Jump to content

சூரியனோடு பேசுதல் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சூரியனோடு பேசுதல்

இன்று காலை கனடாவி வாழும் கவிஞன் திருமாவளவனுடன் முகநூலுல் அளவளாவியபோது நேற்று உங்கள் கவிதை தொகுப்பு சூரியனோடு பேசுதல் கேட்டு செல்லத்துரை வந்தான். மீண்டும் அந்த தொகுப்பை வசித்தேன் என்றார். 29 வருடங்களுக்குப்பிறகு எனது முதல் தொகுப்பு இப்பவும் வாசிக்கப்படுகிறது என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நமக்கென்றொரு புல்வெளி எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. அது 1986ல் நான் கோவையில் தலைமறைவாய் இருந்தபோது என் பாதுகாப்புக் கருதி அவசரம் அவசரமாக அட்டைப் படமாக என் போட்டோவுடன்வெளியிடப் பட்ட தொகுப்பு. அதனை தோழர் ஜமுனா ராஜேந்திரனும் நண்பர்களும் வெளியிட்டார்கள்.

அது என் சுயபாதுகாப்புக்கான சரியான திட்டமிடலாக அமைந்தது.

அது உமாமகேஸ்வரனோடு முரண்பாடுகள் முற்றி இருந்த காலம். என்னை முகமில்லாத ஒருவனாக தாக்கி அழிக்கும் சாத்தியங்களை அகற்றுவதற்க்காக எனது திட்டம் அது

அதுதான் எனக்கு தமிழகத்தில் முகத்தை கொடுத்தது. அது எனக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.

நமக்கென்று ஒரு புல்வெளி வெளியானபிறகு தமிழகத்தில் என் பாதுகாப்பு உறுதிப்பட்டதுடன் புகழும் கிடைத்தது,

என் பாதுகாப்பு திட்டமிடல் ஆற்றலினாலும் நல்ல நண்பர்களாலும்தான் நான் இன்றுவரை உயிரோடு இருக்கிறேன்

 

சூரியனோடு பேசுதல்

கண் மலர

நாள் விடியும்

ஓடுகின்ற பஸ்சின் வெளியே

என்றும் இளமை மாறாத எம் உலகம்.

மஞ்சள் முகம் மலர

சீனத்துத் தேவதையாய்

சுவர்க்கம் இருந்து

சூரியன் எழுந்து வரும்.

கரும்புத் தோட்டத்தின் மீது

கழிகின்ற கிராமத்து வீதிகளில்

தொழிற்சாலை ஒன்றின் இரும்புக் கழிவுகளில்

தலை நிமிர வுள்ள மானிடத்தின்

பாதை திசையெல்லாம்

இருள்துடைத்து

நம்பிக்கைக் கோலம் எழுதுகின்ற சூரியனே!

நேற்று அதிகாலை

என்னுடைய தாய் நாட்டின் காடுகளில்

துணை வந்த தோழர்களோடு

உன்னை நன் எதிர் கொண்டேன்.

நேற்று இள மாலையில்

இருள் கவியும் கடல்மீது

போராடி முன்னோக்கும் படகில்

பிரியும் உன் முகம் நோக்கி

உள்ளம் கிளர்ந்திருந்தேன்.

இன்று அதிகாலை

தமிழகத்தில்

ஓடுகின்ற பஸ்சின் ஜன்னலால்

முத்தமிட்டாய்.

கண் விழித்த எந்தன் கைகளுக்குள்

ஒரு புதிய நாளைப் பரிசு தந்தாய்.

தீ நடுவே ஒரு பூவாய்

போர்க் களத்தில் உயிர்த்திருக்கும்

எங்களது வாழ்வுக்கு

இந்நாளை நான் தருவேன்.

மீண்டுமென் தாய் நாட்டின்

கரைகளிலே

எம்முடைய கால்களிலே எழுந்து நின்று

உனைக்காணும் நாட்களை மீட்டெடுக்க

இந்நாளை நான் தருவேன்.

1985

 

புத்தகம் முழையும் வாசிக்க

.

http://www.noolaham.org/…/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE…

 

Link to post
Share on other sites

ஜெயபாலன் ஐயா சூரியனோடு பேசுதல் என்பது ரஸ்ய கவிஞர் மாயகொவ்ஸ்கியிடமிருந்து சுட்டதா?  :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் ஐயா சூரியனோடு பேசுதல் என்பது ரஸ்ய கவிஞர் மாயகொவ்ஸ்கியிடமிருந்து சுட்டதா?  :D

 

மதிப்புக்குரிய தண்டனணக்கா,

சுட்டது என்பது அபத்தமாக உள்ளது.

 

மாயாகொஸ்கி உட்பட உலகின் பல கவிஞர்கள் சூரினை விழித்து கவிதை எழுதியிருக்கிறர்கள்..ஐந்து வயசில் முதன்முதலாக என் தந்தை பிறந்த நெடுந்தீவுக்குப் போனேன்.அந்த வருசமே நெடுந்தீவுப் பெண்கள் சூரியனோடு பேசுகிற நாட்டார் பாடலை கேட்டேன். 

 

அந்த நாட்டார் பாடலில் என்னைப் பாதித்த சில வரிகள்  இப்பவும் நினைவிருக்கு. 

 

"காயாப் புழுங்கலொடும்

கப்பியொடும் மாயிறேனே

கிழக்கெழுந்த சூரியனே

எனக்கொருத்தன் வாரானோ"

 

மாயாகவ்ஸ்கியின் கவிதையோடு உருவத்திலோ உள்ளடக்க பொருளிலோ சம்பந்தமில்லாத சூரியனோடு பேசும் கவிதையை மாயாகொவ்ஸ்கியிடம் இருந்து  "சுட்டது"  என்பது அபத்தமான கருத்தாகும். எனக்கு ஓகே. ஒரு இளம் கவிஞனைப்பார்த்து இப்படி கொச்சைப் படுத்தினால் அவன் மனசு செத்துவிடும். 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜனாதிபதியால் அச்சுறுத்தப்பட்ட முதல் நபர் விஜயதாச அல்ல – அனுர கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாச ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார். எனவே மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறினார். நாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். நீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். https://athavannews.com/2021/1210183
  • விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி: யாழில் அதிரடியாக நால்வர் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. மேலும் அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழில் நீண்ட காலத்திற்கு பின்னர் இத்தகையதொரு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210236
  • அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது- வேலன் சுவாமிகள் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாதென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பு விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும்  உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள். நாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1210219
  • நிழலி.... விடுப்பு அறிவதில், சரியான விண்ணன் போலை இருக்குது.   😂  🤣
  • கந்தையா அண்ணை.... நீங்கள் விரும்பிய தொழிலை,  பிள்ளைகள் மூலம் நிறைவேற்றி விட்டது மகிழ்ச்சி.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.