• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
arjun

ஜெயகாந்தன் எழுத்துலகம்

Recommended Posts

நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
கைவிலங்கு (ஜனவரி 1961)

யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
பிரம்ம உபதேசம் (மே 1963)
பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
எங்கெங்கு காணினும்... (மே 1979)
ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
கரிக்கோடுகள் (ஜூலை 1979)
மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)
பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
இந்த நேரத்தில் இவள்... (1980)
காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
காரு (ஏப்ரல் 1981)
ஆயுத பூசை (மார்ச் 1982)
சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)
கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
உன்னைப் போல் ஒருவன்
ஹர ஹர சங்கர (2005)
கண்ணன் (2011)

சிறுகதைகள் தொகுப்பு[
ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
தேவன் வருவாரா (1961)
மாலை மயக்கம் (ஜனவரி 1962)
யுகசந்தி (அக்டோபர் 1963)
உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
குருபீடம் (அக்டோபர் 1971)
சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
சுமைதாங்கி
பொம்மை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

http://sinnakuddy1.blogspot.co.uk/2015/04/blog-post_9.html

 

எழுத்தாளர் ஜெயகாந்தன் -எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்-வீடியோ

 

 

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர்.
சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது.
ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார்.
கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009- ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மறைந்தார்.


நன்றி -த இந்து
இளம் வயதில் பலரை போல நானும் வெறி பிடித்த இவரின் வாசகன்...இவரது சிறுகதை நாவல் மட்டுமன்றி இவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் தொகுப்புகளை தேடி தேடி அலைந்து வாசித்து இருக்கிறேன்...இவர் தன்னை புதுமைபித்தனின்  தீவிர வாசகனாக கூறி கொள்ளுவதுண்டு..இவரை வாசித்த பிறகு தான் புதுமை பித்தனை பலமுறை வாசித்து இருக்கிறேன்.  


பிற்காலத்தில் இவரது அரசியல் தளும்பல்கள் .தமிழ் மொழி எதிரான தமிழருக்கு எதிரான பேச்சுகளில் அதிருப்தி இருந்தாலும் இவரின் எழுத்து துள்ளலுக்கு என்றும் ரசிகனே...

 .இவரது எழுத்து பற்றி பிற்காலத்தில் பலர்  காரசாரமான விமர்சனத்தை வைத்திருந்த்தை அறிந்திருந்தாலும் ...


இன்றும் போற்றும் எனது துரோணருக்கு எனது அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

நான் விரும்பிப் படித்த பல நாவல்களுக்கு ஆசிரியரான ஜெயகாந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. பிற்காலத்தில் அவர் தமிழ் தேசியத்திற்கும் போராளிகளுக்கும் எதிரான கருத்தை வெளியிட்டதால் அவர்மீது வெறுப்பேற்பட்டுவிட்டது.  ஒரு நல்ல ஆக்க இலக்கிய கர்த்தாவான திரு ஜெயகாந்தனின் மறைவையிட்டு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை। Tulpen எழுதியதுபோல யதார்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிடடால் நான் ஒன்றும் செய்யமுடியாது। யாரிடம் பிரதேசவாதம் ஊறியிருக்கிறது என்று இப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்। நீங்கள் சொல்லுகிற மக்கள் வன்னி தமிழர்களையோ, கிழக்கு தமிழர்களையோ தமிழர்களாக நினைப்பதில்லை। யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திகளை அல்லது மற்றைய தேவைகளை கொண்டுசெல்லும்போது ஏன் வன்னி கிழக்கு  மக்களை புறக்கணிக்கிறீர்கள்। எத்தனை தடவைகள் வெளி நாட்டு தூதுவர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகளை , முதலீட்டர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லுகிறீர்கள்। ஏன் வன்னி கிழக்குக்கு அழைத்து செல்வதில்லை। அத்தி பூத்தாப்போல எப்பவாவது ஒரு தடவை இது கிழக்கில் நடக்கும்। கடந்தகாலங்களில் எப்படியும் யாழ்ப்பாண அதிகாரிகளே வன்னி , கிழக்கில் முதன்மை உத்தியோகத்தர்களாக இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்। வன்னி கிழக்கு பிரதேசத்தவர்கள் அப்படியான பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பியதே இல்லை।  உங்களுக்கு உதாரணத்துக்கு சிலவற்றை சொல்லுகிறேன்। மட்டுவில் அரச அதிபராக திரு மோனகுருசாமி அவர்கள் இருந்தார்கள்। அவர் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்க இருந்ததால் சிலருக்கு அதில் விருப்பமிருக்கவில்லை। எனவே புலிகள் மூலமாக காய் நகர்த்தினார்கள்। இறுதியாக அவர் காயப்பட்டு செயட்பட முடியாமல் போனது। இவர் எனது ஆசிரியராகவும் இருந்தார்। பின்னர் SLAS பரீட்ச்சை மூலமாக நிர்வாக  சேவைக்குள் உள்ளேற்கப்படடார்।  வேறு சில காரணங்களை கூறினாலும் அவர் மடடக்களப்பை சேர்ந்தவர் என்பதுதான் முக்கிய காரணம்। அடுத்தது வவுனியாவில் அந்த நாட்களில் ஒரு சங்கம் இருந்தது। அதுதான் யாளகற்றி சங்கம்। யாழ்பாணத்தவரை அங்கிருந்து அகற்றுவது। இவர்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள மக்களுக்கு அது பிரச்சினையாக இருந்தது। இருந்தாலும் அது சரியோ பிழையோ என்று சொல்லமாடடேன் , நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்। அடுத்தது மன்னார் அரச அதிபராக இருந்த மன்னரைசேர்ந்த திரு மரியதாசன் குரூஸ் அவர்கள்। இவர் அரச அதிபரானது அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறியவர்களூக்கு பிடிக்கவில்லை। எனவே அவர்கள் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களூடாக இவரை மாற்ற முயட்சித்தார்கள்। அது முடியாமல்போனபோது புலிகளை வைத்து காய் நகர்த்தினார்கள் । இவர்மீது பிழையான குற்றச்சாட்டுக்களை வைத்து மரணதண்டனை நிறைவேற்ற புலிகளை கங்காரு நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட்து। அந்த நீதிமன்றில் ஐந்து பேர் இருப்பார்கள்। அவர்களுக்கு தலைமை நீதிபதியாக அப்போது சலீம் (இயக்க பெயர்)என்னும் புலிதான் இருந்தான்। அங்கு இரண்டுக்கு இரண்டு என்னும் அளவில் இருந்ததாம் ஐந்தாவது இருப்பவரின் கைகளில்தான் முடிவு இருந்தது,  இப்போது இவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை ) அதட்கு எதிராக வாக்களித்துவிடடார்। அவர் அரச அதிபருக்கு தெரிந்தவரும்  , அறிந்தவருமாக இருந்தபடியால்  அதட்கு சம்மதிக்கவில்லை ।  இல்லாவிடடால்  மண்டையில்  போட்டிருப்பார்கள் । இத்துடன்  விடவில்லை। அவரது சாரதிக்கு  பணம்  கொடுத்து  புலிகள்மூலமாக  குண்டுகளை  அவரது வாகனத்தில்  கொழும்புக்கு  அனுப்பி  சதி செய்தார்கள் । இருந்தாலும் இறைவன்  தன்னை  காப்பாற்றியதாக  கூறினார்  । அவர் இரண்டு மாதம்  போலீஸ்   காவலில்  இருக்க  நேரிட்ட்து । அதன்  பின்னர் இது   வரைக்கும்  யாழ்ப்பாணத்தவரே  அந்த கதிரையில்  அமர்ந்திருக்கிறார்கள் । மன்னாரில்  எத்தனையோ  தகுதியானவர்கள்  இருந்தாலும் அவர்களுக்கு சந்தர்ப்பம்  கொடுக்கப்படவில்லை ।இப்போது இவர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆலோசகராக கடமை புரிகிறார்।  இதைப்போல இன்னும் எத்தனையோ எழுதலாம்। இனியாவது யார் பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்। இங்கு நான் பெயர்கள் குறிப்பிடடதான் நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதட்கே।  மத்தபடி சம்பந்தனோ, சுமந்திரனோ, விக்கியோ  எவன் வந்தாலும் எல்லாம் ஒன்றுதான்।  
  • மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல - திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள். மலேசியா விழித்ததை அடுத்து கடந்த மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13 முக்கியமான செல்வந்த நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. மலேசியா சுற்றுசூழல் அமைச்சர் தமது நாடு உலகின் குப்பைத் தொட்டியல்ல என தெரிவித்ததே இந் நிலைக்கு காரணமாகும் . பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 42 கொள்கலன்களை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் யியோ பீ யின்  2018 ஆம் ஆண்டில் சீனா பிளாஸ்ரிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்ததிலிருந்து தேவையற்ற குப்பைகளின் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.ஆனாலும் மலேசியாவும் ஏனைய நாடுகளும் இதற்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மேலும் 110 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். எங்கள் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. நாங்கள் கழிவுகளை திருப்பி அனுப்ப விரும்புகிறோம், மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம் எனவும் வலியுறுத்தியுள்ளார். http://www.vanakkamlondon.com/மலேசியா-உலகின்-குப்பைத்/ டிஸ்கி : ஹிந்திய ஆட்சியாளர்கள் எல்லாம் யியோ பீயின் இடம் .. ☺️ .. ஒரு றம்ளர் தேத்தண்ணி வாங்கி குடிக்குக .. என்று சொல்ல வந்தன். 😄
  • யாழ்.கொழும்புத்துறையில் காணி கபளீகர முயற்சி தோல்வி..! அதிகாரிகள், அளவையாளர்களை விரட்டியடித்த மக்கள்! யாழ்.கொழும்புத்துறை- நெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மோற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினால் அங்கு சென்றிருந்தனர். ஆயினும் காணிகளை அளவிடுவதற்கு காடுகளின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசுயல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ்.பிரதேச செயலாளர்  சுதர்சன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். ஆயினும் மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்து தெரிவித்த எதிர்க்புக்களையடுத்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் திருப்பி அணுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இதன்போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலர் பொது மக்களின் எதிப்புக்களால் இந்த அளவீடுகளை நிறுத்துவதற்கும். இது சம்மந்தமாக ஆராய்ந்த தொடர்ந்து அளவீட்டு பணிகளை முன்னெடுக்கப்பட்ட பொவதில்லலை என்றும் தெரிவித்திருந்தார். https://jaffnazone.com/news/15518
  • சண்டைக்கோழியினால் கொல்லப்பட்ட இந்தியர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கோழிச்சண்டை தடைசெய்யப்பட்ட ஒரு விளையாட்டு. அப்படியிருந்தும், பலர் இந்த விளையாட்டில் கலந்துகொள்கிறார்கள். சண்டைக்கென்று வளர்க்கப்படும் சேவல்களின் கால்களில் கூரான சிறிய கத்தி கட்டப்பட்டிருக்கும். சண்டையின்பொழுது எதிர்ச் சேவல் இக்கத்தியினால் குத்தப்பட்டு கொல்லப்படும் வரைக்கும் சண்டை தொடரும். மிருகவதையினைக் காரணம்காட்டி இக்கோழிச் சண்டைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. சென்ற வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் இவ்வகையான கோழிச்சண்டை நிகழும் இடத்தில் ஒருவர் கோழியின் கத்தி வயிற்றைக் கிழித்ததினால் மரண்மடைந்திருக்கிறார். இரு சேவல்களும் சண்டையிடும் சிறிய வட்டத்தினுள் சேவல்களை நிற்கவைக்க போட்டி நடத்துனர் முயன்றவேளை, திமிறிய சேவல், அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 55 வயது வெங்கடேஷ்வர ராவோ மீது பாய்ந்ததில், அச்சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவரின் அடிவயிற்றைக் கிழித்திருக்கிறது. காயம் காரணமாக ஏற்பட்ட ரத்தப் பெருக்கினை அடுத்து அவர் அந்தவிடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். அதிகளவான மக்களைக் கவரும் இந்த சண்டைகளில் பெருமளவு பணம் ஈடுபடுத்தப்படுவதுடன், சூதும் இடம்பெற்று வருகிறது. https://www.9news.com.au/world/india-man-killed-by-blade-wielding-rooster-during-cockfight/a7e2baa9-aa3b-443a-ac03-c7860eb7b4cb