Jump to content

ஆகாயத்தாமரை (வல்வை சகாறா)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா இதை தொடர் கதை ஆக்குங்கள்

 

தொடர்கதையா????????? ஆனை விடுடா சாமி ஓடிப்போயிடுறேன் உள்ளதிலேயே எழுதப் பஞ்சி... இந்த  லட்சணத்தில தொடர்ந்து எழுதுவதா? :o

 

எழுதுவேன் இப்ப இல்ல  60 வயதில் ஓய்வு பெறுவேன் அல்லவா அப்போது நிறைய எழுத எண்ணியுள்ளேன் இப்ப எங்கேப்பா நேரம் ? அது பாட்டுக்கு நம்ம பாஞ்ச் மாதிரி பாஞ்சு ஓடிடுது. :icon_mrgreen:

கதை நல்லாயிருக்கு...

 

வாசிச்சிட்டு வஞ்சகம் இல்லாமல் பதிவிட்டதற்கு நன்றி கு.சா அண்ணை :rolleyes:

 

கடந்த வாரமே உங்கள் கதையை வாசித்திருந்தாலும் என் கணனியின் சிக்கலால் உங்களுக்கு எழுத மறந்துவிட்டேன். வித்தியாசமாக இருக்கிறது கதையின் எழுத்து.

 

ஒவ்வொரு முறையும் எழுதும்போது வித்தியாசப்படுத்தேல்லை என்றால வாசிக்க மாட்டார்கள் சுமே அதான் இப்படி :D

Link to post
Share on other sites
  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/5/2015 at 5:56 PM, வல்வை சகாறா said:

 

நன்றி மீராகுகன்

 

ஆணாக நம்மை நினைத்துக்கொண்டு எழுதுவது அதிகசாத்தியப்படுகிறது. காரணம் ஆண்களின் திறந்த மனமும் உரையாடல்களுமாக இருக்கலாம். பெண்களின் உணர்வுகளைப்பிரதிபலிப்பதற்கு இன்னும் நான் நிறையத்தூரம் பயணிக்கவேண்டி இருக்கிறது. ஏனெனில் என்னுடன் சுமார் 15 பெண்கள் வேலை செய்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரகம் சில சமயங்களில் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வது என்பது மிகக்கடினமாக இருக்கிறது. ஆண்களுக்கு பொதுக்குணாதிசயம் என்பது அதிகபடியாக ஒன்றாகவே உணர முடிகிறது ஆனால் பெண்களின் குண இயல்புகளை ஒரு பெண்ணாக இருந்தும் ஆழமாக நோட்டமிடமுடிவதில்லை. ஒரு படைப்பாளியாக இன்னும் முழுமைபெற முடியாமல் நான் இருப்பதாக உணர்கிறேன். இதன் எதிர்ப்பக்கத்தையும் செவ்வனே எழுத முடிந்தால்தான் நான் இக்கதையை எழுதியதில் வெற்றி பெற்றவளாக கொள்வேன் அதனை செம்மையுற எழுதமுடியாவிட்டால் தோல்வியாகவே உணரமுடியும். எனிவே முயன்று கொண்டிருக்கிறேன்.... ஆமாம் என்னம்மா ஆண்களைச் சீண்டி வம்புக்கு இழுத்திருக்கிறீர்கள்...... :blink::blink:

 

முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் மீராகுகன் எதிர்வரும் நாட்களில் மறுபக்கம் சிறுகதையாக....

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜெயலலிதாவின் சிலையுடன் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் ஆறு அடி உயர மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவியொருவர் மடிக்கணினி பெறுவது போன்று சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைவிட, அருங்காட்சியகத்தில் எட்டு அடி உயர மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்காவும் மற்றொரு புறம் டிஜிற்றல் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், காணொளி மற்றும் ஒலி வடிவப் பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் என்பன அமைக்கப்பட்டு வந்தன. இந்த பணிக்காக ஜெயலலிதா நினைவிடம் கடந்த 27ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று திறக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-சிலையுடன்-அ/
    • அமெரிக்காவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர கால சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி டோஸ்கள் தயாரிக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், உடனடியாக 40 இலட்சம் டோஸ்கள் ஏற்றுமதிக்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/அமெரிக்காவில்-3ஆவது-கொரோ/
    • அணுசக்தி மையங்களில் ஐ.நா. கண்காணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அமுல்படுத்தியது ஈரான்! ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு (ஐஏஇஏ), தங்கள் நாட்டு அணுசக்தி நிலையங்களில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், ஐஏஇஏ-வுடனான தங்களது ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையை இதன் மூலம் ஈரான் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை அளிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளாவிட்டால், ஐஏஇஏ-வுக்கு கண்காணிப்பு கெமரா பதிவுகள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பான தாமதம் காரணமாக, அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை கையளிக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அணுசக்தி-மையங்களில்-ஐ-நா/
    • தற்கொலையைத் தடுக்க தனித்துறையை உருவாக்கியது ஜப்பான்! ஜப்பானில் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை அமைச்சராக ஜப்பான் அரசாங்கம் நியமித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜப்பான் பெண்கள் இந்தப் பிரச்னையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை இல்லாமலும், உரிய வயதடைந்தும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் தனிமையிலேயே வாழ்ந்து, அதீத மன அழுத்தத்தில் தவித்து வருகிறார்கள். http://athavannews.com/தற்கொலையைத்-தடுக்க-தனித்/
    • இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள், நெடுக்ஸ்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.