Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kalmunai%20eswarar%20964d.jpg

 

கல்முனை நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு அபிஷேகத்துடன் பூசைகள் ஆரம்பமாகி காலை 6 மணிக்கு எம்பெருமான் தேர் பவனி ஆரம்பமானது. கௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப் பெருமான் ஒரு தேரிலும் விநாயகப் பெருமான் மற்றொரு தேரிலும் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஒரு தேரிலுமாக மூன்று தேர்களில் இறைவன் பவனி வருகின்ற நிகழ்வு அனைத்து பக்த அடியார்களின் உள்ளங்களையும் பரவசப் படுத்தியது. பிரம்ம ஸ்ரீ சுந்தர செந்தில் ராஜகுருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றதுடன் காவடிகள், கரகாட்டம், பால்குட பவனியுடன் நாதஸ்வர தவில் முழக்கம், பறை மேள முழக்கத்துடன் இத்தேர் திருவிழா கல்முனை பிரதான வீதி வழியாக இடம்பெற்று ஆலயத்தை சென்றடைந்தது.
 
kalmunai%20eswarar%20966d.jpg
 
 
kalmunai%20eswarar%20965d.jpg
 
 
 
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.