட்யூஷனுக்கு போய்விட்டான் ராசா , சித்தப்பா மட்டும் முன்னால் அறையில் இருக்கிறார் . இன்று வேலைக்கு போகவில்லை . உனக்கு வேறு எதுவும் வேண்டுமென்றால் கூறடா செய்து தருகிறேன் ? “ என்று தனது அலுவல்களிலேயே கவனமாக இருந்தார் . சரி சின்னம்மா , என்று முனுமுனுத்து விட்டு முன் வாசல் பக்கம் சென்றான் .

இப்பொழுது என்ன செய்வது ? வெளியே கடைக்கு போகலாம் என்றால் யதுஷன் சைக்கிளை கொண்டு போயிருப்பான் . எப்படி போகிறது? என்று யோசனை செய்து கொண்டிருக்கும் பொழுது சித்தப்பா இன்று வேலைக்கு போகவில்லை, என்று சின்னம்மா கூறியது நினைவுக்கு வர அவரை தேடி அவர் அறைக்கு சென்றான் . சித்தப்பா அறையில் தொலைக்காட்சி பார்த்துகொண்டிருந்தார் . காலை வணக்கத்தை சொல்லி விட்டு சித்தப்பாவின் மோட்டார் சைக்கிளை இரவல் கேட்டான் ஆதித் . சித்தப்பாவும் ஒரு தயக்கமும் இன்றி அனுமதி தர உற்சாகத்துடன் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு கிளம்பினான் .

அங்கு ஜேர்மனியில் மோட்டார்சைக்கிளில் ஓட அம்மாவும் அப்பாவும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை . அங்கத்தைய விரைவான  போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக சைக்கிளை தவிர வேறு வாகனம் செலுத்த அவனால் இன்னும் முடியவில்லை . இப்பொழுது தான் 18 வயது ஆரம்பித்திருந்தபடியால் இந்த சுற்றுல்லா முடிந்து வீடு சென்ற பிறகு எப்படியும் வாகன சாரதி பத்திரம் எடுப்பது என்று தன்னுள் முடிவு செய்திருந்தான் .

ஆனால் சித்தப்பா ஒரு தயக்கமும் இன்றி தனது மோட்டார் சைக்கிளை தந்ததும் அவனுக்குள் சந்தோஷம் பொங்கியது . விருப்பமான பாட்டொன்றை சீட்டி அடித்த படியே மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டு பிரதான வீதியை வந்தடைந்தான் . வலப்பக்கம் திரும்பவா அல்லது இடது பக்கம் போவதா என்று ஒரு கணம் யோசித்து விட்டு லாவகமாக வலது பக்கம் திருப்பியபடியே செலுத்திச் சென்றான் . யாழ்ப்பாணத்து வெப்பம் அவனை பொதுவாகவே வாட்டி எடுத்தது . ஜேர்மன் நாட்டு கோடைக் கால வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து மகிழ்வடையும் ஆதித்தினால் இந்த யாழ்ப்பாணத்து வெப்பத்தை மட்டும் ஏனோ தாங்கிக்கொள்ள முடியவில்லை . ஆனால் இன்று மோட்டார்சைக்கிளில் பயணிக்கையில் மட்டும் சுகமாக இருந்தது . தலை கவசத்தைகூட கழட்டி வைத்து விட்டான் . வீதியில் செல்வோரை பார்த்து கை அசைத்தபடியே குதூகலமாக சென்று கொண்டிருக்கையில் தூரத்தில், நேற்று கண்ட அதே பெண் கையில் புத்தகங்களுடன் வந்து கொண்டிருந்தாள் .

அவளை கண்டவுடன் ஆதித் அருகில் நெருங்கி ஹாய்! என்று சாதாரணமாக அழைத்தான் . அவளோ அவனை கவனியாதது போல் முகத்தை கடுமையாக வைத்தபடி கடந்து சென்று கொண்டிருந்தாள் . அவளது அழகிய உருவம் ஆதித்யை ஏதோ வகையில் நேற்று  பாதித்திருந்தபடியால் மோட்டார் சைக்கிளை திருப்பியபடியே அவளை பின் தொடர்ந்தவாறு ஹாய் மிஸ், நாம் நேற்று கோவிலில் அறிமுகமானோம். ஞாபகம் இருக்கு தானே? வாருங்கள் எனது பைக்கிலேயே நீங்கள் போக வேண்டிய இடத்தில் இறக்கி விடுகிறேன் . தயங்காமல் ஏறுங்கள் , அத்துடன் உங்கள் பெயரை அறிந்துக்கொள்ளவும் ஆசைப்படுகிறேன், தயவு செய்து சொல்ல முடியுமா? எனது பெயர் ஆதித் . ஜேர்மன் நாட்டிலிருந்து விடுமுறை நாட்களை கழிக்க வந்திருக்கிறேன் . உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் தருவீர்களா ? என்று மிகவும் சகஜமாக அவளுடன் உரையாடினான் .

ஆனால் அப்பெண் அப்படியே ஒருகணம் நின்று விட்டாள். அவளது முகம் இரத்த நிறமாக ஆத்திரத்தில் சிவந்தது . ஆதித்யை முறைத்தபடியே உங்களுக்கு எத்தனை தைரியம் இருக்கவேண்டும் ? நான் என்ன சாதாரணமான பெண் என்று நினைத்து விட்டீர்களா ? என்னிடம் வந்து சேஷ்டை செய்வதற்கு எனது காலில் இருக்கும் செருப்பு தான் பதில் தரும். இனி ஒரு கணம் இங்கே நிற்பீர்கலாயின் இதோ வீதியில் செல்வோரிடம் உங்களை பற்றி முறையிடப்போகிறேன் என்று மிக இறுக்கமாக கூறிவிட்டு விரைவாக அகன்று செல்ல முற்பட்டாள் .

அதற்குள் வீதியில் சென்ற நபரொருவர் அப்பெண்னிடம் வந்து என்னம்மா ஏதும் பிரச்சனையா ? „ என மிக கரிசனையோடு கேட்க ஆதித் அவசரமாக அது ஒன்றும் மில்லை பெரியவரே. இவள் எனக்கு அறிமுகமானவள் தான் , நாம் சாதாரணமாக தான் உரையாடுகிறோம் , நீங்கள் ஏன் இடையில் புகுகிறீர்கள் ? என்று திருப்பி கேட்க,  அந்த பெண் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க உடனே ஓடினாள் .

அவளது கலக்கத்தை கண்ட ஆதித் அப்படியே உறைந்து போய் நின்றான் . நான் என்ன அப்படி தவறாக கூறி விட்டேன் என்று இந்தப் பெண் தாறுமாறாக கத்திவிட்டு ஓட்டம் எடுக்கிறாள். அவளை நான் ஒன்றும் அவமானப்படுத்தவில்லையே ? அப்படி இருக்கையில் ஏன் அவள் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ? ஒரு வேளை தனது அழகில் மிகவும் கர்வம் கொண்டவள் போலும் . அதுதான் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்கிறாள். இருக்கட்டும் எனக்கென்ன வந்தது அதனால்,  ஆதித் தனது தோளை ஒரு முறை குலுக்கி விட்டு பைக்கில் மீண்டும் ஏறியிருந்து கடையை தேடிச் சென்றான் .

அவன் வீடு திரும்ப அன்று பின்னேரம் ஆகி விட்டது . அம்மா கோவிலுக்கு கிளம்பி இருப்பா என்று எண்ணிக் கொண்டு உள்ளே வந்தவன் அங்கே அம்மாவை காண ஆச்சரியப்பட்டான் . ஆவலுடன் அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டே அருகே சென்றான் . வாடிய முகத்துடன் அம்மா இவன் வரவை தான் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருதார் என்பதை அவன் அறியவில்லை .

யதுஷனும் அங்கே நிற்பதைக்கண்டதும் ஆதித் மகிழ்ச்சியாக அட , இன்று கோவிலுக்கு போகாமல் நீயும் நின்று விட்டாயா , நல்லது வா நாம் இருவரும் கொஞ்ச நேரம் அரட்டை அடிக்கலாம் என்று அழைக்க அம்மா குறுக்கிட்டு ஆதித் போதும் உன்னால் நான் அவமானப்பட்டது . நாங்கள் நாளையே இங்கிருந்து மீண்டும் கிளம்புகிறோம் . உன்னை இன்னமும் சின்னப் பையன் என்று தவறாக நினத்தது எனது தவறு தான் . வெளிநாடுகளில் பிள்ளைகளை வளர்ப்பது போன்ற கஷ்டம் வேறு ஒன்றும் இல்லை . அவர்கள் என்னவெல்லாம் என்னிடம் கேட்டு விட்டார்கள் ? காவாலி பிள்ளையை பெற்று வளர்த்து இங்கே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன் என்று எனது முகத்துக்கு நேரே கேட்கையில் எனக்கு தலையை குனிய வேண்டியதாகி போய்விட்டது „  .அம்மா ஒரேயடியாக புலம்பிக்கொண்டு இருப்பதை காண ஆதித்க்கு ஒன்றும் புரியவில்ல .

யதுஷனை பார்த்து என்ன நடந்தது ? ஏன் அம்மா இப்படி கவலை படுகிறா?“ என்று கண்ணால் சைகை செய்ய அவனோ உனக்கு நேற்றே கூறினேன்  அவள், அது தான் என் சஹானா மிகவும் நல்ல பெண் , அவளிடம் ஒரு வம்புக்கும் போக வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரித்தேன்  . அப்படி இருந்தும் ....என்று அவன் கோபத்துடன் பதிலுக்கு கொஞ்சம் கடுமையாகவே கூறினான் . யார் சஹானா ? யாரை பற்றி கூறுகிறாய் ? எனக்கு அப்படி ஒருவரையும் தெரியாதே ! என்று முழித்தான் ஆதித் . அம்மாவிடம் சென்று என்ன அம்மா அப்படி நடந்து விட்டது ? யார் வந்து என்னைப்பற்றி குறை கூறிச் சென்றார்கள் ? காட்டுங்கள் ! நான் சென்று முறையாக இரண்டு கேள்வி கேட்டு விட்டு  வருகிறேன் ! அம்மாவுக்கு ஒரேயடியாக ஆத்திரம் வந்து விட்டது .

போதும் ஆதித் போதும் ! ஒன்றும் தெரியாதது போல நடிக்க வேண்டாம் . பொய் வேறு பேச தொடங்கிவிட்டாயா இப்பொழுது ? . அது தான் இன்று மதியம் வீதியில் ஒரு அப்பாவி பெண்ணிடம் உனது சேஷ்டையை காட்டினாயே . அதை தான் குறிப்பிடுகிறேன் . அந்த பெண்ணின் தகப்பன் வந்து எல்லாவற்றையும் கூறி உங்கள் பிள்ளையை உடனே கூட்டி சென்றுவிடுங்கள் என்று கெஞ்சி கேட்டு விட்டு சென்றுள்ளார் .

ஓகோ அந்த பெண்ணின் பெயர் தான் சஹானவா! அந்த பெண்ணினால் தான் இத்தனை குழப்பமா !. நான் அப்படி ஒன்றும் அவளிடம் தவறு இளைக்கவில்லையே ? அவளுக்கு உதவி செய்ய முனைந்ததுக்கு அந்த பெண்ணின் கர்வத்தினால் இங்கே தனது தகப்பனிடம் கோள் மூட்டி விட்டு எமது வீட்டில் பிரச்னை உண்டு பண்ணியிருகிக்றாள் போலும் . அந்தப் பெண்ணை ஆதித் மனதினுல்லேயே திட்டி தீர்த்துகொண்டான் . அதற்கு பிறகு பதில் ஒன்றும் கூறாமல் தன் அறைக்கு சென்று தனது உடுப்புகளை அடுக்க தொடங்கினான் .

அம்மாவை நினைக்க தான் அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது . நீண்ட காலங்களுக்கு பின் தனது நாட்டிற்க்கு திரும்பி வந்திருக்கிறார் . அத்துடன் காலையும் மாலையும் தவறாமல் கோவில் திருவிழாவில் பங்கேற்று சந்தோஷப்பட்டு கொண்டிருந்தவர் . அவரின் சந்தோஷத்தில் இப்படி தேவையில்லாமல் யாரோ ஒரு கர்வம் கொண்ட பெண்ணினால் மண் தூவி விடப்பட்டு இடையில் நாம் கிளம்ப வேண்டியுள்ளது . அதுவும் இந்த யதுஷன் . ஒரே வயதுடையவன் என்பதால் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டிருந்தனர் . அப்படிபட்டவன் கூட இப்பொழுது என்னிடம் கோபம் கொள்கிறான் . எனக்கு பரவாயில்லை . ஜேர்மன் நாடு தானே எனது பிறப்பிடம் . எனது நண்பர்களும் அங்கே தான் . அத்துடன் அப்பாவும் எம்மை பிரிந்து இந்த 2 வாரங்களும் கஷ்டப்பட்டிருப்பார் . தனக்குள்ளேயே ஆதித் சமாதானப்படுத்திக்கொண்டான் .

ஆனாலும் யதுஷன் கூறிய அந்த என் சஹானா என்ற அந்த வரியை அப்பொழுதே அவன் கொஞ்சம் உன்னிப்பாக கேட்டிருந்தால் எதிர்காலத்தில் அவன் எத்தனையோ துன்பங்களை தவித்திருக்கலாம் . ஆனால் விதி யாரை விட்டது . கண்ண பகவான் கீத உபதேஷத்தில் கூறியது போல எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தேறியது அன்று .  தொடரும் ........

 

Edited by Meera Kugan
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நான் நினைத்தேன் மோட்டார் சைக்கிள் அக்சிடென்ட் சீன் ஒண்டு வரும் எண்டு ஆனா வரவில்லை
ம்ம் நல்லாத்தான் போகுது, வாழ்த்துக்கள்

சப்டர் என்பதை தமிழில் போட்டால் இன்னும் அழகு

Share this post


Link to post
Share on other sites

எங்கே ஒரே சினிமாதனமாக இருக்க போவதாக நினைத்தீர்களா ?

வாழ்த்துக்கு நன்றி .

 

இரண்டாம் அத்தியாத்தை இணைத்து விட்டேன் என்பதை எப்படி மற்றவர்களுக்கு அறியத்தருவது ?

தொடர்ந்து விரைவில் பதிவேற்றுவேன் .

 

Share this post


Link to post
Share on other sites

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை சகோதரி...! அதன் நறுமணமே நாலா பக்கமிருந்தும் ஆட்களை அழைத்து வந்துவிடும்...! தொடருங்கள்...!  :)

Share this post


Link to post
Share on other sites

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை சகோதரி...! அதன் நறுமணமே நாலா பக்கமிருந்தும் ஆட்களை அழைத்து வந்துவிடும்...! தொடருங்கள்...!  :)

 

மிகவும் நன்றி சகோதரா . மிக விரைவில் மூன்றாவது அத்தியாத்தை இணைத்து விடுகிறேன் . தொடர்ந்து வாசித்து உங்கள்

கருத்தை தெரிவியுங்கள் .நன்றி

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ..யாழில் நிலைத்து இருக்க வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு பிள்ளையின் பெயர் அறிய எத்தனை மாதம் மினக்கெட வேணும்.

ஜேர்மனியில் இருந்து வந்து பெயரை  மாத்திரமல்ல தொலைபேசி இலக்கத்தையும் வேணுமெண்டா?

தற்ஸ் டு மச்

Share this post


Link to post
Share on other sites

அத்தியாயம்  3

வாழ்க்கையில் நாம் எத்தனையோ சம்பவங்களை அன்றாடம் சந்திக்கிறோம் . ஆனாலும் வாழ்க்கைச் சக்கரம் ஒரு நிகழ்வுடன் நின்று போகாது தன் போக்கில் சுற்றிக் கொண்டே இருக்கும் . இதற்கு இணங்கியது போல் ஆதித் இலங்கை வந்து திரும்பி 5 ஆண்டுகள் ஓடோடிப் போய்விட்டன . அவன் பிறந்து வளர்ந்த தனது நாடு என்று கருதுகிற ஜேர்மன் நாட்டுக்கு திரும்பி வந்தவுடனேயே அவன் யாழில் நடந்த அந்த சம்பவத்தை அடியோடு மறந்துவிட்டான் .

இப்பொழுது இளைஞனாக உருவெடுத்திருந்தாலும் கவலைகளோ பொறுப்புகளோ இல்லாமையினால் அவனுள்ளேயே குடிகொண்டிருந்த அந்த குறும்புதனத்தை மட்டும் அவன் விட்டானில்லை . ஒரே ஒரு பிள்ளை என்பதனால் அவனது பெற்றோரின் அன்பிலே நனைந்து வளர்ந்ததினால் எல்லாவற்றையும் அவன் விளையாட்டாகவே எடுத்துக்கொண்டான் . அத்துடன் அவன் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தை நிருவகிப்பதினால்  பொருளாதார வளத்தில் உயர்ந்த நிலைமையில் இருந்தமையினாலும் அவனால் தனது வாழ்வை ஒரு வித பணப்பிரச்சனையுமின்றி நன்றாக அனுபவிக்க முடிந்தது . விரும்புகிற இடத்திற்கு விரும்புகிற நேரம் தன் நண்பர்களுடன் சேர்ந்து சென்று உல்லாசம் அனுபவிக்க அவனின் பெற்றோரும் அனுமதி மறுத்ததில்லை .

இவ்வாறே வழமை போன்று நண்பர்கள் சகிதமாக பக்கத்து நாடாகிய சுவிட்சலார்ந்து நாட்டிற்க்கு பனிசறுக்கு விளையாட்டு விளையாடுவதற்காக ஆதித் ஆயத்தம் செய்துக்கொண்டிருந்தான்  . அம்மா அறையினுள் வந்து அவனது உடைகளை அடுக்குவதற்கு உதவி செய்துக்கொண்டிருந்தார் . ஆதித் அம்மாவிடம் அன்பாக அம்மா, உங்களுக்கு சுவிஸ்லிருந்து சொக்லேட் கொண்டு வரவா ? என்று கொஞ்சலாக கேட்டான் .அம்மா பதிலுக்கு சிரித்தவாறே எனக்கு ஒன்றும் வேண்டாமடா . நீ கவனமாக திரும்பி வந்தாலேயே போதும் . உனக்கு தெரியுமும் தானே ரேசிங் காரோடுகிற மைகேல் ஷுமார்க்கருக்கு நடந்தது! அதனால் மிக கவனமாக வீடு திரும்பவேண்டும் . இந்த விளையாட்டெல்லாம் விட்டு எப்ப தான் பொறுப்புள்ளவனாக மாறப் போகிறியோ தெரியவில்லை .

ஆதித், உனக்கு சொல்ல மறந்து விட்டேன் . உனது நண்பன் யதுஷன் அடுத்த கிழமை இங்கு வருகிறான் . உனது அப்பாவின் நிறுவனத்திலேயே வேலை கொடுப்பதாக அப்பாவும் சம்மதம் கூறி உள்ளார் . நீயே பார் . எவ்வளவு பொறுப்புள்ள பையன் யதுஷன் ! நீயும் இந்த விளையாட்டை எல்லாம் விட்டு கொஞ்சம் பொறுப்புள்ளவனாக மாறினால் எனக்கும் சந்தோஷமாக இருக்கும்என்று ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டார் .

ஆதித் ஐயோ அம்மா போதும் உங்கள் உபதேசம் . இதோ ஜெரி வரப்போகிறான் . அடுத்த கிழமை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறும் உங்கள் அன்பு மகன் ஆதித் என்று நகைச்சுவையாக இராணுவர் மரியாதை செலுத்துவர் போன்று அம்மாவுக்கு சலூட் அடித்து விட்டு தனது உடமைகளுடன் ஜெரியின் வாகனத்துக்கு அருகில் சென்றான்.

வழமைப்போன்றே  ஆதித்யின் உயிர் நண்பன் ஜெரியின் மாமாவுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிலேயே தங்க ஒழுங்கு செய்யப்படிருந்தது . ஆதித் , ஜெரி மற்றும் இரு நண்பர்களுமாக பாட்டும் கும்மாளமுமாக சுவிஸ் நாட்டை வந்தடைந்தனர் . சுவிஸ் நாட்டின் இயற்கை அழகை  ரசிப்பதும் மலைப்பதும் ஆதித்க்கு வழமையான பழக்கமாக போய்விட்டிருந்தது. எத்தனை முறை அவன் இங்கு வந்திருந்தாலும் அவனுக்கு ஒரு போதும் இந்த நாடு அலுத்ததேயில்லை .

ஆரவாரமாக ஹோட்டலினுள் வந்த நண்பர்கள் நேரே வரவேற்பு பெண்ணிடம் சென்றார்கள் . ஜெரி தன்னை அப்பெண்ணிடம் சென்று அறிமுகப்படுத்திகொண்டான் . பின்னால் வந்த ஆதித் ஜெரி கதைத்துக்கொண்டிருந்த பெண்ணை கண்டவுடன் ஆச்சரியப்பட்டான் . அட, இந்த பெண் அவள் அல்லவோ . மலைப்புடன் நெருங்கி ஏய் சஹானா, உங்கள் பெயர் சஹானா தானே ? என்ன ஆச்சரியம் ? உங்களை நான் மீண்டும் சந்திப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவேயில்லை . அதுவும் கடல் தாண்டி இந்த அழகிய சுவிஸ் நாட்டில்! என்று கைலாகு கொடுப்பதற்காக தனது வலது கையை நீட்டினான் ஆதித் .

சஹானாவின் முகத்தில் முதலில் அதிர்ச்சியும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முகம் சூடேறுவதை கவனித்தான் ஆதித் . மறு நிமிடமே ஆதித்யை முற்றாக புறக்கணித்து விட்டு ஜெரியிடம் உங்களை சுவிஸ் இன் வரவேற்றுகிறது ! நீங்கள் தங்குவதற்கு அறைகள் தயாராக உள்ளன . இதோ உங்கள் சாவிகள். இங்கே உணவு விடுதியில் சாப்பிடுவதற்க்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது . வேறு எதுவும் தேவை என்றால் என்னிடம் கூறுங்கள். அதை உடனே நிறைவேற்ற முயலுகிறேன் என்று மிக படபடப்பாக கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றாள் .

ஆதித் அப்படியே மலைப்புடன் நின்றான். அவனது நண்பர்களோ ஒருசேர கொல்லென்று சிரித்தனர் . ஆதித் உன்னையும் ஒரு பெண் அவமதிப்பதா? இது என்ன அதிசயம் ! பொதுவாக பெண்களிடையே மிகவும் பிரபலமான ஆதித்யையும் ஒரு பெண் , அதுவும் அவனது நாட்டு பெண்ணொருத்தி, ஆதித்யை புறக்கணித்து விட்டு ஜெரியிடம் பேசுகின்றாள் என எல்லோரும் நகைச்சுவையாக கூறி கேலிப் பண்ணினார்கள் . ஆதித் தனது தோளை ஒருமுறை குலுக்கி விட்டு தனது அறையை நாடிச் சென்றான் . அவனுக்குள் கொஞ்சம் ஆத்திரமாகவும் இருந்தது . என்ன கர்வம் இந்த பெண்ணிற்கு . சாதாரணமாக அவளிடம் பேசினாலும் இப்படி அலர்ச்சியப்படுத்துகிறாளே ! தான் என்ன மகாராணி என்ற நினைப்போ ? மனதினுள்ளே வைது கொண்டான் .

அடுத்த நாள் அவர்கள் காலை உணவு உன்ன நண்பர்கள் சகிதமாக உணவு விடுதிக்கு செல்லும் வழியில் சஹானாவை வரவேற்பறையில் கண்டான் . அவள் இவர்களை கண்டதும் ஒதுங்கிக் கொள்ள முயற்சித்தாள் . என்றாலும் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வந்தது . முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு ஜெரியிடமும் மற்றைய நண்பர்களிடமும் மட்டும் காலை வணக்கத்தை தெரிவித்து விட்டு மீண்டும் ஆதித்தை அவமதிக்கும் முகமாக அவசரமாக தனது கைபையை எடுத்துக் கொண்டவாறு அவளது பணி முடிந்த காரணத்தினால் அவசரமாக வெளியேறினாள் . இதை அவதானித்த ஆதித்யின் நண்பர்கள் மீண்டும் பரிகாசமாக நையாண்டி செய்ய ஆதித்க்கு மேலும் கோபத்தை ஏற்றியது . இனி அவளை காணக்கிடைத்தால் நேரே அவளிடமே அவளது நடத்தையை பற்றி கேட்டு விடவேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டான்.

உணவு முடித்த கையோடு பனி சரக்கு விளையாடுவதற்காக மலைக்கு சென்றனர் . ஒரே பனி மூடிய மலைகளை காணும்பொழுது ஆதித்தை உற்சாகம் தொற்றிகொண்டது . வெள்ளை வெளீர் என பஞ்சு கம்பளம் விரித்திருந்த அந்த மலைகளுக்கும் வானத்துக்கும் இடையில் இடைவெளி மிகவும் குறைந்தது போல் தென்பட்டது . அம்மலையில் ஏறினால் அந்த வானத்தை எட்டி தொட்டு விடலாம் போலிருந்தது . ஆதித் தன் நண்பர்களிடம் யார் முதலில் மலையில் ஏறுவது என்று சவால்விட்டவாறே உடனே அவர்களுக்கு காத்து நிற்காது மின்தூக்கியில் அட, அதுதான் அந்த லிப்டில் ஓடிச் சென்று ஏறினான் . திரும்பி பின்தொடர்ந்து ஓடி வந்துக்கொண்டிருந்த நண்பர்களை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் . சற்று முன்னர் அவனுள் கொதித்துக்  கொண்டிருந்த கோபம் எங்கோ சென்று மறைந்து விட்டது . மலை உச்சிக்கு சென்று பனி சரக்கு விளையாட்டில் ஈடுபட்ட பொழுது ஆதித்தும் அவன் நண்பர்களும் சிறு பிள்ளைகள் போல் பனியில் விழுந்தும் புரண்டும் விளையாடி மகிழ்ந்தனர் .

ஒருவாறு அன்று முழுவதும் பனி சறுக்கு விளையாட்டிலேயே ஈடுபட்ட பின்னர் மிகுந்த களைப்புடன் இரவு தமது ஹோட்டல்யை வந்தடைந்தனர் . இராப்போசனத்தை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று நான்கு நண்பர்களும் உணவு விடுதியை ஒரே ஆரவாரத்துடன் சென்றடைந்தார்கள் . அங்கு வைன் அருந்திக் கொண்டிருந்த ஜெரியின் மாமாவை கண்டவுடன் நால்வரும் அவருடன் சென்று இணைந்துகொண்டனர் . மாமாவும் அவர்களின் நலம் விசாரித்து விட்டு அவர்கள் ஹோட்டலின் சௌகரியங்களை பற்றி விசாரித்தார் . அந்நேரம் பார்த்து சஹானாவும் அவளுடன் பணியாற்றும் பெண்ணும் தமது பணி முடிந்து மாமாவிடம் விடைப்பெற்று போவதற்காக வந்தனர் .

சஹானாவை கண்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்த ஜெரி அவர்கள் இருவரையும் தங்களுடன் இருந்து உரையாட அழைத்தான் . சஹானாவிற்கு ஒரே தர்மசங்கடமாகிவிட்டது. தங்களது முதலாளியின் முன்னிலையில் மறுப்பது அவ்வளவு நல்லதாக இல்லாவிடினும் ஆதித் அவர்களில் ஒருவராக அமர்ந்து இவளை யோசனையுடன் அவதானிப்பதை கண்டதும் ஏதாவது காரணம் கூறி செல்ல எத்தனிக்கும் வேளையில் மாமாவே வா சஹானா, வந்து எம்முடன் அமர்ந்து கொஞ்ச நேரம் உரையாடு ! என்று ஆதித்யின் பக்கம் திரும்பி ஆதித் உனக்கு தெரியுமா ? சஹானாவும் உனது நாட்டை சேர்ந்தவள் தான் . இங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு சில நாட்களே ஆகுகின்றது . மிக மரியாதை தெரிந்த அமைதியான பெண் . உனக்கு அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்று நான் நினைத்தேன் . இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது என்று கூறினார் .

ஆதித்க்கு பளிச்சென்று ஒரு பொறி தட்டியது . உடனே எழும்பி இதோ எல்லோருக்கும் குடிக்க ஏதாவது எடுத்து வருகிறேன் என்று பதிலுக்கு கூட நிற்காது மது வகைகளும் குளிர்பானங்களும் கொடுக்கும் இடத்திற்கு சென்றான் . தனக்கும் நண்பர்களுக்கும் பியர் பானத்திற்கு கூறிவிட்டு மாமாவிற்கு வைனும் அதே நேரத்தில் இன்னுமொரு கிளாஸ் வைனுடன் 2 கிளாஸ் பழச்சாறுக்கும் உத்தரவுயிட்டான் . எல்லா குடிவகைககளையும் பெற்றுக்கொண்ட ஆதித் ஒரு கிளாசில் மட்டும் வைனுடன் பழச்சாறையும் கலந்து எடுத்துக்கொண்டு வந்து வழமைபோல் நண்பர்களுக்கு பியரை கொடுத்து விட்டு வைனுடன் கலந்த அந்த கிளாசை மட்டும் சஹானவிடம் நீட்டினான் .

மற்றையவர் முன்னிலையில் மறுப்பு தெரிவிக்க முடியாத நிலையில் சஹானாவும் அதை எடுத்து குடித்தாள் . ஆதித் கண்களில் குறும்புடன் சஹானாவை ஓரக்கண்ணால் அவதானித்து கொண்டிருந்தான் .     

சிறிது நேரம் எல்லோரும் சுவாரசியமாக அளவளாவி கொண்டிருகையில் சஹானாவுக்கு ஏனோ தலை சுற்றுவது போன்று இருந்தது . என்றாலும் சமாளித்தவாறே உரையாடலில் கலந்து கொள்ள முயற்சித்தாள் . ஆதித் தன் மனதினில் சிரித்தவன்னமாக மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் குளிர் பானங்களை வழங்கினான் . சஹானவிற்கு எப்படியும் 2 கிளாசுக்கு மேல் வைன் கலந்த பழச்சாறை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்திருப்பான் . இவனது தில்லுமுல்லு ஒன்றும் அறியாத சஹானாவும் அதை வெறும் பழச்சாறு என்றே குடித்து முடித்தாள் .

 தொடரும் .......

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு பிள்ளையின் பெயர் அறிய எத்தனை மாதம் மினக்கெட வேணும்.

ஜேர்மனியில் இருந்து வந்து பெயரை  மாத்திரமல்ல தொலைபேசி இலக்கத்தையும் வேணுமெண்டா?

தற்ஸ் டு மச்

 

நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று உங்களுக்கு தெரியும் . ஆனால் ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த பையனின் நிலை

வேறு அல்லவா ? அவனுக்கு இங்கு எல்லாம் சகஜம் .இங்கத்தைய இளசுகளை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் .

அதுசரி காதல் கதை படிக்க அம்மா அனுமதி கொடுத்தவவா ஈழப்பிரியன் ?

நன்றாக உள்ளது தொடருங்கள்....

 

3ம் அத்தியாத்தையும் வாசித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் . நன்றி

தொடருங்கள் ..யாழில் நிலைத்து இருக்க வாழ்த்துக்கள்.

 

உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி நிலாமதி .

Share this post


Link to post
Share on other sites

ஆதித் சஹானாவை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டான் போலிருக்கு...! தொடருங்கள்...!! :)

Share this post


Link to post
Share on other sites

ஆதித் சஹானாவை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டான் போலிருக்கு...! தொடருங்கள்...!! :)

 

பொறுத்திருந்து பாருங்கள் Suvy.

உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி .

Share this post


Link to post
Share on other sites

வெளி நாட்டில் வெள்ளைக்காரிகள் ஒரு கோலாவை வாங்கிக் கொடுத்தாலே இரண்டாவது நாளும் வந்து நிற்பார்கள். அதற்காக ஈழத்தில் வாழும் தமிழ்ப் பெண்களையும் அப்படி நினைக்கலாமா? 

ஆதித் விடும் பிழைகளில் ஒன்று அவர் ஈழப் பெண்களின் மன நிலையைப் புரியாமல் இருப்பது தான். :D

 

இப்ப தான் சுவிஸ் வந்திட்டாவே இனிமேல் சஹானாவே அதை இவருக்குப் புரிய வைக்கலாம்.

 

கதை சொல்லும்  லாவகம்  எங்களையும் ஒரு முறை இலங்கை, ஜேர்மனி, சுவிஸ் என இழுத்துச் செல்கின்றது.
தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

வெளி நாட்டில் வெள்ளைக்காரிகள் ஒரு கோலாவை வாங்கிக் கொடுத்தாலே இரண்டாவது நாளும் வந்து நிற்பார்கள். அதற்காக ஈழத்தில் வாழும் தமிழ்ப் பெண்களையும் அப்படி நினைக்கலாமா? 

ஆதித் விடும் பிழைகளில் ஒன்று அவர் ஈழப் பெண்களின் மன நிலையைப் புரியாமல் இருப்பது தான். :D

 

இப்ப தான் சுவிஸ் வந்திட்டாவே இனிமேல் சஹானாவே அதை இவருக்குப் புரிய வைக்கலாம்.

 

கதை சொல்லும்  லாவகம்  எங்களையும் ஒரு முறை இலங்கை, ஜேர்மனி, சுவிஸ் என இழுத்துச் செல்கின்றது.

தொடருங்கள்

 

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை . ஆதித்தை அங்கே ஈழத்தில் ஒரு ஆறு மாதங்கள் தங்க விட்டிருந்தால் சிலவேளை

நம் ஈழப்பென்களைப் பற்றி புரிந்திருக்குமோ என்னவோ . :unsure:

 

உங்கள் பாராட்டுதலுக்கு மிகவும் நன்றி . விரைவில் தொடரை இணைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே அத்தியாயம் 4

 

சஹானாவின் தலை ஒரேயடியாக சுற்றுவது போல் இருந்தது . அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை . ஏன் இப்படி தனக்கு இருந்தாப்போல் இயலாமல் போகிறது ?

மெதுவாக எழும்பி எல்லோரிடமும் விடை பெற எண்ணுகையில் மாமாவிற்கு ஒரு முக்கிய தொலைபேசி அழைப்பு வர அவர் முந்திக்கொண்டு எல்லோரிடமும் விடைபெற்று எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்றார் .

சஹானா இது தான் தருணம் என்று மேலும் தாமதிக்காமல் எழுந்தவள் ஒரு நிலையில் நிற்க முடியாமல் அப்படியே தொபால் என்று மீண்டும் அவர்கள் இருந்து உரையாடிக்கொண்டிருந்த அந்த சோபாவிலேயே விழுந்தாள் . ஆதித் இவளது தள்ளாட்டத்தை கண்டு பகீர் என்று சிரித்து விட்டான் . என்ன என்று புரியாது குழம்பி நின்ற ஜெரி இவனது சிரிப்பை கண்டதும் நிலைமையை புரிந்துக்கொண்டான் .

ஏய் ஆதித், என்ன வேலை செய்திருக்கிறாய் ? பாவமடா, இந்த பெண்என்று  கூற எத்தனிக்கையில் ஆதித் பதிலுக்கு இல்லை, இல்லை இந்த பெண்ணை நான் ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன் . சாதுவாக தோற்றம் அளித்தாலும் இவள் மிகவும் கர்வம் பிடித்தவள் . என்னை தெரிந்திருந்தும் இங்கு கண்டவுடன் ஒரேயடியாக அலர்ச்சியப்படுத்தினாள் . ஆகவே தான் ஒரு சிறு பகிடி செய்து பார்த்தேன் . அம்மணிக்கு போதை நன்றாக ஏறிவிட்டது . இவளை பார்க்கையில் எனக்கு ஒரே நகைச்சுவையாக இருக்கிறது என்று வாய் விட்டு சிரித்தான் .

சஹானா சோபாவில் சாய்ந்திருப்பதை கண்ட அவளது நண்பி மெதுவாக அவளை எழும்ப உதவி செய்தாள் . சஹானா நான் தூங்க வேண்டும் . ஒரே நித்திரையாக வருகிறது என்று முனுமுனுத்தாள். ஆதித் இவளது முனுமுனுப்பை கேட்டதும் உடனே விரைந்து வரவேற்பு பகுதில் காணப்பட்ட தங்கும் அறைகளுக்கான சாவிகள் கொளுவப்பட்டிருந்த பிரிவிற்கு சென்றான் .

ஒரு நிமிடம் யோசனை செய்து விட்டு அதிலிருந்த ஒரு சாவியை எடுத்துகொண்டு சஹானாவையும் அப்பெண்ணையும் பின்தொடர பணித்தவாறே குறித்த அறைக்கு கூட்டிச்சென்று கதவையும் திறந்து விட்டான் . சஹானாவிடம் இன்றிரவு நீங்கள் இவ்வறையில் தங்கி விடுங்கள் . நீங்கள் இருக்கும் நிலையில் இப்படியே வீடு திரும்புவது நல்லது அல்ல என்று அறிவுரை கூறுவது போல் நடித்துவிட்டு மீண்டும் தன் நண்பர்களிடம் திரும்பி வந்தான் .

அவனுக்கு எல்லாம் ஒரு விளையாட்டு போலிருந்தது . சஹானாவை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தான் . அத்துடன் நின்று விடாது நண்பர்களே நாளை உங்களுக்கு ஒரு மிகுந்த நகைச்சுவை விருந்தொன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளேன் . ஆகவே ரசித்து மகிழ அன்போடு வரவழைகிறேன் என்று பாசாங்கு செய்வது போல் தலை வணங்கினான் .

அடுத்த நாள் காலை யாரோ மிகுந்த ஆத்திரத்தில் கூச்சல் போடுவது சஹானாவின் காதில் லேசாக கேட்டது . அவளுக்கு கண்களை திறப்பது மிகுந்த சிரமமாக இருந்தது . அத்துடன் அவளது முதலாளியின் குரல் போலிருந்த ஒருவர் இவளது பெயரை கூறி அவசரமாக எழும்புமாறு கேட்டதையிட்டு சஹானா கண்களை கசைக்கியவாறு எழும்பி உற்கார முயற்சித்தாள் .

அவளுக்கு ஒரு நிமிடம் தான் எங்கு இருக்கிறோம் என்பது முற்றாக புரியவில்லை . அதுமட்டுமின்றி அவளை சுற்றி முதலாளி உட்பட பலர் கோபத்துடன் இவளையே பார்த்துகொண்டு நின்றதை கண்டாள்  . சஹானா ஒருவாறு தன்னை சுதாகரித்துக்கொண்டு கட்டிலை விட்டு இறங்கினால் . அவளது தலை விண்ணென்று வலித்தது .

அதற்குள் மிகவும் நவ நாகரீகமாக உடை அணிந்த ஒரு பெண் சஹானாவை நோக்கி உனக்கு என்ன தைரியம் இருந்தால் எனக்கு ஒதுக்கி வைத்த விசேட அறையில் வந்து இப்படி தூங்குவாய் . இச்செயல் என்னை அவமதித்தது போலிருக்கிறது . இதோ நான் வேறு ஒரு ஹோட்டலை பார்த்து கிளம்புகிறேன் என்று காட்டுக் கத்தல் கத்தினாள் . அப்படியே முதலாளியையும் நோக்கி முதலில் உங்கள் பணியாளர்களை விருந்தினர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்க சொல்லி கொடுங்கள் . அதற்கு பிறகு என்னைப் போன்ற  பிரபலமானவர்களை வரவழையுங்கள்என்று கத்தி விட்டு ஆக்ரோஷமாக வெளியேறினாள்.

முதலாளியின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது . அவர் சஹானாவை நோக்கி  „இன்றுடன் உனது வேலை காலி . அதாவது குடிபழக்கத்துடன் எம்மை நாடி வந்த பிரபலமானவர்களை அவமதித்த உனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும் . ஆதலால் உடனே நீ இந்த ஹோட்டலை விட்டு வெளியேறி விடு என்று கத்தி விட்டு சென்றார்.

சஹானாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது . அதற்குள் மகளே சஹானா!“ என்று தந்தையின் குரலை கேட்டதும் அப்படியே அதிர்ச்சி அடைந்தாள் சஹானா  . அப்பா! என்று குரல் வந்த திசையை நோக்குகையில் அவள் தந்தை நெஞ்சை பிடித்தவண்ணம் கலங்கி நின்றார்.

மகள் இரவு வீடு திரும்பாததால் அவளை தேடி ஹோட்டலுக்கு வந்து அங்கு நடைபெற்ற அவ்வளவையும் நேரில் கண்டு மனம் வெதும்பி நின்றார் . தனது ஆசை மகள் சஹானா குடிபழக்கத்துக்கு அடிமையானவளா? . அத்துடன் மற்றவரை என்றும் மதித்து நடப்பவள் எப்படி இவ்வாறு நடந்து கொள்கிறாள் ? அவரால் ஒன்றையும் ஜீரணித்துக்கொள்ள முடியாது தடுமாறி நின்றார் .

ஒருவேளை பணக்கஷ்டம் காரணமாக ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு மகளை அனுப்பியது தான் பிழையாக போய்விட்டதோ ! அவரால் இனி ஒரு நிமிடமும் அங்கு நிற்பதை தாங்கிக்கொள்ள முடியாது திரும்பியும் பாராது நெஞ்சை பிடித்துக்கொண்டே வெளியேறினார் .

சஹானா குமுறி குமுறி அழுதாள் . அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை . எப்படி தான் இந்த அறைக்கு வந்தேன் ? அவளால் தன் தலையை உயர்த்தக் கூட முடியாது தலை வலித்தது . தனக்கு மது பழக்கம் இல்லையே அப்படியிருக்க எல்லோரும் என்னிடம் பழி சுமத்துகிறார்களே . அதுவும் எனது அப்பா தன்னிடம் குற்றம் சுமத்தி விட்டு செல்வது என்றால் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை .

தான் நேற்று பழச்சாறு மட்டும் தானே குடித்தேன் என்று அவள் எண்ணுகையிலேயே ஆதித் அவளையே பார்த்துக்கொண்டு அவ் அறையில் நிற்பது தெரிந்தது . அவனது நண்பர்களும் மற்றவர்களும் நாசூக்காக வெளியேறுவதும்  தெரிந்தது .

ஓஹோ இந்த கயவன் ஆதித்யின் சதி வேலையோ இது . அவன் பழச்சாறில் மதுபானத்தை கலக்கி எனக்கு தந்துள்ளான் . என்னை பழி வாங்கும் நோக்கில் இவ்வாறு என்னை அவமானப்படுத்தியுள்ளான் . அன்றே அவனை கண்டவுடனேயே ஜாக்கிரதையாக இருந்தும் இப்படி மாட்டிவிட்டேனே என்று தன்னுள்ளேயே மருகினாள் . அப்பா மிகவும் கலக்கத்தில் வெளியேறினார் அவரிடம் ஓடிச்சென்று உண்மையை உரைக்கவேண்டும் என்று அவசரமாக ஓடினாள்.

வெளியேறுகையில் ஆதித்யை நோக்கி உன்னால் தான் இப்படி அவமானப்பட்டு நிற்கிறேன்!“ என்று குற்றம் கூறும் பார்வை பார்த்து விட்டு மட்டும் சென்றாள் .

ஆதித் அப்படியே இவளது பார்வையை தாங்காது உறைந்து நின்றான் . ஒரு வார்த்தை கூறாது ஆனால் அவளது நெருப்பு சுமந்த பார்வையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . விளையாட்டு என்று நினைத்தது வினையாக போய்விட்டது . குறும்பு தனத்துடன் சேஷ்ட்டை செய்ய விளைந்தது இப்படி ஒரு பெரும் பிரச்சனையில் முடியும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை .

அன்று யாழ்ப்பாணத்தில் அவளின் முறைப்பாட்டால் அம்மா திருவிழா முடியும் முன்னரே திரும்ப வேண்டியிருந்தது . அதற்கு பதிலாக கொஞ்சம் மதுவை கலந்து கொடுத்து முசுப்பாத்தி பார்க்க முனைந்தான் . ஆனால் சஹானாவின் வேலை பறிபோகும் என்று அவன் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை . அதுவும் மட்டும்மின்றி அவளை தான் தங்க வைத்த அதே அறைக்கு இன்று அந் நடிகை தங்க வருவாள் என்றும் அவன் எதிர்ப்பார்க்கவில்லை .

ஏதோ ஜெரியின் மாமாவிடம் மாட்டி விட்டு கூத்து பார்க்கலாம் என்பது தான் அவன் திட்டம் . அதற்குள் எல்லாம் கை மீறி போய் சஹானாவின் தந்தை அங்கு நடந்தவற்றை எல்லாம் நேரில் காண வேண்டி வந்ததும் அவரால் எதையும் தாங்கிக்கொள்ள முடியாது மிகுந்த வருத்தத்தில் வெளியேறியதும் அவனுக்குள் கவலையை தந்தது .

அத்துடன் சஹானாவின் அந்த குற்றம் சுமத்தும் பார்வை ! அவனது நெஞ்சை ஏதோ பிசைந்தது . தான் பெரும் தவறு செய்து விட்டேன் என்பதை உணர்ந்தான் . ஒரு அப்பாவி பெண்ணிற்கு  தனது விளையாட்டுதனம் அவளது வேலை பறிக்கும் அளவுக்கு பாதித்து விட்டதை அவன் நன்றாகவே உணர்ந்தான் . என்ன செய்வது என்று புரியாது குனிந்த தலையுடன் அவனும் அவ்வறையை விட்டு வெளியேறினான் . அதே குற்ற உணர்வு அவனை முழுதாக ஆட்கொண்டது .

அடுத்து வந்த நாட்களில் ஆதித் தனது சந்தோஷம், குறும்புத்தனம்  எல்லாவற்றையும் தொலைத்து விட்டான் . ஜெரி உட்பட அவனது நண்பர்கள் அவனை பழைய நிலைக்கு மாற்ற பெரிதும் முயற்சி செய்தாலும் அவனால் தன் குற்ற உணர்விலிருந்து எழவே முடியவில்லை. அவனது மனத்திரையில் சஹானா அழுதபடியே வெளியேறுகையில் அவனை பார்த்த அந்த வெறித்த குற்றம் சுமத்தும் பார்வை அப்படியே பதிந்திருந்தது .

http://www.youtube.com/watch?v=MxAswJoN95g

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கதைக்கு நன்றிகள் தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்.....

Share this post


Link to post
Share on other sites

நன்றாக உள்ளது தொடருங்கள்,

யாழில் ஒரு காதல் கதை என்ற ஒரு தொடர் முடியாமல் இருக்குறது, ஏலும் என்றால் அதையும் முடித்து விடுங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/136917-யாழில்-ஒரு-காதல்-யாழ்கள-உறவுகள்/page-2

Share this post


Link to post
Share on other sites

கதைக்கு நன்றிகள் தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்.....

 

மிகவும் நன்றி Putthan. விரைவில் தொடர்கிறேன் .

நன்றாக உள்ளது தொடருங்கள்,

யாழில் ஒரு காதல் கதை என்ற ஒரு தொடர் முடியாமல் இருக்குறது, ஏலும் என்றால் அதையும் முடித்து விடுங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/136917-யாழில்-ஒரு-காதல்-யாழ்கள-உறவுகள்/page-2

 

மிகவும் நன்றி .

நிச்சயமாக அதையும் எழுத முயற்சிக்கிறேன் .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சுப்பிரமணியன் சுவாமி உட்பட பல தமிழின கொலையாளிகள் ஒன்று கூடிய வைபவம்.  அக்கா கனிமொழியும் கலந்து வாழ்த்தி இருப்பா என்று நினைத்தேன், படத்தை காணவில்லை. 
  • கடஞ்சா, 1. நான் ஒருபோதும் விக்கிபீடியாவை நம்பகமான source ஆக கருதுவதில்லை. ஒன்றில் எழுத்தில் வந்த புத்தகங்களில் இருந்து அல்லது, நான் மேலே காட்டிய நம்பகமான தளங்களை போல தளங்களில் இருந்து தகவல்களை மேற்கோள் காட்டும் போதுதான் ஒரு கருத்தை ஆமோதிக்க முடியும். இதை சொல்லுவதற்கு மன்னிக்கவும், ஆனால் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு தடவை இந்தியாவின் “பூர்வீக குடிகள்” அணுகுமுறை மாற்றம் பற்றி சொல்லும் போது, அது உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டதாக சொல்கிறீர்கள். இன்னொரு சந்தர்பத்தில் பாகிஸ்தான் வரலாறு பற்றி எழுதும் போதும் பாகிஸ்தானிய நண்பர்கள் கூறியதாக எழுதினீர்கள். இப்போ ஒரு slide show வை முன்வைக்கிறீர்கள். இந்த உலகில், குறிப்பாக இண்டெர்நேட் கண்டுபிடித்தபின் பொய்யான வரலாறும், அரைகுறையான வரலாறுமே எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. இந்த நிலையில், உங்கள் கருத்தை ஏற்க நான் தயங்க பிரதான காரணம் - உங்கள் கருத்து தரமான ஆதாரங்களால் நிறுவப்படவில்லை. 2. பாகிஸ்தான் பிரிவினையில், ஜின்னா 1937 பின்பே அதிக அக்கறை எடுத்தார் என்பதை நாம் எல்லாரும் ஒத்துகொள்கிறோம். 1933 ற்கு முன் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு எனும் கொள்கை வலிமையாக முன்வைக்கப்பட்டதா? என்றால் பதில் இல்லை என்பதே. அலியின் பிரகடனத்தை ஆமோதித்து ஒப்பமிடவே 3 பேர் இல்லாத நிலையே காணப்பட்டது. அதற்கு முன் எங்கோ ஒரு சிலர் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு என்பதை பற்றி சிலாகித்து இருக்கலாம். கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கலாம், ஆனால் 1940 வரை அது முஸ்லீம்களை பிரதிநிதிதுவம் செய்தவர்களின் கொள்கையாக இருக்கவில்லை. கூடவும் இக்பால் கேட்ட கூட்டாட்சி, அலி கேட்ட பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. அலிகேட்ட பாகிஸ்தான் ஜின்னா அடைந்த பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. ஆனால் முஸ்லீம்களிற்கெனெ ஒரு தனிநாடு என்பதை முதன்முதலில் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தி, அதை வட்ட மேசையில் சமர்பித்து, புதியநாட்டுக்கு பாக்(கி)ஸ்தான் எனப் பெயரும் சூட்டியவர் அலி. 
  • எம்மவர்கள் பலர் இப்போதெல்லாம் புதுமை என்று கூறிக்கொண்டு பல கோமாளித்தனங்களைச் செய்கின்றனர். இதுபோன்ற ஒன்று தான் இதுவும். தாலி கட்டுவது என்பதே விசர் வேலை. இதில் ஆணுக்கும் கட்டுவது ????? சடங்குகள் இன்றி தமிழ்முறைப்படி இவர்கள் திருமணம் செய்திருந்தால் வாழ்த்தலாம், பாராட்டலாம்.   கேரள இனத்தவரின் சடங்குகளில் ஆணும் பெண்ணும் கழுத்துக்கு நகை அணிவிப்பது உண்டு. அதை பார்த்தும் இவர்கள் செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை தேவையற்ற விடயமும் எம் அங்கலாய்ப்பும்
  • இந்த மாப்பிள்ளை யாழ்கள உறவாம்? யாரென்று தெரியவில்லை ஆனாலும், அவர் இதை விளம்பரப்படுத்தி செய்யாத போது, இதை நாமும் ஒரு தனிப்பட்ட விடயமாக கடந்து செல்வதுதானே கண்ணியமான அணுகுமுறை? இதை சிலாகிப்பதில் ஏதும் பொது நலனிருப்பதாக தெரியவில்லை. பிக்பாசில் மூன்றாம் நபர்களின் தனிமனித விடுப்பு வேண்டாம் என்று கருத்தாடலை தடை செய்யும் நாம், இன்னொரு கள உறவின் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைப்பானேன்? அவர் இதைதான் ஒரு புரட்சியாக செய்வதாயோ அல்லது எல்லோரும் இப்படி செய்யுங்கள் என்றோ கூறவில்லையே? சொல்லப்போனால் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊகம் மட்டுமே சொல்கிறோம். அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கும். அதை அவர்கள் மட்டுமே அறிந்தால் போதும். ஊரில் கதைக்க பிரச்சினையா இல்லை. டேப்லாயிட் பத்திரிகைகள் போல தனிமனித வாழகையில் மூக்கை நுழைக்கும், கருத்து சொல்லும் அருவருப்பான பழக்கத்தை முடிந்தளவு தவிர்ப்போம் என்பதே என் வேண்டுகோள். 
  • ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களில் எவருக்காவது ஆதரவு வழங்குவது என்றால் முதலில் அவர்களிடம் இருந்து சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தமிழர் தரப்பு உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதனைவிடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களை கோருவார்களானால் அதுவே மீண்டும் தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிபோட்டுக்கொள்ளும் முடிவாக அமைந்துவிடும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எச்சரித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தமிழர் தரப்பினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து சிங்கள தலைமைகளுடன் பேரம் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் மாத்திரம் தன்னிச்சையாக எடுக்காது, தமிழ் தேசியத்திற்காக உறுதியாக செயற்பட்டுவரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுவான முடிவொன்றை எடுக்க முன் வர வேண்டும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவருகின்ற நிலையில், தமிழர் தரப்பினர் அனைவரும் இணைந்து பலமான அணியாக கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்திலேயே சிங்கள தலைமைகள் கவனம்செலுத்தும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களுக்கு ஒரு வருடத்திற்குள் எவ்வாறு தீர்வு வழங்கப் போகின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். https://www.ibctamil.com/srilanka/80/128053