Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும் ஒரு விமானத்தில் லண்டனிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

சர்தார்ஜிக்கு ஜன்னல் சீட்டு. பக்கத்தில் அந்த பிரிட்டிஷ் காரன்.

சர்தார்ஜிக்கு தூக்கம் வந்தது. பிரிட்டிஷ் காரனுக்கு தூக்கம் வரவில்லை.

அவன் சர்தார்ஜியை எழுப்பி
"நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்றான்.

சர்தார்ஜி மறுத்துவிட்டு தூங்கத் தொடங்கினார்.

அவன் விடவில்ல. மீண்டும் எழுப்பி,
" நானொரு கேள்வி கேட்பேன்.உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு ஐந்து டாலர் தரவேண்டும். அப்புறம், நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள். எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐந்து டாலர் தருவேன். இப்படியே விளையாடலாம்" என்றான்.

சர்தார்ஜி கொஞ்சநேரம் யோசித்துவிட்டு,
"இது சரிப்படாது" என்று கூறிவிட்டு தூங்கத் தொடங்கினார்.

அவன் விடவில்லை. மீண்டும் எழுப்பி
"சரி, உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், ஐந்து டாலர் கொடுங்கள், எனக்கு தெரியாவிட்டால் 100 டாலர் தருவேன். இப்போது விளையாடலாமா?" என்றான்.

சர்தார்ஜி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
"இது நல்ல டீல். விளையாடலாமே". என்றார்.

முதல் கேள்வி பிரிட்டிஷ்காரன் கேட்டான்.
" நாம் பயணம் செய்யும் விமானம் எந்த நாட்டுடையது?"

சர்தார்ஜி கொஞ்சமும் யோசிக்கவே இல்லை. உடனே ஐந்து டாலர் நோட்டை எடுத்து நீட்டினார்.

இப்போது சர்தார்ஜி கேட்டார்.
" மலைமேல் ஏறும்போதுபோது மூன்று கால்களினாலும், இறங்கும்போது நான்கு கால்களினாலும் செல்லும் மிருகம் எது?"

பிரிட்டிஷ்காரன் யோசிக்கத் தொடங்கி விட்டான்.சர்தார்ஜி நன்றாகத் தூங்கி விட்டார்.

பிரிட்டிஷ்காரன் யோசித்து யோசித்துப் பார்த்து குழம்பி விட்டான். பதில் தெரியவில்லை. ஆனாலும் அதனை ஒப்புக்கொள்ள மனம்வரவில்லை. லேப்டாப்-ஐ திறந்தான். தேடு தேடு என்று தேடினான். கிடைக்கவில்லை. ஏர்-ஹோஸ்டஸ் அனுமதி பெற்று தொலைபேசி மூலம் தன் நண்பர்களைத் தொடர்பு செய்து கேட்டான். பலனில்லை.

டில்லி வந்துவிட்டது. சர்தார்ஜி தூக்கம் கலைந்து எழுந்தார்.

பிரிட்டிஷ்காரனுக்கு வேறு வழி தெரியவில்லை.
"பதில் தெரியவில்லை" என்று ஒப்புக் கொண்டு நூறு டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, "சரி, இப்போது பதில் சொல், அந்த மிருகம் எது?" என்று கேட்டான்.

சர்தார்ஜி ஒன்றும் பேசவில்லை. அமைதியாக ஐந்து டாலர் நோட்டு ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டிவிட்டு நடையைக் கட்டினார்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.