-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nunavilan · பதியப்பட்டது
கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம்’ சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்படும் சம்பளத்தொகையை முதலாளிமார் சம்மேளனம் வழங்கத் தயார் என்று தெரிவித்த சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் செயற்பட முடியாது என்றும் எனவே, கூட்டுஒப்பந்தத்திலிருந்து விலகவுள்ளதாகவும் தெரிவித்தார். 'கூட்டொப்பந்ததில் 300 நாட்களுக்கு வேலை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இப்போது நாளொன்றுக்காக அடிப்படை சம்பளம் என்ற அடிப்படையில் மட்டுமே வழங்க முடியும் எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிற்றுறை வீழ்சியடைந்தால் தொழிற்சங்கங்களும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும்' என்றும் சுட்டிக்காட்டினார். டிக்கோயா தரவளை முகாமையாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், தாங்கள் ஒருபோதும் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன்வைத்தபோது 2019 ஆம் ஆண்டே தாங்கள் ஆலோசனையொன்றை கூட்டொப்பந்த தொழிற்சங்கங்களிடம் முன்வைத்ததாகவும் தெரிவித்தார். 'வெறுமனே சம்பளத்தை அதிகரிக்க முடியாது. எனவேதான் தொழில்முறையில் சில ஆலோசனைகளை முன்வைத்தோம். அந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளபட்டிருந்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றிருக்க முடியும். 'தற்போது சம்பள நிர்ணய சபையினூடாக சம்பளவுயர்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் வழங்க தாயார். அந்தத் தொகை எங்களுக்கு மட்டுமல்ல சிறுதோட்ட உடமையாளர்களாக இருக்கும் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் வழங்க வேண்டும். இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் செயற்பட முடியது. எனவே கூட்டொப்பந்ததிலிருந்து விலகவுள்ளோம். கூட்டொப்பந்தத்தில் தொழிலாளர்களின் சம்பளமட்டுமல்ல அவர்களின் சுகாதார நலன் விடயங்களிலும் பல்வேறு விடயங்களை செய்து வந்தோம். இந்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு இனி கிடைக்காத நிலை தோன்றியுள்ளது. அதேபோன்று கூட்டொப்பந்த உடன் படிக்கையானது தொழிலாளர்களுக்கு சாதகமானதாகவே இருந்தது. எதிர்காலத்தில் பெருந்தோட்டத் தொழிற்றுறை வீழ்சியடைந்தால், அதற்கான பொறுப்பினை தொழிற்சங்கங்களும் அரசாங்கமே ஏற்க வேண்டும்' என்றார். Tamilmirror Online || ’கூட்டுஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம்’ -
By nunavilan · பதியப்பட்டது
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/Kabir-Hashim.jpg இரணைதீவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவின்மூலம் அரசாங்கம் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சி செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரிவினைவாதத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிட்டார். சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளபோதிலும் இவ்வாறான இடத்தை தெரிவு செய்துள்ளமையானது அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதாக கூறினார். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டல்களை பின்பற்றாத நாடு இலங்கை மாத்திரமே என்றும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார். இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு | Athavan News -
கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/iranaitivu-1.jpg கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளின் பொதுச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழு இந்த விடயம் குறித்து ஆராய்வதாக குறிப்பிட்டார். அவர்கள் அந்தந்த மாகாணங்களிலிருந்து கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை அடக்கம் செய்யப் பொருத்தமான இடத்தை தீர்மானிக்கும் வரை இந்த முடிவு தற்காலிகமாக இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அடக்கம் செய்வதற்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் சடலங்கள் கொழும்பு மற்றும் வெலிகந்த மருத்துவமனை போன்ற இரு இடங்களிலிருந்து தீவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனாவால் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு உறவினர்கள் இறுதி சடங்குகளுக்கு தீவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இறுதி சடங்குகள் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி அல்லது பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர் | Athavan News
-
யார் இந்த சங்கி, பிஜேபி சர்வாதிகார அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குகின்றது
-
By உடையார் · பதியப்பட்டது
சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் ஆரம்பம் 22 Views இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஆலய முன்றிலில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமானதுடன் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு பலக்கலைக்கழக மாணவர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவினை வழங்கிவருகின்றனர். மதத்தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்த போராட்டத்திற்கு அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இன்று தமிழ் மக்கள் வடகிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்ந்து முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது. https://www.ilakku.org/?p=43642
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.