Jump to content

உலகப் பள்ளிகள் தர வரிசையில் கிழக்காசியா முன்னணி.


Recommended Posts

Countries ranked on maths and science   1. Singapore 2. Hong Kong 3. South Korea 4. Japan (joint) 4. Taiwan (joint) 6. Finland 7. Estonia 8. Switzerland 9. Netherlands 10. Canada 11. Poland 12. Vietnam 13. Germany 14. Australia 15. Ireland 16. Belgium 17. New Zealand 18. Slovenia 19. Austria 20. United Kingdom 21. Czech Republic 22. Denmark 23. France 24. Latvia 25. Norway 26. Luxembourg 27. Spain 28. Italy (joint) 28. United States (joint) 30. Portugal 31. Lithuania 32. Hungary 33. Iceland 34. Russia 35. Sweden 36. Croatia 37. Slovak Republic 38. Ukraine 39. Israel 40. Greece 41. Turkey 42. Serbia 43. Bulgaria 44. Romania 45. UAE 46. Cyprus 47. Thailand 48. Chile 49. Kazakhstan 50. Armenia 51. Iran 52. Malaysia 53. Costa Rica 54. Mexico 55. Uruguay 56. Montenegro 57. Bahrain 58. Lebanon 59. Georgia 60. Brazil 61. Jordan 62. Argentina 63. Albania 64. Tunisia 65. Macedonia 66. Saudi Arabia 67. Colombia 68. Qatar 69. Indonesia 70. Botswana 71. Peru 72. Oman 73. Morocco 74. Honduras 75. South Africa 76. Ghana

 
 
சொறீலங்கா ரூ கிளவர் என்ற படியால்.. தரவுகளை கொடுக்காமல் தப்பிவிட்டது. :D:lol:
 
Link to post
Share on other sites

அடப்பாவிகளா.. சிங்கப்பூரிலயே இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டியிருக்கலாம் போலிருக்கு..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. சிங்கப்பூரிலயே இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டியிருக்கலாம் போலிருக்கு..

இதுதான் சொல்லுறது எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் எண்டு....ரைட்ஆ?

Link to post
Share on other sites

அட 21 ஆவது தரவரிசையில் இருக்கும் லண்டனில் படித்த டாக்குத்தர்மாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் இருக்கிற நடப்பு :D:lol:
சொல்லி வேலையில்லை :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

140508043418_asia_education_464x261_bbc_

சிங்கப்பூர் பள்ளிகள் முதலிடம்
 
பள்ளிக்கூடங்களின் செயல்பாடு குறித்த ஒரு சர்வதேச ஆய்வு, ஆசிய நாடுகளை முதல் ஐந்து இடங்களிலும், ஆப்ரிக்க நாடுகளை கீழ் ஐந்து இடங்களிலும் வைத்திருக்கிறது.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு, 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 15 வயது மாணவர்கள் எழுதிய பரீட்சை முடிவுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து இந்த பட்டியலைத் தொகுத்திருக்கிறது.
 
இந்த ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்திலும் கானா கடைசி இடத்திலும் இருக்கின்றன.
அமெரிக்கா 28வது இடத்தில் இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கும் கல்விக்கும் இடையே இருக்கும் தொடர்பைக் காட்டுவதும், தரங்களை உயர்த்துவதன் மூலம் எப்படி எல்லா நாடுகளும் பலன் பெறலாம் என்பதைக் காட்டுவதும் இந்த ஆய்வின் நோக்கம் என்று இந்த அமைப்பு கூறுகிறது
 

 

Link to post
Share on other sites

அட 21 ஆவது தரவரிசையில் இருக்கும் லண்டனில் படித்த டாக்குத்தர்மாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் இருக்கிற நடப்பு :D:lol:

சொல்லி வேலையில்லை :lol:

 

21 அல்ல.. 20 வாத்தியார். அவர்களின் வெட்டிப் பெருமைக்கு செவி மடுக்கும் மற்றவர்களால் தான் அவர்கள் பெருமை பேசிக்கிட்டு திரிகிறார்கள். தவறு எங்க இருக்கு பார்த்தீங்களா..?! :lol::icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிசு,கிசு... செய்தி..............:

 

 

வாத்தியார் ஐயாவின்.... இரண்டு பிள்ளைகள்,
டாக்டராக.... படித்துக் கொண்டு இருக்கிறார்கள். :)

 

Link to post
Share on other sites

டாக்டர் எஞ்சினியருக்கு ஸ்கூலில படிக்கிறேல்ல. யூனிவர்சிட்டிக்குப் போகோணும்.

இது ஸ்கூல் வயது பிள்ளைகளின் கணித, விஞ்ஞான அறிவை (மட்டும்) தரப்படுத்திய வரிசை.

யூனிவர்சிட்டி முதல் பத்தில் 3 ம் இடத்தில் ஆக்ஸ்போர்ட், 5 ம் இடத்தில் கேம்பிரிட்ஜ், 8 இடத்தில் இம்பீரியல் இருக்கு.

பத்துக்குள் இருக்கும் அத்தனையும் யூகே, யூஎஸ் யூனிகள்தான்.

http://www.forbes.com/sites/susanadams/2014/10/01/the-worlds-top-universities-2014/

ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, டென்மார்க் சொர்க்கம் என்று புழகித்தள்ளினாலும், மேல்படிப்புக்கு தம் பிள்ளைகளை ஏன் லண்டனுக்கு எங்க புலம்பெயர்ஸ் அனுப்புறவை எண்டு தெரியூதே :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

-----

ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, டென்மார்க் சொர்க்கம் என்று புழகித்தள்ளினாலும், மேல்படிப்புக்கு தம் பிள்ளைகளை ஏன் லண்டனுக்கு எங்க புலம்பெயர்ஸ் அனுப்புறவை எண்டு தெரியூதே :)

 

மற்றைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து... மேற்படிப்புக்கு, லண்டனுக்கு  அனுப்புவர்களை பற்றி, நான் இதுவரை கேள்விப்படவில்லை.

இந்தியா, சீனா போன்ற நாடுகளிருந்து லண்டனுக்கு மேற்படிப்பு படிக்க வருபவர்களை வைத்து... தவறான கருத்தை கொண்டுள்ளீர்கள், கோசான்.

இங்குள்ள சில பல்கலைக் கழகங்களில், ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்க்காக.. ஒரு வருடம் ஆங்கில நாடு ஒன்றிற்கு சென்று கல்வி கற்க அனுமதிப்பார்கள். அதுகும் அந்த மாணவனின் தனிப்பட்ட விருப்பம்.

அதனை, நினைத்து... லண்டன் கனவில் இருக்கின்றீர்கள் போலுள்ளது. :D

Link to post
Share on other sites

அப்ப ஏன் சிறீயண்ணா.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. டென்மார்க்.. சுவிஸ்.. நோர்வே என்றிருக்கிற எங்கட ஆக்கள்.. லண்டனுக்கு ஓடி வருகினம்.

 

1. பெனிபிட் எடுக்கிறது ஈசி என்று வருகினம்.. (பழமைவாதக் கட்சி அரசு அதனை கடினமாக்கிடும்.)

 

2. பிள்ளைகளின் படிப்பு.. இங்கிலீசுப்பீசில இருக்கனுமாம் என்றினம்.

 

3. மற்றைய நாடுகளில் உயர்கல்வி வாய்ப்பு எளிதாக அமையாதாம். பிரித்தானியாவில்.. ஓரளவு பாஸானாலும் யுனி போகலாமாம்.

 

இப்படி அடுக்கினமே... நீங்க என்னடான்னா.. இப்படிச் சொல்லுறீங்க.

 

அதில அண்மையில் ஒருத்தர் டச் சிற்றிசன்சிப்பை விட்டிட்டு.. யுகே பீ ஆருக்கு அப்பிளை பண்ணுறார். ஏனென்று கேட்டால்.. யுகே ஈயுல இருந்து வெளில வந்திட்டாலும்.. என்று முன்னேர்ப்பாடாம். முடியல்லடா சாமி. எம்மவர் கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போச்சுது. :lol::D

Link to post
Share on other sites

சிறீ நான் ஜேர்மன் காரரையோ, டச்சு காரரையோ இதர சுதேசிகளைச் சொல்லவில்லை.

நெடுக்குச் சொல்லுவது போல் ஈயூ சிட்டிசன் சிப் கிடச்சதும் யூகேயுக்கு படை எடுக்கிற முன்னாள் சொறிலங்கன்சைத்தான் சொன்னேன்.

யூகே பி ஆர் எடுப்பதற்கு டச்சு சிட்டிசன் சிப்பை கைவிடத்தேவையில்லை.

Link to post
Share on other sites

யூகே பி ஆர் எடுப்பதற்கு டச்சு சிட்டிசன் சிப்பை கைவிடத்தேவையில்லை.

 

யூகே பி ஆர் எடுக்க டச் சிற்றிசன் சிப்பை கைவிடத் தேவையில்லை.. (அப்படி எங்கும் கைவிட வேண்டும் என்று எழுதப்படவில்லை) அதற்கு வழங்கி வந்த முக்கியத்துவத்தை விட்டிட்டு.. பிரிட்டனில் நிரந்தரக் குடியிருப்பை தேடுவதையே குறிப்பிட்டுள்ளோம். அதுவும் ஆளுக்கு 1000 பவுன்கள் வரை கட்டி.. இந்தப் பீ ஆர் எதற்கு..??! பீ ஆருக்கு அப்புறம் பிரிட்டன் பிரஜா உரிமைக்கும் அலைவார்களோ என்னவோ.?! :lol::icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப் படிப்பு சம்பந்தமாய் சில விடயங்கலில் பல சந்தேகங்கள் உண்டு...!

 

இந்த பிரான்ஸ் , ஜெர்மனிகளில் கொலீஜ் தரத்தில் படிக்கும் மாணவர்களில் கொஞ்சம் படிப்பு குறைவான மாணவர்கள் ஒரு தொழிற்கல்வி சம்பந்தமாய் படித்து ( மேசன் , மெக்கானிக் , எலட்ரீசியன், காசியர் போன்ற) இரண்டு வருடங்களிலரொரு சான்ற்தழ் பெற்று வேலைக்குப் போய் விடுகினம்... அவர்களை விடுவம்...!

 

அதற்குமேலே யுனிவசிட்டிக்குப் போகும் மாணவர்கள் : எனது உத்தேசமான கணக்குகள்.

 

--  ஜெனரல் டாக்டர் படிக்க  குறைந்தது 8 வருடங்களுக்கு மேல். ( தனியான உறுப்புகளின் மருத்துவத்துக்கு  ஓரிரு வருடங்கள் கூடலாம்.).

 

--  பொறியியலாளர்  ___________  5 ல் இருந்து 7 வரை.

 

--  நர்ஸ்  ___________________  4 ல் இருந்து  7 வரை

 

--  பார்மஸியன்  ___________  4 ல் இருந்து  6 வரை.

 

--  infermier . ( வீடுகளுக்கு போய் ஊசி போடுதல் போன்றபல)  ______ 3 ல் இருந்து 6 வரை.

 

இவை போன்ற இன்னும் பல   சுமார் 5  வருடங்களுக்கு மேல் படிக்க வேண்டும்.

 

-- ஆனால்... இவற்றைப்  படிக்க சிரமப்படும் பிள்ளைகள் லன்டனுக்கு போய்  2 , 3 வருடங்களில் சில சான்றிதழ்களைப் பெற்று விடுகின்றார்கள்  அல்லது புளுடா விடுகிறார்களோ தெரியாது.

 

நான் இந்த பிரான்ஸ் ஜெர்மனில் அனுபவப் பட்டவரை ஆங்கிலத்தைப் பேசி அடுத்த தெருவுக்குக் கூட வழி கேட்டுப் போக முடியாது. இங்கு படிக்கும் பிள்ளைகளும் அந்தந்த நாட்டு மொழியைத் தவிர ஆங்கிலத்தையொ , ஸ்பானிஷ்சையொ 2 வது 3 வது மொழியாகப் படிப்பார்கள். அவை சும்மா ஒரு மொழி அறிமுகமாக இருக்குமேயொழிய இங்கிலாந்தில் ஒரு யுனியில் ஒரிரு வருடத்தில் பட்டம் பெறும் அளவுக்கு இருப்பது சந்தேகமே...!( இலங்கை , இந்தியாவில் படித்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை.)

 

இப்ப எனது பிரச்சனை ; இந்நாடுகளில் பிள்ளைகளை யுனியில் 5 , 6 வருடங்கள் படிக்க வைக்கிற நான் முட்டாளா...!

 

5 , 6 வருடங்கள் மினக்கட்டுப் படிக்கிற எனது பிள்ளைகள் மொக்குகளா...!

 

அல்லது  இந்நாடுகளின் கல்விமுறைகளில் ஏதாவது குறைபாடா...!

 

ஒரே குழப்பமாய்க் கிடக்கு...! :huh:  :)

 

 

 

 

Link to post
Share on other sites

சுவி அண்ணா.. சுவிஸ் போன்ற நாடுகளில் சித்தியடையத் தவறியவர்கள் கூட இங்கிலாந்தில் முறையாக கல்வி கற்று முதல் வகுப்பில் சித்தி பெற்று பட்டம் பெற்றுள்ளனர்.

 

இங்கிலாந்து கல்வி முறை இதுதான்..

 

மருத்துவம் - 5 வருடங்கள். (MBBS)

 

உயிரியல் மருத்துவம் - BSc (Hons) - 3 வருடங்கள் இதே தான்.. பிஏ.. பி காம் பட்டங்களுக்கும்., மேலும்.. MSci - 4 வருடங்கள்

 

தாதி கற்கை.. மருந்தகவியலாளர் கற்கை.. எல்லாமே பொதுவாக 3 வருடங்கள் தான். இவற்றில்.. MPham - 4 வருடங்கள்.

 

பல் மருத்துவம்..மிருக மருத்துவம் -  4 தொடக்கம் 5 வருடங்கள்.

 

பொறியியல் - BEng - 3 வருடங்கள். (MEng - 4 வருடங்கள்..)

 

பொதுவாக MSc - ஒரு கலண்டர் ஆண்டு.

 

PhD - 3 வருடங்கள்.

 

New route PhD - 4 வருடங்கள்.

 

மேலும்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. சுவிஸ்.. நோர்வே.. டென்மார்க்.. கனடா.. அவுஸி.. அமெரிக்கா.. நியூசி இங்கெல்லாம் படித்துவிட்டு கடைசி 1 வருடத்தை மட்டும் இங்கிலாந்தில் வந்து படிச்சு பட்டம் பெறவும் வாய்ப்புள்ளது. exchange students என்று இவர்களை அழைப்பார்கள்.

 

(வருடம் - கல்வியாண்டு என்பது 2 கல்வித் தவணைகள். ஒவ்வொரு தவணையும் 12 - 13 வாரங்கள் தான். வருடத்தில்.. மிச்சம் 3 - 4 மாதங்கள் கும்மாளம் தான்). :D

 

இங்கிலாந்து பாடவிதானம்.. இன்ரென்சிவானது. ஆனால் பரீட்சைகள் ஒப்பீட்டளவில் இலகு. கடந்த ஆண்டில் இருந்து பல்கலைக்கழகப் பரீட்சைகளில் உயர் தரத்தைப் பேண தொழில் வழங்குனர்கள் நிற்பந்தித்ததை அடுத்து.. இப்போது கொஞ்சம் கடினமாக்கி உள்ளனர்.

 

இலங்கையிலும்.. இங்கிலாந்து போன்ற கற்றல் தான். ஆனால் அங்கு.. MSc இரண்டு வருடங்கள். இங்கு ஒரு கலண்டர் வருடம். இப்படி சின்ன சின்ன வேறுப்பாடுகள் உண்டு.

 

ஆனால் பாடவிதான அடிப்படையில்.. நாட்டுக்கு நாடு..பெரிய வேறுபாடுகள் இல்லை. நீண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பதை.. இங்கிலாந்தில் செறிவாக்கி குறுகிய காலத்தில் படிப்பிக்கிறார்கள்.

 

மேலும் ஐரோப்பிய ஒன்றிய.. ஈ யு மற்றும் நோர்வே..சுவிஸ் பிரஜைகளுக்கு பிரித்தானிய மாணவர்களுக்கு ஒப்பான அனைத்து நிதி கடன் மற்றும் கட்டணச் சலுகைகளும் உண்டு.

 

இதே ஐரோப்பிய ஒன்றியம்.. மற்றும்.. EEA க்கு வெளியில் இருந்து வரும்.. மாணவர்களுக்கு கட்டணச் சலுகைகள் கிடையா. கல்விக் கடனும் கிடையாது. அவரவர் தங்கள் பணத்தில் அல்லது புலமைப்பரிசில் அல்லது சொந்த அரசாங்க செலவில் வந்து படிக்கலாம்.

 

நம்மவர்கள் ஊரில் இருந்து மாணவர் விசாவை பயன்படுத்தி வந்து இப்போ அசைலம் அடிப்பது தான் அதிகம். அதனால் நம்மவர்களின் மாணவ விசாக்கள் கடுமையான பரிசீலனைக்குப் பின்னரே வழங்கப்படுகின்றன. இருந்தும் அசைலம் அடிக்கிறவை திருந்தல்ல. இதனால் நேர்மையாக கல்வி கற்க வருபவர்களுக்கு கடினம். :lol::icon_idea:

 

 

Link to post
Share on other sites

ஒரு குழப்பமும் இல்லை சுவி.

யூகே யூனிவர்சிட்டிகள் ( எல்லாம் இல்லை) யூஎஸ் யூனிகள் இருக்கும் உலகத்தரத்துடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய அவுஸ்ரேலிய ஜப்பானிய யூனிகள் இல்லை. அதுக்காக அவை தரமற்றவை என்பதில்லை.

நீங்கள் சொல்லுவது போல் யூகே வருபவர்கள் இங்கேயுள்ள தரமான யூனிகளுக்கு போவதில்லை. சவுத்பாங், மெட்டிரோபோலுட்டன் அல்லது ஏதாவது தனியார் காலேஜ்ஜில் போய் எங்காத்துக்காரரும் கோர்ட்டுக்கு போறார் ரேஞ்சில் படித்து முடிப்பார்கள்.

Link to post
Share on other sites

கோச்சானின் கடைசிக் கருத்து முழுக்க முழுக்க.. தவறான கருத்து.

 

ஐரோப்பாவில் ஈயுவில் இருந்து வரும் தமிழ் பிள்ளைகள்.. இங்கிலாந்தில் சிறந்த பாடசாலைக் கல்வியைப் பெற்று.. நல்ல உயர் வகுப்பு பல்கலைக்கழகங்களில் படிக்க காண்கிறோம். அவர்களின் முயற்சியும் பெற்றோரின் முயற்சியும் அதில் இருக்குது. அதனை குறை சொல்ல முடியாது.

 

இங்கேயே கடனும் எடுத்துப் படிக்கிறார்கள். அவர்களுக்குள்ள உச்ச வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் படிப்பதில் சிரமப்பட்டாலும்.. பின்னர் நன்கு படிக்கக் காண்கிறோம். :icon_idea::)

Link to post
Share on other sites

வடிவா வாசிக்கப் பழகவும்.

இங்கே பள்ளிக்கு படிக்க வருபவரை நான் சொல்லவில்லை. பள்ளிப் படிப்பை ஐரொப்பாவில் முடித்து விட்டு இங்கே யூனிக்கு வருபவரையே சொன்னேன். சுவியும் அதைப் பற்றியே கேட்டார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் சிறீயண்ணா.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. டென்மார்க்.. சுவிஸ்.. நோர்வே என்றிருக்கிற எங்கட ஆக்கள்.. லண்டனுக்கு ஓடி வருகினம்.

 

1. பெனிபிட் எடுக்கிறது ஈசி என்று வருகினம்.. (பழமைவாதக் கட்சி அரசு அதனை கடினமாக்கிடும்.)

 

2. பிள்ளைகளின் படிப்பு.. இங்கிலீசுப்பீசில இருக்கனுமாம் என்றினம்.

 

3. மற்றைய நாடுகளில் உயர்கல்வி வாய்ப்பு எளிதாக அமையாதாம். பிரித்தானியாவில்.. ஓரளவு பாஸானாலும் யுனி போகலாமாம்.

 

இப்படி அடுக்கினமே... நீங்க என்னடான்னா.. இப்படிச் சொல்லுறீங்க.

 

அதில அண்மையில் ஒருத்தர் டச் சிற்றிசன்சிப்பை விட்டிட்டு.. யுகே பீ ஆருக்கு அப்பிளை பண்ணுறார். ஏனென்று கேட்டால்.. யுகே ஈயுல இருந்து வெளில வந்திட்டாலும்.. என்று முன்னேர்ப்பாடாம். முடியல்லடா சாமி. எம்மவர் கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போச்சுது. :lol::D

 

மண்ணாங்கட்டி பினிபிட்......ஜேர்மன்காரன் குடுக்காததையே உங்கை குடுத்து தள்ளுறான்?
எங்கடையளுக்கு எப்பவும் தஸ்சுபுஸ்சு இங்கிலிஸ் மோகம்...அதாலை அள்ளுப்பப்படு வந்து குவிஞ்சுதுகள்......இப்ப என்ன செய்யினமாம்? கருவாட்டு கடையெண்டாலும் இங்கிலிசிலை கதைக்கினமாம். :D  :icon_idea:
Link to post
Share on other sites

அங்கே படித்துவிட்டு.. இங்கே கேம்பிரிச்ஜில் படிப்பவர்களும் உளர் மிஸட்ர் கோச்சான். முதலில் உலகத்தை சரிவர புரிந்து கொண்டு விட்டு கதையளக்க வேண்டும். அந்தந்த யுனியின் உட்புகுவை பெறுபேறுகளுக்கு அமைய அந்தந்த நாட்டு கல்வித் தகமை கொண்டோர் பிரித்தானியாவில் தாம் விரும்பும் யுனியில் கல்வி கற்க முடியும். அதுதான் இங்கு நிதர்சனம். அதைவிட்டு.. ஐரோப்பாவில் இருந்து வரும் மாணவர்களை வெறும் கடைநிலை யுனில தான் படிக்கப் போகினம் என்பது மக்களை தவறாக வழிநடத்தும்.. சுத்தப்பொய். :):lol:

 

இந்த இணைப்பு ஒன்றே போதும்.. பொய்யை சாட்சிப்படுத்த. :lol:

 

http://www.ucl.ac.uk/prospective-students/international

Link to post
Share on other sites

ஜேர்மனியில் இருந்து கனடா யூனியிலும் exchange மாணவர்களாக வந்து படிக்கிறார்கள். வெள்ளைக்காரர் ஐந்துபேரை அண்மையில் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மனியில் இல்லாதது என்ன அப்படி இங்கு இருக்கு என்று கேட்டேன். ஆச்சரியம்.. அவர்களுக்கும் ஆங்கில மோகம் உள்ளது. அழகாகவும் பேசுகிறார்கள். இங்கும் இரண்டு செமஸ்டர்கள் படித்தால் கனடாவிலும் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் கிடைக்குமாம்.. இங்கே வந்து தொழில் பெறும் ஆர்வம் அவர்களுள் ஒருவரிடம் இருந்தது. இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லி வைத்திருக்கிறேன்.. :lol:

Link to post
Share on other sites

யு சி எல்லின் இண்டர்நேசனல் சுடன்ஸ் பேஜை போட்டுட்டு ஐராப்பாவில் இருந்து பள்ளிப் படிப்பின் பின்வரும் தமிழ் பிள்ளையள் நல்ல யூனிக்குத்தான் போகீனம் என்று எப்படி வாதாடுகிறீர்கள்?

யூகேயில் இண்டர்நேச்னல் ஈயூ மாணவர்கள் நல்ல யூனியில் படிகிறார்களா இல்லையா என்பதல்லவே கேள்வி.

கேள்வி ஈயூவில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு யூகேயுக்கு யூனிக்கு வரும் தமிழ் மாணவ்ர்களை பற்றியது.

Link to post
Share on other sites

அட ஞானசூனியங்களா.. அந்தப் பேஜில போய் நாட்டை எலியால் தொட்டு அழுத்தினால்... அந்தந்த நாட்டுக்குரிய மாணவர்களின் அனுமதிக்கு என்ன தேவைன்னு வரும். ஈயு ஒன்றும் செவ்வாயில் இல்லை. பூமியில் தான் உள்ளது. அது சர்வதேசத்துக்குள் அடங்கும். ஈயு மாணவர்களுக்கு கட்டண அடிப்படையில்.. உள்ளூர் மாணவர்களுக்குரிய சலுகைகள் உள்ளதே அன்றி அனுமதியில்.. அந்தந்த நாட்டுக்குரிய கல்விமுறைக்கு ஏற்ப கல்வித் தகமையே கோரப்படும். :lol:

 

மேலும்.. ஈயில இருந்து வாற தமிழ் மாணவர்களை கடைநிலை யுனிக்கு அனுப்பனும் என்ற ஒரு நடைமுறை பிரிட்டனில் எங்கும் இல்லை. :D  இன மொழி ரீதியாக அப்படி எல்லாம் நடந்து கொள்வதில்லை. அது சொறீலங்காவில் தான். குறித்த தகமைகள் உள்ள ஈயு தமிழ் மாணவர்கள் பிற ஈயு மாணவர்களைப் போலவே..நல்ல யுனிகளில் கல்வி கற்கின்றனர்.

 

இவர் கோச்சான் தெரியாமல்.. இதுக்க தலையை விட்டிட்டு தன்னைத் தானே பேயனாக்கிட்டு இருக்கிறார். :lol::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

------

நான் இந்த பிரான்ஸ் ஜெர்மனில் அனுபவப் பட்டவரை ஆங்கிலத்தைப் பேசி அடுத்த தெருவுக்குக் கூட வழி கேட்டுப் போக முடியாது. இங்கு படிக்கும் பிள்ளைகளும் அந்தந்த நாட்டு மொழியைத் தவிர ஆங்கிலத்தையொ , ஸ்பானிஷ்சையொ 2 வது 3 வது மொழியாகப் படிப்பார்கள். அவை சும்மா ஒரு மொழி அறிமுகமாக இருக்குமேயொழிய இங்கிலாந்தில் ஒரு யுனியில் ஒரிரு வருடத்தில் பட்டம் பெறும் அளவுக்கு இருப்பது சந்தேகமே...!( இலங்கை , இந்தியாவில் படித்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை.)

-----

 

ஜேர்மனியில் இருந்து கனடா யூனியிலும் exchange மாணவர்களாக வந்து படிக்கிறார்கள். வெள்ளைக்காரர் ஐந்துபேரை அண்மையில் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மனியில் இல்லாதது என்ன அப்படி இங்கு இருக்கு என்று கேட்டேன். ஆச்சரியம்.. அவர்களுக்கும் ஆங்கில மோகம் உள்ளது. அழகாகவும் பேசுகிறார்கள். இங்கும் இரண்டு செமஸ்டர்கள் படித்தால் கனடாவிலும் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் கிடைக்குமாம்.. இங்கே வந்து தொழில் பெறும் ஆர்வம் அவர்களுள் ஒருவரிடம் இருந்தது. இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லி வைத்திருக்கிறேன்.. :lol:

 

இசை... மேலே சுவி, குறிப்பிட்டுள்ள மாதிரி,

பாடசாலை தரத்தில், எட்டு வருடங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படித்த மாணவரால்... அடுத்த தெருவுக்கு கூட வழி காட்டுவது சிரமம் :D.

 

அந்த ஆங்கிலக் கல்வி, ஆங்கில நாட்டுக்கு சுற்றுலா செல்லும் செல்லும் போது..."தபால் கந்தோர் எங்கை இருக்கு" ,  "அடுத்த ரயில் எப்ப வரும்", "இந்த ஹோட்டேலுக்கு.. எப்படி போவது?" போன்றவற்றை கேட்க மட்டுமே... பிரயோசனப் படும். :lol:

 

ஆனால்.... சில பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கு, சரளமான.... ஆங்கில அறிவு கூடுதலாக கை கொடுக்கும்.

பல்கலைக் கழகத்தால்... வெளியேறும் போது கூட, சுலபமாக வேலை எடுப்பதற்கு இலகுவானது.

அத்துடன் எட்டு வருடம் படித்த ஆங்கிலத்தை, மேலும் விருத்தி செய்ய... பல்கலைக் கழகங்களில் கொடுக்கப் படும் இந்தச் சலுகைகையை.... சில மாணவர்கள், பிரயோசனப் படுத்துகின்றார்கள் :).

 

பிரான்ஸ், ஜேர்மன் பல்கலைக் கழகங்களில் படித்து, நேரடியாக உள்ளூரிலேயே... வேலை கிடைப்பவர்கள், காலக் கிரமத்தில் தாம், பாடசாலையில் படித்த ஆங்கிலத்தை மறந்து விடுவார்கள் என்பதாலும், பிறகு ஆங்கிலத்தை  கற்க நேரம் கிடைக்காது.... என்பதனையும் யோசித்தே... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு சென்று ஆங்கிலத்தில் கல்வி கற்பதுடன், அங்குள்ள கல்வி முறைகளையும், வேலை செய்யும் முறைகளையும் அறிய விரும்புகின்றார்கள்.

 

இதனை, நீங்கள் ஆங்கில மோகம் என்று நினைத்து..... தற் பெருமை கொண்டால், "வீ காண்ட் டூ.... எனி திங்" :icon_idea:  :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான், அவதானித்த வரையில்.....
நோர்வே மாணவர்கள்... ஜேர்மன், பிரான்ஸ் மாணவர்களை விட அதிக ஆங்கில அறிவு உள்ளவர்களாக உள்ளார்கள்.
காரணத்தை விசாரித்த போது.... அவர்களும், தாய் மொழியான... நோர்வேஜியன் பாசையில் தான் கல்வி கற்கிறார்கள், இரண்டாவது பாடமாகத்தான் ஆங்கிலம் பயில்கிறார்கள்.

 

ஆனால்... அவர்களது தொலைக்காட்சிகளில்...  இங்கிலாந்து, அமெரிக்க படங்களை மொழி மாற்றம் செய்யாமல்.. ஆங்கிலத்திலேயே... ஒளிபரப்பி "சப் டைட்டல் ஆக" படத்தின் கீழே... நோர்வே எழுத்துக்களை ஓட விடுகின்றார்கள்.  "ஹரி பொட்டர்" போன்ற  படங்களை பார்க்கும் சிறுவர்கள், படத்தை பார்க்கும் ஆவலாலும்.. இளவயதில் மொழியை கற்பது சுலபம் என்பதாலும், ஆங்கிலத்தை அதன் உச்சரிப்புடன் கற்க தேர்ச்சி பெற்று விடுகின்றார்கள்.

 

பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில்,  எந்த ஆங்கிலப் படமும் அந்த நாட்டு மொழியின் படியே மொழிமாற்றம் செய்து திரையிடுவதால்... மாணவர்கள் ஆங்கிலத்தில்.. "வீக்".  :)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அறிக்கை - 'அரசியலை விட்டு விலகுகிறேன்' அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவதாகவும் தி.மு.கவின் ஆட்சி அமையவிடாமல் தடுக்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கைவிடுத்துள்ள அவர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர அவரது உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி என ஜெயலலிதா அடையாளம் காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது எப்படி அவரது எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்கோ, பட்டத்திற்கோ, அதிகாரத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன்" என்று கூறியிருக்கிறார். டிடிவி தினகரன் துவங்கிய அ.ம.மு.க. அதி.மு.கவுடன் இணையுமா என பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், சசிகலாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. "துவக்கத்திலிருந்தே அவருக்கு விருப்பமில்லை" - டி.டி.வி. தினகரன் சசிகலாவின் அறிக்கை வெளியான பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக வி.கே. சசிகலா ஒதுங்கியருப்பதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,TTV DINAKARAN TWITTER PAGE "துவக்கத்திலிருந்தே பதவியேற்பதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனால், தொடர்ந்து வலியுறுத்தியதால் பிறகு ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது. அப்போதுதான், தற்போதைய முதல்வரைத் தேர்வுசெய்து ஆட்சி செய்ய அனுமதித்தார். சிறையிலிருந்து வெளிவரும்போதுகூட அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னாரே என்று நீங்கள் கேட்கலாம். அப்படிச் சொன்னாலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைத்திருக்கலாம். ஆனால், ஒரு மாதமான நிலையிலும் ஏதும் நடக்கவில்லை. ஆகவே நான் ஒதுங்கியருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாவீர்கள் என சொல்லி இப்போது ஒதுங்கியிருக்கிறார்" என்றார் தினகரன். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த தன்னை நீக்கியது செல்லாது என்று தொடர்ந்த வழக்கைப் பொறுத்தவரை, அவர் அரசியலை விட்டே விலகுவதாகச் சொல்லிவிட்ட நிலையில் எல்லாவித உரிமைகோரல்களையும் விட்டுவிட்டார் என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்தார் தினகரன். "அ.தி.மு.கவின் தன்னைச் சேர்ப்பேன், சேர்க்க மாட்டேன் என பலரும் பேசுவதால், தான் பேசு பொருளாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் விலகியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் என்று சொல்லியிருக்கிறார். எங்களைக் கட்சியைவிட்டு விலக்கிவிட்டதால்தான் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும். சசிகலாவை மையமாக வைத்து கட்சியை மீட்போம் என ஒருபோதும் சொல்லவில்லை. சசிகலா சிறையிலிருக்கும்போது கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டோம். ஆகவே அவரை மையமாக வைத்து செயல்பட்டதாகச் சொல்ல முடியாது." அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இனி என்ன ஆகுமெனக் கேட்டபோது, சசிகலாவின் அறிவிப்பிற்கும் அ.ம.மு.கவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றார் தினகரன். அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய உதவுவோம் என சசிகலா சொல்லியிருக்கும் நிலையில், அது அ.தி.மு.க. வடிவில் அமையுமா அல்லது அ.ம.மு.க. வடிவில் அமையுமா எனக் கேட்டபோது, அ.ம.மு.க. தலைமையில்தான் அமையும் என்றார். ஆனால், அவரை தன் கட்சியில் சேரும்படி தான் வலியுறுத்த முடியாது என்றும் தெரிவித்தார். "இந்த அறிவிப்பு அ.ம.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் சோர்வை ஏற்படுத்தும். நானே சோர்வடைந்திருக்கிறேன். இம்மாதிரி அவர் நினைக்கிறார் என்று தெரிந்தவுடன் நேரில் வந்து அரை மணி நேரத்திற்கு மேல் பேசிப்பார்த்தேன். பிறகு மாலை வந்தபோது, தான் எழுதி வைத்திருந்த அறிக்கையைக் காண்பித்தார். ஏன் ஒதுங்குகிறீர்கள் என்று கேட்டேன். அவர் இதுதான் சரியான முடிவு என்றார். பிறகு என்ன செய்ய முடியும்? அவர் மனதில் பட்டதைத் தெரிவித்திருக்கிறார். இதற்குப் பிறகு அ.ம.மு.க. நிர்வாகிகளை அழைத்துப் பேசி என்ன செய்வதென முடிவெடுக்க வேண்டும். தேர்தலில் எங்களை தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும். 1,300 பேர் வரை விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். பத்தாம் தேதிவரை விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம். பத்தாம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம். கூட்டணி முடிவானதும் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்" என்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அறிக்கை - 'அரசியலை விட்டு விலகுகிறேன்' - BBC News தமிழ்
  • சசிகலா `புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ - சசிகலா தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.   சசிகலா, தினகரன் என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.   சசிகலா அறிக்கை     TAGS   நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். அன்புடன் வி.கே சசிகலா” எனக் குறிப்பிட்டுள்ளார். `நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!’ - சசிகலா அறிவிப்பு | sasikala says, she will exit from politics (vikatan.com)  
  • கவலையில்லாத மனிதன்               சந்திரபாபு அவர்கள் முக்கியக்  கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன்.               நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர்.               சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத்  தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ?               இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய்  பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம்.               24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி  ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும்.               கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார்.               வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”.                                                                                                      - சுப. சோமசுந்தரம்                           
  • நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.