Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

வல்லை முனீசுவரர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

11046564_10153727517905744_2338746810012

வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா? வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் என் நெஞ்சைக் குடையும் கேள்வி இது.

.

1902 ஆம் ஆண்டில் வல்லைப் பாலம் கட்டப்பட்ட பின்னர் வடமராட்சிக்கும் வலிகாமத்திற்குமான இணைப்புப் பாதையாக வல்லைப் பாதையே விளங்குகின்றது. அதற்கு முன்னர் வடமராட்சி வலிகாமம் இணைப்புப் பாதையாக வாதரவத்தையே விளங்கியது. இதனால் ஒருகாலத்தில் வீரவாணி (வாதரவத்தை) செழிப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்கிறது.

.

வல்லையினூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யப் பயந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது பாலைநிலச் சாயலைக் கொண்டிருந்தது என்பதற்கு அப்பால் அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் எனப் பெருந்திருடர்களின் ஆட்சியும் அப்பிரதேசத்தில் ஒரு காலத்தில் நிலவியதாம்.

.

புறாப்பொறுக்கியை மையப்படுத்தி வல்லை முனியின் (முனீசுவரன்) ஆதிக்கம் நிலவியது. இவற்றிற்கெல்லாம் பயந்த மக்கள் வல்லை வெளியூடான பயணத்தைத் தவிர்த்தனர். கப்புது – வாதரவத்தை - நீர்வேலி ஊடாகவே பயணம் மேற்கொண்டனர்.

.

காதலியாற்றுப்படை பாடிய வடமராட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை வல்லை முனியைப் பற்றியும் திருடர்களைப் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

.

“புறாப் பொறுக்கி ஆலென் பெருமரம்

தன்னைத் தன்வாழ் பதியெனக் கொண்ட

வல்லை முனியும் வாரிரு சங்கிலி

கலகல வென்னப் பலபல ஒலியொடு

தன்பரி வாரம் சார்ந்து சூழப்

பாதி யாம வேளை தன்னில்

கூகூ என்று குமுறிக் குமுறிப்

பற்பல உருவோடு எழுந்து இருந்தும்

இராவழி போந்திடு மாந்தரை அடித்துந்

தொல்லை செய்யும் பொல்லாத் தனியிடம்”

புறாப்பொறுக்கியை மையப்படுத்தி இருந்த முனீசுவரர் வல்லைக் கடல் நீரேரிக்கு அண்மையில் மையங்கொண்டார். அதற்குப் பின்னர் போவோர் வருவோர் உண்டியலில் காணிக்கை செலுத்தி வணங்கி – தம்மைப் பாதுகாக்குமாறு வழுத்திப் பின் பயணந் தொடர்வதை வழக்கமாக்கினர்.

.

காலவோட்டத்தில் முனிசுவரருக்குப் பக்கத்தில் பிள்ளையாரும் சேர்ந்து கொண்டார். (பிள்ளையார் கோவில் வந்த காலம் பற்றி எனக்குச் சரியாக ஞாபகமில்லை. ஆனால் ஆமியின் வரவுக்குப் பின்னர்தான் இந்தக் கோவில் வந்தது என்கின்றனர்.)

போர்க்காலத்தில் வல்லை வெளிப் பயணம் உயிராபத்து மிக்கதாக விளங்கியமையால் பிள்ளையாரை நேர்ந்து வணங்கிப் பயணம் செய்வோருடைய எண்ணிக்கையும் பெருகியது. இதனால் முனீசுவரரை வணங்குகின்றார்களோ இல்லையோ பிள்ளையாரை வணங்கத் தவறுவார் இலர் எனக் கூறும் அளவிற்கு விநாயகரின் செல்வாக்கு மேலோங்கியது.

அண்மைக் காலமாக எதிரே ஓர் ஆஞ்சநேயரும் இங்கு தோற்றம் பெற்று விட்டார். (ஆண்டு சரியாக ஞாபகமில்லை. ஓர் ஐந்தாண்டுக்குள் இருக்கலாம்)

.

ஆக, வல்லை முனீசுவரர், அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் என இவர்களை எல்லாம் இக்காலத்தவர்கள் மறந்து விட்டனர். விநாயகரும் ஆஞ்சநேயரும் செல்வாக்குப் பெற்று விட்டனர். காலமாற்றத்திற்கேற்ப வழிபாட்டு முறையும் மாற்றங்காணத் தொடங்கிவிட்டது.

.

இன்று 05.04.2015 வடமராட்சிக்குச் செல்லும் தேவை ஏற்பட்ட போது மூன்று கோவில்களுக்கும் மத்தியில் ஒரு பதினைந்து நிமிடங்கள் நின்று மக்கள் வழிபாட்டைத் தரிசித்தேன். ஒரு சில வாகனங்களைத் தவிர ஏனையவை யாவும் கோவிலடியில் தரித்தன. அதில் எல்லோரும் பிள்ளையாரைக் கைகூப்பித் தொழுதனர். சிலர் திருநீறு பூசினர். சிலர், அருகில் இருந்த இரப்போர்க்கு இரங்கி வழங்கினர். சிலர் ஆஞ்சநேயரையும் வணங்கினர். ஓர் ஐம்பது பேரை அவதானித்திருப்பேன். ஐந்துபேருக்குள்ளாகத்தான் வல்லை முனீசுவரரை வழிபாடு செய்தனர். இது ஏன் என்றுதான் என்னுள் விடை கிடைக்கவில்லை.

.

இதனைத்தான் முந்தி வந்த செவியை பிந்த வந்த கொம்பு மறைத்தது என்று சொல்லி வைத்தார்களோ?

Facebook : Santhiramouleesan Laleesan

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவ்வழியால் போய்வரும்போது பலமுறை வணங்கி வந்துள்ளேன்...! மோட்டார் சயிக்கிள் பயணத்தில் அங்கு சற்று இளைப்பாறிச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படியே கல்லுன்டாய் வயிரவர் கோவிலும்...!! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
இதை படித்தவுடன் அந்த சோழககாற்று சாதுவான உப்பு வாடையுடன் முகத்தில் அறைந்து விட்டு போனது மாதிரி ஒரு உணர்வு அவை எல்லாம் இனி கனவே .
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முனியப்பருக்குப் பக்கத்தில் இரண்டு கடவுள்கள் முளைத்ததை இரண்டு வருடங்களுக்கு முன்னர் போனபோது கவனிக்கவில்லை. நீண்ட 50 கலிபர் துவக்குடன் தாழப் பறந்து வந்த ஹெலியைப் பார்த்ததும் காரைப் பற்றைக்குள் உருண்டு உடம்பெல்லாம் காரைமுள் ஏறியதும், அதனாலேயே இரண்டு, மூன்று நாட்கள் கண்மூடிய போதெல்லாம் ஹெலியில் என்னைத் தூக்குவதுபோல் பிரமைவந்து காய்ச்சலடித்ததும் முனியப்பரால்தான். ஆனால் முதல்நாள் சண்டையில் அடிச்ச 50 கலிபர் எம்ப்ரி கப்ஸ் (empty caps) மட்டும் கிடைக்கவேயில்லை!

Link to post
Share on other sites

போன வருடம் போனபோது வல்லை முனியப்பரோட நிண்டேன். :)

எனக்கென்னமோ முனீஸ்சுக்குத்தான் அதிக வரவேற்பிருந்தாப் போல தெரிந்தது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பத்து வருசம் ஆச்சு ஒரு பத்தினியை சேத்து ..........இந்த பாடல் கண்டு புடிங்க பாக்கலாம் .....    
  • பாடங்கள் பயிலப்படுவதில்லை என்பது சரியானதாக இருந்தாலும் கூட சமூகத்தின் மீதான பயமே அதிகமாக உள்ளது. இதனால்தான் பாதிக்கப்படுபவர்களின் குரலும் அடக்கப்படுகிறது..  Postnatal depression சரி அல்லது வேறு எந்தவிதமான உடல்உள பாதிப்புகள் சரி, அதற்கான உதவிகளை நாடுபவர்களையும் சமூகம் பலவிதமான சங்கடங்களையே கொடுக்கிறது, அதுமட்டுமல்ல அப்படி உதவிகளை நாடுவதே குடும்பத்திற்கு அவமானம் என்ற போக்கே புலம்பெயர் தேசத்திலும் சரி ஊரிலும் சரி நிலவுகிறது. எங்கள் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும், அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் அவசியம்.    
  • வளவன், உங்களடைய கருத்துக்கள் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  வைத்தியர்கள் கொலஸ்ரரோல் இருந்தால் வைத்தியர்கள் கொழுப்பு உணவைக் குறைக்குமாறு சொல்வது வழமை. உடல் சரியாக இயங்குவதற்குக் கொலஸ்ரரோல் அவசியம். உணவுகள் மூலம் சரியாக அதனை வழங்காவிட்டால் 70 வீதமான கொலஸ்ரரோலை உடல் தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும். இது உடலில் மிதமிஞ்சிப் போவதற்குக் காரணம் நாம் உண்ணும் கொழுப்பு மட்டுமல்ல. சோறு மா சாப்பாடுகள்தான் முக்கிய காரணம். மிதமிஞ்சிய கொலஸ்ரரோலை விடுவிப்பதற்கு நல்ல கொலஸ்ரரோல் (HDL) அவசியமானது. இது குறிப்பாக தாவர எண்ணை, மீன் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. இதனை உடல் உற்பத்தி செய்யாது. கோழி உண்ணும் உணவைப் பொறுத்து முட்டையிலும் நல்ல கொழுப்பு omega 3 உண்டு.  ஊரில் யார் இப்போது வியர்வை சிந்த கடின உழைப்பில் வாழ்கிறார்கள் ? அத்துடன் குளிர் காலத்தில்தான் அதிக கலோரிகள் தேவைப்படும். சாதாரணமாக ஒருவருக்கு 2000 கி.ககோரிகள் நாளாந்தம் தேவைப்படும் என்றால் அதே ஆள் கடும் குளிர் நாடொன்றில் குளிரில் வேலை செய்தால் 5000 கி.கலோரி வரை தேவைப்படும். எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான். முட்டை அதிகமாக உண்பதால் கொலஸ்ரரோல் அதிகமாகும் என்று திட்டவட்டமாக நிரூபிக்கப்படவில்லை. ஓரளவு விரும்பியதைச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் உடற்பயிற்சிதான் ஒரே வழி.  
  • 🤣🤣 போறபோக்கில கண்டதையும் அடிச்சு விட வேண்டியது தான்... நான் எண்ணிய வரைக்கும்... -->தவிபு இல் இருந்து வீரச்சாவடைந்த ஒட்டு மொத்த முசிலீம் மாவீரர் எண்ணிக்கை 60 இற்கு கிட்ட. கிடைத்த பெயர் குறிப்புகள் அவ்வளவே.. ஏதேனும் விடுபட்டிருந்தால் எனக்குத் தெரியாது. (இவர்களை நான் என்றென்றும் போற்றுவேன்.. மாற்றுக்கருத்துக்கு இடமில்லை) -->ஏனைய இயக்கங்கள் பற்றித் தெரியாது.. ஒரு அண்ணளவாக ஒட்டு மொத்தமாக 100 இற்குள்தான் இருக்கலாம் என்று எண்ணுகீறேன். கதை இப்பிடி இருக்க இந்த சோனிக்கு எங்கிருந்து 1000 வந்தது? ஒட்டு மொத்த கட்டுரைக்கும்....
  • Album : Skanda Shasti Kavacham Song: Thuthiporku val vinai pom Lyrics : Traditional   டைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனிஒளி யொவ்வும் குண்டலி யாம் சிவகுகன் தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறுஇடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறுஇரு திண்புயத்து அழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்துஅணி மார்பும் செப்பழகு உடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற் சீராவும் இருதொடை அழகும் இணை முழந்தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதன் என்று உன் திருவடியை உறுதியென்று எண்ணும் எந்தலை வைத்து உன் இணையடி காக்க என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க விழிசெவி இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்து இருபல்முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க என்இளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேர் இள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழூபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நல் துணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்கத் தடையறத் தாக்க பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும் விட்டாங்காரரும் மிகு பல பேய்களும் தண்டியக்காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகள் உடனே பலகல சத்துடன் மனையில் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தோதாள் எனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடல் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்குச் செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணல் எரி தணல்எரி தணல்எரி தணல்அது ஆக விடுவிடு வேலை வெருண்டது ஓடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்து ஓடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் புரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தறணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும் உன்னைத்ட் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே! சையொளி பவனே! திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே! பரிபுர பவனே! பவமொழி பவனே! அரிதிரு மருகா! அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்! கந்தா குகனே ! கதிர்வே லவனே ! கார்த்திகை மைந்தா ; கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே ! சங்கரன் புதல்வா ! கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா ! பழநிப் பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா ! செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா ! சமரா புரிவாழ் சண்முகத்து அரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க, யான் உனைப்பாட எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப் படினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன் அருள் ஆக அன்புடன் இரட்சி அன்னமும் சொர்ணமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க, மலைக்குரு வாழ்க ! வாழ்க வாழ்க, மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க, எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்யினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே பிள்ளையென்று அன்பாய் பிரியம் அளித்து மைந்தஎன் மீதுன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை கலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி நேச முடன் ஒரு நினைவது ஆகிக் கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு ஓதியே ஜெபித்து உகந்து நீறுஅணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்பர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றவர் எல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதன் எனவும் நல் எழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்குரு சங்காரத்தடி அற்ந்தென உள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்து உண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுது அளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி என்னைத்தடுத்து ஆட்கொள்ள எந்தனதுள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேன பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இரும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலா போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓர் அரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சண்முகா......... சரணம்!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.