Jump to content

உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு. பழ. நெடுமாறன் அவர்களின் "உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்"

- இளங்கோ (இலண்டன்)

அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள்ளி பார்ப்பனியம் கற்பித்த முடை நாற்றம் வீசும் ஆரிய-இந்து மரபுகளை ஏற்றுக் கொள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களால் உருவாக்கப் பட்ட " உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்" என்ற நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலமாக வெளியாகி உள்ளது.

நூல் மொத்தம் முப்பத்தி ஏழு அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. ஆரியர் வருகையால் ஏற்பட்ட வருணாசிரம தர்மத்தின் தாக்கங்களும் அவற்றை எதிர்த்த பௌத்த சமண சமயங்களின் எழுச்சி மற்றும் பழந்தமிழரின் வழிபாடுகள் போன்றவற்றை இந்நூலின் தொடக்க அத்தியாயங்கள் விரிவாக விளக்குகின்றன. வள்ளலார் இராமலிங்க அடிகள், மகாத்மா ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொடுமைகளுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் அவர்களின் சமூக சீர்திருத்தப் பணிகள் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. இந்தியத் தேசியமும் இந்து தேசியமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். ஆங்கிலேயர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய செயற்கையான பூகோளக் கட்டமைப்பே இந்தியா, அதற்குமுன் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் இந்தியா என்றொரு நாடு ஒரு கொடியின் கீழ் ஏற்படவில்லை என்பதுடன் இந்து என்ற சொல் முதன் முதலாக கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் அரேபியர்களால்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதற்கு முன் எந்த இலக்கியங்களிலோ, வேதங்களிலோ புராண இதிகாசங்களிலோ இந்து என்ற சொல் இல்லை என்ற உண்மையையும் வெளிக்காட்டியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திலகர், அரவிந்தர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் இந்தியத் தேசியம் என்ற பெயரில் இந்துத் தீவிரவாதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து, இந்துக்களே இந்நாட்டின் மைந்தர்கள் என்று முஸ்லீம்களுக்கு எதிரான மதத் துவேசத்தையும் வகுப்புவாத வெறியையும் விதைத்தனர். இவர்களால் உருவாக்கப் பட்ட இந்து மதவெறி வி.டி.சாவர்க்கர் காலத்தில் மேலும் தீவிரமாகி இந்தியாவில் இரத்த ஆற்றை ஓட வைத்ததுடன் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திய அண்ணல் காந்தியடிகளின் உயிரையும் பறித்த நிகழ்ச்சிளை எல்லாம் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றுகளுடனும் பல வரலாற்று அறிஞர்களின் மேற்கோள்களுடனும் நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். அண்ணல் காந்தியடிகளின் கொலையில் மறைக்கப் பட்ட உண்மைகள் "காந்தியடிகளும் ஆர்.எஸ்.எஸ்.சும்" என்ற அத்தியாயத்திலும் "கொலைவெறிக் கும்பல்" என்ற அத்தியாயத்திலும் விரிவாக அலசப்பட்டுள்ளன. காந்தியடிகளைக் கொலை செய்த இந்து வெறியரான நாதுராம் கோட்சேக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த வி.டி.சாவர்க்கருக்கும் இருந்த உறவும், காந்தி கொலையின் முக்கிய குற்றவாளி வி.டி.சாவர்க்கர் என்பதும் மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ‘தேசத்தந்தை’ என்று கருதப்படும் காந்தியடிகளைக் கோட்சேயை அனுப்பி கொலை செய்த குற்றவாளி வி.டி.சாவர்க்கரின் உருவப் படத்தை இந்துத்துவக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்திய நாடளுமன்றத்தில் திறந்து வைத்து அழகு பார்த்த அவலமும் நடைபெற்றது. காந்தியடிகளைக் கொலை செய்த காவிக் கூட்டம் பச்சைத் தமிழர் காமராசரை உயிரோடு வைத்துக் கொளுத்த முயன்றதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

பாகிஸ்தான் பிரிவினையை முன் வைத்த முகமது அலி ஜின்னா உண்மையில் அதைத் தவிர்த்து மானில சுயாட்சியை ஏற்கத் தயாராக இருந்தார் என்றும் இந்தியப் பெருமுதலாளிகளின் இந்துத் தீவிரவாதப் போக்கினால் அவர் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது என்ற உண்மையை அன்றைய காலகட்டத்தில் இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த மௌலான ஆசாத் போன்றவர்களின் மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பசுவின் புனிதம் பற்றி வாய் கிழியப் பேசும் பார்ப்பனர்கள் முன்னொருகாலத்தில் பசு வேட்டையாடி அவற்றை யாகத்தில் வெட்டி பலி கொடுத்ததோடு மட்டுமல்லாது அவற்றின் இறைச்சியையும் உண்டார்கள் என்றும், ஆரியர்களால் போற்றப் படும் வேத விற்பன்னர்களான பிரஜாபதி, யாக்ஞவல்கியர், தேவகுரு பிரகஸ்பதி போன்றவர்களும் மனு சாத்திரம், மகாபாரதம், போன்ற ஆரிய நூல்களும் பசு இறைச்சி உண்பதை நியாயப் படுத்துகின்றன என்பதை எல்லாம் புராண இதிகாசச் சான்றுகளுடன் திரு பழ. நெடுமாறன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

மொத்தத்தில், திலகரால் உருப்பெற்ற இந்துத் தீவிரவாதம், வி.டி.சாவர்க்கரால் வடிவம் பெற்று இன்று ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற மதவெறி இயக்கங்களாக வளர்ந்து நிற்கின்றன. இவர்களின் பாரதப் பண்பாடு என்பது பார்ப்பனப் பாசிச கருத்துருவாக்கமே. இவர்களின் ‘அகண்ட பாரதக் கனவு’ என்பது, ஜெர்மனியைச் சுற்றியிருந்த ஆஸ்திரியா, போலந்து, அங்கேரி போன்ற நாடுகளைக் கைப்பற்றி, தேசிய இனங்களை அழித்து, ஜெர்மனிய வல்லரசைக் கட்டி எழுப்ப முயன்று ஐரோப்பாவையே இரத்த வெள்ளத்தில் மூழ்க வைத்த பாசிச இனவெறியர் இட்லர் கண்ட கனவுக்கு ஒப்பானது என்பது தெளிவாகிறது.

திரு பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்த நூலை வாசித்து முடித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு ஆழமாகச் சிந்தித்தால் ஓர் உண்மை தெளிவாகப் புலனாகிறது. உண்மையில் நாம் எல்லோரும் இந்துக்கள் நமக்குள் வேற்றுமைகள் வேண்டாம் என்ற எண்ணம் இந்தியத் தேசியவாதிகளுக்கோ அல்லது இந்துத் தேசியவாதிகளுக்கோ இருந்திருந்தால் அவர்கள் தமிழீழத்தை ஆதரித்திருப்பார்கள் ஏனெனில் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவே கருதப்படுகின்றனர், மற்றும் இந்தியாவின்பால் பற்றுக் கொண்டவர்கள். ஆனால் இந்திய மேலாதிக்க வர்க்கமானது "இந்திய-சீனப் போர்", "இந்திய-பாகிஸ்தான் போர்" இன்னும் பல காலகட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு ஆதரவு அளித்த சிங்கள அரசையே ஆதரிக்கிறது. சிங்களவர்கள் வேறு மதத்தினராக இருந்தாலும் ஆரியர்கள், நம்மவர்கள் என்ற அவர்களின் நினைப்பே அதற்குக் காரணம். தமிழர்கள் என்ன செய்வார்கள் பாவம் அவர்கள்தான் பிரம்மாவின் காலில் இருந்து தோன்றிய சூத்திரர்களாயிற்றே.

தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் படித்துப் பயன் பெறக்கூடிய அரிய வரலாற்றுத் தொகுப்பாக இந்நூல் அமைகிறது. இந்து-இந்திய மாயையில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் இந்நூலை படித்தபிறகாவது மத அடையாளங்களைத் துறந்து தமிழ்த் தேசிய அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டால் அது, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.

http://www.webeelam.com/Nedumaransbook.htm

Link to post
Share on other sites

அடிப்படையில் சிவன், அம்பாள், முருகன் போன்றவர்கள் தமிழரின் கடவுள் தானே. அப்படியிருக்க ஆரியர் வந்து அதை ஆக்கிரமித்து தங்களின் செல்வாக்கினைச் செலுத்தும்போது, எமக்கு பக்தியே இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிவது, சிங்களவன் அடிக்கின்றான் என்று, தமிழீழத்தை விட்டு புலம்பெயர்நாடுகளில் போய் ஒளித்துக் கொள்வது போல் ஆகும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயம் என்னும் மாயையில் இருந்து தானே தமிழர்கள் விடு பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.சைவ சமயத்தைப் பற்றியோ தமிழ்க்கடவுளர்கள் பற்றியோ கூறப்படவில்லையே?

ஆரியத்தின் எச்சங்களான சமஸ்கிரதத்தை விடுங்கள், வர்ணாச்சிரமம் என்னும் சாதியத்தை விடுங்கள் என்று தானே கூறப்பட்டுள்ளது.பக்தி என்பது உங்கள் தனிப்பட்ட நம்பிக்கை .

சிங்களவன் அடிக்கிறான் ஆகவே நாங்கள் எல்லாம் சிங்களவனா மாறுவம் என்று சொல்வது போல் உள்ளது. நீர் கொழும்பில அப்படித் தான் கன பேர் மாறிட்டினம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசவழமைச் சட்டத்தில் இருக்கும் ஆணாதிக்க,சாதியம்,ஆரிய,மத சர்பான கருத்துக்கள் நீக்கப்படுள்ளன என்று பரா வழங்கி இருக்கும் பேட்டி.உவருக்கும் ஆரிய இனவெறி இருக்கு.தமிழர் பண்பாடு கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தேசவழமைச் சட்டம் மாற்றப்பட்டுள்ளது என்கிறார்.பழமைவாதிகளுடன் கலந்துரையாடியே இவ்வாறான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் கூறுகிறார்.

பேட்டியை இங்கே பாருங்கள்,

http://www.pathivu.com/?ucat=nilavaram&file=191106

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்துள்ள நாம் இதைப்பற்றி கவனம் கொள்ளவது அவசியமானதென்றே கருதுகிறேன். இந்த இந்துப் பிரச்சனை இந்தியாவுக்கானது என்று ஒதுக்கமுடியாது. மத அடையாளத்தைத் தக்கவைப்பதென்பது வரலாற்றில் இலகுவாக இருந்திருக்கிறது; ஆனால் மொழிவகையிலான அடிப்படை அடையாளத் தக்கவைப்பு பெருமளவில் வீரியமான இனக்குழுமங்களாலேயே முடிந்திருக்கிறது.

காலனிய ஆட்சிக்கால வெள்ளையர்களால் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் மூன்றாம் நான்காம் தலைமுறையை இன்று கவனிக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது. இவர்கள் மொழிவழி மூலஅடையாளத் தொலைப்புக்குள்ளாகிய அதே வேளை மத அடையாளத்தினூடான தக்கவைப்பினைக் கொண்டுள்ளார்கள். இது இந்து- இந்தி- இந்தியர் எனவாக அவர்களை ஈர்த்துச் செல்கிறது.

-இன்று ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்கள் வெறும் மத அடையாளத் தக்கவைப்புடன் தொடர்ந்தால் இன்னும் இரு தலைமுறைகளின் பின் நம் வருங்காலச் சந்ததியும் மேற்படியாக இந்தியர் ஆக அடையாளப்பட்டு இந்தி படித்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகத்தியன் வருங் காலம் அல்ல இப்போதே நடக்கத் தொடங்கி விட்டது,புலத்தில் குறிப்பாக இங்கிலாந்தில் .அரசே மத ரீதியான அடையாளத்திற்கு முக்கியத்துவம் குடுக்கிறது.ஏனில் தேசிய ரீதியான அடயாளங்கள் இங்கிலாந்த்தின் இறமைக்கு சவாலாக அமையலாம்.இதுவே இன்று இசுலாமிய மதத் தவருடன் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது.ஏனெனில் இன்று இசுலாம் ஒரு மதமாகவும் ஒரு இனம் என்னும் நிலையிலும் இருக்கிறது.

மேலும் ஈழத்தில் கூட இந்துத்துவாக் கொள்கைகள் குறிப்பாக கொழும்பில் தமிழர்கள் மத்தில் சில இந்திய அமைப்புக்களால் விதைக்கப்பட்டு வருகின்றன.விஸ்வ கிந்து பரிசத் கொழும்பில் வெகு காலமாக இயங்கி வருகிறது.இந்தியத் தூதவாராலயத்தினூடாகக்கூட பல அமைப்புக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்து,இந்தியா, அதன் விரிவாக்கமும் இந்துதுவ வாதிகளின் அடிப்படைக் கொள்கை.இது பிஜேபி அரசால் முன் எடுக்கப்பட்ட ஒரு வேலைத் திட்டம்.இது தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தை நிராகரித்து மத அடிப்படையில் ஒரு பரந்த இந்திய தேசத்தைக் கட்டி எழுப்ப விழைகின்றது.தமிழர் தேசியத் தலமை இது பற்றி விழிப்பாக இருப்பதால் இவர்களின் முயற்ச்சிகள் தமிழ் ஈழத்தில் கை கூடவில்லை.ஆனால் கொழும்பிலும், புலத்திலும் இது நிச்சயமாக நடக்கிறது.தமிழர்கள் இது பற்றி விழிப்புள்ளவர்களாக தமது மதச் சார்பற்ற தமிழர் என்னும் தேசிய அடயாளத்தைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

Link to post
Share on other sites

இந்து சமயம் என்னும் மாயையில் இருந்து தானே தமிழர்கள் விடு பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.சைவ சமயத்தைப் பற்றியோ தமிழ்க்கடவுளர்கள் பற்றியோ கூறப்படவில்லையே?

ஆரியத்தின் எச்சங்களான சமஸ்கிரதத்தை விடுங்கள், வர்ணாச்சிரமம் என்னும் சாதியத்தை விடுங்கள் என்று தானே கூறப்பட்டுள்ளது.பக்தி என்பது உங்கள் தனிப்பட்ட நம்பிக்கை .

சிங்களவன் அடிக்கிறான் ஆகவே நாங்கள் எல்லாம் சிங்களவனா மாறுவம் என்று சொல்வது போல் உள்ளது. நீர் கொழும்பில அப்படித் தான் கன பேர் மாறிட்டினம்.

இந்து மதத்தில் இருந்து சைவ மதத்தைக் தெளிவாக்க வேண்டுமானால், அதை மட்டும் தானே செய்ய வேண்டும். அதை விடுத்து ஏன் கடவுள் மறுப்புக் கொள்கை என்று வந்தது. திராவிடத்துவம் என்பதோடு நாஸ்திகத்தை இணைத்தது யார் தப்பு?

சைவ மதத்தைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை என்பதும் கூடத் தப்புத் தானே. அதை தெளிவாக்க வேண்டியதும் தானே கடமையாகின்றது. ஒரு கூடாரத்தில் ஒதுங்கியிருக்கின்ற மக்களை தெளிவாக்குகின்றோம் என்று சொல்லி நடுத்தெருவில் நிறுத்துவது என்ன நியாயம்?

சிங்களவன் அடித்தபோது தெம்பில்லாமல் நீர் கொழும்பில் இணைந்திட்டினம். ஆனால் சிங்களவனை எதிர்க்க வேண்டும் என்று மூட்டை கட்டுவது அழகில்லையே!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிப்படையில் சிவன், அம்பாள், முருகன் போன்றவர்கள் தமிழரின் கடவுள் தானே. அப்படியிருக்க ஆரியர் வந்து அதை ஆக்கிரமித்து தங்களின் செல்வாக்கினைச் செலுத்தும்போது, எமக்கு பக்தியே இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிவது, சிங்களவன் அடிக்கின்றான் என்று, தமிழீழத்தை விட்டு புலம்பெயர்நாடுகளில் போய் ஒளித்துக் கொள்வது போல் ஆகும்.

தூயவன்

ஆதியில் தமிழர் வணங்கியது, இறந்தவர்களை இதை நடுகல் வழிபாடு எனக்கூறுவர். இதை விட தாய் முறை வழிபாடும் இருந்தது. அதில் கொற்றவை எனப்படும் அம்மாளின் வழிபாடும் அடங்கும். இதில் முருகனைக்கூட கொற்றவையின் மகன் என்று சொல்லித்தான் வழிபட்டார்கள். ஆரியரின் செல்வாக்கின் பின் தான் சிவ வழிபாடு வந்தது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதத்தில் இருந்து சைவ மதத்தைக் தெளிவாக்க வேண்டுமானால், அதை மட்டும் தானே செய்ய வேண்டும். அதை விடுத்து ஏன் கடவுள் மறுப்புக் கொள்கை என்று வந்தது. திராவிடத்துவம் என்பதோடு நாஸ்திகத்தை இணைத்தது யார் தப்பு?

சைவ மதத்தைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை என்பதும் கூடத் தப்புத் தானே. அதை தெளிவாக்க வேண்டியதும் தானே கடமையாகின்றது. ஒரு கூடாரத்தில் ஒதுங்கியிருக்கின்ற மக்களை தெளிவாக்குகின்றோம் என்று சொல்லி நடுத்தெருவில் நிறுத்துவது என்ன நியாயம்?

சிங்களவன் அடித்தபோது தெம்பில்லாமல் நீர் கொழும்பில் இணைந்திட்டினம். ஆனால் சிங்களவனை எதிர்க்க வேண்டும் என்று மூட்டை கட்டுவது அழகில்லையே!

தூயவன் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்க வேண்டாம்.

பெரியார் பல்துறை ஆளுமை உடைய சிந்தனையாளர்.தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்,பெண் விடுதலை, மூடப் பழக்க வழக்கங்கள் போன்று தமிழரை ,திராவிடரை அந்தக் காலகட்டத்தில் பீடித்திருந்த பல வகையான சமூகச் சீர்கெடுகளுக்கு எதிராக எழுதினார்,பேசினார் அடித்தள மக்களை சிந்திக்கச் செய்தார்.அவரின் பல நடவடிக்கைகள் அந்தக் காலத்தில் அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தன.அதனால் மக்கள் விழிப்புணர்வு பெற்று திராவிட அரசியல் இயக்கங்கள் தோன்றி, சாதி ரீதியாக அடக்கப் பட்டிருந்த மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.பின்னர் இட ஒதுக்கீடு சமூக நீதி போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் பல்வேறு ஆண்டுகளாக வறுமையில் அறியாமையில் வாழ்ந்த மக்கள் வளம்பெற்று முன் நேறினர்.இவை எல்லாவற்றிற்கும் காரணம் பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி தான்.

அந்தக்காலகட்டம் எவ்வாறு இருந்தது? சமய ரீதியாக அதாவது இந்து சமயத்தின் வர்ணாச்சிரமத்தால் குறிப்பிட்ட படி சில மக்கள் கீழானவர்கள் சிலர் மேலானவர்கள் என்று கூறு போடப்பட்டிருந்தனர்.இவ்வாறான வர்ணாச்சிரமத்தை ஏன் மக்கள் ஏற்றுக்கொண்டனர்? சமயம், பக்தி, கடவுள், குற்றம் என்னும் கோட்பாடுகளால் தான்.இந்தக் கோட்பாடுகள் மக்களை இந்த கீழ்த்தரமான நிலைக்கு ஆளாக்கியிருப்பதை பெரியார் கண்டு இதனை மாற்ற வேண்டும் எனெனில் வர்னாச்சிரமத்தை சாதியத்தை ஒழிக்க வேண்டும் எனெனில் அதை நிலை நிறுத்தும் நிறுவனக்களை வேத சாஸ்திரங்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வேணும் .கடவுள் குற்றம் என்கிற நம்பிகையை முறையடிக்க வேண்டும் ஏனில் கடவுளே மனிதனால் படைக்கப் பட்டவர் என்பதையும் சமயங்கள் மனிதனால் உருவாக்க பட்டன என்பதையும் சொல்ல வேண்டும் நேரில் காட்ட வேண்டும் என்று முயன்றார்.இங்கே சமயங்களை குறிப்பாக இந்து சமயத்தை எதிர்க்க வேண்டிய நிலை அதன் சமூக ஒடுக்கு முறையால், சமூகச் சீரழிவு நிலையால் ஏற்பட்ட ஒன்று.இந்து மதம் எதிர்க்கப்பட்டது மற்றைய மதங்களை ஊக்குவிக்க அல்ல மக்களை அவர்களின் சமூகச் சீரளிவில் இருந்து மீட்க.

ஆனால் மத மற்றும் கடவுள் நம்பிக்கைகள் ஆளாமாக வேரூன்றியவை, இவை சிறு வயதில் இருந்தே ஆளமாக மனதில் பதியப்பட்டவை.இவற்றை விட்டு வெளி வருவது என்பது இலகுவானது அல்ல.அது எல்லோராலும் முடியாதது.அப்படி வெளிவர மிகுந்த சுய தைரியம் அவசியம்.

மேலும் அவர் திராவிடர் என்று அன்று வட இந்தியரால் ஒடுக்கப்பட்ட தமிழர் தெலுங்கர் மலையாளிகளல் ஒன்று படுத்த முயன்றார்.அது ஈற்றில் தமிழ்த் தேசியமாகவே உருவெடுத்தது.இந்துதுவா என்பது தேசிய இன அடையாளத்தை மறுதலித்து ,இந்தியர் எல்லோரும் இந்துக்கள் என்கிறது.ஆனால் அதற்கு நேர் மாறாக திராவிட அரசியல் தமிழ்த் தேசிய இனம் என்கிறது.அதற்கான அரசியல் அதிகாரத்தைக் கோருகிறது.அரசியல் அதிகாரம் இருந்தால் தான் தமிழ் இனத்தை வளப்படுத்தலாம்.பெரியார் அதற்காகவே திராவிட நாட்டுக் கோரிக்கையை முன் வைத்தார்.ஆனல் அது பின்னர் தமிழ் நாடு என மானிலம் ஆனது.

ஈழத்தில் இன்த தமிழ் தேசிய எழுச்சி என்பது சிங்கள பவுத்த பேரினவாத அடக்குமுறையால் மேலும் உக்கிரம் பெற்று இன்று எழுச்சி கண்டுள்ளது.தமிழ்த் தேசிய இன அடயாளத்திற்கு மத ரீதியன அடையாளம் இல்லை.அது தமிழ் மக்களை முனேற்றகரமான பாதையிலையே இட்டுச் செல்ல விரும்புகிறது.அதனையே அன்று பெரியாரும் விரும்பினார்.

பெரியார் அடிக்கடி கூறுவது இந்த ரமாசாமி கூறுவதால் மட்டும் இதனை ஏற்காதீர்கள் உங்கள் சிந்தனையில் பகுத்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றே.அதனையே பகுத்தறிவுச் சிந்தனை என்று சொல்கிறார்.பகுத்து அறிவதை புகட்ட முடியாது தான் ஆனால் பகுத்து அறிவதற்கு முதலில் உங்களுக்கு , நம்பிகைகளை கேள்விக் குள்ளாக்கும் தைரியம் வேண்டும்.மேலும் அறிவியல் ரீதியான சிந்தனைகள் வேண்டும்.இந்த அறிவூட்டலையே அந்த மக்களின் மொழியில் பெரியர் செய்தார். நம்பிக்கை,பக்தி போன்ற கேள்விகளுக்கு அப்பால் ஆன விடயங்களை வைத்துக் கொண்டு நீங்கள் பகுத்து அறிய முடியாது.ஈற்றில் என்ன முடிவுக்கு வருகிறீர்கள் என்பது உங்களைப்பொறுத்தது.பெரியார் ஒரு சிந்தனையையே கூறுகிறார் ஏற்றுக் கொள்வதுவும் விடுவதும் உங்களைப் பொறுத்தது.அவர் உங்கள் நம்பிக்கைகளை கேள்விக் குள்ளாக்கிறார் அதனால் அவரை எதிர்க்க வேண்டும் என்பது பகுத்தறிவு அற்ற கண் மூடித் தனமான சிந்தனை.எவ்வாறு உங்கள் நம்பிக்கைகளை உங்கள் வழிபாடுகளை நீங்கள் பின் பற்ற விரும்புகிறீர்களோ அவ்வாறே மற்றவர்களும் தங்களது சிந்தனையைக் கூற கடவுள் மறுப்பைக் கூற, மதங்களை விமர்சிக்க சுதந்திரம் உடையவர்கள்.

மதம் என்பது மனிதனாலையே ஏற்படுத்தப்பட்டது.அதனை விமர்சிக்கவும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வருக்கும் உரிமை இருக்கிறது.எந்த மதத்தையும் பின் பற்றாமல் ஒழுக்கமாக வாழலாம்.பயம் தெய்வ நிந்தனை அத்ற்குப் பிறகு பரிகாரம் உண்டியலில் லஞச்மோ,ஜெபமோ கர்த்தரிடம் மன்னிப்போ என்பதை விட, மானிட நேயம் உண்மை நப்பகத் தன்மை எங்கிற சுய கட்டுப் பாடுகளோடு பண்பாட்டு விழுமியங்களோடு ஒருவர் ஒழுக்கமாக வாழலாம்.

இவ்வாறு இருக்கும் போது மானிட முன் நேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மதங்கள் ஏன் அவசியம்? அப்படித் தான் உங்களால் இந்த நம்பிக்கைகளில் இருந்து மீள முடியா விட்டால் குறைந்த பட்சமாக இந்து மதம் என்னும் மாயையில் இருந்து ஆவது விடு படுங்களேன் என்பதே மேலே உள்ள கட்டுரை கூறும் செய்தி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்

ஆதியில் தமிழர் வணங்கியது, இறந்தவர்களை இதை நடுகல் வழிபாடு எனக்கூறுவர். இதை விட தாய் முறை வழிபாடும் இருந்தது. அதில் கொற்றவை எனப்படும் அம்மாளின் வழிபாடும் அடங்கும். இதில் முருகனைக்கூட கொற்றவையின் மகன் என்று சொல்லித்தான் வழிபட்டார்கள். ஆரியரின் செல்வாக்கின் பின் தான் சிவ வழிபாடு வந்தது.

கொற்றவையின் மகன் தான் முருகன் என்றால், முருகனின் தனது தந்தை யார்?. சைவ சித்தாந்தத்தில் சிவன் படைத்தல்,காத்தல், அழித்தல் செயல் செய்பவராகச் சொல்லப்படுகிறது. இந்து சமயக்கோட்பாட்டில் படைத்தலினை பிரம்மாவும், காத்தலினை மகாவிஸ்ணுவும், அழித்தலினை சிவனும் செய்வதாகச் சொல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு இந்தியா றோ அமைப்பைச் சேர்ந்த நாராயண்சுவாமி என்பவரால் தேசியத்தலைவர் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் தலைவர், சிவபெருமானை வழிபாடும் பெற்றோர்களுக்குப் பிறந்தவர். சிவபெருமானுக்குப்பக்கத்தில

Link to post
Share on other sites

நாரதர்

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நாத்திகத்தையும் திராவிடத்தையும் ஒன்றாகக் கலந்து உங்களைக் குழப்பியது பெரியாரே. அதை நம்பி மற்றவர்களை முட்டாளாக்க முனைகின்றீர்கள்.

உங்களுக்கு வேண்டுமானால் பெரியார் உயர்ந்தவர் என்று தெரியலாம். எங்களுக்கு அல்ல. பெரியாரின் கொள்கையைப் பின்பற்ற சுய தைரியம் அல்ல, வெறி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

ராஜாஜியைச் சந்தித்தது அவரது பிராமண வெறியல்ல என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு என்று எத்தனை காலத்துக்கு கட்டுரை எழுதப் போகின்றீர்கள். அதே பெரியார் தானே, "பாம்பையும் பார்பாணனையும் கண்டால், முதலில் பார்ப்பாணரை அடி, பிறகு பாம்பை அடி என்று ஆரியவெறி ஊட்டினவர்.

பெரியாரின் பெயரை சில பேர், ராமசாமி நாயுடு என்று சொல்கின்றார்கள். சிலபேர் நாயக்கர் என்கின்றார்கள். எனக்கு அது பற்றித் தெரியாது. ஆனால் எப்படியிருந்தாலும்;, அவர் கொள்கையை தமிழரின் தலையில் மட்டுமே கட்ட எவ்வாறு முடிந்தது. மேலும் நீங்கள் சொல்வது போல தெலுங்கர் பாதிக்கப்பட்டதால் மட்டும் அவர் இழுபக்கவில்லை. இவர் தெலுங்கர் என்பதால், தான் தான் தொலைவில் இருப்பதைத் தவிர்ப்பதற்காக இணைத்து கதைத்திருக்கலாம்.

ஏன் என்றால், பிஹார், ஓரிசா தான் இன்றும் ஜாதி குறைந்த மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். அப்படியிருக்க அதை ஏன் திராவிடமாக உள்வாங்கவில்லை.

ஜாதி வெறி ஒன்றும் இவரால் குறைந்து போகவில்லை. இந்தியாவில் படைத்த தலைமுறையிடம் குறைந்து போகின்றது அவ்வளவே. முந்தி மஞ்சள் தண்ணி தெளிப்பு, அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற கொடுரங்களைத் தகர்த்தது இவரா? அவை தானாகவே நடந்தது.

ஜாதி வெறிக்கு எதிராகப் போராடினவர்கள் நிறையப் பேர். இவர் மட்டுமல்ல, இந்து மதம் அடிப்படையில் மக்களைச் சென்றடையவில்லை என்றால், மரத்தடியில் பிள்ளையாரும், தெருவுக்கு தெரு கோவிலும் வந்திருக்காது. ஆரியரிடம் இருந்து விடுதலை வாங்குகின்றேன் என்று எமக்குரியதை இழக்க வேண்டும் என்று சொல்வது சரியான முட்டாள்தனம்.

இவர் சமூகச் சீர்திருத்தத்திற்கு போராடினால் அது பாராட்டலாம். ஆனால் முக்கியப்படுத்தும் அளவுக்கு பெரியார் அல்ல. ஓளவையோரோ, திருவள்ளுவரோ, அல்லது இந்து சமயத்தில் நாயன்மார்களோ, சாதி வெறியில் நடக்கவில்லையே. அதை பின்னரான காலப்பகுதியில் தான் வெறி என்பது கூடியது. அது மேலைத்தேயரும், மௌரியரும் தங்களின் பிரித்தாளும் கொள்கைக்காக பாவித்திருக்க ஏன் முடியாது?

ஏற்கனவே ஒரு இடத்தில் ஆரியம் செய்த துரோகத்துக்காக ஆரியத்தை எதிர்ப்பதாகச் சொன்னீர்கள். ஆரியர் மட்டுமா துரோகம் செய்தார்கள். பின்னர் வந்த சமணர்கள் சித்தர்மார்களைக் கொன்றார்கள். ஆலயங்களைத் தகர்த்தார்கள். பின்னர் மௌரியார் வந்தும் இதே வேலையைச் செய்தனர். போத்துக்கேயரும் அவ்வாறே நடந்தனர். ஏன் அவர்கள் ஒருவரையும் பெரியார் எதிர்க்கவில்லை. அங்கே ஆக்கிரமிக்க வந்தவர்கள் வீட்டில் போய், உணவுண்டு பெருமிதமடைந்தது ஏன்?

சொல்லப் போனால் பெரியாருக்கு மேலைத்தேய மோகமும் இருந்தது. இங்கே ஆங்கிலேயர் ரவிக்கை அணிவதை தடுக்கும் முறை கொண்டு வந்ததை எதிர்த்தவர், ஜேர்மனியில் போய் நிர்வாண சங்கத்தில் கூத்தாடினார். நிர்வாண சங்கத்தின் செயற்பாடுகள், முழுமையாக பாலியல் சிந்தனையை ஊக்கிவிக்கும் செயற்பாடுகளைக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

Link to post
Share on other sites

ஆரியப் பெயர்களுக்கு எதிராக என்று சிலபேர் இங்கு அறிக்கை விடுகின்றார்கள். தாங்கள் அவ்வாறு நடக்கப் போவதாக வேறும் சொல்கின்றார்கள். ஆனால் இந்த ஆரிய எதிர்ப்பு என்பது தமிழில் ஒரு துளியும் பொருத்தமில்லாமல் இமையும், கிறிஸ்தவப் பெயர்களுக்கு எதிராகவோ, அல்லது முஸ்லீம் பெயர்களுக்கு எதிராகவோ ஏன் இம்மியளவும் அமையவில்லை. ஆரியப் பெயர்கள் தமிழின் தொனியில் அமைந்திருக்கின்றன. மற்றவை????? இது கூட பெரியார் என்ற மனிதர் ஊட்டிய ஆரிய வெறியில் எச்சமே!

பக்தி என்பது நம்பிக்கையில் வருவது. எனக்கு இறைவன் துணை புரிவார் என்று சொல்வது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை பெற்றோரில் வைத்திருக்கும் மரியாதைக்கு ஒத்தது. இன்றைக்கு வைத்தியசாலையில் இலக்கம் மாறுபடாமல், எவ்வாறு பெற்றோரிடம் சேர்ந்தது என்று எவ்வாறு ஒருத்தனுக்கு சந்தேகம் வராதோ, அல்லது, தந்தைக்குத் தான் பிறந்தேன் என்று அவனுக்கு சந்தேகம் வராதது போன்ற நம்பிக்கையே பக்தியாகும்.

இன்றைக்கு எத்தனை பேர்கள் இதற்காகப் பெற்றோர் மீது சந்தேகப்படுகின்றீர்கள். அல்லது பெற்றோர்கள் உங்களின் மீது சந்தேகப்படுகின்றார்கள். அவ்வாறன நிலையுள்ள போது இறைவன் என்ற ஒரு நம்பிக்கையைச் சந்தேகிக்கவோ, அல்லது விவாதிப்பது ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தை விவாதிப்பது போல எண்ணிக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அவ்வாறு உங்களின் குடும்பத்தையும் விவாதிப்பது பகுத்தறிவாகும்.

எந்த ஒரு நம்பிக்கையும் உங்களைக் கை பிடித்து இழுக்கவில்லை. உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் பொத்திக் கொண்டு உங்கள் பாட்டில் போங்கள். மற்றவர்களின் நம்பிக்கையைச் சிதைக்க ஏன் கங்கணம் கட்டுகின்றீர்கள்?

உங்களுக்கு மட்டும் தான் உயரிய அறிவு என்றும் மற்றவர்கள் முட்டாள் என்றும் தலைக்கனம் இருக்கின்றதா என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

திராவிடத்துவம் வளர்க்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு என்னுமொரு கொள்கையில் சேறு பூசுவதற்குப் பெயர் பகுத்தறிவல்ல. அது வக்கிலாத்தனம். திராவிடத்தில் ஒரு வித கொள்கையோ, ஒன்றுமே ஒழுங்காக இருந்தால் தானாகவே மக்கள் பின்பற்றுவார்கள்.

ஒன்றுமில்லாததால் தான் மற்றவர்களைச் சுரண்ட வேண்டியிருக்கின்றது. கடவுள் மறுத்தவர்கள், கடைசியில் எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்று ஒரு நிலைக்குத் தகர்ந்து போனது எல்லாம் இதே நிலையில் தான்.

மதங்கள் வேண்டுமா என்று சிந்திப்பது ஒவ்வொரு மனிதனையும் பொறுத்தது. ஒவ்வொருவனுடைய நம்பிக்கையில் கை வைக்க எவனுக்கும் உரிமை கிடையாது. விருப்பமில்லாவிட்டால் பேசாமல் விலத்திச் செல்லலாம். தங்களை மட்டும் சிந்தனையுள்ளவராக காட்டுவது தலைக்கனம்.

சில பேர் என்னைப் பற்றி எதையும் நினைக்கலாம். அது பற்றிக் கவலையில்லை.

ஆமி செல்லடிக்கும்போது, நல்லூருக்கு தூக்கு காவடியும், சன்னதிக்கு அவியலும் நேர்த்தி வைத்துப் போட்டு, புலத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றால் கடவுள் மறுப்புக் கொள்கையைப் கொள்ள வேண்டிய தேவையில்லை.

ஆரிய வெறியிற்கு பகுத்தறிவுச் சாயம் பூசி, நான் பகுத்தறிவாளன் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித திருப்தியும் இல்லை.

இவ்வாறன தன்னைத் தாமே ஏமாற்றும் நடவடிக்கை தான். "எம் மதமும் சம்மதம் என்ற கதை. எம் மதமும் சம்மதமுமு; என்று சொன்னவர்கள், கிறிஸ்தவத்தையும், இந்து மதத்தையும் தாண்டி எவ்வளவு தூரம் அங்கால போனார்கள். ஒரு மசூதிக்கோ, அல்லது குர்ரானில் ஒரு வசனத்தையோ, பௌத்ததில் ஒரு வசனத்தையோ இவர்களால் சொல்லமுடியுமா?

இப்படியான போலியான செயற்பாடுகளின் பின்னால் இருந்து நாடகமாடத் தேவையில்லை. அடையாளப்படுத்தவும் தேவையில்லை.

------------------------------------------------------------------

இந்து என்ற சொற்றொர் பற்றி பெரியார் அடிக்கடி கதைத்து வந்ததாராம். இந்து என்பது இந்து சமயமல்ல, என்றும் இது இந்து நதிக்கு அப்பால் உள்ள மதங்கள் என்றும் வரைவு படுத்தினாராம். ஆங்கிலேயர் தான் அதைச் சூட்டினார்கள் என்பதால், அது இந்து சமயம் என்பதைப் பின்பற்றுவர்களுக்கு சொந்தமில்லை என்றாராம்.

அப்படிப் பார்த்தால் திராவிடத்துவம் என்று சொல்லிக் கொள்வதும், மேலைத் தேயர் தந்த சொல் தானே! திராவிடத்துவம் என்ற கதைப்பதும் அப்படிப் பார்த்தால் தவறாகுமே!

Link to post
Share on other sites

தூயவன்

ஆதியில் தமிழர் வணங்கியது, இறந்தவர்களை இதை நடுகல் வழிபாடு எனக்கூறுவர். இதை விட தாய் முறை வழிபாடும் இருந்தது. அதில் கொற்றவை எனப்படும் அம்மாளின் வழிபாடும் அடங்கும். இதில் முருகனைக்கூட கொற்றவையின் மகன் என்று சொல்லித்தான் வழிபட்டார்கள். ஆரியரின் செல்வாக்கின் பின் தான் சிவ வழிபாடு வந்தது.

வரலாற்றை மீண்டு போய்ப் பார்க்க வழியில்லை. அல்லது அதற்கான ஆதாரங்களும் இப்போதைக்கு கிடைக்க வழியில்லை. அப்படியிருக்க, பரம்பரை பரம்பரையாக நிலவும் நம்பிக்கையை, ஒரு ஊகத்தில் வைத்து தகர்க்க முடியும் என நினைக்கின்றீர்களா?

இன்றைக்கு ஒருவன், இப்படித் தான் வாழ்ந்தான் என்று ஊகத்தில் எழுத முடியுமா?

சிவ வழிபாடு நாகர் வாழ்விலும் இருந்ததாகக் கூறுகின்றார்கள். நாகதம்பிரான், நாகபூசணி என்று எல்லாம் ஈழத்தில் இப்போதும் வழிபாடு இருக்கின்றது. அவ்வாறே இயக்கரும் சிவவழிபாட்டினைச் செய்தார்கள் என்கின்றார்கள். (இராவணன் சிவபக்தன், தமிழன் என்பதை நண்பர் சபேசனிடம் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்).

அங்காலே, பணத்துக்கு கோவில் நடத்தி மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கின்றனர். மறுபக்கம் அறிவாளிகள் மாதிரி கற்பனைக் கதைகளை விட்டுச் சிதைக்க என்று ஒரு கூட்டம்.

அனுமான் அந்தக் காலத்தில் "றோவில் இருந்தவர் என்று வேறு கண்டு பிடிப்புக்கள். திராவிடத்துவம் பின்பற்றலாம் என்று பார்த்தால், எதற்கு எடுத்தாலும் ஆரியரைத் திட்டித் தீர்ப்பது தான் உட்சபட்ச ஒருமையான கொள்கை. என்ன செய்யச் சொல்கின்றீர்கள்??

---------------------------------------------

எதற்கு எடுத்தாலும் தமிழ் தேசியத்தையும் தலைவரையும் இணைத்துப் பேசுபவர்களுக்கு. தலைவருக்கு சொந்தமான கோவில் வல்வெட்டித் துறையில் இருக்கின்றது. அவ்வாறே தலைவரும் இந்து ஆலயம் ஒன்றில் தான் திருமணம் முடித்தவர்.

சண்டையில் வெற்றி பெற வேண்டி, போராளிகள் தூக்குக் காவடியோ, அல்லது நேரத்தி வைப்பதும் இன்றும் தொடர்ந்து வருகின்றது. ( நாரதர் அண்ணா இதைக் கேட்டு, போராளிகளுக்கு தைரியம் இல்லை என்று சொல்லிக் கொண்டு வரக் கூடாது. ஆமா!)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிய விடிய இராமர் கதை விடிஞ்சப்பிறகு இராமருக்கு சீதை என்ன முறை?

இப்படியிருக்கு நீங்கள் கூறும் இராவணன் சிவபக்தன் அதனால் இலங்கயில் சிவவழிபாடு உள்ளதென்பது. இராமாயனமே யாரால் எழுதப்பட்டது என்பதை உணர்ந்தால் இது புரியும். நான்கூறிய தாய்முறை வழிபாட்டைப்பற்றி கைலாசபதி எழுதிய நூல் ஒன்றை நாரதர் தீவிர இலக்கியம் என்ற பகுதியில் இனைத்திருந்தார். ஆனால் அதை இப்ப கானவில்லை.

நாகதம்பிரானும், நாகபூசனியம்பாழும் சிவவழிபாடா?

நீங்கள் கூறிய ஒன்ரை நானும் ஒத்துக்கொள்கின்றேன் அதாவது இந்து சமயத்தப்பற்றியும் அதன் திருத்தங்கள் பற்றியும் பெரும்பாலும் நாஸ்திகராலேயே கருத்துக்கள் எழுதப்படுகின்றது. இவர்கள் சமயமே வேண்டாம் என்று கூறும்போது இவர்கள் சைவசமயத்தைப்பற்றிக்கதைக்கல

Link to post
Share on other sites

தூயவன் எழுதியது:

"பக்தி என்பது நம்பிக்கையில் வருவது. எனக்கு இறைவன் துணை புரிவார் என்று சொல்வது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை பெற்றோரில் வைத்திருக்கும் மரியாதைக்கு ஒத்தது. இன்றைக்கு வைத்தியசாலையில் இலக்கம் மாறுபடாமல்இ எவ்வாறு பெற்றோரிடம் சேர்ந்தது என்று எவ்வாறு ஒருத்தனுக்கு சந்தேகம் வராதோஇ அல்லதுஇ தந்தைக்குத் தான் பிறந்தேன் என்று அவனுக்கு சந்தேகம் வராதது போன்ற நம்பிக்கையே பக்தியாகும்.

இன்றைக்கு எத்தனை பேர்கள் இதற்காகப் பெற்றோர் மீது சந்தேகப்படுகின்றீர்கள். அல்லது பெற்றோர்கள் உங்களின் மீது சந்தேகப்படுகின்றார்கள். அவ்வாறன நிலையுள்ள போது இறைவன் என்ற ஒரு நம்பிக்கையைச் சந்தேகிக்கவோஇ அல்லது விவாதிப்பது ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தை விவாதிப்பது போல எண்ணிக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அவ்வாறு உங்களின் குடும்பத்தையும் விவாதிப்பது பகுத்தறிவாகும்."

இப்படித்தான் சிலபேர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். மதம் மாறுவது தாயை மாற்றுவதற்கு சமம் என்றும் சிலர் பிதற்றுவது வழக்கம்.

மதத்தை பெற்றோர்களோடு ஒப்பிடுவது எங்களை பெற்றவர்களை கேவலப்படுத்துவது போன்றது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மதம் என்றால் என்ன என்ற தெளிவு இருப்பவர்கள் இப்படி பிதற்ற மாட்டார்கள்.

மதம் என்பது ஒரு வழிகாட்டல்.

ஒரு குறிப்பிட்ட வழிகாட்டலையும், ஆன்மீகக் கொள்கைகளையும் கொண்ட ஒரு மக்கள் கூட்டம் என்று மதத்தை குறித்து ஒரு சாதகமான விளக்கத்தை கொடுக்கலாம்.

கட்சி என்பது ஒரு குறிப்பிட்ட வழிகாட்டலையும், அரசியல் கொள்கைகளையும் கொண்ட ஒரு மக்கள் கூட்டம் என்று சொல்லலாம்.

மதம் என்பதற்கும் கட்சி என்பதற்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை.

கீதை காட்டுகின்ற வழி தவறு என்று ஒருவர் அறிகின்ற பொழுது அவர் பைபிள் காட்டுகின்ற வழியை நாடலாம். பைபிள் தவறு என்று அறிந்தால் குர்ரானை நாடலாம். எல்லாம் தவறு என்று அறிந்தால், எதுவுமே தேவை இல்லை என்று சொல்லலாம்.

தந்தை செல்வா காட்டிய வழி வேறு. தேசியத் தலைவர் காட்டுகிற வழி வேறு.

என்னுடைய தந்தை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்குப் போட்டார் என்பதற்காக, நானும் அதற்கு வாக்குப் போட முடியாது.

ஆன்மீகமோ, அரசியலோ, என்னுடைய முன்னோர்கள் தவறான வழியில் சென்றிருக்கிறார்கள் என்று உணருகின்ற பொழுது, நாம் வேறு வழியில் செல்லத்தான் வேண்டும்.

மதம் மாறுவது பெற்றோரைப் மாற்றுவதற்கு சமம் என்றால், தமிழினம் எத்தனை முறை பெற்றோரை மாற்றி இருக்கிறது என்று ஒரு முறை வரலாற்றை புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து யாராக இருந்தாலும், மதத்தை தாய்க்கோ, தந்தைக்கோ ஒப்பிட்டு அவர்களை கேவலப்படுத்த வேண்டாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நாத்திகத்தையும் திராவிடத்தையும் ஒன்றாகக் கலந்து உங்களைக் குழப்பியது பெரியாரே. அதை நம்பி மற்றவர்களை முட்டாளாக்க முனைகின்றீர்கள்.

யார் யாரை எங்கே எவ்வாறு முடளாக்க முனைகிறார்கள்? நாத்திகம் என்னும் கடவுள் மறுப்புக்கும் திராவிடத்திற்குமான தொடர்பை மேலே விளங்கப்படுத்தி உள்ளேன், மீண்டும் வாசித்து விட்டு அதில் எது முட்டளாக்கும் கருத்து என்று எழுதினால் அதற்குப் பதிற் கருத்து எழுதாலாம்.வெறுமனே முட்டளாக்குவது ,குழப்புவது என்று மொட்டையாக எழுதுவது கருத்தாடல் அல்ல

உங்களுக்கு வேண்டுமானால் பெரியார் உயர்ந்தவர் என்று தெரியலாம். எங்களுக்கு அல்ல. பெரியாரின் கொள்கையைப் பின்பற்ற சுய தைரியம் அல்ல, வெறி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

அது ஏன் வெறி என்கிறீர்கள் என்று எழுதுங்கள், அதென்ன வெறி ,ஏன் எதற்கு வெறி உருவாக வேண்டும் என்றும் எழுதுங்கள்,எந்தக் கருத்தையும் காரண காரியத்துடன் வைத்துக் கருதாடுங்கள்.அல்லாது விடின் வெறும் பெயர் கூவி அழைப்பதே கருத்தாடல் என்னும் கீழ்மையான நிலைக்குச் செல்ல வேண்டி இருக்கும்.அவ்வாறான கருதாடல்களை நான் விரும்புவதில்லை.ஏனெனில் அவற்றால் எவருக்கும் எதுவித பிரயோசனமும் இல்லை.கருத்துக்கு பதிற் கருத்து எழுதுவதே கருத்தாடல்,பெயர் கூவி அழைப்பது சிறு பிள்ளைத் தனமானது.

எனக்கு மட்டும் பெரியார் ஒரு சிந்தனையாளராகத் தெரிந்தால் பருவாயில்லை பல்லாயிரம் தமிழ் மக்களுக்கும் அல்லவா அப்படித் தெரிகிறார். நான் பெரியார் பற்றி எழுதியது அவரின் கருத்துக்களை மேற் கோள் காட்ட.மெஞ்ஞானி எனப்படும் இளையராஜா பெரியார் பற்றிக் கூறி இருப்பதைப் படியுங்கள்.அப்போது தெரியும் அவரின் ஆளுமை பற்றி.மேலும் இங்கே விவாதம் அவர் கூறிய கருதுக்கள் பற்றியே ஒழிய அவர் எனக்கு உயர்ந்தவரா இல்லையா என்பதல்ல.மேலும் ஆள் மனதில் பதிந்த கடவுள் நம்பிக்கையைக் கேள்விக் குள்ளாக மனதில் தைரியம் வேன்றுமென்றே நான் எழுதினேன்.இதற்கும் நீங்கள் சொல்லும் வெறிக்கும் என்ன சம்பந்தம்.முன்னரே சொன்ன மாதிரி சும்மா வார்த்தைகளால் பேர் கூவி அழைப்பது கருதாடல் அல்ல.வெறி என்றால் என்ன? எது வெறி? கடவுள் மறுப்பா வெறி? ஏன் வெறிக்க வேண்டும் ? இதனால் யாருக்கு என்ன பலன்? விளக்கமாக எழுதுங்கள் ஆரோக்கியமான கருத்தாடலை நடத்தலாம்.

ராஜாஜியைச் சந்தித்தது அவரது பிராமண வெறியல்ல என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு என்று எத்தனை காலத்துக்கு கட்டுரை எழுதப் போகின்றீர்கள். அதே பெரியார் தானே, "பாம்பையும் பார்பாணனையும் கண்டால், முதலில் பார்ப்பாணரை அடி, பிறகு பாம்பை அடி என்று ஆரியவெறி ஊட்டினவர்.

ஓ இதையா வெறி என்றீர்கள், பெரியார் கூறியவாறு எத்தினை பார்ப்பனர்களை அடித்துள்ளார்? அல்லது அவரின் சொற் கேட்ட லட்ச்சக்கணக்காணவர்களில் எத்தினை பேர் இவ்வாறு பார்ப்பனரை அடித்து உள்ளனர்.பெரியார் கூறியது பார்ப்பனர்கள் எவ்வாறு கபடத் தனமாக காரியம் ஆற்றக்கூடியவர்கள் என்பதை உணர்த்தவே.முதலில் ஒன்றை விளங்க்கிக் கொள்ளுங்கள். நான் முன்னர் கூறியதைப் போல் பெரியார் பார்ப்பனர்களான தனி மனிதர்கள் மேல் எதிர்புக் காட்ட வில்லை.பார்ப்பனீயம் என்னும் வர்ணாச்சிரமத்தையும் அதனை தூக்கிப்பிடிக்கும் நியாயப்படுத்தும் மனிதர்களையும் நிறுவனங்களையுமே சாடினார்.அவர் கூறியதை நீங்கள் அர்த்தப்படுதுவதைப் போல்வெறியாக எடுத்தால் பல பிராமணர்கள் தமிழ் நாட்டில் அடித்துக் கொல்லப் பட்டிருக்க வேண்டும்.

சாதிய அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழச் சொல்வது வெறி என்றால்.சிங்கள பவுத பேரினவாததிற்கு எதிரான வன்முறைப் போராட்டமும் ஒரு வெறியாகத் தான் கணிக்கப்பட வேண்டும்.அடக்கு முறையான கோட்பாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் சொல்வது வெறி அல்ல, விடுதலை வேண்டி நிக்கும் வேட்கை.அடக்கு முறைச் சித்தாந்தங்கள் ஆன பவுத்த பேரினவாதமும் பார்ப்பனீயமும் ஒன்றே. இங்கே இந்த அடக்குமுறைச் சித்தாந்ததைத் தாங்கி நிற்கும் மதங்களே வேறு படுகின்றன.அடக்கு முறையாளர்கள் இவ்வாறான கிளர்ச்சிகளை வெறியாகச் சித்தரிப்பார்கள்.இங்கே சிங்களவர் புலிகளை தமிழ் இன வெறியர்கள் என்று கூறுவதையும் அப்படியானல் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் புலிகளின் பாதை வன் முறையானதே.பெரியார் பார்ப்பனீயத்திற்கு எதிராக வன் முறையயைப் பிரயோக்கிக்க வில்லை,ஆனால் வன் முறையான சொல்லாடல்களைப் பாவித்தார்.அந்த காலகட்டத்திற்கு அது தேவையாக இருந்த படியால்.எமக்கும் அதே போல் ஒரு வன் முறையிலான போராட்டம் இன்று ச்ங்கள பேரினவாததிற்கு எதிராக அவசியமானதாக இருக்கிறது.உங்களுக்கு இங்கிருக்கும் பிரச்சினை எனது மதம் இந்து மதம் அதனை பெரியாரும் , நாரதரும் குறைத்துச் சொல்கிறார்கள் என்பதே.கருத்துக்களோ சிந்தனையோ இங்கு உங்களுக்குத் தெரியவில்லை.அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றிற்கு எதிர் நிலையான வாதங்கள் எதனையும் நீங்கள் வைக்கவில்லை.

பெரியாரின் பெயரை சில பேர், ராமசாமி நாயுடு என்று சொல்கின்றார்கள். சிலபேர் நாயக்கர் என்கின்றார்கள். எனக்கு அது பற்றித் தெரியாது. ஆனால் எப்படியிருந்தாலும்;, அவர் கொள்கையை தமிழரின் தலையில் மட்டுமே கட்ட எவ்வாறு முடிந்தது. மேலும் நீங்கள் சொல்வது போல தெலுங்கர் பாதிக்கப்பட்டதால் மட்டும் அவர் இழுபக்கவில்லை. இவர் தெலுங்கர் என்பதால், தான் தான் தொலைவில் இருப்பதைத் தவிர்ப்பதற்காக இணைத்து கதைத்திருக்கலாம்.

ஏன் என்றால், பிஹார், ஓரிசா தான் இன்றும் ஜாதி குறைந்த மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். அப்படியிருக்க அதை ஏன் திராவிடமாக உள்வாங்கவில்லை..

எவரும் தமது கொள்கைகளை இன்னோருவர் மேல் கட்டமுடியாது.ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கும் அதனை நீயாயமானதாகக் கருதியுமே மக்கள் ஒருவர் பின் அணி திரளுகிறார்கள்.பெரியார் எவரையும் வற் புறுத்தி தனக்குப்பின்னால் வரும் படி சொல்லவில்லை.மேலும் நீங்கள் சொன்னவாறு பெரியாரின் ஆளுகை அவர் இருந்த நிலைப்பரப்பில் மட்டுமே இருந்ததற்கான காரணங்கள் மிக எளிது.அந்தக்காலத்தில் இப்போது இருப்பதைப் போல் பொது சன ஊடகங்களிருக்கவில்லை.மேடைப் பேச்சுக்களாலும்,பத்திரிகைகள

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரியப் பெயர்களுக்கு எதிராக என்று சிலபேர் இங்கு அறிக்கை விடுகின்றார்கள். தாங்கள் அவ்வாறு நடக்கப் போவதாக வேறும் சொல்கின்றார்கள். ஆனால் இந்த ஆரிய எதிர்ப்பு என்பது தமிழில் ஒரு துளியும் பொருத்தமில்லாமல் இமையும், கிறிஸ்தவப் பெயர்களுக்கு எதிராகவோ, அல்லது முஸ்லீம் பெயர்களுக்கு எதிராகவோ ஏன் இம்மியளவும் அமையவில்லை. ஆரியப் பெயர்கள் தமிழின் தொனியில் அமைந்திருக்கின்றன. மற்றவை????? இது கூட பெரியார் என்ற மனிதர் ஊட்டிய ஆரிய வெறியில் எச்சமே!

யரைப் பார்த்துக் கேட்கிறீர்கள் என்று விளங்கவில்லை, தூய தமிழில் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்ட புலிகளைப் பார்த்தா? அல்லது என்னைப் பார்த்தா? சபேசனைப் பார்த்தா? இல்லை அப்துல் காதரைப் பார்த்தா?

என்னைப் பார்தது என்றால் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தூய தமிழ்ப் பெயர் தான்.

பக்தி என்பது நம்பிக்கையில் வருவது. எனக்கு இறைவன் துணை புரிவார் என்று சொல்வது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை பெற்றோரில் வைத்திருக்கும் மரியாதைக்கு ஒத்தது. இன்றைக்கு வைத்தியசாலையில் இலக்கம் மாறுபடாமல், எவ்வாறு பெற்றோரிடம் சேர்ந்தது என்று எவ்வாறு ஒருத்தனுக்கு சந்தேகம் வராதோ, அல்லது, தந்தைக்குத் தான் பிறந்தேன் என்று அவனுக்கு சந்தேகம் வராதது போன்ற நம்பிக்கையே பக்தியாகும்.

உங்களுக்கு இறைவன் துணை புரிவார் என்பது உங்கள் நம்பிக்கை அதே போல் எனக்கு நானே துணை என்பது எனது நம்பிக்கை.இங்கே நீங்கள் உங்கள் நம்பிக்கையைச் சொல்கிறீர்கள் நான் எனதுன நம்பிக்கையைச் சொல்கிறேன் அதே போல் பெரியார் தனது நம்பிக்கைளைச் சொல்கிறார்.அதில் எது சரி என்பதை வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்.ஆனல் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனது நம்பிக்கையே சரியானது பெரியாரினதும், நாரதினரதும் நம்பிக்கைகள் பிழையானவை என்று.சரி அவை பிழையானவை எனில் ஏன் எதற்கு என்று நீங்கள் சொன்னால் தானே மற்றவர்களுக்கும் உங்கள் நம்பிக்கைச் சரி என்று சொல்வார்கள் அதை விட்டு விட்டு பெரியாரும் நாரதரும் ஆரிய வெறியர்கள் படித்தவர்கள் என்ற திமிரில் எழுதுகிறார்கள் என்று பெயர் கூறி அழைப்பதால் உங்கள் நம்பிக்கை சரியான தென்றதாகி விடுமோ?

இன்றைக்கு எத்தனை பேர்கள் இதற்காகப் பெற்றோர் மீது சந்தேகப்படுகின்றீர்கள். அல்லது பெற்றோர்கள் உங்களின் மீது சந்தேகப்படுகின்றார்கள். அவ்வாறன நிலையுள்ள போது இறைவன் என்ற ஒரு நம்பிக்கையைச் சந்தேகிக்கவோ, அல்லது விவாதிப்பது ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தை விவாதிப்பது போல எண்ணிக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அவ்வாறு உங்களின் குடும்பத்தையும் விவாதிப்பது பகுத்தறிவாகும்..

ஒரு நீதி மன்றத்தில் ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர்கள் உரிமை கோரினால் அதற்காக மரபணுப்பரிசோதனை செய்தே அது யார் குழந்தை என்று தீர்மானிக்கப்படுகிறது.இங்கே இது எனது பெற்ரோர் என்கின்ற குறுட்டு நம்பிக்கையை விட மரபணு பரிசோதனை தேவாயான ஒரு விடயமாக அந்த நம்பிக்கையைப் பரிசோதிக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.ஆகவே தேவையின் நிமித்தமே நம்பிக்கைகள் கேள்விக்கு உள்ளாக்கப் படுகின்றன தேவயற்ற தருணங்களில் அவற்றைக் கேள்வி கேட்பதற்கான காரணம் எதுவுமில்லை.கடவுள் நம்பிக்கை ஒரு சமூகத்தைப் பாதிக்கும் போது தனி மனித அபிவிருத்தியைப் பாதிக்கும் போது அந்த நம்பிக்கை கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது அவ்வளவே.இந்து சமயம் வர்னாச்சிரமும் ஒரு சமூகத்தைப் பாதிப்புக் உள்ளாக்கியதால் தான் அந்த நம்பிக்கை கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.

எந்த ஒரு நம்பிக்கையும் உங்களைக் கை பிடித்து இழுக்கவில்லை. உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் பொத்திக் கொண்டு உங்கள் பாட்டில் போங்கள். மற்றவர்களின் நம்பிக்கையைச் சிதைக்க ஏன் கங்கணம் கட்டுகின்றீர்கள்?.

அதேயே தானே உங்களிடம் கேட்கிறேன்? எனது நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நானோ பெரியாரோ உங்கள் கையைப் பிடித்து இழுக்கவில்லையே? நீங்கள் தானே எங்கள் நம்பிக்கைகளைக் கூற முடியாது என்கிறீர்கள்? ஏன் உங்கள் நம்பிக்கை மீது உங்களுக்கு அவ்வளவு சந்தேகமா? அவ்வளவு பலவீனமானதா உங்கள் நம்பிக்கை?

உங்களுக்கு மட்டும் தான் உயரிய அறிவு என்றும் மற்றவர்கள் முட்டாள் என்றும் தலைக்கனம் இருக்கின்றதா என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

இல்லை என்னை விட அறிவில் உயர்ந்தவர் நீங்கள், நான் முட்டாள்.மேலும் சொல்வதற்கு எதாவது உருப்படியா இருகிறதா?

திராவிடத்துவம் வளர்க்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு என்னுமொரு கொள்கையில் சேறு பூசுவதற்குப் பெயர் பகுத்தறிவல்ல. அது வக்கிலாத்தனம். திராவிடத்தில் ஒரு வித கொள்கையோ, ஒன்றுமே ஒழுங்காக இருந்தால் தானாகவே மக்கள் பின்பற்றுவார்கள்..

அதுதானே இந்த வக்கிலாத் தனத்தை பார்த்து ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?கேட்பவர்கள் இருபக்க கருத்துக்களையும் கேட்டு ஒரு முடிவுக்கு வரட்டுமே?உங்கள் பக்கத்தில் நியாயம் இருபதாகப் பட்டால் மக்கள் அதனைப் பின் பற்றுவர்கள் தானே ? நாங்கள் சேறு பூசினால் என்ன தார் பூசினால் என்ன ஒட்டவா போகிறது?

ஒன்றுமில்லாததால் தான் மற்றவர்களைச் சுரண்ட வேண்டியிருக்கின்றது. கடவுள் மறுத்தவர்கள், கடைசியில் எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்று ஒரு நிலைக்குத் தகர்ந்து போனது எல்லாம் இதே நிலையில் தான்...

அதைத் தான் சொன்னேன் கடவுள் இருகிறார் என்பது இலகுவானது ஆனால் கடவுளை மறுப்பதற்கு மனதில் தெளிவும் , தைரியமும் வேண்டும் என்று.

மதங்கள் வேண்டுமா என்று சிந்திப்பது ஒவ்வொரு மனிதனையும் பொறுத்தது. ஒவ்வொருவனுடைய நம்பிக்கையில் கை வைக்க எவனுக்கும் உரிமை கிடையாது. விருப்பமில்லாவிட்டால் பேசாமல் விலத்திச் செல்லலாம். தங்களை மட்டும் சிந்தனையுள்ளவராக காட்டுவது தலைக்கனம்.

சில பேர் என்னைப் பற்றி எதையும் நினைக்கலாம். அது பற்றிக் கவலையில்லை..

அதைத் தான் நானும் சொல்கிறேன் மதத்தைப் பின் பற்றுவதா இல்லையா என்பதை தனி மனிதர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.சிந்திப்பவன் எவனுமே சிந்தனையாளன் தான்.ஆகவே மனிதர்கள் எல்லோருமே சிந்தனை ஆளர்கள் தான்.மதம் என்பதுவும் ஒரு சிந்தனை தான்.ஆகவே சிந்தனையை மனிதரில் இருந்து பிரிக்க முடியாது. நான் சிந்திப்பதை கூறாதே என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது.மனித சிந்தனைகளை ,மதங்களை கேள்வி கேட்க எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிறது.கேள்வி கேட்பதால் தான் சிந்த்னை வளர்கிறது.சிந்தனை மாற்றங்களே சமுதாய மாற்றங்கள் ஆகின்றன.உங்கள் சிந்த்தனை நிச்சயமாக தலைக்கணம் இல்லை தூயவன் ஆனல் எனது சிந்தனை தலைக்கணம் தான். ;)

ஆமி செல்லடிக்கும்போது, நல்லூருக்கு தூக்கு காவடியும், சன்னதிக்கு அவியலும் நேர்த்தி வைத்துப் போட்டு, புலத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றால் கடவுள் மறுப்புக் கொள்கையைப் கொள்ள வேண்டிய தேவையில்லை.

ஆரிய வெறியிற்கு பகுத்தறிவுச் சாயம் பூசி, நான் பகுத்தறிவாளன் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித திருப்தியும் இல்லை.

இவ்வாறன தன்னைத் தாமே ஏமாற்றும் நடவடிக்கை தான். "எம் மதமும் சம்மதம் என்ற கதை. எம் மதமும் சம்மதமுமு; என்று சொன்னவர்கள், கிறிஸ்தவத்தையும், இந்து மதத்தையும் தாண்டி எவ்வளவு தூரம் அங்கால போனார்கள். ஒரு மசூதிக்கோ, அல்லது குர்ரானில் ஒரு வசனத்தையோ, பௌத்ததில் ஒரு வசனத்தையோ இவர்களால் சொல்லமுடியுமா?

இப்படியான போலியான செயற்பாடுகளின் பின்னால் இருந்து நாடகமாடத் தேவையில்லை. அடையாளப்படுத்தவும் தேவையில்லை.

------------------------------------------------------------------

இந்து என்ற சொற்றொர் பற்றி பெரியார் அடிக்கடி கதைத்து வந்ததாராம். இந்து என்பது இந்து சமயமல்ல, என்றும் இது இந்து நதிக்கு அப்பால் உள்ள மதங்கள் என்றும் வரைவு படுத்தினாராம். ஆங்கிலேயர் தான் அதைச் சூட்டினார்கள் என்பதால், அது இந்து சமயம் என்பதைப் பின்பற்றுவர்களுக்கு சொந்தமில்லை என்றாராம்.

அப்படிப் பார்த்தால் திராவிடத்துவம் என்று சொல்லிக் கொள்வதும், மேலைத் தேயர் தந்த சொல் தானே! திராவிடத்துவம் என்ற கதைப்பதும் அப்படிப் பார்த்தால் தவறாகுமே!

பெரியார் இந்து என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்று சொன்னதற்கும் திராவிடம் என்பதற்கும் என்ன சம்பந்தம் புரியவில்லை? திராவிட என்பதில் இருந்து வந்தது திராவிடம், இது எப்படி மேலைத் தேயவரின் சொல்லாகும்.

பெரியார் சொன்னது இந்து மதம் என்பது பல மதங்களின் கலவை என்னும் வரலாற்று உண்மையை.இந்து நதிக்கு அப்பால் உள்ள மதங்கள் எல்லாவற்றையும் குறிக்க

அப்படியான வார்த்தைப் பிரயோகம் பாவிக்கப்பட்டது.வேதங்களில் இந்து என்ற சொல் பாவிக்கப் படவில்லை.அதனால் இந்து என்ற சொல்லே அதனைப் பின்பற்றுபவர்களுக்குச் சொந்தமில்லை என்றார்.ஒரு மதத்தின் பெயர் அதன் வேதங்களிலையே கூறப்படாமல் இருக்கும் போது எப்படி அது அந்த மதத்திற்குச் சொந்தமானதாக இருக்க முடியும்?

மேலும் இந்த இந்து என்ற சொல் தொடர்பாக நடந்த கருதாடல்களை இங்கே பார்க்கவும்.

,

தமிழில் இப்பிரச்சினை இப்படி இருக்கையில், Hindu, Hinduism என்ற சொற்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், இச்சொற்கள் குழப்பத்தைத்தான் உருவாக்கி வருகின்றன.

சிலர்: "Hindu was the term used by the Persians for the people of the Indian subcontinent. Hinduism later came to be used by outsiders for the varied religious beliefs of the majority of the people" என்று கூறுவர்.

இந்தநிலையில், இன்றைய இந்தியப் பகுதிகளில், எவரும் தம்மைப் பண்டைக் காலத்தில் Hindu எனக் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், இந்து சமயம் என ஒன்று பண்டைக் காலத்தில் இருந்திருக்கவும் முடியாது.

....

.....

தமிழ்த் தேசத்தவர்களுள் பெரும் பகுதியினர் தம்மைச் சைவர்கள் என அடையாளப்படுத்துகின்றனர். ஆனால், அவர்களை இந்துக்கள் என அடையாளப்படுத்த வைப்பதில, கல்விமான்கள் எனக் கூறப்பட்டுவரும் சிலரும், மேடைப் பிரசங்கிகளும், சில தமிழ் ஊடகங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கங்கள்தான் இருக்கமுடியும் என்பதை எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.

.....

.......

இந்து சமயம் என்பது, சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம்,.. என எல்லாவற்றையும் ஒன்றாகக் கூறும் சமயம் என்பர் சிலர். இது எப்படி? சைவம், வைஷ்ணவம், சாக்தம் எனத் தனித்தனியே பல பத்துச் சமயங்கள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் ஏன் ஒன்று சேர்த்து, இந்து சமயம் எனக் குறிப்பிடவேண்டும்? இவை இந்திய சமயங்கள் எனக் குறிப்பிடப்படலாம்!

ஆனால், இங்கு நாம் ஒரு மிக முக்கிய விடயத்தினை மனதில் கொள்ளவேண்டும்.

பண்டைக்காலத்தில், இந்தியா என்றவொரு நாடு இருக்கவேயில்லை.

பல நுறு தேசங்களை ஒன்றிணைத்து, அதை இந்தியா எனப் பெயரிட்டு, அந்த இந்தியா என்பதை ஆளும் வர்க்கங்களிடம் கையளித்துச் சென்ற பெருமை பிரித்தானிய காலனித்துவவாதிகளைத்தான் சாரும்!

இந்திய ஆளும் வர்க்கங்கள் என்றும் பிரித்தானியக் காலனித்துவவாதிகளுக்கு நன்றிக்கடன் உடையவர்களாகவே இருக்கவேண்டும், அவர்கள் இன்றும் அப்படித்தான் உள்ளனர்!

http://www.mousegroup.net/tamilsociety/09....005/bala-01.htm

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கு எடுத்தாலும் தமிழ் தேசியத்தையும் தலைவரையும் இணைத்துப் பேசுபவர்களுக்கு. தலைவருக்கு சொந்தமான கோவில் வல்வெட்டித் துறையில் இருக்கின்றது. அவ்வாறே தலைவரும் இந்து ஆலயம் ஒன்றில் தான் திருமணம் முடித்தவர்.

சண்டையில் வெற்றி பெற வேண்டி, போராளிகள் தூக்குக் காவடியோ, அல்லது நேரத்தி வைப்பதும் இன்றும் தொடர்ந்து வருகின்றது. ( நாரதர் அண்ணா இதைக் கேட்டு, போராளிகளுக்கு தைரியம் இல்லை என்று சொல்லிக் கொண்டு வரக் கூடாது. ஆமா!)

இங்கே தேவயற்று ஆதாரமற்ற சில விடயங்களை எழுதி உள்ளீர்கள், உங்கள் கருத்துப் படியே உந்தத் தூக்குக்காவடி ஒண்டப் பெருசாச் செய்து சிதழ் குத்தி இழுத்து ,இந்த கிபிரை விழுத்த ஏலாதோ? சும்மா ஏன் கன காசுக்கு நாங்கள் ஏவுகணை வாங்க உலகம் முழுக்க அலைய வேணும்,சிம்பிளா சில ஆயிரம் ரூபாவோட எந்த உயிர்ச் சேதாரமோ சண்டையோ பயிற்சிகளோ இல்லாம வேலை முடிச்சிடும்.

Link to post
Share on other sites

விடிய விடிய இராமர் கதை விடிஞ்சப்பிறகு இராமருக்கு சீதை என்ன முறை?

இப்படியிருக்கு நீங்கள் கூறும் இராவணன் சிவபக்தன் அதனால் இலங்கயில் சிவவழிபாடு உள்ளதென்பது. இராமாயனமே யாரால் எழுதப்பட்டது என்பதை உணர்ந்தால் இது புரியும். நான்கூறிய தாய்முறை வழிபாட்டைப்பற்றி கைலாசபதி எழுதிய நூல் ஒன்றை நாரதர் தீவிர இலக்கியம் என்ற பகுதியில் இனைத்திருந்தார். ஆனால் அதை இப்ப கானவில்லை.

நாகதம்பிரானும், நாகபூசனியம்பாழும் சிவவழிபாடா?

நீங்கள் கூறிய ஒன்ரை நானும் ஒத்துக்கொள்கின்றேன் அதாவது இந்து சமயத்தப்பற்றியும் அதன் திருத்தங்கள் பற்றியும் பெரும்பாலும் நாஸ்திகராலேயே கருத்துக்கள் எழுதப்படுகின்றது. இவர்கள் சமயமே வேண்டாம் என்று கூறும்போது இவர்கள் சைவசமயத்தைப்பற்றிக்கதைக்கல

Link to post
Share on other sites

நல்லது சபேசன். பிதற்றல் என்பதற்கு அப்பால் உங்களுக்கு புரிதல் குறைவு என்று புரிய வைத்திருக்கின்றீர்கள். நான் நம்பிக்கை என்பது எவ்வாறு உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதற்கே சொன்னேன். சம்பந்தமில்லாமல் வேறு என்னவோ எல்லாம் சொல்கின்றீர்கள்.

பக்தி அடிப்படையில் கடவுளைத் தெரிவு செய்வதை யாருமே எதிர்க்கவில்லை. சலுகைகள் அடிப்படையில் கடவுள் மாற்றுவதைத் தான் எதிர்க்கின்றனர். அதை விடுவோம். அது வேறு தலைப்பில் விவாதிக்க வேண்டியது.

பெற்றோர் மீது எவ்வளவு தூரம் நம்பிக்கை வைக்கின்றோமோ, அதே அளவு கடவுளில் நம்பிக்கை வைக்கின்ற ஒருவனுக்கு பெற்றோர் போலக் கடவுள் மீதும் சந்தேகம் வராது என்பதே நான் சொல்ல வந்தது. நீர் என்னவோ வேறு வேறு பிதற்றிக் கொண்டு நிற்கின்றீர்.

எனவே, பெற்றோரோடு ஒப்பிடுவதில் எவ்விதமான தவறுமில்லை. அவ்வாறு ஒப்பிடதற்கு காரணம் உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களை வைத்து உங்களுக்கு ஒப்பீடு செய்கின்றபோது தான் உங்களின் உச்சந்தலையில் மற்றவர்களின் நம்பிக்கையைக் கேவப்படுத்துகின்ற போக்கு உறைக்கும் என்பதால் தான். ஏன் என்றால் ரவிராஜ் மரணித்தபோது வந்த கண்ணீர், லெபனாலில் செத்த அமைச்சருக்காக வராது அல்லவா!

மதம் என்பது வழிகாட்டல் என்று நீங்கள் எவ்வாறு வகுக்க முடியும். சிலபேருக்கு துன்பத்தைத் துடைக்க ஒருவராக இருக்கலாம். அல்லது பயத்தைப் போக்க இறைவனின் துணை நிற்கலாம். ஒவ்வொருவருக்கும் பக்தி என்பது ஒவ்வொருவகையில் இருக்கலாம். எனவே நீங்கள் அது எப்படியானது என்று எவ்வாறு வகுக்க முடியும்.

வாக்குப் போடும் கதை பொருத்தமில்லாதது. தந்தை செல்வா இன்றும் வாழ்ந்திருந்தால், தான் வாக்குப் போடும் நிலை பற்றிச் சொல்லலாம். தலைவரோ, தந்தையோ வேறு வேறு தலைமுறையினர். ஆனால் இறைவனோ, நாஸ்திகமோ ஒரே காலத்தில் இருக்கின்றது. மற்றும்படி உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள் என்று தானே சொல்கின்றோம்.

உங்களின் முன்னோரைப் பின்பற்ற வேண்டிய தேவையில்லை. ஆனால் முன்னோர்களின் வழியை அசிங்கப்படுத்த நினைப்பது தான் கேவலம்.

உங்களுக்கு மற்றவர்களின் நம்பிக்கையைக் கேவலப்படுத்த எவ்வித உரிமை இருக்கின்றது.

Link to post
Share on other sites

நாரதர் அவர்கள் தன்னைத் தான் நான் சுட்டி எழுதுவதாக நினைத்துக் கொள்வது மிகவும் வேதனைக்குரியதாகும். நாரதர் அவர்களை என்றைக்குமே தனிப்பட்டரீதியில் பாதிக்க வேண்டும் என்று எக் கருத்துக்களையும் எழுதவில்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நான் சொல்லவருவது எல்லாம் பெரியார் என்பவர் காட்டிய திராவிடக் கொள்கை பிழையாது என்பது மட்டுமே!

--------------------------------------------

அது ஏன் வெறி என்கிறீர்கள் என்று எழுதுங்கள், அதென்ன வெறி ,ஏன் எதற்கு வெறி உருவாக வேண்டும் என்றும் எழுதுங்கள்,எந்தக் கருத்தையும் காரண காரியத்துடன் வைத்துக் கருதாடுங்கள்.அல்லாது விடின் வெறும் பெயர் கூவி அழைப்பதே கருத்தாடல் என்னும் கீழ்மையான நிலைக்குச் செல்ல வேண்டி இருக்கும்.அவ்வாறான கருதாடல்களை நான் விரும்புவதில்லை.ஏனெனில் அவற்றால் எவருக்கும் எதுவித பிரயோசனமும் இல்லை.கருத்துக்கு பதிற் கருத்து எழுதுவதே கருத்தாடல்,பெயர் கூவி அழைப்பது சிறு பிள்ளைத் தனமானது.

ராமசாமி நாயிடு காலத்தில் இருந்து, இன்று வரைக்கும் திராவிடத்துவம் கதைப்பவர்கள் எந்தப் பிரச்சனையிருந்தாலும், அதை எலல்லாம் விட்டு விட்டு, ஆரியத்தையும், பிராமணர்களையும எங்கே சாட வேண்டும் என்று சந்தர்ப்பம் தேடிக் கதைப்பதைப் பார்க்கப் புரியவில்லையா? ஜாதியை ஒழிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு, பார்ப்பாணர் என்று ஒரு சமுதாயத்தை ஒதுக்கியது அப்பட்டமான ஜாதி வெறி தானே! ஜாதியை ஒழிக்கும் விதம்?

திராவிடத்துவம் என்றால் என்ன என்றோ, அல்லது அதன் கொள்கை என்னவென்று இது வரைக்கும் உங்களால் ஒரு கட்டுரை இணைக்க முடிந்ததா? வெறுமே இந்து மதத்தைப் பற்றி வசைபாடுகின்ற ஆக்கங்கள் தானே இங்கு பதியப்பட்டன. திராவிடத்துவம் என்பதற்கு சுயமான வியாகிக்கியானம் இன்றி, மற்றக் கோட்டை அழித்து, உங்களின் கோட்டை பெரிதாகக் காட்டுவதற்காக தானே இத்தனை காலமும் கட்டுரைகள் புனையப்படுகின்றன.

இதைத் தான் சொல்கின்றேன். ஒரு வெறிபிடித்த மனிதனின் வழி என்று. உண்மையான தமிழனுக்கு போக்கு வேறு போக்கில்லாதால் அவரைப் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையைக் கொடுத்தது.

(நீங்கள் எப்படியான கருத்தாடலை விரும்புவதில்லை என்றோ, அல்லது எப்படியான கருத்தாடல் செய்வபர் என்றோ நான் அறியாது அல்ல. அதைத் திரும்பவும் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமில்லை. )

ராமசாமி நாயிடுவின் வழியைப் பின்பற்றுதலுக்கு தைரியம் வேண்டும் என்று சொல்வதன் மூலம், ராமசாமி நாயிடு வழியைப் பின்பற்றாதவர்கள் தைரியமற்றவர்கள் என்ற மறைமுக சிந்தனையை நீங்கள் செய்ய முயல்கின்றீர்கள். இதன் மூலம் மற்றவர்களை வாயை மூடும் வேலையை அரங்கேற்றுவது சரியானதா?

அவ்வாறே இந்து சமயம் ஒரு பாசியம் என்ற தலைப்பில் கட்டுரையாளரின் கருத்தை இணைக்கின்றீர்கள். இது கூட ஊங்களின் கூவி அழைக்காத கருத்தாடலின் ஒரு வடிவமாகக் கொள்ள முடியுமா? கற்பனைகளையும், ஊகங்களையும் வைத்து, பாசியம், இரத்த வெறி, அடக்குமறை, பாப்பாணி, ஆரியம் என்று கட்டுரை எழுதினால் அது உயர்வானது என்று கருதும் அளவுக்கு இழிநிலை அடையவில்லை.

இதையா வெறி என்றீர்கள், பெரியார் கூறியவாறு எத்தினை பார்ப்பனர்களை அடித்துள்ளார்? அல்லது அவரின் சொற் கேட்ட லட்ச்சக்கணக்காணவர்களில் எத்தினை பேர் இவ்வாறு பார்ப்பனரை அடித்து உள்ளனர்.பெரியார் கூறியது பார்ப்பனர்கள் எவ்வாறு கபடத் தனமாக காரியம் ஆற்றக்கூடியவர்கள் என்பதை உணர்த்தவே.முதலில் ஒன்றை விளங்க்கிக் கொள்ளுங்கள். நான் முன்னர் கூறியதைப் போல் பெரியார் பார்ப்பனர்களான தனி மனிதர்கள் மேல் எதிர்புக் காட்ட வில்லை.பார்ப்பனீயம் என்னும் வர்ணாச்சிரமத்தையும் அதனை தூக்கிப்பிடிக்கும் நியாயப்படுத்தும் மனிதர்களையும் நிறுவனங்களையுமே சாடினார்.அவர் கூறியதை நீங்கள் அர்த்தப்படுதுவதைப் போல்வெறியாக எடுத்தால் பல பிராமணர்கள் தமிழ் நாட்டில் அடித்துக் கொல்லப் பட்டிருக்க வேண்டும்

இங்குள்ள வாதத்துக்கு மட்டும் நான் பதில் எழுதவில்லை. ஏற்கனவே சில தலைப்புக்களில் என்னால் பங்கு கொள்ளாமல் முடியமால் போன தலைப்புக்களுககும் சேர்த்து தான் எழுதுகின்றேன். எனவே அங்கே, ராஜாதியைச் சந்தித்தது பார்ப்பாண வெறி கொள்ளாமைக்கு நல்ல எடுத்துக்காட்டு என்று ஒருவர் புனைந்திருந்தார். அவருக்கே சொல்கின்றேன்.

அடித்தாரா இல்லையா என்பது பிரச்சனையல்ல. ஆனால் அவர் அப்படி ஒரு வெறியை மக்களிடம் தூண்டினார் என்பதே முக்கியமானது. படிப்பறிவில்லாத சமுதாயத்தை தெளிவாக்குகின்றேன் என்று சொல்லிக் கொள்பவர்கள், அப்படி ஒரு வார்த்தையை அம் மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்று நம்பிச் சொல்லியிருக்க வழியில்லை.

தமிழ்நாடு கஸ்மீராகும் என்று 50 வருடாக பல அரசியல்வாதிகள் அறிக்கை விடுகின்றார்கள். அதற்காக ஆகிவிட்டாதா? அவ்வாறே பெரியார் பாப்பாணியை அடி என்று சொன்னது, நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போயிருக்கும். ஏனென்றால் ஊர்வலம் நடத்தினாலே பொலிஸ் பிடிக்கும் நிலை அங்கே!

சாதிய அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழச் சொல்வது வெறி என்றால்.சிங்கள பவுத பேரினவாததிற்கு எதிரான வன்முறைப் போராட்டமும் ஒரு வெறியாகத் தான் கணிக்கப்பட வேண்டும்.அடக்கு முறையான கோட்பாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் சொல்வது வெறி அல்ல, விடுதலை வேண்டி நிக்கும் வேட்கை.அடக்கு முறைச் சித்தாந்தங்கள் ஆன பவுத்த பேரினவாதமும் பார்ப்பனீயமும் ஒன்றே. இங்கே இந்த அடக்குமுறைச் சித்தாந்ததைத் தாங்கி நிற்கும் மதங்களே வேறு படுகின்றன.அடக்கு முறையாளர்கள் இவ்வாறான கிளர்ச்சிகளை வெறியாகச் சித்தரிப்பார்கள்.இங்கே சிங்களவர் புலிகளை தமிழ் இன வெறியர்கள் என்று கூறுவதையும் அப்படியானல் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் புலிகளின் பாதை வன் முறையானதே.பெரியார் பார்ப்பனீயத்திற்கு எதிராக வன் முறையயைப் பிரயோக்கிக்க வில்லை,ஆனால் வன் முறையான சொல்லாடல்களைப் பாவித்தார்.அந்த காலகட்டத்திற்கு அது தேவையாக இருந்த படியால்.எமக்கும் அதே போல் ஒரு வன் முறையிலான போராட்டம் இன்று ச்ங்கள பேரினவாததிற்கு எதிராக அவசியமானதாக இருக்கிறது.உங்களுக்கு இங்கிருக்கும் பிரச்சினை எனது மதம் இந்து மதம் அதனை பெரியாரும் , நாரதரும் குறைத்துச் சொல்கிறார்கள் என்பதே.கருத்துக்களோ சிந்தனையோ இங்கு உங்களுக்குத் தெரியவில்லை.அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றிற்கு எதிர் நிலையான வாதங்கள் எதனையும் நீங்கள் வைக்கவில்லை.

நியாயமான கருத்து. ஆனால் இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். சிங்களப் அரசை மட்டுமே எதிர்க்கின்றோம். சிங்கள மக்களை அல்ல. தமிழீழத்தில் சிங்கள மக்களும் சம தரப்பினராக வாழ வழி செய்யப்படுவார்கள் என்றே, தமிழீழச் சட்டம் சொல்கின்றது. ஆனால் பெரியார் பார்ப்பாணி என்று சொல்லி ஒரு சமுதாயத்தை ஒதுக்கினார். சிங்கள அரசு என்பது துரோகத் தமிழ் கும்பல்களையும், முஸ்லீம்களையும், உள்ளடக்கியது. அந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

பிராமணர்கள் என்று சொன்னாலும் அவர்கள் தமிழுக்கு நிறையச் செய்திருக்கின்றார்கள். பாரதி, ஆறுமுகநாவலர் என்று நிறையப் பேர்கள் உண்டு. ஆனால் இங்கே சிங்களப் பிரச்சனை என்பது இனம் சம்பந்தப்பட்டது. நீங்கள் இரண்டுக்கும் முடிச்சுப் போடுவது மூலம், சிங்கள அரசுக்கு எதிராக மக்கள் காட்டும் வெறுப்பினை இந்துமதத்துக்கும் சமப்படுத்தப் பார்க்கின்றீர்கள். இப்படியான வேலைகள் தவிர்க்கப்பட வேண்டியதாகும்

வெறியர்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தை பெரியார் வழி வந்தவர்கள் தான் பாவித்து வருவது வழமை. நீங்கள் இணைத்த பல கட்டுரைகளையும், ஏற்கனவே, சங்பரிவார் தொடர்பாக எழுதிய வார்த்தைப் பிரயோகத்தையும் மீட்டிப் பார்த்தால் புரியும்.

ராமசாமிநாயிடு திராவிடத்துவம் என்ன வென்று பேச வக்கிலாமல் இந்து மதத்தை நோக்கிக் குரைக்கின்றார் என்பதே எம் கவலை. கற்பனைகளையும் ஊகத்தினையும் வைத்து எழுதும் நாரதரோ, ராமசாமி நாயுடுவோ எழுதும் சிந்தனைகளுக்கு நானும் அதே ஊகத்தை வைத்து பதில் எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

எவரும் தமது கொள்கைகளை இன்னோருவர் மேல் கட்டமுடியாது.ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கும் அதனை நீயாயமானதாகக் கருதியுமே மக்கள் ஒருவர் பின் அணி திரளுகிறார்கள்.பெரியார் எவரையும் வற் புறுத்தி தனக்குப்பின்னால் வரும் படி சொல்லவில்லை.மேலும் நீங்கள் சொன்னவாறு பெரியாரின் ஆளுகை அவர் இருந்த நிலைப்பரப்பில் மட்டுமே இருந்ததற்கான காரணங்கள் மிக எளிது.அந்தக்காலத்தில் இப்போது இருப்பதைப் போல் பொது சன ஊடகங்களிருக்கவில்லை.மேடைப் பேச்சுக்களாலும்,பத்திரிகைகள
Link to post
Share on other sites

உங்களுக்கு உரியது எது? பார்ப்பனீயமா? வேண்டாதனவற்றை இழப்பதால் நன்மைகள் தானே ஏற்படும்? பரீட்சையில் சித்தியடைய தெருப் பிள்ளையாருக்குத் தேங்காய் அடித்தால் சரி என்றால் பிள்ளையார் கோவில்கள் பெருகும் ஆனால் பரீட்ச்சயில் சித்தி பெற ஏலுமா?இவ்வாறான குறுக்கு வழிகளால் லாபம் பெறலாம் என்பதால் தான் கோவில்கள் பெருகுகின்றன.இவற்றிற்கு அடிப்படைக் காரணம் மத நம்பிக்கை என்பது இலகுவானது.ஒருவன் தன்னில் நம்பிகை வைத்து முயற்ச்சி செய்வதை விட ,கடவுளுக்கு நான் லஞ்ச்ம் அல்லது ஜெபம் செய்தால் அவர் எனக்கு உதவி செய்து கொடுப்பர் என்பது

இலகுவானது,ஆனல் இவ்வாறான நம்பிக்கைகள் அந்த நம்பிக்கை உடையவருக்கு எந்தப் பலனையும் அழிக்கப் போவதில்லை.ஆனால் உண்டியல் வைத்திருக்கும் கோவில் முதலாளிக்கு நல்ல லாபத்தைத் தரும்.ஒரு வியாபாரத்திற்கான சந்தையும் குறைந்த முதலீடும் கூடிய வருமானமும் இருக்கும் போது அந்த வியாபாரம் பல்கிப்பெருகும் என்பது வியாபாரம் சம்பந்தமான அடிப்படைச் சமன்பாடு,கோவில்கள் இதுக்கு விதி விலக்கல்ல, புலத்தில் இது நிதர்சமான உண்மை.அந்த ஈழப்பதீஸ்வரனே இதற்குச் சாட்சி.

குதர்க்கமாகக் கதைப்பது அன்று தொடக்கம் இன்று வரை பெரியார் வழி வந்தவர்களின் பழக்கம் என்பது ஏதோ உண்மை தான். தேங்காய் உடைத்தால் பரிட்சையில் சித்தி என்று அல்ல. பரீட்சைக்குப் போறகின்றவனுக்கு ஒரு துணிவைக் கொடுக்க கூடும். பலருக்கு பரிட்சை என்றால் கைகால் நடுங்கும். அல்லது டொய்லட்டுக்கு தொடர்ந்து போகின்றவர்களுக்கு, இறைவன் துணை இருப்பார் என்று நம்புவது தப்பல்ல.

பலர் மேலே சிவமயம் கூடப் போடுவார்கள். அது அவர்களது தனிப்பட்ட நம்பிக்கையாகும்.

புலத்தில் பணம் கிடைப்பதாக ஆலயம் உருவாவது உண்மை தான். ஆனால் ஊரை எடுத்தால் பெரும்பாலனவர்களுக்கு உரித்துடைய ஆலயங்கள் என்று இருக்கின்றன. அங்கே பணத்தைச் சம்பாதிக்கும் எண்ணமிருக்காதே! அப்படிப் பார்த்தால் அன்னதானம் செய்வது எல்லாம் எதற்காக.

வேண்டாததை இழக்கலாம் என்றால், வயது போனவர்களை விவேக் பாணியில் தூக்கிப் போடுவீர்களா?

கோவில் உண்டியல் வருமானத்தை ஒரு தனிப்பட்ட ஆளுக்கு போகும் அளவுக்கு சிலபேர்கள் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள். துஸ்பிரயோகம் செய்வதற்காக ஒன்று இல்லாமல் போகவேண்டுமா? புலிகளின் பெயரைப் பாவித்து பலர் கொள்ளையடிக்கின்றனர். அதற்காக புலிகள் தேவையில்லை என்று அர்த்தம் வருமா?

விடை மிக எளிது மொவுரியர்,போத்துக்கேயர் இருந்த போது பெரியார் இருக்கவில்லை.

அந்தகாலத்தில் எது அடக்கு முறைச் சித்தான்ந்தமாக அந்தச் சமூகத்தில் இருந்ததோ அதனை பெரியார் எதிர்த்தார்.

இந்தக் கேள்வி உங்களிடம் கேட்கப் பட்டது என்பதைப் புரிவீராக. ஆரியர் அப்போது செய்த தவறுக்காக ஆரியரை எதிர்ப்பதாக நீங்கள் சொன்ன பதிலுக்காகவே உங்களைக் கேட்டேன்.

ஏன் பெரியாருக்கு மட்டுமா மேலைத் தேய மோகம் இருக்கு,ஏன் நீங்கள் இப்போது இருந்து எழுதும் கணனியும் மேலைத் தேயவர்களின் கண்டு பிடிப்புத் தானே உங்களுக்கும் இல்லையா மேலைத் தேயவர் மேல் மோகம்?

மேலும் நிர்வாண சங்கம் என்பது பாலியல் சிந்தனையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளைக் கொண்டிருப்பது என்பது தவறான கருத்து.இது பற்றி அறிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள்.

கோவிற் சிற்பங்களில் காணப்படும் நிர்வாணமும் பாலியல் மோகத்தையா தூண்டுகின்றன?பார்ப்பவர்கள் கண்களில் தான் பாலியல் வக்கிரம் இருக்கிறது. நிர்வாணத்தில் அல்ல.பாலியல் சிந்தனை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் வக்கிரமானதாக அல்ல.

பெரியார் ஏன் அப்படிச் செய்தார் அதற்கான காரணங்கல் என்ன என்பதை அறியாமல் அவர் மேல் அவதூறைப் பரப்ப முனைவோர் சொல்லும் சம்பவமே இது.இதனைப் பெரியாரே மறைக்க வில்லை.தனது படத்தை வெளியிட்டவரும் அவரே.உலகில் பல் வேறு வகையான சிந்தனைகளை அறிவை வளர்க்க அவர் பல்வேறு வகையானவர்களுடன் தொடர்பு கொண்டார்,ரசிய ஜேர்மனி என்று பயணம் செய்தார்.அவருக்கு இருந்த தேடலால் தான் அவருக்கு அவ்வாறான பல் துறை ஆளுமை கிடைத்தது.

நல்லதை மட்டுமே உள்வாங்குவோம் என்பது தான் என் கருத்தே தவிர, எல்லாம் என்றில்லை. நிர்வாண சங்கம் என்பது நல்லது என்று எண்ணினால் ஆங்கிலயர் கொண்டு வந்த ரவிக்கை போடாத் தடைக்கு எதிராக ஈவேரா செயற்பட்டிருக்கத் தேவையில்லையே!

நிர்வாண சங்கம் பாலியல் சிந்தனையைப் பகிர்வது தான் என்பது என்னால் தாராளமாக நிருபிக்க முடியும். தேவை என்றால் தனிமடலில் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே நடக்கின்ற ஒற்றுமையாடல் என்பது ஒவ்வொன்றும் பாலியல் சிந்தனையைத் தூண்டுவதானது. கண்ணதாசனும் இதில் இருந்ததாக அவரது நூலில் எழுதியிருந்தார். அது அவரது சுயசரிதைக் குறிப்பில் என்று நினைக்கின்றேன்.

கோவிற் சிற்பங்கள் சரி என்றால் இவர் ஏன் தமிழ்நாட்டில் அதை எதிர்த்தார். ரசியா ஜேர்மனியில் அவரது உல்லாசப் பயணம் அவரது மேலைத்தேய மேகத்துக்கு அடையாளமாக இருக்கலாம். அல்லது இந்து சமயத்தைத் தகர்ப்பதன் மூலம் பிற மதங்களைப் பரப்ப பிற சமூதாயத்திற்கு வழி சமைத்த அடையாளமாகவும் இருக்கலாம்.

Link to post
Share on other sites

தூயவன்! நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீhகள்.

மனித குலம் ஆரம்பத்தில் நம்பிய கடவுள்கள் இன்று இல்லை.

மனிதன் ஆரம்பத்தில் கண்டு பயந்த, வியந்த அனைத்து விடயங்களையும் கடவுள் ஆக்கினான்.

காற்று, நீர், மழை, நெருப்பு, புயல், ஆகாயம், நிலம் என்று எல்லாவற்றையுமே கடவுள் என்று சொன்னான்.

அறிவு வளர்ந்த பொழுது அவைகள் கடவுள்கள் இல்லை என்று சொல்ல அவன் தயங்கவில்லை. என்னுடைய நம்பிக்கையை மாற்ற மாட்டேன் என்று அடம்பிடிக்கவில்லை.

கடவுள் பூமியை தட்டையாக படைத்தார் என்றுதான் மனிதன் பல ஆயிரம் வருடங்களாக நம்பினான்.

இன்றைக்கு அந்த நம்பிக்கையை மாற்ற மாட்டேன் என்று சொல்ல முடியுமா

பூமிதான் நடுவில் இருக்கிறது. மற்றைய கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன என்றுதான் கடவுள் நம்பிக்கையாளர்கள் பல ஆயிரம் வருடங்களாக சொல்லி வந்தார்கள். கடவுள் பூமியில் மனிதர்களை படைத்துள்ளார். பூமிக்கு மேலே நின்று கடவுள் பூமியைக் காக்கின்றார். ஆகவே பூமிதான் மையத்தில் இருக்கும் என்று அவர்கள் அடித்துச் சொன்னார்கள்.

இன்றைக்கு அப்படி சொல்ல முடியுமா?

இமய மலையில் சிவபெருமான் தன்னுடைய குடும்பத்தோடு மாட்டின் மீது இருக்கிறார் என்று ஒரு காலத்தில் நம்பினார்கள். இன்றைக்கும் அதைத்தான் நம்புவேன் என்று அடம்பிடிக்க முடியுமா?

அப்படி இருந்தால் "மிருக வதை தடுப்புச் சட்டத்தின்" கீழ் சிவன் குடும்பத்தை உள்ளே தள்ள வேண்டும்.

500 வருடங்களுக்கு முன்பு இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் நம்பியதை, பின்பற்றியதை இன்றைக்கும் பின்பற்றுவதில்லை.

இன்றைக்கு நம்புவதை 500 வருடம் கழிந்து நம்பப் போவதில்லை.

கடவுள், மத நம்பிக்கை என்பது உறுதியானது அல்ல. அது மாறிக் கொண்டே இருப்பது.

அறிவு வளர, வளர புதிய உண்மைகள் வரத்தான் செய்யும்.

நம்பிக்கையை மாற்ற முடியாது என்பது, மனித முன்னேற்றத்திற்கு எதிரானது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தை பெரியார் மீது துயவன் சில அவதூறுகளை விதைத்திருக்கிறார். ஆனால் எங்களுக்கு கோபம் வரவில்லை. இந்தப் பக்குவத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் அந்த ஈரோட்டுக் கிழவன்தான்.

பெரியாரின் கருத்துக்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாதென்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. பெரியார்கூட தான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் பெரியாரைக் கொச்சைப் படுத்துபவர்கள் அறிவுத் தளத்தில் நின்று கொண்டு அவரை விமர்சிக்காமல் இந்துத்துவத்தின் நிழலில் ஒதுங்கியிருந்து கொண்டு விமர்சிக்கிறார்கள். கருத்துக்களை மறு ஆய்வு செய்வதை விட்டுவிட்டு அவரை தனிப்பட்ட முறையில் தாக்குகின்றனர். எல்லோரும் கம்பனுக்கு விழா நடத்திக்கொண்டிருந்த வேளையில் திருவள்ளுவருக்கு விழா நடத்தியவர் பெரியார்.

1973 ஆம் ஆண்டு அவர் மறைவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன் அவரது இறுதிப் பேருரையில் அவர் கூறிய ஒரு வரியை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

என் தமிழனுக்கு என்னால் விடுதலை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே! (தமிழ் நாட்டு விடுதலையைத்தான் குறிப்பிடுகிறார்) நான் எல்லாம் ஒரு போராளியா என தன்னைத்தானே நொந்து கொள்கிறார். கூடவே அவரது வயதின் (94 வயது அப்போது) இயலாமையால் ஐயோ! அம்மா! என்ற முனகல் சத்தமும் கேட்கிறது.

தமிழுக்கு சிறு தொண்டாற்றிவிட்டு தங்களை பெரிதாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் 70 ஆண்டுகள் இடைவிடாத பொதுப்பணிகள் செய்தும் தன்னைத்தானே நொந்து கொண்டவர் பெரியார்.

அவர் நேசித்தது மனிதம், வெறுத்தது ஆதிக்கம், காணவிரும்பியது சமத்துவம். இதுதான் பெரியார். இதற்கு குறுக்கே வந்த அனைத்தையும் அவர் போட்டுடைத்தார். இன்று ஈழப்போராட்டத்தை அதரிப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் பெரியாரியவாதிகள்தான். அவர்களிடம்தான் தமிழ்த் தேசியப்பற்று அதிகமாக உள்ளது. அங்கும் பெரியார்தான் நிற்கிறார்.

Link to post
Share on other sites

யரைப் பார்த்துக் கேட்கிறீர்கள் என்று விளங்கவில்லைஇ தூய தமிழில் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்ட புலிகளைப் பார்த்தா? அல்லது என்னைப் பார்த்தா? சபேசனைப் பார்த்தா? இல்லை அப்துல் காதரைப் பார்த்தா?

என்னைப் பார்தது என்றால் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தூய தமிழ்ப் பெயர் தான்.

ஆரியப் பெயர்கள்என்றும்,அதற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து கொணடிருந்தவர் சபேசன். அதைத் தான் கேட்டேன்.ஆரியப் பெயர்களாவது தமிழ் ஒலிநயத்துக்கு ஒத்தது போல வருகின்றது. ஆனால் கிறிஸ்தவ, அல்லது முஸ்லீம் பெயர்கள் ஒரு துளியும் ஒவ்வாத போது, அதற்கு எதிராக ஏன் என்னும் கிளர்ந்து எழவில்லை என்று. அவருக்கு ஆரிய எதிர்ப்பு மட்டும் தான் வருமா என்ன??

புலிகள் தூயபெயர்கள் வைக்கின்ற முயற்சி பாராட்டுக்குரியது தான்.அது மத சிந்தனைகளைத் தாண்டி எல்லோரும் வைக்க வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

உங்களுக்கு இறைவன் துணை புரிவார் என்பது உங்கள் நம்பிக்கை அதே போல் எனக்கு நானே துணை என்பது எனது நம்பிக்கை.இங்கே நீங்கள் உங்கள் நம்பிக்கையைச் சொல்கிறீர்கள் நான் எனதுன நம்பிக்கையைச் சொல்கிறேன் அதே போல் பெரியார் தனது நம்பிக்கைளைச் சொல்கிறார்.அதில் எது சரி என்பதை வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்.ஆனல் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனது நம்பிக்கையே சரியானது பெரியாரினதும்இ நாரதினரதும் நம்பிக்கைகள் பிழையானவை என்று.சரி அவை பிழையானவை எனில் ஏன் எதற்கு என்று நீங்கள் சொன்னால் தானே மற்றவர்களுக்கும் உங்கள் நம்பிக்கைச் சரி என்று சொல்வார்கள் அதை விட்டு விட்டு பெரியாரும் நாரதரும் ஆரிய வெறியர்கள் படித்தவர்கள் என்ற திமிரில் எழுதுகிறார்கள் என்று பெயர் கூறி அழைப்பதால் உங்கள் நம்பிக்கை சரியான தென்றதாகி விடுமோ?

அதை வரவேற்கலாம். அவ்வாறு நடந்திருந்தால்! பெரியார் தன் நம்பிக்கையைச் செய்யாமல், மற்றவர்களின் நம்பிக்கையைத் தானே சிதறடிக்கின்றார். அது தானே இங்கே பிரச்சனை! திராவிடத்துவம் என்பது எவ்வகையானது என்ற நிலையில்லாமல், ஆரிய எதிர்ப்பை மட்டுமே, காட்டுவது தானே பிழை என்கின்றேன். ஆரியத்தை எதிர்ப்பது தான் தமிழனுக்குரிய உண்மையான சிந்தனை என்றால் மற்றய மதங்களைப் பின்பற்றுவர்களைத் தமிழர் இல்லை என்று நினைக்கின்றாரா?

நாஸ்திகர்கள் தங்களுக்கு பகுத்தறிவு உண்டு என்று பெருமை பிதற்றுபவர்கள். அப்படியிருக்க அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுய சிந்தனை இருக்க வேண்டும். இந்து மதத்தில் எவ்வாறு தலையிடுவது தவறு என்று சொல்கின்றேனோ,அவ்வாறு உங்களுடைய சிந்தனைகளில் நான் எவ்வாறு தலையிடமுடியும்?அவ்வாறு இழிச் செயலைச் செய்ய வேண்டியதில்லையே!

நான் இங்கே நாஸ்திகம் சரியா,பிழையா, ஏமாற்றுவேலையா என்ற விவாதத்துக்குள் வரவில்லையே! ஆனால் தாங்கள் என்னவோ படித்த மேதைகள் போல எங்களின் நம்பிக்கையில் தலையிட உங்களுக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது என்று தானே கேட்கின்றேன். பெரியாரைப் பெயர் சொல்லி அழைத்தால் கோபம் வருகின்றது உங்களுக்கு. ஆனால் இத்தனை காலமும் இந்து மதத்தைச் சாடிக் கொண்டு திரிந்த எங்களுக்கு எவ்வளவு கோபம் வரவேண்டும்.இப்போது தெரியும் சகிப்புத் தன்மை யாரிடம் அதிகம் என்று.

ஒரு நீதி மன்றத்தில் ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர்கள் உரிமை கோரினால் அதற்காக மரபணுப்பரிசோதனை செய்தே அது யார் குழந்தை என்று தீர்மானிக்கப்படுகிறது.இங்கே இது எனது பெற்ரோர் என்கின்ற குறுட்டு நம்பிக்கையை விட மரபணு பரிசோதனை தேவாயான ஒரு விடயமாக அந்த நம்பிக்கையைப் பரிசோதிக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.ஆகவே தேவையின் நிமித்தமே நம்பிக்கைகள் கேள்விக்கு உள்ளாக்கப் படுகின்றன தேவயற்ற தருணங்களில் அவற்றைக் கேள்வி கேட்பதற்கான காரணம் எதுவுமில்லை.கடவுள் நம்பிக்கை ஒரு சமூகத்தைப் பாதிக்கும் போது தனி மனித அபிவிருத்தியைப் பாதிக்கும் போது அந்த நம்பிக்கை கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது அவ்வளவே.இந்து சமயம் வர்னாச்சிரமும் ஒரு சமூகத்தைப் பாதிப்புக் உள்ளாக்கியதால் தான் அந்த நம்பிக்கை கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.

நீங்கள் புரிவின்றி எழுதுபவர்கள் என்று அடிக்கடி நிருபிக்காதீர்கள். நான் சொன்னது ஒவ்வொருவனுக்கும் உள்ள நம்பிக்கையை. உதாரணத்துக்கு நாரதர் என்ற நீங்கள் உங்கள் பெற்றோரையோ, குழந்தையையோ மரபணு பரிசோதனை செய்து தான் ஏற்றுக் கொண்டீர்களா? இல்லையே! அது போலத் தான் கடவுள் என்பதும் ஒரு நம்பிக்கை, அதைப் பரிசோதிப்பது தவறு என்கின்றேன்.

எனவே, உங்களுக்கு விருப்பம் என்றால் பெற்றோரைச் சந்தேகப்பட்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆனால் எமக்கு பெற்றோர் மீதுள்ள நம்பிக்கையைச் சீண்டுவதோ, அல்லது ஆராய வேண்டும் என்றோ கேட்பது என்ன நியாயம்?

அதேயே தானே உங்களிடம் கேட்கிறேன்? எனது நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நானோ பெரியாரோ உங்கள் கையைப் பிடித்து இழுக்கவில்லையே? நீங்கள் தானே எங்கள் நம்பிக்கைகளைக் கூற முடியாது என்கிறீர்கள்? ஏன் உங்கள் நம்பிக்கை மீது உங்களுக்கு அவ்வளவு சந்தேகமா? அவ்வளவு பலவீனமானதா உங்கள் நம்பிக்கை?

பெரியாரோ, நீங்களோ நம்பிக்கையைப் பிடித்து இழுக்கவில்லை என்றால் எங்களின் நம்பிக்கை குறித்து அசிங்கமான கட்டுரைகள் எதற்கு? வெறித்தனமான வார்த்தைப் பிரயோகங்கள் எதற்கு? நான் ஒழுக்கமானவன் என்பதால் என் மீது எவ்வளவு அவதூறும் பேசலாம் என்பது போலல்லவா உங்களின் கருத்து இருக்கின்றது.

உங்களுக்கு மட்டும் தான் உயரிய அறிவு என்றும் மற்றவர்கள் முட்டாள் என்றும் தலைக்கனம் இருக்கின்றதா என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

இல்லை என்னை விட அறிவில் உயர்ந்தவர் நீங்கள்இ நான் முட்டாள்.மேலும் சொல்வதற்கு எதாவது உருப்படியா இருகிறதா?

அவ்வாறு எண்ணிக்கொள்வதால் தானே புத்திசொல்லும் பேர்வழியாகக் காட்டமுனைகின்றார்கள். மற்றவர்கள் என்னவோ மடையர்கள் போலவும்,ஆரிய வெறிக்கு சாயம் பூசி தங்களைப் பகுத்தறிவாளர் போலவும் காட்டமுனைகின்றார்கள்.

அதைத் தான் சொன்னேன் கடவுள் இருகிறார் என்பது இலகுவானது ஆனால் கடவுளை மறுப்பதற்கு மனதில் தெளிவும் இ தைரியமும் வேண்டும் என்று.

ஒரு நூற்றாண்டு காலத்தினுள் தன் பின்னால் நின்றவர்களைத் தம்பின்னால் இழுக்க முடியவில்லை. ஊரை இழுக்க வெளிக்கிட்டாராம். இந்த ஆரிய வெறியர். ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே இவரது வழியைப் பின்பற்றியவர்கள் திசைமாறிப் போகின்றபோது முதலில் அவரைத் திருத்தி பெரியார் வழிக்கு கொண்டு வர முயலுங்கள், பிறகு ஊரைத் திருத்தலாம்.

அதைத் தான் நானும் சொல்கிறேன் மதத்தைப் பின் பற்றுவதா இல்லையா என்பதை தனி மனிதர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.சிந்திப்பவன் எவனுமே சிந்தனையாளன் தான்.ஆகவே மனிதர்கள் எல்லோருமே சிந்தனை ஆளர்கள் தான்.மதம் என்பதுவும் ஒரு சிந்தனை தான்.ஆகவே சிந்தனையை மனிதரில் இருந்து பிரிக்க முடியாது. நான் சிந்திப்பதை கூறாதே என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது.மனித சிந்தனைகளை இமதங்களை கேள்வி கேட்க எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிறது.கேள்வி கேட்பதால் தான் சிந்த்னை வளர்கிறது.சிந்தனை மாற்றங்களே சமுதாய மாற்றங்கள் ஆகின்றன.உங்கள் சிந்த்தனை நிச்சயமாக தலைக்கணம் இல்லை தூயவன் ஆனல் எனது சிந்தனை தலைக்கணம் தான்

மதத்தைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று சொன்னாலும், அது என் உரிமைக்குள் தலையிவது எவ்வளவு தூரம் சரி. உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் விலத்திப் போகலாம். ஆனால் என் நம்பிக்கையில் சிதைக்க உரிமையில்லை. உங்களுக்குரிய நம்பிக்கையை மட்டுமே விளம்பரம் செய்யுங்கள்.ஆனால் எம் நம்பிக்கையின் மரியாதையைக் குலைக்க யோக்கியம் ஏதும் இல்லை என்பது தான் நியதி.

திராவிடம் என்பது எமக்குள் நிலவி வந்த சொல் என்பதை ஆதாரப்படுத்த முடியுமா? திராவிஸ் என்று மேலைத்தேயர் வைத்த சொல் ஒன்றையே நீங்கள் பாவிக்கின்றீர்கள். இல்லை என்றால் ஆதாரப்படுத்துங்கள்.

இந்து என்பது 6 சமயங்களைச் சார்ந்தவர்களைக் குறிக்கும் என்பது தான் இப்போது அனைவரும் எடுத்துக் கொண்டது. எனவே இதன் அடிமுடி தேடவேண்டிய தேவையில்லை. எனவே அது இந்து நதிக்கு அப்பால் பட்டது என்று மற்றய மதங்களைச் சேர்ந்தவர்கள் கூடக் கருதியதில்லை. எனவே இந்து என்றால் 6 பிரிவுகளும் சேர்ந்த ஒரு விதம்என்பதே அனைவரும் புரிகின்றனர்.அதை மாற்ற வேண்டிய தேவையில்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.