• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Meera Kugan

வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது

Recommended Posts

வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது . ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற நாம் படும் பாடு இருக்கிறதே, ஐயகோ, அவற்றை நாம் வெறுமனியே வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது . அது சிறு செயலாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பெரிய பொறுப்பை ஏற்று அப்பணியை செவ்வனவே செய்து முடிக்க வேண்டியும் இருக்கலாம் .

ஒவ்வொரு முயற்சிக்கும் முதல்படி நாம் அப்பணியை நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று எம்முள்ளேயே ஒரு திட்டம் இயல்பாகவே தோன்றிவிடும் . அப்பணியை செய்து முடிக்கும் வரை எமது உள்ளமும் அமைதியின்றி அல்லலுறும் . நிம்மதியின்றி அடிக்கடி செய்து முடிக்க வேண்டிய அப்பணியை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டியும் இருக்கும் .

ஆனால் எத்தனையோ இடர்பாடுகளின் பின் தீவிர முயற்சி தோல்வி பெற்றால் அது தரும் ஏமாற்றம் மனதிற்கு எவ்வளவு கஷ்டத்தை தரும் என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாது .

ஆனால் அதே முயற்சி படாது பாடு பட்டு இறுதி நிமிடம் வரை வெற்றி பெற முடியாது என்ற நிலையில் ஏதோ தெய்வாதீனமாகவோ அல்லது அதிசயமாகவோ வெற்றி பெரும்பொழுது கிடைக்கும் சந்தோஷம் உண்மையிலேயே பெறுமதியானது. ஆனால் இவ்விரு உணர்ச்சிகளுமே நிலையில்லாதது என்பதை நாம் நிச்சயம் ஒப்புக்கொள்ளத தான் வேண்டும்.

நான் இங்கு குறிப்பிடுவது நாம் வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு முயற்சிகளையே. உதாரணத்துக்கு நான் நேற்று அனுபவப்பட்ட ஒரு சிறு சம்பவம் தான் என்னை இதை எழுதவே தூண்டியது .

ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு உடை வடிவமைத்து தரும்படி என்னிடம் கேட்கப்பட்டது . நானும் 20 நடன மாணவிகளுக்கு உடை வடிவமைத்து அதை தைப்பித்தும் தர உற்சாகத்துடன் முன் வந்தேன். ஆனால் நான் பொறுப்பெடுத்த நேரம் தொடக்கம் தொடர்ந்து பல இடர்களை சந்திக்க வேண்டியிருந்தது .

அதாவது மாணவிகளின் அளவு எடுக்கப்பட்டு தர மிகவும் கால தாமதாமாகி விட்டது . அது மட்டுமின்றி புதுவருட பண்டிகை விடுமுறை நெருங்கிய நேரத்திலேயே அம்மாணவிகளின் அளவு விபரங்கள் என் கையில் கிட்டியது . நடன உடைகளை நான் இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளவதே எனது எண்ணமாக இருந்தது . நான் வடிவமைத்த உடை இலங்கையில் தைப்பிப்பது சிக்கனமாகவும் மிகவும் நுணுக்கத்துடன் தரமாக செய்யவும் ஏதுவாக இருக்கும். ஆனால் கால அவகாசம் மிகவும் குறைவாக இருந்தது.

எப்படியாயினும் இவ் உடைகளை திறம்பட செய்வித்து முடிக்கலாம் என நம்பினேன் . அடுத்த இடரை பணம் அனுப்புவதில் சந்தித்தேன் . நான் அனுப்ப முற்பட்ட வேலை ஈரோ பண வீக்கத்தால் மிகவும் குறைந்தளவிலேயே இலங்கை ரூபாவை பெற முடிந்தது .ஒருவாறு தைப்பித்த உடைகளை எமக்கு அஞ்சல் மூலம் இலங்கையிலிருந்து  அனுப்பும்பொழுது, அங்கே முகவரியை தவறுதலாக அனுப்பி விட்டார்கள் .

இத்தனைக்கும் நடன நிகழ்ச்சி அரங்கேற இன்னும் மூன்று நாட்களே இருந்தன . நானும் நாள் தோறும் உடைகள் கிடைக்கும் என்று காத்திருந்து பின் ஏமாற்றத்துடன் எங்கு அஞ்சலில் அனுப்பிய உடைகள் என்று ஆராய்ந்த பொழுது அப்பொதி கிழக்கு ஜெர்மனியில் சுங்க அலுவலர்களிடம் இருப்பதாக கேள்விப்பட்டேன் . அவர்கள் அப்பொதியை வைத்திருந்து கடைசியாக நடன நிகழ்ச்சி நடக்கும் நாளாகிய சனிக்கிழமை அதிகாலையே விடுவித்து அனுப்பினார்கள் .

அப்பொதி எமது இடத்திற்கு அருகிலுள்ள கிளையை வந்து சேர்ந்தது மதியம் 1 மணியளவிலேயே . DHL  கிளையை வந்தடைந்தாலும், திங்கட்கிழமையே எம்மை வந்து சேரும் என்று அறியத்தந்தார்கள் . அது மட்டுமின்றி DHL ன் கணணி செயற்பாடுகள் அன்று துரதிர்ஷ்டமாக செயல் இழந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள் . தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய ஒரு ஐரோப்பிய நாட்டில் கணணி செயற்பாடு தடைப்பட்டிருப்பது என்பது என்னால் நம்பவே முடியவில்லை .

ஆனாலும் அது உண்மையாகவே இருந்தது. எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி . ஏதோ இம்முயற்சி எப்படியும் தோல்வியில் முடிய வேண்டும் என விதி கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது போலிருந்தது .எனக்கு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அம்மாணவிகளை நினைக்கும் பொழுதுதான் மிகவும் கவலையாக இருந்தது.  நிகழ்ச்சி நடந்து முடிந்தபின்னர் நடன உடைகளை மாணவிகளிடம் கொடுத்து என்னப் பயன்?

என்னிடம் வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்து முடிக்காவிட்டால் என் பெயர் என்னவாவது ? மிகுந்த ஏமாற்றத்துடன் மூன்று மணித்தியாலகங்கள் பொதிகள் வந்தடையும் DHL ன் கிளையில் காத்திருந்த பின் இனியும் காத்திருக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்தேன் . என் மகளும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தாள் . அவளின் சோகம் என்னை மிகவும் தாக்கியது .

சரி , இனி கிளம்பும் நோக்கத்துடன் அங்கிருந்த அலுவலகரிடம் சென்ற வேளை என்ன அதிசயமோ அவர்கள் வரிப்பணம் என்னிடம் பின்னர் அறவிடுவதாகவும் தாம் அப்பொதியை கண்டுபிடித்து விட்டதாகவும் என் கையில் தந்தார்கள் . என்னால் நம்பவே முடியவில்லை. சினிமாக்களில் தான் கிளைமாக்ஸ் போன்று கடைசி நிமிடங்களில் திருப்புமுனை அமையும் . நிஜவாழ்விலுமா ?  

எனக்கு அந்த T.M சௌந்தராஜன் பாடிய கிடைக்கும் என்றால் கிடைக்காது , கிடைக்காது என்றால் கிடைத்து விடும் என்ற பழைய பாடல் தான் ஞாபகம் வந்தது .

ஆனால் இரு நாள் கழிந்த பின்னர் இச்சம்பவமே அப்படி பெரிதாக இருந்தது போல் இல்லாமல் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போவது போல் உணர்கிறேன். அன்று மிகவும் முக்கியமாக இருந்தது இன்று பெரிதாக இல்லை.

உண்மை  வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது. இன்று நாம் எல்லாவற்றிலும் முக்கியம் என்று கருதுவது நாளை மிக சர்வ சாதாரணமாக போய் விடுகிறது . எதுவுமே நிலையில்லை போலும் . என்றாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் திறம் பட செய்ய முன் வந்தால் இறுதியில் எத்தனை இடர் வந்தாலும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்பதே உண்மை.

Share this post

Link to post
Share on other sites

அக்கோய்!கனக்க எழுதுறியள் வடிவாய் பந்தி பிரித்து பந்தியளுக்கிடையில் இடை வெளி விட்டு எழுதுங்கோ :) , பார்த்தால் வாசிக்க விருப்பம் வரவேணும்  :D இப்படிக் குப்பையாய் ....  :rolleyes:  :D 

இப்ப சரியா மீனா ?

Share this post

Link to post
Share on other sites

இப்ப சரியா மீனா ?

ஓம், நன்றி மீரா குகன் :)

Share this post

Link to post
Share on other sites

அப்பப்ப இப்படிப் பல சம்பவங்கள் எம்மைக் கடந்து போகின்றன , பின் நாம் அவற்றைக் கடந்து நினைவலைக்குள் புதைத்து விட்டுப் போய் விடுகின்றோம்...!

அப்படியோர் சம்பவத்தைக் குறிப்பிட்டது சுவாரசியமாய் இருந்தது மீராகுகன் ....!! :)

நன்றி சுவி . அன்று பட்ட பாட்டுக்கு இன்று மறந்தே போச்சுது .

மீண்டும் அதை நினவு கூறுகையில் எனக்கு அச் சம்பவம் மிகவும் சுவாரசியமாக இருந்தது .

அது தான் என் எண்ணத்தை அப்படியே எழுத்தில் பதிவு செய்தேன் .

Share this post

Link to post
Share on other sites

நிகழ்வுக்கு எப்படியோ உடைகள் வந்து சேர்ந்ததால் அந்நினைவுகள் படிப்படியாக அழிந்து விடுகின்றன.உடை நேரத்துக்கு வராமல் இருந்து பிள்ளைகளின் பெற்றோரிடம் திட்டு வாங்கி இருந்தீர்கள் எனில் நீண்ட நாட்களுக்கு நினைவு இருந்திருக்கும்.

முற்றிலும் உண்மை . நல்ல வேளை தப்பித்தேன் .

Share this post

Link to post
Share on other sites

அதாவது மாணவிகளின் அளவு எடுக்கப்பட்டு தர மிகவும் கால தாமதாமாகி விட்டது . அது மட்டுமின்றி புதுவருட பண்டிகை விடுமுறை நெருங்கிய நேரத்திலேயே அம்மாணவிகளின் அளவு விபரங்கள் என் கையில் கிட்டியது . 

எந்த வேலைக்கும் முடிவு எல்லை என்ற ஒன்று மிக முக்கியம். மேல் குறிப்பிட்ட இடத்தில உள்ள பிழையால் உங்களுக்கு வேண்டாத தலைவலி.அவ்விடத்தில் நான் இருந்தால் நிச்சயமாய் ஏலாது என சொல்லி விட்டு விடுவன்.விமான பொதி (air cargo) சிறிது காலம் வேலை இப்படியான   பிரச்சினை நிதமும் மண்டைக்குள் தண்ணி ஓடும். 

Share this post

Link to post
Share on other sites

எந்த வேலைக்கும் முடிவு எல்லை என்ற ஒன்று மிக முக்கியம். மேல் குறிப்பிட்ட இடத்தில உள்ள பிழையால் உங்களுக்கு வேண்டாத தலைவலி.அவ்விடத்தில் நான் இருந்தால் நிச்சயமாய் ஏலாது என சொல்லி விட்டு விடுவன்.விமான பொதி (air cargo) சிறிது காலம் வேலை இப்படியான   பிரச்சினை நிதமும் மண்டைக்குள் தண்ணி ஓடும். 

அடுத்த முறை கவனமாக இருப்பேன் . நன்றி அறிவுரைக்கு .

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் மீரா குகன்..

ஒரு செயலில் இறங்கும் போதே அதன் செயற்பாட்டு தளத்தில் வரும் சிரமங்களையும் அனுபவங்களையும் பெறமுடியும்.

அந்தவகையில் உங்களுடைய அனுபவம் 

அடுத்த முயற்சிகளுக்கு பெரிதும் உதவும்...

எனவே பின்னடைவுகளைக்கண்டு அல்லது இடையூறுகளைக்கண்டு தங்களது முயற்சிகளை நிறுத்திவிடாதீர்கள்

தங்களது பணிகள் தொடரவாழ்த்துக்கள்..

அடுத்த பணிகளுக்கு எம்மவரின் இந்த முயற்சிக்கு வாய்ப்பைக்கொடுங்கள்..

எமக்காக தம்மைத்தந்தவர்களது முயற்சி.

வளர்த்துவிடவேண்டியது எம் எல்லோரது கடமையாகும்.

நன்றி...

http://www.yarl.com/forum3/index.php?/topic/153430-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92/

இவர்களைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல . நிச்சயமாக எம்மவரிடம் பணியை கொடுப்பது எனக்கு மகிழ்ச்சியை தரும் .

Share this post

Link to post
Share on other sites