Jump to content

பிறந்த நாளை கண்டுபிடியுங்க பார்ப்பம் ( தலை சுத்துது எனக்கு )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜுலை 16 :D

Link to comment
Share on other sites

விடை சரிதான். ஆனால் எப்பிடி என்று விளக்கம் தேவை்

Link to comment
Share on other sites

விடை சரிதான். ஆனால் எப்பிடி என்று விளக்கம் தேவை்

 

அது தானே.. இணையத்தளம் ஒன்றில் விளக்கியுள்ளார்கள் ஆடி 16 எப்படி விடை வந்தது என்று ஆனால் அவர்களது விளக்கம் இன்னும் குழப்பமாக இருக்கு :)

இரண்டு தரம் வாசித்து பார்த்தேன் புரியல :(  யாராவது தமிழில் விளக்கினால் தான் நமக்கு தலைக்குள் ஏறுமோ என்னவோ :lol: )

 

http://www.independent.co.uk/news/world/asia/singapore-maths-problem-can-you-solve-the-viral-maths-question-that-was-set-to-children-in-singapore-10173090.html

Link to comment
Share on other sites

எனக்கும் தான் . ஆங்கிலத்தில் உள்ள விளக்கம் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் முதல் பச்சையைப் போடுங்க அப்புறம் விளக்கத்தக் கேளுங்க! :D

Link to comment
Share on other sites

எல்லோரும் முதல் பச்சையைப் போடுங்க அப்புறம் விளக்கத்தக் கேளுங்க! :D

 

ஆசை தோசை அப்பளம் வடை  :D நீங்கள் திகதியை போடும் முன்னே அது தான் விடை என்று தெரியும் ஆனால் விளக்கம் தெரியாததால் தான் பதிலை எழுதவில்லை. விளக்கம் தந்தால் பச்சை தரப்படும் :):icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை கேம்... கம் விளக் கம்  பிளீஸ்...! :D

Link to comment
Share on other sites

பச்சை எனக்குத்தான் தரணும். ஏன்னா உலகமே விவாதித்துக் கொண்டிருக்கிற விடயத்தை பதிந்ததுக்கு ...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் இல்லாமல் விடயம் போட்டால் பச்சை கிடைக்கவே கிடைக்காது யாருக்கெண்டாலும்

Link to comment
Share on other sites

விளக்கம் இல்லாமல் விடயம் போட்டால் பச்சை கிடைக்கவே கிடைக்காது யாருக்கெண்டாலும்

http://www.straitstimes.com/news/singapore/education

ஒரு பச்சை வேண்ட எவ்வளவு கஸ்டப்பட வேண்டியிருக்கு்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளையைக் கசக்கிறதை விட்டிட்டு கூகிள் ஆண்டவரை நாடினால் விடை தெரிந்தாலும் விளக்கம் தெரியாது. இது எப்படி அறிவைப் பெருக்கும்?

பிள்ளைகளுக்கும் கூகிளில் தேடிக்கண்டுபிடியுங்கள் என்று சொல்லி வளர்த்தால் எதிர்காலத்தில் பூமியை எந்திரன்கள்தான் ஆளும்.

ஜூலை 16 என்று விடையை வாலி பதிந்ததால் நானாகக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஏன் என்ற காரணத்துக்கு கொஞ்சம் மினக்கெடவேண்டி வந்துவிட்டது.

பொருந்தக் கூடிய விளக்கம்.

தரவுகள்:

1. அல்பேர்ட்டுக்கு மாதம் மட்டும்தான் தெரியும்.

2. பேர்னாட்டுக்கு திகதி மட்டும்தான் தெரியும்

3. மாதங்கள்: மே, ஜூன், ஜூலை, ஆக்ஸ்ட்

4. திகதிகள்: 14, 15, 16,17,18,19

18,19 திகதிகள் பிறந்தநாளாக இருக்கமுடியாது.

இத்திகதிகள் ஒரு தடவைதான் வருகின்றன என்பதால் மாதம் தெரியாமலேயே பேர்னார்ட் பிறந்தநாளைக் கண்டுபிடித்திருக்கலாம்.

முதல் வசனப்படி அல்பேர்ட் பேர்னாட்டுக்கும் பிறந்தநாள்தெரியாது என்று சொல்கின்றார். 18, 19 திகதிகள் ஜூனிலும், மேயிலும் வருவதால் ச்செரில் இந்த மாதங்களில் ஒன்றை அல்பேர்ட்டுக்கு சொல்லியிருந்தால் அல்பேர்ட்டின் இந்த வசனம் பிழை. பேர்னாட்டிற்குத் தெரியாது என்று அல்பேர்ட் உறுதியாகச் சொல்வதால் மாதம் மே, ஜூனாக இருக்கமுடியாது.

இப்ப உள்ள தெரிவுகள்:

ஜூலை 14, 16

ஆகஸ்ட் 14, 15, 17

இரண்டாவது வசனப்படி பேர்னாட் தனக்கு இப்போது தெரியும் என்கின்றார். 14 ஜூலையிலும் ஆகஸ்ட்டிலும் இருப்பதால் 14 ஆக இருக்கமுடியாது.

இப்ப தெரிவுகள்:

ஜூலை 16

ஆகஸ்ட் 15, 17

பேர்னார்ட் தெரியும் என்று சொன்னதால் ஒரு திகதி மட்டுமுள்ள ஜூலை 16தான் பிறந்தநாள்.

மூன்றாவது வசனப்படி அல்பேர்ட்டுக்கும் பிறந்தநாள் தெரிந்துவிட்டது. 15, 17 ஆக திகதி இருந்தால் அவரால் அப்படிச் சொல்லமுடியாது. ஆகவே ஜூலைதான் அவருக்குச் சொல்லப்பட்டது.

Link to comment
Share on other sites

1. Albertற்கு மாதமும், Bernardற்கு திகதியும் தெரியும்

2. 14,15, 16,17 ம் திகதிகள் 2 தடவையும், 18 ம் 19ம் ஒரு தடவையும் தரபட்டுள்ளது

3. Albert கூறுகிறான் Bernard இற்கு தெரியாது என்று, ஆகவே 18 ம் 19ம் இல்லை

4. 18 ம் 19ம் திகதிகள் வரும் மாதங்கள் *(May, June)இல்லை என்பது தெளிவாகின்றது

5. அகவே July 14, 16ம் Auguest 14, 15, 17 தெரிவாகின்றது

6. இப்போ 14ம் திகதி இரண்டு மாதங்களும் வருகுறது, Bernard மாதத்தை கண்டறிகிறான் அகவே 14ம் திகதிகளும் இல்லை

7.இப்போ மிஞ்சி இருப்பது July 16ம் Auguest 15, 17 தெரிவாகின்றது

8. திகதி தெரியும் என்பதால் Bernard இப்பொழுது மாதத்தயும் தெரிந்து விடுகிறான்

9. இப்போ அல்பேர்டிட்கு திகதி தெரியும் என்று கூறுகிறான்,
எதை வைத்து கூறுகிறான்?.... 14ம் திகதிகளும் இல்லை என்ற முடிவில் இருந்து

10. Augustஇல் 2தடவை உள்ளது...கண்டறியமுடியாது

11. மாதம் தெரிந்த Albertற்கு விடை தெரிகிறது ஆயின் Ausust மாதம் வராது


ஆகவே July 16


அப்பா................விளங்காட்டி தயவு செய்து கேட்கவேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவியர் ஒருக்கா வடிவா விளங்கப்படுத்த ஏலுமே ???? :lol:

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லப்போனால் இன்னும் எனக்கு தெளிவா விளங்கேல்லை  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே15, மே16, மே19, ஜூன்17, ஜூன்18, ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15, ஆகஸ்ட்17

ஜெனிபர் லோரன்ஸ் :rolleyes:இன் எண்ணத்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

படிமுறை1

இவற்றுள் மே19 உம் ஜூன்18 உம் பிறந்தநாளாக இருக்கமுடியாது. (பேர்னாட்டுக்கு திகதி தெரியும்)

இப்போது எஞ்சியிருப்பது

மே15, மே16, ஜூன்17, ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15, ஆகஸ்ட்17

படிமுறை2

இனி ஜூன்17 உம் விடுபட்டுப் போகும் (அல்பேர்ட்டுக்கு மாதம் தெரியும்)

இப்போது எஞ்சியிருப்பது

மே15, மே16, ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15, ஆகஸ்ட்17

படிமுறை3

மீண்டும் ஆகஸ்ட்17 விடுபட்டுப் போகும்(பேர்னாட்டுக்கு திகதி தெரியும்)

இப்போது எஞ்சியிருப்பது

மே15, மே16, ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15

இனி அல்பேர்ட் மற்றும் பேர்னாட் இருவரின் கூற்றுக்களின் படி

படிமுறை4

மே15 உம் மே16 உம் விடுபட்டுப் போகும் (அல்பேர்ட்டின் முதலாவது கூற்று)

இப்போது எஞ்சியிருப்பது

ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15

படிமுறை5

ஜூலை14 உம் ஆகஸ்ட்14 உம் விடுபடும் (பேர்னாட்டின் கூற்று)

இப்போது எஞ்சியிருப்பது

ஜூலை16 உம் ஆகஸ்ட்15 உம்

அல்பேர்ட்டின் மூன்றாவது கூற்றுப் பொய் :D

ஜூலை16 நம்பர் சரியில்லை ஆகஸ்ட்15 தான் நல்ல நம்பர் இது ஜெனிபர், வாலிக்குச் சொன்னது.

எனவே விடை ஆகஸ்ட் 15 :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சேவியர் ஒருக்கா வடிவா விளங்கப்படுத்த ஏலுமே ???? :lol:

அக்கா எந்த இடத்தில உங்களுக்கு சந்தேகம்?

அந்த இடத்தை கூறினால் இலகுவாக இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை இங்கும் சொல்லப்பட்டுள்ளது.

 

http://www.bbc.co.uk/news/world-asia-32297367

 

11111802_983395601695416_320802234673757

Link to comment
Share on other sites

சாறி வாலி சார். நீங்க ரொம்ப லேட்டா விளக்கம் தந்தால உங்களுக்கு ஆறுதல் பரிசா சுவியிட பச்சை புள்ளி மட்டும் வழங்கப்படுது.  :lol:
 
கிருபன் அவர்களை வெற்றியாளராக அறிவித்து அவருக்கு நான்கு பச்சை புள்ளி வழங்கப்படுகிறது.  :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.