Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

இன்று புனித வெள்ளி - இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் !


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இன்று புனித வெள்ளி - இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் !

[Friday 2015-04-03 12:00]
good-friday-040415-400-seithy-news.jpg

புனித வெள்ளி, கிறிஸ்துவர்கள் கொண்டாடும் விழாக்களில் இதும் ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா இது. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இயேசு கிறிஸ்து கி.பி.33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறந்தார் என்பது சான்றோர்களின் கருத்து.

  

முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. வரலாற்றின் படி இயேசு எருசேலம் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இயேசுவை கயபா என்ற தலைமைக் குரு விசாரித்தார். அவர் மீது பல முரண்பாடான குற்றங்கள் வைக்கப்பட்டது. இயேசுவுடன் இருந்த அவரது சீடர்களும் அவர் கைது செய்யப்பட்டதும் அவரை விட்டுவிட்டு ஓடி விட்டனர். பின்னர் இயேசு, ரோமின் மன்னர் பிலோத்துவிடம் அழைத்து செல்லப்பட்டார். அவர் இயேசுவை விசாரித்தது விட்டு அவர் குற்றமற்றவர் என்று கூறினார். ஆனால் மக்கள் அவர் கூறியதை ஏற்கும் மனநிலையில் இல்லை. சரி, இயேசுவின் பகுதியான கலிலேயாவின் மன்னர் ஏரோதுவிடம் அவரை அனுப்ப முடிவெடுத்தார்.

ஆனால், அவர் எருசேலம் சென்று விட்டதால் இயேசுவை சவுக்கால் அடித்து தண்டனை நிறைவேற்றி விடுதலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார் பிலோத்து. எனினும் மக்கள் விடுவதாயில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையயுமாறு கூறினார்கள். மக்களுக்கு எதிராக முடிவெடுத்தால் கலவரம் வெடிக்கும் என்று பயந்த பிலோத்து மக்கள் கூறியபடியே செய்ய முன்வந்தார்.

எனினும், இதில் என் பங்கு ஏதும் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர், இயேசு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமந்துவாரே கல்வாரிக்கு செல்ல பணிக்கப்பட்டார். இயேசுவை தலைவனாக ஏற்றுக் கொண்ட மக்கள் பலரும் கதறி அழுதனர். அந்நிலையிலும் இயேசு, ‘எனக்காக யாரும் அழ வேண்டாம். உங்களுக்காகவும், உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்’ என்று கூறினார். கல்வாரியின் ஒரு குன்றின் மேல் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.

மேலும் அன்றைய தினத்தில் மதிய நேரமே வானம் இருண்டு காணப்பட்டதாகவும் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இயேசு சிலுவையில் அறையப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிர் நீத்தார் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதும் சான்றோர் கூற்று.

இந்த உயிர்நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேயாகவும் கொண்டாடி வருகின்றனர் கிறிஸ்துவர்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=129536&category=TamilNews&language=tamil

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண்ணுயிர்க்காகத் தன்னுயிர் ஈந்த மனுமகன் இயேசுகிறிஸ்து! : இன்று புனித வெள்ளி

 

good-friday.jpg

 

 

 

இன்று அனைத்துலக கிறிஸ்தவர்கள் புனித பெரிய வெள்ளியைப் பக்திச் சிறப்போடு நினைவுகூருகிறார்கள்.

 
இன்றைய நாள் புனிதத்தின் ஊற்று. கடவுள் நமக்காக நாம் மீட்படைய தம்மையே தியாகப் பலியாக நம்மேல் கொண்டிருக்கும் அன்பை நிரூபித்த நாள்.
 
அன்று இஸ்ராயேல் மக்கள் தங்களின் பாவங்களைக் கழுவிக் கொள்வதற்காக மாசுமறுவற்ற செம்மறி வெள்ளாடு ஒன்றை பாவக்கழுவாயாகப் பலியிட்டார்கள்.   
இன்று இறைவன் மனுக்குலத்தின் மீது கொண்ட அன்புக்கும் பரிவுக்கும் இரக்கத்திற்கும் உச்சக்கட்டமாகத் தம்மையே பரிகாரப் பலியாக்கி நம்மீட்பின் காரணராகிறார்.   
 
 "அவரைக் கண்டபலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்து மனித சாயலே இல்லாது போயிற்று. அவர் இகழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டு, வேதனையுற்ற மனிதராய்  இருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் இருந்தார். அவர் தம் பாடுகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார். நம் குற்றங்களுக்காக  காயப்பட்டார்.  நமக்கு நிறைவாழ்வளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர் தம் வாயைத்திருவாதிருந்தார்."
 
 
இந்த அநீத உலகமே உய்ய உத்தமர் இயேசு உயிர்கொடுத்த நாள். பாவத் தளையில் சிக்குண்டு சீரழிந்த இம் மனுக்குலத்தை தெய்வத்திருமகன் மீட்டு இரட்சித்த இரட்சணியத்தின் நாள். ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்விலும் மறக்க முடியாத நாள். 
 
எனவே தான் இதைப் பெரிய வெள்ளி என நாம் அழைக்கின்றோம்.  இயேசுவின் மரணத்தால் நாமனைவரும் மீட்கப்பட்டோம். 
பெரிய வெள்ளிக்கிழமையாகிய இன்று நாம் ஆலயங்களில் திருச்சிலுவையை தியானித்து ஆராதித்து நம்மையே அந்த இயேசுவுக்கு ஒப்பு கொடுக்கிறோம்.
 
இயேசுவின் சிலுவையை நாம் தியானித்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் சிலுவையில் இன்று நமக்கு மீட்பு இல்லை. சிலுவை அவமானத்தின் சின்னம். ஏனென்றால், அது கொலைக்காரன், கொள்ளைக்காரன், கலகக்காரனுக்கு கொடுக்கப்படும் தண்டனை. ஆனால் நம் இயேசு இந்த அவமான சின்னத்தை வெற்றியின் சின்னமாக மாற்றினார். 
 
எனவேதான் நாம் இயேசுவின் மரணத்தை நாம் நினைவுகூருகின்றோம். இரண்டு மரங்கள் நெடுவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் இணைகின்ற போதுதான் சிலுவை உருவாகின்றது. எப்படி சிலுவையின்றி கிறிஸ்தவ வாழ்வு இல்லையோ, அதே போல் கடவுள் அன்பும் பிறர் அன்பும் இன்றி ஒருவன் இயேசுவின் தொண்டனாக இருக்க முடியாது. இரண்டும் இணைகின்ற போதுதான் அங்கு புதியதோர் வாழ்வு மலர்கின்றது. 
 
 
இயேசுவின் சிலுவை நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் பல. இயேசுவின் சிலுவை நமக்கு மீட்பையும் மன்னிப்பையும் தருகின்றது. இயேசுவின் சிலுவை அருகில் இரு  கள்வர்கள் அறையப்பட்டார்கள். இந்த இருவருமே கள்வர்கள். முற்றிலும் தவறாக வாழ்ந்தவர்கள்.  
 
ஆனால் ஒருவன் இயேசுவைப் பார்த்து மனம் வருந்தினார். மன்னிப்பு மீட்பும் தருவேன் என்று கூறவில்லை. மாறாக  மனம் வருந்தி தன் குற்றத்தை ஏற்றுக்கொண்ட அவனுக்கு, "இன்றே நீ இப்போதே வான் வீட்டில் இருப்பாய்..." என்று திருவாய் மலர்ந்தருளினார். 
 
இயேசுவை அண்டிச் செல்லும் எவரையும் அவர் வெறுத்து ஒதுக்குவதில்லை. மாறாக அன்புடன் தழுவி,  புதிய வாழ்வை தருபவர் தான் நம் ஆண்டவராகிய இயேசு. இந்த இயேசுவை தான் நாம் சிலுவையில் ஆராதித்து நம் வாழ்வை அவருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோம். 
 
இயேசு சிலுவை மரணத்துக்குக் கையளிக்கப்பட்ட போது அவர் புரிந்த குற்றம் தான் என்ன? அவர் ஊழல்கள் புரிந்தாரா? களவு செய்தாரா? கொலைகள் செய்தாரா?  கடத்தல் செய்தாரா? இல்லவே இல்லை. 
 
மாறாக மூன்று ஆண்டுகள், ஊர்கள், நகர்களுக்குக் கால்நடையாய் சுற்றிச் சென்று நற்செய்தி அறிவித்தார்;   பசித்தோருக்கு உணவளித்து, குருடருக்குப் பார்வை கொடுத்து, செவிடருக்கு கேட்கும் திறனளித்து, ஊமைகளைப் பேசவைத்து, முடவர்களை நடக்க வைத்து, நோயுற்றோரை - தொழுநோயாளர்களை குணபடுத்தி, இறந்தோரை உயிர்பித்து, அற்புதங்கள் புரிந்துதான் குற்றமா? அதுவும் மரண தண்டனைக்குரிய குற்றமா? 
 
மனிதருக்காகத் தான் ஓய்வு நாள்; ஓய்வு நாளுக்காக மனிதர் அல்ல. ஓய்வு நாளிலும் கடவுள் நன்மை புரிகின்றார் என கடவுளின் பார்வையில் திருச்சட்டத்தின் உண்மை விளக்கத்தை எடுத்துக்கூறி அதன்படி நன்மை புரிந்தது குற்றமா? 
 
"ஏழைகளுக்கு இறங்குங்கள், ஒதுக்கப்பட்டோருக்கு வாழ்வளியுங்கள்"  என்றார். தம்முடைய போதனைகள் தமது தந்தையின் போதனைகள் தான். தமது செயல்கள் அனைத்தும் தன் தந்தையின் செயல்களே என வாழ்ந்து காட்டினார்.  இதுதான் மரணத்துக்குரிய குற்றமா? 
 
இவரை எதிர்த்தவர்கள் இவரைக் காட்டிக் கொடுக்கவில்லை.  மாறாக,  அவருடைய சீடர்களின் ஒருவரே முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். 
 
மற்றொரு சீடரோ, "அவரை அறியேன்... அறியேன்..." என்று மறுதளிக்க ஏனையோர் அவரை தன்னந் தனியே விட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்.  இயேசுவோ கைதியாக விலங்கிடப்பட்டார்.
 
கசையால் அடிக்கப்பட்டு, கள்வனைப் போல் இழுத்துச் செல்லப்பட்டு,  குற்றவாளை போல் சிலுவையில் அறையப்பட்டார்.  மும்மணி நேரம் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே தொங்கி உயிர்துறந்தார். 
 
இயேசு மரணித்த  நாளான பெரிய வெள்ளிக்கிழமையன்று இயேசுவின் திருச்சிலுவையை முத்தி செய்வது நம் வழக்கம். இயேசு இவ்வுலகில் இருந்த போது,  அவர் பெற்ற முத்தங்கள் மூன்று. ஒன்று தம் அன்புத் தாயிடமிருந்து பெற்றது; இரண்டு பாவியான மரிய மதலேனாவிடமிருந்து பெற்ற மன்னிப்பின் முத்தம்; மூன்று தம்மோடு வாழ்ந்த யூதா என்ற துரோகியின் முத்தம்.
 
நாம் சிலுவையை முத்தமிடும் போது, அது எந்த வகையைச் சார்ந்தது? அன்பு முத்தமா? மன்னிப்பின் முத்தமா? துரோக முத்தமா?    
சிலுவை துன்பத்தின் அடையாளம் என்று பார்க்காமல் பகிர்ந்தலின், மன்னிப்பின் அடையாளம் என்பதை உணரவேண்டும். 
 
சிலுவை ஆடம்பரத்திற்காக அணிவதல்ல என்பதை உணர்வோம்.   மரண வேளையில், வேதனையில் தொங்கிய இயேசு மெல்லிய வார்த்தைகளில், "தந்தையே இவர்கள் அறியாது செய்யும் குற்றங்களை மன்னியும்..." என்பது கிறிஸ்தவத்தின் அத்திவாரமாகும். 
 
நீதிமானின் மாரணத்தில்  நீதி பிறக்கிறது. போராளியின் மரணத்தில் தீர்வு பிறக்கிறது. இலட்சியவாதியின் இறப்பில்  இலட்சியம் மலர்கிறது. நமது இறப்பில்  விளையப் போவது என்ன? 
சிலுவை படைப்பின் பாதுகாவலன்,திருச்சபையின் அணிகலன், நம்பிக்கையின் பலம். 
 
மரணம் பிறந்தது ஒரு மரத்தாலே. வாழ்வு பிறந்ததும்  ஒரு மரத்தாலே. 
 
குற்றவாளிகளைத் தண்டிக்கும்  யூதர்களுக்கு சிலுவை அவமானச் சின்னம். இயேசு உயிர்த்ததால் கிறிஸ்தவர்களுக்கு அது வெற்றியின் சின்னம்.  
 
எனவே புனித வெள்ளியை தூய்மை இதயத்துடன் நினைவுகூருவோம். இயேசுவின் பாதம் பணிந்து, நம் பாவங்களை மானதார நினைந்து, மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம்.
இன்றைய எமது சிந்தனை இதுவாகவே இருக்கட்டும்.
 
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • 2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள். 2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009  ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து தெரியவந்தது ஆனாலும் இன்னும் எண்ணி முடிக்காமல் நிறைய உடல்கள் அங்காங்கு கிடக்கலாம் என்றும் அச்சம் நிலவியது அதேவேளை படுகாயமடைந்து 1122 பேரும் இறந்த உடல்களாக  378 பேரும்  வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டதாகவும் இறந்தவர்களில் 106 பேரும் காயமடைந்தவர்களில் 251 பேரும் குழந்தைகள் என வைத்தியசாலை ஊழியர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் காயமடைந்தும் இறந்தும் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவும், மதியவர்களாகவும் இரந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தவண்ணம் இருப்பதுடன் உண்மையான எண்ணிக்கையை கூட கணக்கிடமுடியாத அளவிற்கு  குறுகிய நாட்களுள்  பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெரும் மனித படுகொலையாகவும் அது மாறிவருவதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.  இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மாற்றப்படுவதற்கு முன்னர் இந்தப்“ போரை முடிக்க  வேண்டும் என இந்தியா விரும்பியதாலேயே வகை தொகையின்றி  தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்              https://www.thaarakam.com/news/458f6bc5-da0e-4c50-a8e3-09da7b429def
  • 11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்  12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். https://www.thaarakam.com/news/213483a9-7ecb-4072-8fb2-db4dab35fd91  
  • ஆயிரம் முட்டையிட்ட ஆமைகள். May 10, 2021   ‘ யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் முத்திரைச் சந்தைக்குக் கிட்ட அம்பலவாணர் குமாரவேலு என்பவர் காலமாகிவிட்டார். அவரை நாட்டுப்பற்றாளராக அறிவிக்கவும் ” இரு வாக்கியங்களில் அரசியல்துறை நடுவர் பணியகத்துக்கு செய்தியை அனுப்பினர். ஒரு போராளி இவரது சாவு தொடர்பாக பொட்டம்மானுக்கு அறிவித்தார். சமாதானம் நிலவிய காலப்பகுதி ஆதலால் அரசியற்துறை நடுவப்பணியகம் நல்லூர் வட்டப் பொறுப்பாளரிடம் காலமானவரின் விபரங்கள் — போராட்டப் பங்களிப்பு பற்றிய அறிக்கையினை அனுப்புமாறு கோரியிருந்தது. ஏற்கனவே தனது பகுதியில் நிகழும் மரணச் சடங்கு என்ற வகையில் அங்கு போயிருந்தாலும் இம்முறை விபரங்களைப் பெறச் சென்றார் வட்டப் பொறுப்பாளர். திருமதி குமாரவேலுவைத் தனியாக அழைத்த அவர் தன்னை அறிமுகப்படுத்திய பின் திரு குமாரவேலுவின் போராட்டம் பங்களிப்புப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைக் கூறி உதவுங்கள் என வேண்டிக் கொண்டார். அதற்கு அவர் ‘ எனது கணவருக்குப் போராளிகளுடன் தொடர்பு இருந்தது என்பதே இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. உண்மையில் இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ” என்று பதிலளித்தார். நல்லூர் வட்டப் பொறுப்பாளர் குழம்பியே விட்டார். பெண்டாட்டிக்குத் தெரியாமல் கணவர் அப்படி என்ன பங்களிப்புச் செய்திருக்க முடியும். என்று சிந்தித்த அவர் நடுவப் பணியகத்துக்கு விடயத்தைத் தெரிவித்தார். அவர்கள் தலைவர் பிரபாகரனோடு தொடர்பு கொண்டு நாட்டுப்பற்றாளர் என்று அறிவிக்கக் கோரிய போராளியின் பெயரைக் குறிப்பிட்டு நடந்த விடயங்களையும் தெரிவித்தனர். அதற்குத் தலைவர் அளித்த பதில் ‘ அவர் சொன்ன மாதிரியே அறிவியுங்கள். விபரங்களைப் பிறகு பெற்றுக் கொள்ளலாம். அதனைப் பெற அவரை உங்களுடைய இடத்துக்கு அழைக்க வேண்டாம். முன் கூட்டியே அவருக்கு அறிவித்து அவருடைய இடத்தில் போய் விபரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இது மட்டுமல்ல அவர் இனிமேலும் யாரையாவது இது போன்று அறிவிக்க வேண்டுமெனக் கோரினாலும் இதே நடைமுறையினையே பின்பற்றுங்கள் ” என்பதாகும். ‘ காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது ” என்ற வள்ளுவர் வாக்கை அவர் அறிந்திருந்ததாலேயே இவ்வாறு குறிப்பிட்டார். போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் உதவியவர்களை கட்டாயம் நன்;றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள். எனவே இந்த விடயத்தில் காலதாமதம் ஆகிவிடக் கூடாது என்பதே அவரது நிலைப்பாடு. 1982–1983 காலப் பகுதியில் திரு குமாரவேலு என்னென்ன வகையில் பங்களிப்புச் செய்திருந்தார் என்பது குறித்து சங்கர் என்ற பெயரில் போராளியொருவர் ‘ வேரென வாழ்ந்தவர் ” என்ற தலைப்பில் நமது ஈழநாடு பத்திரிகையில் நன்றியோடு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் பொட்டம்மான்– ஞானம் முதலான போராளிகள் போராட்டத்தில் முழு நேரமாக இணைந்த புதிதில் விசுவமடுவில் இருந்த தனது காணியில் அவர்களைப் பாதுகாத்த விடயமும் அடங்கும். இவ்வளவும் செய்தும் யாழ்ப்பாணத்தில் இருந்த தனது துணைவியாரோடு அவர் இது பற்றி எதுவுமே தெரிவித்திருக்கவில்லை என்பது அவரது சாவின் பின்பே புரியவந்தது. — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — மட்டுநகரில் ஒரு பெண்மணி இருந்தார். கல்லாறைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அவர். ஆண்டவனின் மறு பெயரால் அழைக்கப்பட்ட ஒரு போராளியின் சகோதரி. இவரது கணவர் கடமையின் நிமிர்த்தம் பிரபல பாடசாலை ஒன்றில் தங்கியிருந்தார்.வாரத்தில் ஓரிரு முறை பகலில் வந்து ஒரு நேர உணவு உண்டு விட்டு பிள்ளைகளுடன் அளவளாவி விட்டுச் செல்வார். குடும்பப் பொறுப்பு முழுவதும் இப் பெண்மணியே சுமந்து வந்தார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த தனது தம்பி படிப்பை இடைநிறுத்தி இயக்கத்தில் இணைந்து கொண்டமை குறித்து சிறிது வருத்தம். இருந்தாலும் அவர் மீதான பாசம் குறையவில்லை. அதனால் தம்பியோடு வரும் போராளிகளை உபசரித்து வந்தார். நாளடைவில் அந்த வீட்டின் இன்னொரு பக்கமாக இருந்த கொட்டகை ஒன்றுக்குள் போராளிகள் தங்கிவந்தனர். தமது கடமையின் நிமித்தம் வெளியில் சென்று வரும் அவர்கள் எத்தனை மணிக்குத் திரும்பினாலும் அங்கே சாப்பாடு தயாராக இருக்கும். அவர்கள் குளிப்பது ஆடை தோய்ப்பது எல்லாம் அந்த வீட்டில் தான். ஒரு நாள் பகல் அப் பெண்மணியின் கணவர் வந்தார். கொடியில் பல சாறங்கள் காய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘ இதென்ன கன சாறங்கள் காயுது. இவ்வளவு சாறம் நம்ம வீட்டில் இல்லையே. ” என்று கேட்டார். உடனே அந்தப் பெண்மணி சேவையராக இருக்கும் தமது உறவினரின் பெயரைக் குறிப்பிட்டு அவன்ட லேபர் மார் வந்து தங்கினவங்க அவங்கள் தான் தோய்ச்சுக் காயவைச்சிட்டுப் போயிட்டாங்கள் ” என்றால். அந்தக் கொட்டகைக்குள் ஓவசியரின் சாமான்களும் இருந்தபடியால் இவரும் அதை முழுமையாக நம்பிவிட்டுப் போய்விட்டார்.( அந்தக் காலத்தில் போராளிகள் பெரும்பாலும் சாறத்துடனேயே திரிந்தார்கள்.) இக் காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இனர் தன்னாமுனைப் பகுதியில் ஒரு சிகரெட் வானைக் கொள்ளையடித்திருந்தனர். இது சம்பந்தமாக ஆராய்ந்த பொலிஸார் அச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர். சிங்களவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது ஜே.வி.பி என்ற ஒரேயொரு இயக்கம் மட்டுமே இருந்தது. தமிழரிலோ உருவாகியது– காணாமற்போனது– கரைந்தது– கலந்தது– உடைந்தது என 36 இயக்கங்கள் இருந்தன. ஆனால் எதைப் பிடித்தாலும் புலி எங்கே தான் என்று தான் பொலிஸார் கேட்பார்கள். அந்த வகையில் ஆரம்பித்த விசாரணை அந்த இளைஞரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காசிஆனந்தனின் சகோதரி சிவமலரைக் காட்டிக் கொடுத்தான். தொடர்ந்து திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்தும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குச் சாரதியாக பங்காற்ற வந்த தனது சகோதரனை இனங்காட்டினார். அடுத்து இந்த வீட்டில் தான் புலிகள் தங்குவதுண்டு என இப் பெண்மணியின் வீட்டைக் காட்டிவிட்டார். அங்கே அச் சமயம் போராளிகள் எவரும் இருந்திருக்கவில்லை. அங்கே சென்ற பொலிஸார் ஏமாற்றமடைந்தனர். அப்போது அந்த இளைஞன் படுவான்கரையில் இன்னொரு வீடு இருக்கிறது என்று சொன்னார். உடனே வந்த பொலிஸாரில் இருவரை அங்கேயே இறக்கிவிட்டு ஏனையோர் படுவான்கரைக்குச் சென்றனர். வீட்டில் இருந்த பெண்மணியையும் பிள்ளைகளையும் அறையொன்றில் தள்ளி இருக்க வைத்துவிட்டு தாமும் உள்ளேயே இருந்தனர்.சிறிது நேரத்தில் மட்டக்களப்பின் மூத்த போராளி அங்கே சென்றார். என்ன ஒருவரையும் காணவில்லை என எண்ணியவாறு அவர் உள்ளே செல்லவும் உள்ளே இருந்த பொலிஸார் அவரை இழுத்து அறைக்குள் தள்ளினர். உடனே அப் பெண்மணி ‘ என்ன வீடியோ கொப்பி வாங்கவா வந்தீங்க ” என்றவாறு அவரின் அருகே வந்திருந்து அவரது இடுப்புப் பகுதியை பொலிஸாருக்குத் தெரியாமல் தடவிப் பார்த்தார். ஆயுதம் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்ததும் இப்போதைக்கு அசம்பாவிதம் எதுவும் நடக்காது என உணர்ந்து கொண்டால். சுகமில்லாதவர் போல் நடித்த அப் போராளி சில தடவைகள் இருமி வெளியே சென்று துப்பினார். அடுத்த தடவை வாந்தி வருவது போல் நடித்து வெளியே வந்ததும் பாய்ந்தோடிவிட்டார். சிறிது நேரத்தில் அப் பெண்மணியின் கணவர் வந்தார். அவரையும் உள்ளே இருத்தி விட்டனர் பொலிஸார். அவருக்கோ எதுவும் புரியவில்லை. தமது வீட்டுக்குள் ஏன் பொலிஸார் வந்தனர் என்று பேந்தப் பேந்த முழித்தார். அடுத்து அந்தப் பெண்மணியின் போராளியான சகோதரன் துவிச்சக்கரவண்டியில் கேற்றைத் திறந்த படி வந்தார். அங்கே மூத்த போராளி கொண்டு வந்த துவிச்சக்கரவண்டி காணப்பட்டது. ஆனால் வெளியில் எவரையும் காணவில்லை. உள்ளே போகலாமா விடலாமா என்று சந்தேகம்.உள்ளே இருந்த பொலிஸார் அவரை உள்ளே கூப்பிடுமாறு வீட்டுக்காரரிடம் கூறினார். அதனால் அந்தப் பெண்மணியின் கணவர் ‘ உள்ளே வரட்டாம் ” என்று கூறினார். என்ன உள்ள வரட்டாம் என்று கூறுகிறார் அத்தான். உள்ளே வா என்றே கூப்பிட்டிருக்கலாமே இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று யூகித்த அவர் துவிச்சக்கரவண்டியைப் போட்டுவிட்டு பாய்ந்தோடிவிட்டார். திரும்பி வந்த பொலிஸ் வாகனம் அனைவரையும் ஏற்றிச் சென்றது.விசாரணையின் போது விக்டர் பெரேரா என்ற எஸ்.பி.யும் பியசேனா என்ற பொலிஸ் உத்தியோகத்தரும் கடுமையாக நடந்து கொண்டனர். அப்போது சிறுமியாக இருந்த மகளின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்தபடி ‘ உண்மையைச் சொல் ” என்று அப் பெண்மணியை மிரட்டினர். அவரோ எங்களுக்கு எதிலும் சம்பந்தமில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார். சிறுமியின் தலையில் துப்பாக்கியால் தாக்கினர். மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. ஆனாலும் அப் பெண்மணி அசரவில்லை. இதற்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இளைஞர் கொஞ்சம் கூடுதலாகவே சொல்கிறார் என்றும் இப் பெண்மணியின் கணவர் எதுவுமே தெரியாத அப்பாவி எனவும் புரிந்து கொண்டனர். முடிவில் ஆண் பிள்ளைகளை மட்டும் வைத்துக் கொண்டு மூவரையும் விடுவித்தனர். தம்மால் இந்தக் குடும்பத்துக்கு இந்த நிலை ஏற்பட்டதே என போராளிகளுக்கு துக்கம். ஆனாலும் மாணவர்களான தமது பிள்ளைகளை எப்படியும் விடுவித்து விடுவர் என்றும் போராளிகள் தப்பியதே தனக்குத் திருப்தி என்றும் இப் பெண்மணி ஒருவர் மூலம் செய்தி அனுப்பினார். — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — வடக்கே திரு குமாரவேலுவும் கிழக்கே இப் பெண்மணியும் மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள். விவிலியத்தில் எபேச்சியார் 5 அதிகாரம் 5 வசனங்கள் 21 முதல் 31 வரை வடக்கேயிருந்த போதகரும் கிழக்கே இருந்த போதகரும் திருமணங்களை நடத்தி வைத்த போது கூறியிருப்பார்கள். ‘ புருசர்களே தங்கள் மனைவிகளை தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து அவர்களில் அன்பு கூரவேண்டும். தன் மனைவியில் அன்பு கூருபவன் தன்னில் அன்பு கூருகிறான். மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியுடன் இசைந்து ஒரே மாமிசமாக இருப்பார்கள் ” என்று திரு குமாரவேலுவின் திருமணத்தில் வாசிக்கப்பட்டிருக்கும். அது போலவே ‘ தெய்வ பயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் மனைவிகளே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறது போல உங்கள் சொந்தப் புருசருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல புருசனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறார். ” என்று இப் பெண்மணியின் திருமணத்தின் போது வாசித்திருப்பார்கள். எதிலும் ஒழிவு மறைவில்லாமல் ஒருவருக்கொருவர் உண்மையாயிருக்க வேண்டும் என போதகர்கள் நிச்சயம் போதித்திருப்பார்கள். தமது போராட்டப் பங்களிப்பு குறித்த விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களில் இருவரும் தமது வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாகவே இருந்திருக்கின்றனர். ‘ பிறப்பால் வந்த உறவுகளை விட பிணைப்பால் வந்த உறவுகளே வலிமையானவை. ” என்ற கருத்துப்பட கண்ணதாசனும் எழுதியிருக்கிறார். ஆயினும் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தான் இருவருக்குமிடையில் இருந்திருக்கிறது. பல குழந்தைகளைப் பெற்றுத்தந்து தன் குடும்ப பாரத்தைச் சுமந்த மனைவியிடம் கூட இரகசியத்தைப் பேணியிருக்கிறார் குமாரவேலு. பல குழந்தைகளுக்குத் தன்னை அன்னையாக்கி தன்னை முழுமையாக நம்பி ‘ என்ன கன சாறங்கள் காயுது ” என்று கேட்ட தன் அப்பாவிக் கணவருக்குப் பொய் சொல்ல வேண்டி வந்ததே என்று அப் பெண்மணி நினைத்திருப்பார். தான் பொய் சொல்லி வாழ்ந்தாலும் தன் கணவருக்கும் இந்தப் போராட்டத்துக்கும் பொய்யாக வாழவில்லை என்ற மனநிறைவுடன் அவர் அண்மையில் கண்ணை மூடியுள்ளார். வடக்கே என்றாலும் கிழக்கே என்றாலும் எமது மக்கள் ஒரே உணர்வுடன் தான் இருந்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். ‘ ஆயிரம் முட்டையிட்ட ஆமை அசையாமல் போகும். ஒரு முட்டையிட்ட கோழி கொக்கரக்கோ என்று கூவுமாம். ” என்று கூறுவார்கள். ‘ நாங்கள் தான் கிழக்கின் தேசியத்தை முதுகில் சுமந்தவர்கள். உராய்ந்து உராய்ந்து காயமேற்படுத்திய வடுவைப் பாருங்கள் ” என்று தமது முதுகைக் காட்டும் பல பிரமுகர்களுக்கு இவையெல்லாம் தெரியாத சங்கதிகள். ஏனெனில் வண்ணை ஆனந்தன் கூறியது போல ‘ பழம் பழுத்தால் வெளவால் வரும் ” என்ற மாதிரி நிலையில் வந்தவர்கள். அவர்களது நோக்கம் நிறைவேறிவிட்டது. இதில் போராட்டத்தையும் அதை வழி நடத்தியவர்களையும் கிண்டல் செய்து கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளும் அப்படித்தான். ஜே.வி.பி மற்றும் அதாவுல்லாவின் நிலைப்பாட்டில் உள்ளார்கள். வடக்கு வேறு கிழக்கு வேறு வடக்கில் எடுக்கும் தீர்மானங்கள் போல கிழக்கில் நாம் எடுக்கத் தேவையில்லை என கல்விமான்களும் சட்டத்தரணிகளும் நினைக்கிறார்கள். வடக்கே வந்து போராடிய போராளிகளின் குடும்பங்களும் கிழக்கே சென்று போராடிய போராளிகளின் குடும்பங்களும் கண்ணீர் வடிக்கின்றனர். குறைந்த பட்சம் எமது பிள்ளைகளைப் பயங்கரவாதிகள் என்றாவது சொல்லாமல் இருங்கள் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஒலிவாங்கியைத் துடைத்துவிட்டு என்ன பாட்டைப் பாடி அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்பது என்று சிந்தித்த படி புறப்பட்டு விட்டார்கள்.பாவம் காசி ஆனந்தன் அவரது வரிகள் இவர்களது வாயில் புகுந்து தம் கற்பை இழக்கின்றன.     https://www.meenagam.com/ஆயிரம்-முட்டையிட்ட-ஆமைகள/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.