Jump to content

ஆவிகளும் நாங்களும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

அப்பா இறந்த நாள் முதல் வீடு முழுவதும் நண்பர்கள் உறவினர் என்று இரவு பன்னிரண்டு ஒன்று என்று இருந்து கதைத்துவிட்டுப் போவதாய் முதல் மூன்று நாட்கள் கழிய, நான்காம் நாளிலிருந்து உறவினர்கள் படிப்படியாகக் குறைய எஞ்சியது நாங்கள் ஒரு இருபது பேர் தான்.

ஆனாலும் அப்பப்ப அயலில் உள்ளவர்களும் தெரிந்தவர் போனவர் என்று நாள்முழுதும் வீட்டில் பேச்சுச் சத்தம் கேட்டபடி இருந்தது.

தம்பியின் ஐந்து நண்பர்களும் மனைவி பிள்ளைகளும் கூட இரவு பதினோருமணி வரை எம்முடன் இருந்து கதைத்து தாமே எல்லா வேலைகளையும் செய்து, அதன் பின் வீட்டுக்குப் போவார்கள்.

அம்மாவின் ஒன்றுவிட்ட தங்கை அம்மாவின் நெருங்கிய நண்பி. அவரே அம்மாவின் அருகில் தூங்கி எழுவது கடந்த மூன்று நாட்களும். அம்மா தன் பக்கம் படுக்க சின்னம்மா தான் அப்பா படுத்த பக்கம் படுப்பது. எமக்கு என்னவோ அவர் இருப்பது மிக பாதுகாப்புப் போல உணர்ந்ததனால் நின்மதியாகத் தூக்கம் வந்தது. 

சின்னம்மா படுக்கும் கட்டிலின் பக்கத்தில் ஒரு மேசை. எப்போதும் அப்பா அதில் இருந்துதான் ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பார். அப்பாவுக்குப் பிடித்த எல்லாப் பொருட்களும் அந்த மேசை லாச்சிகளில் இருக்கும்.  அப்பாவின் பெரிய படம் ஒன்று மேசையில் வைத்து பூக்களும் வைத்து விளக்கை எந்நேரமும் எரியவிட்டிருந்தோம்.

நான்காம் நாள் காலை குளித்துவிட்டு சின்னம்மா தன் வீட்டுக்குப் போகத் தயாராகிவிட அம்மாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. எமக்கும் சின்னம்மாவை நில்லுங்கள் என்று மறிக்க முடியவில்லை. சின்னம்மாவின் மகள் அவரை அழைத்துப் போகக் காலையிலேயே வந்துவிட்டார். 

சின்னம்மா படி இறங்கிப் போய்க் காரிலும் அமர்ந்துவிட்டார். என் தங்கையின் கணவர் அன்றுதான் கனடாவில் இருந்து வந்தவர் இல்லை நீங்கள் இன்று மட்டும் நின்றுவிட்டுப் போங்கோவன். நீங்கள் இருப்பது மாமிக்கு நின்மதியாக இருக்கும் சின்னம்மா என்று கேட்டும் அவர் காரை விட்டு இறங்கவில்லை.

சும்மா நேரத்திலேயே அவர் வந்து நாட்கணக்கு இல்லாமல் அம்மாவுடன் நின்றுவிட்டுப் போகிறவர். இந்த நேரத்தில் ஏன் அடம்பிடித்துக்கொண்டு ஓடுகிறார் என்று எமக்கெல்லாம் ஒரே திகைப்பு. அவரும் வயது எண்பதை நெருங்குபவர். அதனால் அவருக்கும் தன் வீட்டில் இருப்பது சுதந்திரமாக இருக்கும் போல. அத்துடன் எமது வீட்டிலும் ஒரே ஆட்கள் அதுதான் போய்விட்டார் என்று நாம் எண்ணிவிட்டு அப்படியே விட்டுவிட்டோம்.

மாலையில் வழமைபோல தம்பியின் நண்பர்கள் வந்தபோது எங்கே உங்கள் சின்னம்மாவைக் காணவில்லை என்று ஒருவன் கேட்க, அவர் மறிக்க மறிக்க நிக்காமல் வீட்டுக்குப் போட்டார் என்றான் தம்பி.

அப்ப எதோ நடந்திருக்கு அவ ஓடுற அளவுக்கு என்று பகிடியாய் ஒருவன் ஆரம்பிக்க எங்கள் அப்பா ஆவியாக எல்லாம் வந்து மற்றவரைப் பயப்பிடுத்த மாட்டார் என்றேன் நான். அவர் ஒண்டும் பயப்பிடுத்த மாட்டார். ஆனால் ஒருவர் இறந்து முப்பது நாள் வரையும் தீய ஆவிகள் எல்லாம் கூட அந்த வீட்டுக்குள் வந்துபோகும் என்றவுடன் எனக்கு முதுகில் காற்றுப் பட்டது போல் குளிர்ந்துபோக நான் சிலிர்த்துக் கொண்டேன்.

வரும் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே

கதைக்காகவோ

நிஐமாகவோ....

உங்கள் அப்பா ஒரு தெய்வமாகிவிட்டவர்....

ஆவி.......

அப்படி இப்படி எழுதுவது சரியாகத்தெரியவில்லை..

இது எனது கருத்து மட்டுமே..

நன்றி.

உங்களுக்கு அவசரப்படுவதே தொழிலாகிவிட்டது கொஞ்ச நாட்களாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகோதரி...!

Link to comment
Share on other sites

உண்மைதான்.. குளிர் காற்று மாதிரி வீசினால் ஆவிகள் அருகில் இருப்பதாக அர்த்தமாம். :unsure: அதுபோல உரோமக்கால்கள் நட்டுக்கொண்டாலும் அப்படித்தானாம். :o எதுக்கும் பயப்படாதேங்கோ.. :unsure::lol:

EVP-Olympus-3.jpg?

இதை வாங்கினீர்கள் என்றால் மனிதனால் கேட்க முடியாத ஒலி அலைகளை (sub-audible frequencies) இது பதிவு பண்ணி கேட்கக்கூடியது மாதிரி செய்து தரும். இதன்மூலம் ஆவிகளுடன் தொடர்பு எடுக்கலாம்.. :huh::D

இது ஏற்கனவே என்னிடம் இருக்கு. இனி இரவில போகவர கையோட கொண்டெல்லோ திரியவேணும். :lol:

நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எதோ நடந்திருக்கு அவ ஓடுற அளவுக்கு என்று பகிடியாய் ஒருவன் ஆரம்பிக்க எங்கள் அப்பா ஆவியாக எல்லாம் வந்து மற்றவரைப் பயப்பிடுத்த மாட்டார் என்றேன் நான். அவர் ஒண்டும் பயப்பிடுத்த மாட்டார். ஆனால் ஒருவர் இறந்து முப்பது நாள் வரையும் தீய ஆவிகள் எல்லாம் கூட அந்த வீட்டுக்குள் வந்துபோகும் என்றவுடன் எனக்கு முதுகில் காற்றுப் பட்டது போல் குளிர்ந்துபோக நான் சிலிர்த்துக் கொண்டேன்.

வரும் .....

வந்த ஆவிகள் உங்களை பார்க்கவில்லை போல் தெரிகிறது .............................. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் களத்தில் ஆவிகள் தாரளாமாக திரிகிறதே ....
தமிழருக்கு சார்பாக  கருத்து போட்டால் 
தொடர்பு ஈசியா கிடைக்கும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்த ஆவிகள் உங்களை பார்க்கவில்லை போல் தெரிகிறது .............................. :lol:  :D

பிறகு உங்கள் வீட்டுப் பக்கமும் ஆவிகள் உலாவ வெளிக்கிட்டிடும் :lol: :lol:

யாழ் களத்தில் ஆவிகள் தாரளாமாக திரிகிறதே ....
தமிழருக்கு சார்பாக  கருத்து போட்டால் 
தொடர்பு ஈசியா கிடைக்கும் 

யாழ் களத்து ஆவிகள் எல்லாம் யாழை விட்டு வெளியே போனாலே தம் சக்தியை இழந்துவிடுகின்றன :D அதனால் அவற்றால் எந்தப் பயனும்  இல்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே சொல்ல வந்த விடயம் எப்படியோ தெரியாது ஆனால் மேலே போட்டிருக்கும் படத்தைப் பார்த்தால் முதுகில குளிராமல் இருக்காது. எங்கள் வீட்டில் ஏற்பட்ட இழப்பின் பின் உறவுகள் எல்லாம் தத்தமது வேலைகளின் பொருட்டு ஒவ்வொருவராக விலகிச்செல்ல பிள்ளைகளம் பாடசாலைக்குப் போய் விட்டனர். நான் மட்டும் தனியே.... என்முன் என் கணவரின் படம் மாலையுடன். என்னைத் துக்கம் விசாரிக்க எனக்குத் தெரிந்தவர் ஒருவர் தன் கணவருடன் வந்தார்.அவர் வந்ததும் கேட்ட முதல் கேள்வி உங்களுக்கு இந்த வீட்டில் தனியாக இருக்க பயமாக இல்லையா? அதற்கு நான் சொன்ன பதில் "ஏன் நான் அவரைக் கொலையா செய்தனான்" வந்தவர் வாயடைத்துப் போனார். தெய்வமாகிவிட்டவர்கள் எமக்கு நன்மைதான் செய்வார்கள். இத்தனைக்கும் முன்பு நான் இரவில் மரம் ஆடினாலே முற்றத்தில் இறங்கப் பயப்படுவேன். இப்பொழுது தனியாகவே சென்று கல்லறையை தரிசித்துவிட்டு வர முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமே!

எனக்குக் கிட்ட ஒரு 'ஆவியும்' வந்ததே கிடையாது! 

ஒரு வேளை.. நம்ம வாசம் அதுகளுக்குப் பிடிக்காதோ என்னவோ! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகளைப் பற்றிய சொந்த அனுபவம், சுவராசியமாக உள்ளது.
அதிலும், சுமோ... எழுதும் போது, உண்மையில் நடந்தவற்ரையே... எழுதுவார் என்பதால், வாசிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

உங்களின் துயரத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
 
எனக்கும் இப்படித்தான் அனுபவம் ஏற்பட்டது.
முன்பு இருட்டு என்றாலே பயம்.
இப்போ ஆவி என்றால் உடனேயே நின்று பேச வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
அந்த ஆவி மூலமாவது உறவை பற்றி விசாரிக்கும் எண்ணம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு கோபூர் என்ற ஒரு வைத்தியர் இருந்தவர்.
ஆவிகளுடன் பேசும் வல்லமை அவரிடம் இருந்ததாகக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.
தொடருங்கள் சுமேரியர்
யாருடனாவது ஆவி பேசியிருந்தால் பல தகவல்கள் அறியக்கூடியதாக  இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே சொல்ல வந்த விடயம் எப்படியோ தெரியாது ஆனால் மேலே போட்டிருக்கும் படத்தைப் பார்த்தால் முதுகில குளிராமல் இருக்காது. எங்கள் வீட்டில் ஏற்பட்ட இழப்பின் பின் உறவுகள் எல்லாம் தத்தமது வேலைகளின் பொருட்டு ஒவ்வொருவராக விலகிச்செல்ல பிள்ளைகளம் பாடசாலைக்குப் போய் விட்டனர். நான் மட்டும் தனியே.... என்முன் என் கணவரின் படம் மாலையுடன். என்னைத் துக்கம் விசாரிக்க எனக்குத் தெரிந்தவர் ஒருவர் தன் கணவருடன் வந்தார்.அவர் வந்ததும் கேட்ட முதல் கேள்வி உங்களுக்கு இந்த வீட்டில் தனியாக இருக்க பயமாக இல்லையா? அதற்கு நான் சொன்ன பதில் "ஏன் நான் அவரைக் கொலையா செய்தனான்" வந்தவர் வாயடைத்துப் போனார். தெய்வமாகிவிட்டவர்கள் எமக்கு நன்மைதான் செய்வார்கள். இத்தனைக்கும் முன்பு நான் இரவில் மரம் ஆடினாலே முற்றத்தில் இறங்கப் பயப்படுவேன். இப்பொழுது தனியாகவே சென்று கல்லறையை தரிசித்துவிட்டு வர முடிகிறது.

நான் இதில் என் அப்பா பற்றிக் கூறவரவில்லை அக்கா :)

தொடருங்கள் சுமே!

எனக்குக் கிட்ட ஒரு 'ஆவியும்' வந்ததே கிடையாது! 

ஒரு வேளை.. நம்ம வாசம் அதுகளுக்குப் பிடிக்காதோ என்னவோ! :o

இருக்கும் இருக்கும். எதுக்கும் படுக்க முதல் இரவில் சந்தனசோப் போட்டுக்கொண்டு படுக்கப் போங்கோ.வந்தாலும்வரும் ஏதேன் புங்கை :D  

ஆவிகளைப் பற்றிய சொந்த அனுபவம், சுவராசியமாக உள்ளது.

அதிலும், சுமோ... எழுதும் போது, உண்மையில் நடந்தவற்ரையே... எழுதுவார் என்பதால், வாசிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

:D :D நன்றி

முன்பு கோபூர் என்ற ஒரு வைத்தியர் இருந்தவர்.

ஆவிகளுடன் பேசும் வல்லமை அவரிடம் இருந்ததாகக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.

தொடருங்கள் சுமேரியர்

யாருடனாவது ஆவி பேசியிருந்தால் பல தகவல்கள் அறியக்கூடியதாக  இருக்கும். :D

நானும் அவருடைய நூல்களை வாசித்துள்ளேன் தான். ஆனால் அவர் எனக்கு முன்னால் வந்து நிரூபிக்காமல் நான் நம்ப மாட்டேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரகாம் கோவூர் ஆவிகளுடன் பேசியவரா ?  அல்லது ஆவிகள் இல்லையென்று மறுத்தவரா...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரை மணி நேரத்தின் பின்னர் வெளி ஆட்கள் எல்லாம் போய்விட அம்மாவுக்குப் பக்கத்தில் யார் இன்று அப்பாவின் கட்டிலில் படுப்பது என்று தம்பி கேட்க நீயே போய்ப் படன் என்றேன் நான். எனக்குப் பிரச்சனை இல்லை என்று அவன் சொன்னதுதான் தாமதம் தம்பியின் மனைவி அடுத்த அறைக்குள் தூங்கப் போக நானும் பின்னாலேயே சென்று கதவைச் சாத்திவிட்டுச் சுவரோரம் இருந்த படுக்கையில் படுத்துக்கொண்டேன்.

அந்த அறையுள்த் தான் அம்மாவீட்டுப் படஅறை. அதனால் எந்த ஆவியும் அங்கு வராது என்று மனம் சொன்னாலும் லைற்றை நூத்துவிட்டு வந்து படுக்கப் பயத்தில் நூர்க்காமலேயே வந்து படுத்தும் விட்டேன். மச்சாள் நூர்க்கும்படி சொன்னால் அவவையே போய் நூரும் என்று கூறுவோம் என்று எண்ணியபடி கண்களை இறுக்க மூடிக்கொண்டு படுத்திருந்தேன்.

ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும். கதவைத் திறந்து என் தம்பி லைற்றை நூர்க்க நாங்கள் இருவருமே ஒரே நேரத்தில் லைற்றைப் போடுங்கோ என்று கத்த  இரண்டும் சரியான பயந்தாங்கொள்ளிகளாக் கிடக்கு என்றபடி மின்விளக்கை ஆணைக்காமல் தம்பி சென்றுவிட, நாங்கள் ஆளையாள் பார்த்துச் சிரித்துவிட்டு கண்களை மூடித் தூங்கியும் விட்டோம்.

எத்தனை மணிநேரம் சென்றதென்று தெரியவில்லை. மச்சாள் மச்சாள் என்று என் தோள் தொட்டு தம்பியின் மனைவி என்னை  எழுப்ப, தூக்கக் கலக்கத்துடன் கண்விழித்த எனக்கு முன்னால் இருவர். அவர்கள் யாரென்றும் இருட்டில் வடிவாகத் தெரியவில்லை. திடீரென நெஞ்சக் கூட்டில் பயம் வந்து அடைக்க என் இரு கால்களையும் பிடித்துத் தரதர என்று இழுக்கின்றனர்.

கத்த முயன்ற என் தொண்டையிலிருந்து சத்தம் வரவில்லை. கால்களை நான் இழுக்கப் பார்க்கிறேன் அதுவும் விடுபடவில்லை. ஒருவாறு வாயைத் திறந்து அய்யோ அய்யோ என்று கத்தவாரம்பிக்கிறேன். மற்றைய அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் என் சத்தத்தில் அடித்துப்பிடித்துக்கொண்டு வந்து கதவைத் திறந்து மின்விளக்கைப் போடுகின்றனர்.

ஏன் கத்தினநீங்கள் என்று ஆளுக்காள் கேட்டபடி என்னைச் சூழ்ந்துகொள்ள அப்போதுதான் பார்க்கிறேன் நான் படுத்திருந்த இடத்திலிருந்து விலகி நிலத்தில் இருப்பதை. எப்படி அந்த இடத்தை விட்டு எழுந்தேன் என்று தெரியாத வேகத்துடன் எழுந்து நின்று பார்க்கிறேன் மச்சாள் இன்னும் தூங்கியபடி இருக்கிறார்.

என்ன இந்தச் சத்தத்திலும் இவ எழும்பாமல் நித்திரை கொள்ளுறா என்று மச்சாளை என் தங்கை தட்டி எழுப்ப எதுவும் தெரியாமல் முழிக்கும் மச்சாளை மற்றவர்கள் யோசனையுடன் பார்க்கின்றனர்.

நிவேதா இந்தக் கத்துக் கத்தினது. உமக்குக் கேட்கேல்லையோ என்று என் தங்கை கேட்க எனக்குக் கேட்கேல்லை என்று மச்சாள் தலையாட்ட, அப்ப என்னை நீர் கூப்பிடவும் இல்லையோ என்று கேட்டுவிட்டு அவ இல்லை என்று தலையாட்ட, நான் இங்க படுக்க மாட்டன் என்று கூறிக்கொண்டு விடுவிடு என்று வரவேற்பறைக்குச் செல்கிறேன். என் பின்னாலேயே எல்லாரும் வருகின்றனர்.

என்ன நடந்தது என்று கேட்டபடி எல்லாரும் என்னையே பார்க்க, இருவர் என் கால்களைப் பிடித்து இழுத்தனர் என்று கூற,  சிரித்துவிட்டு நிவேதா கனவு கண்டு பயந்து கத்தியிருக்கு என்று அண்ணி கூறிவிட்டுச் சேர்ந்து சிரிக்க எனக்குக் கோபம் வந்தது.

கனவு என்றால் நான் ஏன் மெத்தையை விட்டுக் கீழே வந்து கிடந்தேன் என்று கேட்க  எல்லோரும் யோசனையோடு என்னைப் பார்க்க, இரவு மின்விளக்கைப் போட்டுவிட்டுத்தானே படுத்தோம். யார் நூர்த்தது என்று கேட்க அதற்கும் நீயா நீயா என்று கேட்டுவிட்டு நாங்கள் யாரும் நூர்க்கவில்லை என்று பதில்சொல்லிவிட்டு அவர்களே முழிக்க, நான் நடுவில படுக்கிறன் என்று சொல்லி அவர்கள் அனுமதி கேளாமலே நடுவே நான் படுத்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரகாம் கோவூர் ஆவிகள் இல்லை என்றுதான் மறுத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

இரவில படுக்க போற நேரத்தில ஏன் இதையெல்லாம் எழுதி பயப்பிடுத்திறீங்க அக்கா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்க ஒரே குழப்பமாய்க் கிடக்கு!

சுமே, நல்ல மன நோய் மருத்துவரைப் பார்க்கவும்! :D

சும்மா பம்பலுக்கு எழுத... என்னோட சண்டைக்கு வர வேண்டாம்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வரும் மீனா

Link to comment
Share on other sites

இன்னும் வரும் மீனா

கெதியாய் எழுதுங்கோ சகோதரி  வாசிக்க மிக ஆவல்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aav_zpsu3ejdg3o.jpg

ஆவிகளிலையும் பலவகை இருக்கு  :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.