Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

எது உன்னுடையது..?


Recommended Posts

எது உன்னுடையது..?

 

god-bridge.jpg

 

 

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

 

கடவுள், "வா மகனே, நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா..? இவ்வளவு சீக்கிரமாகவா..? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது..?"

"மன்னித்துவிடு மகனே, உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."

 

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது..?"

"உன்னுடைய உடைமைகள்..!"

"என்னுடைய உடைமைகளா..!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.....?"

"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

 

 

"என்னுடைய நினைவுகளா...?"

"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

"என்னுடைய திறமைகளா....?"

"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.. அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

 

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா...?"

"மன்னிக்கவும், குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்..?"

"உன் மனைவியும், மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது.. அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்..."

 

"என் உடல்....?"

"அதுவும் உன்னுடையது கிடையாது...உடலும் குப்பையும் ஒன்று..."

"என் ஆன்மா...?"

"இல்லை.... அது என்னுடையது....!"

 

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.... காலி பெட்டியைக் கண்டு.....,

 

 

கண்ணில் நீர் வழிய கடவுளிடம், "என்னுடையது என்று எதுவும் இல்லையா...?" எனக் கேட்க,

 

கடவுள் சொல்கிறார்,

 

"அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்..

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே.....! "

ஒவ்வொரு நொடியும் வாழ்...

உன்னுடைய வாழ்க்கையை வாழ்...

மகிழ்ச்சியாக வாழ மறக்காதே...

அது மட்டுமே நிரந்தரம்...!

உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...."

 

 

 

- பேரனோடு இந்த நொடிவரை ரசிக்கும்பொழுது, இணையத்தில் படித்தது.. :)

Link to post
Share on other sites

அண்மையில் ஒரு பேச்சாளர் சொல்லக் கேட்டது: "You never see a U-HAUL truck behind a hearse"

 

U-HAUL truck: அமெரிக்காவில் வீடு/ஊர் மாறும் ஆட்கள் பயன்படுத்தும் ட்ரக்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனிதன் மரணத்தின் பின்னர் எதையும்  கொண்டு செல்வதில்லை.
அவரவர் வாழும் முறையில் பலவற்றை பூமியில் விட்டுச் செல்கின்றான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
பிறப்பு என்பது தோற்றம். மரணம் என்பது மறைவு. பூமியில் ஐந்து மூலப்பொருட்கள் ஒன்றுசேரும்போது அவற்றில் உள்ள அணுக்களின் அளவுகளுக்கும், தன்மைகளுக்கும் ஏற்ப தோற்றங்கள் புலப்படுகின்றன. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்........... 
 
எதுவும் வருவதுமில்லை போவதுமில்லை.
இந்த உலகத்தில் என் அறிவுக்கேற்ப என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.
இது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.  
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கடவுள் பெட்டிக்குப் பதிலாய் வெறும் கையை மூடிக் கொண்டுவந்து திறந்து காட்டியிருக்கலாம்... இவர் கொஞ்சம் பழைய கடவுள் போல....! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கையின் தத்துவத்தை எவ்வளவு அழகாக இந்த கதையில் கூறியிருக்கிறார் .

ஆனால் எம்மால் தான் இவ் உண்மையை ஏனோ இன்னமும் உணர முடியாமல் பல்வேறு ஆசைகளிலும்

கற்பனை உலகிலும் வாழ்கிறோம் .

 

Suvy, உங்களுக்கு நிச்சயம் கணணியில் எல்லாவற்றையும் விளக்கமாக காட்டுவார் நவீன கடவுள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 Registered Retirement Savings Plan (RRSP) இப்படி எல்லாம் இருக்கு .ஆயுள் இன்சூரன்ஸ் கூட 99% மீதமானவர்கள் செய்தே இருக்கின்றார்கள் .

 

மனிதர்கள் வாழும் வாழ்க்கை தான் உண்மையில் யதார்த்தமானது.

கதைதான் கற்பனையானது .

தத்துவம் கதைக்குத்தான் சரி நடைமுறைக்கு அல்ல .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வன்னியரே

இப்போ சேர்த்து வைத்திருப்பதை என்ன தான் செய்வது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதை வாசிக்க... சுவராசியமாக இருந்தாலும்,
ரொம்ப நல்லவனாக இருந்தால்... "பேயன், பிழைக்கத் தெரியாதவன்" என்று சொல்லும் உலகம் இது.
"அம்மணமான ஊரில், கோவணம் கட்டிக் கொண்டு நிற்பவன் முட்டாள்." :D  :lol:

Link to post
Share on other sites

"என் ஆன்மா...?"

"இல்லை.... அது என்னுடையது....!"

ஆன்மாவை கடவுள் சரியாக பிக்கப் பண்ணாவிட்டால் :unsure: அது பாழடைந்த பங்களா, பேஸ்மென்ட் என்று ஒதுங்கிவிடும்.. :o:lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.