Jump to content

Recommended Posts

  • Replies 102
  • Created
  • Last Reply
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் 
கண்டதும் கோபமாக, 
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" 
என்று கதறினார்.
மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், 
நான் மருத்துவமனையில் இல்லை... 
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் 
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" 
என்று கூறினார்.
"பொறுமையாக இருக்கவா?" 
அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், 
"உங்கள் மகன் 
இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் 
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? 
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.
மருத்துவர் சிரித்த முகத்துடன், 
"எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், 
நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.
அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், 
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" 
என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" 
என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.
சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், 
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? 
என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?" 
என்று நொந்துகொண்டார் தந்தை.
அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, 
"அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...
இன்று, 
அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார்... 
உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் 
என்று அழைத்தவுடன் 
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்"
என்று கூறினாள்.
‪#‎நீதி‬:
எவரின் மனநிலையையும் 
நாமே தீர்மானிக்கக் கூடாது,
அவர்கள் 
வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் 
பற்றியும் 
நாம் அறிந்திருக்காதவரை!!
"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை...
மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...
பின்பு ஏன்...???
((( குறிப்பு : இதை நீங்களே முடித்து வையுங்கள்.!!! )))

முகநூல் பதிவு 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...

11051808_429927627213140_243415786888884

வரலாற்றுப் புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் - 14.5.1976
=============================================

இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு ("தனி ஈழம்'') வேண்டும் என்று, தந்தை என அழைக்கப்பட்ட செல்வநாயகம் தலைமையில், வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது. வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பண்ணாகம் என்ற ஊரில் 1976 மே 14-ந்தேதி இந்த மாநாடு நடந்தது. செல்வநாயகத்தின் பிரதம சீடரான அமிர்தலிங்கம் பிறந்த ஊர் பண்ணாகம். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில், வட்டுக்கோட்டை மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
"வட்டுக்கோட்டை பிரகடனம்'' என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் தனி நாடு தீர்மானத்தை செல்வநாயகம் முன்மொழிந்தார். மு.சிவசிதம்பரம் வழிமொழிந்தார். அந்தத் தீர்மான வாசகம் வருமாறு:- "ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்.'' இந்தத் தீர்மானம் வாசிக்கப்பட்டதும், கூடியிருந்த இளைஞர்கள் "தமிழ் ஈழம் வாழ்க'' என கூவி இரத்த திலகம் இட்டனர்.
இந்த தீர்மானத்தை அடுத்து, "தமிழர் கூட்டணி''யின் பெயரை "தமிழர் விடுதலை கூட்டணி'' என்று மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக அமிர்தலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் வரலாற்றையும், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என்பதையும் விளக்கி சொற்பொழிவாற்றினார்.
பின்னர் அவர் கூறியதாவது:- "இலங்கைக்கு இங்கிலாந்து சுதந்திரம் வழங்கியபோது, தமிழர்களுக்கு தனி நாடு வழங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. "சிறுபான்மை மக்களுக்கு பாதகமான சட்டங்களை நிறைவேற்றக் கூடாது'' என்று கூறி, முழு நாட்டையும் சிங்களரிடமே ஒப்படைத்து விட்டனர். சிங்களர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கிவிட்டனர். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட, எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை. எனவே, இழந்துவிட்ட அரசுரிமையைப் பெற தமிழ் ஈழம் ஒன்றுதான் வழி என்று, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம்.'' இவ்வாறு அமிர்தலிங்கம் கூறினார். அவருடைய பேச்சு, தமிழ் இளைஞர்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருந்தது. மாநாடு முடிந்ததும், அமிர்தலிங்கத்தை தோளில் தூக்கிக்கொண்டு இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர். 
"ஒவ்வொரு வாக்கும் தமிழீழம் அமைப்பதற்கான ஆணையாகும்,அடுத்த பொதுத்தேர்தல் சுதந்திரம் பெற்ற தமிழீழத்தில் தான் நடைபெறும்” என, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் செய்த முழக்கம் அது தான்.மிகப் பெரும் வெற்றி பெற்றனர்.அதே வேளை , “நான் பிரபல இலங்கையின் பிரபல இடதுசாரி என்.எம்.பெரேராவின் மாணவன். சோசலிசத்தை விரும்புபவன். சோசலிச தமிழ் ஈழம் என்றே எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருக்கின்றோம்” என்று பேசுவார் அமிர். அன்று பாயத்தொடங்கிய இரத்தம் - துரோகி, எதிரி,இராணுவம்,போலிஸ், உளவாளி, மாற்று இயக்கம்,உட்படுகொலை, சுட்டவன், ,சுட்டவனைச் சுட்டவன் என தொடர்ந்தது 33 ஆண்டுகள் தொடர்ந்தது.

1981இல் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று அமெரிக்க நிர்பந்தத்துடன் இலங்கையில் அதிகாரமற்ற மாவட்ட சபைகள் உருவாக்கப் பட்டது. இதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்காவால் இலங்கைக்கு அனுப்பபட்ட அமெரிக்க பேராசிரியர் ஏ. ஜே வில்சன்(தந்தை செல்வாவின் மருமகன்) மாவட்ட சபையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குக் கூடிய அதிகாரத்தை ஒரு (சிங்கள) அரசு தமிழர்களுக்கு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றார். மாவட்ட சபைத் தேர்தல் நடாத்தியது சிங்கள் ஜே ஆர் ஜயவர்தனே அரசு. ஜே ஆர் ஜயவர்தனே மேற்குலக நாடுகளாலும் சில தமிழ் அரசியல் வாதைகளாலும் அ அமிர்தலிங்கம் உட்பட சிறந்த "ஜனநாயக வாதி" என கூறப்பட்டவர். 
மாவட்ட சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தiலைமை வேட்பாளராகப் போட்டியிட்டவர் தியாகராசா. மாறுபட்ட கொள்கைகளைப் கொண்டிருந்தது போதும் நேர்மையான மக்கள் சேவகன்.தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில்; போட்டியிட்டு வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சென்றவர்.1977 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் சேர்ந்திருந்தார். வரை PLOTE என்ற அமைப்பினர் பிரசாரக் கூட்டத்தின் போது சுட்டுக் கொன்றனர். 1981இல் நடந்த மாவட்டசபைத் தேர்தலில்தான் இலங்கையில் முதல் முதலாக வாக்கு மேசடி இடம்பெற்றது. வாக்குப் பெட்டி நிரப்புதல் என்றால் என்ன என்று முதல் முறையாக தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். தேர்தல் முடிந்த பின் யாழ் சுபாஸ் விடுதியில் ஒரு வாக்குப் பெட்டி கூட கண்டு எடுக்கப் பட்டது. அங்குதான் ஜே ஆர் அவர்களால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பப் பட்ட காமினி திசநாயக்க , சிறில் மத்தியூ ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போதுதான் யாழ் நூலகமும் கொழுத்தப் பட்டது. 
1980 களில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். “வேகம் போதாது. தமிழ் ஈழத்தை கூட்டணி பெற்றுத் தராது. பாராளுமன்ற வாதிகளால் போராட்டம் நடத்தமுடியாது” என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் .
1971 இல் தரப்படுத்தலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் மாணவர்களையும் தமிழ் மாணவர் பேரவையையும் தமது தலைமையின் கீழ் கொண்டு வந்தவர்கள் கூட்டணியினர். 1980 களில் மாணவர்கள் தமக்கெதிராக மாறிவிட்டதை சகிக்க முடியவில்லை.பின்னர் கொலைக் குழுவாக மாறியது விடுதலைக் போராட்டம்.
இன்று,அமைதியாக இருக்கும் இவ்விடம் போல ஒன்றுருவாகிட நாம் இடம்கொடுக்காமலிருப்போமாக!
 
 
 
 
 
Link to comment
Share on other sites

11061274_993436660694467_840929001266251

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மீண்டும் பிறப்பேன். விடுதலைக்காக போராடுவேன்." - பொன் சிவகுமாரன்.

.ஈழத்திலும் தமிழ் மக்களின் அகிம்சை போர் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் புரட்சிப் பயிராக முளைத்தவரே பொன். சிவகுமாரன்.

இன்று இந்த புரட்சி பூ மண்ணில் பூத்த நாள்.

பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார்.

யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் இந்த மாணவப் போராளி சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலே ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் ஆயுத புரட்சித் தாக்குதல் என்று கருதப்படுகிறது.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் புரட்சிப் பாதையில் தன்னை இணைத்து அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்லாமல் இலக்கை தொலைக்காமல் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்றன.

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர்.

காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின. இந்த இறப்புகள், பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு உந்திய ஒரு முக்கிய துன்பியல் நிகழ்வு ஆகும்.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

அக்காலத்தில் உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார்.

ஆனால் அவரின் தீரத்தை துரோகம் வென்று காட்டிக் கொடுப்பினால் தலைமறைவாக இருந்த அவர் கோப்பாயில் காவல் துறையினர் சுற்றி வளைக்கப்பட்டார். அப்பொழுது எதிரி கையில் தான் அகப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தினார்.. ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.

ஒரு வீரனின் மரணம் பல ஆயிரம் வீரர்களின் பிறப்பு நிகழ்வுக்கு காரணமாகின்றது என்பதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன் முதலான பல்லாயிரம் வீரர்கள் சிவகுமாரன் பாதையில் பின்னாளில் எழுச்சியோடு புரட்சியை கையில் எடுத்ததில் இருந்து கண்டு கொள்ளாலாம்.

சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.

சிவகுமாரன் என்ற எங்கள் விடுதலையின் வித்து இன்று விருட்சமாக வளர்ந்து பல்லாயிரம் புதிய விதைகளை தரும் கனிகளை காலத்திற்கு காலம் தந்து கொண்டே இருக்கும் புரட்சி பெரு விருட்சமாக நிமிர்ந்து நிற்கின்றது ஈழ விடுதலை வரலாற்றில்!

 

 

11923591_10155832117465012_8438083156109

 

 

நன்றி முகநூல் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.