• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • அவ்வாறான தேவை எனக்கில்லை. எனது நம்பிக்கையை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையும் இல்லை.  உங்கள் கருத்துக்களை நன்கு வாசித்தே அதற்கான விளக்கத்தை அதுவும் தெளிவாக quote பண்ணி தான் பதில் தந்துள்ளேன். மீண்டும் முழுமையாக வாசித்துப் பாருங்கள். புரியும். அது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் இருவரும் எழுதிய கருத்துக்களுக்கு தனித்தனியாக தெளிவான பதில்களையே தந்துள்ளேன்.
    • சாமியார் என்ரைபெயரையும் உங்கள் பின்னூட்டத்தில் இணைத்து விடுங்கோ. ஒரு அமெரிக்க இராணுவநபர் என்னிடம் 10 யூரோ கடன் வாங்கினவர். இன்றுவரை அதற்கான வட்டியுமில்லை முதலும் இல்லை. 
    • கடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ?
    • பிகு:   திரியை மீளாய்வு செய்ததில்: மல்லிகை, நீங்கள் துல்பென் எழுதியவற்றை என் தலையில் கட்டி, எனக்கும் சேர்த்து பயான் ஓதுகிறீர்கள் (கவனிக்க: தனியே உடுக்கடித்தல் என்ற சொல்லாடலை மட்டும் பாவிக்கவில்லை 😂). துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது. அதுதான் துல்பெனுக்கு எழுத வேண்டியதை எனக்கு பதிலாக எழுதிக் கொண்டிருகிறீர்கள்.   காலக்கொடுமடா சாமி 🤦‍♂️
    • முடிந்தால் - மீண்டும் இந்த திரியில் நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்கேயும் நான் நாத்திகன் என்று எழுதியதில்லை. நீங்களாக என்னை அப்படி கற்பனை செய்து கொண்டு எழுதினால் அது உங்கள் விளக்கவீனம். எப்படி நான் மனித நேயம்/சிறுவர்கள் நலம் பேசுவது உங்களுக்கு முற்போக்கு போலிவாதமாக, முற்போக்கு படங்காட்டலாக தெரிகிறதோ, அதே போல நீங்கள் எதோ இந்து மதத்தின் பாதுகாவலன் என்ற ரேஞ்சில் பேசுவது எனக்கு உங்கள் இந்து மத பற்றை நீங்கள் “உடுக்கடித்து” படம் காட்டுவதாகவே தெரிகிறது.  இந்த திரியில் நான் எங்கேயும் இந்து மதத்தை பற்றியோ அதன் சடங்குகள் பற்றியோ கதைக்கவே இல்லை. நான் சொன்ன 2 விடயம்கள். 1. நம்பிக்கையின் பெயரால் எந்த மதமாயினும் - வன்முறையை சிறுவர் மீது ஏவுவது தப்பு 2. இங்கே யாழில் இந்த விடயத்தை குழுமனநிலையில் அணுகின்றார்கள்.    இதில் எங்கே வந்தது இந்து சமயத்தின் மீதான காழ்ப்புணர்வு? இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன்? சும்மா உங்களை இந்து சமய காவலராக காட்ட வேணும் என்ற அவசரத்தில், போறவன், வாறவன் போத்தீட்டு படுக்கிறவன் எல்லாரையும் நீங்கள் இந்து மத விரோதியாக சித்தரித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல. விலங்கு-குழந்தை, ஒன்றில் உங்களுக்கு நான் எழுதியதை வாசித்து கிரகிக்க முடியாமல் உள்ளது, அல்லது வேணுமெண்டே பிழையாகன விளக்கத்தை முன்வைக்கிரீகள். மாட்டுக்கு “கூட” என்பதில் தொனிக்கும் அர்த்தம் யாது என்பது, எல்லாருக்கும் தெரியும்.