அன்புத்தம்பி 34 Report post Posted May 18, 2015 ஒரு குரு இருந்தார். அவர் ரொம்ப பெரியவர். அவர் ஒரு சந்நியாசியும் கூட. அவருக்கு நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். தினமும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார். அவருடைய சிஷ்யர்களில் ஒருவன் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தான். அவனுக்கு அடிக்கடி சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கும். குருவும் அந்த சந்தேகங்களை தீர்த்து வைப்பார். ஒரு நாள் அந்த சிஷ்யனுக்கு தன் குருவின்மீதே சந்தேகம் வந்து விட்டது. அவன் கேட்டான்:"குருவே, நீங்கள் ஒரு பெரிய ஞானி, அதே சமயம் ஒரு சந்நியாசியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் முதலில் சந்நியாசி ஆனபின் உங்களுக்கு ஞானம் வந்ததா? அல்லது ஞானம் வந்தபின்பு சந்நியாசி ஆனீர்களா? " குரு கொஞ்ச நேரம் ஆழ்ந்து மௌனமாக சிந்தித்தார். சிஷ்யன் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான். குரு பேசினார்:"சிஷ்யா, எனக்கு முதலில் ஞானம் வந்தபின்புதான் சந்நியாசி ஆனேன்." "அப்படியா குருவே, முதலில் ஞானம் வந்தபின்புதான் சந்நியாசி ஆனீர்களா? " "ஆமாம், முதலில் ஞானம் வந்தது. அதற்கப்புறம்தான் நான் சந்நியாசி ஆனேன். என் மனைவி பெயர் ஞானம்." Share this post Link to post Share on other sites