Jump to content

அரசியற் போராட்டமே இந்திய கொள்கையை மாற்றியது. - தமரா முன்னாள் சிறிலங்கா ராஜதந்திரி

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கு பதில் கருத்து எழுதாமல்  கருத்து எழுதுபவர் சாய்மனைக் கதிரையில் இருந்து எழுதிறார் என்று தொடர்ச்சியாக கருத்து எழுதுபவர் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் வறுமை யாரிடம் உண்டு என்பதை இந்தத் திரியையும் இது போன்ற திரிகளையும் வாசித்தால் தெரியும்.   

Link to post
Share on other sites
 • Replies 78
 • Created
 • Last Reply

சாய்மன ( மனை அல்ல) கதிரை என்பது வாய்சொல்லில் மட்டும் வீரர் என்பதை சுட்டும் விமர்சனக்கூற்று.

**********

எந்த பந்தையும் பார்த்து நான் அலட்டிக்கொளுவதில்லை. இதெல்லாம் ஜுஜுபி :)

அது சாய்மனக் கதிரையும் இல்லையாம்.. சாய்மானக் கதிரையாம்.. சாய்மானம் (recline) உள்ளதால் சாய்மானக்கதிரை சரியாகத்தான் இருக்கு..

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites

.இங்கு நாரதர், இசை ஆகியோர் வைக்கும் தர்க்க ரீதியான மற்றும் பூகோள ரீதியிலான கருத்துகளுக்கு சரியான பதிலை வைத்து ஆரோக்கியமான திசையில் உரையாடலை நகர்த்தாமல் வெறும் தனிமனித தாக்குதலை நோக்கி திருப்பும் கோசானின் கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

கண்ணா, தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தில் 99 வீதம் நானும் உடன்படுகின்றேன்.

Link to post
Share on other sites

நிழலி,

தர்க, பூகோள ரீதியான எல்லா கருத்துகளுக்கும் எப்போதோ பதில் சொல்லியாகி விட்டது.

கண்ணா சொன்னதை தான் 1ம் திரியில் இருந்து நானும் சொல்லி வருகிறேன். 3 பக்கத்தையும் படித்து விட்டுத்தான் கருத்து வைக்கிறீர்கள் என் நம்புகிறேன்.

செயலாக்கம் அற்று, தமிழ்நாடு போராடவேண்டும் அதனால் ஈழ விடுதலை கிட்டும் என்று எழுதுவது சாய்மான கதிரை புரட்சியே ( armchair revolution).

இதை சுட்டிக்காட்டுவது தனிமனித தாக்குதல் அல்ல.

இதற்கும் சக கருதாளரை லூசன் என்று சொல்லுவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டை உணர உங்களால் முடியாதென்றால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

உங்களால் கருத்துக்களை சரியாக கிரகிக்க முடியவில்லை.. தமிழ்நாடு போராட வேண்டும் என்று யார் எழுதினார்கள்?? வேறு களங்களில் நடப்பதைக் குழப்பிக்கொண்டு இங்கே எழுதுகிறீர்களா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
நன்றி கண்ணா. தமிழக தமிழரின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறி இருக்கிறீர்கள்.
இங்கு சிலர் இன்னும் 5-10 வருடங்களில் சீமான் தமிழ் நாட்டு அரசியல் அதிகாரத்தை பிடித்துவிடுவார் என்று கூறி வருகிறார்கள். சிலர் 2016 கனவில் கூட மிதக்கிறார்கள். அதை பற்றிய‌ உங்கள் கருத்து என்ன? 
Link to post
Share on other sites

கண்ணா,

நானும் கேட்க நினைத்த கேள்விதான் இது?

சீமான் பற்றி.

Link to post
Share on other sites

போராடாமல் மாற்றம் இல்லை என்பதற்கான சான்று , புலம் தமிழ்நாடு தளம் அனைத்தும் போராடினாலேயே எமக்கு விடிவு.

இசை 1ம் பக்கத்தில் இந்த செய்தியை இணைத்தவர் செய்திக்கு கீழே போட்ட கருத்து இது.

இதுக்குத்தான் நான் பதில் எழுதினேன்.

இப்ப 3 பக்கத்தில் வந்து தமிழ் நாட்டை நாங்க போராடச் சொல்லவில்ல என்கிறீர்கள்.

தமிழ் நாடு போராடாது - அதன் மூலம் எமக்கு ஒரு விடுதலையும் வராது - இது என் வாதம்.

ஆம் அல்லது இல்லை என்பதுதான் இங்கே விடயதானம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணா,மிக தெளிவான அரசியல் பார்வை .எங்கள் விருப்பம் வேறு யதார்த்தம் என்பது வேறு.விரும்பியோ விரும்பாமலோ ஜே யும் கருணாவும் தான் நாங்கள் தொடர்பு வைக்கவேண்டியவர்கள் .

"அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார் வை கோ".

தமிழ்நாட்டு அரசியலை  அவர் தெளிவாக கணிக்கவில்லை .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.

நன்றி கண்ணா. இதை நாங்கள் சொன்னால் துரோகி நரி பூனை ஆறறிவு அற்றவர் என்று வசைவு வரும். உங்களுக்கு என்ன பட்டம் வருகிறதென்று பார்ப்போம். 
இனியாவது இங்கிருப்பவர்கள் கனவு காண்பதை நிறுத்தி விட்டு யதார்த்தமாக சிந்த்தித்தால் நல்லது. கோசான் சொல்லும் சாய்மனை கதிரை அரசியல் என்பது இதுதான். 
தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் radicalism or Extremism சார்ந்த சிந்தனை கொண்ட எந்த குழுக்களுக்கும் ஆதரவு வழங்கியது கிடையாது. சீமான் கனடாவில வந்து பேசின பேச்சை கேட்டா பிரபாகரனே முகம் சுளிச்சிருப்பார். 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் கூறிய அணைத்து அரசியல் சார்ந்த கருத்துக்களும் சாமானியன் என்ற வகையால் கூறிய கருத்துக்கள் ஆகும். நான் ஒரு சாதாரண குடிமகன். எனக்கும் எந்த அரசியல் இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். 
 
மேலும் தமிழ் நாட்டில் உள்ள மக்களின் பிரச்சனைகளை கையாளக்கூடிய இயக்கங்களுக்கே ஆதரவு கிடைக்கும். அந்த வகையில் திமுக, அதிமுகவிற்கே அந்த அனுபவம் உள்ளது. கொஞ்சம் மக்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஜாதி ரீதியாக வட தமிழ் நாட்டில் வன்னியர் என்ற முறையில் வாக்கு அளிப்பார்கள். தமிழ் நாட்டின் பெண் வாக்காளர்களின் 80 % வாக்குகள் ஜெயாவிர்க்கே செல்லும்.ஏன் என்றால் அவர் பெண்களுக்கு நிறைய திட்டங்கள் வகுத்து கொடுத்து இருக்கிறார். கருணாநிதியின் ஆட்சியில் தமிழகம் மிக பெரிய கட்டமைப்பு (infrastructure) திட்டங்களை கண்டு பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. இப்படி தங்களின் வாழ்க்கையை , தங்களின் படித்த பிள்ளைகளின் வாழ்க்கையை முன்னேற்ற திட்டம் உள்ள கட்சிகளுக்கே வாக்குகள் அளித்தார்கள். அளிப்பார்கள். மாநிலத்தை முன்னேற்ற திட்டம் ஒன்றும் கையில் இல்லாமல் , தொண்டர் அமைப்பே இல்லாமல் எப்படி ஆட்சிக்கு வர முடியும். வெறும் கையால் முழம் போட முடியாது அல்லவா ?
Link to post
Share on other sites

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.

இந்த நிலை மாற வேண்டும். தமிழர் தலையில் மிளகாய் அரைப்பவர்களிடம் சென்று உதவி கேட்பதா? கோடிக்கணக்கான மக்களின் பணத்தை சுருட்டுபவர்கள்  தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?

வை.கோ ஏன் வெல்லவில்லை என மேலே கேட்டிருந்தேன்.அதற்கான பதிலுக்கு நன்றி.

புலிகள் ராஜீவின் தாக்குதலின் பின் தமிழ் நாட்டு மக்களுக்கு இருக்கின்றது என்கிறீர்கள். 30 மைல்களுக்குள் இந்திய இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான். தெரிந்து இருந்தால் ராஜீவின் கொலை பற்றி ஒரு மீளாய்வு செய்திருப்பார்கள். அதற்காக ராஜீவின் கொலையை நியாயப்படுத்தவில்லை.

சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 

கட்சியை புதிதாக தொடங்குபவருக்கு 2 லட்சம் தொண்டர்கள் போதுமானது. அதிமுக, திமுக கட்சி தொடங்கிய போது கோடிக்கணக்கான தொண்டர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

Link to post
Share on other sites

கண்ணா நாங்களும் சாமானியர்கள்தாம். உங்களிடம் இருக்கும் பார்வை அற்புதமானது. 100% யதார்த்தமானது.

சாமானியர்களிடம் இருக்கும் தெளிவு பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் என தம்மை தாமே உருவகிப்போரிடம் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ் நாடு இப்போதும் எப்போதும் இப்படித்தான் இருந்தது. ஈழப் பிரச்சினை என்பது வாக்காளரின் 6 வது அல்லது 7 வது பிரையோரிட்டி தான். அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்.

நாங்கள் புலத்தில் இருக்கிறோம். இந்த வெளிநாட்டு அரசுகள் தமிழர் தலையில் மிளக்காய் அல்ல மிளகாய் தோட்டத்தையே அரைத்தன ஆனால் நாம் அவர்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கிப் போட மாட்டோம்.

ஏனெனில் அது எம்,

எம் பிள்ளைகளின் இருபுக்கே ஆபத்தாய் முடியும்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இந்தியாவுடன் பகச்சுகணும். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கணும்.

சீமான் போன்றவர்கள் - சி எம் ஆனால் 5 வருடத்தில் தமிழகம் பிகாரிடம் பிச்சை எடுக்கும் படி ஆக்குவார்கள்.

மக்களுக்கும் இது தெரியும். அதனால்தான் அடித்துச்சொல்கிறேன் - தமிழக மக்களின் நிதானத்தின் மீது நம்பிக்கை வைத்து - சீ எம் அல்ல 2016 இல் அவர் சொந்த தொகுதொயிலே சீமான் டெபாசிட் வாங்குவதே பெரிய விசயம்.

தமிழகத்தில், இலங்கையில் வாழும் மக்கள் அரசியல் தெளிவோடுதான் இருக்கிறார்கள். புலத்தில்தாம் சாய்மான கதிரைகள் கூடிப்போனதால் இந்த அலுப்பு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தின்டது செமிக்கத்தானே வேணும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இசை,
 
தமிழக மக்கள் விஜய காந்திற்கு இரண்டு முறை10 சதவிகத வாக்குகள் அளித்தார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் இரண்டு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் போட்ட வாக்குகள் ஆகும். அந்த சந்தர்பத்தை சரியாக தேமுதிக பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் 20 -25 % வாக்குகள் பெற்று தனி பெரும் கட்சியாக வரும் தேர்தலில் வர வாய்ப்பு இருந்தது. இது இப்பொழுது  எட்டா கனியாக போய் விட்டது. இப்பொழுது ஜெயாவின் மேல் வரும் தீர்ப்பை பொருத்து தமிழக அரசியல் உள்ளது. தீர்ப்பு வரும் 20 நாட்களில் வர இருக்கிறது. அந்த தீர்ப்பே ஒரு திராவிட கட்சி இருக்குமா இல்லையா என்ற மிக முக்கிய நிலையை தமிழக மக்களிடம் கொடுக்க உள்ளது. 

அந்த வெற்றெடம் யாருகு பொகும் கண்ணா..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடி
 
அடுத்த 50 ஆண்டுகள் தமிழகத்தை யார் ஆட்சி  செய்வார்யென்று நீனைகீரீர்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
இங்கே  பலர் அரசியற் போராட்டம் என்றால் வெறும் கட்சிப்  போராட்டம், என்றும் இன்னும் சிலர் ஆயுதப் போராட்டம் வன்முறைப் போராட்டம் என்று நினைத்துக் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் நாட்டின் அரசியலைச் சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போம். 
 
தமிழ் நாடு ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது என்று ஐம்பது வருடங்களின் முன்னர் யாராவது சொன்னால், அது சாய்மனைக் கத்தரியில் இருந்து சொல்கிறார் என்று தான் எழுதி இருப்பார்கள். 
 
மற்றம் என்பது தொடர்ந்து நிகழ்வது. தமிழ் நாட்டில் திராவிடக் கட்ச்சிகள் எவ்வாறு தோன்றின இறுதியில் ஆட்ச்சியைப் பிடித்தன? பெரியார் என்ற ஒற்றை மனிதர் தன்னான் தனியாக துவக்கிய ஒரு அரசியல் இயக்கம் எப்படி ஒரு மாபெரும் இயக்கமாக விரிந்தது?
 
பெரியாரின் அரசியல் போராட்டமே அதனை ஒரு மாபெரும் இயக்கமாக்கி இன்று ஆட்சி  அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. அவர் தொடங்கிய போதும், இன்று கேட்கப்படும் அதே    கேள்விகள் அவரிடமும் கேட்கப்படலாம்.     
 
அரசியல் இயக்கங்கள் போராட்டங்கள் , சமூகம் சார்ந்த கருத்து நிலைகளில் இருந்து பிறந்து , வளர்ந்து அரசியல் இயக்கங்கள் ஆகின்றன. திராவிடர் என்னும் கருத்து நிலையில் இருந்தே திராவிட இயக்கம் பிறந்தது. அதுவே ஒரு அரசியற் செயற்பாடாகி மக்கள் இயக்கம் ஆகியது.
 
இன்றைய காலகட்டத்தின் சமூக அரசியல் நிலைகள் இன்று பிறக்கும் கருத்து நிலைகளைத் தீர்மானிக்கின்றன. அதில் இருந்து புதிய அரசியல் இயக்கங்கள் பிறக்கின்றன. தமிழ் நாடும் அதன் அரசியலும் இதற் கு விதிவிலக்கானது அல்ல.  
 
புலிகள் என்னும் வார்த்தையையீ உச்சரிக்க முடியாத ஒரு காலகட்டம் தமிழ் நாட்டில் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் இருந் தது. இன்று அந்த நிலை இல்லை. அதனை மாற்றியது அரசியற் போராட்டங்களே .
 
இங்கி எழுதும் பலருக்கு அரசியலை நுணுகி ஆராயம் தன்மை இல்லை. வெறும் தனி மனித தாக்குதல்களையே  யாழ்க் களம் எங்கும் காணலாம்.
 
காத்திரமான எந்த உரையாடலையும் செய்யக் கூடிய களமாக யாழ்க் களம் இல்லை. இதில் எழுதி என்ன பிரியோசனம் என்னும் அயற் சியே  வருகிறது. இங்கி எழுதும் எல்லோரும் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு எழுதுவதில்லை. அவ்வாறான நிலையில் கண்ணை மூடிக் கொண்டு அனுமானங்களின் அடிப்படையில் , எழுதப்படும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லாமால், வெறும் தனி மனித தாக்குதலே இங்கு நிகழ்கிறது.
 
எல்லோரும் கதிரையில் இருந்து கீ போட்டைப்  பாவித்துத் தான் எழுதுகிறோம். அதற்காக எல்லோரும் இதனை மட்டுமே செய்கிறோம்  என்று ஆகிவிடாது. எழுதுவதற் கு அப்பால் எமக்கு எனச் செயற்பாடு இருக்கிறது. 
 
இந்ததக் கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களைப் பின்நோக்கிப் பார்த்தால் அது விளங்கும். தமிழ் நாட்டில் மாணவர் போராட்டங்கள் உண்டாவதற்கான ஏது  நிலை , சனல் நான்கு வெளியிட்ட பாலச்சந்திரனின் கொலைப் படங்கள் ஒரு காரணம். அது பிரித்தானியாவில் இருந்தே வெளியிடப்பட்டது. உலகெங்கும் இயங்கும் தமிழார் அரசியல் இயக்கங்களுக்கு தொடர்புகள் இருக்கின்றன. இவை எல்லாம் இந்தத் தொடர்புகளைப் பயன் படுத்தி நிகழ்ந்த   அரசியற் செயற்பாட்டின் மூலம்  வந் தவை.  
 
வெறுமணே இணையத்தில் இருந்து சாய்மனக் கதிரையில் அமர்ந்து    தட்டச்சும் அரசியல் செயற்பாடு எதுவும் அற்ற ஒருவரால், இந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது.   இங்கே எழுதும் பலரின் பிரச்சினை அதுவே. இயங்குபவர்கள் எழுதுவது குறைவு. 
 
விளங்கிக் கொள்ள முற்படுபவர்களுக்கு நான் எழுதி இருப்பது விளங்கி இருக்கும். இதற்க்கு மேல் இங்கே  எழுதுவது எதுவித பயனும் அற்ற செயல்.
 
நன்றி, வணக்கம்.  
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளுக்கு எல்லை வகுத்தவன் யார்? அவர்களின் நன்மை தீமை எவை ? என்பவை பற்றி மனதில் கொண்டு அரசியல் அலசப்படவேண்டும்.....பூர்வீக மக்களின் விருப்பு வேறுப்பு கணக்கில் எடுக்கபடுவதில்லை....என்பது என் கருத்து......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
உலக நாடுகளுக்கு எல்லை வகுத்தவன் ஒருவன் இல்லை. எல்லைகள் நிரந்தரமானவையும் இல்லை. உலகில் பலமான சக்தி என்பது மாறிக் கொண்டே வந்திருக்கிறது. அரசியல் பொருளாதர இராணுவ பலம் யார் நிர்ணயிக்கும் சக்தி என்பதை அந்த காலகட்டத்தில்  தீர்மானிக்கிறது. அரசியல் பொருளாதார இராணுவ வலிமை என்பது ஒரு மக்கட் சமூகத் தாலேயே   தோற்றுவிக்கப்படுகிறது .   மக்கட் சமூகம் என்பது ஒரு நிலம் சார்ந்து அல்லது  ஒரு தேசிய அடையாளம் சார்ந்து தீர்மானிக்கப்படுகிறது.   மக்களின் குடிப் பரம்பல் தேசிய அடையாள ஆக்கம் என்பன தொடர்ந்துமாறும்  உலகில் பூர்வீகம் என்பது அர்த்தமற்றது. ஆகவே தேசியம்  என்பது இன்றைய  நிலையின் அடையாளம். இதில் தான் திராவிட, தமிழார் அடையாளச் சிக்கலுக்கான பதில் இருக்கிறது. 
 
இன்றைய நிலையில் மக்களின் வாழ்வை வளம் படுத்தக் கூடிய அடையாளம் ஆக மக்கள் எதனைக் கருதுகின்றனர்  அதுவே அவர்களின் அடையாளம் ஆகிறது. அந்த தேசிய  அடையாளக் கருத்தியல் , அரசியல் வடிவம் எடுத்து அரசியல் இயக்கம் ஆகிறது. அந்த இயக்கத்தின் போராட்டாங்கள் வலிமை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றுகிறது. அதிகாரம் எல்லைகளைத் தீர்மானிக்கிறது.    
 
ஆகவே அடையாள அரசியல் என்பது மாறிக் கொண்டு வருவது, இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் எது தமக்கு நன்மை பயக்கும் என்னும் நிலையில் , ஒரு மக்கட் சமூகம் தனது அரசியல் இயக்கங்களைத் தேர்வு  செய்து கொள்கின்றது. இன்றைய நிலையே  நாளைக்குமான நிலை எனக் கூற முடியாது. 
 
இதில் புதிய  கருத்துகளின் உருவாக்கம் , புதிய பார்வையை முன் வைத்து மக்கள் முன் உள்ள தெரிவுகளை துலங்கச் செய்கிறது. எல்லா மக்களும் ஒரே  சிந்தனை உடையவர்கள் அல்ல. எல்லாராலும் நுணுகி ஆராயும் திறனும் நாளைய மாற்றத்தை விளங்கிக்   கொள்ளும் பக்குவமும் இல்லை. மாறி வரும் உலகையும் அதன் நிர்ணய சக்திகளின் போட்டிகளையும் விளங்கிக் கொண்டு, அதனூடாக தமது மக்களின்  நலன் சார்ந்து சிந்தித்துச் செயற்படும் ஒரு தலமையினாலையே  அந்த மக்கட் சமூகத்தின் இலக்கு எட்டப் பட முடியும்.    அவ்வறு இல்லாத தலைமைகள் மக்களால் தூக்கி எறியப்பட்டு புதிய தலைமைகள் உருவாகின்றன. 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம்,திராவிட தேசியத்தை விட .....இந்தியா தேசியம், சிறிலங்கா(சிங்கள தேசியம் அல்ல) தேசியம் போன்றவை எல்லை வகுத்த சீமான்களுக்கு முக்கியம்....எல்லை வகுத்த சீமான்கள் இன்று பிராந்திய தேசியங்களை உருவாக்குவதில் முனைப்புகாட்டுகிறார்கள் ..... இன தேசியத்தை விட இந்துநாகரீகம்,கிறிஸ்தவ நாகரீகம்,இஸ்லாமீய நாகரீகம்,பெளத்த நாகரீகம் என நாகாரீக அடிப்படையில் உலக ஒழுங்கை செயல்படுத்த முயற்சிக்கின்றனர் .....வளைகுடாவில் சுன்னி பிராந்தியத்திற்க்கு ...சவுதி அரெபியா......சியா பிராந்தியத்திற்கு ஈரான்......தெற்காசியாவிற்க்கு இந்தியா.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்ப  அண்மையில் ஆறரை  கோடி  கைமாறி  இருக்காம் நாம் தமிழர் கட்சி  பெயர்  மாற எங்கிருத்து  வருகிறது இவ்வளவு  மனம்  சீமானுக்கு  :D

ஈழமும்  தமிழும்  வியாபார உச்ச  முத்திரை ஆகிட்டு .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆறரைக் கோடியில் அரைப் பைசா வை.. அண்ணேட்ட காட்டிட்டுத்தான் கொடுத்தவை. அதுதான் அண்ணே வந்து கணக்கை எடுத்து விடுறார். :lol::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.

பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளாலும் இணைக்கப்பட்டிருந்த சின்னச்சின்னக் கிராமங்களையும் பார்க்கத்தூண்டியது. அவையெல்லாம் எனது பள்ளிப் பருவத்தில் சல்லிக்கட்டு பார்க்கவும் வள்ளி திருமணம் பார்க்கவும் நடந்து போய் வந்த கிராமங்கள். பின்னர் கபடி விளையாடுவதற்காகச் சைக்கிளில் சென்றுவந்த கிராமங்கள். அப்போதெல்லாம் அந்தக் கிராமங்களில் பளிச்சென்று தெரிந்தவை எம்ஜிஆர் மன்றங்கள். எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் திரைப்படச் சுவரொட்டிகள் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றம் சாதிச் சங்கங்களின் – சாதிக்கட்சிகளின் சுவரெழுத்துகளாக மாறியபோது எங்கள் பக்கத்து கிராமங்கள் நசிந்து சிவகாசியும் திருப்பூரும் கோயம்புத்தூரும் பெருத்து வீங்கியதைக் கண்டவன் நான்.

நானே ஓட்டியாக மாறிக் காரில் சென்றேன். அப்படிச் சென்ற எனக்குச் சில உண்மைகள் பளிச்சென்று உரைத்தன. 1960- களில் எம்ஜிஆர் மன்றங்கள் இருந்ததுபோல நாம் தமிழர் கட்சியின் வண்ணத் தட்டிகள் பல ஊர்களில் நிற்கின்றன. அத்தட்டிகளில் அக்கட்சியின் தலைவர் சீமானுக்குப் பதிலாகப் படமாக நிற்பவர் ஈழவிடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரன். வரிவரியான வண்ணக்கோடுகள் போட்ட சட்டையும் தலையில் தொப்பியும் கணத்த மீசையுமாகப் புலித்தலைவர் பிரபாகரன் படம் போட்டு நாம் தமிழர் இயக்கம் கிராமங்களில் கால் ஊன்றிக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர் எனத் தனது அரசியல் இயக்கத்திற்குப் பெயரிட்டுள்ள சீமானின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் பொருட்படுத்தத்தக்கதல்ல; உலகமயக் காலத்தில் வாழும் தமிழர்கள் அவரை ஏற்க மாட்டார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடப்பு வேறாக இருக்கின்றது. எனது கிராமங்கள் இருக்கும் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல; தென் மாவட்டங்களில் சீமானின் பெயரும் அவர் உச்சரிக்கும் ‘நாம் தமிழர்’ என்ற கூப்பாடும் மௌனமாகப் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பிரபாகரனின் உருவத்தை முன்னெடுத்த அவர் இப்போது முருகனைத் தனது முப்பாட்டன் எனச் சொல்லத் தொடங்கியிருக்கிறார். வாளொடு தோன்றிய மூத்தகுடி எம் தமிழ்க் குடி என்று சொன்னவர்களின் வாரிசாகத் தன்னை முன்வைக்க விரும்பி வேலொடு தோன்றி வினையாற்றத் தொடங்கியுள்ளார். இந்த மௌனப்பரவல் என்ன செய்யும்?

இந்த கட்டுரை சொல்ல வருகிற நோக்கம் வேறு

http://malaigal.com/?p=6506

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.