• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
விசுகு

பாடசாலைக்காதல் - அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பரே

Recommended Posts

பிரியும் இடத்திலாவது இருவரும் மனம் திறப்பார்கள் என்று நினைத்தேன் . ஏமாற்றி விட்டீர்கள் .

அது சரி , என்ன ஒரு அதிர்ச்சிக்கு தயாராகும்படி முன் எச்சரித்து விட்டீர்கள் . எப்பொழுது நீங்கள் மூவரும் மீண்டும்

சந்தித்தீர்கள் ?

திரைப்படங்களில் வரும் Climax மாதிரி காத்திருக்க வேண்டியது தான் .

ஒவ்வொருவரும் அந்த நாள் ஞாபக கதைகளை அவிழ்க்க போயினம் . :wub:  இனி யாழில் கொண்டாட்டம் தான் போங்க :D :D

 

நன்றி  சகோதரி...

 

 

எல்லோருக்கும் இருக்கும் ஒரு பருவம் இது

இதைத்தாண்டித்தான் எல்லோரும் வந்திருப்பார்கள்

எல்லோரும் எழுதணும் என்பதே வேண்டுகோள்..

 

திரைப்படங்களில் இவ்வாறு மூவருக்குமான ஒரு மீள் சந்திப்பு வந்திருக்கா எனத்தெரியவில்லை

(இத்தனைக்கும் நான் திரைப்படப்பிரியன். அநேகமாக எல்லாப்படங்களையும் பார்ப்பவன்)

 

 

நன்றி சகோதரி

வருகைக்கும் கருத்துக்கும்...

Share this post


Link to post
Share on other sites

விசுகு, அந்தப் பெண் தான் இப்ப உங்கள் மனைவியா?????  :D

Share this post


Link to post
Share on other sites

விசுகு, அந்தப் பெண் தான் இப்ப உங்கள் மனைவியா?????  :D

 

இல்லை

அவர் எனது மைத்துணியின் மகள்..

நான் சித்தப்பா முறை அவருக்கு...

இனிக்கதையை  முடிக்கணும்போல...

தேவையில்லாத பக்கம் கதை ஓடப்போகுது... :o  :o  :o

விசுகண்ணா உங்கள் காதல் அனுபவங்களும்

Share this post


Link to post
Share on other sites

இல்லை

அவர் எனது மைத்துணியின் மகள்..

நான் சித்தப்பா முறை அவருக்கு...

இனிக்கதையை  முடிக்கணும்போல...

தேவையில்லாத பக்கம் கதை ஓடப்போகுது... :o  :o  :o

ம்ம்.... உண்மை, உண்மை :lol: கெதியாய் எழுதி முடியுங்கோ அடுத்த கேள்வி வர முன்னர் :D  

Share this post


Link to post
Share on other sites

வரவுக்கும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள் உறவுகளே....

 

இறுதி அத்தியாயத்துக்கு வரும் முன்

இதை தற்பொழுது எழுத தூண்டியது எது என்பதை எழுதிவிடுகின்றேன்...

காலத்தின் கோலமோ என்னவோ

3 பேரும் பிரான்சில் தான் வந்து இறங்கினோம்...

 

இன்று எனது மூத்தமகனும்

அவனது மூத்தமகனும் எங்களைப்போல இணைபிரிய நண்பர்கள்

நானும் அவனும் பேசிக்கொள்வோம்

நம்ம தொடர்ச்சி என....

 

அண்மையில் ஒரு கல்யாணத்தரகருடன் பேசிக்கொண்டிருந்தேன்

அவர்  என்னிடம் உங்க இடத்து பெண்ணின் குறிப்பு ஒன்று என்னிடம் வந்துள்ளது

நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என்றார்

சரி யாரு பெண் என்று நான் கேட்டதற்கு இன்னாரது மகள் என்றார்

(அவருக்கும் தெரியும் நாங்கள் ஒரே வகுப்பு மாணவர்கள் என்று)

ஆம்

அவளின் மகளே தான்...

பாருங்கள்

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது

அது எவ்வாறு புள்ளி வைத்து நகர்கிறது

எவ்வாறு எங்கெல்லாம் எம்மை ஆட்கொள்கிறது... 

 

இனி சந்திப்பின் இறுதிப்பாகம் வரும்..

நன்றி  :icon_idea:

 

 

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

கதையும் அதன் கிளைமாக்சும் நல்லாத்தான் போகுது
இன்னுமொரு கதாசிரியர் யாழில் உருவாகிவிட்டார் :D

வாழ்த்துக்கள் விசுகு அண்ணை

Share this post


Link to post
Share on other sites

அவனும் அவளும் விலகத்தொடங்கினார்கள்

எந்தவித தகவல்களும் பரிமாறப்படவில்லை

என்னால் அதற்கு மேல் எதுவும் செய்யமுடியவில்லை...

எங்கள் மூவரின் தலைகளும் மறையும்வரை  திரும்பிப்பார்ப்பதும்

கை அசைப்பதுமாக பிரியமுடியாமல் விடைபெற்றோம்...

கடைசிப்பிரிவு

அதன் பின்னர் நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் சேரவே இல்லை....

அவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை...

அன்றைய பிரிவு இவ்வாறு தான் நடக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்திருக்கவுமில்லை..

காலம் அதன்  ஓட்டத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடும்

வாழ்க்கை அதன் வழியே ஓடிக்கொண்டிருக்கும்

அது தடைப்படுவதே இல்லை... 

முற்றும்..

 

விடுமுறைக்கு நான் கொழும்பு சென்றேன். அவனும் கொழும்பு வந்தான்.

சாதராணதரப்பரீட்சையில் மூவரும் திறமைச்சித்திகளைப்பெற்றோம்.

என்னைக்கொழும்பிலேயே இருத்தி

அங்கேயே உழு என்று பம்பலப்பிட்டி இந்துவில் சேர்த்துவிட்டார்கள்

அவளைத்தூக்கி வேம்படியில் நட்டுவிட்டார்கள்

அவன் மட்டும் ஊரில் படித்தான்...

 

ஒவ்வொரு விடுமுறைக்கும் நான் ஊருக்குப்போவேன்

அதற்கிடையில் அவள் வேம்படி போனதாலோ என்னவோ

அவனுக்கு ஈகோ வந்ததோ என்னமோ

நாட்டம் குறைந்திருந்தது

 

நான் ஊருக்குப்போகும் போதெல்லாம் ஒரு நாள் அவளது வீட்டுக்குப்போவேன்

தாய் எனது மைத்துணி என்பதால் என்னை அனுமதித்தார்கள்

(கட்டுப்பாடான குடும்பம்)

சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருப்போம்

தாய் சகோதரர்கள் விலகும் நேரம் பார்த்து அவனைப்பற்றி நிச்சயமாக கேட்கத்தவறமாட்டாள்..

ஆனாலும் இருவருக்குமான இடைவெளி அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ளமுடிந்தது..

 

 

ரியூசன் என்று யாழ்ப்பாணத்துக்கு திரிந்து

 பழகும் நண்பர்களின் கூட்டாலும் கெட்டபெயர் வாங்கத்தொடங்கினான்

படிப்பை இழந்தான்.

 

சில வருடங்களில் 

வேறு ஒருத்தியை பார்ப்பதாக சொன்னான்

அவளைச்சந்தித்தபோது அவளுக்கும் இது தெரிந்திருந்ததை அறிந்தேன்...

அவளது முகம் கறுத்திருந்ததை உணரமுடிந்தது...

 

படிப்பைத்தொலைத்தவன் வெளிநாட்டுக்கு வந்தான்

நான் தான் கட்டுநாயக்காவால் பயணம் அனுப்பினேன்

 

பிரான்சுக்கு வந்தவனுக்கு 

விசா பிரச்சினை 

வேலைப்பிரச்சினை என இழுபட்டவனுக்கு 

சாதிப்பிரச்சினையால் இவனது காதலியும் பாதிக்கப்பட்டு

இவனைத்தூக்கி எறிந்துவிட்டு இயக்கத்துப்போக

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...

 

குடிக்கத்தொடங்கினான்...

நான் 83 கலவரத்தால் பாதிக்கபட்டு இவனிடம் வரும் போது குடிக்கு முழுமையாக அடிமையாகியிருந்தான்.

 

எப்பொழுதும் என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் சொல்வான்

என்னோடு இருந்திருந்தால் தனது படிப்பும் போயிருக்காது குடித்தும் இருக்கமாட்டேன் என்று..

 

குடும்பத்தாரின் வற்புறுத்தலுக்காகவும் சகோதரர்களின் வளர்ச்சிக்காகவும் ஏற்பாட்டுத்திருமணம் செய்து

தகப்பனாகிய போதும் குடியை நிறத்தமுடியவில்லை

நானும் படாதபாடு இல்லை.

ஆனால் என்னோடு இருக்கும்வரை தான் சொல்லுக்கேட்பான். 

அசைந்தவுடன் மாறிவிடுவான். சொல்லாத புத்தியில்லை...

 

குடித்துக்குடித்து

ஒரு நான் போய்விட்டான்....

 

இறுதிச்சடங்கு நடந்த அன்று.

எல்லோரோடும் அன்பாக பழகியதாலும்

பலருக்கும் உதவியாலும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தார்கள்.

 

நான் அவளைத்தேடினேன்...

இறுதி ஊர்வலத்துக்கு உறவுகள் விடை கொடுக்கமுடியாத அளவுக்கு பாசத்தால் உருகி இருந்தனர்

அவ்வளவு பேரையும் விலக்கி

அழது குழறி வழியனுப்பிவிட்டு வெளியே வரும் பொது தான் அவளைக்காண்கின்றேன்

 

ஓடி என்னிடம் வந்தவள் அப்படியே என் தோளில்  சாய்கிறாள்

என் தோள் வழியே கண்ணீர் சிந்துவதை உணர்கின்றேன்

எதுவுமே பேசவில்லை

அன்றைக்கு நாம் ஒரு முடிவு எடுத்திருந்தால்

இது நடந்திருக்காது என்று சொல்லணும் போல இருந்தது

ஆனால் வாயைத்திறந்தால் அழுதுவிடுவேன்

கத்திவிடுவேன்

எல்லோருக்கும் தெரிந்துவிடும்

அமைதியானேன்..

 

எனது தோழிலிருந்து  எழும்பியவள் கண்ணைத்துடைத்துக்கொண்டு

விடைபெறுகின்றேன் என்று தலையை மட்டும் அசைத்தபடி சென்றாள்..

 

எங்கள் மூவரின் இறுதிச்சந்திப்பு நடைபெறவே இல்லை...

அவனும் அவளும் சந்திக்கவே இல்லை...

சந்தித்தோம்

ஆனால் அவன் ........??? :(  :(  :(

 

முற்றும்.

 

(மன்னித்துவிடடா என்னை.  தெரிந்தோ தெரியாமலோ உன் இழப்புக்கு நானும் ........??

.உன் ஆத்மசாந்திக்காக என்றும் வேண்டுகின்றேன்.)

 

Edited by விசுகு
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

விசுகு அண்ணா இந்த பாடசாலைக்காதல் கதையும் இந்தக்கதையும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்கிறதே... அண்மையில்தான் வாசித்தேன்

 

 

.http://www.yarl.com/forum3/index.php?/topic/153858-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/

 

 

இருந்தாலும் காலம் பலரின் கதைகளை எப்படியெல்லாம் எழுதுகிறது என்பதற்கு நீங்கள் எழுதிய கதைகளே உதாரணம்.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் உங்கள் நண்பனை இழந்து விட்டீர்கள் எனபதை கேட்க கவலையாக இருந்தது . நீங்கள் மூவரும் இறுதியில் சந்தித்திருப்பீர்கள்

என்றே நினைத்தேன் . அதற்குள் முடிவு இப்படியாகி விட்டதே . இது தான் வாழ்க்கை .

பகிர்ந்தது கொண்டமைக்கு மிகவும் நன்றி . நெஞ்சை தொட்டு விட்டது .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this