Jump to content

இலைகள் தளிர்க்கின்றன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11164597_10203196245740561_7804170586491

 

நிர்வாண மரங்கள்

கிளைகள் தளிர் நிறைக்க

இலையாடை அணிந்து

தம்மை அழகாக்க

ஆயத்தமாகின்றன 

 

பூமியின் காதலன்

நிதம் கதிர் பரப்பி 

தூங்கிக் கிடக்கும்

வேர்களைத் தட்டி எழுப்ப 

கிளைகள் எங்கணும்

மகிழ்வின் துடிப்பில்

மொட்டுக்கள் பூக்களாகி 

மாலை கட்டி நிற்கிறது மரம் 

 

மறைந்து வாழ்ந்த பறவைகள் 

மரங்களில் அமர்ந்து

மகிழ்வாய்க் காதல் செய்ய

மன நிறைவாய் தளிர்கள்

நாளும் பொழுதும் விரிந்து

நாட்டியமாடும் மங்கையராய்

நடை பரப்பி நிதம் 

நகைக்க வைக்கின்றன

 

பார்க்கும் இடம் எங்கும்

பச்சை வண்ணம் காண

பசுமை கொண்ட மாந்தமனம் 

மனதெங்கும் மகிழ்வோடு

துன்பங்களைத் தூர வைத்து

இயற்கை எழிலை எல்லையின்றி

எங்கும் நிரப்பிக்கொள்ள

போதும் இன்று என எண்ணித்

கதிர்க் குடை சுருக்கக் கதிரவன்

காலம் பார்த்திருக்கிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் காதலன்

நிதம் கதிர் பரப்பி

தூங்கிக் கிடக்கும்

வேர்களைத் தட்டி எழுப்ப

கிளைகள் எங்கணும்

மகிழ்வின் துடிப்பில்

மொட்டுக்கள் பூக்களாகி

மாலை கட்டி நிற்கிறது மரம்

 

 

வசந்தத்தை வரவேற்கும் அழகு , அழகாயிருக்கு...!  :)  :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11164597_10203196245740561_7804170586491

 

நிர்வாண மரங்கள்

கிளைகள் தளிர் நிறைக்க

இலையாடை அணிந்து

தம்மை அழகாக்க

ஆயத்தமாகின்றன 

 

பூமியின் காதலன்

நிதம் கதிர் பரப்பி 

தூங்கிக் கிடக்கும்

வேர்களைத் தட்டி எழுப்ப 

கிளைகள் எங்கணும்

மகிழ்வின் துடிப்பில்

மொட்டுக்கள் பூக்களாகி 

மாலை கட்டி நிற்கிறது மரம் 

 

மறைந்து வாழ்ந்த பறவைகள் 

மரங்களில் அமர்ந்து

மகிழ்வாய்க் காதல் செய்ய

மன நிறைவாய் தளிர்கள்

நாளும் பொழுதும் விரிந்து

நாட்டியமாடும் மங்கையராய்

நடை பரப்பி நிதம் 

நகைக்க வைக்கின்றன

 

பார்க்கும் இடம் எங்கும்

பச்சை வண்ணம் காண

பசுமை கொண்ட மாந்தமனம் 

மனதெங்கும் மகிழ்வோடு

துன்பங்களைத் தூர வைத்து

இயற்கை எழிலை எல்லையின்றி

எங்கும் நிரப்பிக்கொள்ள

போதும் இன்று என எண்ணித்

கதிர்க் குடை சுருக்கக் கதிரவன்

காலம் பார்த்திருக்கிறான

 

இவ்வளவு நாட்களாக யாரைப் பார்த்தாலும் ஊர்க் கதை தான்.அவ்வளவோ குளிர்.

 

இப்போ குளிர் குறைந்து மரங்கள் துளிர்விட ஊரையே மறந்துடுவோம்

 

இனி அடுத்த வருடம் குளிர் வரும் போது தான் ஊர் ஞாபகம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த காலம்

 

கதிரவனின் காலக்

கொடுமையில்
பாறைகளாகிய

உறைபனி விரிப்புக்கள்
மெல்ல மெல்லத் தன்

வீரியத்தை இழந்து
தன் விழுதுகளை

பூமி மீது நீட்டுகின்றன. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சுவியண்ணா, ஈழப்பிரியன், வாத்தியார்.


இவ்வளவு நாட்களாக யாரைப் பார்த்தாலும் ஊர்க் கதை தான்.அவ்வளவோ குளிர்.

 

இப்போ குளிர் குறைந்து மரங்கள் துளிர்விட ஊரையே மறந்துடுவோம்

 

இனி அடுத்த வருடம் குளிர் வரும் போது தான் ஊர் ஞாபகம் வரும்.

 

வேறு என்னதான் வழி சுவைப்பிரியன் ?? ஒரேயடியாக மறந்துபோகாமல் அப்பப்பவாவது ஊர் நினைவில் வருகிறதே :D
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சுவியண்ணா, ஈழப்பிரியன், வாத்தியார்.

 

வேறு என்னதான் வழி சுவைப்பிரியன் ?? ஒரேயடியாக மறந்துபோகாமல் அப்பப்பவாவது ஊர் நினைவில் வருகிறதே :D

 

 

என்ன சுமே கூட எடுத்திட்டியளோ?

 

சுவைப்பிரியனுக்கும் ஈழப்பிரியனுக்கும் வித்தியாசம் தெரியல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்குள் 'புதைத்திருக்கும்' கருத்து அருமை!

 

ஒரு வட்டத்தில் பயணிக்கும் இயற்கை, ஒரு மனிதனது வாழ்வை மட்டும் ஒரு வட்டத்தில் நகர்த்துவதில்லை!

 

ஒரு இளமை... ஒரு நடுத்தர வயது.. ஒரு முதுமை...அவ்வளவு தான்!

 

ஒன்று முடிந்தபின்.. அதை மீண்டும் அடைய முடியாத ' வக்கிர நிலை' !

 

ஆனால் பருவகாலங்களின்... 'வசந்தம்' மீண்டும் , மீண்டும் வரும்! :o

 

தொடர்ந்து கவியுங்கள்!

Link to comment
Share on other sites

வசந்த வருகைக்கு கட்டியம் கூறும் கவிஞர்  

மெசொபொத்தேமியா சுமேரியருக்கு

பாராட்டுக்கள்.  உங்களுக்கு எனது அன்பான வசந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுமே கூட எடுத்திட்டியளோ?

 

சுவைப்பிரியனுக்கும் ஈழப்பிரியனுக்கும் வித்தியாசம் தெரியல.

 

அய்யோ தெரிஞ்சு போச்சோ ?? :lol:

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை, பொயற், தமிழினி, இணையவன்

இதை என்னாலேயே கவிதை என்று கொள்ள முடியவில்லை. பெரியமனதுடன்   வந்தவர்களுக்கு நன்றி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதிர்க் குடை சுருக்கக் கதிரவன்

காலம் பார்த்திருக்கிறான்

 

முத்தான கவிதைக்கு முத்தாய்ப்பான வரிகள். வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சேயோன்


வசந்த வருகைக்கு கட்டியம் கூறும் கவிஞர்  

மெசொபொத்தேமியா சுமேரியருக்கு

பாராட்டுக்கள்.  உங்களுக்கு எனது அன்பான வசந்த வாழ்த்துக்கள்

 

அய்யோ அண்ணா மோதிரக் கையால் குட்டு வாங்கலாம். ஆனால் என் நிலை எனக்குத் தெரியும் அண்ணா. மிகைப்படுத்தல்  வேண்டாமே அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தத்தை வரவேற்கும் அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீயா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.