Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

ஆவிகளும் நாங்களும்

Recommended Posts

aav_zpsu3ejdg3o.jpg

 

ஆவிகளிலையும் பலவகை இருக்கு  :o

 

இந்த ஆவிகளை எல்லாம் பாக்கப் பாவமாக் கிடக்கு. குமாரசாமி

 

Share this post


Link to post
Share on other sites

anger2-747499.jpg

 

அடுத்த  நாள் அம்மா எங்களுடன் வந்து படுக்கப்போவதாகக் கூறிவிட்டுத் தம்பியின் குடும்பதை அப்பாவின் அறையுள் தூங்கும்படி கூற தம்பியும் பிள்ளைகளும் முதலிலேயே சென்றுவிட்டனர். தம்பியின் மனைவி எம்முடன் கதைத்துவிட்டுப் போனதால் அப்பா தூங்கிய பக்கம் படுக்கவேண்டியதாகிவிட்டது. மேல்மாடியில் என் தங்கை குடும்பமும் என்கணவர் மற்றும் இன்னும் ஒரு மாமா ஆகியோர் தூங்க நான் நின்மதியாக அனைவருக்கும் நடுவில் தூங்கிப்போனேன்.

 

எல்லோரும் தூங்கியிருபார்கள் போல திடீரென விடு விடு ஐயோ என பெரிதாக யாரோ கத்தும் சத்தம். இம்முறை நானே முதலில் அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திடிக்கிடலோடு மற்ற எல்லாரையும் இருட்டுக்குள் தட்டி எழுப்ப, எல்லோரும் எழும்பி எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தால் மேல்மாடியில் இருந்து வருகிறது.

 

எனக்கு மேல்மாடிக்குப் போகப் பயமாக இருக்க, என்ன பிரச்சனையோ?? ஆராவது போய்ப் பாருங்கோ என்றால் எல்லோரும் நீபோ நீ போ என்று மற்றவரை அனுப்புவதில் குறியாக இருக்க படுத்திருந்த தம்பி என்ன பிரச்சனை.?? நித்திரை கொள்ள விடுறியளே என அலுத்துக்கொண்டு மின்விளக்கைப் போட்டுவிட்டுப் படிகளில் ஏற என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் மற்றவர் ஒருவிதப் பயத்துடன் பார்த்துக்கொண்டு நிற்க, நானும் பாத்திட்டு  வாறன் என்றபடி அண்ணியும் மேலே போக நானும் துணிவை வரவளைத்துக்கொண்டு படிகளில் ஏற முற்பட படி விளக்கு அணைந்துவிட்டது. உடனே திரும்ப ஓடிவந்து மற்றவர்களுடன் நிற்க்க, அண்ணி இடையில் நின்றுகொண்டு நிவேதா விளக்கைப் போடு என்று கத்துகிறார்.

 

நான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. தம்பியின் மனைவி சென்று விளக்கைப் போட்டாரே தவிர மேலே படிகளில் செல்ல முற்படவில்லை. நான் கடைக்கண்ணால் திரும்பி மணிக்கூட்டைப் பார்க்க நேரம் ஒன்று நாற்பது. யாரோ படிகளில் வருவது தெரிய பார்த்தால் தம்பி பின்னால் அண்ணி. என்னடா யார் கத்தியது  என்று நான் கேட்கிறேன். மாமாதான் கத்தினவர். என்ன ஏதென்று சொல்லுறார் இல்லை. எல்லாரும் போய்ப் படுங்கோ. விடியக் கதைப்பம் என்று கூற வேறு  வழியின்றி தூங்க முயல்கிறேன்.

 

காலையில் எழுந்து கீழே வந்த மாமாவின் முகத்தில் சிரிப்பு இல்லை. அவருக்கு 65 வயது. மிகத் துணிவானவர். என்ன மாமா நடந்தது என்று நான் கேட்டேன்.

இரவு என் கணவர் இடதுபக்கமும் தங்கையின் கணவர் வலதுபக்கமும் நடுவே மாமாவும் படுத்துத் தூங்கியுள்ளனர். வலது பக்கக் காலை பாதத்தில் இருந்து யாரோ தடவியதுபோல் இருக்க, தங்கையின் கணவன் தான் தூக்கக் கலக்கத்தில் தங்கையின் கால் என்று நினைத்துத் தடவுகிறாரோ என எண்ணியபடி விடு நாடா என்றபடி திரும்பிப் பார்தால் தங்கையின் கணவர் குறட்டைவிட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, மாமாவும் மீண்டும் நேராகப் படுக்க வயிற்றில் பாரம் ஒன்று அழுத்தியபடியே மேல்நகர இவரால் உடலை அசைக்கவே முடியாதபடி பாரம் அழுத்த கைகால்களை அசைக்க எத்தனிக்கிறார் மாமா. முடியாதுபோக பாரம் அழுத்தியபடி இப்ப நெஞ்சிலும் கழுத்திலும் வந்து நிற்க கத்தக் கத்த வார்த்தைகளே வராது தொண்டைக்குள்ளேயே அமுங்க, மாமாவின்  கை இரண்டு மூன்றுதடவை தட்டுப்பட என் கணவர் விளித்து என்ன மாமா என்று கேட்க, கழுத்தின் பாரம் குறைய மாமா ஐயோ விடுவிடு என்று கத்தினதாகச் சொல்ல, நாங்கள் எல்லோரும் சிரிக்கிறோம். உங்களுக்கும் பயம் பிடிச்சிட்டிது என்று என் தம்பி கூற அவருக்குக் கோவம் வருகிறது.

 

உங்களுக்கு விளையாட்டாக் கிடக்கு. சீவன் போப்போகுது என்றே நான் நினைத்துவிட்டேன். நெஞ்சில் ஏறி எதுவோ இருந்துகொண்டு கழுத்தை நெரிக்க ..... எனக்கு இப்பிடி ஒருநாளும் வந்ததில்லை என்றுவிட்டு இருக்க அண்ணி கெட்ட ஆவிகள் இந்த நேரங்களில் யாரின் உடலில் போகப் பாக்கும். நல்லகாலம் மாமா தப்பிவிட்டார் என்று கூற, பூருற ஆவி ஏன் அண்ணி சத்தம் போடாமல் பூராமல் அவற்றை கழுத்தில கை வைச்சது என்று கேட்க, அண்டைக்கு உனக்கு நடந்ததும் அப்ப பொய்யாகத்தான் இருக்கவேணும் என்று என் வாயை அடைக்க நான் ஒன்றும் கூற முடியாது நின்றேன்.

 

 

இன்னும் இருக்கு

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்கு அவசரப்படுவதே தொழிலாகிவிட்டது கொஞ்ச நாட்களாக.

 

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

 

அப்ப உங்களுக்கு நான் எழுதுவது விளங்கவில்லை என்று அர்த்தம்.  எதுக்கும் ஓட ஓட வாசிக்காது மற்றவர்கள் எழுதியதையும் நான் அதற்கு எழுதியதையும் வாசித்தால் வடிவா விளங்கும் :D அப்பா ஆவியாக வந்தவர் என்றோ வருவார் என்றோ எங்காவது கூறியிருக்கின்றேனா??? அவர் எனக்கு முதலில் அப்பா. அவர் இருக்கும்போதே எப்படி வாழ்ந்தவர் என்பது உங்களிலும் விட எனக்கும் அவருடம் பழகியவர்களுக்கும் தெரியும். என் அப்பாவிடம் அன்பும் மரியாதையும் என்னைவிட மற்றவர்களுக்கு அதிகமாக இருந்துவிட முடியுமா ????

அப்பாவை நீங்கள் ஆவியாகப் பார்ஹத்தால் அது உங்கள் மனதின் கோளாறு

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

 

இதையாவது வாசியுங்கள் விசுகு அண்ணா

 

Share this post


Link to post
Share on other sites
எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 

Share this post


Link to post
Share on other sites

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

 

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 

 

 

இருக்கும் இருக்கும் :(

 

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

 

சுற்றித்திரியிர ஆவியை நான் பாக்காமல் சொல்ல ஏலாது முனிவர்

 

Share this post


Link to post
Share on other sites
என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி.  :D  :D
Edited by Surveyor

Share this post


Link to post
Share on other sites

இந்த ஆவி பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கு .

.

..

.

.

.

.

..

.

.

..

.

.

.

..

.

.

இவவை கொண்டுவந்து பாடாவிட்டால் எல்லாம் சரி வரும் .

 

 

 

 

 

 

அவ்ஸ் ல் சூப்பராய் பாடுபவர் 11120540_1614931618723095_68711659985363

சுமோ அக்கா உங்களிற்கு மாத்திரம் பேய் படம் போட தெரியுமோ  நாங்களும் போடுவிம்ல எப்படி நல்ல இருக்கா.

Edited by பெருமாள்

Share this post


Link to post
Share on other sites

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

Share this post


Link to post
Share on other sites

 

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி:D  :D

 

 

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

 

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

 

இது நல்ல பிஸ்நெஸ். :lol: யாரின் வீடுகளில் ஆவி வந்தால் என்னைக் கூப்பிடுங்கள் விரட்ட. மிகச் சொற்ப தொகையே அறவிடப்படும்.

 

Share this post


Link to post
Share on other sites

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

ஆவி பேய் பிசாசு என்பவை இருக்குது எண்டு நம்புற ஆளுகளுகுதான் இரும்புத்துண்டு. நம்பாத ஆளுகளுக்கு ஒண்டும் தேவை இல்லை. நானும் ஒருக்காலும் இரும்புத்துண்டு பாவிக்கவில்லை. ஆனால், இரும்புத்துண்டு வைத்துக்கோண்டு படுத்தும் ஆவி வந்தால் நான் பொறுப்பு இல்லை. :lol:  :lol:  

Share this post


Link to post
Share on other sites

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

Share this post


Link to post
Share on other sites

ஆவிகள் ஹொலிடே போகுது போல இருக்கு  :D  :D  :D

 

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

Share this post


Link to post
Share on other sites

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

 

 

இல்லை, இல்லை கதையை வாசிச்ச எல்லார்ட வீட்டையும் வந்து கதையின் கருத்தை கேட்கப்போறாங்களாம்.

எதுக்கும் எல்லாரும் கதவை இறுக பூட்டி வையுங்கோ . நடு இரவில தான் வருவாங்க .

அது சரி , கதவ பூட்டினாலும் அவங்களால உள்ளே வர முடியுமே தானே ?

Share this post


Link to post
Share on other sites

அடபாவிகள்  :D அந்த அப்பாவி ஓட்டை வாய்ப் பிள்ளையை ஆவியாக்கீட்டீர்களே :D

Share this post


Link to post
Share on other sites

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

Share this post


Link to post
Share on other sites
On 06/05/2015 at 0:25 PM, putthan said:

 

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

அட நானே கதை சொல்லுறது எண்டிட்டு மறந்திட்டனே.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உந்த விருதை நாளைக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டுபோய் சிறித்தம்பியின்ரை கையிலை குடுக்க முடியுமா? 
    • சேம் பிளட் பிரதர்...☹️
    • தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேச முதல் தமிழை ஒழுங்காக பேசுங்கள். ஏதோ இங்கிலாந்தில போய் தேர்தலில் நிக்கிற மாதிரியெல்லோ பேசுறாங்கள்.
    • ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு !   சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். சிங்கப்பூர் நாட்டின் நாடு கடத்தல் சட்டத்திற்கமைவாக யாரேனும் ஒரு நபரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு கோருவதற்கு அடிப்படையாக அமையும் ஆவணங்கள் எவையும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என அப்பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அத்தகைய கூற்றொன்றினை வெளியிட்டிருப்பது அண்மையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்பான சிங்கப்பூரில் வசிப்பதாக கூறப்படும் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து, அந்நாட்டின் பிரதமர் லீ ஷியென் லுங் அவர்களுக்கு விடுத்த உத்தியோகபூர்வ பிரகடனத்தின் அடிப்படையிலேயே ஆகும்.  எவ்வாறாயினும் இதுவரையில் அவ்விடயம் தொடர்பாக எந்தவித உத்தியோகபூர்வ அறிக்கையும் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுக்கு விடுக்கப்படவில்லை. அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஊடாக இராஜதந்திர மட்டத்திலான உத்தியோகபூர்வ வேண்டுகோள் 2018 மே 28 ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவ்வேண்டுகோள் தற்போது சிங்கப்பூர் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அமுலில் இருப்பது அந்நாட்டின் ஒப்படைத்தல் சட்டமாகும். அச்சட்டத்தின் 2 ஆவது அத்தியாயத்திற்கு அமைவாக 18 வது குற்றத்திற்கு சமமான குற்றமொன்றினை அர்ஜூன் மகேந்திரன் இழைத்திருப்பதாக கோட்டை நீதவானினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 8266/2018 B அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 2018.04.19 ஆம் திகதி சர்வதேச பொலிஸினால் சிகப்பு பிடியாணை விடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சிகப்பு பிடியாணையும் மேற்குறித்த சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட அர்ஜூன் மகேந்திரனை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான வேண்டுகோளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போதும் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கமைய அர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பதற்கு தேவையான பூரண தகவல்கள் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளின் ஊடாக அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பானை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரால் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இலங்கை சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அண்மையில் கிடைத்த அந்த கடிதம் தொடர்பான விடயங்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதற்காக இலங்கையின் சட்டமா அதிபர் தற்போது முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேற்குறித்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படும் கூற்றினை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளை ஒருபோதும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாதென்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.   http://www.virakesari.lk/article/52419