Jump to content

நிலாவெளிக் கடலை எழிலூட்டும் புறாமலை (Pigeon Island)


Recommended Posts

உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள்.
 
DSC01215-001.JPG
 
North_Eastern_Sri_Lanka_districts.png
 
கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது.
கோணேசர் ஆலயம், கன்னியா நீரூற்று புராதன சின்னங்கள் கிண்ணியா சேருவில நிலாவெளிகடல் புறாமலை என உல்லாசப் பயணிகளுக்கு கண்டு களிக்க அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன.
 
 
pigeon-island-resort.jpg
 
படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம். திருகோணமலையில் இருந்து 20கிலோ மீற்றர் தூரத்தில் வடமேற்கில் அமைந்துள்ளது நிலாவெளி.
இது கரையோரப் பிரதேசமாக இருக்கிறது.இங்கு கடலில் மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது.
மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பலவும் இங்குள்ளன.  
சுனாமியின் தாக்கமும் இங்கு அதிகம் ஏற்பட்டு காலப்போக்கில் மாற்றம் பெற்றுள்ளது.
 
 
DSCF9041.JPG
 
திருமணமானபின்பு நிலாவெளி சென்றிருந்தோம். கணவனின் பாட்டனார் பல வருடங்களுக்கு முன் அங்கு சென்று குடியேறியிருந்தார்கள்.
 
வீட்டிற்கு முன்னால் வெங்காயத் தோட்டம். வீட்டின் ஒரு பக்கத்திலே கத்தரி, பூசணி, வெண்டித் தோட்டங்கள் சூழ்ந்திருக்க பழைய வீடுகள் இரண்டு. வீட்டின் பின்புறம் கிணறு. கிணற்றைச் சுற்றி எலுமிச்சை மரங்கள். வாழைத் தோட்டங்கள். பலா முருங்கை இளநீர் தென்னை கமுகு மரங்கள் என சோலை வனம்.
 
அடுத்த காணியில் பசுமாடு கன்றுகளுடன் மாட்டுக் கொட்டகம். காலை மாலை என பாலுக்கு எந்நேரமும் குறைவில்லை. நெல் வயல்கள் உப்பளம் என சற்று தொலைவே இருக்கின்றன. வீட்டில் இருந்து பார்த்தால் நிலாவெளிக் கடல் தெரியும். இடையே இவர்களுக்குச் சொந்தமான தென்னம் தோட்டங்கள். அவற்றின் ஊடே நடந்து சென்றால் கடலை அடையலாம்.
 
88791563.jpg
 
பாட்டியும் கடல் குளியலுக்கு தம்பி தங்கை கூட்டத்துடன் சேர்ந்து கொண்டாள். ஆசை தீர அனைவரும் கடலில் குளித்து வந்தோம். நின்ற ஒரு வாரமும் கடல் குளியல்தான். அவ்வளவு ஆனந்தம்.
 
உப்பளம் நெல்வயல் அதை ஒட்டிக் கோயில் எனச் சுற்றிப் பார்த்தோம். அப்பொழுதுதான் உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன. குடும்பமாக அங்கும் ஒரு விசிட் அடித்தோம்.
 
 
5351920.jpg
 
இம் முறை சென்ற போது முன்னால் இருந்த வெங்காயத் தோட்டத்தில் வீடு கட்டி இருக்கிறார்கள். இப்பொழுதும் வீட்டைச் சுற்றி வர மாதுளை, கொய்யா மரங்கள், வாழை என இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.
 
ஆனால் கடற்கரையையும் தென்னந்தோட்டங்களையும் வீட்டுவாயிலில் நின்றபடியே காணமுடியவில்லை என்பது ஏமாற்றமே. காலத்தின்மாற்றத்தால் தென்னந்தோப்புகள் எல்லாம் நவீன ஹோட்டல்களாக மாறிவிட்டிருந்தன. கட்டிடங்கள் கடலை மறைத்துவிட்டன. அவற்றைத்தாண்டித்தான் கடலுக்கு செல்லக் கூடியதாகஇருந்தது கோணேசர் கோயில் கன்னியா புறாமலை எனச் சுற்றி வந்தோம்.
 
 

pigeonisland.jpg

 

நிலாவெளிக் கடற்கரையில் இருந்து புறாமலை 2.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
 
Boat-to-Pigeon-Island.jpg
 
நிலாவெளிக் கடற்கரை மிகவும் அழகானது. ஆதற்கு மேலும் அழகு ஊட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள்.
 
புறாமலை என்று சொன்ன போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்டர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது. 
 
pigeon-island-national-park2.jpg
 
இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நடாத்துகின்றார்கள். 
 
6545528459_4547d16158_o.jpg
 
மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருங்கைக் கற்களோடு கூடியது. கற்களைப் பாரத்து இரசிக்கலாம். 
 
infolanka.lk5173448334Corels.jpg
 
புறாக்கள் அக் காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.
 
இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்
 
248106-corral-at-pigeon-island-nilaveli-
 
சூரிய ஒளியில் Glittering coral  சிறு சிறு வர்ணக் கற்கள் தெறிக்கும் அழகே தனிதான்.  நீரினினுள் கடல் வாழ் மீன்கள் உயிரினங்கள் நீந்திச் செல்வதை கண்டு மகிழலாம்.  வெண் மணலுடன் கூடிய இடம் சிறுமரங்கள் கிளை பரப்பி நிழல்களாக கூடலாக அமைந்திருக்கும். அவற்றின் கீழ் அமர்ந்து கடலை இரசித்தோம்.
 
nilaveli-2.jpg
 
அப்புறம் ஆனந்தக் கடல் குளியல்.
 
pigeon.jpg
 
 
மீன்களும் காலைத் தொட்டு சுவைத்துச் சென்றன. கடல் குளியலுடன் பசியும் பிடிக்க கொண்டு சென்ற உணவுகளை மரங்களின் கீழ் அமர்ந்து ஒரு பிடி பிடித்தோம். சூரியனும் மதியத்தைத் தாண்டிச் சென்றான். திரும்ப மனமில்லாது மீண்டும் படகில் ஏறி வந்தோம்.
 
மாதேவி 
 
 
 
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க வேண்டிய மிகவும் அருமையான ஒரு இடம்.

நிலாவெளி கரையில் இருந்து வள்ளம் எடுக்கலாம்.

நிலாவெளியில் பல கடைகள் இருக்கிறன. ஒரு ஐயா 40 வருடங்களுக்கு முன் வெல்வெட்டித்துறையில் இருந்து வந்து கடை போட்டதாய் சொன்னார்.

நேவியிடம் பதிந்துதான் போகணும். வெளிநாட்டுகாரருக்கு டிக்கெட் விலை கூட. புறாமலையில் கடைகள் ஏதுமில்லை.

குறுகிய நிலமே மக்கள் பாவனைக்கு உள்ளது. மிகுதி முழுவதும் பாறைகள்.

மீன்களை கண்ணாடி கொகிள்ஸ் போட்ட படி அருகில் இருந்து பார்க்கலாம். சூப்பராய் இருக்கும்.

கவ்வாட்டி மற்றும் கல் கவனம். காலை கிழித்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரையில இருந்து புறாமலைக்கு 20 நிமிட போட் ஓட்டம். போய் இறங்கினால் சுப்பராஇருக்கும். மீன்பிடிச்சு வாட்டித்தருவார்கள். அங்கு கடலுக்குள் இருக்கும் மேலும் சில மலை உச்சிகளுக்கு நீந்திப் போகலாம். கண்ணாடி போட்டுக்கொண்டால் கடலுக்கடியில் இருக்கும் பவளப்பாறைகள் வண்ண வண்ண மீன்கள் கண்கொள்ளாக் காட்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரை படங்களை பார்க்கவே... ஆசையாக உள்ளது.
திருகோணமலை கடல், பெரிய அலைகளுடன் பார்த்த ஞாபகம்.
இந்தக் கடல், மிக அமைதியாக  உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அழகும் இனிய அமைதியும் கூடிய எழிலான பிரதேசம். பாசிக்குடா நிலாவெளி மார்பிள் பீச் புறாத்தீவு இன்னும் எம் ஈழத்திருநாட்டின் பல எழிலான இடங்களையும் பார்த்தபொழுது சொந்தநாடு என்றாலே சொர்க்கபுரிதான் என்று பாடத் தோன்றியது. போரின் அனர்த்தங்களின் பின்னும் சுனாமியின் கோரத் தாண்டவத்தின் பின்னும் எழில்குறையாமல் இன்னும் இயற்கை என்னும் இளையகன்னி எம் நினைவுகளைத் தாலாட்டியபடி............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் திருநாட்டின் ஒவ்வொருபகுதியிலும் ஒவ்வொரு அழகு. ஆனால் ...........

 

தமிழீழத்தின் அழகு தனி அழகு ...........

 

Link to comment
Share on other sites

pigeon.jpg

 

 

 

கடல் நன்கு வற்றி பின்வாங்கிய‌ நேரம் எடுத்த படம். 
 
இப்படத்தின் இடப்பக்கத்தில் இருப்பது நீல ஏரி ( Blue Lagoon ). சாதாரண நாட்களில் கடல் இவர்கள் நிற்கும் இடத்தின் மேலாக ஒன்று இரண்டு அடி மட்டில் உயர்ந்து இடப்பக்கம் உள்ள நீல ஏரியை நிரவி இருக்கும்.  
 
நீல ஏரியில் குளிப்பது அற்புதமான அனுபவம். காரைநகர் கசூரினா கடற்கரையில் குளிப்பது போன்று ஆழமற்ற ஏரி. ஆறு போன்று பல மைல்கள் நீண்டது. இடையிடையே வெண்மணல் திட்டிகளும் காணப்படும். நீரில் குளித்து விட்டு வெண்மணல் திட்டில் போய் இருக்கலாம் . மீண்டும் நீருள் குதிக்கலாம். 
 
நீல ஏரியின் மேலாக இறக்கக்கண்டி பாலம் செல்கிறது.  இந்த நீல ஏரிதான் நிலாவெளியில் இருக்கும் உப்பளத்திற்கு நீர் கொண்டு வருகிறது.

 

 

 

உப்பளம் நெல்வயல் அதை ஒட்டிக் கோயில் எனச் சுற்றிப் பார்த்தோம். 
 

 

 
தந்தைவழி பாட்டனாரின் பரம்பரைக் காணி. இந்தக் காணியைப் பற்றி யாழில் முன்பொரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
 
நிலாவெளியில் பிரச்சனைகளுக்கு முன்பு அங்கிருந்த விவசாயிகளிடம் மாட்டுப் பட்டிகள் இருந்தன. ஒரு பட்டியில் எப்படியும் ஆயிரம் மாடுகளாவது இருக்கும். பாட்டனாரின் பட்டியில் 1100 மாடுகளுக்கு மேல் இருந்தது. பின் 90 பிரச்சனையில் அவற்றில் பெரும்பகுதி முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்டது. 
 
மாமரங்கள் சூழ்ந்த இரண்டு வீடுகள். ஒன்று சித்தப்பாவுடையது. மற்றது அப்பாச்சி வீடு. அப்பாச்சி வீட்டு தாழ்வாரத்தில் சுவரில் தொங்கும் நன்கு பொலிஷ் செய்யப்பட்ட சிறட்டையில் திருநீறு. திருநீற்றுச் சட்டியின் மேலாக அந்தக்காலத்தில் வந்த இரும்பினால் ஆன‌ மெய்கண்டான் கலண்டர். கலண்டரில் நடராசர்.
 
வாசலுக்கு வெளியே மல்லிகைப் பந்தல். வளவுகளைத் தாண்டிப் போனால 30 ஏக்கருக்கு மேல் தென்னந்தோப்பு. தென்னந்தோப்பில் இரண்டு "உள்" கள். தேங்காய் உரிப்பதற்கு. உள்ளைச் சுற்றி தென்னம் பொச்சுக் குவியல். தென்னம் பொச்சு கும்பிகளுக்கு கிட்டப் போக எங்களுக்கு பாம்புப் பயம்!
 
தென்னந்தோப்பைத் தாண்டிப் போனால் தோட்டக்காணிகள். மிளகாய் அல்லது வெங்காயம் போடுவார்கள். தோட்டத்தைத் தாண்ட நெல் வயல். அதையும் தாண்டினால் உப்பளம். உப்பள மூலையில் இருப்பது மேற்சொன்ன வைரவர் கோவில்.
 
இந்த வைரவர் கோவிலுக்கு அண்மைய்ல் இருப்பது என் வாழ்வில் முதன் முதல் கேள்விப்பட்ட "சூத்திரக் கிணறு". அம்மா ஒரு நாளும் என்னை அக்கிணறை எட்டிப் பார்க்க விட வில்லை.
 
மாமரங்களில் ஏறி விளையாடி விழுந்து இரண்டு கைகளையும் மாறி மாறி முறித்து பத்து கட்டி, பத்துக்குள் கடி எடுக்க பென்சில் விட்டு சொறிந்த ஞாபக‌ங்கள்...
 
மாமரத்தில் உச்சிக் கொப்பில் இருந்து உப்பளக் காற்று வயலையும் தோட்டத்தையும் தென்னந்தோப்பையும் தாண்டி வர சுவாசித்த ஞாபகங்கள்..
 
விடியக்காலமை பொச்சு மட்டைகளைப் போட்டு நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில் இரும்புக் கம்பியைக் காய்ச்சி, மாட்டின் நான்கு கால்களையும் கட்டி நிலத்தில் கிடத்தி, குறி சுட.. அதப் பார்க்க தாங்கேலாம வீட்டுக்குள்ள ஓடி வந்த ஞாபகங்கள்..
 
உப்பளச் சேத்துக்குள்ள கால வைச்சு புதைஞ்ச ஞாபகங்கள்.. 
   
பூலோக சுவர்க்கம்! 
 
  
 
.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2003 இல் தாயகம்   போயிருந்தபோது

போனேன்

மிகவும அழகானதும் இயற்கைவளம் கொண்டதும்

தமிழரின் சொத்துமாகும்

 

நாங்கள் போயிருந்தபோது

எதிர்பாராதவகையில் பெருமழை பொழிந்து

எல்லொரையும் அவசரமாக கரைக்கு கொண்டுவந்தார்கள்...

Link to comment
Share on other sites

நீல ஏரி.. இறக்கக்கண்டிப் பாலம்.

 

மவுஸினால் சுற்றிப் பார்க்கலாம்.

 

https://www.google.com/maps/@8.729315,81.17117,3a,75y,49.64h,67.6t/data=!3m5!1e1!3m3!1skSQzBs5H0tsAAAAGOsdyXQ!2e0!3e11?hl=en

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகளில் "தமீழத்தின் அழகு தனி அழகு" எனும் காசி ஆனந்தனின் அருமையான பாடலை இணைப்பது என்பது ஒரு சடங்கு மாரி ஆகி விட்டது :)

சும்மா கடுப்பை கிளப்புவதற்க்கா கீழ் கண்ட பாடலையும் இணைத்துள்ளேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.