Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

பொய்யால் விளைகிற வன்முறைகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பொய்யால் விளைகிற வன்முறைகள்

தமிழ்மணி. பெரு. அ.

poi.jpg

என் மனதுக்குப் பட்டதைப்பேசுகிறேன் என்று பொய்ச்சான்று வழங்க விரும்பவில்லை. அதற்காக, நான் சொல்வதெல்லாம் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவை இரண்டுமே என்னிடம் அடிக்கடி உரசிக்கொள்ளவே செய்கிறது. இருப்பினும், இந்த இரண்டும் எப்படியோ பல வேளைகளில் ஒரே நேர்கோட்டில் சங்கமித்தும் விடுகின்றன.

மனம் என்று ஒன்று இருப்பதை நான் எப்போதும் ஏற்பதில்லை. மூளைதான் மனிதனுக்கு இருக்கிறதே ஒழிய மனம் என்ற வடிவம் ஏது?

இதய வடிவம் என்று ஒன்று இருக்கிறதேயொழிய, மனசாட்சி என்ற உருவம் இருப்பதில்லை. பொய்சாட்சியென்று ஒன்று புறப்படலாமேயொழிய, மனசாட்சியென்று ஒன்று புறப்படுவதில்லை. எனவே பொய்க்கு உள்ள வலிமை, பெரும்பாலும் உண்மைக்கு இருப்பதில்லை. இந்த உலகம் 99.9 சதவீத பொய்யர்களை வாழ்வித்துக்கொண்டிருக்கிறது. கர்த்தரின் பெயரால், அல்லாவின் பெயரால், ஒட்டு மொத்த கடவுள்களின் மதங்களின் பெயரால் அன்றாடம் பொய்தான் முதலீடாகிக் கொண்டிருக்கிறது.

எனவே மனம் பேசுகிறது என்று பொய் சொல்ல வேண்டிய அவசியமென்ன வந்தது? முதலில் யாருக்காக வாழ்கிறோம்; எதற்காக வாழ்கிறோம் என்பதில் ஒரு தெளிவு பிறந்தாக வேண்டும். வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ளவும் பெருக்கிக்கொள்ளவும் இந்த கேள்வி அவசியமாகிறது. நமக்காக வாழவே என்று தொடங்குகிறோம் என்றால் அதற்குரிய எல்லை எதுவரை என்பது விளங்கிவிடும்.

பிறருக்காக என்றால் அதன் எல்லை தேவையில்லாமல் விரிந்துகொண்டே போகும். இந்த இரு கூறுகளில் மட்டுமல்ல பல தலைமுறைகளுக்குரிய எல்லைகளைத் தொடுவதற்கு தேவைகளும் அதன் விளைவுகளும் விரிந்துவிடும்.

மனிதன் பிறக்கும் போதே பல வேளைகளில் நல்லவனாகப் பிறக்கவில்லை. அவன் கெட்டவனாகப் பிறக்கிறான். பலவேளைகளில் வளரும்போதுதான் நல்லவனாகவோ கெட்டவனாகவோ முழுமையாக வார்த்தெடுக்கப்படுகின்றான். கருவிலே வளரும் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் பேசும் சக்தியிருக்கிறது.பேசும் சக்தியின் வெளிபாடு ஒலியின் செயல்பாடாகி விடுகிறது. இங்கே மனசு என்பதென்ன? குழந்தைக்கும் முளையின் பதிவுதான். அதனுடைய வளர்ச்சியில் பாதிப்படைந்தால் மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்பதை விட முளை வளர்ச்சி குறைந்த குழந்தை என்றழைப்புத்தான் தகும்.

இத்தகையக் கட்டமைப்பிலிருந்து பிறந்து வளர்ந்து முழு உருவம் பெறும் போது ஏன் அவ்வளவு நல்லவனாக இருப்பதில்லை? ஒவ்வொரு மனிதனிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழக வேண்டியுள்ளது.நல்லவன் கெட்டவன் என்ற இரு வகை கூறுகளையும் நிறுத்துப்பாரக்கும் போது எவ்வளவு கெட்டவன்? எவ்வளவு நல்லவன்? என்ற கேள்விக்குப் பதிலைத் தயாரிக்க வேண்டியுள்ளது. ஏதோ ஒரு விசயத்தில் நல்லவனா?ஆளே மொத்தத்தில் நல்லவனா? இருப்பினும் உண்மையில் ஒட்டு மொத்தமாக ஒருவன் எப்படியும் நல்லவனாக இருக்கவே முடியாது. அப்படியென்றால் விவாதித்த விசயத்தில் மட்டுமே நல்லவனா? ஒருவன் எதுவரை நல்லவனாகயிருக்க முடியும்? எதுவரை கெட்டவனாகயிருக்க முடியும்? இந்த அளவு கோளை வைத்து சுற்றி வரவேண்டியுள்ளது.

மனைவியிடம் கணவன் நல்லவன் வேசம் போடவேண்டியுள்ளது, அதேபோன்று கணவனிடம் மனைவி நல்லவள் வேசம் போட வேண்டியுள்ளது. பெரும்பாலும் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்கு வாழ்கையில் நடித்துக்கொண்டே ஒரு தலைமுறையை உற்பத்தி செய்ய வேண்டிய குற்றவாளிகளாகயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்கள் உற்பத்திசெய்யும் குழந்தைகளும் அவர்களின் எண்ணத்தில் பயணத்தைத்தொடர்வதைத்தவிர வேறு வழியில்லை.

கணவன் – மனைவியிடையே யார் அழகு? யார் குறைவான அழகு? யார் சிகப்பு? யார் கருப்பு? யாருக்கு தரமான வருமான படிப்பு? யாருக்கு சமூக மரியாதை? இப்படிப்பட்ட எண்ணங்களுடன் அன்றாட வாழ்கையை எதிர் கொள்கிற உள் போராட்ட நெருக்கடிகளும் இதற்கு அழுத்தம் கொடுக்கின்ற நடைமுறை சிக்கல்களும் ஏராளம். எனவே, வாழ்க்கை வழிதடத்தில் அன்றாடம் கோடிக்கணக்கானவர்கள் உழன்றுக்கொண்டிருக்கிறார்கள் பல்வேறு பண்பாட்டுப்பின்னணி மொழிவழி.

ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளவே செய்கின்றன. அதனால் மனித வாழ்ககை ஏதோ ஒன்றுக்காக ஏங்குகிறது. அவை என்னவென்று தெரிவதற்குள் மோதிக்கொளகிறது. இது ஏதோவொரு தத்துவவிளக்கம் அல்ல! உண்மை எதுவென்ற தெரிந்துகொள்ள திட்டமிடவில்லை என்பதுதான் உண்மையை அறிவதற்கு தெளிவின்மையே காரணம். இதிலிருந்து தெரிவது மனித சமுதாயத்தில்ஓர் ஒழுங்கற்ற போக்கு காலங்காலமாக பின்பற்றப்பட் டு வருகிறது. அந்த ஒழுங்கற்றப்போக்கை சட்டங்களால் மட்டுமே அடக்கி ஆளமுடியும் என்ற நம்பிக்கை வழிகாட்டப்பட்டுள்ளது. அதனால் குற்றவியல் சட்டங்கள் மூலம் மிரட்டப்பட்டு, சிறைத்தண்டனை அதற்கு தீர்வு என்று திணிக்கப்பட்டுள்ளது.

முதலில் கடவுளை நம்புகிற மனிதன் ஏன் பாவத்தைச்செய்கிறான்? மதத்தால் நல்வழி காட்டப்பட்டுள்ள மனிதன் எதற்கு கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபடுகின்றான்? எனவே நல்வழிகள், நல்வழிகாட்டிகள் என்பது ஒருவனின் சுயசிந்தனையில மட்டுமல்ல. சூழ்நிலையிலும் பின்னப்பட்டுள்ளது என்பதுதான் நிஜம். இதேபோன்றுதான் எல்லா தவறுகளிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிற மனிதன் அதற்குரிய காரணங்களை தேடுகிறான். அல்லது தேடி கண்டுபிடிக்கிற காரணத்தில் மாட்டிக்கொள்கிறான். இன்று உலகம் மோசமான மனித கொலைகளுக்குத்தயாராகி விட்டது. இதற்கு ஒன்று கடவுள்; மற்றது மதம் இந்த இரண்டுக்குமுள்ள பின்னணிகளும் மனிதனை நல்வழி படுத்துவதற்குரியது என்ற ஒப்புதல் வாக்கு மூலம் வெற்றிப்பெறுவதில்லை.

அதனால் மனிதன் உண்மையானவன் அல்ல. அவன் பிறப்பு பல கேள்விகளுக்குக் காரணமாகி விட்டது. அவன் வளர்பபு பல்வேறு கேலிகளுக்கு உதாரணமாகி விட்டது. எங்கே உண்மை? எதிலெல்லாம் பொய்? சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் போதே உண்மையற்ற நிலை. அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளிடம் பொய் கலந்த வாழ்க்கை. மதம், கடவுள் தத்துவங்களாலும் மக்களை நல்வழிபடுத்தமுடியாத பின்னடைவு!

இதேநிலையில் உலக அமைப்பு தொடருமேயானால் பொய் மட்டுமே கடவுளின் தத்துவமாகவும் மதம் மட்டுமே அதனுடைய ஆதிக்க சக்தியாகவும் இருக்க முடியும்.மனித தலைகளை வெட்டவும், மனித உடல்களைச் சிதைக்கவும் மத தீவிரவாதம் மனித தீவிரவாதமாக மாறிவிடுவதே பிறப்பின் கட்டளை என்றாகி விடுமோ? எனவே கருவின் குற்றம் எங்கிருந்து புறப்படுகிறது. அது எப்படியெல்லாம் வார்த்து வளர்க்கப்படுகிறது. பகுத்தறிவு உலகம் அதுபற்றி சிந்திக்குமா? மனிதனை மனிதன் அழித்து வாழும் வாழ்வைத் துறக்குமா?

http://vallinam.com.my/version2/?p=2005

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏    நன்றி மருதங்கேணி, ஆமா நல்லதொரு இனிமையான குரல், அமைதியகா மனதை ஈர்க்கும் ஒரு சக்தி இவரின் குரலில்
  • கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு.  அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம். (துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)  
  • அல் அக்­ஸா மீதா­ன இஸ்ரேலின் மிலே­ச்­சத்­த­ன­மா­ன தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­­டிக்­கி­றோம் பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு   http://www.vidivelli.lk/wp-content/uploads/2021/05/SLCSP.pngஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­­லில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் மற்றும் பொலிஸாரினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலுக்கு பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்­ளது. பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் பிமல் ரத்­நா­யக்­க, பொதுச் செய­லாளர் பெளசர் பாரூக் ஆகியோர் இணைந்து வெளி­யிட்­டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்­பி­­டப்­பட்டிருப்பதாவது: ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லில் ரமழானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படையினரால் கடந்த வாரம் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை வன்­­மை­யாகக் கண்­டிக்­கி­­றோம். அது மாத்திரமன்றி கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளையும் கண்டிக்கின்றோம். சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் பலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குகையில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப்பிரயோம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பள்­ளி­வா­ச­லுக்குள் இறப்பர் குண்டுகளும் கைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் காரணமாக நோன்பு மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்களில் சுமார் 200 பேர்வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மிகமோசமான மனிதத்தன்மையற்ற அத்துமீறிய தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். பல தசாப்தகால சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களின் அண்மைக்கால பேசுபொருளாக மாறியிருக்கும் ஷெய்க் ஜர்ராவை அண்மித்த பகுதிகளிலும் இஸ்ரேலியப் படையினரின் இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவையாகும். எனவே இஸ்ரேலியப் படைகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாட்டைக் கண்டித்துவரும் உலக நாடுகளுடன் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா உள்­ளிட்ட புனித தலங்­களின் காவ­லர்­கள் என்ற அடிப்படையில் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ஜோர்தானைக் கோருகின்றோம். மேலும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பாளர்கள் சர்­வ­தேச சட்­டங்­களை மதித்து நடக்க வேண்­டும் என்றும் ஐக்­கிய நாடுகள் சபை பலஸ்­தீன மக்­கள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­­னை­களை முடி­­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான தனது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   http://www.vidivelli.lk/article/10697
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.