• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பகலவன்

றோஸ் பாண்

Recommended Posts

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் திருமலையை ஆட்டிப்படைத்த ராணுவ புலனாய்வாளர்களின் பெயரை ஐந்து வயது குழந்தை கூட சொல்லும்.

 

அந்த அளவுக்கு பிரபல்யம் வாய்ந்தவர்கள் பெர்னாண்டோ, பைத்துல்லா, ராஜப்த்தீன். அவர்கள் செய்த கொடுமைகள் சொல்ல இந்த கதை போதாது.

 

நிறைய குறுக்கு தெருக்களை கொண்ட திருமலை நகரின் மத்தியை நிறைந்த படையினரை கொண்டு அடைத்து விட்டு, நீல வானை கொண்டுவந்து, திருமலை மாவட்ட அடையாள அட்டை (முதலில் மஞ்சள் பின்னர் வெள்ளை) பரிசோதிக்கும் படையினரை இப்போ நினைத்தால் கூட வடிவேலு பாணியில் பில்டிங்கை ஸ்ட்ரோங் ஆக வைத்து கொண்டு பேஸ்மெண்டை நடுங்கும் பலரை இப்போதும் காணலாம்.

 

இவர்களது ஆட்டங்கள் கோலாச்சிய அந்த கால பகுதியில், திருமலை நகரின் மத்தியில் கல்லூரி வீதியையும் மூர் வீதியையும் இணைக்கும் அந்த மூலையில் இருக்கும் கோணேஸ்வரா இந்து கல்லூரியின் ஆரம்ப பாடசாலை வகுப்பறையின் கதிரைகளை இழுத்து போட்டுவிட்டு  தூங்கும் சுகமே எங்களுக்கு ஒரு தனி சுகம் தான்.

 

நாங்கள் நாலுபேர் மட்டும் தான் திருமலை நகரின் காவல் அணி. மின்மாற்றிகளை தகர்ப்பதோ,நிதி சேகரிப்போ, துரோகிகளை எச்சரிப்பதோ எல்லாம் எங்கள் நாலுபேரின் பணிகளுக்குள் தான் வரும்.

 

ஊரேல்லாம் உறங்கும் அதிகாலை மூன்று மணிக்கு தான் எங்களுக்கு சாப்பாடு. தவணை முறையில் ஆட்கள் மாறி மாறி காவல் நிற்போம். காவல் நிற்பவர்களை தவிர்த்து ஏனையவர்கள் அருகில் இருக்கும் முஸ்லிம் பேக்கரியில் போய் பாண் அல்லது கறி பணிஸ் வாங்கி வரவேண்டும்.  அந்த அதிகாலை நேரத்தில் சுட சுட வரும் ரோஸ் பாண், கறி பணிசின் சுவையே தனி சுவை. சுவைத்து பார்த்தவர்களுக்கு நான் எழுத்தில் அந்த அனுபவத்தை சொல்ல வேண்டியதில்லை.

 

அன்றும் அப்படி தான். நானும் கார்த்தீபனும் காவல் நிற்க கோகுல்ராஜ்ஜும் நியாஸும் பாண் வேண்டும் முறை. ஐம்பது ரூபாய் தாளுடன் ஆரம்ப பாடசாலை மதில் ஏறி அந்தோனியார் வீதி தாண்டினால் மூன்று நிமிட நடை தான் அந்த பேக்கரிக்கு. மதில் பாயும்போது சத்தம் கேட்காமல் இருக்க வெறும்காலுடன் வெளியே இருக்கும் மெட்ரோ (ஒறேஞ்) பேபோன் காட் போடும் தொலைபேசி கூண்டில் கால்வைத்து அருகில் ஓடும் கால்வாயின் ஓரத்தில்  இருக்கும் அழுக்கு  புற்களில் கால் பதிக்கலாம்.

 

அன்றும் கோகுல்ராஜ் மதில் மீது ஏறி தொலைபேசி கூண்டில் கால்பதிச்சு புல்லுக்கு மேலே வைக்கும் போது யாருடையதோ முதுகில் வைப்பது போன்ற உணர்வு. ச்சீ அப்படி இருக்காது என்று கொஞ்சம் ஊண்டியே காலைப்தித்து நிமிர்ந்தால் இராணுவம். மதில் நீட்டுக்கு படுத்திருந்தாங்கள். நியாஸை எச்சரிக்கை செய்யகூட அவகாசம் இல்லாமல் அவனும் சொப்பின் பையுடன் குதித்து விட்டான்.

 

உருளைக்கிழங்குவிற்கு யட்டி போட்டமாதிரி தான் கோகுல்ராஜ். அவன் துப்பாக்கி முனையில் யட்டியுடன் இருப்பதை பார்க்க நியாஸு க்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.  இராணுவத்துடன் வந்திருந்த ஈபிஆர்எல் எப் தோழர்களும் சிரித்தபடிதான் அவனிடம் கேட்டார்கள்.

 

இந்த நேரம் சொப்பின் பாக்கோட எங்கடா போறீங்கள்.

 

 

கெற்றபோல்  தடிக்கு துணி சுத்தினமாதிரி யட்டியுடன் இருந்த நியாஸ், மாலை கட்ட பூ புடுங்க வந்தனாங்கள் என்று சொல்ல வாயெடுக்கவில்லை. கோகுல்ராஜ் சொல்லிபோட்டான்.

 

நாங்கள் பாண் வேண்ட போறோம் அண்ணே.

 

யாருக்குடா புலிக்கு தானே அவனின் குரலில் மாற்றம் தெரிந்தது.

 

இல்லை அண்ணே எங்கள் இரண்டு பேருக்கும் தான். இன்னும் ஒரு வாரத்திலே பரீட்சை படிச்சு கொண்டு இருந்தனாங்கள் பசிச்சுது பாண் வேண்டுவம் என்று வந்தம்.

 

சரி ஒருத்தன் இரு. ஒருத்தன் போய் வாங்கி கொண்டு வா.

 

என்று சொல்லி முடிக்கவில்லை நியாஸ் எழும்பிவிட்டான் பையுடன்.

 

ஒரு இராணுவ வீரனின் காவலில் நியாஸ் பேக்கரிக்குள் புகும்போது வழமையான சலசலப்பு பேக்கரியினுள் இல்லை.

 

மனசை ஏதோ வருடினாலும் அங்கே  இருந்த முனீர் நானாவிடம் அண்ணே பாண் இருந்தால் தாங்கோ என்று ஐம்பது ரூபாயை நீட்டினான் நியாஸ்.

 

தம்பி உனக்கு விஷயம் தெரியாதா நாளைக்கு ரமலான் பண்டிகை நாங்கள் பாண் போடலை தம்பி.

 

எண்ட அல்லாவே...

 

அண்ணே ..இப்போ பாண் இல்லாமல் போனால் துவக்காலே அடிப்பான் என்ன இருந்தாலும் தாங்கோ அண்ணே.

 

தம்பி இண்டைக்கு பாண் போடவே இல்லை நேற்றையான் ரோஸ் பாண் இருக்கு என்று பழைய ரோஸ் பாணை சோப்பின் பாக்  நிறைய தந்து அனுப்பினார் முனீர் நானா. அன்றைக்கு அவர் தான் அல்லாவாக தெரிந்தார் நியாஸுக்கு.

 

பாண் கிடைத்த சந்தோசம் ஒரு தைரியத்தை கொடுத்தது நியாஸுக்கு, அண்ணை இப்போ ஆவது நம்புறீங்க தானே நாங்க சத்தியமா பாண் வாங்க தான் போனாங்கள் என்று   தோழரிடம் தைரியமாக சொல்லும்போதே தெரியவில்லை ஓணானை தேடி பிடிச்சு வேட்டிக்குள்ளே விடுறம் என்று.

 

இவ்வளவு பாணையும் நீங்க இரண்டு பேரும் தானா சாப்பிட போறீங்கள். பொய் சொல்லாதே புலிக்கு தானே சாப்பாடு.

 

இல்லை சத்தியமா நாங்கள் இரண்டு பேரும் தான் சாப்பிட போறோம்.

 

சரி அப்போ இங்கயே இப்பவே  சாப்பிடு.

 

 

 

 

 

 

கோகுல்ராஜ்ஜும் நியாஸும் எங்களிடம் வரும்போது விடிகாலை நாலு முப்பது, கண்கள் எல்லாம் சிவந்து அழுதது அப்படியே  தெரிந்தது.

 

 

ஒரு துண்டு கூட விடாமல் ஆறு றாத்தல் பழைய ரோஸ் பாணை துப்பாக்கி முனையில் யட்டியுடன் குந்தி இருந்து திண்டால் யாருக்கு தான் அழுகை வராது.  

 

 

 

(யாவும் கற்பனை)

Edited by பகலவன்
 • Like 13

Share this post


Link to post
Share on other sites

இப்ப அஜித் பேக்கரி பேமஸ்.

Share this post


Link to post
Share on other sites

இரண்டு பாணை கடையில விட்டுட்டு வந்திருக்கலாம்...!

Share this post


Link to post
Share on other sites

-----

ஒரு துண்டு கூட விடாமல் ஆறு றாத்தல் பழைய ரோஸ் பாணை துப்பாக்கி முனையில் யட்டியுடன் குந்தி இருந்து திண்டால் யாருக்கு தான் அழுகை வராது.  

------

 

ஆறு றாத்தல் பாணையும்.... சம்பல், கறி ஒண்டும் இல்லாமல் சாப்பிடுறது.... இலேசுப் பட்ட வேலை அல்ல. :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

இப்ப அஜித் பேக்கரி பேமஸ்.

 

நன்றி மீரா உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

 

மணிஸ் கபே நாங்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒன்று. இப்போ இருக்குதா தெரியவில்லை.

இரண்டு பாணை கடையில விட்டுட்டு வந்திருக்கலாம்...!

 

நன்றி சுவி அண்ணா. அப்போ இருந்த பதற்றத்தில் அவர்களுக்கு அது தோணவில்லை. பாணை  கண்டால் விட்டுவிடுவான்கள் என்று நம்பினார்கள்.

ஆறு றாத்தல் பாணையும்.... சம்பல், கறி ஒண்டும் இல்லாமல் சாப்பிடுறது.... இலேசுப் பட்ட வேலை அல்ல. :D  :lol:

 

நன்றி தமிழ்சிறி அண்ணா. இன்றைக்கும் அவர்களை ஞாபகபடுத்தும் ஒரு நிகழ்வாக ரோஸ் பாண் இருப்பதில் மகிழ்ச்சியே.

 

விருப்பங்களை தெரிவித்த நந்தன், இசை, நுணா, புத்தன் ஆகியோருக்கும் நன்றிகள்.

 

Share this post


Link to post
Share on other sites

மரத்தடி சந்தியில் உள்ளதா ?

image.jpg

Share this post


Link to post
Share on other sites

இது தான் மீரா. சந்தியில் இருந்து புகையிரத நிலையம் நோக்கி செல்லும் வீதியில் இருக்கும் சனீஸ்வரன் கோவில் கூட எங்கள் சந்திப்பு இடங்களில் ஒன்றாகும். அதெல்லாம் ஒரு காலம்.நன்றி உங்கள் படத்திற்கு.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

றோஸ் பாண் நல்லாயிருக்கு....

Share this post


Link to post
Share on other sites

அன்றே வாசித்து விட்டேன், பகலவன்!

 

ஆனால் அப்போது எனக்கிருந்த  'கணணி வசதியில்' பச்சை போட மட்டும் தான் முடியும்!

 

உருளைக்கிழங்குக்கு 'ஜாக்கெட்' போட்ட மாதிரி...! :D

 

உங்கள் கதை பழைய 'பாண் சுவையை' நாக்கில் ஒரு நிமிடம் கொண்டு வந்து போனது என்பது மட்டும் உண்மை!

 

தொடர்ந்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்!

Share this post


Link to post
Share on other sites

நன்றி குசா அண்ணா மற்றும் புங்கை அண்ணா.

 

உங்கள் வருகையும் கருத்தும் என்னை மேலும் ஊக்குவிக்கின்றன.

 

விருப்புகளை வழங்கிய சுவி அண்ணா, தமிழினி ஆகியோருக்கும் நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites
மொறட்டுவ பஸ்ஸுக்குள்ள சிங்களபெட்டை என்டு காலச் சுறண்டினதும் இதே நியாஸுக்குத் தானோ ?  :rolleyes:
 
( அந்த திரிய தேடிப் பாத்தன். காணேல்ல..)   :unsure:
 

Share this post


Link to post
Share on other sites

உண்மை தான் ஈசன். உங்கள் ஞாபகசக்திக்கு தலை வணங்குகிறேன்.

நன்றி ஈசன்.

இதோ அந்த இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?/topic/116156-கொழும்பு-ஃபிகர்/

Share this post


Link to post
Share on other sites

ரோஸ்பாண் கதை நன்றாக இருக்கிறது பகலவன் சின்னவிடயங்கள்தான் கோர்வையாக்கி எழுதுவதில்தான் சுவார்சியமே அடங்கியிருக்கிறது. பாராட்டுக்கள்

Share this post


Link to post
Share on other sites

அது சரி உண்மைச் சம்பவத்தை ஏன் "யாவும் கற்பனை" என்று எழுதியிருக்கிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ரஞ்சிதாவோடு கொஞ்சிவிளையாட விரும்பிய புத்தரின் வரவை யாழ் உறவுகள் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்கள்.! புத்தரின் வீட்டில் வரவேற்பு எப்படி...? வரவேற்றது மகாலட்சுமியா....?? பத்திரகாளியா...??? 
  • தமிழ் இனத்தில் பிறந்ததை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன் என்று லண்டன் வாழ் ஈழத்தமிழரான சுதன் என்பவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வடபகுதியிலுள்ள எனது பதினைந்து ஏக்கர் நிலத்தை சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராகிவிட்டேன் என கண்ணீருடன் கூறுகின்றார்.
  • பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இன்றைய தினம் நடை பெறுகின்றது. இம்முறை அந்த நாட்டின் பொதுத் தேர்தலில் இலங்கையை பகடைக் காயாக வைத்தே இரண்டு பிரதான கட்சிகள் தேர்தல் காலத்தில் குதித்துள்ளன. அதனடிப்படையில் பிரித்தானிய தொழிலாளர் கட்சியானது தாம் இம்முறை ஆட்சியை கைப்பற்றினால் இலங்கையை இரண்டாக பிளவுபடுத்துவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தனர். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுப்பது என்றால் அது இலங்கை நாட்டை இரண்டாக பிரிப்பதன் மூலமே பெற்றுக்கொடுக்க முடியும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சி கூறியிருந்தது. இந்நிலையில் பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியானது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய இலங்கையை கட்டிக் காப்பதற்காக தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தது. ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களுக்கு தலையீடு செய்து அந்நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க தமது கட்சி ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது எனவும் கொன்சவேட்டிவ் கட்சி கூறியிருந்தது. எவ்வாறாயினும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் இருக்கின்றனர். அவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக பிரித்தானிய தொழிலாளர் கட்சி முயற்சிப்பதாக கொன்சவேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதேசமயம் இம்மாதம் ஒன்பதாம் திகதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பீட்டுக்கமைய பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியானது தொழிலாளர் கட்சியை விட 4 விகிதத்தில் முன்னணி வகிக்கின்றது. இம்முறை தேர்தலின் போது சுமார் நாற்பது லட்சம் சிறுபான்மை மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த வாக்குகளே இரண்டு பிரதான கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் என உலக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். https://www.tamilwin.com/politics/01/233612?_reff=fb&itm_source=parsely-api?ref=recommended1
  • மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள்களுக்கு 6 மாதம் சிறை... நாடாளுமன்றத்தில் சட்டம்.! ரெல்லி: மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள் மற்றும் மருமகன்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் , மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கும் வகையில் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இருந்தது.இந்த சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு அவல நிலையில் தான் வாழ்கிறார்கள். புதிய சட்டம் திருமணம் ஆன உடன் தனிக்குடித்தனம் செல்லும் மகன்கள் பெற்றோரை அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். இதையடுத்து அந்த சட்டத்தில் திருத்தம் செய்து நாடாளுன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகன் மற்றும் மருமகள்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பெற்றோர் பராமரிப்பு பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் திருத்த மசோதா 2019 சட்டத்தை லோக்சபாவில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் தவார் சந்த் கெலாட், தங்கள் பராமரிப்பில் உள்ள பெற்றோர் அல்லது முதியவரை துன்பறுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மனரீதியாக காயம் பெற்றோரை திட்டுதல், பணம் தராமல் துன்புறுத்துதல், காயம் ஏற்படுத்துதல், உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பெற்றோரை கைவிடுதல் போன்ற வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றங்களை செய்யும் மகன்கள் அல்லது மக்கள் மட்டுமின்றி இனி மருமகள்கள், மருமகன்கள், பேரன் மற்றும் பேத்தி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். புகார் தரலாம் இந்த புதிய சட்டப்படி 80வயதுக்கும் மேற்பட்ட முதியோர் அல்லது பெற்றோர் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற தீர்ப்பாயத்தை நாடி புகார் தெரிவிக்கலாம். இந்த தீர்ப்பாயம் புகார்களை 60 நாளில் விசாரித்து தீர்வு தரும்.80 வயதுக்கு கீழ் என்றால் 90 நாளில் விசாரித்த தீர்வு தரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோருக்கான சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்படும். டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரி இதன் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்றார். https://tamil.oneindia.com/news/delhi/now-includes-son-in-law-and-daughter-in-law-will-jailed-who-not-maintain-parents/articlecontent-pf421555-371168.html
  • விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் ``தன் டி.என்.ஏ தமிழகத்தைச் சேர்ந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார். விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்ஸன் 1950-ம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். தற்போது 69 வயதாகிறது. இவரின், விர்ஜின் குழுமம் டெலிகாம், உணவுத்துறை, ஏர்லைன்ஸ், விண்வெளிப் பயணம் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது. இந்தியாவில் மும்பை முதல் புனா வரை ஹைப்பர்லூப் திட்டம் அமைக்கப்படவுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமை யிலான மகாராஷ்டிர அரசு புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர்லூப் திட்டங்களைக் கைவிடும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.   ஹைபர்லூப் திட்டம் இதைத் தொடர்ந்து, பிரான்ஸன் மகாராஷ்டிரா வந்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயை இன்று அவர் சந்திக்கிறார். ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்களையும் சந்திக்கவுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய பிரான்ஸன், தனக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். அப்போது, ``தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக தன்னுடையை டி.என்.ஏ வைப் பரிசோதித்தபோது இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் 1793- ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது, என்னுடைய மூதாதையர் தமிழகப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். ``இந்தியர்களை நான் சந்திக்கும்போதெல்லாம், `ஒருவேளை நாம் இருவரும் உறவினர்களாக கூட இருப்போம்' என்று விளையாட்டாக கூறுவது உண்டு'' என்றும் பிரான்ஸன் கூறினார்.   விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் பிரான்ஸனின் மூதாதையர்களில் ஒருவரான ஜான் எட்வர்ட் 1793- ம் ஆண்டு முதன்முறையாக சென்னை வந்துள்ளார். இங்கிருந்து அவரின் குடும்பம் கடலூருக்கு நகர்ந்துள்ளது. இவரின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. https://www.vikatan.com/business/news/virgin-founder-richard-branson-says-about-tamil-nadu-connection?fbclid=IwAR2kB85kfYlnjZXTTed3ZfYJk17xkq00PUK4bldBR4ROuncFmbEJNaoFrmI