Jump to content

உன்னால் முடியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Athavan CH said:

உன்னால் முடியும்: உழைப்பு மட்டுமே நம்மை வளர்க்கும்

அ.அஜய் பிரசாத், இமேஜ் ஸ்டைல், கரூர்.

அ.அஜய் பிரசாத், இமேஜ் ஸ்டைல், கரூர்.

ஜவுளித் துறை நகரமான கரூரில் பல பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில் தனது அனுபவத்தை நம்பி சிறிய அளவில் தொழில் தொடங்கியவர் அஜய் பிரசாத். இன்று பல நாடுகளுக்கும் தனது தயாரிப்புகளான ஏப்ரன், டேபிள் கிளாத் போன்றவற்றை அனுப்பி வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

ஏற்கெனவே மிகப் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவர்களோடு போட்டி போடுவது என்பது சாதாரணமானதல்ல, ஆனால் வெளிநாட்டு ஆர்டர்களை பிடிப்பதற்கு இங்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நேரத்திற்கு சப்ளை செய்வதும், தரமாகவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும் என்பதுதான் கரூரில் உள்ள நிலைமை. நான் அந்த ரிஸ்க் எடுத்த போது எனக்கு வயது 24தான்.

முக்கியமாக வெளிநாடுகளில் நடை பெறும் கண்காட்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்கு வரும் வாடிக்கையாளர் தொடர்புகள், நவீன இயந்திரங்கள் குறித்த அனுபவமும் கிடைக்கும். ஆனால் தொழில் தொடங்கிய நான்கு ஆண்டுகள் வரை எனக்கு வெளிநாட்டு கண்காட்சிகளுக்கு போகும் அளவுக்கு வசதிகள் கிடையாது. ஆன்லைன் ஆர்டர்களை நம்பித்தான் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டாக மெல்ல விற்பனை அதிகரித்தது, ஆண்டுக்கு ஒரு முறை வெளிநாட்டு கன்காட்சிக்கு செல்ல தொடங்கி, இப்போது ஆண்டுக்கு நான்கு கண்காட்சிகள் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.

இந்த தொழிலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குறித்த நேரத்தில் பொருட்களை அனுப்ப வேண்டும். நேரத்தை தவறவிட்டால் கப்பலில் அனுப்ப வேண்டிய பொருட்களை விமானம் மூலம் அனுப்ப வேண்டிய நெருக்கடி உருவாகும். இதனால் நமக்கு கூடுதல் செலவாகும். அல்லது ஆர்டரே கேன்சல் ஆகலாம்

பகிர்விற்கு நன்றி... ஆதவன்.
இப்படியான தொழிலில் ஈடுபடும் தமிழக உறவுகள் சிலர்... ஜெர்மனியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு வந்து.. அங்கிருந்து... இங்கு நடக்கும் கண்காட்சிகளில்  கலந்து கொண்டு,  பெரிய தொழில் அதிபர்களாகி உள்ளதை.. நேரில் கண்டுள்ளேன். 

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

உன்னால் முடியும்: வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்...

unna_3108997f.jpg

சாதிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் இஸ்ரேல் பிரேம். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். காரைக்குடி கூடை, கைவினை தாம்பூல பைகள் தயாரிப்பில் வளர்ந்து வரும் இவர் தனது அனுபவத்தை இந்த வாரம் ``வணிக வீதி’’-க்காக பகிர்ந்து கொண்டார்.

குடும்ப நிலைமை காரணமாக பத்தாம் வகுப்புவரைதான் படித்தேன். பிறகு ஐடிஐ படித்துவிட்டு ஒரு நிறுவனத் தில் ஹெல்ப்பராக வேலைக்குச் சேர்ந்தேன். கம்ப்யூட்டரில் ஏதாவது கோர்ஸ் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற ஆசையில் 6 மாத கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தேன். கம்ப்யூட்டர் ஹார்ட்வேரில் ஆர்வம் ஏற்பட்டு திரும்ப என்ஐஐடி-யில் ஒரு ஆண்டு கோர்ஸில் சேர்ந்தேன். ஓரளவு ஹார்ட்வேர் விஷயங்களைக் கற்றுக் கொண்டு கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்யும் அளவுக்கு வளர்ந்தேன்.

அப்படியே மெல்ல மெல்ல அந்த வேலைகள் உருவாக்கிக் கொண்டேன். பள்ளிகள், கல்லூரிகளில் கணினி சர்வீஸ் வேலைகள் கிடைக்கத் தொடங்கின. ஒரு நிறுவனமாக 6 நபர்களுக்கு வேலை கொடுத்து வந்த நிலையில், விபத்து ஏற்பட்டு 3 மாதங்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் எல்லா வேலைகளும் முடங்கின. சர்வீஸ் வேலைகளில் ஓடிக் கொண்டே இருந்தால்தான் நிற்க முடியும். அதனால் வேலைகளை புதிதாக எடுக்கவில்லை. ஆண்டு சர்வீஸில் இருந்த ஒரு சில நிறு வனங்களுக்கு மட்டும் நான்கு மாதங் களுக்கு பிறகு செல்ல தொடங்கினேன். அதில் ஒரு நிறுவனம் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தது.

அந்த நிறுவனத்திற்கு 8 ஆண்டுகளாக சர்வீஸ் வேலைகளை செய்து வருவதால், அந்த வேலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. உடல்நிலை முடியாத நிலையிலும் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வேலைகளை மெல்ல கற்றுக் கொண்டேன். பிறகு மெல்ல மார்க்கெட்டிங் வேலைகள், முக்கிய பொறுப்புகள் என வேலைகளை என் வேகத்துக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டேன். அந்த நிறுவனத்தை நடத்தியவர் கட்டுமான நிறுவனமும் நடத்தினார், அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த தொழிலையும் தொடர முடியாத நிலைமை உருவானது.

அங்கிருந்து விலகி நான் ஒவ்வொரு ஆட்களாக பிடித்து மீண்டும் ஒருங்கிணைத்து பழவேற்காட்டில் தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கினேன்.

எனது மார்க்கெட்டிங் வேகம், ஆர்வத்தால் இப்போது பழவேற்காடு தவிர, திசையன் விளை, காரைக்குடி போன்ற ஊர்களிலிருந்தும் வேலைகளை செய்து வாங்குகிறேன். எல்லா ஊர்களிலும் இதை செய்துவிட முடியாது. சில ஊர்களில் மட்டுமே இந்த கைவினை சிறப்பாக வரும். தமிழ்நாட்டில் இதற்கான சந்தை வாய்ப்புகளைவிட வட இந்தியர்களிடம் அதிகம் உள்ளது. குறிப்பாக மார்வாடி சமூக திருமணங்களில் இது போன்ற தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அதே போல எல்லா மாதங்களிலும் உற்பத்தி செய்துவிட முடியாது. மழை மற்றும் குளிர் காலங்களில் பூஞ்சை பிடித்து விடும், வெயில் காலத்தில் கொஞ்சம் அதிக வெப்பம் இருந்தால் ஓலையின் நிறம் மாறும். இந்த மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில்கூட பழவேற்காட்டில் பலரிடமும் வேலைகள் கொடுத்து வைத்திருந்தேன். கடந்த வாரத்தில் அனுப்ப வேண்டிய ஆர்டர் அது. ஆனால் வார்தா புயல் தாக்கியபோது பலரது வீடுகளும் புயலில் பாதிக்கப்பட்டதில் எனக்கு கடுமையான இழப்பு. இப்படி இயற்கை சூழலை பொறுத்துதான் இதில் நிலைக்க முடியும்.

தயாரிக்கப்பட்ட பொருட்களை ஒருங்கிணைப்பது, வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்கிற வகையில் தற்போது 6 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், தயாரிப்பில் சுமார் 40 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் அளித்து வருகிறேன். தற்போது வங்கி கடன் மூலம் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் உள்ளேன்.

என்னால் இதற்கு பிறகு எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்கிற நிலைமையில், எனது தன்னம்பிக்கை மட்டுமே இந்த வேலையை நோக்கி இழுத்து வந்தது. முன்பு அலைந்து திரிந்து வேலை செய்த போது இருந்த வேகத்தை, இப்போது ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதிலும் காட்டுகிறேன். வாய்ப்புகள் வரும்போது அதை சரியாக பயன்படுத்திவிட வேண்டும். வேகத்துக்கு ஏற்பதான் வெற்றி என்பது நமது உழைப்பி லேயே தெரிந்துவிடும்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-வாய்ப்புகளை-உருவாக்கிக்-கொள்ள-வேண்டும்/article9443855.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: சொந்த தொழில் மகிழ்ச்சிக்கு முன்னால் மாதச் சம்பளம் ஈடில்லை

படம்:சி.காட்சன்

வங்கிப்பணியில் நல்ல சம்பளத்துடன் வேலையிலிருப்பவர் சொந்த தொழிலுக்காக வேலையை விட முடியுமா? அதுவும் வாய்ப்புகளை இனிமேல்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நிலைமையில் துணிந்து முடிவெடுக்க முடியுமா? முடியும் என்கிறார் கார்த்தியாயினி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் துணை மேலாளர் நிலையிலிருந்தவர். திருமண நிகழ்வுகளில் இடம்பிடிக்கும் அலங்கார பொருட்கள் மற்றும் முன்னணி இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கான அலங்கார பெட்டிகளை தயாரித்து வருகிறார். இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

‘‘வங்கியில் வேலையை விடும்போது மாதம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் பிசினஸில் இறங்கிய முதல் ஆறு மாதங்களில் நான் எதிர்பார்த்தபடி விற்பனைகள் இல்லை. அதேசமயத்தில் எனக்குள்ளிருந்த கலை ஆர்வம், கைவினை ஆர்வத்தினால் தாக்கு பிடித் தேன். சமீபத்தில்கூட வங்கிப் பணியில் வேலை வாய்ப்பு இருக்கிறது முயற்சிக்க லாமே, ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய் என அப்பா ஒருநாள் கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கும் தொழில்முனைவோராக உருவான பிறகு திரும்ப வேலைக்கு போக முடியுமா சொல்லுங்கள்’’ என பேசத் தொடங்கினார்.

கல்லூரி படித்து முடித்ததும் வங்கிப் பணி தேர்வில் வெற்றி பெற்று வேலைக்குச் சேர்ந்தேன். பதிமூன்று ஆண்டுகள் அனுபவத்தில் எழுத்தர் நிலையிலிருந்து உதவி மேலாளர் நிலை வரை வந்திருந்தேன். எனக்கு சிறு வயதிலிருந்தே கைவினை, மற்றும் அலங்கார பொருட்களை செய்வதில் ஆர்வம் உண்டு. பண்டிகை, விசேஷ நாட்களில் முயற்சிப்பேன். நவராத்திரி பண்டிகைக்கு நான் செய்யும் பொம்மைகளைத்தான் வீட்டில் கொலு வைப்போம். திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் என் தயாரிப்பைத்தான் அன்பளிப்பாக அளிப்பேன்.

எனது திருமணத்துக்கு பிறகு, கணவரது வீட்டிலும் இதற்கு வரவேற்பு இருந்தது. எனது மாமியாரும் இதுபோன்ற கைவினைகளில் தேர்ந்தவர். அதனால் புகுந்த வீட்டிலும் எனது ஆர்வம் தொடர்ந்தது. இடையிடையே உறவினர்கள், நண்பர்களுக்கும் இவற்றை தயாரித்து கொடுக்கத் தொடங்கினோம். இந்த நிலையில்தான் வேலையைவிட யோசித்தேன். தொடர்ச்சியாக பத்து, பனிரெண்டு மணி நேர வேலை. சில நாட்களில் பணிச்சுமை அதிகமாகவும் இருக்கும். இதனாலும் வேலையிலிருந்து விலக முடிவெடுத்தேன்.

இந்த தொழிலில் என்ன வருமானம் கிடைத்துவிடும், எந்த நம்பிக்கையில் வேலையை விடுகிறாய் என வங்கியிலும் உறவினர்கள் மத்தியிலும் தொடர்ச்சியான கேள்விகள்... ஆலோசனைகளும் வந்து கொண்டே இருந்தன. வேலையிலிருந்து விலகுவதில் உறுதியாக இருந்தேன். வீட்டிலும் ஒத்துழைப்பு கொடுத்தனர். மாதம் 8,000 வாடகையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தயாரிப்புகளை காட்சிப் படுத்தி, பத்திரிகை விளம்பரம் கொடுத்தேன். டிசம்பர் மாதத்தில் தொடங்கினோம், தை மாதத்திலிருந்து ஆர்டர்கள் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.

ஆனால் ஒன்றிரண்டு ஆர்டர்கள்தான் கிடைத்தன. ஆறு மாதங்களுக்கு பிறகுதான் மெல்ல மெல்ல ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு ஏற்ப வேலைக்கான ஆட்களையும் அதிகபடுத்தினேன். இப்போது நேரடியாக ஏழு பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். தவிர பலருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளேன்.

எனது தயாரிப்புகளில் பிளாஸ்டிக் பொருட்களையும், சீன பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதை கொள்கையாகவே வைத்துள்ளேன். மரம், பிரம்பு, மூங்கில், களிமண் போன்றவைதான் மூலப் பொருட்கள். இவற்றில் தரமானதையும், நமது டிசைனுக்கு தயாரித்து வாங்கவும் வடகிழக்கு மாநிலங்களுக்குத்தான் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் எனது கணவர் உதவிக்கு வருவார். இப்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இணையதளம் மூலம் மாதத்தில் 200 ஆர்டர்களாவது கிடைத்துவிடும். என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் இதை விரும்பி வாங்குகின்றனர். திருமண நிகழ்ச்சிகளை ஒருங்கிணக்கும் முக்கிய நிறுவனங்கள், முன்னணி இனிப்பு நிறுவனங்களுக்கு சப்ளை செய்கிறோம்.

முன்னாள் கவர்னர் ரோசையா இல்லத் தின் நிகழ்ச்சிக்கு எங்களது பொருட்களை அனுப்பினோம். எங்களது அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினைகளை ரசித்தவர்கள் எங்களை நேரில் அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் கிடைக்கும் பெருமிதத்துக்கு முன்னாள் பத்து மணி நேர வேலை ஈடாகுமா சொல்லுங்கள் என்றார்

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-சொந்த-தொழில்-மகிழ்ச்சிக்கு-முன்னால்-மாதச்-சம்பளம்-ஈடில்லை/article9454515.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: வியர்வை சிந்துவதே வெற்றிக்கு அடித்தளம்

unnal_3115002f.jpg
 
 
 

உயர் படிப்புகள் எல்லாம் தலையில் உள்ள கிரீடம்போல, அதை இறக்கி வைத்தால்தான் உண்மையாக உழைக்க முடியும் என்கிறார் லண்டனில் எம்பிஏ படித்த விக்னேஷ். இதைப் படித்தால் வேலை கிடைக்கும், அதைப் படித்தால் வேலைக் கிடைக்கும் என்பதைத் தாண்டி, நம்மைச் சுற்றி உள்ள வேலை வாய்ப்புகளை அறிந்து கொண்டு, சரியாக முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்கிறார். அயர்னிங், துணிகளை காயவைக்கும் ஸ்டேண்ட், உடனடி அலமாரி போன்ற பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

கோயம்புத்தூரில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்து விட்டு, லண்டனுக்கு எம்பிஏ படிக்கச் சென்றேன். சாப்ட்வேர் துறையில் நாட்டம் இல்லை என்றாலும் மேனேஜ்மெண்ட் துறையில் நல்ல வேலைக்கு போகலாம் என்பதுதான் யோசனை. நான் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் பல்கலைக் கழகத்துக்கு ஒருமுறை அப்துல்கலாம் வந்திருந்தார். அப்போது இந்திய மாணவர்களிடம் அவர் உரையாடியபோது ‘நீங்கள் கற்றுக் கொண்ட கல்வியை தேசத்துக்கு செலவிடுங்கள், தாய்நாட்டில் இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதுகூட தேசபக்திதான்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகள் நான் லண்டனிலும், மஸ்கட்டிலும் வேலை பார்த்துவிட்டு இந்தியா வந்தேன். இங்கு வந்த பிறகு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஆலோசனை வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு இங்கேயே வேறு ஏதாவது தொழில் தொடங்கலாம் என யோசனை எழுந்தது. எந்த தொழில் என்கிற தேடலில்போது நான் என் அம்மாவுக்கு மஸ்கட்டிலிருந்து கிப்டாக வாங்கி வந்திருந்த அயர்னிங் டேபிள் கண்ணில் பட்டது. உடனடியாக இதற்கான மூலப்பொருட்களை தேடத் தொடங்கினேன்.

இந்த முயற்சியில் இறங்குவது தெரிந்து அப்பா தடுத்தார். உறவினர்களிடத்திலும் நல்ல ஆலோசனைகள் கிடையாது. இதை செய்வதற்கு லண்டனில் போய் படித்திருக்க வேண்டுமா என நேரடியாக பேசத் தொடங்கினர். ஆனால் என்னிடம் அப்போது கையில் இருந்த 40 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு ஒருவரை உதவிக்கு அமர்த்திக் கொண்டு வேலையில் இறங்கி விட்டேன்.

அயர்னிங் டேபிள், அதற்கடுத்து துணிகளை காயவைப்பதற்கான ஸ்டேண்ட் போன்றவற்றை அடுத்தடுத்து தயாரித்தேன். கோவை சுற்று வட்டாரத்தில் முக்கிய விற்பனையாளர்களிடத்தில் சென்றால், பிராண்ட் பெயர் இல்லாமல் வாங்குவதில்லை என்றனர். ஏனென்றால் அடுக்குமாடி வீடுகளில்தான் இதற்கான வரவேற்பு கிடைக்கும். எனவே ஆன்லைன் நிறுவனங்கள், சென்னையில் பிரபல கடைகள் என அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினேன். ஆனால் விற்பனையாளர்கள் கடன் அடிப்படையில்தான் வாங்குவார்கள். பணத்தை விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டால் நம்மால் தொழிலையே நடத்த முடியாது என்பதையும் அனுபவமே கற்றுக் கொடுத்தது. ஆரம்ப கட்ட பண நெருக்கடிகளை கடந்துவிட்டால், தொழிலில் நீடித்து விட முடியும் என்பதையும் உணர்ந்தேன்.

இந்த தயாரிப்புகளுக்கு சில்லரை விற்பனையைவிட ஆன்லைன் மூலமான விற்பனைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் நல்ல நிறுவனமா என சோதித்த பிறகுதான் பொருட்களை அனுப்ப வேண்டும். வெளியூர்களிலிருந்து மொத்த ஆர்டர் என்றால் விசாரிக்காமல் அனுப்பக்கூடாது. சிலரோ மொத்த ஆர்டர் தருகிறேன் சாம்பிள் அனுப்புங்கள் என்று வாங்குவார்கள். அதன்பிறகு அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது. இது போன்ற அனுபவங்களுக்கு பிறகு தனியாக நானே ஹோம் யுட்டிலிட்டி என்று ஆன்லைன் தளத்தை தொடங்கிவிட்டேன்.

இந்த தயாரிப்புகளின் அடுத்த கட்டமாக அயர்னிங் டேபிளுடன் ஏணி, சுற்றுலா சென்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறு அலமாரிகள், துவைக்கும் துணிகளை சேர்க்கும் கூடை என ஒவ்வொன்றாக உருவாக்கினேன். நமக்கான தொழில் இதுதான் என முடிவு செய்துவிட்டால் அதில் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போதுதான் அங்கீகாரம் கிடைக்கும். லண்டனில் எம்பிஏ படித்தவனுக்கு இந்த வேலை எதுக்கு என்றார்கள். இப்போது 25 நபர்களுக்கு வேலை கொடுத்து வருகிறேன். ஆன்லைன் சந்தையிலும் சிறந்த விற்பனையாளராக உள்ளேன்.

நீ எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளுக்கு பலி ஆடு ஆகிவிடக்கூடாது என என் அப்பா அடிக்கடி கூறுவார். தொழில் முயற்சியில் இறங்குகிறேன் என்றபோது அவரும் வேண்டாம் என்றுதான் சொன்னார். ஆனால் நான் அவர் சொல்லிக் கொடுத்ததை கடைபிடித்தேன். இப்போது நன்றாக இருக்கிறேன். பலருக்கும் வலியுறுத்தும் விஷயமும் அதுதான் என்று முடிக்கிறார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-வியர்வை-சிந்துவதே-வெற்றிக்கு-அடித்தளம்/article9466615.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

உன்னால் முடியும்: ஊதுபத்தி தொழிலில் கோடி ரூபாய் வருமானம்

unnal_3128880f.jpg
 
 
 

ஊதுபத்தி தயாரிப்பில் என்ன வருமானம் கிடைக்கும்? அதைத் தொழிலாக எடுத்துச் செய்ய முடியுமா என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால் கிரிதரன் அனு பவத்தை கேட்ட பிறகு அந்த தொழிலின் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். அகர்பத்தி தொழில் நிமித்தம் சீனாவுக்கும், வியட்நாமுக்கும் அடிக்கடி சென்று வருவதாக குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்துகிறார். அவரது அனு பவத்தை இந்த வாரம் ``வணிக வீதி’’-க் காக பகிர்ந்து கொண்டதிலிருந்து…

ஊதுபத்தி தயாரிப்பு என்றால் குடிசைத் தொழில் அல்லது சைக்கிள் பிராண்ட் போல பெரிய மார்க்கெட்டிங் நெட்வொர்க்கை கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணம்தான் எனக்கும் இருந்தது. இந்த தொழிலில் இறங்கிய பிறகுதான் மிகப் பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ள துறை என்பதை தெரிந்து கொண்டேன். ஏனென்றால் இந்தியாவின் ஊதுபத்தி தேவை மாதத்துக்கு 30 ஆயிரம் டன், அதில் 40 சதவீதம்தான் இங்கு தயாரிக் கப்படுகின்றன. 60 சதவீத தேவைகளுக்கு வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்கி றோம். இதைத் தெரிந்து கொண்ட பிறகு முயற்சிகள் செய்யாமலிருந்தால் எப்படி? அதனால்தான் வியட்நாமுக்கும் சீனாவுக் கும் பயணம் செய்கிறேன் என்றார்.

அப்பா காலத்தில் கல் அரவை இயந்திரம் வைத்திருந்தோம். எதிர்பாராத நேரத்தில் அவரது இறப்பின் காரணமாக அந்த தொழிலில் நான் இறங்கினேன். ஆனால் அதைத் தொடர முடியவில்லை. வேறு தொழில் தொடங்க வேண்டும் என்கிற நிலையில்தான் ஊதுபத்தியை இயந்திரம் மூலம் தயாரிக்கலாம் என கேள்விபட்டேன். திருப்பத்தூரில் ஒரு வரிடம் இருப்பதாக அறிந்து அங்கு சென்றால், அவர்களோ நிறுவனத்துக் குள்ளே விடவில்லை. இயந்திரத்தை நான் பார்த்து விடக்கூடாது என்பதிலேயே கவனமாக இருந்தனர்.

இணையம் மூலம் இயந்திரத்தை தேடி சீனாவிலிருந்து ரூ.85 ஆயிரம் விலையில் இரண்டு இயந்திரங்களை வரவழைத் ததுடன் அதற்கான மூலப் பொருட்களை யும் வாங்கினேன். ஆரம்பத்தில் சோதனைக் காக வாசனை சேர்த்த ஊதுபத்திகளை செய்து பார்த்தேன். ஒரு முயற்சிக்காக மைசூரில் உள்ள சைக்கிள் பிராண்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் வாசனை சேர்க்காத ஊதுபத் திக்கு ஆர்டர் கொடுத்ததுடன் உற்சாகப் படுத்தவும் செய்தனர். அதற்கு பிறகு எந்த வாசனையும் சேர்க்காத ஊதுபத்திகளை தயாரித்து நிறுவனங்களுக்கு கொடுக்கத் தொடங்கினேன்.

ஊதுபத்திக்கான முக்கிய மூலப் பொருள் மூங்கில் குச்சி. எனக்கு இதன் தேவை அதிகரிக்க அதை வாங்கவும், வாங்கி விற்கவும் உற்பத்தியாளர்களிடமே நேரடியாக சென்று வாங்குவதற்காக சீனா செல்ல முடிவெடுத்தேன். அலிபாபா மூலம் சீனாவில் ஒரு தொடர்பு கிடைத்தது. அவர் உற்பத்தியாளர் என நம்பி சென்றேன். ஆனால் அவரோ வாங்கி விற்கும் வர்த்தகர் என்பது அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது. பிறகு நானே தேடி அலைந்து ஒரு கிராமத்தில் வாங்கினேன். கண்டெய்னரில் ஏற்று வதற்கு முன்பே பணத்தை கொடுத்தால் ஏமாற்றிவிடுவார்கள் என்பதால், வேலை ஆட்கள் கிடைக்காத நிலையில் நானே பார்சல்களை ஏற்றினேன். ஆனால் அப்படி வாங்கி வந்த குச்சிகள் தரமற்றவை என்பது இங்கு வந்த பிறகு தெரிய வந்தது. இந்த அனுபவம் நிறைய கற்றுக் கொடுத்தது. ஆனால் வியட்நாமில்தான் இதை அதிகம் தயாரிக்கிறார்கள் என்ப தால் அங்கிருந்து வாங்கத் தொடங்கி னேன். நான் தயாரித்தது போக, மூலப் பொருட்களை பிறருக்கும் விற்கத் தொடங் கினேன். தவிர இயந்திரங்களையும் என் மேற்பார்வையில் தருவித்துக் கொடுக் கிறேன்.

ஊதுபத்தி குச்சிகளை பாதுகாப்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால் மழைக் காலங்களில் வீணாகிவிடும். இதனாலும் பல லட்ச ரூபாய் எனக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது. ஊதுபத்தி தொழிலை அன்றாட வருமானத்துக்கும் செய்யலாம், புதிய முயற்சிகளில் இறங்கினால் கோடிகளிலும் சம்பாதிக்கலாம். பலர் சிறிய அளவில் செய்வதாலும், இடைத் தரகர்களிடம் கொடுப்பதாலும் நஷ்டம் அடைகின்றனர். ஆனால் சிறிய அளவில் செய்பவர்கள் ஒருங்கிணைந்து மொத்தமாக கொடுத் தால் நிறுவனங்கள் வாங்க தயாராக இருக்கின்றன. இதை புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் சொல்லிவிடு வேன். இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்நாட்டு உற்பத்தியை அரசும் ஊக்குவிக்க வேண்டும்.

இப்போது 40 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை அளித்துள்ளேன். மறைமுக மாக பல தொழில் முனைவோர்களுக்கும் உதவிகரமாக இருந்து வருகிறேன். அடுத்தாக உடல் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக அவர்கள் இயக்கக்கூடிய இயந்திர வடிவமைப்பைக் கொடுத்துள்ளேன். இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தெய்வீக தொழில் இது, துணிந்து இறங்கினால் வெற்றி நிச்சயம்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-ஊதுபத்தி-தொழிலில்-கோடி-ரூபாய்-வருமானம்/article9523772.ece?ref=relatedNews

உன்னால் முடியும்: சமூகத்துக்காகவும் நாம் சிந்திக்க வேண்டும்

unnal_3118456f.jpg
 
 
 

காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசி பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. முதலுதவி மருந்துகள் கொண்ட பெட்டி தயாரிக்கும் தொழிலில் உள்ளார். பனிரெண்டாவதுக்கு பிறகு என்ன படிப்பது எனத் தெரியாமல் பிபார்ம் படித்தேன். ஆனால் இன்று தொழிலையும் தாண்டி மக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வுகளை உருவாக்கும் பணியையும் சேர்த்தே செய்கிறேன் என்று குறிப்பிடும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

அண்ணனின் நண்பர் சொன்னதன் பேரில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபார்ம் சேர்த்தனர். இந்த படிப்புக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மூன்றாம் வருடத்தில்தான் தெரிந்து கொண்டேன். படித்துவிட்டு வெளியே வந்ததும் என் நண்பர்கள் மருந்து நிறுவன மார்க்கெட்டிங் வேலைகளுக்கும், நான் உற்பத்தி சார்ந்த நிறுவனத்திலும் வேலைக்குச் சேர்ந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மூன்று நண்பர்கள் சேர்ந்து மருந்து விநியோக நிறுவனத்தை தொடங்கினோம்.

வேலைப் பிரிவினையால் நட்பு பாதிக் கும் என்பதால் அங்கிருந்து வெளியேறி மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றில் மார்க் கெட்டிங் வேலையில் சேர்ந்தேன். அந்த அனுபவம் நிறைய கற்றுக் கொடுத்தது. எந்த சூழலிலும் தாக்குப்பிடிக்கலாம் என்கிற நம்பிக்கையை கொடுத்ததும் மார்க்கெட்டிங் வேலைதான். இந்த நிலையில்தான் முதலுதவி பெட்டி தொழில் யோசனை எழுந்தது.

ஒரு முறை பயணத்தில் பேருந்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட சின்ன காயத்துக்கு மருந்து வேண்டும். ஆனால் பேருந்தில் பெயருக்கு ஒரு முதலுதவி பெட்டி மட்டும் இருந்தது. அப்போதுதான் முதலுதவி துறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என தெரிந்தது. அதற்கு பிறகுதான் அந்த துறையில் எதாவது மாற்றம் கொண்டுவர முடியுமா என யோசிக்க தொடங்கினேன்.

ஏனென்றால் இதை பொருட்டாக எவருமே எடுத்துக் கொள்வதில்லை. கணக்கு காட்டவும், கடமைக்கே என்றும் தான் வைத்திருப்பார்கள். இந்த துறையில் முறையான நிறுவனங்களும் கிடையாது. உத்தேசமான மரப்பெட்டிகளில் சில மருந்து பொருட்கள் பேண்டேஜ்களை வைத்து முதலுதவி பெட்டிகள் என்று சில வட இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன.

இந்த தொழிலையே முறைப்படுத்தப் பட்ட வகையில் மேற்கொண்டால் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து 2009ம் ஆண்டு தனியாக தொடங்கினேன். ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள்கூட இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

சென்னையில் உள்ள முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இப்போது முதலுதவி பெட்டி சப்ளை செய்து வருகிறேன். ஆனால் 20 ரூபாய்க்கு கொடுங்கள் என்றுதான் வாங்குகிறார்கள். ஒரு நிறுவனம் முதலில் 60 ரூபாய்க்கு வாங்கியது, பிறகு செலவு குறைப்பு நடவடிக்கையாக இதையும் குறைத்தனர். இன்னொரு நிறுவனமோ எங்களது கார்களில் உலக தரமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன அதனால் முதலுதவி பெட்டி தேவையில்லை என மறுத்து விட்டனர்.

தற்போது கூட திருத்தப்பட்ட வாகன பாதுகாப்பு மசோதாவில் முதலுதவி பெட்டி வாகனங்களில் அவசியமில்லை என குறிப்பு உள்ளது. இதற்கு மறுப்பிருந் தால் ஆறு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து யாரும் கவனிக்க வில்லை. இது குறித்தும் பலரிடமும் பேசி வருகிறேன். இப்படித்தான் முதலுதவி பெட்டிகள் குறித்த நிலை உள்ளது.

முதலுதவி பெட்டி என்றால் ஏதோ ஒரு சில மருந்து பொருட்களும், பேண்டேஜ்களும் கொண்ட பெட்டி மட்டுமல்ல, சுமார் 150 வகையான பொருட்கள் இருக்கிறது. பேண்டேஜ்களில் மட்டுமே பல வகை இருக்கிறது. தவிர ஒவ்வொரு நிறுவனத்துக்கும், தேவைகளுக்கும் ஏற்பவும் தயார் செய்யலாம். இப்போது என்எல்சி, கோல் இந்தியா, ஹூண்டாய், ரெனால்ட் நிறுவனங்களுக்கு தமிழக அங்கன்வாடி மையங்களுக்கும் முதலுதவி பெட்டிகளை அளித்து வருகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாகத்தான் இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக உணர்கிறேன்.

மருந்துகளுக்கான பெட்டிகள், பேண் டேஜ்கள், மருந்துகளையும் எங்களுக் காகவே எங்களது பிராண்டில் தயாரித்து தரும் தயாரிப்பாளர்களை உருவாக்கியுள்ளோம். தவிர இந்தியா முழுவதும் எனது பிராண்டுக்கான சந்தையை உரு வாக்கிருக்கிறேன். எனக்கு ஏற்கெனவே உற்பத்தி, மார்கெட்டிங் துறை அனுபவம் இருப்பதால் வேலைகளை எளிதாக கையாள முடிகிறது. இப்போது 35 பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளதுடன், சமூகத்துக்கு பயனுள்ள ஒரு தயாரிப்பை வழங்குகிறோம் என்கிற திருப்தி இருக்கிறது.

எனது தயாரிப்புகள் அதிகமாக விற்க வேண்டும் என்பதைத் தாண்டி இதன் தேவைகள் அதிகம்பேருக்கு செல்ல வேண் டும் என்பதை இலக்காக வைத்துள்ளோம். சமூகத்துக்கு தேவையானதை நாம் சிந்தித்தால் சமூகம் நமக்கு தேவை யானதை அளிக்கும் என்பதை ஒவ்வொரு தொழில்முனைவோரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-சமூகத்துக்காகவும்-நாம்-சிந்திக்க-வேண்டும்/article9482101.ece?ref=relatedNews

உன்னால் முடியும்: உயர்த்தி விட ஆயிரம் கைகள் இருக்கின்றன

unnal_3121960f.jpg
 
 
 

சிறு தானிய உணவுப் பழக்கம் அதி கரித்து வந்தாலும் நவீன உணவு களுக்கு ஈடு கொடுக்கும் வகையி லான மாற்றங்களோடு வந்தால்தான் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க முடியும் என்கின்றனர் ரவிக்குமாரும், சத்ய மூர்த்தியும். சிறுதானிய நூடுல்ஸ், கிறிஸ்பி என பல வகைகளில் சிறு தானியங்களில் தயாராகும் தின்பண்டங்களைத் தயாரிக் கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர்களது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

உணவு பொருள் தயாரிப்பில் பல முயற்சிகளுக்கு பிறகுதான் இந்த வடிவத் துக்கு வந்துள்ளோம். ஒவ்வொன்றுமே எங்களது முயற்சியாகவும் பயிற்சியாகவும் இருந்தது. படிக்கும் காலத்தில் வெறும் கனவாக மட்டுமே இருந்த தொழில் ஆர்வம், இன்று 45 நபர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளதற்கு பின்னால் எங்களது முயற்சிகள்தான் காரணம் என்று தொடங்கினார் ரவிக்குமார்.

எனக்கு சொந்த ஊர் சேலம், நண்பர் சத்தியமூர்த்திக்கு சொந்த ஊர் ஆத்தூர். பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்தோம். இருவரும் ஒரே அறை வாசிகள் என்பதால் ஏற்பட்ட நட்பு இப்போதும் தொடர்கிறது. நான் எம்எஸ்சி முடித்துவிட்டு சில நிறுவனங்களில் தரப்பரிசோதனை ஆய்வாளர், ஆலோசகர் உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன். சத்யமூர்த்தி பிஹெச்டி படித்துக் கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக சொந்த தொழில் முயற்சிக்கான ஆலோசனை மற்றும் தேடலில் இருந்தோம்.

அவர் படித்து முடித்து வெளியே வந்ததும், நஷ்டத்தில் இருந்த ஒரு பேக்கேஜிங் வாட்டர் நிறுவனத்தை எடுத்து நடத்தி லாபத்துக்கு கொண்டு வந்தோம். அது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. அதிலிருந்து குளிர்பானம் தயாரிக்கலாம் என்கிற யோசனை வந்து அதற்கான முயற்சி எடுத்தோம். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் தொழில்முனை வோர் ஊக்குவிப்பு மையத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்தி நெல்லிக்காய் ஜூஸ் போன்ற புதிய வகை பானங்களை தயாரித்தோம். பாட்டிலில் அடைக்கும் வகையில் இல்லாமல், உடனடி பழச்சாறாக வும் இல்லாமல் இதைத் தயாரித்தோம்.

எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலம் வேளாண் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், வேல்ஸ் பல்கலைக் கழகம், காருண்யா பல்கலைக் கழக உணவகங்களில் இதை நிறுவினோம். நல்ல விற்பனை இருந்தது. மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் இதை நிறுவிய வகையில் அங்கிருந்த உணவகத்தினர், சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் மாதிரியான உணவுகளை சப்ளை செய்ய முடியுமா என்று கேட்டனர்.

அப்படி தொடங்கியதுதான் இந்த தொழில், முதலில் முளை கட்டிய சிறு தானிய மாவிலிருந்து உருண்டை போன்றவற்றை அனுப்பினோம். இவற்றை தயாரிப்பதற்கான அடுப்புகள் தேவைப் பட்ட போது ஒரு பேக்கரியில் உதவி கேட் டோம். அவர்களுக்கு வேலையில்லாத போது பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தனர். இரண்டு கிலோ மூன்று கிலோ என்கிற அளவுகளில் மாவு கொண்டு சென்று அங்கு வைத்து தயாரிப்போம். புது முயற்சிகள் என்பதால் பல இழப்புகள் வரும். சுவை, தரம் எல்லாவற்றிலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாக வரும். இதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வரவே ஆறு மாதங்கள் ஆனது. ஆனாலும் இந்த தயாரிப்புகளுக்கு பல இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த சந்தர்ப்பத்தில் வங்கியிலிருந்து ரூ.30,000 வரை ‘ஓவர் டிராப்ட்' கிடைத்தது. இது எங்களது உழைப்பு சரியான திசையில் செல்கிறது என நம்பிக்கை கொடுத்தது. சிறுதானியங்களில் குர்குரே மாதிரியான தின்பண்டத்தை தயாரிக்க எடுத்த முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் வழியாக 18 லட்ச ரூபாய் கடனுதவியும் கிடைக்க உணவுப் பொருட்களை தயாரிக்க சொந்த யூனிட் போட்டோம்.

அதற்கடுத்து சிறுதானிய நூடுல்ஸ் தயாரிப்பில் இறங்கினோம். திருச்செங் கோடில் இதற்கான வசதிகளுடன் ஒரு இடம் அமைய அங்கும் ஒரு தயாரிப்பு ஆலையை அமைத்தோம். இந்த காலகட் டங்களில் மென்பானங்கள் தயாரிப்பை குறைத்துக் கொண்டு முழுமையான சிறு தானிய தயாரிப்புகளில் இறங்கிவிட்டோம். எங்கள் கையிலிருந்து ஆரம்பத்தில் 50 ஆயிரம் வீதம் முதலீடு செய்தோம். இப்போது ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளோம். நான் நிர்வாகத்தையும், சத்யமூர்த்தி ஆராய்ச்சி பிரிவையும் பார்த்துக் கொள்கிறார்.

2009-ம் ஆண்டு தொழில் முயற்சிகளில் இறங்கினோம். இந்த 8 ஆண்டுகளில் ஒரு நாள்கூட உழைப்பதற்கு சோர்ந்ததில்லை. எதற்காகவும் கூச்சப்பட்டதில்லை. தொழிலில் நேர்மை இருந்தால் தூக்கிவிட ஆயிரம் கைகள் இருக்கின்றன என்பதே எங்கள் அனுபவம் என்கிறார் ரவிக்குமார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-உயர்த்தி-விட-ஆயிரம்-கைகள்-இருக்கின்றன/article9496803.ece?ref=relatedNews

உன்னால் முடியும்: சொந்தத் தொழிலே என் அடையாளம்

unnal_3125412f.jpg
 
 
 

கொத்தனார் வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் முரளி. தனது முன்னோக்கிய சிந்தனைகளால் இன்று வளரும் தொழில் முனைவோராக உருவாகியுள்ளார். பள்ளிகள், கல்லூரிகளுக்கான இருக்கைகள், கட்டில்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குப்பை கூடைகள், மருத்துவமனை டேபிள்கள் போன்றவற்றைத் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

குடும்பச் சூழல் காரணமாக பத்தாம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியவில்லை. 16 வயதிலேயே கட்டிட வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன். 3 ஆண்டுகள் கொத்தனார் வேலை செய்தேன். பிறகு ஒரு கட்டுமான ஒப்பந்தக்காரரிடம் வேலைக் குச் சேர்ந்து கட்டுமான வேலைகளுடன் சூப்பர்வைஸிங் வேலைகளையும் சேர்த்து செய்து வந்தேன். கட்டுமான வேலை களில், வீட்டின் உள்புறம் மாடிப்படி கைப் பிடிகள் உள்ளிட்ட கிரில் வேலைகளுக்கு அடிக்கடி காத்திருக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் வழக்கமாக செய்து தருபவர்கள் தாமதப்படுத்த, நான் எனது மைத்துனர் வேலைபார்த்த ஒரு நிறுவனத்தில் விசாரித்தேன். அப்போதுதான் இந்த தொழிலில் உள்ள லாபம், வாய்ப்புகள் போன்றவற்றை தெரிந்து கொண்டேன்.

கொத்தனார் வேலையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கொத்தனாராகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் இது இன்ஜினீயர்கள் கையில் உள்ள தொழில். ஆனால் கட்டுமான துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது போல எஸ்எஸ் கிரில் வேலைகளைத் தொடங்கினால் நமக்கான சொந்த தொழிலாகவும், கவுரவமாகவும் இருக்கும் என யோசித்து, எனது மைத்துனரிடம் பகிர்ந்து கொண்டேன்.

அவருக்கு அந்த தொழிலில் அனுபவம் இருந்தது. எனக்கு கட்டுமான நிறுவனங்களில் ஆர்டர் எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. நான் வேலைபார்த்த பில்டரும் உற்சாகப் படுத்த, இரண்டுபேரும் சேர்ந்து 80 ஆயிரம் முதலீட்டில் தொடங்கினோம்.

ஆனால் முதல் இரண்டு ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டோம். சிறிய முதலீடு தான் என்பதால் பெரிய வாய்ப்புகளையும் பிடிக்க முடியவில்லை. தவிர வயதிலும், அனுபவத்திலும் நாங்கள் இளையவர் கள் என்பதாலும் வாய்ப்புகள் கிடைக்க வில்லை. அதனால் பிறரது ஆர்டர்களுக்கு செய்து கொடுத்தோம். சிறிய ஆர்டர்களில் வரும் வருமானத்திலிருந்து செலவுகள் எதையும் செய்யாமல் ஒவ் வொரு இயந்திரமாக வாங்கி சேர்த்தோம். ஞாயிற்றுகிழமைகளில்கூட தொடர்ச்சி யாக வேலை செய்வோம். மாதச் சம்பளத் துக்கு வேலை செய்வதாக நினைத்து 5,000 ரூபாய் மட்டும் சம்பளமாக எடுத்துக் கொள்வோம். வேலைக்கு போனால்கூட நல்ல சம்பளம் கிடைக்கும் என வீட்டில் சொல்லத்தான் செய்தனர். ஆனால் எங்க ளது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கும் நம்பிக்கை வந்தது.

ஆரம்பத்தில் கட்டுமான நிறுவனங் களை நம்பித்தான் தொழிலை தொடங்கி னோம் என்றாலும், பல துறைகளுக்கும் தேவையானதை செய்து கொடுத்தோம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குத் தேவையான விடுதி கட்டில்கள், வகுப் பறைக் கட்டில்கள், மருத்துவமனையில் பயன்படுத்தும் டிராலிகள் போன்றவற்றை யும் செய்து கொடுத்தோம்.

நாங்கள் பெரிய நிறுவனமாக இல்லாத தால் வாய்ப்புகளை இழந்தது ஒருபக்கம் என்றால், முறையான மார்க்கெட்டிங் தெரி யாததாலும் வாய்ப்புகளை இழந்தோம். சில நிறுவனங்களில் எங்களது தோற் றத்தை பார்த்தே உள்ளே விட மாட்டார் கள். சிலரோ எங்களிடம் மாதிரி வடி வமைப்பு கொடுங்கள் என வாங்கிக் கொண்டு ஆர்டர்களை வேறிடத்தில் கொடுத்து விடுவார்கள்.

இதை சரிசெய்ய வேண்டும் என்றால் நாம் வேலை பார்ப்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது, நிர்வாக திறமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என முயற்சிகள் எடுத்தோம். அதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கு சென்று ஓரளவு ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொண்டேன். இப்படி ஒவ்வொன்றையும் எங்களது அனுபவங்களே எங்களுக்கு கற்றுக் கொடுத்தன. தொழிலில் ஓரளவு நல்ல இடத்தை அடைந்ததும் மைத்துனர் தனியாக பிரிந்து சென்று தொழில் நடத்துகிறார். இப்போது ஐந்து பேருக்கு நிரந்தர வேலை கொடுத்துள்ளேன். பல வேலைகளை வெளியிலும் ஆர்டர்கள் அடிப்படையில் கொடுத்து வாங்கு கிறேன். இப்போது மிகப் பெரிய ஆர்டர் களையும் செய்யக்கூடிய அளவுக்கான இயந்திரங்களை சேர்த்துவிட்டோம்.

அடுத்த இலக்காக சொந்த இடத்திற்கு நிறுவனத்தை மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் உள்ளேன். நான் அடுத்த இலக்கு வைத்தாலும், இந்த இடத்துக்கு வந்திருப்பதுகூட சிறந்த வளர்ச்சியாகத் தான் நினைக்கிறேன். ஏனென்றால் என் னோடு கொத்தானார் வேலை பார்த்த நண் பர்களுக்கு சிறந்த திறமை இருந்தாலும், இப்போதும் அடுத்த நாள் வேலை எங்கு, யாருக்கு என தெரியாமல் உள்ளனர். எனக்கோ சொந்த நிறுவனம், சொந்த அடையாளம் உள்ளது என்று முடித்தார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-சொந்தத்-தொழிலே-என்-அடையாளம்/article9508756.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: ‘நான் தினசரி கடந்து செல்கிறேன்’

unnal_3132139f.jpg

 
 
 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்பத்தூரில் ஒரு நிறுவனத்தில், மாதம் 300 ரூபாய்க்கு வேலை செய்தவர் கரூரைச் சேர்ந்த மணிகண்டன். இன்று அந்த நிறுவனத்துக்கு அருகிலேயே 45 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சொந்த தொழில் குறித்த எண்ணமிருந்தாலும் அதைத் தூண்டுவதற்கு ஒரு எதிர்பாராத தருணம் வேண்டும் என்று குறிப்பிடும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

பொறியியல் பட்டப் படிப்பு கடைசி செமஸ்டரில், வேலை தேடத் தொடங்கி னேன். ஒரு விளம்பரத்தில் ரூ.2,000 பணம் கட்டினால் உடனடி வேலை வாய்ப்பு என்பதை நம்பி பணத்தை கட்டியிருந்தேன் கல்லூரி முடிந்த அடுத்த நாள் அவர்கள் குறிப்பிட்ட சென்னை, அம்பத்தூர் முகவரிக்கு வந்தேன். ஆனால் அந்த முகவரி போலி என்பதும் மோசடி விளம்பரம் என்பதும் தெரிந்தது.

அருகிலிருந்த டீ கடையில் இந்த விவரத்தை சொன்னதும் அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் குறிப்பிட்டனர். கையில் பணமும் இல்லை, இங்கு தங்கி வேலை தேடுகிறேன் என்று வீட்டிலும் செலவுக்கு பணம் கேட்க முடியாது என்பதால் அந்த நிறுவனத்தில் மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் உதவியாளர் வேலைக்குச் சேர்ந்தேன்.

சில லட்சங்கள் செலவு செய்து பொறியியல் படித்தது இப்படி ஹெல்ப்பர் வேலைக்குத்தானா என அப்போது ஆற்றாமையாக இருக்கும். அங்கு ஆறு மாதங்கள் வேலை பார்த்த பிறகு, அருகில் வேறொரு நிறுவனத்துக்கு குவாலிட்டி செக்கிங் வேலைக்கு 5,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன்.

சில ஆண்டுகளில் அடுத்தடுத்து வேலை கள் மாறி டெல்லியில் ஒரு பன்னாட்டு நிறுவனம், திருச்சி சிதார் வெசல்ஸ் என பத்தாண்டுகளில் இன்ஜினீயரிங் துறை யிலேயே மார்க்கெட்டிங் அனுபவத்தோடு மாதம் 4.5 லட்சம் சம்பளத்தில் இருந்தேன்.

வீட்டில் வாஷிங்மெஷினை அடிக்கடி நகர்த்த வேண்டி இருந்ததால் அதற்காக ஸ்டேன்ட் வாங்க ஒரு நாள் கடைக்குச் சென்றிருந்தேன். அதன் விலை ஒரு கடையில் ரூ.2,500 என்றும் இன்னொரு இடத்தில் ரூ.1,800 என்று சொன்னார்கள். மொத்தமே 1 கிலோ மெட்டீரியல்தான். இதர செலவுகள் எல்லாம் சேர்த்தாலும் 500க்குள்தான் அதன் விலை இருக்கும். இதற்கு இவ்வளவு விலையா கொடுப்பது? இதை நாமே செய்து கொண்டால் என்ன என தோன்றியது.

எனது உறவினர் ஒருவரது லேத் பட்டரையில் இதற்கான டிசைனைக் கொடுத்து செய்து வாங்கினேன். நான் குடியிருந்த பிளாட்டில் உள்ளவர்களுக்கு அது தெரிந்து எல்லோரும் அதைக் கேட்கத் தொடங்கினர். எனக்கு சொந்த தொழில் யோசனை இருந்த வேளையில் இப்படி ஒரு வாய்ப்பு உருவானது. அதனால் பகுதி நேரமாக இந்த வேலைகளைத் தொடங்கினேன்.

வாஷிங்மெஷின் ஸ்டேண்ட் தவிர எல்பிஜி சிலிண்டர் ஸ்டேண்டையும் தயா ரித்து விற்பனையகங்களுக்கு மொத்த மாகக் கொடுக்கத் தொடங்கினேன். ஆனால் விற்பனையாளர்கள் பணத்தை தர தாமதப்படுத்தியதால் மறு முதலீடு, ஆட் களுக்கான கூலி, கரண்ட் பில் கட்டுவதில் கூட நெருக்கடி ஏற்பட்டது. தொழிலுக்கான அனுமதிகள் வாங்கியிருந்தாலும் முறையான ஆவணங்கள் பராமரிக்க தெரியவில்லை. ஒருமுறை தொழிலாளர் துறை அதிகாரிகள் அந்த இடத்துக்கு சீல் வைத்து சென்று விட்டனர். நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கும் உனக்கு இது தேவையில்லாத வேலை என குடும்பத்திலும் சிக்கல் உருவானது. இப்படி ஆரம்பத்தில் பல நெருக்கடிகள் உருவாயின.

இந்த நேரத்தில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தினர் டிராலி போன்ற இயந் திரத்தை கேட்டனர். அப்போதிலிருந்து தொழில்துறையினர் பயன்படுத்தும் டிராலியை உருவாக்கத் தொடங்கினேன். அதன்பிறகு நிறுவனங்களுக்கான தேவை களை முன்வைத்து வடிவமைப்பை உருவாக்கிக் கொண்டு அந்த நிறுவனங் களுக்குச் செல்லத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு 2013-ம் ஆண்டில் முழுநேரமாக சொந்த தொழிலில் இறங்கிவிட்டேன்.

கார் நிறுவனங்களுக்கு சீட், டாப் உள்ளிட்ட பாகங்களை அனுப்பும் துணை நிறுவனங்களுக்கு எங்களது தயாரிப்புகள் அவசியமாக இருக்கின்றன.

வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து வடிவமைத்துக் கொண்டால், வேலைகளை செய்து வாங்க நிறைய லேத்கள் உள்ளன என்பதால் சொந்த இயந்திரங்களை குறைத்துக் கொண்டேன். நிறுவன தொடக்கத்தி லேயே தனித் தனியாக நிர்வாக அமைப்பை உருவாக்கிக் கொண்டேன். அப்போதிலிருந்து வாரம் தவறாமல் மீட்டிங் போடுகிறேன். 2025 ஆண்டு வரை இலக்கு வைத்துக் கொண்டு பயணிக்கிறோம். கடின உழைப்பைவிட ஸ்மார்ட் வேலைகள்தான் ஒவ்வொரு கட்டமாக என்னை வளர்த்தது. நான் ஆரம்பத்தில் வேலை பார்த்த நிறுவனத்தில் இப்போதும் அதே வேலைகள்தான் செய்து கொண்டிருக்கின்றனர். ‘நான் தினசரி கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.’

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-நான்-தினசரி-கடந்து-செல்கிறேன்/article9538016.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: வேலை வாய்ப்பு அதிகம் உள்ள தொழில்

unnal_3138249f.jpg
 
 
 

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பிரபாகர். படித்தது பத்தாம் வகுப்பு. ஆனால் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப் பளிக்கும் வெற்றிகரமான தொழில்முனை வோராக உள்ளார். செல்லப்பிராணிகள், வளர்ப்பு மீன்களுக்கான உணவு தயாரிப்பு தொழிலில் உள்ள இவரது அனுபவத்தை இந்த வாரம் ‘வணிக வீதி’க்காக பகிர்ந்து கொண்டார்.

சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதான நாட்டத்தினால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. பத்தாம் வகுப்புக்கு பிறகு சில நாட்கள் வளர்ப்பு பறவைகள், மீன்கள் என நாட்கள் கழிந்தன. 22 வயதில் எழும்பூரில் சின்ன இடத்தில் வண்ண மீன் விற்பனையகம் ஆரம்பித்தேன். ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். தினசரி அதிகபட்சமாக ரூ. 200 -க்கு விற்பனையாவதே அதிசயம். மீன் குஞ்சுகள் மற்றும் அவற்றுக்கான உணவை வாங்க அடிக்கடி சென்னை கொளத்தூர் பகுதிக்குச் செல்வேன். அப்படி கிடைத்த தொடர்பை வைத்து, மீன் உணவை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினேன். சில்லறையாக விற்கத் தொடங்கி அதில் கிடைத்த லாபத்தால் ஒரு கட்டத்தில் மொத்த விற்பனையாளராக மாறினேன். எட்டு ஆண்டுகள் இந்த தொழிலில் இருந்த வகையில் இவற்றை வெளிநாடுகளிலிருந்தே நானே நேரடியாக இறக்குமதி செய்து விற்கும் அளவு வளர்ந்திருந்தேன்.

வளர்ப்பு பறவைகள், மீன், மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவு தயாரிப்பாளர்கள் இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளனர். அதுவும் தமிழ்நாட்டில் ஒருவர்கூட இல்லை. அதனால் எனக்கு இந்த தொழிலில் தயாரிப்பாளராக இறங்க தைரியம் வந்தது. ஏனென்றால் அப்போது நான் மாதத்துக்கு 3 டன் உணவுகளை விற்பனை செய்யும் அளவுக்கான மார்க்கெட்டை வைத்திருந்தேன்.

சீனா, தைவான் போன்ற நாடுகளில் எனக்கு இருந்த தொடர்புகள் மூலம் 2002ம் ஆண்டு இயந்திரங்களை வரவழைத்தேன். உணவு தயாரிப்பு தொழில்நுட்பத்துக்காக ஒரு அமெரிக்க நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த நிறுவனம் உணவு கலவை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை கவனித்துக் கொள்வார்கள். வளர்ப்பு பிராணிகள் கண்காட்சிகளில் கலந்து கொண்டு காட்சிப்படுத்தி வெளிநாட்டு ஆர்டர்களைப் பிடித்தேன்.

சர்வதேச அளவில் சீனாவில் ஒரு கண்காட்சி நடக்கும். அதில் 900 கடைகள் சீனர்களுடையதாக இருக்கும். 100 பேர்தான் வெளிநாட்டவர்கள் இருப்பார்கள். அதிலும் இந்தியாவிலிருந்து ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இருப்போம். நாம் கொடுக்கும் விலை குறைவாகவும், தரமாகவும் இருக்கும் என்பதால் சர்வதேச ஆர்டர்கள் கிடைத்து விடும். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாளராக உருவானேன். ஆரம்பத்தில் எனக்கு சிங்கப்பூரிலிருந்து மீன் உணவை அனுப்பி வைத்த நிறுவனத்துக்கு இப்போது நான் எனது தயாரிப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு தயாரிப்புக்கு பின்னாலும் பல மாதங்கள் உழைக்க வேண்டும். பறவைகள் உணவு என்றால் எந்த பறவை, எந்த தானியத்தை விரும்பி உண்ணும் என்கிற புரிதல் வேண்டும். இவையெல்லாம் அனுபவத்தில் கிடைக்கும் என்றாலும் வெளிநாட்டு தயாரிப்புதான் தரமான இருக்கும் என்று நினைக்கும் இங்குள்ளவர்களின் மனநிலையையும் மாற்ற வேண்டிய சவால் எனக்கு இருந்தது. ஏனென்றால் இங்கு நான் தயாரித்து பத்து ரூபாய் குறைவாக கொடுத்தாலும் வாங்க தயாராக இல்லை. இப்போதும் எனக்கான போட்டியாளர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்பவர்கள்தான். இதனால் எனது பிராண்டு பெயர், பேக்கிங் முறை உள்பட அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகளைப் போலவே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மாதத்துக்கு மூன்று டன் சந்தையை மட்டுமே வைத்திருந்த நான், 100 டன் உற்பத்தி திறனுக்கு தொழிலை தொடங்கினேன். ஆரம்பத்தில் மூன்று நாட்கள்தான் வேலை நடக்கும். பிறகு ஆறு நாட்கள், பத்து நாட்கள் என வேலைகள் அதிகரித்து இப்போது மாதத்துக்கு 100 டன் என்கிற இலக்கை எட்டியுள்ளேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் 100 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளேன். வங்கிகளும் கடன் தர தயாராக இருக்கின்றன. அடுத்ததாக 1000 டன் உற்பத்தி இலக்கில் தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

உற்பத்தி துறை சார்ந்த நிறுவனமாக நான் முறைப்படுத்தப்பட்டிருந்தாலும், எனது தயாரிப்புகளை பயன்படுத்தும், வாங்கி விற்கும் கடைகள், வளர்ப்பு பறவை, மீன் விற்பனை தொழில் இன்னும் முறைப்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. இதை முறைப்படுத்தினால் பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது என் கருத்து. அரசு அமைப்புகள் இதை கவனிக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை என்று முடித்தார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-வேலை-வாய்ப்பு-அதிகம்-உள்ள-தொழில்/article9561490.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சைக்கிளில் பழம் விற்ற சுரிந்தர் சிங், இன்று 12 உலக நாடுகளுக்கு பழங்கள் ஏற்றுமதி தொழில் புரியும் கோடீஸ்வரர் ஆன கதை!

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுடன் கூடிய கடுமையான உழைப்பும் ஒருவரை எந்த உச்சத்துக்கும் கொண்டு செல்லும் என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு மற்றொரு உதாரணமாக விளங்குகிறது சுரிந்தர் சிங் என்பவரது ஊக்கமிகு கதை. பழங்களை சைக்கிளில் விற்பனை செய்த இவர், தற்போது மில்லியன் டாலர் தொழிலின் அதிபதியாகவும் உலகமெங்கும் 12 நாடுகளில் தனது நிறுவன கிளையை பரப்பி வெற்றியாளராக வலம் வருகிறார். 

full_f4fc75aacb

சுரிந்தர் சிங் பஞ்சாபில் உள்ள அபோஹர் எனும் இடத்தில் பிறந்தவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் பள்ளிப்படிப்பை ஐந்தாம் கிளாசோடு மூட்டைக் கட்டிவிட்டார். பின், சைக்கிளில் பழங்களை விற்று வருமானம் ஈட்டத் தொடங்கினார். அப்போதிலிருந்து பழங்களுக்கான மதிப்பையும், அதன் விற்பனையில் உள்ள தொழிலையும் புரிந்துகொண்ட சுரிந்தர், அருகாமையில் இருந்த ஒரு சிறிய மார்க்கெட்டில் ஒரு பழக்கடையை தொடங்கினார். பழங்கள் விற்பனையில் தான் நன்றாக முன்னேறுவதை உணர்ந்த அவர், அதை மேலும் விரிவுப்படுத்த விரும்பினார். ஆனால் முதலீடு இல்லாமல் தவித்தார். வங்கியில் இருந்து லோன் எடுத்து மொத்த வியாபார கடையை திறந்தார். அது அவ்வளவு சுலபமாக இல்லையென்றாலும் தான் எடுத்த முயற்சியை பின்வாங்காமல் தொடர்ந்தார். 

தன் தொழிலுக்கு தனித்துவத்தை பெற, பஞ்சாபில் விளையும் ஒருவகை உயர்ரக ஆரஞ்சு பழவகையான கின்னோஸ் பழங்களை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார் சுரிந்தர். இந்த விற்பனை சூடுபிடிக்க, அவருக்கு தொழிலில் அதிக லாபமும் கிடைத்தது. அவரின் பெயர் அந்த ஏரியா முழுதும் பிரபலம் ஆகியது. இது அவரை இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் தெரியச் செய்தது. அதன்மூலம், கின்னோஸ் பழங்களை இந்தியா வெளியே பல நாடுகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்புகள் குவிந்தது. தற்போது அவர் ப்ரேசில், பாங்களாதேஷ், துபாய் மற்றும் உக்ரேன் என்று பல நாடுகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்கிறார். 

தொழிலை விரிவாக்கம் செய்ய, சிங் ஒரு பேக்டரியை திறந்து அதில் பழங்களுக்கு தேவையான க்ரேட்டுகள் மற்றும் நான்கு ட்ரக்குகளையும் வாங்கினார். சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒவ்வொரு ட்ரக்கும், கின்னோஸ் பழங்களை தென்னிந்தியா வரை சப்ளை செய்கிறது. தன் தொழிலை பெருக்கி, விரிவுப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் சுரிந்தருக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ஒரு அற்புதமான குணம். அதற்கான தேவையான தொழில்நுட்பம், கட்டமைப்பையும் அவர் உருவாக்க தவறுவதில்லை. அப்போது தான் பழங்கள் கெடாமல் ப்ரெஷ்ஷாக இருக்கும் விற்பனையும் பெருகும் என்ற நம்பிக்கை உடையவர். 

தரத்தில் சின்ன விஷயமாக இருந்தாலும் அதற்கு சமரசம் செய்யாமல் நல்ல பழங்களை விற்பனை செய்வதில் குறியாக அவர் இருப்பதே இந்த வெற்றிக்கு காரணம் ஆனது. அதனால் தான் அவரால் உலகமெங்கும் கோடி ரூபாய்களில் தொழில் செய்யமுடிகிறது. 400 ஊழியர்களை கொண்டுள்ள இவரது தொழிலின் வருமானம் ஆண்டு ஒன்றுக்கு கோடிகளை தாண்டுகிறது. இவர் தனது ஊழியர்களுக்கு ஊக்கமிகு முதலாளியாக வலம் வருகிறார். அதே போல் விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிக்காட்டி அவர்களை அதில் தொழில் செய்ய ஊக்குவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

https://tamil.yourstory.com/read/154ea42b2a/surinder-singh-who-sold-fruit-in-cycling-the-12-countries-of-the-world-engaged-in

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: புதியவர்கள் உள்ளே வரவேண்டும்

unnal_3143019f.jpg
 
 
 

நோய் கண்டறிதல் துறைக்கு தேவை யான உபகரணங்களில் 90% இப்போதும் இறக்குமதிதான் செய்து வருகின்றனர். இந்தியாவில் இதற்கான வாய்ப்புகள் ஏராளமிருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு களுக்கான சந்தையில்தான் இங்குள்ள பெரு வர்த்தகர்கள் கவனம் செலுத்து கின்றனர். ஆனால் அந்த வர்த்தகர்களோ துறைக்கே சம்பந்தம் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் கணேசன். மருத்துவ ஆய்வகங்களில் மாதிரி சேகரிப்பு குடுவைகள் உள்ளிட்ட நோய் கண்டறிதல் துறைக்குத் தேவையான உபகரணங்களை தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பம்தான். குடும்பத்தில் முதல் பட்ட தாரியும் நான்தான். எம்எஸ்சி பயோ டெக்னாலஜி படித்து முடித்ததும் ஒரு ‘லேப்’பில் வேலை கிடைத்தது. பத்தாண்டு கள் அங்கு பணியாற்றினேன். அந்த அனுபவத்தைக் கொண்டு சொந்தமாக லேப் தொடங்க ஆயத்தமானேன். ஆனால் அதற்கு ரூ. 25 லட்சம் வரை முதலீடு தேவையாக இருந்தது. அப்போது என்னால் அவ்வளவு முதலீடு திரட்ட முடியாத சூழ்நிலையில் லேபுக்கு தேவையான கருவிகள், உபகரணங்களை வாங்கி விற்கலாம் என முடிவெடுத்தேன்.

லேப்-இல் வேலைபார்த்துக் கொண்டே சொந்த தொழிலில் இறங்கினேன். வர்த்தகம் ஓரளவு வளரத் தொடங்கியதும் வேலையிலிருந்து விலகினேன். ஆனால் அதற்கிடையில் எனக்கு உபகரணங்களை அனுப்பும் பெரு வர்த்தகர்களோ இதே பொருட்களை கோவையில் விற்பனை செய்ய பலருக்கும் ஏஜென்சி வழங்க தொடங்கினர். இதனால் எனக்கு விற்பனை குறையத் தொடங்கியது. தவிர எனக்கு நன்றாக அறிமுகமானவர்களோடும் தொழிலில் போட்டிபோட வேண்டிய சூழல் உருவானது. அப்போதுதான் இந்த உபகரணங்களை சொந்தமாக தயாரிக்கும் யோசனை உருவானது.

ஆய்வக அனுபவம், வர்த்தக அனுபவம் இருந்தாலும் இவற்றை தயாரிப்பதற்கான இயந்திரங்களை சீனாவிலிருந்து கொண்டுவர வேண்டும். அதற்கு பதில் அவற்றை நாமே செய்தால் என்ன என தோன்றியது. கோவையில் உள்ள நண்பர்கள் துணையோடு மோல்டிங் இயந்திரங்களை வடிவமைத்தோம். ஆனால் இதற்கான மூலப் பொருட்கள் உரிமையும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஒரு சில மொத்த வர்த்தகர்களிடம்தான் இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட சிலவற்றை இறக்குமதி செய்தோம்.

என்னதான் முயற்சிகள் செய் தாலும் நமது தயாரிப்புகள் சர்வதேச தரத்துக்கு இருக்க வேண்டும். அது தான் இந்த துறையில் முக்கியம். தொடர்ச்சி யாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இது தொடர்பான வேலைகளை செய்தோம். அவ்வப்போதைய முதலீட்டு தேவை களுக்கு நண்பர்களும் உறவினர்களும் உதவிகள் செய்தனர்.

எனது ஆரம்ப முயற்சிகள் எல்லா வற்றுக்கும் கோவையில் உள்ள மைக்ரோ லேபாரட்டரீஸ் இயக்குநர் மணி பக்கபலமாக இருந்தார். அதன் பிறகு கோவையில் உள்ள மருத்துவமனைகள், லேப்களில் கொடுத்தோம். ஆரம்பத்தில் உள்ளூர் தயாரிப்பு என்று தயங்கியவர்கள் பிறகு, சர்வதேச தரம், ஒப்பீட்டளவில் குறைந்த விலை உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து ஆர்டர்களை கொடுக்கத் தொடங்கினர். இப்போது தமிழ்நாடு, கேரளா என தென்னிந்திய மாநிலங்களில் நெட்வொர்க்கை உருவாக்கியதுடன், ஆர்டர்களுக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளோம். உற்பத்தியை அதிகரிக்கும் ஆட்டோ மேட்டிக் இயந்திரத்துக்கான வடிவமைப்பு செய்து வருகிறோம்.

இந்த துறையில் இறங்குவதற்கு புதியவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஏனென்றால் இப்போதும் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்துவது வெளிநாட்டு தயாரிப்புகள்தான். பயிற்சியும், அனுபவமும் இருப்பவர்கள் தாராளமாக இறங்க வேண்டும். அடிப்படையான விஷயம் புதுமையாக யோசிக்க வேண்டும். ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டமும் நமக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் இழப்புகளுக்கு தாக்கு பிடித்து நிற்க வேண்டும். இது எல்லாவற்றையும் தாண்டிதான் இப்போது ஒரு தொழில் முனைவோராக நிற்கிறேன்.

25 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப் பும், பலருக்கும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளேன். முக்கியமாக சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளுரில் தொழில் நடத்து வது எளிதானதல்ல, அதற்கு முக்கிய காரணம் எங்களது விலை 15% வரை குறைவாக இருக்கிறது. அரசின் கட்டுப் பாடுகள் குறைந்து, ஊக்குவிப்புகள் அதி கரிக்கும்பட்சத்தில் பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாகும் தொழிலாக இது இருக்கும் என்கிறார் கணேசன்.

 

 

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-புதியவர்கள்-உள்ளே-வரவேண்டும்/article9581876.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: நமது ஈடுபாடே தொழிலின் வளர்ச்சி

unnal_3145431f.jpg
 
 
 

திருச்சியைச் சேர்ந்த சந்திரமோகன் எம்பிஏ முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தவர். இப்போது தொழில்முனைவோராக 15 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறார். பிறந்த குழந்தைகளுக்கான பெட்களை ‘மாம்ஸ் லவ்’ என்கிற பெயரில் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

சென்னையில் ஒரு நிறுவனத்தில் பத்தாண்டுகள் நிர்வாக பணியில் இருந் தேன். வேலைமாறுவது, பதவி உயர்வு என இதிலேயே சுற்றிக் கொண்டிருப்பதைவிட சொந்த தொழிலில் இறங்குவதற்கான யோசனை எழுந்தது. ஆனால் எந்த தொழில் என்று பிடிபடாமலேயே இருந்தது. என் நண்பர் ஒருவர் குழந்தைகளுக்கான பெட் தயாரிப்பு நிறுவனத்தில் மார்க் கெட்டிங் பணியில் இருந்தார். நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள் வோம்.

கோடைக்காலம், மழைக்காலம் என எல்லா நாட்களிலும் அவர் பிசியாக இருப் பார். ஏனென்றால் எப்போதுமே இதற்கான தேவை இருக்கும். விற்பனை குறைவதற் கான வாய்ப்பே இல்லாத தொழில். இது போன்ற விஷயங்கள் மனதில் எழுந்ததால் உடனடியாக சொந்த தொழிலுக்கான வேலைகளில் இறங்கினேன்.

இதை தயாரிப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக இயந்திரங்களைத் தேடி னேன். கோயம்புத்தூரில் கிடைப்பதற் கான வாய்ப்பு இருந்தது. கோவை சென்று தயாரிப்பாளர்களிடம் எனது தேவைகளைச் சொன்னதும் அதற்கேற்ப வடிவமைத்துக் கொடுத்தனர். இதற் கடுத்து பெட்டுக்குள் வைக்கப்படும் பஞ்சு எங்கு கிடைக்கும் என தேடியதில் குஜராத்தில் விற்பனையாளர்கள் கிடைத் தனர். அவர்களிடத்தில் ஆர்டர் கொடுக்க குஜராத் சென்றேன். ஆனால் அவர் களுக்கு தமிழ்நாட்டின் கரூரில் இருந்து தான் சப்ளை செய்கின்றனர் என்பது பிறகுதான் தெரிந்தது. அதன்பிறகு கரூரிலிருந்தே நேரடியாக வாங்கத் தொடங்கினேன். இந்த எல்லா வேலைகளும் எனது இண்டர்நெட் தேடல் மூலமாகவே இருந்தது.

ஆரம்பத்தில் 6 தையல் இயந்திரங் களைக் கொண்டு தொடங்கினேன். அதிக இயந்திரங்களோடு தொடங்கலாம் என்றால் இதற்கான ஆட்களைத் திரட்டுவது சிரமமாக இருந்தது. எனது ஆரம்ப கட்ட எல்லா வேலைகளுக்கும் மொத்த முதலீடு 5 லட்ச ரூபாய்தான் ஆனது.

ஆரம்பத்தில் சில தவறுகள், இழப்புகள் இருந்தாலும் தொடர்ச்சியாக இந்த தொழிலை கற்றுக் கொள்வதற்கான தேடலில் இருந்தேன். நமக்கு இதுதான் தொழில், இந்த முதலீட்டைக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு வளர வேண்டும். இந்த முயற்சியில் தோல்வியைச் சந்தித்தால் திரும்பவும் வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்கிற நெருக்கடி இருந்ததால் முழு நம்பிக்கை வைத்தேன். இந்த சூழலில் என் நண்பர் செந்தில்நாதனும் என்னோடு பிசினஸில் இணைந்து கொண்டார்.

தயாரிப்புகளை முதலில் சில்லரை விற்பனைக்கு அனுப்பவில்லை. இதனால் தொழில் முடங்கும் அபாயம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களின் உதவியுடன் மொத்த விற்பனையாளர்கள் தொடர்பை உருவாக்கினேன். தமிழ்நாட் டில் மூன்று மொத்த விற்பனையாளர் களுக்கும், கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் தலா ஒரு மொத்த விற்பனையாளருக்கும் இப்போது எனது தயாரிப்புகளை அனுப்புகிறேன்.

குழந்தைகளுக்கான பெட்களை பொறுத்தமட்டில் இப்போது 50க்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிக்கிறேன். ஆனால் மிகக் கவனமாக செய்ய வேண்டிய வேலை இது. பிறந்த குழந்தைக்கான தயாரிப்பு என்பதால் எந்த வகையிலும் தரத்தில் குறையிருக்கக்கூடாது. ஒரு சின்ன தவறு இருந்தால்கூட நமது தயாரிப்பை மக்கள் புறக்கணித்து விடுவார்கள்.

இந்த தொழிலில் கவனமாக இருக்க வேண்டிய விஷயம்; கடனுக்கு விறபனை செய்வது. மொத்த விற்பனையாளர்களுக்கு அளித்தாலும் 120 நாட்கள் கடன் என்கிற அடிப்படையில்தான் அனுப்பமுடியும். எனவே அதற்கிடையில் நமக்கு மூலதனம் தேவை. போட்டிகள் அதிகம் என்பதால் ஆர்டர்களை தேங்க விடக்கூடாது.

எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கும். ஒரு மருந்து கடைக்கு எப்படி ஆண்டு முழுவதும் தேவை இருக்கிறதோ அதுபோல நமக்கு வேலை இருக்கும். மழைக்காலம், வெயில்காலம், குளிர் காலம் என்கிற கணக்கு கிடையாது. அதனால் உற்பத்தியும் குறையாது. தற் போது 6 இயந்திரங்களுடன் பதினைந்து நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித் துள்ளேன். அடுத்ததாக 10 இயந்திரங்களை சேர்க்கும் வேலைகளில் இருக்கிறேன். இதன் மூலம் மேலும் 20 நபர்களுக்கு என்னால் வேலை கொடுக்க முடியும்.

நாம் என்ன செய்கிறோம் என்பதல்ல, எப்படி செய்கிறோம் என யோசிக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் அதில் நமது ஈடுபாடு எப்படி உள்ளது என தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-நமது-ஈடுபாடே-தொழிலின்-வளர்ச்சி/article9591818.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: செலவுக்கான மகிழ்ச்சி இரட்டிப்பாகும்

unnal_3147794f.jpg
 
 
 

தனிநபர்கள் தங்களது கலைத் திறமையை தொழிலாக மாற்றுவதற்கு ஒரு காலகட்டம் வேண்டும். அதன் தொடக்கத்தில் இருக்கிறார் ராம்குமார். சிற்பம் மற்றும் உருவங்கள் அச்சு தொழி லில் பலரும், பல வகையில் ஈடுபட்டாலும் அதை வித்தியாசமான நினைவுப் பொரு ளாக மாற்றும் முயற்சிகளில் இவர் ஈடு பட்டுள்ளார். இவரது அனுபவம் இந்த வாரம் ‘`வணிகவீதி’’-யில் இடம்பெறுகிறது.

"நான் செய்துவரும் அச்சுவார்ப்பு கலை நமக்கு புதியது அல்ல, ஆனால் அதைக் கொண்டு என்ன செய்கிறோம், எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்துதான் நான் வித்தியாசப்படுகிறேன்.

தங்களுக்கு பிடித்தமான உருவத்தை அச்சு எடுத்து பிரேம் செய்து வைப்பது இங்கு புழக்கத்துக்கு வரவில்லை. இதை இங்கு யாரும் செய்து தரவில்லை. நான்தான் முதன்முதலில் குழந்தைகளின் கைகள், கால் பாதங்கள், திருமண தம்பதிகளின் கைகள் இணைந்திருப்பது போன்றவற்றை உள்ளது உள்ளபடியே அச்சு எடுத்து அதை காலாகாலத்துக்கும் ஞாபகம் வைத்துக் கொள்வதுபோல் உருவங்களாக அளிக்கிறேன்,’’ என்று குறிப்பிடுகிறார்.

"சென்னைதான் சொந்த ஊர். பிஎஸ்சி விஸ்காம் படித்தேன். ஆனால் சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவது, மெழுகு சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். இந்த நிலையில் படித்து முடித்ததும் ஒரு அனிமேஷன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிறகு துபாயில் ஒரு நிறுவனத்தில் அனிமேஷன் வேலை கிடைக்க அங்கு சென்றேன். 2014ல் அந்த வேலை ஒப்பந்தம் முடிந்து சென்னை வந்து வேறு வேலை தேடத் தொடங்கினேன்."

``இப்போது நான் செய்து கொண்டிருக்கும் இந்த அச்சு வார்ப்பு நினைவு உருவங்களை துபாயில் சில இடங்களில் பார்த்திருக்கிறேன். அங்கு குழந்தைகள், பெரியவர்களின் கைகளை நினைவுகளாக வைத்திருந்தார்கள். இதே போல எனது குழந்தைக்கும் செய்து வைத்துக் கொள்ள ஆசை. சென்னையில் இதை செய்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என தேடினால் இதை செய்து தருபவர்கள் எவரும் இல்லை.’’

"அச்சு வார்ப்பை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மாவில் உருவம் செய்து தருவதற்கு இருக்கிறார்கள். ஆனால் இதை செய்யக் கூடிய மாவு தனியானது. கிட்டத்தட்ட கற்களுக்கு சமானது. எளிதில் உடையாது. நீண்ட காலம் இருக்கும். மேலும் குழந்தைகளின் தோல்களுக்கு தீங்கும் விளைவிக்காது. ஆனால் வேலையோ மிக நுணுக்கமாக இருக்க வேண்டும். இரண்டு மாத குழந்தையின் கைகளை அச்சு எடுக்கிறோம் என்றால், அதன் கை ரேகைகள் வரை மிக துல்லியமாக இருந் தால்தான் உயிரோட்டமாக இருக்கும்"

"என் குழந்தைக்கு துபாயில் அச்சு எடுத்து செய்ததுடன், இதை எப்படி செய்கிறார்கள் என்பதையும் அங்கு தெரிந்து கொண்டேன். சென்னை வந்ததும் இதற்கான மூலப்பொருளை வாங்கி நானே வீட்டில் செய்து பார்க்கத் தொடங்கினேன். அச்சு எடுத்து உருவம் செய்து கொண்டாலும், அதன் மேல் பெயிண்ட் அடிக்கும்போது ரேகைகள் அழிந்துவிடும். இதனால் பல கட்ட சோதனைகளுக்கு பிறகுதான் நேர்த்தியான வடிவம் கிடைத்தது. அவ்வப்போது வரும் சந்தேகங்களை விஸ்காம் படித்தபோது கிடைத்த கல்லூரி பேராசிரியர், ஓவிய நண்பர்கள் பலரிடமும் கேட்டு தெரிந்து கொண்டேன்."

"போட்டோ மூலம் ஞாபகங்களைச் சேமிப்பதன் அடுத்த கட்ட வளர்ச்சிதான் உருவங்களில் ஞாபகங்களைச் சேமிப் பது. இங்கு இது குறித்த அறிமுகம் பரவலாக இல்லை என்பதால் பழைய வாடிக்கையாளர்களைப் பார்த்து புதிய வர்களும் வருகிறார்கள். இப்போது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. வெளிநாடுகளில் தங்கள் உறவினர் இல்லங் களில் இவற்றை பார்த்திருப்பவர்கள்தான் இப்போது என் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்."

"ஒரு வாடிக்கையாளர் தன் குடும்பத்தினரின் கைகளுடன் சேர்த்து தங்கள் வளர்ப்பு பிராணியான நாயின் கால்களையும் உருவம் செய்து வாங்கினார். இதுபோன்ற அச்சுகளை செய்வது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சென்னை தவிர பெங்களூருவிலிருந்தும் அழைக்கிறார்கள். விரைவில் இதற்காக தனியாக ஸ்டூடியோ தொடங்கும் முயற்சி யில் உள்ளேன்,’’ என்றார்.

நினைவுகளைச் சேமிப்பதற்கு நாம் நிறைய செலவு செய்கிறோம். இதுபோன்று புதுமையான வழியாக இருந்தால் செலவுக் கான மகிழ்ச்சி இரட்டிப்பாகலாம்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-செலவுக்கான-மகிழ்ச்சி-இரட்டிப்பாகும்/article9602117.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: பசுமைப் பணியில் புதிய யோசனைகள்.

டி.மாதவன், நேச்சர் பயோ கிரீன் ஆர்கானிக், சென்னை
டி.மாதவன், நேச்சர் பயோ கிரீன் ஆர்கானிக், சென்னை
 
 

இயற்கை வழி விவசாயத்துக்கான விழிப்புணர்வு அதிகரித்துவரும் அதேவேளையில் தங்களுக்கு தேவையான காய்களை வீட்டிலேயே விளைவித்துக் கொள்வதற்கான முயற்சி களையும் மக்கள் மேற்கொண்டு வருகின் றனர். அந்த வகையில் சமீப காலத்தில் மாடித்தோட்ட முறை பிரபலமாகிவரு கிறது. இதைத் தொழில் முறையில் அமைத்துத் தருவதுடன், கார்ப்பரேட் நிறுவனங்களில் விவசாயம் என்கிற புதிய ஐடியாவிலும் இயங்கி வருகிறார் மாதவன். அவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிகவீதி’யில் இடம் பெறுகிறது.

``சொந்த ஊர் திண்டிவனம் பக்கத்தில் உள்ள மயிலம் கிராமம். விவசாயத் துறை யில் பட்டப் படிப்பு முடித்து ஒரு விதை நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண் டிருந்தேன். அந்த நிறுவனத்துக்காக தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா என தென்னிந்திய மாநிலம் முழுவதும் அலைந்து விவசாயிகளை சந்தித்ததில், அவர்களது தேவைகள், மண்வளம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இதன் மூலம் எனது விவசாய அறிவை வளர்த்துக் கொண்டதுடன், அவர்களுக்கு இயற்கை வழி விவசாயத்தில்தான் லாபம் கிடைக்கும் என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டேன். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி, நண்பர்களுடன் சேர்ந்து இயற்கை விவசாய உற்பத்தி ஆராய்ச்சிகளில் இறங்கினேன்.’’

``கர்நாடகாவின் கூர்க், கேரளாவின் இடுக்கி பகுதி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப் பவர்கள். அங்கு சில ஆண்டுகள் இந்த வேலைகளை செய்ததுடன், உற்பத்தி செய்து சென்னைக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தோம். பின்பு அங்கிருந்து சென்னை வந்ததுடன், சொந்த ஊரில் நண்பர்களுடன் சேர்ந்து தர்பூசணி விவ சாயம் செய்து ஏற்றுமதி செய்யத் தொடங் கினேன். ஆனால் எனது விவசாய அறிவை நான் மட்டுமே பயன்படுத்துவதைவிட பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக இதை முறைப்படுத்த யோசித்தேன். அந்த வகையில்தான் நிறுவனத்தை தொடங்கினேன்.’’

``மாடித்தோட்டம் குறித்து மக்களின் கவனம் அதிகரிக்கத் தொடங்கியதும் அதை அமைத்துக் கொடுக்கும் வாய்ப்புகள் வந்தன. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அமைத்து கொடுத்ததுடன், அதற்கான ஆலோசனை, பராமரிப்பு உள்ளிட்டவற்றையும் தொழில் முறையாக மாற்றினோம்.

மாடித்தோட்டம் அமைக்க பலரும் ஆர்வமாகவே இருந்தாலும், ஈடுபடு பவர்களில் பத்து நபர்களில் ஆறு பேர் மட்டுமே முறையாக செயல்படுகின்றனர். ஆரம்பத்தில் ஆர்வமாகவும், பின்பு அவர்களின் ஆர்வம் குறைந்து விடுகிறது. ஆனால் மாடித்தோட்டம் அமைத்தால் நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு தொடர்ச்சியாக ஆண்டு முழுவதும் காய்கள் கிடைக்கும் வகையில் திட்டமிட முடியும். ஒரு செடி காய்த்து முடிந்ததும் அடுத்த செடியிலிருந்து காய் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள். இதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தினோம். இந்த பணிகளையே இப்போது பேக்கேஜாக செய்து கொடுக்கிறோம்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எங்களது ஊழியர் வாடிக்கையாளர்களின் மாடித் தோட்டங்களுக்கு சென்று அங்கு செடிகள் எப்படி உள்ளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் என அறிக்கை கொடுப்பார். அதுபோல 150 நாட்களில் ஒரு செடி காய்ப்பு முடியும் என்றால் 120 வது நாளில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டல் மெசெஜ் அனுப்புகிறோம்.

தற்போது இதன் அடுத்த கட்டமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விவ சாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன். டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் பூங்காவை பாரமரிப்பதற்கு பதில், அந்த இடங்களில் விவசாய பணிகளில் ஆர்வமுள்ள பணியாளர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்த முறையால் ஊழியர்கள் உற்சாக மடைவதுடன், அவர்களுக்கு பணியிடத் தில் திருப்தியும் கிடைக்கிறது என்பதால் நிறுவனங்களும் இதை ஊக்குவிக் கின்றன. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் நடமாடும் ஆர்க்கானிக் மையம் என வாகனங்களில் மாடித்தோட்ட பொருட்களை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம். இப்போது இந்த வேலைகளில் சுமார் 15 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளேன்.

எல்லோருக்கும் தெரிந்த வழக்கமான ஒன்றுதானே என யோசித்தால் இதிலிருந்து எனக்கு எந்த வருமானமும் கிடைத்திருக்காது. இதில் புதிதாக என்ன செய்யலாம் என யோசிப்பதால்தான் முடிவதால்தான் தொழிலாக செய்ய முடிகிறது என்றார். பசுமைப் பணியில் புதிய யோசனைகளோடு இறங்கினால் வருமானம் நிச்சயம் என்று சொல்லாமல் சொல்கிறார் மாதவன்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-பசுமைப்-பணியில்-புதிய-யோசனைகள்/article9612819.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: மாத்தி யோசித்தால் மகத்தான வருமானம்

unnal_coconut_suga_3152787f.jpg
 
 
 

விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்கிறபோதுதான், அதற்கான உழைப்பின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை. அந்த முயற்சிகளில் இறங்குகிறபோது விவசாயிகளும் தொழில்முனைவோராக மாறுகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாயிகள் பலரும் மதிப்புக் கூட்டல் தொழில்முனைவோராக உள்ளனர். அதில் ஒருவர்தான் உடுமலைப்பேட்டை சித்தார்த். தென்னை பதநீரிலிருந்து சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘`வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

நான் பொறியியல் படிப்பும், என் தம்பி கௌதம் எம்பிஏவும் படித்துவிட்டு கோவையில் வேலை செய்து கொண்டிருந்தோம். எங்களது நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதன் பலன் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. தென்னையில் பலரும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் நாமும் ஏதாவது தயாரிப்பில் இறங்கலாம் என யோசித்தோம். அதற்காக தென்னை சார்ந்த தயாரிப்புகள் குறித்த தேடலில், தென்னைச் சர்க்கரை தயாரிக்கலாம் என முடிவெடுத்தோம். தென்னையிலிருந்து பதநீர் எடுத்து அதிலிருந்துதான் இந்த சர்க்கரை தயாரிக்க முடியும். இந்த முயற்சிக்கு தென்னை மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களும் கிடைத்தன.

சோதனை முயற்சியாக முதலில் 10 மரங்களில் மட்டும் பதநீர் எடுத்தோம். தொடங்கினோம். நாட்டுச் சர்க்கரைப் போலத்தான் இதன் தயாரிப்பு முறை என்றாலும், தென்னம் பதநீருக்கான பக்குவம் வேறு என்பது எங்களுக்கு பிடிபட ஒரு ஆண்டு ஆனது. பதம் கொஞ்சம் முன் பின் ஆனாலும் நாம் எதிர்பார்க்கும் தரம் கிடைக்காது. பாரம்பரிய தொழில்நுட்பம்தான் என்றாலும், நவீன சாதனங்களையும் பயன்படுத்தினோம். முக்கியமாக யாரிடமும் போய் கற்றுக் கொள்ள முடியாத சூழலில் நாங்களே எல்லா தவறுகளையும் செய்து அதிலிருந்து கற்றுக் கொண்டோம்.

ஆரம்பத்தில் இதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கோயம்புத்தூரில் முக்கிய கடைகளில் இதை விற்பனைக்கு கொண்டு சென்றோம். தொடர்ச்சியாகக் கிடைக்குமா என்பதும், பெரிய உற்பத்தியாளரா என்பதும் முதல் கேள்வியாக இருந்தது. இதற்கு பிறகு உற்பத்தியை அதிகப்படுத்தியதுடன் டெட்ரா பேக் முறையில் பேங்கிங்கிலும் நவீன வடிவம் கொடுத்தோம். தற்போது கோயம்புத்தூரிலேயே ஆர்கானிக் கடைகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம். தற்போது ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்தும் வருகிறோம்.

தொடக்க முயற்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தென்னம்பதநீர் எடுப்பதை 60 மரங்களுக்கு என அதிகரித்தோம். இதிலிருந்து சேகரிக்கப்படும் பதநீரைக் கொண்டு மாதத்துக்கு 400 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். சராசரியாக இதன் விலை தற்போது ரூ.400 வரை விற்பனை ஆகிறது. எல்லா வகையிலான செலவுகள் போக விவசாயிகளுக்கு லாபம் நிச்சயம் என்பதை எங்களது அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும். முதலில் எங்கள் வேலைகளினூடே பகுதி நேரமாக இதற்கான வேலைகளைச் செய்தோம். தற்போது முழுமையாக கவனம் செலுத்துகிறோம்.

இந்த தொழிலில் இறங்க அதிக தென்னைமரங்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. குறைந்தபட்சம் 10 மரங்கள்கூடபோதும். அந்தந்த பகுதியிலேயே தொடங்கலாம். ஆனால் பதநீர் இறக்குவதற்கான அனுமதி, தென்னை வாரிய வழிகாட்டுதல்கள் தேவை. தவிர உணவுதர சான்றிதழும் வாங்க வேண்டும்.

இப்போது தென்னை பதநீர் இறக்க 5 நபர்களும், உற்பத்தியில் ஐந்து நபர்களும் உள்ளனர். எங்களது இந்த முயற்சிகளுக்கு வீட்டில் உள்ளவர்களது முழு ஒத்துழைப்பும் கிடைக்கிறது. தேங்காய், இளநீர் விற்பனை மூலம் கிடைக்காத வருமானம் இதன் மூலம் கிடைப்பதால் அப்பாவும் உற்சாகம் தருகிறார்.

அடுத்த தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபடும்போது அதை வேறு வகையில் கொண்டு செல்ல முடியும் என்பதுதான் எங்கள் அனுபவத்தில் மூலம் சொல்ல வருவது என்றார். எல்லா பகுதிகளிலும் இளைஞர்கள் இந்த வகையில் முயற்சித்தால் மதிப்பு கூட்டு தொழிலிலும் மகத்தான வருமானம் பார்க்கலாம்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: புது முயற்சிகளே நம் அடையாளம்

unnal_3155143f.jpg
 
 
 

உணவு தயாரிப்பு துறையில் பிராண்டை உருவாக்குவது எளிதானதல்ல. சுகாதாரம், தரம், சுவை என எல்லாம் இருந்தாலும் உள்ளூர் சந்தையை சமாளிக்க வேண்டியிருக்கும். அதிலும் அன்றாட உணவு தயாரிப்பு எனில் சரியாக திட்டமிடவில்லையென்றால் இழப்புதான் மிஞ்சும். ஆனால் இட்லி தயாரிப்பில் 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளதுடன், தினசரி 20 ஆயிரம் இட்லிகள் தயாரிக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா.. அதை சாதித்துள்ளனர் மூன்று சகோதரர்கள். சென்னை மறைமலை நகரில் நலா என்கிற பிராண்டில் இட்லி தயாரித்து வரும் இவர்களது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

எங்களுக்குச் சொந்த ஊர் திருச்சி என தொடங்கினார் பாஸ்கர், ``நான் டெக்ஸ்டைல் டிசைன் படித்துவிட்டு கரூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்தேன். ஆனால் வேலைக்கேற்ற வருமானம் இல்லை என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். இங்கு வந்து டிசைனிங் சார்ந்த வேலைகளுக்கான முயற்சிகளில் இருந்தபோதுதான் இட்லி தயாரிக்கும் வேலைக்கான வாய்ப்புகள் உருவானது.

மறைமலைநகர் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு, செங்கல்பட்டிலிருந்து குஷ்பு இட்லி என்று தயாரித்து வந்து கொடுப்பார்கள். கடைக்காரர்கள் அதை வாங்கி சிறு லாபம் வைத்து விற்பனை செய்வார்கள். இதையே நாம் செய்தால் என்ன என தோன்றியது. இதற்காக என் அம்மாவை சென்னைக்கு வரவழைத் தேன். என் சித்தி வேலை செய்த உணவகத்திலேயே தினசரி 200 இட்லிக்கு ஆர்டர் பிடித்து கொடுத்தார்.

வீட்டுக்குச் சமைப்பதுபோலவே தினசரி வேலைகளைத் தொடங்குவோம். ஒரு கிரைண்டர், ஒரு காஸ் அடுப்பு, அம்மாவும் நானும் காலையிலேயே வேலைகளைத் தொடங்கிவிடுவோம். ஆரம்பத்தில் 200 இட்லியாக இருந்த எங்கள் தயாரிப்பு அதற்கடுத்து சின்ன சின்ன கடைகள், கேட்டரிங் என ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கடுத்து தம்பிகளும் சென்னை வந்தனர்.

காலையில் வேலைகளைத் தொடங்கி னால், குடும்பத்தினர் அனைவரும் மூன்று ஷிப்ட்களாக வேலை பார்ப்போம். ஒரு கட்டத்தில் இந்த பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்களிலிருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கின. இதற்காக நிறுவனமாக செயல்படத் தொடங்கினோம்.

இப்போது எங்களிடம், பெரிய ஓட்டல் கள் முதல், சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்கள்வரை இட்லி வாங்கு கின்றனர்.

இட்லி உப்பலாக வர வேண்டும் என் பதற்காக மாவில் எந்த விதமான ரசாயனங் களையும் நாங்கள் கலப்பதில்லை. அதே நேரத்தில் இட்லி சுவையிலும் அளவிலும் சமரசம் செய்து கொள்வதில்லை. முக்கியமாக எங்களது இட்லியை மூன்று நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.

எனது டிசைனிங் அனுபவத்தைக் கொண்டு எங்களுக்காகவே இயந்திரத்தை வடிவமமைத்து, ஹைதராபாத்திலிருந்து செய்து வாங்கினோம். இட்லி தவிர, மாவு விற்பனையும் நடக்கிறது. இப்போது எங்களது தயாரிப்பை முழுவதும் இயந்திர மயமாக்கியுள்ளோம் என்றார்.

“ஆனால் அதைவிடவும் முக்கியமாக இட்லியில் புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டதுதான் இப்போது எங்களை அடையாளப்படுத்தி வருகிறது” என்று தீபக்ராஜ் தொடங்கினார்.

அம்மா, அப்பா பெயர்களின் எழுத்துகளைக் கொண்டு, நலா என்கிற பெயரில் மசாலா இட்லி அறிமுகப் படுத்தியுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொடி இட்லி, சில்லி இட்லி, சில்லி ப்ரை இட்லி என பல வெரைட்டிகளில் இப்போது தயாரிக் கிறோம். ‘ஜங்க் உணவுகளுக்கு மாற்றாக இருப்பதாக பலரும் விரும்பி வாங்குகின்ற னர். கடைக்காரர்கள் அவர்கள் தயாரித்து விற்றால் என்ன லாபம் கிடைக்குமோ அதே லாபம் எங்களது இட்லியை வாங்கி விற்பதால் கிடைத்துவிடும். இட்லிக்குத் தேவையான சாம்பார், சட்னி வகைகளை தயாரித்துக் கொண்டால் மட்டும் போதும்.

சமீபத்தில் பணமதிப்பு நீக்க நட வடிக்கை எங்களை அதிகமாக பாதித்தது. தவிர ஐடி நிறுவனங்கள் தங்களது கிரெடிட் காலத்தை 90 நாட்களுக்கு அதிகரித்துள்ளன. இந்த பிரச்சினைகள் தவிர எங்கள் உழைப்புக்கு மக்களிடம் உள்ள வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது என்றார் இவர்.

நாம் அடுத்த வேளை சாப்பிடப்போகும் இட்லி இவர்கள் தயாரித்ததாகவும் இருக்கலாம்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-புது-முயற்சிகளே-நம்-அடையாளம்/article9642833.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

47 minutes ago, Athavan CH said:

உன்னால் முடியும்

ஆதவன் மேலே போட்ட பச்சை மேலுள்ள பதிவுக்கானது இல்லை. நீங்கள் இணைக்கும் மொத்த பதிவுகளுக்குமானது. இங்கிருந்து ஒருவராவது தனது வாழ்க்கையை மேம்படுத்த ஒரு உதாரணத்தை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேற எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ன்னால் முடியும்: சமூக தொழில்முனைவில் புது முயற்சிகள்

unnal_3157528f.jpg
 
 
 

இயற்கை வாழ்வியல் குறித்த தேடலும், தற்சார்பு பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வும் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. அதனையொட்டி பல வகைகளில் மாற்று முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் தற்சார்பு நோக்கம் மட்டுமில்லாமல், சமூக தொழில்முனைவு முயற்சிகளும் நடக்கின்றன. அந்த வகையில் சமூக தொழில்முனைவாக ‘ஆம்பல்’ என்கிற பெயரில் இயற்கை வழி குளியல் சோப்புகளை தயாரிக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாஸ்கர் ஆறுமுகம் தனது அனுபவத்தை ‘வணிக வீதி’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

சென்னை எஸ்ஆர்எம் வள்ளியம்மை கல்லூரியில் எம்சிஏ படித்தேன். ஆனால் ஆர்வம் என்னவோ விவசாயத்தில்தான். படிக்கும் காலத்தில் கிடைத்த தொடர்புகள் மூலம் இயற்கை விவசாய தேடல் உரு வானது. அங்கிருந்து வானகம் அமைப் பின் தொடர்பு கிடைத்தது. அதற்கடுத்து விவசாய துறையில் ஆராய்ச்சி மேற் படிப்பு படிக்கவும் ஆயத்தமாக இருந்தேன். ஆனால் எனது தீவிர இயற்கை விவ சாய ஆர்வத்தால், முழு நேரமாக அந்த அமைப்பின் முயற்சிகளில் பங்கெடுக்க லானேன். எனது பொருளாதார தேவை களுக்காக சிறிய அளவில் சிறுதானியங் களை மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தேன். ஆனால் நான் அறிவியல் மாணவன் என்பதால் குளியல் சோப்புகளின் தேவையை நண்பர்கள் என்னிடம் வலியுறுத்தினர்.

ஏற்கெனவே பலரும் மாற்று முயற்சியாக குளியல் சோப்புகளை தயா ரித்து வருகின்றனர். ஆனால் இதற்கான மூலப்பொருட்களில் ரசாயனம் கலக்கவே செய்கின்றனர். தவிர மூலப் பொருட்களான எண்ணெய் உள்ளிட்டவற்றை சந்தையில் கிடைப்பதை வைத்தே செய்கின்றனர். இதனால் விலை அதிகமாக விற்க வேண்டும் என்பதுடன், வழக்கமான சோப்பு என்கிற முறையிலேயே இருக்கும். மாற்று வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்காது. இந்த நிலையில்தான் நான் அந்த முயற்சிகளில் இறங்கினேன்.

ஏற்கெனவே இயற்கை வாழ்வியல் நண்பர்களின் தொடர்புகள் இருந்ததால் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களை நேரடியாக விவசாயி களிடமிருந்தே வாங்கினேன். இதற்கான அச்சு உள்ளிட்ட உபகரணங்களை ‘வானகம்’ குமார் அம்பாயிரம் ஏற்பாடு செய்தார். 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வீட்டிலேயே தயாரிக்கத் தொடங்கினேன். சுமார் ஒரு வருடம் முழுதாக இதற்கான பரிசோதனை முயற்சிகளுக்கு செலவிட்டேன்

சோப்பை, கிணற்று நீர், ஆற்று நீர் என பல வகையான தண்ணீரிலும் பயன்படுத்திப் பார்ப்பது, மூலப் பொருட்களின் சேர்க்கை விகிதாச்சாரம், அந்த ஒரு ஆண்டில் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தியவர்கள் சொன்ன கருத்துகள், பிரபல சோப்பு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் கொடுத்த ஆலோசனைகள் என சோப்பை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டேன்.

தற்போது கத்தாழை, சந்தனம், எலுமிச்சை மற்றும் பப்பாளி என நான்கு வகைகளில் குளியல் சோப்பு தயாரிக்கிறேன். இவற்றில் எதிலும் ரசாயன ங்கள் சேர்ப்பதில்லை. எறும்புகள்கூட சோப்பை மொய்க்கிறது என்று பயன்படுத்தியவர்கள் குறிப்பிடுகின்றனர். சித்த மருத்துவ நண்பர்கள் உலர் சருமத்துக்குப் பயன்படுத்தும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது மாதத்துக்கு 3000 சோப்புகள் தயாரித்தாலும், இதற்காக தனியாக மார்க்கெட்டிங் முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை முழுவதும் நண்பர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களது தொடர்பில்தான் விற்பனை செய்து வருகிறேன். திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் முகவர்களும் உள்ளனர். சமூக வலைதளங்கள் வழியாக பலரும் தொடர்பு கொள்கின்றனர்.

அவர்களுக்கு விற்பனை செய்வதற்கு ஆர்வம் இருந்தாலும், அவர்கள் சொந்தமாக தயாரித்து அதை விற்பனை செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிக் கிறேன். ஏனென்றால் ஆரம்பத்தில் நமது தேவைகளுக்கு நாமே முயற்சித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் நானும் இந்த முயற்சியில் இறங்கினேன். ஆனால் இன்று இதுவே ஒரு தொழிலாக உருவாகியுள்ளது. வருமானத்தையும் அளித்து வருகிறது.

பொருளை விற்பதுடன் எனது அனுபவத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு மாற்று முயற்சிகளையும், சமூக தொழில்முனைவாக அந்தந்த ஊர்களிலேயே இளைஞர்கள் செய்வதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான் தற்சார்பு பொருளாதார முயற்சிகளும் வெற்றிபெறும் என்கிறார் இவர்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-சமூக-தொழில்முனைவில்-புது-முயற்சிகள்/article9659451.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியவரின் கோழித்தொழில் கொழிக்கிறது!

முப்பது ஆண்டுக்கு முன்னால் ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் கோழித்தொழி்லைத் தொடங்கினார் பி.சௌந்தரராஜன். இப்போது 5500 கோடி ரூபாய் தொழில் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய வளர்ச்சிக்குப் பின்னால் சுகுணாவின் நிர்வாக இயக்குநரான சௌந்தரராஜனுக்கு உறங்கக்கூட நேரம் இருக்காது என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் இதற்கு மாறாக தினமும் விரைவாகவே படுக்கைக்குக்குச் சென்று எட்டுமணி நேரம் நிம்மதியாக உறங்குகிறார். இரவு எட்டரை மணிக்குப் படுப்பார். காலையில் ஐந்துமணிக்கு எழுந்துகொள்வார்.

http://www.theweekendleader.com/admin/ckfinder/core/connector/upload/images/jul3-15-suguna1.jpg

1990-ல் சௌந்தரராஜனும் அவரது சகோதரரும் ஒப்பந்த பண்ணை முறையை முதன்முதலாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தனர்


’’மறுநாள் நன்றாக வேலை செய்யவேண்டுமென்றால் முதல் நாள் உறக்கம் மிக முக்கியம். படுக்கையில் படுத்தால் அரை நிமிட நேரத்துக்குள் தூக்கம் வந்துவிடும்,’’ என்கிறார் 53 வயதாகும் இந்த முதல் தலைமுறைத் தொழிலதிபர். இவர்  கோவையிலிருந்து 70 கிமீ தள்ளி உடுமலைப்பேட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

சௌந்தரராஜனின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். தந்தையின் சொல்படி பதினோராம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு பண்ணைவேலைகளுக்கு வந்துவிட்டவர் இவர். சொந்த உழைப்பில் உயர்ந்த இவர் எதையும் முழுமையாகச் செய்யவேண்டும் என்று விரும்புபவர்.

 

‘’சுயமாக எதையாவது செய்யச்சொன்னார் என் தந்தை. நான் விவசாயம் செய்ய விரும்பினேன். கல்லூரிக்குப்போய் பட்டம் பெற்றால் வேலை தேடி அலைந்துகொண்டிருப்பேன் என்று அவர் நினைத்தார்,’’ என்கிற சௌந்தரராஜன், முதல் மூன்று ஆண்டுகள் காய்கறி சாகுபடி செய்தார்.
 

அவருக்கு விவசாயத்தில் 2 லட்சரூபாய் நஷ்டம். கோவையில் ஒரு பர்னிச்சர் கம்பெனியில் ஒன்றரை ஆண்டுகள் சம்பளமில்லாமல் வேலை செய்தார். ஆந்திராவில் விவசாய மோட்டார் கம்பெனி ஒன்றின் விற்பனையைக் கவனிப்பதற்காக ஒரே ஆளாக ஹைதராபாத் சென்றார்.

’’எனக்கு தெலுங்கு, ஆங்கிலம் எதுவும் தெரியாது. ஆனாலும் ஆந்திரா முழுக்க பயணம் செய்து பம்புகள் விற்றேன். விற்பனை, சந்தைப் படுத்தல், கணக்கீடுகளில் எனக்கு நல்ல அனுபவம் கிட்டியது.

‘’ஆனால் அந்த நிறுவனத்தில் வேலை நிறுத்தங்கள் நடந்தன. மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி பண்ணும் அளவுக்கு உற்பத்தி செய்யமுடியவில்லை. எனக்கு ஆர்வம் போய்விட்டது. வேலையை விட்டுவிட்டேன்,’’ என்கிற சௌந்தரராஜன் கிராமத்துக்கே திரும்பினார். தம்பி சுந்தரராஜனுடன் இணைந்து  கோழித்தொழிலைத் தொடங்கினார்.

முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சௌந்தரராஜன் கோவையில் அமர்ந்து ஒட்டு மொத்த நிறுவனங்களின் செயல்பாட்டை கவனிக்கிறார். கோழிப்பண்ணைகளுடன் சுகுணா புட்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனமும் இதில் அடக்கம்.

 “சுகுணா புட்ஸ் இந்த குழுமத்தின் வருமானத்தில் 98 சதவீதம் பங்களிக்கிறது. இந்தியாவில் 23000 பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதாக உள்ளது,’’ என்கிறார் அவர்.

’’நாங்கள் கிராமப்புற இந்தியாவுக்கு சக்தி ஊட்டுகிறோம். எங்கள் தொலைநோக்குத் திட்டம் பெருமளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்று சொல்வதில் பெருமை அடைகிறோம்,’’ என்று இவர்களின் இணைய தளம் பறை சாற்றுகிறது.


1984ல் இருந்து கோழித்தொழிலில் இருந்துவந்தாலும் 1990ல் தான் சௌந்தரராஜனும் அவரது சகோதரரும் ஒப்பந்தமுறையில் கோழித்தொழில் செய்வதை அறிமுகப்படுத்தினார்கள்.

இந்த முறையில் பண்ணையாளர்கள் நிலத்தில் கோழி வளர்க்கத் தேவையான கட்டமைப்பை வைத்திருப்பார்கள். சுகுணா நிறுவனம் குஞ்சுகள், உணவு, மருந்துகளை அளிக்கும்.

எட்டாயிரம் சதுர அடியில் 5000 பறவைகளை வளர்க்க கூடம் அமைக்கவேண்டும். உணவு, நீர் பாத்திரங்கள் எல்லாம் சேர்த்து இதற்கு அந்த காலகட்டத்தில் 1.2 லட்சரூபாய் செலவாகும். இரண்டு ஆண்டில் இந்தப் பணத்தைத்திருப்பி எடுத்துவிடலாம். ஒவ்வொரு 45 வது நாளையொட்டி, பண்ணையாளரிடம் இருந்து கோழியைப்பெற்று, சந்தையில் விற்பார்கள்.  ஒரு கிலோ கோழிக்கு 50 பைசாவீதம் பண்ணையாளருக்குக் கொடுப்பார்கள் (இப்போது கிலோவுக்கு 5 ரூபாய் வீதம் அளிக்கிறார்கள்).

“2-3 பண்ணையாளர்களை வைத்து உடுமலைப்பேட்டையில் இதைத்தொடங்கினோம். அடுத்த இரண்டு ஆண்டுகள் நாங்கள் கற்றுக்கொண்ட ஆண்டுகள். நல்ல குஞ்சுகளை வளர்ப்பது, பண்ணையாளர்களைக் கையாளுவது, அவர்களின் பொறுப்புகளை வரையறுப்பது போன்றவற்றைக் கற்றுக்கொண்டோம்,’’ என்கிறார் சௌந்தரராஜன்

“இந்த முறை விவசாயிகளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. விவசாயத்தில் கிடைத்த நிலையற்ற வருமானத்துக்கு இது பரவாயில்லை என நினைத்தார்கள்.

“இப்போது 5000 பறவைகளுக்கான முதலீடு சுமார் 6 லட்சரூபாய் வரும். சாதாரணமாக மூன்று ஆண்டுகளில் இதைத்திரும்ப பெற்றுவிட முடியும்,’’ என்கிறார் அவர்.

1997-ல் 40 பண்ணையாளர்கள் இருந்தார்கள். அப்போது வியாபாரம் 7 கோடியைத் தொட்டபோது பிரைவேட் லிமிடட் நிறுவனமாக மாறினார்கள்.

“இது தொடர்ந்து செய்யக்கூடிய தொழில்முறை என்பதை உணர்ந்தோம். அதை மேலும் விரிவுபடுத்தினோம். அப்போது எங்களிடம் 25 பேர் வேலை செய்தனர்,’’ என்கிற சௌந்தரராஜன், நிறுவனத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்தி ஹெச்.ஆர், கணக்குகள், உற்பத்தி, விற்பனை போன்ற பிரிவுகளை உருவாக்கினார்.

தமிழ்நாடு முழுக்க பண்ணையாளர்களிடம் தொடர்புகொண்டு, பத்து மாவட்டங்களில் தங்கள் சிறகுகளை சுகுணா விரித்தது. அவர்களின் கோழி மாநிலம் முழுக்க விற்கப்பட்டு, 2000த்தில் அவர்களின் விற்றுமுதல் 100 கோடி ஆனது.

தமிழ்நாட்டைத்தாண்டி ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் கால்பதிக்க அது சரியான தருணமாக இருந்தது. அப்போது ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு சுகுணாவை ஆதரித்தார்.

அதிலிருந்து அவர்களின் வளர்ச்சி வேகமாக இருந்தது. பிற மாநிலங்களிலும் அவர்கள் பரவினார்கள்.

இப்போது சுகுணா 9000 கிராமங்களில் நிலைபெற்றுள்ளது. 18 மாநிலங்களில் 23000 பண்ணையாளர்களுடன் கூட்டணி வைத்துள்ளது. மொத்தமாக 10 கோடி சதுர அடிப் பரப்பளவில் கோழி வளர்க்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு எண்பது லட்சம் கோழிகளை உற்பத்தி செய்கிறார்கள்.

‘’நாடு முழுக்க 250 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் 15-20 தொழிலாளர்கள் உள்ளனர். அணைத்து கிளைகளும் இணையம்மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தொழிலாதார நிர்வாக முறைகளை 2004லேயே நடைமுறைப்படுத்திவிட்டோம்,’’ என்று கூறுகிறார் சௌந்தரராஜன்.
 

பிறந்து ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை சுகுணா பண்ணையாளர்களுக்கு வழங்குகிறது. உணவு, மருத்துவ உதவி, தொழில்நுட்ப உதவியும் வழங்குகிறது. முழுவதும் வளர்ந்த  கறிக்கோழிகளை நாற்பது நாட்களுக்கு பிறகு பெற்றுக்கொள்கிறது.

சராசரியாக ஒவ்வொரு பண்ணையாளரும் 6000 கோழிகளை வைத்திருக்கிறார்கள். உபியில் ஒரு சிலர் 500 கோழிகளும் வைத்துள்ளனர்.

“கோழிகளுக்கு பண்ணையாளர்களின் நேரடி கண்காணிப்பு தேவை. பண்ணையாளர்கள் அல்லாவதவர்கள், தொழில்வாய்ப்பாக இதைச் செய்ய முனைவதை நாங்கள் வரவேற்பது இல்லை,’’ என்கிறார் சௌந்தரராஜன்.

இந்த தொழிலில் இதன்மூலமாக ஒரு சமூகக் கோணமும் உள்ளது. தங்களுடன் தொடர்பில் இருக்கும் பல பண்ணையாளர்களின் வாழ்க்கை உயர்வடைந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

http://www.theweekendleader.com/admin/ckfinder/core/connector/upload/images/jul3-15-suguna2.jpg

புதிய தொழில்துறைகளில் நுழைவது சௌந்தரராஜனின் இப்போதைய திட்டம்

 

”அவர்கள் இப்போது நிரந்தர வருமானம் ஒன்றைச் சார்ந்துள்ளனர். நிரந்தரமில்லாத விவசாய வருமானத்தை மட்டும் சார்ந்திருந்த நிலை போய்விட்டது. நல்ல பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பமுடிகிறது. மகள்களுக்கு திருமணம் செய்ய பணம் வைத்திருக்கிறார்கள். இது எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது,’’ என்று அவர் சொல்கிறார்.
 

கோழிகளின் கழிவு விவசாய உரமாகப் பயன்படுவது இன்னொரு பலன் ஆகும். இதன்மூலம் வேதியல் உரங்களின் பயன்பாட்டுச்செலவு குறைகிறது. வருமானமும் அதிகரிக்கிறது.

இந்தியாவில் கோழித்தொழிலில் 18 சதவீதம் சுகுணாவின் கையில் உள்ளது. தங்களின் 250 சுகுணா டெய்லி கடைகள் மூலம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் விற்பனை செய்கிறார்கள். ஆனால், “இந்தியர்களில் 98 சதவிதம் பேர் உயிருள்ள கோழிகளின் இறைச்சியையே விரும்புகிறார்கள்’’ என்று சௌந்தரராஜன் கூறுகிறார்.

பங்களாதேஷில் கோழித்தொழில் துணை நிறுவனம் சுகுணா அமைத்துள்ளது. இருப்பினும் பெரிய அளவில் ஏற்றுமதி சந்தைக்கான திட்டங்கள் இல்லை. தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். ஆண்டுதோறும் 80-100 கோடிகள் வரை ஆண்டு வருமானம் இதில் கிட்டுகிறது.

“இந்த சந்தையில் அமெரிக்கா, பிரேசிலுடன் நாம் போட்டியிட இயலாது. அவர்களே முன்னணியில் உள்ளார்கள். பிரேசிலில் கோழி உற்பத்திச் செலவு குறைவு. ஏனெனில் கோழித்தீவனம், சோளம், சோயா போன்றவற்றின் விலை 20 சதவீதம் குறைவு,’’ என்று அவர்  சொல்கிறார்.

புதிய தொழில்களைக் கண்டறிந்து அவற்றில் நுழைவதன் மூலம் குழுமத்தின் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்வது நிர்வாக இயக்குநராக சௌந்தரராஜனின் இப்போதையத் திட்டம். கோழித்தீவனம், தடுப்பூசிகள், முதலீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் கால்பதித்து இருக்கும் இந்நிறுவனம், மடகாஸ்கரில் தங்கம், இரும்புச் சுரங்கத்தொழிலில் இறங்கத் திட்டமிடுகிறது.


 “புதிய சந்தைகள், புதிய தொழில்களையும், புதிய வாய்ப்புகளையும் புதிய இடங்களையும் ஆராய்ந்து வருகிறோம்,’’ என்கிற சௌந்தரராஜன் புகழ்பெற்ற நிறுவனங்களின் கல்வி வகுப்புகளில் தொடர்ச்சியாக படித்து தன் அறிவை வளப்படுத்திக்கொள்கிறார்.

கல்லூரிக்குச் செல்லவில்லை என்ற வருத்தம் அவருக்கு இல்லை.
“பட்டம் பெறாத நிலையிலேயே தொழில் தொடங்கியவன் நான், அதுவும் ஒரு விதத்தில் நல்லதே,’’ என்கிறார்.

குடும்பத்துடன் கோவையில் வசிக்கிறார் சௌந்தரராஜன். அவரது மனைவி குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறார். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகன் இரு ஆண்டுகளுக்கு முன் பிகாம் முடித்துவிட்டு தொழிலில் தந்தைக்கு உதவியாக உள்ளார்.

குடும்பத்துடன் கோவை அருகே மேற்கு மலைத்தொடரில் ட்ரெக்கிங் செல்வது அவருக்குப் பிடிக்கும். “ஒவ்வொரு மாதமும் போவோம். குடும்பத்தில் எல்லோருக்கும் இது பிடிக்கும்,’’ என்கிறார். தினமும் நடைப்பயிற்சி, நீச்சலும் உண்டு. மொத்தத்தில் குடும்பப்பாசம் உள்ள, கடுமையான உழைக்கக்கூடிய தொழிலதிபர் சௌந்தரராஜன். தொழில்துறையில் மேலும் மேலும் சுடர்விடும் எல்லா வாய்ப்புகளும் சுகுணா குழுமத்துக்கு இருக்கிறது!

http://www.tamil.theweekendleader.com/Success/69/how-the-poultry-business-that-was-started-with-just-rs-5-000-became-successful.html

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: மக்கள் மனத்தடையில் இருந்து வெளியே வர வேண்டும்

unnal_3159929f.jpg
 
 
 

மாற்று எரிசக்தி பயன்பாட்டை வீடுகளுக்கு அமைத்துக் கொடுப் பதைவிடவும், பள்ளிகள், கல்லூரிகள் அளவில் கொண்டு சேர்க்கும் பணியில் இருக்கிறார் கரூரைச் சேர்ந்த ரமேஷ். பலரும் பயோகேஸ் தயாரிக்கும் சாதனங்களை அமைத்து கொடுத்தாலும், இவர் தயாரிக்கும் கலன்கள் நவீன வடிவில் உள்ளன. மிகச் சிறிய அளவில் டேபிளில் வைக்கும் அளவுக்கு கலன் தயாரித்து கவனத்தைப் பெற்றுள்ள இவரது தொழில் அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம்பெறுகிறது.

“படித்தது பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். படித்து முடித்ததும் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பைபர் மோல்டிங் முறை யில் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம் அது. சில ஆண்டுகளில் அந்த வேலையிலிருந்து விலகியதுடன், அவர்களுக்கே ஜாப் ஒர்க் முறையில் அதைச் செய்து கொடுத்தேன். பைபர் மோல்டிங் முறையில் நீண்ட காலத்துக்கு உழைக்கும் பொருட்களை உருவாக்கலாம். தண்ணீர்த்தொட்டி போன்ற தயாரிப்புகளை வீட்டுக்கு செய்து வைத்தேன். வீட்டில் பயோகேஸ் அமைக்க முடிவு செய்தபோது பைபர் மோல்டிங் முறையில் கலன் செய்தேன். இதைத் தனியாக தொழிலாக செய்தால் என்ன என்கிற யோசனையில்தான் முதலில் இறங்கினேன். ஆனால் பலரும் எனது வடிவமைப்பு முறை நன்றாக இருப்பதாக கூறியதுடன், அவர்களுக்கும் செய்து வாங்கினர்.

பயோகேஸ் தயாரிப்பு தொழில் நுட்பத்தை தேவைகளுக்கு ஏற்ப அமைத்து கொடுப்பததை ஏற்கெனவே தொழிலாக பலரும் செய்து வருகின்றனர். மாற்று முயற்சி என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கலன்களைச் செய்கின்றனர். சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் பீப்பாய், இரும்பு கலன்கள் என்கிற வகையில்தான் தயாரிக்கின்றனர். இவை எல்லாம் ஒரே அளவில்தான் இருக்கும். வாடிக்கையாளரின் தேவை எவ்வளவு என்பதற்கு ஏற்ப இருப்ப தில்லை. தவிர நீண்ட நாட்கள் நீடித்து உழைக்காது. ஆனால் நான் தயாரிக்கும் பைபர் மெட்டீரியல் நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும்.

தவிர ஒவ்வொரு வீட்டுக்கும் எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப பிரத்யேகமாக தயாரிக்க முடியும். முக்கியமாக நவீன வடிவில் ஸ்டைலாகவும் இதை தயாரிக்கிறோம். கசிவுகள் வராது என்பதுடன் பராமரிப்பதும் எளிது.

பயோகேஸ் தொழில்நுட்பத்தின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்வது எளிதானது. சிறிய குடும்பம் முதல் தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்று எரிசக்தி எரிவாயுவை உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனால் மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் பரவலாக செல்லவில்லை. இதனால் இதை விற்பனைக்கு கொண்டு செல்வது சவாலாகவே இருந்தது.

அதனால் இதை முழுநேரத் தொழிலாகக் செய்ய வேண்டுமெனில் ஆய்வு தேவைக்கு ஏற்ப மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் எனத் திட்டமிட்டேன். இதற்காக சிறிய அளவிலான கலன்களை வடிவமைத்துக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளை அணுகிவருகிறேன். இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாவதுடன், புராஜெக்ட் தேவைகளுக்காகவும் வாங்குகின்றனர்.

இந்த தொழிலில் புதிய முயற்சியாக நான் நினைப்பது எனது கலன் வடி வமைப்பு. இதற்காக நான் பலரும் தயா ரிக்கும் கலன்களையும் வாங்கி சோதனை செய்கிறேன். இதற்காக கரூரில் தனியாக ஆய்வகத்தையும் நடத்தி வருகிறேன். அதற்கடுத்து மாணவர்கள் வகுப்பறைக் குள் சோதனை செய்யும் நோக்கில் கொண்டு சென்றதும் முக்கியமானதாகும். இதனால் மாற்று எரிசக்தி குறித்த அறிவை அவர்கள் வகுப்பறைக்குள்ளேயே கற்றுக் கொள்கின்றனர்.

இப்போது 6 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், பலருக்கும் மறைமுக வேலைவாய்ப்பு களை உருவாக்க முடிகிறது. அரசு தரப் பில் இவற்றுக்கு ஊக்கம் அளித்தாலும் மக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தும் அளவிற்கு பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு ஊரிலும் வேலைவாய்ப்புகளை உரு வாக்கும் தொழில் என்றே கருதுகிறேன்.

பயோகேஸ் பயன்படுத்துவது தன்னிறைவான பொருளாதார முயற்சி. மிக எளிதாக தங்களது எரிபொருள் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். ஆனால் வழக்கமான எரிபொருள் பயன்பாட்டில் இருப்பவர்கள் தங்களது மனத்தடையை உடைத்து திரும்ப வேண்டும் என்பதே என் ஆசை” என்றார்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.i

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-மக்கள்-மனத்தடையில்-இருந்து-வெளியே-வர-வேண்டும்/article9675059.ece?widget-art=four-all

 

Link to comment
Share on other sites

கனவை நனவாக்க வயது ஒரு தடை அல்ல!

எந்த வயதிலும் தொழில் தொடங்கலாம். ஸ்டார்ட் அப் என்று சொல்லப்படும் தொழில் தொடக்கங்கள் எல்லாம் இளைஞர்களுக்கு மட்டுமே உரியது, நமக்கெல்லாம் வயதாகி விட்டது என்று நினைப்பவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.

கொல்கத்தாவில் உள்ள ஹெரால்ட் புட் அண்ட் கமாடிட்டீஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய மூவருமே தங்கள் நாற்பதுகளில் தான் இணைந்து தொழில் தொடங்கினார்கள். திவிஜாதாஸ் பந்தோபாத்யாயாவுக்கு 40 வயது. மலாய் ராய்க்கு வயது 50. சத்யானந்தா பட்டாச்சார்யாவுக்கு வயது 42. அவர்கள் தாம் பார்த்துக்கொண்டிருந்த நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு களமிறங்கினார்கள்.

http://www.theweekendleader.com/admin/ckfinder/core/connector/upload/images/jan10-17-herald1.jpg

எழுபது வகைக்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களை ஹெரால்ட் புட் அண்ட் கமாடிடட்டீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு ஏழுகோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. படத்தில் நிறுவனர்களான த்விஜாதாஸ் பந்தோபாத்யாயா(இடது), மலாய் ராய்.(படம்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)


இந்த மூன்றுபேரும் பூடானைச் சேர்ந்த நிறுவனமான டாஷி கமர்ஷியல் கார்ப்பரேஷனுக்காக கொல்கத்தாவில் பணிபுரிந்துகொண்டிருந்தார்கள்.  தங்கள் பிஎப், கிராஜுட்டி பணமான 9 லட்சத்தைத்தான் தொழில்தொடங்க முதலீடாகப் போட்டார்கள்.

’’என் சகோதரர் ஒரு லட்சம் கொடுத்தார். வங்கியில் இருந்து 30 லட்சம் கடன் வாங்கினோம்,’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் பந்தோபாத்யாயா.

சிறிய அளவில் தொடங்கி இன்று 70க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஏழு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நிகழ்த்தி உள்ளது.

அரிசியிலிருந்து செய்யப்படும் ‘கோபிந்தோபாக்’, மாங்காய், சர்க்கரை, வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் பானமான  ‘மாங்கோ பன்னா’ ஆகியவை இந்நிறுவனத்தின் முக்கியப் பொருட்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ’மாங்கோ பன்னா’ பாட்டில்களை இவர்கள் விற்கிறார்கள்.

மூன்று நிறுவனர்களில் ஒருவரான பாட்டாச்சார்யா இப்போது இல்லை. நிறுவனத்தின் வளர்ச்சியைக் காணாமல், நிறுவனம் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் கார் விபத்தில் துரதிருஷ்டவசமாக காலமாகிவிட்டார்.

பந்தோபாத்யாயா இந்திய விமானப்படையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர். அதன் பின்னர் டாஷி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் இளையவர் அவர். இப்போது தொழிலில் எதிர்கொள்ளும் சிரமங்கள் அவருக்குப் பெரியவையே இல்லை. சிறுவயதிலேயே பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

 “என் அப்பா ஒரு கேஸ் கம்பெனியில் வேலை பார்த்தார். அம்மா வீட்டில் இருந்தார். 1978-ல் நான் விமானப்படையில் 18வயதில் சேர்ந்ததுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை,’’ என்கிறார் அவர்.

 “விமானப்படைக்குத் தேர்வானபோது ஷ்யாமா பிரசாத் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். என் சம்பளம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

"நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே என் தந்தையார் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவது அவருக்குச் சிரமமாக இருந்தது

http://www.theweekendleader.com/admin/ckfinder/core/connector/upload/images/jan10-17-herald2.jpg

ராய் மற்றும் பட்டாச்சார்யா இருவரும் பந்தோபாத்யாயாவுக்கு டாஷியில் வேலை பார்க்கும்போது அறிமுகம் ஆனார்கள்.


"எனக்கு முதல்மாத சம்பளமாக 725 ரூபாய் கிடைத்தது. அப்போது அது பெரிய வருமானமே,’’ என்று தெரிவிக்கிறார் பந்தோபாத்யாயா. இப்போது இவருக்கு வயது 56 ஆகிறது.

1993-ல் அவரது விமானப்படை பணி நிறைவுற்றதும் அவர் டாஷியின் கொல்கத்தா அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பொறுப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். ‘விமானப்படையில் வேலைபார்க்கும்போதே தொடர்ந்து படித்தேன். கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றேன். தொழில் நிர்வாகம் பற்றி போதுமான விவரங்கள் தெரிந்திருந்தபடியால் டாஷியில் வேலைக்குச் சேர்ந்தேன்,’’ என்கிறார்  பந்தோபாத்யாயா,

டாஷியில் அவர் ராய் மற்றும் பட்டாச்சார்யாவை சந்தித்தார். அவர்கள் பின்னாளில் அவரது தொழில் கூட்டாளிகள் ஆயினர்.  "எங்கள் மூவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. பட்டாச்சார்யா மிகவும் சுறுசுறுப்பானவர். நாங்கள் சேர்ந்து எதையாவது வெற்றிகரமாக செய்யலாம் என்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர் அவர்தான்,’’ என்கிறார் ராய்.

குடும்பத்தினர் ஆதரவுடன் இவர்கள் மூவரும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு ஹெரால்ட் புட் அண்ட் கமாடிட்டீஸ் நிறுவனத்தை 2000த்தில் தொடங்கினர். 15 பேர் ஆரம்ப கட்ட பணியாளர்கள்.

பாஸ்மதி, கோபிந்தோபோக் என்ற இரு அரிசி ரகங்களை முதலில் அறிமுகப்படுத்தினார்கள். வசுந்தரா என்ற பிராண்ட் பெயரில் ஒரு கிலோ பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்த அரிசி ரகங்கள் நன்றாக விற்பனை ஆயின. மேற்குவங்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொல்கத்தாவின் சுற்றுப்புறங்களிலும் முதலில் தங்கள் பொருட்களை விற்க முடிவு செய்தனர்.

 “நகரத்துக்கு உள்ளே எங்களால் சந்தையில் நுழைய முடியவில்லை. பெரிய பிராண்டுகள் இருந்தன. போட்டி குறைவாக இருந்த கிராமபுறப் பகுதிகளில் கவனம் செலுத்தினோம். இந்த திட்டத்துக்குப் பலன் இருந்தது,’’ என்கிறார் ராய்.

பிப்ரவரி 2001-ல் உணவுப்பதப்படுத்தும் தொழிலிலும் நுழைந்து ஜாம், ஜெல்லி, கெட்சப், ஊறுகாய் ஆகியவற்றை விற்க ஆரம்பித்தனர். கம்பெனி வளர ஆரம்பித்தபோதுதான் சாலை விபத்தில் பட்டாச்சார்யா காலமானார்..

http://www.theweekendleader.com/admin/ckfinder/core/connector/upload/images/jan10-17-herald3.jpg

15 தொழிலாளர்களுடன் தொடங்கிய இந்நிறுவனத்தில் 67 பேர் பணிபுரிகிறார்கள்.


 “அவரது மரணம் எங்களுக்கு பின்னடைவே. ஒரு நல்ல நண்பன், நம்பிக்கையுள்ள தொழில் கூட்டாளி, உண்மையான ஆலோசகர் என்று ஒருங்கிணைந்த ஒருவரை இழந்தோம். நாங்கள் அவரது கனவை நனவாக்க முடிவு செய்தோம்,’’ என்கிறார் பந்தோபாத்யாயா. பட்டாச்சார்யாவின் மகன் சதாடால் இப்போது இந்நிறுவனத்தில் சீனியர் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ஆகப் பணிபுரிகிறார்.

2003 வரை தங்கள் தயாரிப்புகளை வெளியே இருந்து பெற்றுக்கொண்டிருந்தனர். பின்னர் நிறுவனத்திலேயே தயாரிக்க ஆரம்பித்தனர்.

30 லட்ச ரூபாய் பணம் எந்திரங்கள் வாங்க கூடுதலாக முதலீடு செய்யப்பட்டது, இதில் 5 லட்சரூபாய் பங்கு முதலீடாகவும் மீதிப்பணம் வங்கிக் கடனாகவும் பெறப்பட்டது.

"2003-ல் நாங்கள் தயாரித்து அறிமுகம் செய்த பானமான  ‘மாங்கொ பன்னா’ இன்று சந்தையில் முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பாட்டில்கள் விற்கிறோம். மாநிலத்தில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. சில சமயங்களில் எங்களால் சப்ளை பண்ண முடியாத அளவுக்குத் தேவை உள்ளது,’’ என்று கூறுகிறார்கள் இருவரும்.

கொல்கத்தாவின் புறநகர்ப்பகுதியில் அரை ஏக்கர் நிலம் 27 லட்ச ரூபாயில் 2009-ல் வாங்கி தங்கள் உற்பத்தியை பெருக்கினர். இப்போது ஹெரால்ட் நிறுவனத்தில் 56 பேர் வேலை பார்க்கிறார்கள். 110 விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள்.

இரு நிறுவனர்களும் ஒவ்வொரு மாதமும் சம்பளமாக 30,000 ரூபாய் எடுத்துக்கொள்கிறார்கள். மீதிப்பணம் தொழிலிலேயே போடப்படுகிறது.

http://www.theweekendleader.com/admin/ckfinder/core/connector/upload/images/jan10-17-heraldson.jpg

ஹெரால்டின் மூன்று நிறுவனர்களில் ஒருவரும் நிறுவனம் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட்டவருமான பட்டாச்சார்யாவின் மகன் சதாடால்(மையத்தில்) இப்போது இந்நிறுவனத்தில் சீனியர் மார்க்கெடிங் எக்ஸிக்யூட்டிவ் ஆக இருக்கிறார்.


பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 400 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தொழில்துறைப்பயிற்சியும் வழங்கி உள்ளனர். அது அவர்களின் சமூக நலத்திட்ட பங்களிப்பாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

 “எங்கள் கதையை மாணவர்களுக்கு நாங்கள் சொல்வோம். வெற்றிக்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களைச் செல்கிறோம். வயதான பின்னும்கூட தொழில் தொடங்கி வெற்றிபெற முடியும். வெற்றிக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்துகிறோம்,’’ என்கிறார் பந்தோபாத்யாயா.

வாசனைப்பொருட்கள் விற்பனையில் முதலீடு செய்வதுதான் எதிர்காலத் திட்டம் என்று சொல்கிறார்கள் இருவரும். அத்துடன் பீஹார், ஜார்க்கண்ட், ஒடிஷா போன்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்தும் திட்டமும் இருக்கிறது என்று முடிக்கிறார்கள் அவர்கள்.

http://www.tamil.theweekendleader.com/Success/57/even-in-your-forties-you-can-start-a-business-and-become-a-successful-businessman.html

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: காலத்துக்கேற்ற தொழில்..

unnal_3162155f.jpg
 
 
 

திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் உறவினர் கள், நண்பர்களுக்கு திரும்பிச் செல்கையில் தாம்பூல பை கொடுப்பது மரபு. அதில் இனிப்புகள் அல்லது தேங்காய் கொடுப்பதுதான் பொதுவான பழக்கம். கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த தாம்பூல பைகளில் கொடுக்கப்படும் பொருட் களும் மாறுகின்றன. சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்குவதும் நடக்கிறது. அதில் வித்தியாசமாக மரபு ரக காய்கறி விதைகள் கொண்ட தாம்பூல பை என்கிற முயற்சியை எடுத்து அதை பரவலாக்கி வெற்றிபெற்றவர் பரமேஸ்வரன். இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

பி.இ. ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படித்தேன். ஆனால் வேலைக்குச் செல்வது ஏனோ பிடிக்கவில்லை. அப்பா வுடன் வீட்டு விவசாய வேலைகளில் இறங்கினேன். நான் விவசாய வேலை களில் ஈடுபட்டது அவருக்குப் பிடிக்க வில்லை என்றாலும் வேறு வழியில் லாமல் சகித்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் அவருடன் விவசாய வேலைகளைக் கவனித்ததில் நஷ்டம் எதனால் ஏற்படுகிறது என்பதைக் கணிக்க முடிந்தது. இதனால் விவசாய முறையை மாற்றுவதற்கான தேடலில் இறங்கினேன். இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு களுக்குச் சென்றதன் மூலம் தெளிவு கிடைத்ததுடன், விவசாயம் சார்ந்த தொழிலை உருவாக்கிக் கொள்வதற்கான அனுபவ அறிவும் கிடைத்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் எங்களது விவசாய நிலத்தில் லாபத்தைக் கண்டோம். தவிர வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது உள்ளிட்ட வேலைகளையும் கற்றுக் கொண்டு பிறருக்கு அமைத்து கொடுக்கத் தொடங்கினேன். நான் வேலைக்கு போய் சம்பாதித்தால் என்ன வருமானம் கிடைத்திருக்குமோ அதே அளவு வருமானம் இந்த வேலைகளிலிருந்தும் கிடைக்கத் தொடங்கியது. இதனால் எனது குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கத் தொடங்கியதுடன், எனது வேலைகளிலும் பங்கெடுக்கத் தொடங்கினர்.

எனது அடுத்த முயற்சியாக பாரம்பரிய விதைகளைச் சேகரிப்பது, பாதுகாப்பது, பிறருக்கு கொடுப்பது என்கிற நோக்கில் விதைகள் வங்கி உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். ஏனென்றால் மக்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும் அளவுக்கு அதைச் செயல்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் உருவாக வேண்டும். இதற்காக ஆர்வம் உள்ளவர்களுக்கு விதைகளைக் கொடுப்பது, விளைவித்த பிறகு அவர்களிடமிருந்தே விதைகளை வாங்கி பாதுகாப்பது இதுதான் விதை வங்கியின் நோக்கம். இதை சமூக வலைதளங்கள் மூலம் இயற்கை விவசாய ஆர்வம் கொண்டவர்களுக்கு கொண்டு சென்றேன்.

தமிழகம் முழுவதும் பல ஊர்களுக்கு பயணம் செய்து நேரிலும் இயற்கை விவசாய ஆர்வலர்களைச் சந்தித்தேன். சிலரது வீடுகளில் தரமான நாட்டு ரகங்கள் விளைந்தால், விதைகளை வாங்கிச் செல்லவும் அழைப்பார்கள். அந்த சமயத்தில்தான் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம் ஒரு நிகழ்ச்சிக்காக தாம்பூல பைகளில் விதைகளைத் தாருங்கள் என கேட்டார். அங்கு வாங்கிச் சென்ற பலரும், அடுத்தடுத்து தங்களது இல்ல நிகழ்ச்சிகளுக்கும் கேட்கத் தொடங்கினர்.

விதைகள் சேகரிப்பில் முக்கியமான விஷயம் அதை முளைப்புதிறனோடுப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நமது பாரம்பரிய விவசாய தொழில்நுட்பங் களைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நான் பல விவசாயிகளுடனும் தொடர்பில் இருக்கிறேன். தற்போது தொடர்ச்சியாக வீட்டில் பயன்படுத்தும் 10 காய்கறிகளுக்கான விதைகள் பை 25 ரூபாய் என்கிற விலையில் கொடுக் கிறோம். விதைகளுக்கான செலவு இருக் காது என்றாலும், அதை உபரியாக உள்ளவர்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்குகிறேன். என் குடும்பத்தினரும் இப்போது இதற்கான விதைகள் விளை வித்து தருகின்றனர். வேலைகளுக்கு ஏற்ப 10 நபர்களுக்கு வேலை வாய்ப்பு களையும் உருவாக்கியுள்ளேன்.

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அதிகரித்து வரும் இந்த நாட்களில் எனது புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நம் மரபு ரக விதைகளை கொடுப்பதன் மூலம் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களுக்கு எளிய வழியில் நாட்டு ரக விதைகள் சென்று சேர்கின்றன. முக்கியமாக மங்கள நிகழ்வுகளில் கொடுப்பதன் மூலம் ஒரே சமயத்தில் அதிகப்படியான மக்களுக்கு விதைகள் சென்று சேர்கின்றன என்றார். நல்ல நோக்கம், அதிலிருந்து வருமானமும் வருகிறது என்றால் மகிழ்ச்சிதானே.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.i

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-காலத்துக்கேற்ற-தொழில்/article9685329.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 4 months later...

அன்று கார் கழுவியவர், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர்

மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் கார் கழுவும் வேலையில் தொடங்கி, தொடர்ச்சியாக சில நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய ஹைதராபாத்தைச் சேர்ந்த பாட்டாலா முனுசாமி பாலகிருஷ்ணா, இப்போது தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ தயாரிக்கும் அக்வாபாட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். வீடுகளுக்கான மற்றும் வணிகத் தேவைகளுக்கு என்று  தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ-க்களை  தயாரித்து விற்கும் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 20 கோடி ரூபாய்.

ஒரு ரூபாயைக் கூட எண்ணி, எண்ணிச் செலவழிக்கும் நிலையில் இருந்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் 34 வயதான பாலகிருஷ்ணா. “நான் 10 ரூபாயை செலவழித்தேன் என்றால், அது என் பெற்றோர் மூன்று லிட்டர் பால் விற்று கிடைக்கும் பணத்தில் இருந்துதான்,” என்று தமது இளமைக் காலத்தை நினைவு கூர்கிறார். 

may21-16-LEAD1.jpg

 

பாலகிருஷ்ணா முதன் முதலில் பெங்களூரில் மாருதி கார் ஷோரூம் ஒன்றில் கார் கழுவுபவராகப் பணியாற்றினார்.


பால்விற்றுச் சம்பாதித்த அதே பெற்றோர், இப்போது பாலகிருஷ்ணா பரிசாகக் கொடுத்த 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டயோட்டா பார்ச்சூன் கார் வைத்திருக்கின்றனர். 

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் சங்கராயாலாபேட்டாவில் உள்ள ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் பாலகிருஷ்ணா, கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்தவர். அவரது தந்தை ஒரு சிறுவிவசாயி. அவர்கள் குடும்பத்தினர் பால் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர்.  
பாலமநேரு அருகில் உள்ள அரசு கல்லூரியில்  ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் (தொழில்நுட்பம்) தொழிற்படிப்பை 1998-99-ல் பாலகிருஷ்ணா முடித்தார். அதன் பின்னர், பெங்களூர் சென்று வேலை தேடுவதற்காக அவருடைய தாய் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பத்து, பத்து ரூபாய்களாக சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை அவருக்குக் கொடுத்தார்.

பெங்களூரில் ஒவ்வொரு ஆட்டோமொபைல் ஷோரூமாக அவர் ஏறி, ஏறி இறங்கினார் ஆனால், யாரும் அவரை மெக்கானிக் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளவில்லை.

கடைசியாக அவர் 2001-ம் ஆண்டில் மாருதி கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற மார்க்கதரிசி மோட்டார்ஸ் என்ற ஷோரூமில் கார் கழுவும் வேலையில் சேர்ந்தார். அங்கு இருந்த 15 வயது பையன்தான் பாலகிருஷ்ணாவை வேலை வாங்கும் பாஸ் ஆக இருந்தான்.

ஆறுமாதங்களுக்குப் பிறகு விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்தபோது, சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகிப் பணிக்கு பாலகிருஷ்ணா விண்ணப்பித்தார். வீடு, விவசாயம், கட்டடம், குடிநீர் விநியோகம், சுரங்கங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான பம்புகளை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அடுத்த மூன்று வருடங்களுக்கும் பாலகிருஷ்ணாவை கடினமான வாழ்க்கைதான் சூழ்ந்திருந்தது. எனினும், அதுதான் அவரின் வளர்ச்சி சார்ந்த வாழ்க்கையாகவும் இருந்தது. திறந்த வெளி ஜீப்கள், ஓட்டை உடைசல் பேருந்துகளில் ஆபத்தான  பயணம் என பம்ப்புகளை விற்பனை செய்வதற்கும், வர்த்தகக் கண்காட்சிகள் நடத்துவதற்கு விளம்பர மேலாளராகவும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்த்தார். பாலகிருஷ்ணாவும், அவருடன் பணியாற்றியவர்களும் நெல்லூர், கடப்பா, சித்தூர் மற்றும் ஆனந்தபூர் மாவட்டங்களில் உள்ள ஊர்களின் நீள, அகலங்களையெல்லாம் தெரிந்து கொள்ளும் வகையில், பம்புகள் விற்பனைக்காக ஊர், ஊராக அலைந்து திரிந்தனர்.  

“அந்த சமயத்தில் எங்களுக்கு ஓய்வு நேரம் எல்லாம் இல்லை. பயணிக்கும் வாகனங்களிலேயே நாங்கள் தூங்குவோம். சிறிய விடுதிகளில் காலையில் குளிப்பதற்காக 50 ரூபாய் கொடுத்து குளிப்போம்,” என்று சொல்லும் பாலகிருஷ்ணாவின் மாத சம்பளம் அப்போது வெறும் 2 ஆயிரம் ரூபாய்தான். மூன்று ஆண்டுகள் கழித்து சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகும் போது, அவருடைய மாதச்சம்பளம் 4,800 ரூபாயாக இருந்தது.

பாயிண்ட் பம்ப்ஸ் எனும் கோயம்புத்தூர் நிறுவனத்தில் மீண்டும் ஒரு பம்ப் விற்பனையாளராக மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்த 6 வருடங்கள் அங்கு பணியாற்றினார். அடுத்ததாக மும்பையைச் சேர்ந்த அடோர் வெல்டிங் லிமிடெட் என்ற வெல்டிங் தயாரிப்பு நிறுவனத்தில், ஆந்திர மாநிலம் முழுவதும் நடக்கும் விற்பனையை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் பணியில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பாலகிருஷ்ணா பணியாற்றினார்.

http://www.theweekendleader.com/tamil/backend/web/article/images/may21-16-LEADclient.jpg

ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வணிக நிறுவனத்துக்கான சுத்திகரிப்பு ஆர்.ஓ டெலிவரிக்கு  தயாராக இருக்கிறது.


ஒரு விற்பனைப் பிரதிநிதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பேசியதில் இருந்து, 2008-ம் ஆண்டில் அனுபவம் எனும் பெரிய சொத்தை பாலகிருஷ்ணா தன்னகத்தே கொண்டிருந்தார்.

இதன் பின்னர், ஹைதராபாத்தைச் சேர்ந்த, தொழிலக காற்று மாசுக் கருவி தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தரான ரிக்கோ இண்டஸ்ட்ரீஸ் என்ற  நிறுவனத்தில் பாலகிருஷ்ணா சேர்ந்தார். ஆந்திர மாநிலம் முழுவதுக்குமான விற்பனையை கண்காணிக்கும் பொறுப்பை வகித்து வந்தார். கோடிரூபாய் மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபடுவார். ஆனால், அதற்கான நற்பெயரை, ஏசி ரூமில் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு பணியாற்றும் ஒரு மூத்த அதிகாரி தட்டிப் பறித்துக் கொள்வார்.

இந்த ஏமாற்றம் காரணமாக, 2011-ம் ஆண்டு இதுபோன்ற அனுபவங்கள் போதுமானது என்று முடிவு செய்தார். அப்போது பாலகிருஷ்ணாவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு முடிந்திருந்தது.  

அந்த நேரத்தில் அவர் பக்குவப்பட்ட விற்பனையாளராக இருந்தார். ஒரு தயாரிப்பை எப்படி விற்க வேண்டும் என்ற உத்திகள் தெரிந்த முழுமையான தொழில்முறை நபராக இருந்தார். தாமே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி துணிந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தார். தாம் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் அவர் இருந்தார்.  

ஒரு உந்துதலின் பேரில், தமது சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொண்டு, பாலகிருஷ்ணா செக்கந்திராபாத் சென்றார். அங்கு உள்ள ஹைதர்பாஸ்தி என்ற இடத்தில் சொந்த அலுவலகம் ஒன்றை அவர் வாடகைக்கு எடுத்தார். அதற்கு  1.3லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்தார். அந்த அலுவலகத்துக்கு மாதம் தோறும் 14 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டி இருந்தது.

ஒரு வழியாக அலுவலகத்துக்கு இடம் பார்த்து விட்டார். ஆனால், அடுத்து இந்த பூமியில் நாம் என்ன செய்யப்போகிறோம்? என்று தன்னைத்தானே அவர் கேட்டுக்கொண்டார். அப்போது அவருக்கு எந்த ஒரு யோசனையும் தோன்றவில்லை.

“எதையாவது தொடங்க வேண்டும் என்று நினைத்தேன்,” என்று சொல்லும் அவர், “எளிதான ஒரு வாய்ப்பு என்பது இருந்தால், ஒரு மனிதனால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பது எனக்குத் தெரியும். எனவே, பானிபூரி விற்பதற்கு கூட தயாராக இருந்தேன்,” என்றார்.

குடிநீர் சுத்திகரிப்பில், ஆர்.ஓ எனப்படும் சவ்வூடு பரவல் முறை(reverse osmosis) தயாரிப்பு தொழிலில் ஈடுபடலாம் என்பது குறித்து பாலகிருஷ்ணாவின் சிறுவயது நண்பரான நவீன் என்பவர், ஆலோசனை சொல்லி இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக அந்தத் தொழில் வாய்ப்புகள் குறித்துத் தெரிந்து கொள்ள, சென்னையில் நடந்த ஒரு ‘வாட்டர்  எஸ்போ’வுக்குச் சென்றார். 

சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனத்தில் பணியாற்றியபோது தம்முடன்  பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், அவரது சொந்த ஊரில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ-வை தயாரித்து வந்தார் என்பதை அறிந்தார். இதையடுத்து பாலகிருஷ்ணா சேலம் சென்று அந்த நண்பரைச் சந்தித்தார்.  

தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ கருவி குறித்து சேலத்தில் நண்பரிடம் மூன்று நாள் சுயமாக பயிற்சி மேற்கொண்ட பிறகு, 20 ஆர்.ஓ கருவிகளுடன் பாலகிருஷ்ணா ஹைதராபாத் திரும்பினார்.

http://www.theweekendleader.com/tamil/backend/web/article/images/may21-16-LEADoffice.jpg

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தபின்னர், பானிபூரி விற்பதற்கு கூட பாலகிருஷ்ணா தயாராகிவிட்டார்

 

பொருட்களை விற்பது, வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவது என பாலகிருஷ்ணனுக்குள் இயல்பாகவே திறமைகள் இருந்தன. ஒரு மாதத்துக்குள் 1.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆர்.ஓ யூனிட்களை விற்பனை செய்தார். இனி இந்தத் தொழில்தான் சந்தையில் நல்ல வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்றும், லாபகரமானது என்றும் அவர் அந்தத் தருணத்தில் உணர்ந்தார்.

அலுவலக அறை வாடகைக்குப் பிடித்ததில் இருந்து இரண்டு மாதங்கள் கழித்து, தம்முடைய தலைமையின் கீழ் அக்வாபாட் ஆர்.ஓ டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை பாலகிருஷ்ணா தொடங்கினார்.

இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆர்.ஓ கருவிகள் தயாரிப்பைத் தொடங்கினார். இன்றைக்கு அவரது ஊழியர்கள் ஹைதராபாத்தின் மூன்று இடங்களில் உள்ளூர் அளவில் ஆர்.ஓ-வை தயாரித்து வருகின்றனர். அவரது டீமில் இருப்பவர்கள், வணிக ரீதியான ஆர்.ஓ-க்களை வாடிக்கையாளர்களின் இடங்களுக்குச் சென்று அமைத்துத் தருகின்றனர்.  

அவரது நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 25-50 சதவிகிதம் என்ற அளவில்  வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது.  

இந்த வளர்ச்சிக்கு காரணங்கள் இருக்கின்றன. ஆர்.ஓ தயாரிப்பு தரத்தில் பாலகிருஷ்ணா, உறுதியாக இருக்கிறார். ஆக்வாபாட் நிறுவனத்தின் ஆர்.ஓ கருவியில் உள்ள 46 உதிரிபாகங்களும் மிகவும் தரமானதாக இருக்கவேண்டும் என்பதிலும் அவர் உறுதியுடன் இருக்கிறார்.  

அக்வாபாட் தயாரிப்புகள் தமிழகத்தில் சென்னை, மதுரையில் விற்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் நான்டெட், கர்நாடகாவில் ஹூப்ளி, பெங்களூர், ஆந்திராவில் திருப்பதி மற்றும் விஜயவாடா, தெலுங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் விற்கப்படுகின்றன.

அக்வாபாட் நிறுவனம் ஐந்து மாநிலங்களில் 54 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு  ஸ்மார்ட்போன், உணவு உள்ளிட்ட வசதிகள், இரவில் பணி முடிய தாமதம் ஆகிவிட்டால் கார் வசதி ஆகியவை அளிக்கப்படுகின்றன. நிறுவனத்தில் பணியாற்றும் நான்கில் மூன்று பேர் நிறுவனம் தொடங்கிய முதல் நாளில் இருந்து பாலகிருஷ்ணா உடன் பணியாற்றுகின்றனர். கடந்த ஐந்து வருடங்களில் அவர்களின் சம்பளம் மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

 

http://www.theweekendleader.com/tamil/backend/web/article/images/may21-16-LEADoverseeing.jpg

அக்வாபாட்டில் 54 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். புகைப்படத்தில்; ஒரு ஊழியர்,  வீடுகளுக்கான 
குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ-வை தயாரித்துக் கொண்டிருப்பதை பாலகிருஷ்ணா கவனிக்கிறார்.

அக்வாபாட் நிறுவனத்துக்கு 20 விருதுகள் கிடைத்துள்ளன. அண்மையில் டெல்லியில் ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று விருதை  வாங்குவதற்காக தமது நிறுவனத்தின் சார்பில் இரண்டு ஊழியர்களை அனுப்பி வைத்தார். அந்த இரண்டு ஊழியர்களுக்கும் பாலகிருஷ்ணா புதிய உடைகள் வாங்கிக் கொடுத்தார். இருவரும் டெல்லிக்கு விமானத்தில் சென்று விருது வாங்கிக் கொண்டு திரும்பினர். 

“அக்வாபாட் நிறுவனத்தில், ஊழியர்களின் முயற்சிகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எங்களின் வெற்றியில் அவர்களும் ஒரு அங்கமாக இருக்கின்றனர்,” என ஊழியர்களும் உள்ளடக்கியதுதான் வெற்றி என்ற தத்துவத்தை பாலகிருஷ்ணா விவரித்தார்.

வெற்றியின் இன்னொரு பக்கத்தில், வாடிக்கையாளர்களும் அக்வாபாட் நிறுவனத்துக்குச் சாதகமான அலைவரிசையில் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த பாலகிருஷ்ணா எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. 30 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாடிக்கையாளர் எடுத்துச் செல்ல மறந்து விட்டபோது, அவர் யோசிக்காமல், உடனே ஒரு ஊழியரிடம் அதைக் கொடுத்து அனுப்பினார். வாடிக்கையாளரிடம் அந்தப் பொருளைக் கொண்டு சேர்க்க போக்குவரத்துக்கு 250 ரூபாய் செலவு ஆனது.

இந்தியாவில் 1,500 ஆர்.ஓ நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றன. இப்போதைக்கு இந்த சந்தையில் அக்வாபாட் முதல் 20 இடத்தில் ஒரு நிறுவனமாக உள்ளது.

“தயாரிப்பின் தரம் மற்றும் நல்ல வாடிக்கையாளர் சேவையின் காரணமாக, நிறுவனத்தின் சீரான வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடிகிறது,” என  பாலகிருஷ்ணா சொல்கிறார்.

சிறிய விஷயம் என்றாலும், பெரிய வேலை என்றாலும், எது ஒன்றையும் செய்து விட முடியும் என்ற அவரது அணுகுமுறையில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.

“என்னைவிட வேறு யாரும் நன்றாக காரைக் கழுவமுடியாது.காரில் ஏற்படும் சிறிய சேதாரம் கூட என்னிடம் இருந்து தப்ப முடியாது,” என உத்தரவாதம் அளிக்கும் அவர்,  ரஹோண்டா பைர்னி எழுதிய தி சீக்ரெட் (The Secret by Rhonda Byrne) போன்ற ஆளுமை முன்னேற்றம் குறித்த புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் உள்ளவராகவும் இருக்கிறார்.  

அக்வாபாட் நிறுவனம் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளிலும் ஈடுபடுகிறது. நெருங்கிய நண்பரும், வியாபாரத்தில் இணைந்திருப்பவருமான நசீர் அஜீஸ் உடன் சேர்ந்து சூரிய சக்தி குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ-வுக்கு  பாலகிருஷ்ணா காப்புரிமை பெற்றிருக்கிறார்.

http://www.theweekendleader.com/tamil/backend/web/article/images/may21-16-LEADout.jpg

இந்த நிதி ஆண்டில், தம் நிறுவனத்தின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று பாலகிருஷ்ணா முடிவு செய்திருக்கிறார்.


சி.எஸ்.ஆர் எனப்படும் பெருநிறுவன சமூக சேவையின் ஒரு அங்கமாக அக்வாபாட் நிறுவனம், மணிக்கு 60 லிட்டர் குடிநீரை ஆர்.ஓ செய்யும் 5 கருவிகளை ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சித்தூர், நல்கொண்டா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாயை இரண்டு மடங்காக‍ அதாவது 45 கோடி ரூபாய்  அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அவர்  நிர்ணயித்திருக்கிறார்.  

இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள கோம்பள்ளி என்ற இடத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வைப்பதற்காக கிடங்கு ஒன்றை பாலகிருஷ்ணா விலைக்கு வாங்கி உள்ளார்.

இப்போது வரை, அவரது வாழ்க்கை நீண்ட கடினமான சாலையாகத்தான் இருந்திருக்கிறது. எனினும், அவர் தன் பயணத்தை நிறுத்தப்போவதில்லை.

http://www.tamil.theweekendleader.com/Success/104/wow-they-sell-1-5-lakh-momos-everyday.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.