Jump to content

சந்தனமேனிகள் செம்மரக்கட்டைகளாதென்ன..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ் தாயின்

சந்தன மேனியர்

ஆந்திர எல்லையில்

சரிந்தே வீழ்ந்தனர்

மரக்கட்டைகள் நடுவே

செம்மரக்கட்டைகளாய்..!

 

கிரந்த மொழி பேசும்

திராவிட வாரிசுகளாம்

தெலுங்கர்கள்

பட்சாதாபமின்றி

வேட்டையாடி மகிழ்ந்தனர்

செந்தமிழன் பிணம் வீழ்த்தி...!

 

சிங்களப் பேய்கள்..

ஹிந்தியப் பிசாசுகள்

குடித்த ஈழத்தமிழ் இரத்தம்

காய முதல்..

கடலில் கரைந்த

தமிழகத் தமிழனின் குருதி

நிறம் மாற முன்..

நடந்தது சம்பவம்..!

 

சந்தனக் கடத்தலை

சாட்டி

முதலைகள்

வேட்டையாடி முடித்தன..

மீண்டும்

ஓர் இனப்படுகொலையின்

நினைவை

மனதின் ஓரத்தில் இருத்தி..!

 

புலிக்கொடி நடுவே

படை நடத்திய

சோழ தேசம்

இன்று

வீழ்ந்து மடிகிறது..!

காரணம் தான் என்ன..

தமிழனை தமிழன்

ஆள வழியின்றி போனதே..!

 

மீட்போம்

எம் ஆளும் உரிமை..

காப்போம்

தமிழர் வாழ்வுரிமை

இவ் வையகத்தில்..!

 

மாற்று வழி தான்

இதற்கும் இல்லை

புரிந்தே நின்று

புரிய வைப்போம்

சொந்த தேசமிழந்து..

வையகம் எங்கும்

சிதறி வாழும்

தமிழ் உள்ளங்களில்..!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புலிக்கொடி நடுவே

படை நடத்திய

சோழ தேசம்

இன்று

வீழ்ந்து மடிகிறது..!

காரணம் என்ன..

தமிழனை தமிழன்

ஆளவழியின்றி போனதே..!

 

 

 

என்று திராவிடன் தமிழனாகிறானோ அன்று தான் விடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

கிரந்த மொழி பேசும்

திராவிட வாரிசுகளாம்

தெலுங்கர்கள்

பட்சாதமின்றி

வேட்டையாடி மகிழ்ந்தனர்

செந்தமிழன் பிணம் வீழ்த்தி...!

 

சிங்களப் பேய்கள்..

ஹிந்தியப் பிசாசுகள்

குடித்த ஈழத்தமிழ் இரத்தம்

காய முதல்..

கடலில் கரைந்த

தமிழகத் தமிழனின் குருதி

நிறம் மாறமுன்..

நடந்தது சம்பவம்..!

-----

 

திராவிடனை, திராவிடனே.... கொன்றதற்கு,

தமிழக சிறிய திராவிட கட்சிகள், சந்திர பாபுவின் கொடும்பாவி எரிப்புடன்.. தமது எதிர்ப்பை காட்டியதும்

அதனைக் கூட... பெரும்பான்மையான திராவிட கட்சிகள், செய்யாமால்... வாயால் கண்டனம் தெரிவித்து விட்டு பேசாமல் இருப்பது கேவலம்.

சென்ற கிழமை, நைஜீரியாவில் நடந்த மாணவர் படுகொலைக்கு... இரத்தம் காய முன்னர், கண்டனம் தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி கூட இதனை ஒரு பொருட்டாக எடுக்க வில்லை. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும் ஊக்கமும் நல்கிய உறவுகளுக்கு நன்றி.

 

இச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது..

 

========================================================

 

ஆந்திராவில் மேலும் பல தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டார்களா? ராமதாஸ்
 

ramadoss08.jpg

தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளார்களா? மரம் கடத்தும் கும்பல்களால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகி வரும் உண்மைகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பவையாக உள்ளன. இப்படுகொலையை நடத்திய ஆந்திரக் காவல்துறையினர் மனிதர்களாகவே இருக்கத் தகுதியற்றவர்கள்; அதிகபட்ச தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள் என்ற கருத்தை இவை உறுதிசெய்துள்ளன.
 
சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேருமே செம்மரக் கடத்தலுடன் சம்பந்தப்படாதவர்கள்; கட்டிட வேலை செய்வதற்காகச் சென்ற அவர்களை பேரூந்தை பாதியில் நிறுத்தி இறக்கியும், வேறு இடங்களில் தங்கி இருந்த போது பிடித்துச் சென்றும் தான் ஆந்திரக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
அதுமட்டுமின்றி, சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாகவும், கொல்லப்பட்டதற்குப் பிறகும் தமிழர்களை ஆந்திரக் காவல்துறையினர் கடுமையான சித்திரவதைக்கு  உள்ளாக்கியுள்ளனர். கொல்லப்படுவதற்கு முன் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதன் அடையாளம் தான் அவர்களின் உடல் முழுவதும் காணப்படும் வெட்டுக் காயங்கள். கொல்லப்பட்டதற்குப் பிறகும் கூட அவர்களின் உடல்கள் மீது அமிலம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை ஊற்றி சிதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை ஏதோ இறந்த விலங்குகளின் உடல்களை கையாளுவது போன்று குப்பைகளை அள்ளும் ஊர்தியில் ஒன்றாகக் குவித்து அசிங்கப்படுத்தியுள்ளனர்.
 
 இலங்கை இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களை சிங்களப் படையினர் எப்படியெல்லாம் சிதைத்தும், போராளிகளின் உடல் உறுப்புகளை வெட்டி வீசியும் தங்களின் வெறியை தணித்துக் கொண்டார்களோ, அதற்கு ஆந்திரக் காவல்துறையின் வக்கிரமான, மிருகவெறித் தாக்குதல் சற்றும் குறைந்ததல்ல. சாதாரணமான சூழலில், இதயமே இல்லாதவர்கள் கூட இதுபோன்ற ஒரு கொடூரமான தாக்குதலை நடத்த மாட்டார்கள். 
 
ஆனால், ஆந்திரக் காவல்துறை இப்படி ஒரு செயலை செய்ததுடன், அதை தங்களின் சாதனையாகக் காட்ட முயல்வதையும், அதற்கு ஆதரவாக ஆந்திர அரசு செயல்படுவதையும் பார்க்கும்போது, இதன் பின்னணியில் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும்  எதிராக மிகப்பெரிய வன்மத்தை ஆந்திர ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. 
 
இத்தகைய வன்மம் இல்லாவிட்டால் இவ்வளவு கொடூரமான கொலையையும் உடல்களை சிதைக்கும் வேலையையும் ஆந்திர காவல்துறை செய்திருக்காது என உறுதியாக நம்பலாம்.
அதேபோல், ஆந்திரக் காவல்துறைக்கு பகைமையும், வன்மமும் இருந்தால் இது நிச்சயமாக முதல்  படுகொலையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் உறுதியாக கூறமுடியும். 
 
திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆந்திராவுக்கு கட்டிட வேலைக்காகச் சென்ற  நூற்றுக்கணக்கானோர் என்ன ஆனார்கள்? என்பதே தெரியவில்லை என்று அவர்களின் உறவினர்கள்  கூறியிருப்பது இந்த சந்தேகத்தை உறுதி செய்கிறது. இவர்களும் ஆந்திராவின் வனப் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை அடியோடு ஒதுக்கி விட முடியாது. 
 
அதுமட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களை செம்மரம் கடத்தும் ஆந்திர கும்பல்கள் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
 
எனவே, தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் சென்ற கூலித் தொழிலாளிகளின் நிலை என்ன? என்பது குறித்து விரிவான விசாரணையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளார்களா? மரம் கடத்தும் கும்பல்களால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக நேர்மையான காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட பல்துறை விசாரணைக் குழுவை தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது உங்கள் கவிதை .

 

எல்லோருக்கும் தமிழர் என்ன கிள்ளுக்கீரையா ?

 

எமது தலைவர் விரைவில் வர வேண்டும்.

தன் மானத் தமிழன் மீண்டும் எழ வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் கருத்துக்கு.

 

தலைவர் வரும் வரை காத்திருக்காமல்.. தலைவர் எதிர்பார்த்ததை மக்கள் எனிச் செய்ய வேண்டும். மக்களின் போராட்டமும்.. விழிப்புணர்ச்சியும் தான் இதற்கு முடிவு கட்ட முடியும். தனி ஒரு பிரபாகரன் இதனை செய்ய முனைந்தால்.. அவரை பயங்கரவாதியாக்கி.. அதிகார வர்க்கங்களும்.. அரச பயங்கரவாதிகளும் மக்களை அழிப்பதில்.. ருசி கண்டுவிடுவார்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை உரைக்கும் உங்களின் உணர்ச்சிக் கவிதைக்கு பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிக்கவிதைகள் இன்னும் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தருணத்தில் வெளிவந்த கருத்தான கவிதை... !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும் ஊக்கமும் உணர்வூட்டமும் தந்த உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தலைவிதியை உலகம் எப்படி எழுத நினைக்கிறது என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்துவிட்டோம். தமிழக மீனவர்கள் சுடப்பட்டாலும், ஆந்திராவில் தமிழர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாலும் ஆழ்ந்த இரங்கல்களை மட்டுமே சொல்லி செல்லமுடியும். தமிழகம் என்பது தமிழரால் நிமிர்வெய்தும் வரை இந்தத் தொடர்கதைகள் எழுதப்படத்தான் போகிறது.... கவிதைக்கு நன்றி நெடுக்கு

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்கள் நாங்கள் எங்களுக்கு விழுந்த அடியின்பின் தமிழர்கள் எங்கு அடிபட்டாலும் திரும்பிப் பார்க்கிறோம்.. இரக்கப்படுகிறோம்.. குரல் கொடுக்கிறோம்..

தமிழகம் இன்னும் அடி வாங்கவில்லை.. அதனால் பெரிதாக திரும்பிப் பார்க்க மறுக்கிறது.. இன்னமும் தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறது.. இதனால் கொந்தளிக்கும் அந்தச் சிலரும் சிறை செல்லவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் நாங்கள் எங்களுக்கு விழுந்த அடியின்பின் தமிழர்கள் எங்கு அடிபட்டாலும் திரும்பிப் பார்க்கிறோம்.. இரக்கப்படுகிறோம்.. குரல் கொடுக்கிறோம்..

தமிழகம் இன்னும் அடி வாங்கவில்லை.. அதனால் பெரிதாக திரும்பிப் பார்க்க மறுக்கிறது.. இன்னமும் தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறது.. இதனால் கொந்தளிக்கும் அந்தச் சிலரும் சிறை செல்லவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 

 

அவ்வாறு அந்தச்சிலர் சிறை செல்லும்  போது

அதை வெடி கொழுத்திக்கொண்டாட சில ஈழத்தமிழரும் உளர்........ :(  :(  :(

நன்றி  கவிதைக்கு தம்பி

 

எம்மால் முடிந்ததை நாம் தொடர்ந்து செய்வோம்

எழுதுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் நாங்கள் எங்களுக்கு விழுந்த அடியின்பின் தமிழர்கள் எங்கு அடிபட்டாலும் திரும்பிப் பார்க்கிறோம்.. இரக்கப்படுகிறோம்.. குரல் கொடுக்கிறோம்..

தமிழகம் இன்னும் அடி வாங்கவில்லை.. அதனால் பெரிதாக திரும்பிப் பார்க்க மறுக்கிறது.. இன்னமும் தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறது.. இதனால் கொந்தளிக்கும் அந்தச் சிலரும் சிறை செல்லவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 

பத்திக்குச்சி பத்திக்காது.. உரசிர வரையில..!

 

ஒரு சின்னத் தீப்பொறி தான்.. பெரிய காட்டையே எரித்துச் சாம்பலாக்கிறது...!

 

யாழ்ப்பாண.. தமிழாராய்சி மாநாட்டு படுகொலைகள் தான்.. ஈழத்தில் தமிழர்களை சிங்கள பேரினவாத இனவெறிக்கெதிராக செயற்படத் தூண்டியது..!

 

ஆந்திராவின் இந்தப் படுகொலை.. ஒரு பெரிய அத்தியாயத்தின் துவக்கமாகக் கூட அமையலாம்..! அமைய வேண்டும். அது தமிழர்களின்.. ஆளும் உரிமை.. வாழ்வுரிமையை மீட்கும் வகையில் அமைதி வழியில் அமைந்தால் நன்று..!

அதற்கு முதலில் தமிழன்.. தன்னிலை உணர வேண்டும். அந்த உணர்தல் இன்றி தமிழர்களுக்கு விடிவில்லை..!!!! :icon_idea:

கருத்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி.

தமிழர்கள் படுகொலையால் அனைத்து கட்சியினரின் 
அவசர ஆலோசனை கூட்டம் - எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் ( படங்கள் )
 
20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திர அரசையும் காவல்துறையையும் கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்ற (ரிப்போர்ட்டஸ் கில்டு) அரங்கில் இன்று (11.04.2015) தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க. , தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வை. காவேரி, பொதுச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
எஸ்.எம்.ஹாரூன் ரசீது, மனித நேய மக்கள் கட்சி தெஹ்லான் பாகவி, எஸ்.டி,பி.ஐ. பிரின்சில்லா ஜான்பாண்டியன், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், த. வெள்ளையன், தலைவர், வணிகர் சங்க பேரவை, ஆர்.சி. பால் கனகராஜ், தமிழ் மாநில கட்சி, பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சுப. உதயகுமாரன், அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு பொழிலன், பொதுச்செயலாளர், தமிழக மக்கள் முன்னணி, குணங்குடி அனீபா, த.மு.மு.க, மாநில துணைத் தலைவர், தடா அப்துல் ரஹீம், இந்திய தேசிய லீக் கட்சி, ராமகிருஷ்ணன், திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம், கா. திருமுருகன், மே 17 இயக்கம், வீரசந்தானம், தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம், தியாகு, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், குடந்தை அரசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தபசிகுமரன், திராவிடர் விடுதலைக் கழகம், எஸ்.எம். பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத், கோசுமணி, மீனவர் மக்கள் முன்னணி, முரளி, மனித உரிமைகள் கழகம், வேணு மணி- தமிழர் எழுச்சி இயக்கம், செந்தில்குமார், இளந்தமிழகம், பாவேந்தன், தமிழ்த் தேச நடுவம், திருமலை, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம், வழக்கறிஞர் காந்திகுமார் 
வழக்கறிஞர் கயல், பிரதீப் குமார், மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம், செம்பியன், மாணவர் கூட்டமைப்பு, டேவிட் பெரியார் மனித உரிமை ஆர்வலர், கீரா, கலகம் அமைப்பு 
 மற்றும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
 இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
 
- தமிழகத்தில் இருந்து கூலித் தொழிலாளர்களாக ஆந்திரா சென்ற 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறையினரும் வனத்துறையினரும் கைது செய்து சித்ரவதைக்குள்ளாக்கி சுட்டுப் படுகொலை செய்து வனப்பகுதி ஒன்றில் போட்டுவிட்டு செம்மரம் கடத்தியதால் சுட்டோம் என்று அப்பட்டமான பொய்யை கூறி வருகிறது. ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினரின் இந்த கொலைபாதக செயலை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலையை நிகழ்த்திய ஆந்திரா செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் டி.ஐ.ஜி. காந்தாராவ் உட்பட அனைத்து காவல்துறை, வனத்துறையினரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். இந்த படுகொலையை அரங்கேற்ற தூண்டிய கொடியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
 
- 20 தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த படுகொலை குறித்து முழுமையான உண்மைகள் வெளிவர மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வரும் ஏப்ரல் 28-ந் தேதியன்று 'தமிழர் நீதி பேரணி' நடத்திட தீர்மானிக்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தொடங்கும் இந்த பேரணி கிண்டி ஆளுநர் மாளிகையில் முடிவடையும். பேரணியின் முடிவில் மேதகு ஆளுநர் அவர்களை சந்தித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் கோரிக்கை மனு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
- ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பங்களுக்கும் ஆந்திரா மாநில அரசு தலா ரூ25 லட்சம் வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் கோரிக்கை விடுக்கிறது
 
- செம்மரங்களை வெட்டியதாகக் கூறி ஆந்திரா சிறைகளில் இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை உடனே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கோள்ள வேண்டும்; 400க்கும் மேற்பட்ட அப்பாவிகள் முகாம்களில் அடைக்கப்பட்டு கொடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் கடந்த காலங்களில் ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையால் 9 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைகளுக்கும் உரிய நீதி கிடைக்கவும் தமிழக அரசு விரைவான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. 
 
- தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கும் ஆந்திரா அரசுக்கும் தமிழக அரசு உரிய அழுத்தம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
 
- ஆந்திராவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு தமிழக அரசு கருணையுடன் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
 
- ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது முதல் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், திராவிடர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வழக்கறிஞர்கள், படைப்பாளிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. அத்துடன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே அணியாக தமிழர் என்ற ஒற்றை குடையின் கீழ் ஏப்ரல் 28-ந் தேதியன்று சென்னையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று நீதிகோரும் நமது குரலை மத்திய அரசுக்கும் ஆந்திரா அரசுக்கும் தமிழக அரசுக்கும் உரத்துச் சொல்லுவோம்! ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் ஓரணியில் ஏப்ரல் 28-ந் தேதியன்று திரள்வோம்! எனவும் இக்கூட்டம் அன்புடன் அழைக்கிறது.
 
aal%20party.jpg

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=141265

Link to comment
Share on other sites

போதைவஸ் கடத்துறவன் ....களவு  எடுப்பவன் .....பாலியல் வல்லுறவு  செய்பவன்  தமிழனா  இருந்தால் அவனை  மன்னிக்க  வேணும்  வேறு  இனத்தவன்  என்றால் பருவாயில்லை ...

 

காசுக்கு  கூலி  வேலைக்கு  போனது  என்பது  எல்லாம்  ஏற்புடையது  அல்ல  காசு  தரேன்  கொலை  பண்ணு  என்றால்  இந்த  தமிழர்கள் செய்வார்கள்  ஆகவே  சட்டம்  தன்  கடமையை  செய்தது  இங்கு  தமிழன்  என்பது  அடுத்த  கதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்பதற்காக தங்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அவர்களை குற்றவாளி ஆக்க முடியாது. சுட்டுத்தள்ள முடியாது.

 

முள்ளிவாய்க்கால்.. மனித உரிமை.. போர்க்குற்ற விசாரணை.. என்று ஏன் கத்திறம். சிங்களவன் சொல்லுறான் செத்தது பயங்கரவாதின்னு. நம்பிட்டு நாமும் சும்மா கிடக்கலாம் தானே..!

 

அகதி அந்தஸ்துக்கு கள்ள வழியில் எல்லை தாண்டினதுக்கு சுட்டுத்தள்ள வெளிக்கிட்டால்.. இங்கு பல அண்ணன்கள் கருத்தெழுத உயிரோடு இருக்க முடியாது.

 

ஒருவன் களவெடுக்கிறான்.. போதைவஸ்து கடத்திறான்.. பாலியல் வன்புணர்வு செய்கிறான் என்றால்.. முதலில் அவனை சட்டத்தின் முன் நிறுத்தி.. அவனது குற்றங்களை நிரூபித்த பின் தான்.. அவனுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதை சட்டம் தீர்மானிக்க வேண்டும்.

 

அதிகாரம் உள்ளது என்பதற்காக தனிமனிதர்கள் எல்லாம்.. சக மனிதர்களை தண்டிக்க முடியாது. அதுவும் மரண தண்டனை என்பதை விசாரணை இன்றி நிகழ்த்த முடியாது.

 

இந்த தமிழ் தொழிலாளர்கள்.. நிராயுதமாக வேலைக்குப் போனார்கள். அவர்கள் தவறான இடத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது தெரிந்தால்.. அவர்களை எச்சரிக்க பல வழிகள் உள்ளன. கைது செய்ய தமிழக பொலிஸின் உதவியோடு கூட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

 

விசாரணைகள்.. சட்ட நடவடிக்கைகள் இன்றி சுட்டுக்கொல்ல.. இவர்கள் என்ன இனப்படுகொலையா செய்தார்கள். இனப்படுகொலையை செய்தவனைக் கூட பாதுகாக்கிற பாரத நாடு.. அப்பாவி தொழிலாளர்கள் மீது எந்த சட்ட முகாந்திரமும் இன்றி.. துப்பாக்கியால் சுடுவதை சிலர் தங்களின் தவறான புரிதலின் மூலம் நியாயப்படுத்த முனைகிறார்கள்.

 

இதே.. குற்றம் செய்து பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட ஒரு பெண் தொடர்பில் அங்கு இவர்கள் பதிந்தது.. அவளை அப்பாவி என்பது போல..?!

 

ஆக கருத்து யார் எழுதினம் என்று... பார்த்து.... வங்குரோத்து கருத்து எதிலும் யாரும் எழுதலாம். அதற்காக அப்பாவி தமிழர்களை பலியிட முடியாது. குற்றவாளிகளை தண்டிக்கவும் முறைமைகள் உள்ளன. அது தமிழன் குற்றவாளியாக இருந்தாலும் கடைப்பிடிக்கப்படனும் என்பது தான்... அடிப்படை அம்சம். அந்தப் புரிதல் கூட சிலரிடம் இல்லை.

 

ஒட்டுக்குழுகள்.. புலி என்ற ஒற்றை அடையாளத்தை வைச்சு அப்பாவி மக்களை பள்ளி மாணவர்களை..போட்டுத்தள்ளிய பின்னணியில் இருந்து சில அண்ணன்கள்.. மனித உயிர்களின் பலியிடலை சீப்பாக பார்க்கப் பழகிவிட்டார்கள் போல. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்... தமிழனைச் சுட்டுக்கொன்ற டக்கிளசுக்கு செங்கம்பளம்.. செம்மரம் வெட்டினது என்ற ஒற்றை குற்றச்சாட்டின் அடிப்படையில்.. அதுவும் நிரூபிக்கப்படாத .. நீதிமன்றம் போகாத குற்றத்துக்கு.. மரண தண்டனை. அதுக்கு சிலர் வக்காளத்து. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200 சதுரமீற்றர் பரப்பளவில்தான் செம்மரம் இருக்கிறது.அந்த மரத்தை விட மனித உயிர் மலிவாகப் போய் விட்டதா? மரத்திற்காக அந்த மனிதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் தெலுங்கர்களாக இருந்திருந்தால் நிச்சயமாக சுட்டிருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

பல்கலையில் ஒரு தெலுங்குப் பெடியன் என்னுடன் படித்தவன்.. என்னைக் கண்டால் எல்டிடிஈ என்றுதான் கூப்பிடுவான்.. இப்ப அந்த எல்டிடிஈ இல்லாததால சுண்டெலி எல்லாம் துள்ளி விளையாடுது.. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போதைவஸ் கடத்துறவன் ....களவு  எடுப்பவன் .....பாலியல் வல்லுறவு  செய்பவன்  தமிழனா  இருந்தால் அவனை  மன்னிக்க  வேணும்  வேறு  இனத்தவன்  என்றால் பருவாயில்லை ...

 

காசுக்கு  கூலி  வேலைக்கு  போனது  என்பது  எல்லாம்  ஏற்புடையது  அல்ல  காசு  தரேன்  கொலை  பண்ணு  என்றால்  இந்த  தமிழர்கள் செய்வார்கள்  ஆகவே  சட்டம்  தன்  கடமையை  செய்தது  இங்கு  தமிழன்  என்பது  அடுத்த  கதை .

 

தண்டனை கொடுங்கள், ஆனால் தீர விசாரித்துவிட்டு உண்மையாய் குற்றம் செய்தால் சட்டப்படியான தண்டனையை கொடுங்கள். சுட்டு கொல்லப்பட்ட 20பேரும் உண்மையாய் மரம் வெட்டினார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் உள்ளனவா? இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?  :(

 

இந்த சம்பவம் பற்றிய படங்களையும், உறவினர்களின் கருத்துக்களையும் பார்த்தால் இது சொறி லங்காவில் ஆமிக்காரன் றோட்டில் போகின்றவனை பிடித்து சுட்டுத்தள்ளிவிட்டு அவர்களுக்கு புலிகளின் உடையை அணிவித்து புலிகளை கொன்றோம் என்று ரூபவாஹினியில் காட்டுவது போல் உள்ளது.

 

கிந்தியர்கள் தமது நாட்டுப்பற்றை காட்டுவதற்கு நீங்கள் எழுதியது போன்ற கருத்தை பேஸ்புக்கில் பரவலாக எழுதுவதாய் யாழ் இணையத்தில் ஒருவரின் கருத்து காணப்பட்டது. ஆனால், போர் அனுபவங்கள் கொண்ட நாட்டில் வாழ்ந்த உங்களுக்கு ஏன் இப்படி கருத்து எழுதத்தோன்றுகின்றது? உங்கள் கருத்துக்கள் சிலவற்றை வாசித்து நீங்கள் ஒரு "முன்னாள்" என்பதை அறிந்தேன். ஒரு "முன்னாள்" இப்படி ஒரு கருத்தை எழுதியதை வாசிக்க ஆச்சரியமாய் இருக்கிறது.

 

இந்த கொலைகளை கண்டிப்பவர்களில் பல அரசியல்வாதிகள் உங்களுக்கு பிடிக்காதபடியால் இப்படி எழுதினீர்களா? ஒன்றும் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய கட்டுப்பாட்டு ஆந்திர அரசின் இந்த தமிழின படுகொகைக்கு..உலகத்தமிழ் மக்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுகோள்..

 

Tamil Nadu activist urges attention of global Tamils on ‘Red Sanders Massacre’

[TamilNet, Saturday, 11 April 2015, 22:16 GMT]

The poverty-stricken Tamils in the border areas situated between Tamil Nadu State and Andhra Pradesh State in India are being systematically exploited by smuggling rackets run by gangs from two upper echelons that have been running fiefdoms in Andhra Pradesh in the past and that seek to control the political power in the State. The exploited victims are subjected to indefinite imprisonment and massacres deploying the rule of law in India and the police force in the AP, as it has been exposed in the recent massacre of 20 daily-wage workers on 07 April. The global Tamil community has a moral bound duty to protest against the exploitation as the crime involves the global markets in Eastern Asia, says writer, journalist and Tamil activist Aazhi Senthilnathan in an interview to TamilNet on Saturday.

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=37725

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு அன்றைய இந்திய அரசாங்கம் ஆதரவு கொடுத்து மௌனமாக இருந்தது. இதன் தாக்கம் ஏனைய நாடுகளையும்  மொளநிலைக்குக் கொண்டு சென்றதுடன்  உலகெங்கும்  உள்ள தமிழரை ஆதரவற்ற நிலைக்கு இட்டுச்சென்றது. முள்ளிவாய்க்கால் தமிழினப்   படுகொலைக்கான நீதி கூட இன்றுவரை மௌனமாகத்தான் இருக்கிறது. இதன் விளைவுகள்தான் ஆந்திரவில் தமிழினப் படுகொலைக்கு உற்சாகமளித்தது. தமிழினம் தொடர்ந்து மௌனமாக இருந்தால் மரங்களுக்கல்ல> பூச்சி புளுக்களுக்குள்ள மரியாதைகூடத் தமிழனுக்குக் கிடைக்காது இப்படுகொலையைக் கண்டிப்போம்.  உணர்வு ரீதியான வரிகளுக்குப் பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

தண்டனை கொடுங்கள், ஆனால் தீர விசாரித்துவிட்டு உண்மையாய் குற்றம் செய்தால் சட்டப்படியான தண்டனையை கொடுங்கள். சுட்டு கொல்லப்பட்ட 20பேரும் உண்மையாய் மரம் வெட்டினார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் உள்ளனவா? இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?  :(

 

இந்த சம்பவம் பற்றிய படங்களையும், உறவினர்களின் கருத்துக்களையும் பார்த்தால் இது சொறி லங்காவில் ஆமிக்காரன் றோட்டில் போகின்றவனை பிடித்து சுட்டுத்தள்ளிவிட்டு அவர்களுக்கு புலிகளின் உடையை அணிவித்து புலிகளை கொன்றோம் என்று ரூபவாஹினியில் காட்டுவது போல் உள்ளது.

 

கிந்தியர்கள் தமது நாட்டுப்பற்றை காட்டுவதற்கு நீங்கள் எழுதியது போன்ற கருத்தை பேஸ்புக்கில் பரவலாக எழுதுவதாய் யாழ் இணையத்தில் ஒருவரின் கருத்து காணப்பட்டது. ஆனால், போர் அனுபவங்கள் கொண்ட நாட்டில் வாழ்ந்த உங்களுக்கு ஏன் இப்படி கருத்து எழுதத்தோன்றுகின்றது? உங்கள் கருத்துக்கள் சிலவற்றை வாசித்து நீங்கள் ஒரு "முன்னாள்" என்பதை அறிந்தேன். ஒரு "முன்னாள்" இப்படி ஒரு கருத்தை எழுதியதை வாசிக்க ஆச்சரியமாய் இருக்கிறது.

 

இந்த கொலைகளை கண்டிப்பவர்களில் பல அரசியல்வாதிகள் உங்களுக்கு பிடிக்காதபடியால் இப்படி எழுதினீர்களா? ஒன்றும் புரியவில்லை.

சம்பவம் நடந்தது  அவனின்  பிரதேசம்  அவங்கள்  ஒன்றும்  தமிழ்நாட்டில்  புகுத்து  சுடவில்லை ஆக  நியாயம்  பேசுறம்  என்று  உண்மையை  மறைக்க  கூடாது  காசுதாரன்  என்று  மரத்தை  வெட்ட  போனவர்கள்  நாளை  தலையை  வெட்ட  கூட  போவார்கள் என்பதை  நாம்  கவனிக்க  வேணும் ....

 

 

அந்த  இடத்தில்  தமிழன்  இல்லை   வேறு  மாநிலக்காரன்  இருந்தாலும்  நிலைமை  இதுதான் ..

 

வீரப்பனை சுட்ட  ஆத்தாவை  ஈழத்தாய்  என்று  புகழ்பாடிய  வாய்கள்  தான்  இன்று இருபது  பேரின்  மரணம்  பற்றி வரிந்து  கட்டி  பேசுது ..

 

பரமக்குடி  துப்பாக்கி  சூடு  யாரு  செய்தது  மத்தியா  வரலாறு  முக்கியம்  அண்ணே .

Link to comment
Share on other sites

சம்பவம் நடந்தது அவனின் பிரதேசம் அவங்கள் ஒன்றும் தமிழ்நாட்டில் புகுத்து சுடவில்லை ஆக நியாயம் பேசுறம் என்று உண்மையை மறைக்க கூடாது காசுதாரன் என்று மரத்தை வெட்ட போனவர்கள் நாளை தலையை வெட்ட கூட போவார்கள் என்பதை நாம் கவனிக்க வேணும் ....

அந்த இடத்தில் தமிழன் இல்லை வேறு மாநிலக்காரன் இருந்தாலும் நிலைமை இதுதான் ..

வீரப்பனை சுட்ட ஆத்தாவை ஈழத்தாய் என்று புகழ்பாடிய வாய்கள் தான் இன்று இருபது பேரின் மரணம் பற்றி வரிந்து கட்டி பேசுது ..

பரமக்குடி துப்பாக்கி சூடு யாரு செய்தது மத்தியா வரலாறு முக்கியம் அண்ணே .

தமிழனை சுட்டதால் தவறு என்று சொல்லவில்லை.. ஆயுதமற்ற மனிதனைக் கொன்றதுதான் தவறு என்கிறோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பவம் நடந்தது  அவனின்  பிரதேசம்  அவங்கள்  ஒன்றும்  தமிழ்நாட்டில்  புகுத்து  சுடவில்லை ஆக  நியாயம்  பேசுறம்  என்று  உண்மையை  மறைக்க  கூடாது  காசுதாரன்  என்று  மரத்தை  வெட்ட  போனவர்கள்  நாளை  தலையை  வெட்ட  கூட  போவார்கள் என்பதை  நாம்  கவனிக்க  வேணும் ....

 

 

அந்த  இடத்தில்  தமிழன்  இல்லை   வேறு  மாநிலக்காரன்  இருந்தாலும்  நிலைமை  இதுதான் ..

 

வீரப்பனை சுட்ட  ஆத்தாவை  ஈழத்தாய்  என்று  புகழ்பாடிய  வாய்கள்  தான்  இன்று இருபது  பேரின்  மரணம்  பற்றி வரிந்து  கட்டி  பேசுது ..

 

பரமக்குடி  துப்பாக்கி  சூடு  யாரு  செய்தது  மத்தியா  வரலாறு  முக்கியம்  அண்ணே .

 

என்ன ஐயா உங்கள் நீதி, நியாயம்? மரத்தை வெட்டுபவன் நாளை தலையையும் வெட்டுவான், எனவே அவன் அந்நிய இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டால் பிழை இல்லை என்று நியாயம் கற்பிக்கும் நீங்கள் புலிகளுக்கு துவக்கி தூக்கினவர்களுக்கும் இதே நீதி வெளிநாட்டில் வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? 

 
உங்கள் நியாயப்படி சொறி லங்காவில் துவக்கு தூக்கினவர்களுக்கு வெளிநாட்டில் துவக்கு தூக்கி ஆட்களை கொல்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? எனவே, இவர்களை பிரான்சிலோ, கனடாவிலோ, அமெரிக்காவிலே போலிசார் கைதுசெய்து எண்கெளன்டரில் கேட்டுக்கேள்வியில்லாமல் சுட்டுக்கொலை செய்யலாம்? 
 
கத்தியால் மரத்தை வெட்ட தெரிந்தவனை விட, துவக்கினால் ஆட்களை சுடத்தெரிந்தவன அதிகளவு ஆபத்தானவன் இல்லையா? எனவே, உங்களை பிரான்ஸ் போலிசார் கேட்டுக்கேள்வியில்லாமல் பிடித்து எண்கெளன்டரில் சுட்டுக்கொன்றால் அப்போது நீதியும், தர்மமும் நிலைநாட்டப்படும்?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.