Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

பரமனைத் தேடி


Recommended Posts

நான் சிறு வயதில் எழுதிய கவிதையொன்றை பகுத்தறிவுப் பகுதியில்
உங்களோடு பகிர்கிறேன்

 

 

பரமனைத் தேடி

 

மேலைத் திசையினன் அம்புலி சென்று
விரைந்து திரும்பி விட்டான்-நாம்
பாலைக் கறந்ததைக் கல்லினில் வார்த்துப்
பரமனைத் தேடுகிறோம்
வேலைக் குறித்தெறி தோழ இம் மூட
விழல்களைச் சாய்பதற்கே-உன்
வாலைப் பருவம் எதற்கு விழித்தெழு
வாய்மையுரைத் திடுவோம்

 

எல்லையிலாப் பிரபஞ்ச இலக்கணம்
இன்றவன் கண்டுவிட்டான்-நாம்
கல்லதன் மீதினிற் காசையெறிந்து
கடவுளைத் தேடுகிறோம்
தொல்லையிலாது சுகமுற வாழத்
துறை பல கண்டு விட்டான்-நாம்
செல்லக் கதிர்காம யாத்திரை ஏறிச்
செடில்தனில் தொங்குகிறோம்.

 

தத்வமஸி எனச் சாற்றிய மாமறை
தன்னை மறந்து விட்டோம்-பல
வித்தைகள் செய்திடுவோர்தனை நம்பிடு
வீணர்களாகி விட்டோம்
உத்தம மாமுனிவோர்களுரைத்த பல்
உண்மை மறந்து விட்டோம்-சுய
சித்தத்திலே பிரமத்தையுணரும்
செயல் களை விட்டுவிட்டோம்

 

ஐயன் அருச்சனை செய்திடலாலந்த
ஆண்டவன் பேரருளே- என்றும்
மெய்யில் உணர்வினிற் சேருவதோ-இந்த
வேதத்து ஆகமங்கள்
உய்யும் வழிவகை காட்டிடுமோ-இல்லை
உண்மையுணர்த்திடுமோ
பையக் கிரியைகள் யாவும் நிறுத்திப்
பரமனைத் தேடிடுவோம்

 

-By Karu-

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.