Jump to content

எளிய காதல் கதை எழுத முடியாது: எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

sraa_2364340f.jpg

 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதை களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராம கிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ இவரது சிறந்த படைப்புகளில் ஒன்று. இவரது சமீபத்திய நாவல் ‘சஞ்சாரம்’. நாவல், சிறுகதை, சினிமா, பத்திரிகை எழுத்து எனப் பல முகங்களைக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனிடம் ‘தி இந்து’ சித்திரை மலருக்காக நடத்திய நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது

 

இன்றுள்ள சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்…

தமிழுக்கென ஒரு கதை சொல்லும் முறை இருக்கிறது. தமிழில் உள்ள அளவுக்கு வேறு வேறு வகையான கதைகள், கதைக் கருக்கள், எழுத்தாளர்கள், மொழி வகைமைகளை வேறெங்கும் பார்க்க முடியவில்லை. முன்னூறு யானைகள் என்ற ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட கௌரிஷங்கருக்கும் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இடம் உண்டு. நூற்றுக்கணக்கான கதைகளைத் தொடர்ந்து எழுதிய அசோகமித்திரனுக்கும் அவருக்குரிய இடம் உண்டு. 30-க்கும் குறைவான கதைகள் எழுதிய மௌனியை நாம் இன்னும் கொண்டாடிவருகிறோம்.

 

அன்றாட வாழ்க்கையைக் களங்கமற்ற சிரிப்புடன் பார்க்கும் வைக்கம் முகமது பஷீர் போன்ற ஒரு அதிசயம் இங்கே உருவாகவில்லையே?

ஒரு இஸ்லாமியக் குடும்பப் பின்னணியில், சுதந்திரப் போராட்டக் காலத்தில் வீட்டிலிருந்து வெளியேறி நாடோடியாகத் திரிந்து அலைந்த வாழ்க்கை அனுபவங்களை அவர் கதைகளாக எழுதியுள்ளார். தன்னைத் தானே பரிகசிக்கும் கதைகள் அவை. இந்த மாதிரியான ஒரு மரபில் தமிழில் ஒருவர் எழுத வந்தாரெனில் அவர் கவிஞர் ஆகியிருப்பார். உரைநடைக்குள் வந்திருக்க மாட்டார். கற்பனை வழியாக ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழ் மரபாக உள்ளது. பஷீரின் கதைகளில் கற்பனைக்கான பெரிய சிறகடிப்பைப் பார்க்க முடியாது.

 

தமிழ் நவீன இலக்கியத்தில் இன்னும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் எழுத்தாளர் என்று யாரைக் கூறிப்பிடுவீர்கள்?

பஷீரின் ஆளுமைக்கு நிகரான ஒரு ஆளுமையைச் சொல்ல வேண்டுமானால் நான் புதுமைப்பித்தனைத்தான் சொல்வேன். புதுமைப்பித்தனிடம் சமூகம் சார்ந்த நேரடியான கேலி, கிண்டல் உண்டு. பஷீரிடம் இல்லாத அம்சம் அது. மலையாளத்தில் பஷீரை முன்வைத்தால், நாம் அதற்கு நிகராகப் புதுமைப்பித்தனை வைக்க முடியும்.

 

வாழ்க்கையை அதன் கசப்புடனேயே வாழலாம் என்ற விவேகம் புதுமைப் பித்தனிடம் உள்ளது. சாமானிய மனிதனால் ஏன் சராசரியான, நிம்மதி யான வாழ்வைக்கூட ஒழுங்காக வாழ முடியவில்லை என்பதே அவரது கேள்வி. அவரைத் தொடர்ந்து எழுத வரும் ஒவ்வொரு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளனிடமும் புதுமைப்பித்தனின் ஏதோ ஒரு அம்சத்தைப் பார்க்க முடிகிறது.

 

புதுமைப்பித்தன் உருவாக்கிய கூரிய விமர்சன நோக்குதான் பின்னர் கிளாசிக்குகள் வருவதைத் தடைசெய்துவிட்டதா?

பேரிலக்கியங்கள் எப்போதும் ஒரு காலகட்டத்தில், சமூகச் சூழலில் உருவாகுபவை. மனிதத் துயரங்கள் பெரிதாக நிகழும் காலகட்டமாக இருக்க லாம். மனித மனம் அதிகபட்சமாகச் சஞ்சலங்களையும், திகைப்பையும் அனுபவிக்கும் நிலைமைகளில் பேரிலக்கியங்கள் படைக்கப்படும். 19-ம் நூற்றாண்டு அதற்குச் சாட்சியாக இருக்கிறது.

 

டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி போன்ற பெரும் படைப்பாளிகள் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்த பார்வையைத் தங்கள் படைப்புகளில் வைக்கிறார்கள். அவைதான் பேரிலக்கியங்கள். மனிதனின் அவலங் களுக்கான காரணங்களை, ஆதாரமான பிரச்சினைகளை அவை விசாரணை செய்கின்றன. அன்பால் எல்லாம் தீர்க்கப்பட்டுவிடும் என்றால், அதை ஏன் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று தாஸ்தாயெவ்ஸ்கி கேட்கிறார்.

மனித உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மனிதர்களால் தீர்க்க முடியாது என்ற பார்வை டால்ஸ்டாயிடம் இருக்கிறது. அந்தப் பிரச்சினைகளைக் கடவுள் பார்த்துக்கொள்ளட்டும் என்கிறார் டால்ஸ்டாய்.

 

இன்றைய படைப்புகளில் கேட்கப்படும் கேள்விகள் மனித இருப்பின் அடிப்படை நோக்கிப் போவதில்லை. மனித இருப்பின் அன்றாடத் தளத்திலேயே அவை நின்றுவிடுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் கிளாசிக்குகள் என்பதற்கான வரையறை மாறுபடுகிறது. இன்றைய கிளாசிக்குக்கான வரையறை இன்னும் வரையறுக்கப்படவில்லை.

 

20-ம் நூற்றாண்டு உரைநடையில் நவீனத் தமிழ் இலக்கிய கிளாசிக்குகள் என்று எந்தப் படைப்புகளைச் சொல்வீர்கள்?

கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள், சா. கந்தசாமியின் சாயாவனம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு போன்றவற்றைச் சொல்வேன்.

தமிழ் நாவல்களுக்குள் செவ்வியல் கூறுகள் இருக்கின்றன. ஆனால் முழு செவ்வியல் பிரதியாக ஒரு படைப்பு உருவாகவே இல்லை. ஏனெனில் 20-ம் நூற்றாண்டு வாழ்க்கை முழுமைத்தன்மை உடையதாக இல்லை. சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையைச் சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் கலைஞன் சொல்ல முடியும்.

 

இந்த நூற்றாண்டின் தனித்துவமான நெருக்கடி எது?

இந்த நூற்றாண்டில்தான் ஒரு மனிதனின் இருப்பைக் கிட்டத்தட்ட இயந்திரங்கள் இடம்பெயர்த்துள்ளன. ஒரு மனிதனிடம் பேசுவதற்கு நமக்குத் தொலைபேசி போதும். தொலைவு என்ற ஒன்றையே இது இல்லாமல் ஆக்கிவிட்டது. ஆனால் மனிதர்களுக்கு இடையிலான தொலைவை அறிவியல் இல்லாமல் ஆக்கிவிட்டாலும், பிரிவு என்பதும் தனிமை என்ற உணர்வும் தொடர்ந்து இருக்கவே செய்கிறது.

 

படைப்பு மாதிரியே வாசிப்புச் செயல்பாடும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறதே?

ஒரு புத்தகத்தையோ, நாவலையோ வாசிக்கும் மனம் அதைச் சுருக்கிக்கொண்டே இருக்கிறது. ‘சஞ்சாரம்’ நாவலின் மையமாக நாதஸ்வரம் இருந்தால், அவன் அதை நாதஸ்வரம் பற்றிய புத்தகமாக வாசிக்கிறான். நாதஸ்வரம் பற்றி எழுதியிருக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்கிறான்.

 

ஒரு படைப்பு கடற்பஞ்சு மாதிரி, அதை வாசிக்கிற வாசகனுக்குச் சுருங்கியது போன்ற தோற்றத்தைத் தருகிறதே தவிர, அது சுருங்காது. திரும்ப அது தனது விஸ்தீரணத்துக்குள் போய்விடும். ஒரு நாவலையோ, படைப்பையோ திரும்பத் திரும்ப நினைவில் வாசிக்கிற, வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் தன்னைத் திறந்து காட்டுகிற ஒன்றாகத்தான் சிறந்த படைப்புகள் இருக்கின்றன. சொல் இல்லாத உறைந்த நிலையில் இருக்கிற அனுபவங்களை இலக்கியங்கள் வைத்துள்ளன. அதை வாசிப்பதுதான் அவசியமானது.

 

நீங்கள், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோர் ஒரு கட்டத்தில் பெரும் பத்திரிகைகள் வாயிலாக வெகுஜன வாசகர்களையும் கணிசமாக ஈட்டியிருக்கிறீர்கள்… உங்களது எழுத்துகளை வாசகர்களின் தேவைக்காக எளிமைப்படுத்தியிருக்கிறீர்களா?

தமிழில் எழுத்தாளன் எவ்வளவு பிரபலமானவனாக இருந்தாலும் மற்ற இடங்களை ஒப்பிடும்போது வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா மூவருக்கும் தனித்தனியாக ஐந்தாயிரமோ பத்தாயிரமோ வாசகர்கள் இருக்கலாம். நாங்கள் எழுதும் உள்ளடக்கம் வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் விஷயமல்ல. பொழுது போக்குக்காக எதையும் எழுதுவது கிடையாது. தீவிரமான மொழியில் எழுதாமல் மிதமான மொழியில் எழுதுகிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இங்கே ஒரு வெகுஜனப் பத்திரிகையிலிருந்து என்னிடம் கட்டுரையோ, பத்தியோதான் கேட்பார்கள், தொடர்கதையைக் கேட்பதில்லை. என்னால் ஒரு எளிய காதல் கதையை எழுத முடியாது.

 

ஆவணத்துக்கும் படைப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

ஆவணத்தில் உள்ள விவரம் ஒரு படைப்புக்கு உந்துதலாக இருக்கலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் நண்பர்களாக ரங்கபட்டணம் போனோம். அங்கே ஒரு குதிரையின் எலும்பு எங்களுக்குக் கிடைத்தது. அது எந்தக் காலத்திலிருந்த குதிரை, யாருடைய குதிரை, ஏன் இக்குதிரை இறந்தது? என்றெல்லாம் என் மனம் இல்லாத ஒரு குதிரையை உருவாக்க முயல்கிறது. இதுதான் ஒரு ஆவணத்துக்கும் படைப்புக்கும் இடையிலான தொடர்பு. ஆவணங்களைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனுக்கு அவை துணைப்பொருட்கள்தான்.

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article7068602.ece?widget-art=four-rel

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை! விவேக்... நேற்று முன் தினம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசியால் அவருக்கு... மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவமனை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. https://athavannews.com/2021/1210150
  • போராட்ட காலத்திலும் கல்வியில் உயர்ந்து நின்றது வடக்கு. ஒவ்வொரு ஆண்டு பரீட்சைப்பெறுபேறுகளை பார்த்தால் புரியும்.  கிழக்கைபற்றித் எனக்கு  தெரியாது. படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது அரசியல் வாதிகள் வெற்று வாக்குகளை   கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். வடக்கு கிழக்கு பட்டதாரிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை..... சோம்பேறிகள் என்று சொன்னார்கள், இப்போ படிப்பறிவு காணாது.... இன்னும் என்னென்ன வருமோ? 
  • சுவியர்... உண்மைதான். இப்படியான பிரச்சினைகள்... மேலை நாடுகளில் இல்லாத படியால், அவர்கள் மேலும் முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள். நம்ம ஊரிலை... "தடி எடுத்தவன்" எல்லாம் தண்டல்காரன் என்ற மாதிரி...  அரசியல் வாதி, இராணுவம், காவல் துறை, தொல் பொருள் திணைக்களம், பிக்குமார் என்று.... ஒவ்வொருவரும்... தாங்கள் நினைத்த காரியத்தை செய்து கொண்டிருந்தால்... பொதுமக்கள்... தாங்கள்  செய்யுற வேலையை விட்டுட்டு  இவங்களுடன், மல்லுக் கட்டிக் கொண்டிருக்கவே... அவர்களின் சக்தி எல்லாம் வீணாகின்றது. 
  • அருமையான கலைஞன் ஆழ்ந்த இரங்கல்கள்.......!
  • திராவிடம் - தலித் - “நீல சங்கி”: ஒரு புரிதல் ஆர். அபிலாஷ்         “கர்ணன்” படத்தை ஒட்டிய உணர்ச்சி கொந்தளிப்புகள் முடியட்டும், அதன் பிறகு திராவிட ஆதரவாளர்களில் சிலர் ஏன் தொடர்ந்து தலித் படைப்பாளிகள், சிந்தனையாளர்களை நீல சங்கிகள் என பழிக்கிறார்கள் எனக் கேட்கலாம் எனக் காத்திருந்தேன். இந்த விவாதம், சர்ச்சை புதியது அல்ல.    அம்பேத்கரின் மூலப்பிரதிகளை படித்தவர்கள் ஒரு விசயத்தை கவனித்திருப்பார்கள் - அவர் தலித்துகளின் விடுதலையை அரசியல் பிரதிநுத்துவம் சார்ந்து மட்டும் காணவில்லை. அதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராக தலித் ஒருவர் நிறுத்தப்பட்டாலோ, பொருளாதார முதலீடு அவர்களிடம் சென்றாலோ மட்டும் போதும் என அவர் கருதவில்லை. மாறாக, அவர் இந்து மதத்தில் இருந்தே விடுதலை வேண்டும் என்றார். சாதி எப்படி தோன்றியிருக்கக் கூடும் எனக் கேள்வியெழுப்பும் அவர் சிறிய இனக்குழுக்களாக மக்கள் வாழ்ந்திருந்த போது அவர்களிடம் சாதி உணர்வு, வரலாற்றின் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு சாதி சுயசாதி மணங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என கதவை மூடிய போது தான் சாதி அமைப்பு வலுப்பெற்றிருக்க வேண்டும் என்கிறார். பிராமணர்களையே அவர் அந்த கதவடைத்த சமூகமாக அடையாளப்படுத்துகிறார்.  அடுத்து சமூக அரசியல் பொருளாதார ஆற்றலே சாதி அதிகாரமாகிறது எனப் புரிந்திருந்த அம்பேத்கர் தலித்துகள் ஏன் நான்கு வர்ணங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டார் எனக் கேட்கிறார் (“சூத்திரர்கள் என்பவர்கள் யார்?”). தலித்துகள் என்பவர்கள் ஒரு காலத்தில் பூர்வ பௌத்தர்கள். இவர்கள் எப்படி இந்து மதத்துக்குள் வந்து தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என அவர் விசாரணை மேற்கொள்கிறார். பண்டைய இந்தியாவில் ஆரியத் தலைமையின் கீழ் இந்து சாம்ராஜ்ஜியங்கள் தோன்றி பௌத்த அரசமைப்புகளை முறியடித்தனர், போரில் நிலத்தையும் அதிகாரத்தையும் இழந்த பூர்வ பௌத்தர்களையும் ஊருக்கு வெளியே தங்க செய்தனர், அவர்கள் மாட்டுத்தோல் பொருட்களை வைத்து தொழில் செய்வதால் அதைத் தீட்டாகக் கருதி அவர்களை ஒதுக்கி வைத்தனர் எனக் கூறும் அம்பேத்கர் வரலாற்றில் பிராமண-தலித் முரண் குறித்து இரு சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறார்:  1) கணிசமான பிற்படுத்தப்பட்ட சாதியினர் பிராமண பூசாரிகளை தமது சமய சடங்குகள் செய்ய கோருகிற, அவர்களை சார்ந்திருக்கிற நிலை ஏற்பட்ட பின்னரும் தலித்துகள் தொடர்ந்து இதை தவிர்த்தே வந்திருக்கிறார்கள் என மகாராஷ்டிரிய சூழலை வைத்து உதாரணம் தருகிறார். அங்குள்ள தலித்துகள் இடையே நிலவிய பிராமண விரோத சொல்லாடல்களை குறிப்பிட்டு வரலாற்றினூடே பிராமண-தலித் விரோதம் மறக்கப்படாமலே இருந்து வந்துள்ளது என்கிறார். பழைய சமஸ்கிருத நாடகங்களில் பௌத்தர்கள் பகடி செய்யப்பட்டும் துவேஷிக்கப்பட்டும் வந்துள்ளதற்கு மேற்கோள் காட்டி பிராமணர்களும் தலித்துகளை சுலபத்தில் மன்னித்து விடவில்லை என்கிறார். அதனாலே நான்கு வர்ணங்களுக்கு அவர்களுக்கு இடமளிக்காமல் வெளியேற்றினர், கோயிலை மையமிட்ட கிராமங்களின் அமைப்பும் அவ்வாறே தலித் சேரிகளை புறத்தே தோன்றச் செய்தனர் என்கிறார்.  இந்த போக்கு பிராமண-தலித் மோதல் போக்கு கலாச்சார தளத்தில், தொன்ம நினைவின் சரடில் இன்னும் தொடர்கிறது என்பதே அவருடைய நம்பிக்கை.  2) அடுத்து, மாட்டுத்தோல், மாட்டுக்கறி தீட்டு. ஏன் தலித்துகள் செத்த நாட்டுடன் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்? மாடுகளை உண்ணும் போக்கு ஆதிகால பிராமணர்களிடமே பிரதானமாக இருந்தது எனச் சொல்லும் அம்பேத்கர், இதற்கு வேதங்களில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி நிரூபித்து விட்டு, பௌத்தத்தின் எழுச்சிக்குப் பின்பு புலால் உண்ணாமை ஒரு முக்கிய விழுமியமாக கொண்டாடப்பட்டதால் பிராமணர்கள் மீது மக்கள் இடையே வெறுப்புணர்வு அதிகரித்தது என்கிறார். இதை உணர்ந்த பிராமணர்கள் தம்மை மறுகட்டமைப்பு செய்யும் நோக்கத்துடன் புலால் உண்ணாமையை தமது வாழ்க்கைப் பழக்கமாக, கொள்கையாகவே மாற்றிக் கொண்டனர். ஆகையால், பின்னர் பிராமணர்கள் பௌத்த அரசமைப்புகளை முறியடித்து பூர்வ பௌத்தர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களை நகரத்துக்கு வெளியே குடியமர்த்தினர். மாட்டுத் தோல், மாட்டுக்கறியுடன் இயைந்து வாழும் நிலையை ஏற்படுத்தினர் எனக் கூறுகிறார்.    இதன் பின்னணியிலே நாம் அம்பேத்கர்  பௌத்ததுக்கு மதம் மாறிய, தலித்துகள் சாதிய அமைப்பில் இருந்து வெளியே பௌத்தத்துக்கு மாற வேண்டும் எனக் கோரிய நிகழ்வைப் பார்க்க வேண்டும். (அயோத்திதாசர் இதையே தமிழ் நிலத்தின், வரலாற்றின், மொழியின் பின்புலத்தில் சொல்லுகிறார் என்பதைப் பார்க்கும் போது இந்த பார்வை அக்காலத்தில் வலுவாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்தது எனத் தெரிகிறது.) அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி சன் நியூஸ் சேனலில் நடந்த விவாதத்தில் பேசிய அ. முத்துக்கிருஷ்ணன் அம்பேத்கர் தலித்துகளும் பிற்படுத்தப்ப்பட்ட சாதியினரும் (தலித்-பகுஜன்) ஒன்றிணைந்து சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தினார் என்றும், பிற்காலத்தில் இந்த இரு தரப்பினருக்கும் இடையே பிளவு ஏற்படும்படி சில சக்திகள் செயல்பட்டன, அவர்களே கல்வியிலும் பிற உரையாடல்களிலும் அம்பேத்கரை தம்முடைய தேவைக்கேற்ப மாற்றி முன்வைக்க முயன்றனர் என்று சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.   தமிழில் தொண்ணூறுகளில் தலித் இயக்கம் அறிவுப்புலத்திலும் அரசியலிலும் எழுச்சி பெற்றது. அப்போது தலித்துகளின் அதிகார பிரதிநுத்துவம் சார்ந்த உரையாடல்கள் வலுப்பெற்றன. குறிப்பாக அரசியலில், இலக்கியத்தில், கலைகளில் தலித்துகள் எப்படி பிரதிநுத்துவம் பெற்றிருக்கிறார்கள், அவர்களுக்கு என agency உண்டா எனும் கேள்விகள் எழுந்தன. பெரியார், திராவிட சிந்தனை, திராவிட இயக்கம், திராவிட கட்சிகள் சார்ந்து அதிருப்திகள் தோன்றின. அதே நேரத்தில் ரவிக்குமார் உள்ளிட்ட அறிவுஜீவிகள் பெரியாரை நிராகரித்தராக சொல்ல முடியாது - அவர்கள் பெரியாரியத்தை செரித்துக் கொண்டு தலித் விடுதலை இயக்கத்தை முன்னெடுக்க தலைப்பட்டனர். அப்போது பதிப்பில் வெளியான அயோத்திதாசர் சிந்தனைகள், அவரைக் குறித்து எழுந்த தீவிரமான விவாதங்கள் அப்போதிருந்த திராவிட மரபின் ஆரிய எதிர்ப்பு + சுதந்திரவாத அனார்க்கிச சமூகநீதி சிந்தனைகளுக்கு ஒரு முற்றிலும் மாற்றான புதிய பரிமாணத்தை (இந்து ஆரியம் vs தமிழ் பௌத்தம்) அளித்தன.     இங்கு சாதியின் அடிவேரை ஆரிய மதத்தில் கண்டடைந்து அதை அறுக்க வேண்டும் எனும் அம்பேத்கரின் நோக்கம் பின்னடைவை பெற்று, இந்து மதத்துக்குள்ளாகவும் ஜனநாயக கட்டமைப்பிலும் போதுமான கலாச்சார, பொருளாதார, அரசியல் பிரதிநுத்துவம் பெற்றால் போதும் எனும் எண்ணம் தலித்துகளில் ஒரு தரப்பினரிடம் வலுப்பெற்றதை நாம் கவனிக்க வேண்டும். இந்த சமயத்தில் தான் திராவிடக் கட்சிகள் தலித்துகளை புறக்கணிக்கின்றன, அவர்களுடைய பிரதிநிதிகளாக தம்மைக் கருதுகிறார்கள், ஏதோ பிச்சையிடுவதைப் போல எண்ணி பெருமை கொள்கிறார்கள், உண்மையில் தலித்துகளின் விரோதிகளாக, ஒடுக்குமுறையாளர்களே திராவிட மத்திய சாதியினரே இருக்கிறார்கள் எனும் பேச்சும் தமிழில் வலுப்பெற்றது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தொண்ணூறுகளுக்குப் பிறகே மத்திய சாதிகளிடம் இருந்து தலித்துகள் மீது வன்முறைகள் அதிகமாயின - ஏனென்றால் அவர்கள் இப்போது நேரடியாக எதிர்த்து நிற்கத் தொடங்கினர். சில மத்திய சாதிக் கட்சிகளுக்கு இந்த தாக்குதல், வன்முறை, கலவரம் ஆகியவை தமது சாதியினரை திராவிட கட்சிகளிடம் இருந்து திசைதிருப்பி ஒரு வாக்குவங்கியாக மாற்ற உதவியது. இப்படி சாதிய பிளவுகள், மோதல்கள், அடையாளத் தேடல்கள் முழுக்க முழுக்க நடைமுறை அரசியலாகின.  இந்த காலகட்டத்தில் தான் கதைகளில், சினிமாவில் சாதியம் எப்படி செயல்படுகிற என்கிற ஆய்வுகளும் தீவிரமாயின - இவை பார்ப்பனியத்தை விடுத்து மத்திய சாதிகள் தலித்துகள் மீது காட்டும் துவேஷம் குறித்து திரும்பின. அதே நேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நான் ஏற்கனவே குறிப்பிட்ட சாதி எதிர்ப்பு ஆய்வுப் பின்னணியில் இருந்து விடுபடாமல் அம்பேத்கர், பெரியார் இருவரையும் பயன்படுத்தி தமது அரசியல் சித்தாந்த்ததை வலுப்படுத்தி முன்வைத்தது. இதுவே இன்றும் வெறும் அரசியல் பிரதிநுத்துவமாக சாதி விடுதலை பார்க்கப்படாமல் தொலைநோக்குப் பார்வையுடன் தலித் அரசியல் இங்கு செயல்பட உதவுகிறது.   திராவிட தரப்பினரிடமிருந்து தலித்துகள் பார்ப்பனர்களிடம் ஒரு நட்பை பாராட்டி, விமர்சனங்கள் விசயத்தில் மென்போக்கை கடைபிடிக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு இங்கு இரு பத்தாண்டுகளாகவே இருந்து வருகிறது. ஆனால் இது தலித் விமர்சகர்களில் ஒரு சிறு பகுதியினரின் போக்கு மட்டுமே என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதற்கான நியாயமும் அவர்களுக்கு உள்ளது - நடப்புலகில் அவர்களுடைய எழுச்சிக்கு, சம உரிமைக்கு பெரும் தடையாக உள்ளது பிராமணர்களின் இருப்பு அல்ல, மத்திய சாதியினரின் அதிகார அரசியலும் வன்முறையும் தான். இன்னொரு பக்கம் திராவிட கட்சிகள் தலித்துகளுக்கு தலைமையில் போதுமான இடத்தையும் அளிக்கவில்லை - சிறுபான்மை மத்திய சாதிகளுக்கு போதுமான பிரதிநுத்துவம் அங்கு உண்டு எனும் போது இது ஒரு எண்ணிக்கை சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல எனப் புரிகிறது.  இந்த பிரச்சனை அதிமுகவிடம் ஏன் தலித்துகளுக்கு வருவதில்லை என்றால் என்னுடைய புரிதல் படி அதிமுக ஒரு தனிநபர் மைய, சினிமா கவர்ச்சிக் கட்சி மட்டுமே, அதற்கென தனி சித்தாந்தமோ, கொள்கையோ இருந்ததில்லை, சமூகநீதியை திமுக அளவுக்கு அதிமுகவினர் முன்னெடுப்பதும் இல்லை. ஆகையால் அடித்தாலும் பிடித்தாலும் திமுக தான்.  அண்மையில் எழுத்தாளரும் எம்.பியுமான ரவிக்குமாரின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (தமிழ்க் கேள்வி - செந்தில் வேல்); அதில் அவரிடம் “ஏன் திருமா ஒரு தமிழர் தலைவராக பார்க்கப்ப்படுவதில்லை?” எனும் கேள்வி எழுப்பப்பட்டது. “முன்பு அம்பேத்கருக்கு நடந்ததே இப்போது திருமாவுக்கும் நடக்கிறது, அவரை நாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் தலைவராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம். இது வருத்தத்துக்கு உரியது.” என்றார் ரவிக்குமார். சீமானை யாரும் நாடார்களின் தலைவராக காண்பதில்லை. அதற்கு முன்பு விஜயகாந்துக்கோ இப்போது கமலுக்கோ அது நடப்பதில்லை. அவர்கள் அனைத்து சாதியினருக்கும் பொதுவானவராக இருக்கும் போது திருமா ஏன் அப்படி இல்லை? இது நியாயமாக ஒரு பகுதி தலித்துகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது நியாயமானதே. திமுக-காங்கிரஸ்-விசிக கூட்டணி இந்த அநீதியை விரைவில் சரி செய்ய வேண்டும்.   இங்கிருந்து நாம் அந்த “நீல சங்கி” எனும் பழிச்சொல்லுக்கு வருவோம். அது நியாயமானதா? நிச்சயமாக இல்லை. எல்லா சாதிகளில், மதங்களில் - கிறித்துவர்கள், இஸ்லாமியர் - இருந்தும் மக்கள் சனாதனத்துக்கும் இந்துத்துவாவுக்கும் ஆதரவளிக்கிறார்கள். ஏனென்றால் அது தருகிற அரசியல் பிரதிநுத்துவம், அதிகாரம் அவர்களுக்கு இப்போது தேவைப்படுகிறது. தொலைநோக்கில் இது மீண்டும் அவர்களை சாதி, மதவாரியாக பிரித்து அடிமையாக்கி அம்பேத்கர் தோன்றிய காலத்துக்கு வெகுபின்னால் தள்ளி விடும் என்றாலும் இப்போதைக்கு அவர்கள் இதை பயன்படுத்தலாம் எனக் கருதுகிறார்கள். நாம் இந்துத்துவ இஸ்லாமியரை “பச்சை சங்கி” என்றோ இந்துத்துவ கிறித்துவர்களை “சிலுவை சங்கி” என்றுமே சொல்லுவதில்லை. ஏன் ஒரு தலித்துகளுக்கு மட்டும் இந்த அவப்பெயர்? நாளை திமுகவினர் சிலர் இந்துத்துவாவுக்கு ஆதரவளித்தால் அவர்களை “திராவிட சங்கி” என்பீர்களா? அம்பேத்கர் காந்திக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்த கட்டத்திலும் கூட காந்தியத்துக்கு ஆதரவாக நின்ற தலித்துகள் உண்டு. அதன் பின்னும் இருந்தார்கள். அவர்களை எப்படி அழைப்பது?   யாரையும் நாம் ஒரு அடைப்புக்குறிக்குள் அடைக்கலாகாது. சிலர் சந்தர்ப்பவசமாக ஒரு நிலைப்பாடு எடுப்பார்கள், சிலர் சந்தர்ப்பவாதிகளாக ஒரு அரசியலை பேசுவார்கள். சிலர் தற்காலிக நோக்கத்துடன் தம்மளவில் நியாயமான காரணங்களுடன் செயல்படுவார்கள். எப்படி வெளிப்படையான திராவிட ஆதரவை எடுக்கிற தலித் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் (இமையம், அழகிய பெரியவன், கௌதம சன்னா) உண்டோ, எப்படி இடதுசாரி பின்னணியில் இருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் இணைத்து சிந்திக்கிறவர்கள் உண்டோ (அ. முத்துக்கிருஷ்ணன்) அப்படியே இன்னொரு தரப்பும் திராவிடத்துடன் உடன்படாமல், இந்துத்துவாவுடன் நேரடியாக உரசாமல் இருப்பார்கள். ஆனால் சாதி விடுதலை அல்லது சமத்துவம் எனும் நோக்கில் அனைவரும் ஒன்று தான். இதைப் புரிந்து கொண்டு விமர்சனங்களில் ஈடுபடுவது அவசியம்.  நீல சங்கி போன்ற பயன்பாடுகள் மத்திய சாதி சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்குமான பிளவை இன்னும் அதிகப்படுத்தி விடும். பார்ப்பனியத்துக்கு எதிராக பகுஜன்களும் தலித்துகளும் இணைந்து செயல்படுவது, இந்து மதத்தில் இருந்து பெருவாரியான மக்களை வெளியேற செய்து, இயன்றால் “கடவுளை”, “பிரம்மத்தை” இந்து மரபில் இருந்து வெளியேற்றி அம்மதத்தையும் காப்பாற்றுவது, அத்வைதத்தை முறியடிப்பது, பௌத்தத்தை மீட்டெடுப்பது ஆகிய காரியங்களை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளின் புலத்திலும் இடமற்றவர்களுக்கு அவர்களுக்கான இடத்தை அளிப்பது அவசியம். ஏனென்றால் சாதீய ஒடுக்குமுறை தலித்துகளுக்கு மட்டுமான பிரத்யேகப் பிரச்சனை அல்ல - White Tiger நாவலில் சொல்லப்படுவது போல இந்த இந்திய சாதீய சமூக அமைப்பு எனும் பல அடுக்கு கோழிக்கூண்டில் நீங்கள் கீழே இருக்கும் ஒருவர் மீது பீ பெய்தால் மேலே இருந்தால் ஒருவர் உங்கள் மீதும் கழிந்தபடி இருப்பார். எல்லாரும் பீக்கடலுக்குள் இருந்து கொண்டிருக்கும் போது இதில் யாரும் மேல் கீழ் இல்லை.   http://thiruttusavi.blogspot.com/2021/04/blog-post_16.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.