• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ரஞ்சித்

அந்தப் பத்து நிமிடங்கள் !

Recommended Posts

மனம் உயிர்ப்புடன் இருக்கிறது என்று அர்த்தம், ரகு!

உயிர்ப்புடன் இருந்தால் எந்த வயதிலும் இந்த உணர்வு வரும்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

ரகு அண்ணா உங்கள் கதையை நீங்கள் முடிக்காவிட்டால்..உங்கள் கதையோடு சார்ந்த எங்கள் சொந்த அனுபவங்களை எழுதி கதையை "Based on True Story".... ஆக்கிவிடுவோம்   :)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ரகு அண்ணா உங்கள் கதையை நீங்கள் முடிக்காவிட்டால்..உங்கள் கதையோடு சார்ந்த எங்கள் சொந்த அனுபவங்களை எழுதி கதையை "Based on True Story".... ஆக்கிவிடுவோம்   :)

 

 

அன்பு சசி,

 

நான் கதை தொடங்கும்போதே முடிவுறாத கதை என்று தெரியும் எனக்கு. :icon_idea:

 

பயணங்கள் முடிவதில்லை...ஒருதலை ராகம் பார்த்ததில்லையோ ??? :wub:

 

ஆனாலும், உங்கள் அனுபவங்களைத் தொடுத்து இதை நீட்டித்து முடிப்பதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். :rolleyes:  

 

இந்தக் கதை அப்போது "Based on True Story" என்று இல்லாது " Based on multiple true stories" ஆக மாறிவிடும் !!!!! ^_^ 

 

சவால், முடிந்தால் இந்தக் கதையை முடியுங்கள் பார்க்கலாம் !!!! :D 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

து "Based on True Story" " Based on multiple true stories" >சவால், முடிந்தால் இந்தக் கதையை முடியுங்கள் பார்க்கலாம் !!!! :D 

 

நான் கதையை முடிக்கிறேன் ...எந்த வீதி,எந்த சப்பேர்ப் என்று சொன்னால் நல்லம்...:D ....கார் நம்பரையும் தருவீர்கள் என்றால் மிகவும் விறுவிறுப்பாக கதையை முடிக்கலாம்...:D யாவும் முஸ்பாத்திக்கே.......

Edited by putthan
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

புத்தன் அண்ணா, விட்டால் பெயர் விலாசம் எல்லாம் கேப்பியல் போல கிடக்கு. அது தெரியாமத்தானே நானே கதையா எழுதிக் கொண்டிருக்கிறன்.

Share this post


Link to post
Share on other sites

எனக்கே தொடர்ந்து எழுதவேணும் போல கிடக்கு இதை.நீங்கள் வேறை :lol:

Share this post


Link to post
Share on other sites

சில வாரங்கள் இருக்கலாம், இறுதியாக அவளைப் பார்த்து. அல்லது அவளை இனிமேல் பார்க்கக் கூடாதென்று மனம் அழுங்காகப் பற்றிக்கொண்டிருக்கலாம், ஏதோ ஒன்று அவளிடமிருந்து என்னைத் தூர விலத்தியிருக்க வேண்டியது. 

 

கடுமையான மனப் போராட்டங்களினூடு, ஒரு நிலைக்கு மனம் வந்திருந்தது. இது விரும்பி எடுத்த முடிவா என்றால் இல்லையென்றுதான் அடித்துச் சொல்லும் மனது, ஆனால் அதுவே  இப்போதைக்கு தேவையாகவிருந்தது.

 

அவளைப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்களையும் வேண்டுமென்றே மனம் கவலையுடன் தவிர்த்துக்கொண்டது. இதயத்தின் ஒருமூலையில் லேசான வலிப்பு பல காலங்களுக்குப் பின்னர் முதன்முறையாக தொடங்கியது தெரிந்தது எனக்கு. ஆனால், வேறு வழியில்லை. தறிகெட்டுத் திரியும் மனதைக் கட்டிப் போடவேண்டும் என்று மூளை சொல்லியதால், வெகு சிரமப்பட்டு கண்களையும், மனதையும் கறுப்புத்துணி மூடிக் கட்டிக் கொண்டேன்.

 

என்னில் இந்த மாற்றத்தை அவளும் உணர்ந்திருப்பாள் போலும். வழமையான கனிவான கடைக்கண் பார்வையும், மெலிதான உதட்டோரப் புன்னகையும் அவள் முகத்திலிருந்து மெதுவாக மறைய ஆரம்பித்துவிட்டன. கூட்டத்தில் என்னைத் தேடிய கண்கள் வேண்டுமென்றே வேறு எங்கோ வெறித்தபடி அவள் என்னை சிலவேளைகளில் கடந்துபோவாள். அந்த ஒவ்வொரு கணமும் மனதில் அந்த வலி வந்துபோகும். ஆனால், இந்தக் காதலை விடவும் வலி பரவாயில்லை என்று பிடிவாதமாக கண்களையும், மனதையும் கட்டிப் போட்டேன். சிறிது சிறிதாக அவள் என்னை முற்றாக ஒதுக்கத் தொடங்கினாள். நான் இருப்பதை சட்டை செய்யாமல் என்னை முற்றாகப் புறக்கணித்துப் போனாள். மனதில் வலி சிறுகச் சிறுக கூடிக் கொண்டே போனது.

 

நான் ஏன் இப்படி ஆனேன் என்று அவளிடம் என்னால் சொல்ல முடியாது. கேட்கும் நிலையிலோ அல்லது தேவையோ அவளுக்குச் சற்றும் கிடையாதென்பது எனக்கு நன்றாகவே தெரியும். இன்றுவரை ஒரு சொல்லூக்கூட பேசத் தெரியாத எமதிரு மனங்களும் சொல்லிக்கொள்ளாத பனிப்போருக்குள் வீழ்ந்துபோயிருக்க, யுத்தமெதுவுமே இன்றி எனது மனது முற்றாகத் தோற்றிருந்தது. 

 

இப்படியே சில வாரங்களாக போராடிப் போராடி இறுகியிருந்த மனது இன்று மறுபடியும் விழித்துக்கொள்ளப் பார்த்தது. மூடிவைத்த உணர்வெல்லாம் சட்டை தறி தெறித்து வெளியே பாய்ந்துவிடப் பார்த்தது. அவளை சில வாரங்களுக்குப் பின்னர் இன்று நேருக்கு நேராகக் கண்டேன். ஒரு சில நொடித்துளிகளில் என்னைப் பார்த்த அவளது விழிகள் சட்டென்று வேறெங்கோ திரும்பியபடி, அவள் என்னை வேகமாகக் கடந்து போனாள். அவள் முகத்தில் எந்தச் சலனமுமில்லை, மனது  லேசாக அழத் தொடங்கியது. ஆனாலும், இது நடப்பது சாத்தியமில்லை என்பதுமட்டும் எனக்குத் தெரிகிறது, மனதைக் கஷ்ட்டப்பட்டு மறுபடி சமாதிக்குள் அடைத்துவிட்டு தொடர்ந்து நடந்தேன். சமாதிக்குள்ளிருந்து மனம் விசும்புவது எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

Edited by ragunathan
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

அருமை அண்ணா.ஆனாலும் எதோ ஒன்று உங்கள் எழுத்தில் விடுபட்டுவிட்டதான தோற்றம்

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

அருமை அண்ணா.ஆனாலும் எதோ ஒன்று உங்கள் எழுத்தில் விடுபட்டுவிட்டதான தோற்றம்

 

சுமே,

 

எனது எழுத்தில் எதை விட்டு விட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தெரிந்துகொள்ள ஆசை. :)

 

என்னடா, இவன் சப்பென்று முடித்துவிட்டானே என்று நினைக்கிறீர்களா? இதைவிட எழுதுவதற்கு என்னிடம் வேறு எதுவுமே இல்லையே! இருந்தால் எழுதாமல் இருப்பேனா? :D

Share this post


Link to post
Share on other sites

முதல் பகுதியை எழுதியபோது கதையில் இருந்த உயிர்ப்பு அடுத்த பகுதியில் இல்லை. கதையை நீங்கள் முடித்ததாக நான் நினைக்கவே இல்லை. வேண்டா வெறுப்பா சாப்பிடுவதுபோல் .......இப்ப புரிந்து இருக்குமே உங்களுக்கு :lol:

Share this post


Link to post
Share on other sites

சுமே,

 

கதையை நீட்டிக்க என்னால் முடியாது. ஏனென்றால் கதையைக் கொண்டு நடத்துவது என் கைய்யில் இல்லை. நடப்பதை எழுதுவதுதான் எனது வேலையென்று ஆகிவிட்டது. 

 

வேண்டுமென்றால் முடித்துவைக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றதென்று மட்டும் என்னால் சொல்ல முடியும் ! :D

Share this post


Link to post
Share on other sites

அப்ப நடக்கும் போது மிகுதியை எழுதுங்கள் :lol: அதுவரை காத்திருக்கிறம் :icon_idea:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

சுமே,

 

வேண்டுமென்றால் முடித்துவைக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றதென்று மட்டும் என்னால் சொல்ல முடியும் ! :D

 

ஆளை முடிக்கிற பிளனோ கதையை முடிக்கிற பிளானோ:D

Share this post


Link to post
Share on other sites

ஆளை முடிக்கிற பிளனோ கதையை முடிக்கிற பிளானோ:D

ஆத்துக்காரி ரகுவை முடிக்கிற பிளான்

Share this post


Link to post
Share on other sites

ஆளை முடிக்கிற பிளனோ கதையை முடிக்கிற பிளானோ :D

 

 

நக்கலு ????? ஆளோட பேசவே ஏலாது, அதுகுள்ள முடிகிறது ??????? அதுசரி, நீங்கள் எந்த "முடிக்கிறதைச்" சொல்லுறீங்கள் ? :icon_mrgreen:

ஆத்துக்காரி ரகுவை முடிக்கிற பிளான்

 

 

எனக்கொரு வழிபண்ணாமல் விடுறதில்லையெண்டு இருக்கிறையள் போல ? அவ்வளவு அக்கறை ? :D

Share this post


Link to post
Share on other sites

மனதிற்கு சமாதி கட்டி அதற்குள் இருந்து விசும்ப வைத்துவிட்டு வாசிக்கவந்த எங்களையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது நல்லா இல்லை சொல்லிட்டன்.. :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

இந்த மனுசன் ரசிகனைய்யா என்னயமாதிரியே சிலதுகளில, :D அப்பப்ப வந்தெழுதினாலும் மனசுக்குள்ள ஒட்டிவிடுகுது உங்களோட எழுத்துக்கள் றகு அண்ணா ரசனைகள் நிறைய இடங்களில் ஒத்தே இருப்பதால்.. :)

Edited by சுபேஸ்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்த மனுசன் ரசிகனைய்யா என்னயமாதிரியே சிலதுகளில, biggrin.png அப்பப்ப வந்தெழுதினாலும் மனசுக்குள்ள ஒட்டிவிடுகுது உங்களோட எழுத்துக்கள் றகு அண்ணா ரசனைகள் நிறைய இடங்களில் ஒத்தே இருப்பதால்.. smile.png

 

 

நீங்களும் ஒண்டை எழுதுறது? எழுதினால் நாங்களும் வாசிப்போமில்லை ?smile.png

Share this post


Link to post
Share on other sites

 

மனதைக் கஷ்ட்டப்பட்டு மறுபடி சமாதிக்குள் அடைத்துவிட்டு தொடர்ந்து நடந்தேன். சமாதிக்குள்ளிருந்து மனம் விசும்புவது எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

 

கதையின் பெயர் தான் அந்தப்பத்து  நிமிடங்கள்.

முடிவு.... அந்த விசும்பல் மட்டும்  கட்டை வேகும் வரை 

உள்ளேயிருந்து கேட்ட படியே இருக்கும்.smile.png

 

பகிர்விற்கு நன்றி ரகு

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • தமிழில்  எவ்வளவு செல்லமாக "குஞ்சா மணி" என்று பெயர் இருக்க  சும்மா போய் அதை "மர்ம உறுப்பு ", "மறைந்த பருப்பு" என்று சொல்வதை எல்லாம்  நான் வன்மையாக கண்டிக்கிறேன்  
    • அடுத்ததடவை நீங்கள் இலங்கைக்குப் போகும்போது சொல்லுங்கள் நானும் கூடவருகிறேன், வந்து உங்களை வவுனியா நொச்சிமோட்டைப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறேன் அங்கு உங்களுக்கு ஒரு வீரனுக்குரிய மரியாதை தந்து விளக்கமும் தருவார்கள் பெற்றுக்கொள்ளலாம்.  
    • பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்! பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ் மக்களின் தொடர் முயற்சியில் மாநகர முதல்வரும் அவரின் சார்பானவர்களும் பல வழிகளில் தமிழ்மக்களுக்கும் அவர்களின் நியாயமான முன்னெடுப்புக்களுக்கும் உதவி வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி ஈருருளி பயணத்தையும், நடைப் பயணத்தையும் பரப்புரைகளையும் மேற்கொண்டபோது அதனை மேற்கொண்ட தமிழின விடுதலைச் செயற்பாட்டாளர்களை அழைத்துப் பேசி உற்சாகத்தை வழங்கியதோடு அதற்கான அரசியல் செயற்பாடுகளை செய்வோம் என்று இது சம்பந்தமாக பிரான்சு சனாதிபதி அவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த 2019 டிசெம்பர் மாதம் மாநகரசபை ஏற்பாட்டில் ஆளும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்கள் போன்றவர்களை அழைத்து மாநாட்டினை நடாத்தியிருந்தனர். இம் மாநாட்டில் தமிழர் தரப்பில் சர்வதேச ரீதியாகவும், ஐரோப்பிய பாராளுமன்றம், ஐ.நா. மனிதஉரிமைகள் செயலகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றவர்கள். இளையவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். தமிழர்களின் 70 வருடகால போராட்டம் பற்றியும், சிங்கள் பௌத்த தமிழர் விரோத செயற்பாடும் அதன் தொடர்ச்சியாய் தொடர்ந்த இனக்கலவரங்கள் கல்வித் தரப்படுத்தல் முதல் இறுதி முள்ளிவாய்க்கால் வரை சான்றுகள் பகிரப்பட்டது. அன்றைய நாளில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகவும் விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளர் கூட தமிழர் தரப்பின் நியாயங்களைக் கேட்டு அமைதியாக இருந்தமையும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு. தமிழினப்படுகொலைக்கு சவர்வதேச நீதி காண வேண்டும். 70 வருடங்களாக இத்தனை தமிழர்களின் உயிர், உடமை அழிவுக்கும் நிம்மதியான சுதந்திரமான வாழ்வுக்கும் ஒரே தீர்வு தமிழீழமே என்பதையும் தெரியப்படுத்தப்பட்டது. இத்தீர்மானம் ஏற்கனவே பாசிலோனா, கத்தலோனியா இடங்கங்களில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தீர்மானத்தை முதற்சந்திப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து 28 நாட்கள் நிறைவில் மீண்டும் இன்று மாநகர மண்டபத்தில் முதல்வர் முன்னிலையில் அனைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் முதல்வரின் முன்மொழிதல் மூலம் அத்தீர்மானம் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது. 2020 இல் இந்த முக்கியமான செயற்பாட்டை, அடுத்த கட்டம் நோக்கி செயற்படுத்துவதற்கு ஊக்கசக்தியாக அமைந்திருப்பதாகவே பல தாயகச்செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் நகரங்களிலும் நகரசபைகளிலும் தமது தமிழ்ச்சங்கங்கள் மூலம் முன்னெடுக்க இதுவோர் ஊக்க சக்தியாக இருக்கும். வரும் உள்ளூராட்சித்தேர்தலும், அதில் எமது தரப்பில் நியமிக்கப்படும் வேட்பாளர்களும் அவர்களின் வெற்றியும் எமது மக்களின் ஓரணியிலான பங்களிப்பும் வரும் காலத்தில் தமிழினத்தின் இலக்கை அடைய ஏதுவாக இருக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக அமைகின்றது   http://www.errimalai.com/?p=48853&fbclid=IwAR3JNdoIU6h4qrpzXQtBQChm99fG0GyPh8K58ceRmxPi0gRi-F4qWOFoB9k
    • ஏனென்றால்...... அனேகமான நேரங்களில் அது இருக்கிறதே தெரியாமல் சிவனே.. என்று பேசாமல்  மர்மமாக இருக்கும்... ஆனால் விழிச்சுக் கொண்டால் படம் எடுத்து ஆடி தன் இருப்பை உறுதி செய்யும் என்பதால்
    • அது மட்டுமல்ல ஆண் பெண் பாகுபாடின்றி  இயற்கையான சிவலிங்கத்தை தொட்டு  பூஜிக்கின்றார்கள்.