Jump to content

புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்!

 

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச் சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து வைரலாக பரவி, இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது.

1.jpg

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணரக்கூடிய ஃபேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து, புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. கணித்துச்சொல்வது என்பதே சரியாக இருக்கும்.

இந்த தளத்தின் திறனை இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் பரிசோதித்துப் பார்க்கலாம். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் புகைப்படத்தை இந்த தளத்தில் சமர்பித்து, எங்கே என் வயதை சொல்லுப்பார்க்கலாம் என கேட்பது தான். உடனே இந்த தளம் உங்கள் வயதை கணித்துச்சொல்லும். ஆனால், இந்த கணிப்பு எல்லா நேரங்களிலும் துல்லியமாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சரியாக இருக்கும். சில நேரங்களில் தவறாக இருக்கும். தவறு எனில் அடுத்த படத்தை சமர்பிக்கவும் என இந்த தளமே சொல்லி விடுகிறது. 

வயது விஷயத்தில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்றால் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை சமர்பிக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் நீங்கள் இளமையானவராக இருந்து இந்த தளம் உங்கள் வயதை 50க்கு மேல் குறிப்பிட்டால் உங்கள் மனது லேசாக முறிந்துப்போகலாம். சொந்த புகைப்படத்தை சமர்பிக்க தயங்குபவர்களும் தாராளமாக இந்த தளத்தை சோதித்துப்பார்க்கலாம். அத்ற்கும் ஒரு வழி இருக்கிறது. அதாவது, இணையத்தில் உள்ள புகைப்படங்களை சமர்பித்து இந்த தளத்தை கணிக்கச்சொல்லலாம். இதற்காக மைக்ரோசாஃப்டின் பிங் தேடியரத்தின் புகைப்பட சேவையில் இருந்து படங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வசதி தான் இந்த தளத்தை பிரபலமாக்கியுள்ளது. பலரும் இணையத்தில் கிடைக்கும் பிரபலங்களின் புகைப்படத்தை இந்த தளத்தில் சமர்பித்து அது தரும் கணிப்பை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஹாலிவுட் நடிகை, அரசியல் தலைவர்கள் என நன்கு அறியப்பட்ட நபர்களின் புகைபப்டங்களை சமர்பித்து, அவர்களின் வயது கணிப்பை, அது எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதை லேசான கிண்டலுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த தளம் யாருடையை வயதை எல்லாம் சரியாக சொல்கிறது, யாருடைய விஷ்யத்தில் கோட்டை விடுகிறது போன்ற விவரங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த சுவாரஸ்ய அம்சமே இந்த தளத்தை ஹிட்டாகி இருக்கிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இந்த தளம் இந்த அளவு ஹிட்டாகும் என்பதை மைக்ரோசாஃப்டே எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நடத்திய டெவலப்பர் மாநாட்டில் தான் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டது.

மைக்ரோசாஃப்டின் அஸ்யூர்  மெஷின் லேர்னிங் பிரிவைச் சேர்ந்த இரண்டு வல்லுனர்கள் சோதனை முறையில் இந்த தளத்தை உருவாக்கினர். முகங்களை கண்டுணரும் சாஃப்ட்வேரின் ஆற்றலை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக மிக எளிமையான முறையில் புகைப்படம் பார்த்து வயதை சொல்லும் வகையில் தளத்தை அமைத்தனர். முதலில் 50 பேருக்கு தான் மெயில் அனுப்பியிருந்தன்ர். ஆனால், இந்த மெயில் வைரலாகி 35,000 பேர் இந்த தளத்தை பார்த்து பயன்படுத்தினர். இதனால், மீடியாவின் கவனத்தை ஈர்த்து இப்போது இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது.

மெஷின் லேர்னிங் என்று சொல்லப்படும் தொழில்நுட்பத்தின் எதிர்கால ஆற்றல் மற்றும் போதாமைகளின் அடையாளமாக இந்த தளம் விளங்குகிறது. நீங்களும் தாராளமாக இந்த தளத்தை பயன்படுத்திப் பார்த்துச் சொல்லுங்கள். ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், இந்த தளத்தில் சமர்பிக்கப்படும் புகைப்படங்கள் பயன்படுத்தப்படக்கூடிய விதம் குறித்த ஒரு சர்ச்சை இருக்கிறது. இந்த புகைப்படங்களை மைக்ரோசாஃப்ட் விரும்பிய வகையில் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மைக்ரோசாஃப்டோ புகைப்படங்களை சேமித்து வைத்துக்கொள்ளவில்லை என சொல்கிறது. கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த தளத்தின் பின்னே இருக்கும் மைக்ரோசாஃப்ட் பொறியாளர்களில் நம்மவரான சந்தோஷ் பாலசுப்பிரமணியமும் ஒருவர்!

இணையதள முகவரி; http://how-old.net/

நன்றி - சைபர்சிம்மன்

http://cybersimman.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=BvI9Zs0k7DM

 

கணணி இல்லாமல்... ஒரு ஐரோ கல்குலேட்டரிலும், மற்றவர்களின் வயதை கண்டு பிடிக்கலாம். :D

Link to comment
Share on other sites

தமிழ் சிறி, on 26 Mar 2015 - 04:23 AM, said:snapback.png

நான் யாழ்களத்தில் இணையும் போதே... என்னை எந்தக் காலத்திலும் வெளியே காட்டக் கூடாது, என்ற வைராக்கியத்துடன் தான் இங்கு இணைந்தேன். 

 

 

தமிழ் சிறி தம்பிக்கு வந்ததே ஆபத்து.........  :o  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் சிறி, on 26 Mar 2015 - 04:23 AM, said:snapback.png

 

தமிழ் சிறி தம்பிக்கு வந்ததே ஆபத்து.........  :o  :D  :lol:

 

 

"மைக்ரோசாஃப்ட்" ஆலை, மனுசருக்கு.... பெரிய தொல்லையாய் போச்சுது. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஐஸ்வர்யா ராயின் படத்தை போட்டேன் (கடந்த வருடம் எடுத்த படம்)
வயது 16 என்று சொல்கின்றது ....
 
இனி நம்பி எங்கடை படங்களை போட வேண்ட்டியதுதான் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

05-1430814758-how-old-website466.jpg

 

ரஜனி 60 வயதை தாண்டி பல வருமாகி விட்டது.
அவருக்கு இப்போ... 34 வயதாம். :D

 

05-1430814767-how-old-website666.jpg

 

கமலுக்கு, 38 வயசு.

 

-தற்ஸ் தமிழ்-

 

அப்படி என்றால்.... தமிழ்சிறிக்கு 16 வயசு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால்.... தமிழ்சிறிக்கு 18 வயசு. :lol:

 

Transposition Error..!  :rolleyes::)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.