Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசாப்ட் – வருகிறது ”ஸ்பார்டன்”!


Recommended Posts

இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசாப்ட் – வருகிறது ”ஸ்பார்டன்”!

 

வாஷிங்டன்: இணையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக விண்டோஸ் 10 வெளிவரும்போது உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் என அழைக்கப்படும் இந்த பிரவுசர் இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும்.

34fo3d0.jpg

 

 சென்ற வாரம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்ந்த வர்த்தக மாநாட்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கிறிஸ் கபோஸ்ஸிலா இதனைத் தெரிவித்தார். "விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட இருக்கும் நுகர்வோருக்கான பிரவுசருக்கு என்ன புதிய பெயரை அளிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்" என்று அறிவித்தார். எனவே இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் நுகர்வோருக்கான பிரவுசர் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/international/hands-on-with-project-spartan-microsoft-internet-explorer-223738.html

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இதை  எல்லோரும் கைவிட்டு ரொம்ப நாளாச்சு....

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கான்ஸ்டபிளாக சேர்ந்து கான்ஸ்டபிளாகவே ரிட்டையர் ஆவது எல்லாம் கரீயர் முன்னேற்றம் என்று சொல்லமுடியாதல்லவா! அதனால் மேச்சலுக்குப் போய்விட்டேன்🤓
    • உடையார், இந்த திரியில் உங்கள் தீர்க்கமான நிலைப்பாட்டுக்கும் கருத்துக்களுக்கும் வாழ்துக்கள், நன்றியும்.  ஒரு சிறுவனுக்கு தான் சாதியத்தால் பாதிக்கப்படுகிறோமா இல்லையா என்பது அப்பட்டமாக புரியாதுதானே? தவிரவும் சாதியம் பொதுவாகவே பூடகமாக சொல்லப்/செய்யபடும் விடயம். அந்த சிறுவனிடம் போய் சாதிதான் உன்னை பாட விடாமைக்கு காரணம் என நேரடியாக சொல்லும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை இந்த மே(மோ)ட்டு குடிகள். கரைச்சி பிரதேச செயலாளரின் நடவடிக்கை நீங்கள் சொல்லியதை சரி என்று நிரூபிதுள்ளது. இந்தியாவில் இருப்பது போல் சாதிய வன்கொடுமை சட்டங்கள் இலங்கையிலும் கடுமையாக்கபடல் வேண்டும். இந்த மாதிரி நாலு தர்மகர்தாவை பிடித்து 4 வருடம் களி தின்ன வைத்தால் எல்லாம் தானாக சரி வரும்.   பராபரன், மிகச் சரியான பார்வை. அந்த அணுகுமுறையை நான் இன்றளவும் வெறுத்தாலும், அவர்கள் இருந்தால் இதெல்லாம் நடக்காது என்பதையும் நான் ஏற்கிறேன். நீங்கள் யாழில் அதிகம் எழுத வேண்டும். 
    • தனிமைப் படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் ரிசாத் பதியுதீன்    41 Views கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்றிரவு ரிசாத் பதியுதீன் அனுப்பப்பட்டுள்ளார் என சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையில் சிறைச்சாலை கைதிகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் https://www.ilakku.org/தனிமைப்-படுத்தல்-நிலையத்/
    • தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்    34 Views “இலங்கை தமிழர்களை இனியும் இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், அரசியல் தீர்வொன்றை நிலைபெறச் செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33ஆண்டுகளைக் கடந்துள்ளபோதும் தற்போது வரையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர். அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை நாடாளுமன்றில் கொண்டிருக்கின்றோம் என்ற இறுமாப்புடன் அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் காணப்படும் ஒரேயொரு ஏற்பாடான 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். விடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகரவே மாகாண சபை முறைமைகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவருவதோடு, இந்திய எதிர்நிலை வாதத்தினையும் தோற்றம்பெறச் செய்து வருகின்றார். அதேநேரத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார். ஆனால் இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆட்சியில் உள்ளவர்கள் எந்தவிதமான பிரதிபலிப்பையும் செய்ததாக இல்லை. அதேநேரம் ஜனநாயக கட்டமைப்புக்களை தகர்த்து ஜனநாயக விழுமியங்களுக்கு மரணஅடி அளிக்கப்போகும் 20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முனைந்து கொண்டு இருக்கின்றது. அதற்கு அடுத்ததாக புதிய அரசியலமைப்பு ஒன்றையும் உருவாக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுகின்றன. ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டில் சர்வாதிகாரத்தினை முன்னெடுக்கும் வகையில் தனி நபருக்கான அதிகாரக்குவிப்பை இலக்கு வைத்தே புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்படப் போகின்றது என்பது திண்ணம். இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுயையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அந்த தார்மீக கடமையிலிருந்து இந்தியா தவறும் பட்சத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு மாகாண சபை முறைமையும் நீர்த்துப்போகும் பேராபத்தே உள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. தற்போது கூட பிராந்தியத்தின் தலைமைப் பாத்திரத்தினைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது தமிழர்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பினையும் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கு அப்பால் சென்று உரிய தலையீடுகளை செய்ய வேண்டும். கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தியா தமிழர்களின் விடயத்தில் தீவிரத்தன்மையை காட்டியது. இத்தகைய பகடைக்காய்களாக பயன்படுத்தும் நிலைமையை இந்தியா கைவிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. சமகாலத்தில், ஆட்சியாளர்கள் சீனாவுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுவடைந்து செல்கின்றன. அதுமட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார மந்தநிலைமையிலிருந்து மீட்சி பெறுவதற்கு சீனாவின் பங்களிப்பும் கணிசமாக உள்ளதோடு சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் காப்பாளனாக சீனா செயற்படுவதை உறுதி செய்துள்ளது. ஆகவே இந்த உறவு நிலை மேலும் வலுப்படும் பட்சத்தில் இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதானது, வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு சமாந்தரமாக தென்னிந்தியாவிலும் சுமூகமற்ற நிலைமையொன்று ஏற்படும். அவ்விதமான நிலைமையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமைவதோடு பிராந்திய தலைமைத்துவ பாத்திரத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே, இந்திய மத்திய அரசானது, தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் மென்போக்கினை விடுத்து நேரடியான தலையீடுகளைச் செய்வதன் மூலமாகவே தமிழர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படுவதோடு இந்தியாவின் பூரண அமைதியும் உறுதி செய்யப்படும்” என்றுள்ளது. https://www.ilakku.org/தமிழர்களை-பகடைக்காய்களா/
    • சரியாக சென்னீர்கள். நன்றி அறிய தந்ததிற்கு இனி ஜாதி என்றே பாவிப்போம். ஆரியர்களால் திணக்கப்பட்ட ஒன்று, இதைவிட்டு வெளிவரனும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.