Sign in to follow this  
Athavan CH

நிலாவெளிக் கடலை எழிலூட்டும் புறாமலை (Pigeon Island)

Recommended Posts

உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள்.
 
DSC01215-001.JPG
 
North_Eastern_Sri_Lanka_districts.png
 
கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது.
கோணேசர் ஆலயம், கன்னியா நீரூற்று புராதன சின்னங்கள் கிண்ணியா சேருவில நிலாவெளிகடல் புறாமலை என உல்லாசப் பயணிகளுக்கு கண்டு களிக்க அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன.
 
 
pigeon-island-resort.jpg
 
படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம். திருகோணமலையில் இருந்து 20கிலோ மீற்றர் தூரத்தில் வடமேற்கில் அமைந்துள்ளது நிலாவெளி.
இது கரையோரப் பிரதேசமாக இருக்கிறது.இங்கு கடலில் மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது.
மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பலவும் இங்குள்ளன.  
சுனாமியின் தாக்கமும் இங்கு அதிகம் ஏற்பட்டு காலப்போக்கில் மாற்றம் பெற்றுள்ளது.
 
 
DSCF9041.JPG
 
திருமணமானபின்பு நிலாவெளி சென்றிருந்தோம். கணவனின் பாட்டனார் பல வருடங்களுக்கு முன் அங்கு சென்று குடியேறியிருந்தார்கள்.
 
வீட்டிற்கு முன்னால் வெங்காயத் தோட்டம். வீட்டின் ஒரு பக்கத்திலே கத்தரி, பூசணி, வெண்டித் தோட்டங்கள் சூழ்ந்திருக்க பழைய வீடுகள் இரண்டு. வீட்டின் பின்புறம் கிணறு. கிணற்றைச் சுற்றி எலுமிச்சை மரங்கள். வாழைத் தோட்டங்கள். பலா முருங்கை இளநீர் தென்னை கமுகு மரங்கள் என சோலை வனம்.
 
அடுத்த காணியில் பசுமாடு கன்றுகளுடன் மாட்டுக் கொட்டகம். காலை மாலை என பாலுக்கு எந்நேரமும் குறைவில்லை. நெல் வயல்கள் உப்பளம் என சற்று தொலைவே இருக்கின்றன. வீட்டில் இருந்து பார்த்தால் நிலாவெளிக் கடல் தெரியும். இடையே இவர்களுக்குச் சொந்தமான தென்னம் தோட்டங்கள். அவற்றின் ஊடே நடந்து சென்றால் கடலை அடையலாம்.
 
88791563.jpg
 
பாட்டியும் கடல் குளியலுக்கு தம்பி தங்கை கூட்டத்துடன் சேர்ந்து கொண்டாள். ஆசை தீர அனைவரும் கடலில் குளித்து வந்தோம். நின்ற ஒரு வாரமும் கடல் குளியல்தான். அவ்வளவு ஆனந்தம்.
 
உப்பளம் நெல்வயல் அதை ஒட்டிக் கோயில் எனச் சுற்றிப் பார்த்தோம். அப்பொழுதுதான் உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன. குடும்பமாக அங்கும் ஒரு விசிட் அடித்தோம்.
 
 
5351920.jpg
 
இம் முறை சென்ற போது முன்னால் இருந்த வெங்காயத் தோட்டத்தில் வீடு கட்டி இருக்கிறார்கள். இப்பொழுதும் வீட்டைச் சுற்றி வர மாதுளை, கொய்யா மரங்கள், வாழை என இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.
 
ஆனால் கடற்கரையையும் தென்னந்தோட்டங்களையும் வீட்டுவாயிலில் நின்றபடியே காணமுடியவில்லை என்பது ஏமாற்றமே. காலத்தின்மாற்றத்தால் தென்னந்தோப்புகள் எல்லாம் நவீன ஹோட்டல்களாக மாறிவிட்டிருந்தன. கட்டிடங்கள் கடலை மறைத்துவிட்டன. அவற்றைத்தாண்டித்தான் கடலுக்கு செல்லக் கூடியதாகஇருந்தது கோணேசர் கோயில் கன்னியா புறாமலை எனச் சுற்றி வந்தோம்.
 
 

pigeonisland.jpg

 

நிலாவெளிக் கடற்கரையில் இருந்து புறாமலை 2.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
 
Boat-to-Pigeon-Island.jpg
 
நிலாவெளிக் கடற்கரை மிகவும் அழகானது. ஆதற்கு மேலும் அழகு ஊட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள்.
 
புறாமலை என்று சொன்ன போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்டர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது. 
 
pigeon-island-national-park2.jpg
 
இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நடாத்துகின்றார்கள். 
 
6545528459_4547d16158_o.jpg
 
மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருங்கைக் கற்களோடு கூடியது. கற்களைப் பாரத்து இரசிக்கலாம். 
 
infolanka.lk5173448334Corels.jpg
 
புறாக்கள் அக் காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.
 
இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்
 
248106-corral-at-pigeon-island-nilaveli-
 
சூரிய ஒளியில் Glittering coral  சிறு சிறு வர்ணக் கற்கள் தெறிக்கும் அழகே தனிதான்.  நீரினினுள் கடல் வாழ் மீன்கள் உயிரினங்கள் நீந்திச் செல்வதை கண்டு மகிழலாம்.  வெண் மணலுடன் கூடிய இடம் சிறுமரங்கள் கிளை பரப்பி நிழல்களாக கூடலாக அமைந்திருக்கும். அவற்றின் கீழ் அமர்ந்து கடலை இரசித்தோம்.
 
nilaveli-2.jpg
 
அப்புறம் ஆனந்தக் கடல் குளியல்.
 
pigeon.jpg
 
 
மீன்களும் காலைத் தொட்டு சுவைத்துச் சென்றன. கடல் குளியலுடன் பசியும் பிடிக்க கொண்டு சென்ற உணவுகளை மரங்களின் கீழ் அமர்ந்து ஒரு பிடி பிடித்தோம். சூரியனும் மதியத்தைத் தாண்டிச் சென்றான். திரும்ப மனமில்லாது மீண்டும் படகில் ஏறி வந்தோம்.
 
மாதேவி 
 
 
 
 
 
 

 

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

பார்க வேண்டிய மிகவும் அருமையான ஒரு இடம்.

நிலாவெளி கரையில் இருந்து வள்ளம் எடுக்கலாம்.

நிலாவெளியில் பல கடைகள் இருக்கிறன. ஒரு ஐயா 40 வருடங்களுக்கு முன் வெல்வெட்டித்துறையில் இருந்து வந்து கடை போட்டதாய் சொன்னார்.

நேவியிடம் பதிந்துதான் போகணும். வெளிநாட்டுகாரருக்கு டிக்கெட் விலை கூட. புறாமலையில் கடைகள் ஏதுமில்லை.

குறுகிய நிலமே மக்கள் பாவனைக்கு உள்ளது. மிகுதி முழுவதும் பாறைகள்.

மீன்களை கண்ணாடி கொகிள்ஸ் போட்ட படி அருகில் இருந்து பார்க்கலாம். சூப்பராய் இருக்கும்.

கவ்வாட்டி மற்றும் கல் கவனம். காலை கிழித்து விடும்.

Share this post


Link to post
Share on other sites

கடற்கரையில இருந்து புறாமலைக்கு 20 நிமிட போட் ஓட்டம். போய் இறங்கினால் சுப்பராஇருக்கும். மீன்பிடிச்சு வாட்டித்தருவார்கள். அங்கு கடலுக்குள் இருக்கும் மேலும் சில மலை உச்சிகளுக்கு நீந்திப் போகலாம். கண்ணாடி போட்டுக்கொண்டால் கடலுக்கடியில் இருக்கும் பவளப்பாறைகள் வண்ண வண்ண மீன்கள் கண்கொள்ளாக் காட்சி!

Edited by வாலி

Share this post


Link to post
Share on other sites

கடற்கரை படங்களை பார்க்கவே... ஆசையாக உள்ளது.
திருகோணமலை கடல், பெரிய அலைகளுடன் பார்த்த ஞாபகம்.
இந்தக் கடல், மிக அமைதியாக  உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

இயற்கை அழகும் இனிய அமைதியும் கூடிய எழிலான பிரதேசம். பாசிக்குடா நிலாவெளி மார்பிள் பீச் புறாத்தீவு இன்னும் எம் ஈழத்திருநாட்டின் பல எழிலான இடங்களையும் பார்த்தபொழுது சொந்தநாடு என்றாலே சொர்க்கபுரிதான் என்று பாடத் தோன்றியது. போரின் அனர்த்தங்களின் பின்னும் சுனாமியின் கோரத் தாண்டவத்தின் பின்னும் எழில்குறையாமல் இன்னும் இயற்கை என்னும் இளையகன்னி எம் நினைவுகளைத் தாலாட்டியபடி............

Share this post


Link to post
Share on other sites

எங்கள் திருநாட்டின் ஒவ்வொருபகுதியிலும் ஒவ்வொரு அழகு. ஆனால் ...........

 

தமிழீழத்தின் அழகு தனி அழகு ...........

 

Edited by nochchi

Share this post


Link to post
Share on other sites

pigeon.jpg

 

 

 

கடல் நன்கு வற்றி பின்வாங்கிய‌ நேரம் எடுத்த படம். 
 
இப்படத்தின் இடப்பக்கத்தில் இருப்பது நீல ஏரி ( Blue Lagoon ). சாதாரண நாட்களில் கடல் இவர்கள் நிற்கும் இடத்தின் மேலாக ஒன்று இரண்டு அடி மட்டில் உயர்ந்து இடப்பக்கம் உள்ள நீல ஏரியை நிரவி இருக்கும்.  
 
நீல ஏரியில் குளிப்பது அற்புதமான அனுபவம். காரைநகர் கசூரினா கடற்கரையில் குளிப்பது போன்று ஆழமற்ற ஏரி. ஆறு போன்று பல மைல்கள் நீண்டது. இடையிடையே வெண்மணல் திட்டிகளும் காணப்படும். நீரில் குளித்து விட்டு வெண்மணல் திட்டில் போய் இருக்கலாம் . மீண்டும் நீருள் குதிக்கலாம். 
 
நீல ஏரியின் மேலாக இறக்கக்கண்டி பாலம் செல்கிறது.  இந்த நீல ஏரிதான் நிலாவெளியில் இருக்கும் உப்பளத்திற்கு நீர் கொண்டு வருகிறது.

 

 

 

உப்பளம் நெல்வயல் அதை ஒட்டிக் கோயில் எனச் சுற்றிப் பார்த்தோம். 
 

 

 
தந்தைவழி பாட்டனாரின் பரம்பரைக் காணி. இந்தக் காணியைப் பற்றி யாழில் முன்பொரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
 
நிலாவெளியில் பிரச்சனைகளுக்கு முன்பு அங்கிருந்த விவசாயிகளிடம் மாட்டுப் பட்டிகள் இருந்தன. ஒரு பட்டியில் எப்படியும் ஆயிரம் மாடுகளாவது இருக்கும். பாட்டனாரின் பட்டியில் 1100 மாடுகளுக்கு மேல் இருந்தது. பின் 90 பிரச்சனையில் அவற்றில் பெரும்பகுதி முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்டது. 
 
மாமரங்கள் சூழ்ந்த இரண்டு வீடுகள். ஒன்று சித்தப்பாவுடையது. மற்றது அப்பாச்சி வீடு. அப்பாச்சி வீட்டு தாழ்வாரத்தில் சுவரில் தொங்கும் நன்கு பொலிஷ் செய்யப்பட்ட சிறட்டையில் திருநீறு. திருநீற்றுச் சட்டியின் மேலாக அந்தக்காலத்தில் வந்த இரும்பினால் ஆன‌ மெய்கண்டான் கலண்டர். கலண்டரில் நடராசர்.
 
வாசலுக்கு வெளியே மல்லிகைப் பந்தல். வளவுகளைத் தாண்டிப் போனால 30 ஏக்கருக்கு மேல் தென்னந்தோப்பு. தென்னந்தோப்பில் இரண்டு "உள்" கள். தேங்காய் உரிப்பதற்கு. உள்ளைச் சுற்றி தென்னம் பொச்சுக் குவியல். தென்னம் பொச்சு கும்பிகளுக்கு கிட்டப் போக எங்களுக்கு பாம்புப் பயம்!
 
தென்னந்தோப்பைத் தாண்டிப் போனால் தோட்டக்காணிகள். மிளகாய் அல்லது வெங்காயம் போடுவார்கள். தோட்டத்தைத் தாண்ட நெல் வயல். அதையும் தாண்டினால் உப்பளம். உப்பள மூலையில் இருப்பது மேற்சொன்ன வைரவர் கோவில்.
 
இந்த வைரவர் கோவிலுக்கு அண்மைய்ல் இருப்பது என் வாழ்வில் முதன் முதல் கேள்விப்பட்ட "சூத்திரக் கிணறு". அம்மா ஒரு நாளும் என்னை அக்கிணறை எட்டிப் பார்க்க விட வில்லை.
 
மாமரங்களில் ஏறி விளையாடி விழுந்து இரண்டு கைகளையும் மாறி மாறி முறித்து பத்து கட்டி, பத்துக்குள் கடி எடுக்க பென்சில் விட்டு சொறிந்த ஞாபக‌ங்கள்...
 
மாமரத்தில் உச்சிக் கொப்பில் இருந்து உப்பளக் காற்று வயலையும் தோட்டத்தையும் தென்னந்தோப்பையும் தாண்டி வர சுவாசித்த ஞாபகங்கள்..
 
விடியக்காலமை பொச்சு மட்டைகளைப் போட்டு நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில் இரும்புக் கம்பியைக் காய்ச்சி, மாட்டின் நான்கு கால்களையும் கட்டி நிலத்தில் கிடத்தி, குறி சுட.. அதப் பார்க்க தாங்கேலாம வீட்டுக்குள்ள ஓடி வந்த ஞாபகங்கள்..
 
உப்பளச் சேத்துக்குள்ள கால வைச்சு புதைஞ்ச ஞாபகங்கள்.. 
   
பூலோக சுவர்க்கம்! 
 
  
 
.
 
Edited by ஈசன்

Share this post


Link to post
Share on other sites

2003 இல் தாயகம்   போயிருந்தபோது

போனேன்

மிகவும அழகானதும் இயற்கைவளம் கொண்டதும்

தமிழரின் சொத்துமாகும்

 

நாங்கள் போயிருந்தபோது

எதிர்பாராதவகையில் பெருமழை பொழிந்து

எல்லொரையும் அவசரமாக கரைக்கு கொண்டுவந்தார்கள்...

Share this post


Link to post
Share on other sites

நீல ஏரி.. இறக்கக்கண்டிப் பாலம்.

 

மவுஸினால் சுற்றிப் பார்க்கலாம்.

 

https://www.google.com/maps/@8.729315,81.17117,3a,75y,49.64h,67.6t/data=!3m5!1e1!3m3!1skSQzBs5H0tsAAAAGOsdyXQ!2e0!3e11?hl=en

 

Share this post


Link to post
Share on other sites

இப்படியான திரிகளில் "தமீழத்தின் அழகு தனி அழகு" எனும் காசி ஆனந்தனின் அருமையான பாடலை இணைப்பது என்பது ஒரு சடங்கு மாரி ஆகி விட்டது :)

சும்மா கடுப்பை கிளப்புவதற்க்கா கீழ் கண்ட பாடலையும் இணைத்துள்ளேன். :)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • (எம்.மனோசித்ரா) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ' ஒற்றையாட்சி ' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று சிலரால் முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு சஜித் பிரேமதாச கடிதம் மூலம் விளக்கமளித்திருப்பதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். குறித்த கடிதத்தை மகா சங்கத்தினரிடம் சமர்பித்து விளக்கமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், நாட்டில் ' ஒற்றையாட்சியை பாதுகாப்பதாக ' சஜித் பிரேமதாச அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை என்று சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். எனினும் அவரது விஞ்ஞாபனத்தில் 16 ஆம் பக்கத்தில் ஒற்றையாட்சி பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து கடிதம் மூலம் மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்தோம். எம்.சீ.சீ ஒப்பந்தம் மிலேனியம் செலெஞ்ச் ஒப்பந்தம் பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்தும் மகா சங்கத்தினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டாமல் ஒப்பந்தம் ஒரு போதும் கையெழுத்திடப்பட மாட்டாது என்பதும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க இராணுவம் குறித்து எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. அவ்விடயம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையிலான நவீன போக்குவரத்து திட்டம் தொடர்பிலேயே இந்த ஒப்பந்த்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்து முகாமைத்துவ நிலையம் நிறுவப்படும். இதன் மூலம் கொழும்பில் சீ.சீ.டி.வி கமரா பொறுத்தும் வேலைத்திட்டம் முறையாக பேணப்படும். காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வாகனங்கள் தொடர்பான காணொளி சீ.சீ.டி.வி கமராக்களில் இருந்துபெறப்பட்ட போதிலும் அவற்றிலிருந்து வாகன இலக்கங்களைக் கூட இனங்காண முடியவில்லை. எனவே தான் இதனை மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. கோத்தாபயவின் அமெரிக்க குடியுரிமை கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜையாவார். நாட்டின் இடங்கள் தொடர்பில் ஜனாதிபதியால் மாத்திரமே முடிவுகளை எடுக்க முடியும். எனவே அமெரிக்க பிரஜையான கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் நிலவரம் எவ்வாறு அமையும் என்பதை அறிந்து சிந்தித்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/68822
  • கடந்த 2015ம் ஆண்டு மஹிந்த என்ட் கோவை சிம்மாசனத்திலிருந்து இறக்கி விட்டு மக்களின் அட்மோஸ்ட் நம்பிக்கையோடு ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசின் இன்று வரையான செயற்பாடுகளை சற்று ஊன்றி அவதானித்தால் ஒரு விஷயம் புரிபடும். மாத்திரமன்றி கடந்த நல்லாட்சி முழுவதுமாக ஒரு தலையாட்டி பொம்மையைப் போல மைத்திரியை எப்படி ஆட்டி வைக்க முடிந்தது என்பதனையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.    அதற்கெல்லாம் மாஸ்டர் மைன்டாக இருந்த ரணிலின் அதிகார வெறியும் பதவி மோகமும்தான் இதற்கு இந்த நாடு இது வரை கொடுத்த ரொம்ப ரொம்ப என்பதனை விடவும் அதற்கும் மேலான விலை.    மைத்ரி ஜனாதிபதியானதும் ரணில் ஏற்கெனவே தான் போட்டு வைத்திருந்த நிகழ்ச்சி நிரலின் முதலாம் அம்சமான அரசியலமைப்புக்கு பத்தொன்பதாம் திருத்தத்தினை ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மை ஆசிர்வாதத்தோடு கொண்டு வந்தார். பத்தொன்பதாம் திருத்தத்தின் மூலம் அது வரைக்கும் இலங்கை ஜனாதிபதிக்கிருந்து வந்த பெரும்பாலான நிறைவேற்றுத் தத்துவ அதிகாரங்களை குறைத்து அவற்றை பிரதமரென்ற பொறுப்பின் கீழ் சுளுவாக எடுத்துக் கொண்டு ஜனாதிபதியை தன் சொல்லுக்கு ஆடுகின்ற பொம்மையாக்கி செல்லாக் காசாக்கினார்.    கடந்த நல்லாட்சியின் போது இலங்கையில் மக்கள் விரோத செயற்பாடுகளின் போதும் அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த முடிந்த அத்தனை இன வன்முறைகளின் போதும் ஒரு ஜனாதிபதி என்ற முறையில் தனிப்பட மைத்ரி முடிவெடுக்க முடியாமலும் பிரச்சினைகளின் போது தற்றுணிபினல் தீர்மானம் எடுக்க முடியாமலும் அவரை ஆக்கி வைத்திருந்தார்கள். மைத்ரியை ஒரு பொம்மையாகவும் கையாலாகத ஜனாதிபதியாகவும் மக்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கின்ற இந்த பிம்பத்தை உருவாக்கியது அவரல்ல மாற்றமாக ரணிலும் இந்த பத்தொன்பதாம் திருத்தமுமே.    ஒரு வேளை பத்தொன்பதாம் திருத்தம் கொண்டு வரப்படாமல் மைத்ரி எவரின் தலையீடு இல்லாத தான் மட்டுமே தீர்மானமெடுக்கின்ற தற்றுணிபுள்ள நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தால் நாட்டிலே நடை பெற்ற பல அனர்த்தங்களை அவரால் தவிர்த்திருக்க முடியும்.    மைத்ரி நல்ல மனுஷன்தான்…ஆனால் பத்தொன்பதாம் திருத்தம்….அதன் மீத வீறு கொண்டெழுந்த ரணில்…அவரைச் சுற்றி சிங்கியடித்த கூட்டம்….. மூலம் தந்திரமாக அவரது கையைக் கட்டிப்போட்டு சதிராட்டம் ஆடியிருக்கின்றார்கள். பாவம் மைத்ரியார்….கடந்த ஆட்சியின் போது முஸ்லீம்களுக்கெதிராக இடம் பெற்ற திகன, அம்பாறை, ஜிந்தோட்டை, மினுவாங்கொட, மற்றும் குருநாகல மெகா சைஸ் இன வன்முறைகளின் போது பத்தொன்பதாம் திருத்தம் மூலம் பவரை தங்கள் பக்கம் எடுத்துக் கொண்ட ரணில் என்ட் கோ நடந்த அத்தனை சம்பவங்களுக்கும் மஹிந்த என்ட் கோவே என்ற பழைய பஞ்சாங்களத்தை கூலாக பாடி விட்டு தமது சயன அறைகளில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.    முக்கியமான அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட மைத்ரி தனியே எந்த முடிவுகளும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார். இதோ இப்போது மறுபடியும் ஸ்டீரியோ டைப் மெலோ டிராமாவை ரணில் என்ட் கொ சஜீதை வைத்து நிகழ்த்த காத்திருக்கின்ற அபத்தம் இந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஆரம்பமாகியிருக்கின்றது.    ஒரு வேளை சஜீத் வெற்றி பெற்று ஜனாதிபதியானாலும் கூட 2015ம் ஆண்டு மைத்ரியை பேருக்கு ஜனாதிபதியாக்கி பத்தொன்பதாம் திருத்தத்தை கொண்டு வந்து அதன் மூலம் எப்படி செல்லாக் காசாக்கி கதகளி ஆடினார்களோ அதே போலத்தான் இப்போதும். சந்தேகமே தேவையில்லை சஜீதை இன்னொரு மைத்ரியாக்கி என்பதனை விடவும், அதுக்கும் மேலேயாக்கி பிரதமராக வருகின்ற ரணிலும் அல்லது ரணிலுக்கு பதிலாக வருகின்ற பாட்டாளி சம்பிக்கவும் (சஜீத் ஜனாதிபதி எனில் ரணில்தான் பிரதமர் என்பது சர்வ நிச்சயம்) குருஷேத்திரம் ஆடுவார்கள். அப்போது நிறைவேற்றுத்தத்துவங்கள் குறைக்கப்பட்ட சஜீதும் மைத்ரி போல தன்னால் எதுவுமே செய்ய முயடிவில்லையே என்று தலையில் கை வைத்துக் கொண்டு கதறுவார்.    இது நடக்கும்.    பத்தொன்பதாம் திருத்தம் என்பதே நாட்டுக்கு பெருஞ்சாபக்கேடு. அதுவும் ரணில் மாதிரி ஆட்களிடம் அது அகப்படுகின்ற போது அது சர்வ நாசகாரியாக மாறி விடுகின்றது. பத்தொன்பதாம் திருத்தத்தை ஒரு சில அவசிய திருத்தங்களோடு இடத்தை காலி பண்ண வேண்டிய பெருந்தேவை இலங்கைக்கு இருக்கின்றது. இல்லாவிடில் தெமாடரும் இழுபறிகள்….மல்யுத்தங்கள்…..மக்கள் பலிக்கடாக்கள்.    கிண்ணியா சபருள்ளாஹ்  2019-11-12 https://www.madawalaenews.com/2019/11/bbb.html
  • விவசாயி நாங்கள் முதல் தடவை போகும் போது ஊரிலிருந்தே வாகனம் கொண்டு வந்தார்கள். அடுத்த தடவை நானே வாகனம் ஒழுங்கு செய்து போயிருந்தேன். அப்போது எனது மைத்துனன் சொன்ன சேதி அத்தான் முன் சீற்றில் மட்டும் இருந்துடைங்கோ.சாரதி நித்திரை கொள்ளாமல் இருக்கிறானா என்று பாருங்கோ. நேற்று மாத்தயாவாக இருந்த கதை எப்படி வெளிநாட்டுக்காரனாக மாறியது?
  • ஒரு சம்பந்தரால் ஒரு சுமந்திரனால் ஒரு சித்தார்த்தனால் ஒரு செல்வம் அடைக்கலநாதனால் ஒரு பிரேமச்சந்தி ரானால், ஒரு கஜேந்திரனால், ஒரு விக்கினேஸ்வரனால், ஒரு மனோவால் என பலராலும் செய்யமுடியாததை  இந்த உறவுகள் தங்கள் பலத்தால் விடாமுயற்சியால் மன உறுதியால் செய்துள்ளனர்.   
  • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...