Jump to content

DHEEPAN -red carpet- (en) Cannes 2015


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீபன் படகுழுவினருக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபனாக நடித்து தனது இன்னொரு பரிமாணத்தையும் சிறப்பாக வெளிப்படுத்திய கதைசொல்லி ஷோபாசக்திக்கு பாராட்டுக்கள் உரித்தாகுக.

படம் எப்படியும் பார்க்கக் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய கார்டியனில் 4 நட்சத்திரங்கள் கொடுத்துள்ளார்கள்..

--

Dheepan review - Tamil Tiger loose in the urban jungle makes powerful thriller

4 / 5 stars

Andrew Pulver

The new film from Rust and Bone director Jacques Audiard has a former fighter in the Sri Lankan civil war trying to make a new life in France with a fake family

b52defac-a0d8-430b-a90f-c338498f03b6-620

Antonythasan Jesuthasan as Dheepan. Photograph: PR

Jacques Audiard has made his name, in films such as A Prophet, Rust & Bone and The Beat That My Heart Skipped, for a kind of ecstatic violence of the soul. Dheepan, his new film about a former Tamil Tiger fighter looking for a new life in France, certainly has some of the director’s trademark ferocity, especially in its final minutes, but it displays what I can only describe as dialled-down Audiard. Indeed, much of the time it even ambles, peacefully, with nothing much happening.

It begins with a short sequence in Sri Lanka: the civil war is over, the Liberation Tigers are burning their dead comrades’ bodies and swapping fatigues for civilian clothes to try and melt into the general population. In a refugee camp, a young woman is looking for unaccompanied children: not for anything as gruesome as sex-trafficking or slavery, we discover, but to be part of a hastily thrown together fake family, to help one such fighter get clear of the battle zone and into Europe. The three of them, essentially strangers to each other, eventually find themselves in France, and we watch them attempting to adapt to the precarious new reality: negotiating their way through an immigration hearing, peddling tat on the pavements, scattering at the inevitable shout of “les flics!”

The man, going by the name Dheepan (Antonythasan Jesuthasan), eventually gets a job as a caretaker, and the trio make their way to a rundown housing estate; a recently abandoned flat is opened up and given to them to make their home. New codes must again be learned, and new negotiations made – particularly with the twitchy-looking gang who control the local drugs trade, and who take over one of the nearby blocks each morning. Dheepan’s role as a caretaker gives him a pass, though, and he and his compatriots settle cautiously into their new life, admittedly at the roughest end of France’s social scale. The kid, Illayaal (Claudine Vinasithamby), starts school, and Dheepan’s “wife” Yalini (Kalieaswari Srinivasan) gets a job too, cooking and cleaning for a man called Habib, evidently suffering from dementia. (Even here, though, the paranormality is in evidence: the senior figures in the downstairs drug gang have taken over Habib’s sitting room as a sort of office-cum-R&R space.) Through the mundane business of living, the three edge towards intimacy, even approximating in actuality the family they are pretending to be.

The arrival of a recently released prisoner, Brahim (Vincent Rottiers) about halfway into the film, triggers a dramatic change. Reclaiming leadership of the gang, his presence infuses events with a sort of trigger-happy nervousness. Yalini conceives a wordless, terrified infatuation for him; but more dramatically is the subliminal effect on Dheepan. Increased tension with the gang results in a fight, and a stand-off; Dheepan reacts to the threat by returning to guerrilla mode, the psychological faultlines of PTSD clearly visible.

In some ways, this material is not unfamiliar: British audiences may be reminded of the likes of Dead Man’s Shoes, or Harry Brown, both of which feature former military types using their skills in an urban conflict zone. But Audiard possesses a lyricism that makes his film stand out, even in the final bloody confrontation. Dheepan is as interested in the accretion of detail, and thereby understanding what makes a family unit work, as in the rituals of street combat – though, as he’s shown in the past, he’s very good at that too. This may not be the director’s most immediately electrifying film, but in its understated way, it’s an immensely powerful work.

http://www.theguardian.com/film/2015/may/21/dheepan-review-tamil-tiger-jacques-audiard-cannes-2015

சிவப்புக் கம்பளத்தில் ஷோபாசக்தி நின்றாலும் இவரை அடிக்க ஆளில்லை!

060b596b-52ca-4c8e-9e50-8c01e4963da3-102

Link to comment
Share on other sites

படம் இன்னும் பார்க்கவில்லை. அதி உயர்ந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் தெரிவாயிருக்கும் திரைப்படத்தில் பணியாற்றிய சோபாசக்தி உட்பட அனைத்து ஈழக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தீபன் திரைப்படத்துக்கு Palme d’Or  என்ற  கேன்ஸ் விழாவின் உயர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

 

பிரான்சில் நேற்றிரவு நடந்த உலகப் புகழ்பெற்ற 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில், முன்னாள் ஈழப்போராளியின் புலம்பெயர் வாழ்வை சித்திரிக்கும் தீபன் திரைப்படம், Palme d’Or  என்ற உயரிய விருதை பெற்றுள்ளது.

பிரான்சை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஜக்குவஸ் ஓடியேட், இயக்கிய இந்த திரைப்படம், ஈழப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளி ஒருவரும், மற்றொரு தாயும் மகளும் பிரான்சில் அடைக்கலம் தேடியதில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சித்திரிப்பதாகும்.

பிரான்சில் நடந்து வந்த 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபன் உள்ளிட்ட 19 திரைப்படங்கள், இந்த விழாவின் உயர் விருதான Palme d’Or  விருதுக்கு போட்டியிட்டன.

Cannes-deepan-1.jpeg

Cannes-deepan-1.jpg

Cannes-deepan-2.jpg

நேற்றிரவு நடந்த இறுதி நாள் நிகழ்வில் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் தீபன் திரைப்படத்துக்கு Palme d’Or  என்ற  கேன்ஸ் விழாவின் உயர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நாயகனாக ஜேசுதாசன் அந்தோனிதாசன், நாயகியாக காளீஸ்வரி சிறீனிவாசன், சிறுமியாக கிளாடின் விநாசித்தம்பி ஆகியோர் நடித்திருந்தனர்.

ஈழத்தமிழரின் அவல வாழ்வியலைக் கூறும் திரைப்படம் ஒன்று உலகின் அதிஉயர் விருதுக்குத் தெரிவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

http://www.puthinappalakai.net/2015/05/25/news/6480

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான திரைப்படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர் விருது

25 மே 2015

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இலங்கை தொடர்பான திரைப்படமொன்றுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸிற்கு புலம்பெயர்ந்து புகலிடம் கோரும் இலங்கையர் தொடர்பிலான கதைக் கருவினை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜெக்ஸ் அயுடியார்ட் இயக்கியுள்ளார். முன்னாள் போரளி ஒருவர், தமிழ் பெண் மற்றும் சிறு குழந்தையொன்று ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதை நகர்கின்றது. பல சர்வதேச திரைப்படங்களை பின்தள்ளி தீபன் என்ற இந்தத் திரைப்படம் விருது வென்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள கலைஞர் இலக்கியவாதியான அன்தனிதாசன் ஜேசுதாசன் (ஷோபா சக்தி) என்பவரே இந்த திரைப்படத்தில் தீபனாக நடித்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவின் Palme D’Or ச விருது தீபன் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120108/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர் விருதைப் பெற்ற படத்தில் தீபனாக நடித்த எழுத்தாளர் ஷோபாசக்திக்கும் திரைப்பட குழிவினருக்கும் பாராட்டுக்களைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். :)

மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக வருபவர்களை போலி அகதிகள் என்று நம்மவர்களே இழிவாகப் பேசும் நிலையில், போருக்குப் பின்னர் போலியான குடும்பமாக பிரான்ஸுக்கு வந்து வாழமுற்படும் முன்னாள் தமிழ்ப் போராளியைப் பற்றிய கதை கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்விருது பெற்றிருப்பது அகதிகளைப் பற்றிய ஐரோப்பியர்களின் சிந்தனைகளில் மாற்றங்களைக் கொண்டுவரலாம்.

ஆனால், தீபனாக நடித்தவர் ஷோபா சக்தி என்ற காரணத்தாலேயே யாழில் உள்ள பலர் இப்படத்தை நிராகரிக்கவும் ஷோபாசக்தியை வாழ்த்தாமலும் விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!
e53abe21dde1f3c76adf7143e6f3bd12.jpg

 பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது. 

பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 

பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது. 

ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார். 

புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது. 

கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=896224050825333739#sthash.loxAgvQ3.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆனால், தீபனாக நடித்தவர் ஷோபா சக்தி என்ற காரணத்தாலேயே யாழில் உள்ள பலர் இப்படத்தை நிராகரிக்கவும் ஷோபாசக்தியை வாழ்த்தாமலும் விடுவார்கள்.

 

நான் நினைக்கிறேன் யாழ்கள உறவுகள் கலையை கலையாய் பார்ப்பார்கள் ,புலியை புலியாக பார்ப்பார்கள் என்று :D

Link to comment
Share on other sites

பிரான்சின் முக்கிய செய்திகளில் தீபன் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

 

https://fr.news.yahoo.com/video/cannes-la-palme-dor-à-204212120.html?format=embed&player_autoplay=false

Link to comment
Share on other sites

அதி உயர்ந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் தெரிவாயிருக்கும் திரைப்படத்தில் பணியாற்றிய சோபாசக்தி உட்பட அனைத்து ஈழக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்ற ஐரோப்பியர்களின் எண்ணக்கருவில் சிறிதளவேனும் மாற்றத்தை இந்த திரைப்படம் மூலம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

நன்றி இயக்குனர் மற்றும் கலைஞர்களுக்கு. விடுதலைப்புலியாக "நடித்த" சோபா சக்திக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் இலக்கியவாதிகளில் ஒரு படி மேலே போய்விட்ட உங்களை வாழ்த்த புலிகளை வைத்து பிழைக்கும் இலக்கியவாதிகளுக்கு மனம் இல்லாமல் போனதில் நான் குறை ஒன்றையும் காணவில்லை. அவர்களும் "நடித்து" கொண்டு தான் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி புலியை புலியாயும் கலையை கலையாயும் பார்ப்பது?

சங்ககாரவுக்கு கொடுத்த அதே அடிதான் சோபாவுக்கும்.

சங்காவாவது பரவாயில்லை - காண்டீபனுக்குரிய இடத்தை பறித்தது மட்டும் தான்.

சோபா அப்படியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி உயர்ந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் தெரிவாயிருக்கும் திரைப்படத்தின்  அனைத்து ஈழக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். 

 

பிரான்சில் மட்டுமன்றி  உலகமெங்கும் இப்படம் புலிகளைப்பற்றி  மீண்டும்  பேசவைத்திருக்கிறது.

சரியாகவோ

தப்பாகவோ இவை பேசப்படலாம்

ஆனால் மீண்டும் பேசப்படப்போகிறது என்பதும் தர்மம் வெளியில் வரலாம் என்பதும் தமிழரது நம்பிக்கையாக உள்ளது. ஆனாலும  இதில் சோபா சக்தியின் பங்கும் அவரது கருத்துக்களுமே முக்கியமாக கவனிக்கப்படப்போகின்றன

அவரது கருத்துக்கள் சார்ந்து தமிழர்கள் கவலைப்படுவதில் நியாயமில்லாமல் இல்லை.....

சோபா சக்தி இனியாவது இதைப்புரிந்து கொண்டு செயற்படுவார் என தமிழர்கள் நம்புவோமாக.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது உந்தப் படத்தைப் பார்த்திருக்கீங்களா. கிரமமா.. ஆங்கில மொழி படம் பார்க்கிறவையையும் கேட்டுப்பார்த்தாச்சு அவையும் சொல்லினம் இல்லை என்று.

 

இப்ப ரெட் காப்பெட்டில்.. பார்க்கப்படாத படங்களுக்கும் விருது வழங்கினமோ..??!

 

இதில் வியப்பு என்னென்றால்.. படம் பார்க்காமலே.. அவசரப்பட்டு கள உறவுகள் வாழ்த்தி தள்ளுவதுதான்.

 

ரெட்காப்பெட் காரன்கள்.. ஒன்றும் நியாயவான்கள் கிடையாது. மேற்குலக சார்ப்புக் கருத்தோட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு விருது வழங்குவார்கள். அதே அவர்களை கண்டிக்கும் படங்கள் என்றால்.. கண்டுக்கவே மாட்டார்கள். அதுதான்..?!

 

எதிலும் ஒரு எச்சரிக்கை அவசியம் மக்களே. :icon_idea::):rolleyes:


ஒரே ஒரு பலம் தான் இந்தப் படத்துக்கு. முக்கிய இயக்குநர் ஒருவர் பின்னணியில் இருந்துள்ளார். அவரைப் பிடிச்சால்.. முழு விபரமும் எடுக்கலாம். எப்படி பெரிதும் பார்க்கப்படாத படத்திற்கு விருது எடுப்பது என்று. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு அர்ஜுன் குறிப்பிட்டது போல, ஷோபா சக்தி எங்கேயோ போய்விட்டார். வாழ்த்துக்கள். இவருடைய சில கதைகளை வாசித்திருக்கின்றேன் அற்புதமான எழுத்து நடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரே ஒரு பலம் தான் இந்தப் படத்துக்கு. முக்கிய இயக்குநர் ஒருவர் பின்னணியில் இருந்துள்ளார். அவரைப் பிடிச்சால்.. முழு விபரமும் எடுக்கலாம். எப்படி பெரிதும் பார்க்கப்படாத படத்திற்கு விருது எடுப்பது என்று. :lol:

 

 

இந்தப்படத்தின் இயக்குணரிடம் ஒரு கெள்வி கேட்கப்பட்டது

கேள்வி:  விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். அவர்கள் சார்ந்த இந்தப்படத்தை எடுத்துள்ளீர்கள். அவர்கள் சார்ந்து தங்கள் கருத்து என்ன?

 

பதில் : அரசியலை   நான் பார்க்கவில்லை. அது இங்கு வேண்டாம்

 

இதே கேள்வியை அண்ணன் சோபா சக்தியிடம்  கேட்டிருந்தால் பதில்.....?? :(  :(  :(

இயக்குநரின் வாக்குமூலத்தைவிட 

ஒரு முன்னாள் புலியே புலிகளைப்பற்றி சொன்னால்  அது...?? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபாவின் கதைகளில் நல்ல விறுவிறுப்பு இருக்கும். கூடவே நாரந்தனை கிறீச்தவனின் பார்வையில் சமூகச் சாடலும் இருக்கும்.

அருமையான எழுத்தாளர். குறிப்பாக கொரில்லா - சப்பா எப்படி பட்ட ஒரு டார்க் மேட்டர். அதை அசிங்கம் கலவாமல் கையாண்டிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தின் இயக்குணரிடம் ஒரு கெள்வி கேட்கப்பட்டது

கேள்வி:  விடுதலைப்பலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். அவர்கள் சார்ந்த இந்தப்படத்தை எடுத்துள்ளீர்கள். அவர்கள் சார்ந்து தங்கள் கருத்து என்ன?

 

பதில் : அரசியலை   நான் பார்க்கவில்லை. அது இங்கு வேண்டாம்

 

இதே கேள்வியை அண்ணன் சோபா சக்தியிடம்  கேட்டிருந்தால் பதில்.....?? :(  :(  :(

இயக்குநரின் வாக்குமூலத்தைவிட 

ஒரு முன்னாள் புலியே புலிகளைப்பற்றி சொன்னால்  அது...?? :(  :(  :(

 

அதுதான் அண்ணா நாங்க மிகவும் எச்சரிக்கையா இந்த தலைப்பைக் கையாள நினைக்கிறம்.

 

ஏனெனில்.. ஒரு பார்க்கப்படாத படம்... விருதுக்கு முன்னிலையில்.. ஓடுது என்றால்.. அதற்கு பின்புறத்தில் இருந்து தனிப்பட்ட செல்வாக்குகள் அதனை முன்னுக்கு தள்ளனும். வழமையான.. பார்வையாளர்கள் இதனைத் தள்ளிக் கொண்டு வந்து முன்னுக்கு விட்டதாகத் தெரியவில்லை. எம் மக்களே பலர் இதனைப் பார்க்கவில்லை.

 

இருந்தாலும் இயக்குனரின் பொறுப்பான பதில்.. வியக்க வைக்கிறது. ஆனால் நடிகன் இயக்குனரை.. விட விஞ்சின ஆள் எல்லோ. அதை விட அவரின் விசிறிகள் அவரை விஞ்சின ஆக்கள். :lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்படி விருதுக்கு போனது.. பார்வையாளர்கள் பரிந்துரை இல்லாமலே... ????! :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.