Jump to content

அரசியற் போராட்டமே இந்திய கொள்கையை மாற்றியது. - தமரா முன்னாள் சிறிலங்கா ராஜதந்திரி

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

During bilaterals, they told us not to make it public that they would support us due to the sensitivities in Tamil Nadu. A couple of hours after the final bilateral discussion, our head of the delegation issued a public statement that India fully backed Sri Lanka. Within a matter of hours, Tamil Nadu was up in arms. Lok Sabha had adjourned.

Delhi's Charge d'Affairs called me and said: "Ask those guys in the delegation that they should know where they stand. Do they want to re-impose US imperialist presence in the region or do they want to control the destiny of the country and defend Sri Lanka's national interest?" I immediately conveyed the message to the President and the Foreign Ministry.
Over dinner, it was clearly conveyed to us that it was over.

The Indian Ambassador arrived and said: "Up until a member of your delegation made a public statement, creating a problem for the Central Government, we were to support Sri Lanka. But now it has moved from the control of the External Affairs Ministry directly to the Prime Minister. It has become a political issue not a matter of foreign policy. India has a principled position and we do not vote in favour of country- specific resolutions. This has now become a political issue due to the public statement made."

http://www.ceylontoday.lk/89-58167-news-detail-us-seeks-to-eventually-partition-sri-lanka-tamara-kunanayakam.html

போராடாமல் மாற்றம் இல்லை என்பதற்கான சான்று , புலம் தமிழ்நாடு தளம் அனைத்தும் போராடினாலேயே எமக்கு விடிவு.

Link to post
Share on other sites
 • Replies 78
 • Created
 • Last Reply

இதைத்தான் அப்பவே சொன்னோம்.. :D

இந்திய பூதத்தை அடக்க தமிழ்நாட்டைத் தவிர வேறு எவராலும் முடியாது. :huh:

எல்லோரும் இச்செய்தியை கவனமாக வசிக்க வேண்டும்.. என்னாலான மொழிபெயர்ப்பு இது..

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது அவர்கள் (இந்தியா) இலங்கையை ஆதரிக்கப்போகும் விடயத்தை இரகசியமாக வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இது தமிழ்நாட்டில் சர்ச்சைகளை உருவாக்கும் என்பதால் அவர்கள் அவ்வாறு கேட்டுக்கொண்டார்கள்.

இரண்டு மணிநேரங்களுக்குப் பின்னர், எமது தரப்பின் தலைமை உறுப்பினர் இந்தியா தம்மை ஆதரிக்கப்போகும் விடயத்தை அறிவித்தார். இதை அறிந்ததும் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லியில் இருந்த பொறுப்பதிகாரி என்னை தொலைபேசியில் அழைத்தார்.

"உங்கள் தரப்பு ஆட்களுக்கு தற்போதைய பிரச்சினைகள் என்ன என்று தெரியுமா? இப்பிராந்தியத்தில் அமெரிக்க பிரச்சன்னம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகிறார்களா அல்லது தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை விரும்புகிறார்களா?" என்றார்.

நான் உடனே ஜனாதிபதியையும், வெளியுறவுத்துறையையும் தொடர்பு கொண்டு இச்செய்தியை தெரிவித்தேன். இரவு விருந்தின்போது எல்லாமே முடிந்துபோய்விட்டது என்கிற விடயம் எமக்கு (இந்தியத்தரப்பால்) தெளிவாக சொல்லப்பட்டது.

இந்திய உயர்ஸ்தானிகர் வந்தார். "உங்கள் உறுப்பினர்களுள் ஒருவர் அறிக்கை கொடுக்கும் அந்த நிமிடம் வரையில் இலங்கையை ஆதரிக்கும் முடிவையே இந்தியா எடுத்திருந்தது. ஆனால் இப்போது பிரச்சினை வெளிவிவகாரத்துறையிடம் இருந்து பிரதமர் அலுவலகத்தின் கைகளுக்குள் சென்றுவிட்டது. பிரச்சினை இப்போது வெளிவிவகாரக் கொள்கை என்பதில் இருந்து மாறுபட்டு அரசியல் பிரச்சினை ஆகிவிட்டது. ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால் இப்போது இப்பிரச்சினை அரசியல் மயப்படுத்தப்பட்டுவிட்டது." என்றார்.

இதற்காகத்தான் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தேசிய அரசியல் கைப்பற்ற வேண்டும் என்கிறோம்.

tags: ராசவன்னியன், வேந்தன், ராஜன் விஷ்வா, வேந்தன், கண்ணா123, புரட்சிகர தமிழ்தேசியன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழி பெயர்ப்புக்கு நன்றி இசை . இந்த முக்கியமான வாக்குமூலம் செல்ல வேண்டியது, ராஜதந்திரம் செய்யிறம் என்று சொல்லித் திரியும் சம்பந்தன், சுமந்திரன் குழுவுக்கும் அதன்  யாழ்க் கள வால்களுக்கும் .
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி இருக்கு என்றால் ,

காலையில் வேலைக்கு போகும் போது சத்தம் எதுவும் போடாமல் மெல்லமாக அலுவல்களை பார்ப்போம் குழந்தைகள் நித்திரையால் எழுப்பினால் கத்தி குளறும்.

அதைப்போய் குழந்தைக்கு பயந்து என்று :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  

அர்ஜூனர், நல்ல உதாரணம்! குழந்தைகளின் கூச்சலால் வந்த விளைவு உங்களைப் போன்ற "பெரியவர்களால்" வந்த விளைவை விட பாரதூரமாகி விட்டதே? :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனர், நல்ல உதாரணம்! குழந்தைகளின் கூச்சலால் வந்த விளைவு உங்களைப் போன்ற "பெரியவர்களால்" வந்த விளைவை விட பாரதூரமாகி விட்டதே? :icon_mrgreen:

பிள்ளைக்கு பால் கொடுக்க படுத்துவிடும் .இப்ப படுத்துவிட்டது .

முப்பது வருடங்களாக முழிக்க முழிக்க பால் தான் கொடுத்துவருகின்றார்கள் .

இருபது வருடங்களாக மக்களின் அழிவில் அரசியல் செய்தவர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போனது பலரின் வயிற்றில் பலமாகத்தான் அடித்துவிட்டது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் குரலுக்கு சர்வதேச மதிப்புள்ளது. அதனை கிலாரி கிளிங்டன் போன்றவர்களே தெரியப்படுத்தி உள்ளனர். எமக்கு தமிழகத்தின்.. நாம் தமிழர்.. தமிழ் நாட்டை தமிழன் ஆளனும்.. பிற நாட்டவனும் வந்து வாழ்ந்திட்டுப் போகலாம்.. என்ற தமிழுணர்வு ஈழத்தமிழர் பாதுகாப்புணர்வு அங்கு வளர்வதும் பலம்பெறுவதும் மிக அவசியம்.  :icon_idea:

Link to post
Share on other sites

நெடுக்கு 2016 இல் மட்டும் சீமான், வைகோ பழ நெடு இவர்களில் யாராவது முதலமைச்சரா வந்து ஆட்சி அமைத்தால் நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். பந்தையமா?

தோத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

தமாரா சொன்னது என்ன சிதம்பர ரகசியமா?

தமிழ் நாடு என்பது ஒரு வாழை மட்டை. அதை எரி நிலைக்கு கொண்டுவர எத்தனை முத்துகுமார்கள் வந்தாலும் முடியாது.

கூடவே அழும் பிள்ளைக்கு ரெண்டு விளையாட்டு சாமான துக்கி போட்டா அடங்கீடும் என்பதும் டெல்லிக்குத் தெரியும்.

மாணவர் போராட்டத்துக்கு நடந்தது தெரியும் தானே?

தமிழ் நாடு எரியும் என்று பிரபா நம்பிக் கெட்டார்.

சிலருக்கு ஒன்ஸ்மோர் கேக்குது :)

பிரபா தமிழ் நாடு எரியும் எண்டு தான் நம்பி கெட்டதை உங்களுக்கு சொன்னாரா என்ன?  :o
பிரபாவுக்கு எது எந்தளவுக்கு  வேகும் என்பது உங்களை விட நல்லா தெரியும்.  :D
Link to post
Share on other sites

தமிழ் நாட்டு மக்களை நம்பலாம். தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எவரையும்(ஒரு சிலரை தவிர) நம்பவே கூடாது.

Link to post
Share on other sites

சீமான்,

அண்ணனை போய் சந்திச்சனான், ஆட்டுக்கறி சமைச்சு தந்தவர்,எனக்கு மட்டுமே ரகசிய தகவல் சொல்லி அனுபினவர் ஏன்று சொல்லி பிழைக்க நான் என்ன சீமானா ( நீங்கள் அல்ல சினிமாகாரரை சொன்னேன்).

அரசியல்வாதிகளில் நெடுமாறன் ஐயா மட்டுமே இதயசுத்தியானவர். மற்றையோர் எல்லாம் போக்கிரிகள்.

மக்கள் - அவர்கள் இந்திய, இந்து, ஜாதி, சினிமா மாயைக்குள் மூழ்கி எத்தனையோ தசாப்தமாயீட்டு. இனி மீட்சியில்லை.

சுருங்க கூறின் - பூட்ட கேசு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
கட்டுறையை முழுக்க வாசித்தால் விளங்கும் ஐ.நா. தீர்மானம் நாட்டைப் பிரிப்பதற்கோ இல்லை தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கோ அல்லவென்பது. ( தமாராவின் கருத்தின்படி )
 
ஐ.நா. தீமானத்தை மட்டும் முற்றாக நம்பி ஏனைய வழிகளை நிராகரித்தால் தமிழர் பிரச்சனை இன்னும் பல ஆண்டுகளுக்கு என்ன முடிவை நோக்கிப் போகும் என்ற தெளிவற்ற, முடிவில்லாத ஒரு பயணமாகவே இருக்கும்.   
 
ஒரு ஒப்பீட்டிற்கு இறுதி யுத்ததில் பல வல்லரசுகள் இராணுவ ரீதியில் பங்கெடுத்தன. ஐ.நா. தீர்மானம் வரும்போது பல வல்லரசுகள் அரசியல் ரீதியில் பங்கெடுப்பார்கள். அவர்களுக்கிடையேயான போட்டியில் எம்முடைய பிரச்சனைகள் மிதிக்கப்பட நாம் இலவு கிளியாகி விடுவோம்.
 
இந்தியா ஒன்றே தமிழர் பிரச்சனையில் தமிழர் சார்பான நிலை எடுக்க வேண்டிய கடப்பாடு உள்ள நாடு. வேறு எந்த நாட்டிற்கும் அப்படியான கடப்பாடு இல்லை.
 
சம்பந்தர் சரியான முறையிலேயே இயங்குகிறார்!  
   
இன்னுமொரு விசயம் அந்த ஐ.நா. தீர்மானத்தில் இந்தியா இலங்கை சார்பாக வாக்களித்து இருந்தாலும் தீர்மானம் வென்றே இருக்கும்.
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈசன் நீங்கள் அந்தக் கட்டுரையில் கூறியதற்கு  மாறான விளக்கம் சொல்கிறீர்கள். அதில் தமரா சொல்லி இருப்பது, சிறிலங்காவைப் பிரிக்க அமெரிக்கா  முயல்கிறது அதனை இந்தியா விரும்பவில்லை , ஏனெனில் அதனால் தமக்குப் பிரச்சினை வரும் என்று எண்ணுகிறார்கள் . ஆனால் மேற்குலகு தமிழார் சார் அரசு ஒன்று உருவாவது தமது இராணவ நலங்களுக்கு அமைவாக இருக்கும் என்று நம்புகிறது என்று கூறி உள்ளார். 

US seeks to eventually partition Sri Lanka - – Tamara Kunanayakam

Seeking domination over Sri Lanka, the US might eventually seek to partition the country. If they cannot control a regime, they would seek its replacement. 

Yes. But unlike there, here the idea may be partition. If we don't act and take our future into our own hands by internal democratic transformation through fundamental changes, they will seek control.

It is very clear that they will control Eelam. All the Eelam forces are out there – in the West, the UK, Norway and elsewhere. The US can bring these groups under their control as in South Sudan. They can then control that part and might even insist on a referendum.

Ultimately, it won't help India either. But Sri Lanka is not playing her cards too well. We have isolated ourselves and are losing support among friends. We have lost India's support and other allies are turning aloof.

மேற்கின் பக்கம் நின்று ஈழத்தைப் பெறுவதா அல்லது இந்தியாவுடன் நின்று ஒன்றையும் பெறாமல் பொறுத்துக் கொண்டு இருப்பதா என்பதை தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும் . தமிழர்கள் இந்தியாவை மேற்கின் பக்கம் சரிப்பதும், சிறிலங்காவை சீனாவின் பக்கம் சரிப்பதுவமே எமக்கான பலத்தை தந்திரோபாய ரீதியாகக் கொடுக்கும்.  

Link to post
Share on other sites
இந்தியா ஒன்றே தமிழர் பிரச்சனையில் தமிழர் சார்பான நிலை எடுக்க வேண்டிய கடப்பாடு உள்ள நாடு. வேறு எந்த நாட்டிற்கும் அப்படியான கடப்பாடு இல்லை.

இந்தியா தமிழர் சார்பான நிலை எடுப்பதாயின் அது நீண்ட காலத்துக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எப்போதும் எடுக்காததால் ஒரு போதும் எடுக்காது எனலாம்.தமிழருக்கு சார்பாக நிற்பதை விட சிங்களவருக்கு சார்பாக நிற்பதால் இந்தியாவுக்கு நிறைய பலன்கள் உண்டு என்பது இந்தியாவுக்கு தெரியும்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ஆளும் வர்க்கம் சிங்களவர் சார்பானதோ தமிழார் சார்பானதோ அல்ல அது தன் இருப்பைச் சார்ந்தது. தேசிய இன விடுதலை என்பது அதன் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும்.   தமிழார் சார்பான ஒரு ஆளும் அமைப்பை உருவாக்காமால் அல்லது தமிழ் நாட்டின் அரசியற் பலத்தைப் பிரயோகிக்காமால் தானாக என்றும் இந்தியா அதன் வெளியுறவுக் கொள்கையை மாற்றாது. உள் இருந்து மாற்றம் அல்லது வெளியில் இருந்து , சீனா , அமெரிக்க முரணின் ஊடான மாற்றம் என  இரு நிலைப்பட்ட அழுத்ததின் ஊடகவே , கொள்கை மாற்றம் நிகழ முடியும்.  இந்தியா சொல்வதைக் கீட்டுக் கொண்டிருப்பதன் மூலm எம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. ஆனால் சம்பந்தன் சுமந்திரன் ராஜதந்திரம் என்பது , புலம் பெயர் தமிழார் உருவாக்கி விட்ட குதிரையில் பயணித்துக் கொண்டே அதற்க்கு ஆப்பு வைக்கும் மடத் தனமான  அரசியல். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஈசன் நீங்கள் அந்தக் கட்டுரையில் கூறியதற்கு  மாறான விளக்கம் சொல்கிறீர்கள். அதில் தமரா சொல்லி இருப்பது, சிறிலங்காவைப் பிரிக்க அமெரிக்கா  முயல்கிறது அதனை இந்தியா விரும்பவில்லை , ஏனெனில் அதனால் தமக்குப் பிரச்சினை வரும் என்று எண்ணுகிறார்கள் . ஆனால் மேற்குலகு தமிழார் சார் அரசு ஒன்று உருவாவது தமது இராணவ நலங்களுக்கு அமைவாக இருக்கும் என்று நம்புகிறது என்று கூறி உள்ளார். 

US seeks to eventually partition Sri Lanka - – Tamara Kunanayakam

Seeking domination over Sri Lanka, the US might eventually seek to partition the country. If they cannot control a regime, they would seek its replacement. 

Yes. But unlike there, here the idea may be partition. If we don't act and take our future into our own hands by internal democratic transformation through fundamental changes, they will seek control.

It is very clear that they will control Eelam. All the Eelam forces are out there – in the West, the UK, Norway and elsewhere. The US can bring these groups under their control as in South Sudan. They can then control that part and might even insist on a referendum.

Ultimately, it won't help India either. But Sri Lanka is not playing her cards too well. We have isolated ourselves and are losing support among friends. We have lost India's support and other allies are turning aloof.

மேற்கின் பக்கம் நின்று ஈழத்தைப் பெறுவதா அல்லது இந்தியாவுடன் நின்று ஒன்றையும் பெறாமல் பொறுத்துக் கொண்டு இருப்பதா என்பதை தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும் . தமிழர்கள் இந்தியாவை மேற்கின் பக்கம் சரிப்பதும், சிறிலங்காவை சீனாவின் பக்கம் சரிப்பதுவமே எமக்கான பலத்தை தந்திரோபாய ரீதியாகக் கொடுக்கும்.  

கட்டுரையில் உள்ள ஒரு சில வரிகளை வைத்துச் சொல்லவில்லை நாரதர். 
 
கட்டுரையின் நெடுகிலும் புரையோடியுள்ள விசயம் அமெரிக்கா இலங்கையை துண்டாட முயல்கிறது என்பதா ??
 
மஹிந்தவும் கொதபாயவும் சொன்ன விசயம் தான் மேற்கு இலங்கையைப் பிரிக்க முயல்கிறது என்பது. தமிழரின் உரிமைகளைக் கொடுக்காமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் சாக்கு தான் பயங்கரவாதிகள் நாட்டைப் பிரிக்க முயல்கிறார்கள்.. அமெரிக்கா நாட்டைப் பிரிக்க முயல்கிறது.. போன்றன.
 
மஹிந்த சொன்னதைத்தான் இவவும் சொல்கிறா..
 
அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானங்கள்/ நகர்வுகள் மூன்று நோக்கங்களைக் கொண்டது. 
 
1. தமக்கு சார்பான அரசை உருவாக்குவது.
2. சீனாவை அகற்றுவது.
3. இலங்கை மீது எதிர்காலத்தில் இந்தியாவின் அரசியல் இராணுவ தலையீடுகள் ஏற்படுவதை தவிர்க்க வைப்பது.
 
1 க்கும் 2 க்கும் விளக்கம் தேவையில்லை.
3 இல் தான் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கான காரணிகள் இருக்கின்றன. தமிழர் பிரச்சனை இருக்கும் மட்டும் தான் இந்தியா இலங்கை மீது அதிகாரம் செலுத்த முடியும். அத்தோடு சீனாவும் கால் ஊன்ற முடியும்.
 
அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கையில் படைத்தளம் போடும் எண்ணம் இல்லை எனலாம். ஆனால் இந்து சமுத்திரத்தில் சீனாவிற்கு எதிரான ஒரு அணியில் இலங்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அந்த அணி ஒரு போர் ஒத்திகை செய்யக்கூடிய அணியாக இருந்தால் போதுமானது.
 
தமாரா இலகுவாகச் சொன்னது போல் அல்லாது ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவரும் போர்குற்ற விசாரணை தீர்மானத்திற்கும் அமெரிக்கா இலங்கையில் படைத்தளத்தை கொண்டுவந்து போடுவதற்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். 
 
இவ சொல்வது உண்மை தான என்பது இன்னும் கொஞ்சக் காலத்தில் தெரிய வரும் தானே !!
Link to post
Share on other sites

இங்கே தமாரா குணநாயகத்தின் பேட்டியை போட்டு விட்டு தம் மனம்போனபடி கதாகாலட்சேபம் நடக்கிறது.

யாரிந்த தமாரா? அவர் அரசியல் என்ன என்று விளங்கியோருக்கு இந்தப் பேட்டிக்கு பின்னால் உள்ள அரசியல் புரியும்.

இலங்கை ராஜதந்திரிகளில் மகிந்த சார்பு பிரிவுகள் 2 உண்டு. ஒரு பிரிவில் தமாரா, டயான், நோனிஸ் போன்றோரும் மறுபுறத்தே சஜின் வாஸ் செனவிரட்ன போன்றோரும் உளனர். இந்த இரு பிரிவுக்கும் அடிக்கடி உட்பூசல் வெடிக்கும். ஈற்றில் - தமாரா கியூபாவிக்கு தூக்கி அடிக்கப் பட்டு பின் பதவி நீக்கமானார்.

டயான் பிரான்ஸ் துதர் பதவியில் இருந்து இறக்கப் ப்பட்டார். நோனிஸ் சஜின் வாசால் நையப் புடைக்கப் பட்டார் பதவி விலகினார்.

இவ்வளவு நடந்த பின்பும் இவர்கள் மகிந்தவுக்கே விசுவாசமாய் இருக்கிறார்கள்.

ஆட்சி மாறிய பின் - செனவிரத்னா தன் யுஎன்பி உறவினர் மூலமாக தொடர்ந்தும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டார். சஜினுக்கும் வழக்குகளில் இருந்து பாதுகாப்பை பெற பேரம் பேச்சு நடக்கிறது. அப்போ ஜெனிவா குழுவை தலமை ஏற்ற சமரசிங்க ( பீரிஸ் இல்லை) இப்போ ஒரு அமைச்சர்.

இந்த நிலையில் மகிந்த ஆதரவு கூட்டங்களை ஒருங்கமைக்கிறார் தயான். தமாரா தன் பங்குக்கு துண்டைப் போட்டு பஸ்சில் இடம் பிடிக்கிறா.

நாளைக்கு மகிந்த அரசு மீண்டும் அமைந்தால் அங்கே தம் இருப்பை நிலநாட்ட.

ரணிலை தற்போதய அரசை மேற்குடன் சேர்ந்து நாட்டை துண்டாட சதி செய்கிறார்கள் என்ற பிரச்சாரதின் இன்னோர் அங்கமே இந்தப் பேட்டி.

இதில் ஒன்றும் பெரிய நாம் அறியாத விடயம் சொல்லப் படவில்லை.

காங்கிரஸ் தேர்தலை எதிர் நோக்கிய சமயம், தமிழகத்தில் கூட்டணி பேச்சுக்கு பங்கம் வராதபடிக்கு வாக்களிப்பில் ஒதுங்கி இருக்கும் முடிவு எடுக்கப் பட்டது.

இதை தமிழக போராட்டத்தால் விளைந்தது என தமாரா சொல்வது அண்மையில் அமைசரான சமரசிங்க மீது குற்றம் சொல்லுபதற்க்காக.

இந்த பாலிடிக்ஸ் விளங்காம தமிழகம் எதையோ கிழிச்சது எண்டு படம் காட்டுறோம் நாங்கள்.

இந்திய எஜமான் சில பொறையை தூக்கிப் போட்ட தமிழகம் வாலை சுருட்டிக் கொண்டு படுக்கும். அண்ணா காலத்தில் இருந்து இதுதான் கதை.

தம் நீர் நில உரிமைக்காக, முள்ளிவாய்காலுக்காக பொங்காத தமிழகம், ஐநா தீர்மானத்துக்கு பொங்கிச்சாம் அத கண்டு இந்தியா நடுங்கிச்சாம் :)

காதுல பூ வைக்கலாம் பூந்தோட்டமே வைக்கணும்னா எப்படி ?

Link to post
Share on other sites

சீமான்,

அண்ணனை போய் சந்திச்சனான், ஆட்டுக்கறி சமைச்சு தந்தவர்,எனக்கு மட்டுமே ரகசிய தகவல் சொல்லி அனுபினவர் ஏன்று சொல்லி பிழைக்க நான் என்ன சீமானா ( நீங்கள் அல்ல சினிமாகாரரை சொன்னேன்).

அரசியல்வாதிகளில் நெடுமாறன் ஐயா மட்டுமே இதயசுத்தியானவர். மற்றையோர் எல்லாம் போக்கிரிகள்.

மக்கள் - அவர்கள் இந்திய, இந்து, ஜாதி, சினிமா மாயைக்குள் மூழ்கி எத்தனையோ தசாப்தமாயீட்டு. இனி மீட்சியில்லை.

சுருங்க கூறின் - பூட்ட கேசு

அண்ணே சிறு திருத்தம். :o  தலைவருக்கு ஆட்டுகறி சமைக்க தெரியாதாம்.  :(
கோழி கறி சமைப்பதில்தானாம் அவர் கில்லாடி.  :D  :icon_idea:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
//காங்கிரஸ் தேர்தலை எதிர் நோக்கிய சமயம், தமிழகத்தில் கூட்டணி பேச்சுக்கு பங்கம் வராதபடிக்கு வாக்களிப்பில் ஒதுங்கி இருக்கும் முடிவு எடுக்கப் பட்டது.
 
இதை தமிழக போராட்டத்தால் விளைந்தது என தமாரா சொல்வது அண்மையில் அமைசரான சமரசிங்க மீது குற்றம் சொல்லுபதற்க்காக.//
 
இதைத் தான் விளக்கம் இல்லாமல் அலம்புவது  என்பது.  தமிழகத்ததில் கூட்டணிக்கு ஏன் பங்கம் வருகிறது? ஜெனிவாவில் வாக்களிப்பதற்கும் , தமிழ் நாட்டுத் தேர்தலுக்கும்  என்ன தொடர்பு? புகோள  நலன் சார் வர்த்தக இராணுவ நலன்களை மேவி ஏன் தமிழ் நாட்டுத் தேர்தல் நலன்கள் முன் வருகின்றன? இதனைத் தானே  தமாரா அரசியற் காரணம் என்று கூறி  இருக்கிறார். தமிழ் நாட்டின் முக்கியம் ஒரு அரசியற் காரணம். இதனைத் தாணே இங்கே பக்கம் பக்கமாக எழுதிக்   கொண்டிருக்கிறோம்.
 
அரை குறை விளக்கத்துடன், எல்லாம் தெரிந்தது 
போல்   எழுதித் தள்ளமுதல் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் .   
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையில் உள்ள ஒரு சில வரிகளை வைத்துச் சொல்லவில்லை நாரதர். 
 
கட்டுரையின் நெடுகிலும் புரையோடியுள்ள விசயம் அமெரிக்கா இலங்கையை துண்டாட முயல்கிறது என்பதா ??
 
மஹிந்தவும் கொதபாயவும் சொன்ன விசயம் தான் மேற்கு இலங்கையைப் பிரிக்க முயல்கிறது என்பது. தமிழரின் உரிமைகளைக் கொடுக்காமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் சாக்கு தான் பயங்கரவாதிகள் நாட்டைப் பிரிக்க முயல்கிறார்கள்.. அமெரிக்கா நாட்டைப் பிரிக்க முயல்கிறது.. போன்றன.
 
மஹிந்த சொன்னதைத்தான் இவவும் சொல்கிறா..
 
அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானங்கள்/ நகர்வுகள் மூன்று நோக்கங்களைக் கொண்டது. 
 
1. தமக்கு சார்பான அரசை உருவாக்குவது.
2. சீனாவை அகற்றுவது.
3. இலங்கை மீது எதிர்காலத்தில் இந்தியாவின் அரசியல் இராணுவ தலையீடுகள் ஏற்படுவதை தவிர்க்க வைப்பது.
 
1 க்கும் 2 க்கும் விளக்கம் தேவையில்லை.
3 இல் தான் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கான காரணிகள் இருக்கின்றன. தமிழர் பிரச்சனை இருக்கும் மட்டும் தான் இந்தியா இலங்கை மீது அதிகாரம் செலுத்த முடியும். அத்தோடு சீனாவும் கால் ஊன்ற முடியும்.
 
அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கையில் படைத்தளம் போடும் எண்ணம் இல்லை எனலாம். ஆனால் இந்து சமுத்திரத்தில் சீனாவிற்கு எதிரான ஒரு அணியில் இலங்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அந்த அணி ஒரு போர் ஒத்திகை செய்யக்கூடிய அணியாக இருந்தால் போதுமானது.
 
தமாரா இலகுவாகச் சொன்னது போல் அல்லாது ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவரும் போர்குற்ற விசாரணை தீர்மானத்திற்கும் அமெரிக்கா இலங்கையில் படைத்தளத்தை கொண்டுவந்து போடுவதற்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். 
 
இவ சொல்வது உண்மை தான என்பது இன்னும் கொஞ்சக் காலத்தில் தெரிய வரும் தானே !!

கட்டுரையின் தலைப்பே  அமேரிக்கா இலங்கையைத் துண்டாட விளைகிறது என்பதே.    
 
கட்டுரையின் மையக் கருத்து , இந்தியா ஒரு போதும் இலங்கையைத் துண்டாடாது ஆனால் தனக்குத்  தேவை என்றால் அமெரிக்கா செய்யும் என்பதே. இதனை நாங்கள் முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தில் கண்டோம். அமெரிக்காவின் நேரடித்  தலையிட்டைத் தடுத்து இந்தியா களத்தில் நின்று முழுத் தலைமையையும் அழித்தது. இதற்குக் காரணம் என்ன?
 
தற்போதைய நிலையில் வடமாகாண அரசை வலுப்படுத்துவது, இராணவத்தை அகற்றுவது. சிறிலங்கா அரசியலை திடமற்றது ஆக்குவது. இராணுவத்திற்கு நெருக்கடி கொடுப்பது.
 
அத்துடன் தொடர்ந்தும் சர்வதேச விசாரணையையும், சுயநிர்ணய கோரிக்கையும் வலியுறுத்துவது, புலம் களம் தமிழ் நாடு இணைத்து இந்த அடிப்படைக் கோட்பாடுகளினுடன் தொடர்ந்து போராடுவது.
 
ஒரு நிலையில் அமேரிக்கா ,இந்தியா கூட்டணியும் , சீனக் கூட்டணியும் மோதும். இது ஈற்கனவீ தொடங்கி விட்டது, சீன அதிபர் இந்தியாவையும் இணைக்கும் படி கூறி உள்ளார். இந்தியா அமெரிக்காவா , சீனாவா என்னும் நிலை எடுக்க வீண்டி இருக்கும்.
 
அப்போது தமிழர்கள் , இந்தியாவா அமெரிக்காவா என்னும் நிலை எடுக்க வீண்டி வரும். இவை அனைத்தையும் கடந்து நாம் எமது இல்லக்கை அடைய விரும்பின், எமது அடிப்படைக் கோரிக்கைகளை எந்தக் கட்டடத்திலும் விட்டுக் கொடுக்காத உறுதியான தலைமை வேண்டும்.
 
புகோள நலன்களை அறிந்து காய் நகர்த்தும் திறம் வாய்ந்த மதியூகத் தலைமை வேண்டும் . அனைவரையும் ஒன்றாக வழி நடாத்தக் கூடிய தலைமை வேண்டும். தற்போது இருப்பவர்களில் அதற்க்கு மிகவும் தகுதியானவர் அய்யா விக்கிநீசுவரன் அவர்களே.
 
தமிழத் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக்கி அதற்கு அவர் தலைமை தாங்க வேண்டும். சம்பந்தர் ஓய்வு பெற வேண்டும்.        
Link to post
Share on other sites

தாங்கள் ஏற்கனவே நினைத்து வைத்திருந்ததை சரி என்று சொல்வதற்காகவே மேலோட்டமாக வாதிடுகிறார்கள் கோசானும், ஈசனும்.. உட்பூசல் இருப்பது எல்லாம் தெரிந்த விடயங்கள்தான்.. அதன் பொருட்டில்தான் தாமராவின் இந்த தாக்குதல்களும் வெளிவருகின்றன.

அதற்காக இந்தியாவுடனான தொடர்பாடல்கள் குறித்து இவர் பொய் கூறுகிறார் என்று ஆகிவிடாது.

அதுபோல ஒருங்கிணைந்த இந்தியாவில் தமிழகத்தின் பொருளாதாரப் பங்களிப்பு மிக அதிகம்.. பொருளாதாரமே முடிவுகளை நகர்த்தும் இக்காலத்தில் தமிழகத்தை கிள்ளுக்கீரையாக மத்திய அரசால் நடத்த முடியாது. ஆனாலும் முடிகிறது என்றால் தமிழகத்தின் ஊழல் தலைமைகளே காரணம்.. இந்த நிலை மாறினால் ஈழ விவகாரத்திலும் சாதகமான மாற்றங்கள் உருவாகும்..

Link to post
Share on other sites

நல்லா இருக்கு வில்லுப்பாட்டு :) சின்ன மணி தோத்தார்!

இந்தியாவிடம் Tamil Nadu containment strategy ஒன்று இருக்கு.

அதை அவர்கள் எப்போதும் நடைமுறைப்படுத்திய படியே இருப்பார்கள்.

இது ஒரு constant (மாறிலி). இது எப்போதும் அமுலிலே இருக்கும்.

தேர்தல் போன்ற விடயங்கள் வரும் போது இதன் அமுலாக்கம் வெளித்தெரியும். அவ்வளவே.

கூட்டணிக்காக ஒரு மென்போக்கை தற்காலிகமாக கடைப்பிடித்த படியே, மாணவர் போராட்டம் போன்றவற்றை நலிவடையச் செய்வார்கள். Short term இல் பார்த்தால் இந்த போராடங்கள் ஏதோ வெற்றி அடைவதைப் போல தோன்றினாலும், end result டெல்கி விரும்பியபடியே இருக்கும்.

இந்த containment ஐ உடைத்தால் - தமிழ் நாட்டை எரிநிலைக்கு கொண்டுவந்தால் - எமக்கு நன்மை வரும். இது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல.

ஆனால் இது சாத்தியமா என்பதுதான் கேள்வி.

தமாரா மேலே சொன்னது, நீங்கள் சொல்வது அத்தனையும் 100% உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.

இப்போ நீங்கள் சொன்ன போராட்டத்துக்கு என்ன ஆச்சு? பிசு பிசுத்து விட்டதா இல்லையா?

இறுதியில் இந்தியாவின் நோக்கப் படி விடயங்கள் நடகிறதா இல்லையா?

டெல்லியின் Tamil Nadu containment ஐ உடைப்பத்கற்கு முயற்சிப்பது மேலும் டெல்லியை சினம் கொள்ளவே செய்யும்.

இது ஒரு high risk, low probability option.

பிரபா கையாண்டு தோல்வியில் முடிந்தது.

நல்லவேளை கூட்டமப்புத்தலைமைக்கு இது விளங்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் போரட்டம்  தில்லியின்  கொள்கையை மாற்றி  உள்ளது   என்று சான்றுடன் சொல்லும் போது, அது  மாறாதது என்று வாதிடுவது விதண்டா வாதம். போராட்டம் என்பது மாற்றத்திற்கானது. போராடாமல் பெறுவது அடிமைத் தனம் ஒன்றே. உலக வரலாறு இவ்வாறு தான் இருக்கிறது. பிரபாகரனைக் கொல்லலாம் ஆனால் தமிழரின் போராட்டத்தைக் கொல்ல முடியவில்லை. எமது போராட்டத்தை நாமகவே  கொல்லும்  தலைமை என்பது தலைமைத்துவம்   அல்ல, அது அடிமைத் தனம்.  

low risk high probability option is servitude.Only idiots will be servants.

Link to post
Share on other sites

வெளிநாட்டில் சாய்மன கதிரையில் இருந்து எவ்வளவு high risk உம் எடுக்கலாம். சாகாப்போறது நாமோ நம்ம பிள்ளையளோ இல்லைத்தானே.

போராட்டம் என்பது ஒரு அடையக் கூடிய இலக்கு நோக்கியே இருக்க வேண்டும்.

Struggle for struggle's sake என்பதாக அமைவது மக்களுக்கு நன்மை பயக்காது, சில சாய்மன கதிரை போராளிகளுக்கு it may give some colour to their otherwise pointless existence.

Accepting ground realities and endeavouring for a just and honourable solution, with minimal risk, is not servitude. It is common sense survival strategy.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டில் சாய்மனைக் கதிரையில் இருந்து கொண்டு தானே  ஆனந்தியைப் பற்றியும் விக்கினீசுவரனைப் பற்றியும் எழுதிக் கொண்டு இருக்கிறம். சம்பந்தரும் சுமந்திரனும் தானே முள்ளவாய்கலில் நிண்டவை. போராட்டத்தின் போக்கு சர்வதேச நிலை என கதைத்தால் , விதண்டாவாதம் செய்ய முடியாத தருணத்தில் இவ்வாறான பேத்தல் தனமான கதைகளைச் எழுதுவது  நேரத்தை வீணாக்கும் செயல்.

மக்கள் நிச்சயமாக அடுத்த தேர்தலில் சிலருக்கு பாடம் புகட்டுவார்கள்.

struggle is to attain freedom and justice. only those who use there own brain to devise a strategy will survive. Those who follow orders will be servants for ever. They are not leaders. People will eventually send them home. This is the reason that Pirapakaran still lives in people hearts. 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.