Jump to content

பாவம் பெண்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: என்ன செய்வது.. பெண்கள் நிலை பரிதாபமாகத்தான் இருக்கின்றது....அவர்களை எவரும் கண்க்கில் கூட எடுப்பதில்லை.. அவர்களும் பறந்து கூட பார்க்கின்றார்கள்... எதுவும் நடக்குதில்லை... பெண் அடிமை இருந்து கொண்டு தான் இருக்கின்றது... பரிதாபம்... அவர்கள் அடி பட்டா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும்.. ஆம்பிளைகளுக்கு ஆன வண்டிகளில் தான் செல்கின்றார்கள்.... என்ன புரியவில்லையா...

ஒரு ஆம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு...

ஒரு பொம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஒரு பொம்புலன்ஸ் இருக்கா?

என்ன நியாயம் இது... பாவம் இந்த பெண்கள்... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: இதில் ஒரு அர்த்தமோ, அல்லது நகைச்சுவையாக ஏதும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லையே! :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாறி நகைச்சுவைப் பகுதில போட்டிட்டார் போல. கொள்கை விளக்கம் எண்டு தலைப்புப் போட்டிருக்கலாம். தன்ர கொள்கையத் தெளிவா விளக்கியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறி நகைச்சுவைப் பகுதில போட்டிட்டார் போல. கொள்கை விளக்கம் எண்டு தலைப்புப் போட்டிருக்கலாம். தன்ர கொள்கையத் தெளிவா விளக்கியிருக்கிறார்.

''ஏம்மா உன் புருஷனைக் காணோம்றீங்களே ஏதாவது அங்க அடையாளம் சொல்லுங்க!''

''நெத்தியிலே பூரிக் கட்டையாலே அடிச்ச வீக்கம் இருக்கும். முதுகிலும் காலிலேயும் தோசைக் கரண்டியாலே வச்ச சூட்டோட தழும்பு இருக்கும்!''

ஏன் கண்ணப்பன் இதையும் நகைச்சுவை என்று ஏற்றுக் கொண்டு ரசித்தார்கள் தானே. குடும்ப வன்முறைக்கான சித்திரவதைச் சிந்தனையின் வெளிப்பாடு. அது பெண்ணால் ஆண் மீதானதாக இருக்கலாம்..அல்லது ஆணால் பெண் மீதானதாக இருக்கலாம். உரிமைகள் இருவருக்கும் பொது. இருவரும் மற்றவரின் உரிமையை மதிக்கவும் பாதுகாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏன் இதை நீங்கள் பெண்ணாதிக்க கருத்தியலாகக் காணவில்லை.

ஆண் என்றேலே அலேர்ஜி போல பிகேவ் பண்ணும் (எடுத்ததுக்கும் குருட்டுத்தனமான பெண்ணிலைவாதம் பேசும்) பெண்களை அவர் கிட்டலடிக்கிறார். "ஆ"ம்புலன்ஸ் "பொ"ம்புலன்ஸ் என்று...இதில் தவறென்றால் கறுப்பியின் நகைச்சுவை மட்டும் சரியானதோ?? அது பெண்களிடத்தில் வன்முறைக்கான அத்திவாரம்..மனப்பலத்தின் உந்துகோல் என்பீர்கள் போல இருக்குதே. கத்தியால் ஆண் குத்தினால் என்ன பெண் குத்தினால் என்ன..குற்றம் குற்றமே...அதில் பாரபட்சத்துக்கு இடமளிக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம்புலன்ஸ் பொம்புலன்ஸ் என்பது கூட உங்கள் யாருக்கும் சித்தரிக்கப்பட்ட சொல்லாக தெரியவில்லை. இது எதற்கெடுத்தாலும் பெண்னுரிமை, பெண்ணுக்காக தனிப்பிரிவு வேண்டும் என்று விவாதிப்பவர்களுக்காக நகைச்சுவையாக எழுதப்பட்டது. இதைக்கூட ஆணாதிக்கம் என்று விடுவீர்கள் போல இருக்கின்றது.... நெடுக்காலபோவானின் கருத்து மேலதிக விளக்கத்தை கொடுத்துள்ளது.

:lol: ஜோக்கா?? இது??

சிலருக்கு ஜோக்காக தெரியாது தான்.. என்ன செய்வது...

:lol: இதில் ஒரு அர்த்தமோ, அல்லது நகைச்சுவையாக ஏதும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லையே! :lol:

புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி தூயவன்.... நான் சொல்ல வருவது அந்த நகைச்சுவை. அது ஒரு நகைச்சுவைதான்.கருத்துள்ள நகைச்சுவை.

Link to comment
Share on other sites

ஒரு ஆம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு...

ஒரு பொம்பிளை அடி பட்டா தூக்கிட்டு போக ஒரு பொம்புலன்ஸ் இருக்கா?

இங்கு இப்பகுதி மட்டுமே நகைச்சுவை அப்படித்தானே :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாள் சும்மா போனார். அதை பாத்திட்டு அடேய் சும்மா போறான்டா என்றாங்க..

நானும் எவன்டட அது சும்மா போறது என்று பார்த்த அது நம்ம சும்மா சும்மா போறார்

அதுவும் சும்மா இல்லீங்க சும்மா சும்மா ஏதேதோ கதைசிட்டு.. பின்னாலை சும்மா நாலைஞ்சு நாய் திரத்தின நினைவு. பட் பறவைகள் வானத்தில பறந்தமில்ல அதால சும்மா ஓடினதை சும்மா பாத்தம்....

:blink: ஜோக்கா?? இது??

அப்ப இல்லீங்களா தூயா மேடம்! அவருக்கு இது ஜோக்குங்க உங்களுக்கு அது லொள்ளுங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா உங்களின் ஆதங்கம் புரிகிறது

ஆண்களுக்கு அம்புலன்ஸ்

பெண்களுக்கு பொம்பிலன்ஸ் எண்டால்

உங்களுக்கு?????? :(:(:(:D:D

அம்பு&பொம்புலன்ஸா :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நகைச்சுவை சும்மா சும்மா, நான் மிகவும் ரசித்தேன். :D இதற்கு ஓரளவு பெண்ணியரின் பின்புலம் தெரிந்திருக்க வேண்டும்.

காட்டாக, பல மேனாட்டுப் பெண்ணியர் "woman" ஐ "womyn" என்றுதான் எழுதுவர், காரணம் அவர்களின் கருத்துப் படி "wo" என்பதை "man" க்கு முன் போடுவதால் "woman" என்பது "man" க்கு தாழ்வான ஒரு சொல்லாகுதாம். இது உண்மையில் அவர்களின் தாழ்வுணர்ச்சியைத் தானே காட்டுகிறது.

அதே போல் சில தமிழ்ப் பெண்ணியர் மேலாண்மை (management) என்ற சொல்லை வெறுப்பர், காரணம் அதில் உள்ள ஆண்மை என்ற பகுதியே, இங்கு ஆண்மை என்பது ஆண் எனும்சொல்லிலிருந்து கிளர்ந்திருந்தாலும் அதிலிருந்து பொருள் மாறி விட்டது என்பதை உணர மறுக்கின்றனர். அதே போல ஒருத்தி என்பது ஒருவன் எனும் சொல்லைவிட தாழ்வானது என்றும், ஆதலாள் இவர்கள் ஒருவள் (தமிழ் இலக்கணப்படி தவறான) என்று புழங்கவேண்டும் என்று கருதுவர். இங்கும் இவர்களின் தாழ்வுமனப் பான்மையே ஒழிய உண்மையான வேறுபாடு இல்லை.

இப்படியான உப்புச்சப்பில்லாத, ஆனால் தாழ்வுமனப்பான்மை கொண்ட சில பெண்ணியரின் கருத்துக்களை நகையாடும் உங்கள் பகிடி என்னை இரசிக்கவைத்து, சிலருக்குச் சிந்திக்கவும் தூண்டியிருக்கும் என்றெண்ணுகிறேன். இதேபோன்று பெண்ணியர் தாழ்வுணர்வுக் கருத்துக்களை நகையாடும் பகிடிகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிகு1: பெண்களெல்லாம் பெண்ணியரில்லை, பெண்ணியரெல்லம் (feminist) பெண்களுமில்லை; பெண்ணியத்திற்கு எதிரானவர்கள் பெண்களுக்கு எதிராக இருக்க வேண்டியதில்லை.

பி.கு 2: நெடுக்ஸ், அதென்ன புதுவித வெத்தில விக்கிறேங்கியா, எனக்கும் கொஞ்ச சாம்பிள் ·பெடெக்ஸில போட்டுடிங்க. இடிச்சு சுக்குக்காப்பி போட்டுக்குடிச்சா ரென்ஷன் குறையும் எண்டு கேள்விப்ப்ட்டன் மெய்யாலுமே? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.