Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு! கையும் களவுமாக பிடிபட்ட திருமலை யுவதி! யாழில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:41.49 AM GMT ]
chain-robber-0.jpg
யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.

இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திரு ப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிரு ந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

chain-robber-02.JPG

chain-robber-03.JPG

chain-robber-04.JPG

chain-robber-01.JPG

 
லங்காசிறி
Link to comment
Share on other sites

 • Replies 80
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வளர்ச்சியடைந்த ஜனநாயக விழுமியங்களுக்கும் மனிதநேயத்துக்கும் ஒரளவிலேனும் மதிப்பளிக்கும் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னமும் சின்னப்புத்தி மாறவில்லை.

 

காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர் தற்போதைய நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரே தவிர குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவரல்ல. இப்படியிருக்கையில் ஒரு செய்தியை அடிப்படையாகவைத்து படங்களை வெளியிடுவது எந்தவிதத்திலும் பத்திரிகைத் தர்மமில்லை.

 

இது வக்கிரங்கள் நிறைந்த இணையவுலகின் இன்னுமொரு அசிங்கமான முகத்தை லங்கசிறி இணையத்தளம் காட்டியிருக்கு.

 

படம் வெளியிட்டது, முற்றிலும் வன்மையாகக் கண்டிக்கக்கூடிய விடையம்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் கண்டிக்கத் தக்கவிடயம். இந்தப் பெண்ணின் படத்தைப் பிரசுரித்தது வருந்தத் தக்கது. கேவலமான பத்திரிகைக் கலாசாரம். கண்களை மறைத்துவிட்டாவது போட்டிருக்கலாம்.

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!
Link to comment
Share on other sites

Elugnajiru கூறியது சரி , நிர்வாகம் இந்த படங்களை நீக்கி செய்தியை மட்டும் போடவும்.

Link to comment
Share on other sites

அந்த பெண்ணே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.. மேலும் 4 சங்கிலிகள் கைப்பற்றுள்ளன.

ஆகவே.. குற்றவாளிகள் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படுதலில் எவ்வித தவறுமே இல்லை!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

என் அன்புக்குரிய சகோதரி!
கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 • கருத்துக்கள உறவுகள்

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!

 

Spoiler
இருக்கிற சோலி காணாதெண்டு......இந்தாளுக்கு சில்லெடுத்த சோலி வேறை.. :lol:  :D 
Link to comment
Share on other sites

என் அன்புக்குரிய சகோதரி!

கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

Link to comment
Share on other sites

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மசனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

 

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்.... அதுகும் பெண், திருட்டை செய்யும் போது...
தனக்கு வாழ வேறு வழி தெரியாத கட்டத்தில் தான்.... அதனைச் செய்ய முனைகிறார்.
இவருக்கு என்ன கஷ்டமோ... கணவர் உயிருடன் உள்ளாரா என்று கூட தெரியாது.
அவரை கண்டித்து... அனுப்பியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
களவு செய்து மாட்டிய பெண், முகம் கொஞ்சம் நல்லா, இருந்தால் போதும், இரங்க, அண்ணன்மார் வந்து விடுவார்கள்.  :wub:
 
அங்கே காவல் துறை அதிகாரிகள் விசாரித்தே அழைத்துப் போகின்றனர். இலங்கை போன்ற, கல்வி அறிவு ஆசியாவில் அதிகமான நாடுகளில், இது போன்ற சிறு திருட்டு விசயங்களுக்கு, தகுந்த விசாரணை இன்றி, ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்ய மாட்டார்கள்.
 
மேலும் ஒரு பெண் அப்பாவியாயிருந்தால், உயிரே போனாலும், தான் திருட்டுப் பின்னணி கொண்டவர் அல்ல, என்பதை நின்று நிரூபித்திருப்பார். :icon_idea:
 
எனவே சட்டம் தனது கடமை செய்ய விடுவோம். மேலும் அங்கே அவர் இருப்பது, ஆபத்தானதாக இருந்தால் (மக்கள் தாக்கக் கூடும்), பொலிசாருடன் வெளியேறுவது தான், நல்லது. :rolleyes:
 
இது தொடர்பான தமிழ் தள செய்திகள் தவறானதாக இருக்கலாம்.  :o
 
வாலி,
 
அதெல்லாம், பின்னால வார இன்சுபெட்டர் ஐயா, விவரமா கவனிச்சுக் கொள்ளுவாரு. கவலைப் படாதீங்கோ... :icon_mrgreen:
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடியா கொள்ளையடிக்கிற டக்கிளஸ்.. கருணா.. என்று அரசியல்வாதிகள் இருக்கினம். அவையை ஒருத்தரும் ஒன்றும் கேட்கமாட்டினம்...?!

 

கோயிலுக்கு படம் காட்ட நகை போடுறவையிட்ட அதைப் பறிக்கத்தான் வேணும்.

 

கோயிலுக்கு எதுக்குப் போறது.. சாமி கும்பிட என்றால்.. நகை.. விலையுயர்ந்த சாறி.. பட்டு வேட்டி சால்வை.. அவசியம் இல்லை.

 

சாதாரண.. பருத்தி உடைகள்.. போதும். தூய்மையாக உடலும் உளமும் இருந்தால்.. சாமியை கும்பிடலாம்.

 

இதில் அந்தப் பெண்ணை விட.. குற்றம் எம் சமூகத்தின் நடவடிக்கைகள் சார்ந்தே உள்ளது. கோவிலுக்கு போகும் போது எதுக்கு ஆடம்பரம்..??! நகைகளை வெளிப்படுத்திக் காட்டுவான்..?!

 

மேற்கு நாடுகளில் ஒரு அறிவிப்பு இருக்கும்.. உங்கள் பொதிகளுக்கு நீங்களே பொறுப்பு. அதேபோல்.. தான் இங்கும்.

 

திருடுபவரை விட திருட சந்தர்ப்பம் அளிப்பவர்கள் தான் கூடுதலாக தண்டிக்கப்படனும். அப்படி செய்தால் திருட்டை குறைக்கலாம். :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.

 

போலிஸ் அக்கா மேல, இம்புட்டு பாசமா?
 
புடிச்சா, முட்டிக்கு, முட்டி தட்டி, உங்க காலை ஒரு வழி பண்ணி உள்ளார போட்டுருவா. 
 
அப்புறம், நீங்க உங்க காலைப் பாத்து, பாத்து, ரொம்ப.... ப .. அழகா இருக்கில்ல என்னு சொல்லப் போறீக..  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்க  என்ன பெண்பிள்ளை அழைப்பா நடக்குது....

 

இந்தப்பெண் வெளியில் வந்து

இந்தப்படத்தை எடுத்து செய்தி போட்டவரை சட்டத்தின் முன் நிறுத்தி

அவர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதை

இதேபோல் படம் எடுத்துப்போடணும்

 

 

முதலில் செய்தியாளர்கள்

இணைய முகநூல் வியாபாரிகளுக்கு 

சட்டம் என்றால் என்ன?

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்று படிப்பிக்கணும்.........

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிழையான விடயம். இப்படி ஒரு பெண்ணை அவமதிக்கக்கூடாது. Very poor journalism.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நகை அணிவதும், பட்டு வேட்டி சீலை உடுப்பதும் அவரவர் சுதந்திரம்.

Link to comment
Share on other sites

தவறு செய்தால் திருந்துவதற்கும் தங்கள் வாழ்வை சீரமைப்பதற்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அவர்களின் படங்களைப் போட்டு இப்படியான சந்தர்ப்பங்களை நிராகரிப்பது மிகத் தவறு.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 சட்டத்தின் முன்னால் குறிப்பிட்டவரை நிறுத்தி உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். அடுத்து தண்டனை என்பது ஒருவர் திருந்தி வாழ கொடுக்கப்படும் சந்தர்ப்பம் ஆகும். சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படாதவரை ஒருவர் நிரபராதியாகவே கருதப்படுவார் அப்படி இருக்கும்போது ஊடகங்கள் செய்தியைப்போடலாமே தவிர ஒருவருடைய படத்தைப்போட்டு நீதிமன்றின் தண்டனையைக்காட்டிலும் அதீத தண்டனை கொடுத்திருக்கிறது. இந்தப்பெண் திருட்டை செய்திருந்தாலும் தண்டனை  என்பது அவருடைய எதிர்காலத்தைப்பாதிக்காவண்ணமே வழங்கப்படவேண்டும். ஆனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலத்தையே நாசமாக்கிய ஊடகத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? எவ்வளவு பெரிய நாடுகளிலும் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டவரை ஊடகங்கள் குற்றவாளி எனப் படம் பிடித்துப் போட்டதில்லை. ஊடகங்களுக்கும் அடிப்படை மனிதாபிமானம் இருக்கவேண்டும்....... இப்போது இந்தப்பெண் குற்றவாளி என்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவராகவே எடுக்கப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒரு இளம்பெண் திருட்டில் ஈடுபடுகிறார் என்றால் அதன் பின்புலத்தைஆராயவேண்டும். நீதிமன்றம் ஆராயுமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி படங்கள் பிரசுரம் செய்வது பிழை என்றால், மற்றவர்களின் அனுமதி பெறாமல் சமூக வலைத்தளங்களில் படங்கள், வீடியோவை போடுவது எந்தவகையான பத்திரிகை தர்மத்தில் வருகின்றது? பத்திரிகை தர்மம் என்று சொல்லப்படுவதே ஒரு ஏமாற்று. அப்படி ஒன்று உண்மையில் உலகத்தில் உள்ளதா?

 

இந்த பெண்ணிற்காய் இரக்கப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து பெண்ணின் பின்புலத்தை ஆராய்ந்து அவருக்கு பணஉதவி செய்து சிறு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யலாம்.

 

படங்களை போட்டதால் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? தனது படங்கள் பிரசுரம் செய்யப்பட்டது முதலில் அவருக்கு தெரியுமா?

 

இந்தப்படங்கள் ஒரு முக்கியமான செய்தியை கூறிச்செல்கின்றது.

 

பொருட்களை திருடுபவர்கள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதே அது. வடிவாக உடை அணிந்து பார்ப்பதற்கு அழகாகவும், பவ்வியமாகவும் ஒருவர் காணப்பட்டால் கோயிலில் அவருக்கு அருகில் உரசிக்கொண்டு நின்றாலும் பரவாயில்லை என்று ஒருவரும் நினைக்கக்கூடாது. முன்பின் தெரியாதவர்கள் எவருடனும் பொது இடங்களில் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதை இந்தச்செய்தி சொல்கின்றது.

 

தாலிக்கொடி அணிவது பலருக்கு வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த கலாச்சார அம்சம். அதுவும் கோயிலுக்கு தாலிக்கொடியுடன் செல்வது பலருக்கு முக்கியமான விசயம். சாமி கும்பிடும்போது பலர் தமது தாலியை ஒற்றிக் கும்பிடுவார்கள். தனது தாலியை சாமி காப்பாற்றும் என்று அவரவருக்கு நம்பிக்கை. எனவே, இங்கு சிலர் கோயிலுக்கு தாலிக்கொடி அணிந்துகொண்டு போகக்கூடாது என்று அறிவுரை கூறுவது எவ்வகையில் நியாயம்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்று முள்ளிவாய்காலுக்கு முன்னதான அனந்தபுரம் வீரச்சமர் நாள், இணையத்தள வியாபாரிகள் அவ்வீரமிக்க நாளில் தமிழர் போராட்டத்தின் இருப்பையே எதிரிக்குக் காட்டிக்கொடுத்த அப்பட்டமான துரோகியது விடுதலைப்புலிகளதும் அதன் தலைவரதும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் செய்தியைப் பிரதானப்படுத்தி வெளியிட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

 

நேற்றையதினம் ஐநா விசேடதூதர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியது என்ன எனும் தலைப்பில் அனைவரையும் கவரும்வகையில் செய்தித் தலைப்பிட்டு பின்பு உரிக்க உரிக்க வெங்காயத்தில எதுவுமே இல்லையடா அங்கையும் எதையுமே அறியமுடியவில்லை என எழுதியிருந்தது.

 

தனிநபர் ஒருவர் எதையாவது செய்துவிட்டுப்போகட்டும் இங்கு யாழ்கள உறுப்பினர்கள் கூறுவதுபோல் படங்களை ஒட்டுவது வீடியோக்களை இணப்பது அது தனிநபர்களது தனிப்பட்ட விடையம்.

 

முற்ரிலுமே புலம்பெயர் தமிழர்களது அறியாமையிலேயே கட்டியெழுப்பபட்டு தற்போது அனைத்து நாடுகளிலும் வேரோடிப்போயிருக்கும் ஒரு இணையத்தளம் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

லங்காசிறி இப்படி படம் போட்டு வெளியிட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் இதே செய்திக்கு "புதிய தமிழர்கள்" என்ற இணையம் போட்ட தலைப்பையும் பார்க்கவேண்டும்.. செய்தி ஒன்றுதான்.. தலைப்புத்தான் வேற! வாசித்தபோது பிரக்கேறிவிட்டது!

"யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து மர்ம உறுப்பினுள் வைத்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)"

http://newtamils.com/fullview.php?id=15210

Link to comment
Share on other sites

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

அது எனது கருத்தல்ல . முகநூலில் காணப்பட்ட ஒரு பதிவையே இங்கு பதிவிட்டேன் . 
 
அனால் என்னை பொருத்தவரை குறித்த பெண்ணின் படத்தினை இணைத்திருக்க வேண்டியதில்லை. தேச விடுதலைக்காக சேர்த்த பணத்தினை கொள்ளையடித்தவர்கள் கடனட்டை மோசடி செய்பவர்கள் போன்ற கொள்ளையர்கள் எல்லாம் கம்பீரமாக எந்தவித குற்ற உணர்ச்சியற்று வாழும்போது ஒரு பெண்ணின் பின்புலம் அறியாது அவளின் படத்தினை இணைத்து துகிலுரிவதுதான் தர்மமா ?
 
என்னை பொருத்தவரை அந்த பெண் தண்டனைக்குரியவர், முகநூல் பதிவுகளின் மூலம் அவர் குழந்தைகளின் சங்கிலிகளையும் அருத்திருக்கின்ரார். குழந்தையின் கழுத்து வெட்டுப்பட்டிருந்தால் கதி என்ன ?
Link to comment
Share on other sites

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 அப்பு வைரவன் ஏன் இந்த அபாண்டம்.. நான் குறிப்பிட்டகாலம் tamilamutham.net என்றொரு இணையம் மட்டுமே விளம்பரமோ சினிமா படங்களோ இன்றி, எனது கைக் காசில் மட்டும் நடாத்தினேன்.

ஆக, எவ்வித ஆதாரமும் இன்றி என்மீது குற்றம் சுமத்தும் நீங்கள்.. அடுத்த கள்ளன் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பொம்மை நாயகி சினிமா விமர்சனம் - ஹீரோவாக யோகி பாபு வெற்றி பெற உதவுமா? பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM 3 பிப்ரவரி 2023, 10:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சாதிய தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அப்பா - மகள் பாசம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளி வந்திருக்கும் பொம்மை நாயகி படம் எப்படி இருக்கிறது? இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் தியேட்டரில் வெளியாகியுள்ளது பொம்மை நாயகி திரைப்படம். இந்தப் படத்தில் யோகி பாபு நாயகனாகவும், சுபத்ரா நாயகியாகவும், குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீமதியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார்.   படத்தின் கதை என்ன? பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM கடலூர் அருகேயுள்ள கிராமத்தில் மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார் வேலு(யோகி பாபு). யோகி பாபுவின் தாய் இரண்டாம் தாரம் என்பதாலும், அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சொந்த அண்ணனாலும், சொந்த ஊரிலும் யோகிபாபு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார். இந்நிலையில் ஊர் திருவிழாவின்போது தனது அண்ணனின் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் யோகி பாபுவின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதை ஊரில் யாரும் தட்டிக் கேட்காத நிலையில், காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவிக்காக யோகி பாபு நாடிச் செல்கிறார். இறுதியில் அவருக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக் கதை. படம் வெளியீட்டுக்கு முன்பே திரைப் பிரபலங்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இவர்கள் அனைவரும் தெரிவித்த கருத்துகளால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொம்மை நாயகி இருக்கிறதா என ஊடகங்களின் விமர்சனங்களை அறிந்து கொள்வோம். Twitter பதிவை கடந்து செல்ல Twitter பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு என்ன சொல்கின்றன ஊடகங்கள் "பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து படம் விரிவாகப் பேசி இருக்கிறது. பா. இரஞ்சித் தயாரிப்பு என்றாலும் வழக்கமான அம்பேத்கர் புரட்சி வசனங்கள் பெரிதாக இடம் பெறாமல் இடதுசாரிய சிந்தனையை கருத்தியலாகக் கொண்டு இயக்குநர் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நீதிமன்றக் காட்சிகளில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி வசனங்களை எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். யோகி பாபுவின் நேர்த்தியான நடிப்பு படத்தில் நிறைவாக இருக்கிறது," என்று தினமணி நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார் - கமல்ஹாசன், சிரஞ்சீவி அஞ்சலி9 மணி நேரங்களுக்கு முன்னர் 'பதான்' வசூல் சாதனை: ஆமிர் கான் தவறியதை ஷாரூக் கான் சாதித்துக் காட்டியது எப்படி?31 ஜனவரி 2023 ரஜினியின் ஸ்டைல், குரல், மேனரிசங்களை யூடியூப், மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாமா?29 ஜனவரி 2023 சமூகத் தீண்டாமைக்கு எதிரான கேள்வி பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM "தன்னை எப்போதுமே ஒரு காமெடியன் என்று சொல்லிக் கொண்டாலும், அவரால் கனமான கதாபாத்திரங்களையும் நேர்த்தியாகக் கையாள முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு நிரூபித்து இருக்கிறார். படத்தில் அவர் எங்குமே சிரிக்கவில்லை." "சமூகத்தில் இன்னும் நிலவும் தீண்டாமை குறித்து படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கேள்வி எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது," என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது. யோகி பாபு ஏமாற்றவில்லை "சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்பாவி அப்பாவாக வரும் யோகி பாபுவின் நடிப்பு ஏமாற்றவில்லை. அவரது மனைவி கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. உணர்வுப்பூர்வமான கதையை படமாக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் மீது வர வேண்டிய அனுதாபம் ஏற்படாமல் போனது படத்தின் ஜீவனைக் குறைக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளின் உணர்வை அதிகரிக்க உதவி இருக்கிறது," என்று தினமலர் நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது. நீதிக்காக போராடும் அப்பா பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM அப்பாவியாக அதே நேரத்தில் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து போராடும் கதாபாத்திரத்தில் யோகி பாபு மிளிர்கிறார். ஆனால் அவரது நடிப்பைத் தவிர படத்தில் வரும் பெரும்பாலானோரின் நடிப்பு கதையுடன் ஒன்றவில்லை என்று தி நியூஸ் மினிட் விமர்சனம் எழுதியுள்ளது. படத்தின் பேசப்படும் கதையும், அரசியலும் சிறப்பாக இருந்தாலும், திரைக்கதை அமைப்பு சில நேரங்களில் குழப்பத்துடன் நகர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. பாரத மாதா யார்? "ஒடுக்கப்படும் சமூகத்தினருக்கு நீதி கிடைக்க நடத்தப்படும் போராட்டத்தை பொம்மை நாயகி காட்சிப்படுத்த முயற்சி செய்துள்ளது. நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே எப்படி மதிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். படத்தில் வரும் சீன்கள் தனித்தனியாக நன்றாக இருக்கிறது. ஆனால் திரைக்கதையாகப் பார்க்கும் போது கதையை வேகமாகச் சொல்ல வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்பு தெரிகிறது," என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது. படத்தின் இறுதியில் ‘பாரத மாதா யார்’ என்று இயக்குநர் ஷான் விவரிக்கும் காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது என தி இந்து எழுதியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cw409xdye3vo
  • மின் உற்பத்திக்கு மேலதிக நீரை வழங்க முடியாது - மகாவலி அதிகாரசபை By VISHNU 03 FEB, 2023 | 04:41 PM (எம்.மனோசித்ரா) மின் உற்பத்திக்காக வழமையாக வழங்கப்படும் நீரை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை , மின்சக்தி அமைச்சிற்கு அறிவித்துள்ளது. எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமையின் காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியான மின் உற்பத்திக்கு தேவையான மேலதிக நீரை வழங்க முடியாது என்றும் மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மகாவலி அதிகாரசபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்காக , மேலதிகமாக நீரை வழங்குவது தொடர்பில் நீர் முகாமைத்துவ குழுவில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. எவ்வாறிருப்பினும் எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமை மற்றும் விவசாயம் , குடிநீர் தேவைகளைக் கருத்திற் கொண்டு வழமையைப் போன்று நீர் மின் உற்பத்திக்கான நீரை வழங்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/147371 இன்று 03/02/2023 இரவு 6.10 - 7.10 வரை மின்தடை அமுலாகியது. வடமாகாண மின்சாரசபை 0212024444 முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்த பின்னர் தான் மின்வெட்டுப் பற்றி தெரியவந்தது. அட்டவணை மாலை 5.45 இற்கு தான் தங்களுக்கு வந்ததாக கூறினார்கள். நீதிமன்றத்தில் 2 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை என்று உறுதி கூறியது பொய்யானது.
  • வவுனியாவில் கடும் மழை : 63 பேர் பாதிப்பு : 2 வீடுகள் பகுதியளவில் சேதம் By VISHNU 03 FEB, 2023 | 03:36 PM வவுனியாவில் இன்று (03) பெய்த கடும்மழை காரணமாக 23 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.   குறிப்பாக திருநாவற்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலச்செட்டிக்குளம், பிரமநாலங்குளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.   இதேவேளை அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வவுனியா நகரில் நேற்று (02) காலை முதல் இன்று (03) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/147362
  • 22 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு தபால் மூல வாக்களிப்பு By VISHNU 03 FEB, 2023 | 12:50 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு சுமார் எட்டு இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தபால் வாக்குகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் கையளிக்கப்படவுள்ளதாகவும்,உத்தியோகப்பூர்வ வாக்காளர் அடையாள அட்டை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 339 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.இம்முறை அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 339 சுயேட்சை குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள். காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை,அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை ஆகிய தேர்தல் தொகுதிகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளுர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பை நடத்தும் பணிகளை 24 மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/147342
  • பிபிசி ஆவணப்படம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி ஆவணப்படம் மீதான தடைக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி மொஹூவா மொய்த்ரா மற்றும் பலர், பிபிசி ஆவணப்படத்தை இணைத்து பதிவிட்டிருந்த தங்களுடைய ட்வீட்களை நீக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் இதைத் தெரிவித்துள்ளது. “மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். மத்திய அரசிடம் இருந்து பதில் வர வேண்டும். அடுத்த ஏப்ரலில் விசாரணை மேற்கொள்வோம்,” என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று உத்தரவிட்டுள்ளது. ட்வீட்டுகளை நீக்குமாறு விதிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான அசல் கோப்புகளைச் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கூறியதுடன், “இடைக்கால உத்தரவு மற்றும் ஏப்ரல் மாதத்தில் அடுத்த தேதி இல்லை” என்றும் கூறியது.   “பிரதிவாதிகள், மத்திய அரசு மற்றும் பிறருக்கு அசல் பதிவுகளை, அடுத்த விசாரணை தேதியில், ஏப்ரல் மாதத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்,” என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது. வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் திருப்பூரே இயங்க முடியாதா? - பிபிசி கள நிலவரம்3 பிப்ரவரி 2023 ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பை இணைக்க முயல்வதாக பாஜக அறிவிப்பு6 மணி நேரங்களுக்கு முன்னர் என்.ராம், பிரசாந்த் பூஷன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர், டாக்டர் சந்தர் உதய் சிங், இது பொதுவெளியில் உத்தரவுகளை வைக்காமல் அவசரகால அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்ட வழக்கு என்று கூறினார். அந்த ட்வீட்டுகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். முதல் மனுவை பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் கூட்டாகத் தாக்கல் செய்தனர். இரண்டாவது மனுவை வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மா தாக்கல் செய்தார்.   “இதுவோர் அசாதாரண வழக்கு. பொதுவெளியில் உத்தரவுகளை இடாமல், அவசரகால அதிகாரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ட்வீட்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவொரு தீவிரமான பிரச்னை,” என்று அவர் கூறினார். ரகசிய உத்தரவின் அடிப்படையில், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் மற்றும் பலர் நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர் என்று கூறியதுடன் சந்தர் உதய் சிங் இந்தப் பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். அந்த ஆவணப் படங்களை மக்கள் பார்க்கிறார்கள் என்பதும் உண்மை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. சந்தர் உதய் சிங், “லட்சக்கணக்கான அதிகாரிகள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், இங்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்தார். பிபிசியின் ‘இந்தியா: மோதி கேள்வி’ என்ற ஆவணப்படத்தை பொதுமக்கள் அணுகுவதைத் தடுக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. முன்னதாக ஜனவரி 30ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம், மனுக்களின் தொகுப்பை பிப்ரவரி 6ஆம் தேதி, திங்கள் கிழமையன்று விசாரிப்பதாக நிர்ணயித்திருந்தது. ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் அதன் காரணப் பட்டியல் மூலம், மனுக்கள் விசாரணையின் தேதியை மாற்றவே அது விசாரணைக்கு முன்பாகவே வந்தது. என்.ராம், பிரசாந்த் பூஷன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங், ஜனவரி 30ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய யஷ்வந்த சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பு, என்.ராம் மற்றும் பிரசாந்த பூஷனின் ட்வீட் எப்படி அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி நீக்கப்பட்டன என்பதையும் ஆவணப்படத்தை திரையிட்டதற்காக ராஜஸ்தானின் அஜ்மீரில் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES காணொளி துணுக்குகள், ட்வீட்டுகளை தடுப்பதற்கு ‘அவசரகால அதிகாரங்களை’ பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இது. தயவு செய்து பரிசீலிக்கவும்,” என்று உச்சநீதிமன்றத்தில் சந்தர் உதய் சிங் மனு அளித்திருந்தார். 2002 குஜராத் கலவர வழக்குகள் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்த வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மாவின் பொதுநல வழக்கையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்தத் தடை தவறானது, அரசமைப்புக்கு விரோதமானது எனக் கூறி, வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஷர்மாவின் மனு பிபிசி ஆவணப்படத்தின் மீதான தடையை நீக்கக் கோரியது. குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கு ஆவணப்படத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். வழக்கறிஞர் ஷர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆவணத் தொடரின் இரு பகுதிகளையும் ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியது. கடந்த காலங்களில் நடந்த தவறை மறைக்க மத்திய அரசு முயலக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஷர்மா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஷர்மாவின் மனு, பிபிசி ஆவணப்படத்தின் மீதான தடையை நீக்குமாறு கோரியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/ckmdn2vlkpzo
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.