Sign in to follow this  
நிழலி

நூடுல்ஸ் எமன்! - கண்டிப்பாக வாசியுங்கள்

Recommended Posts

கனடாவில் தமிழ் கடைகள் அனைத்திலும் Maggi Noodles மற்றும் இன்ன பிற instant noodles கள் விற்கப்படுவதையும் அவற்றை அநேகமான தாய்மார்கள் வாங்கிப் போவதையும் காண்கின்றேன்.

ஈயம் போன்றன அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் கூடாது என்று இந்தியாவில் சில மானிலங்கள் இதனை அண்மையில் தடை செய்தும் இன்னும் சில தடை செய்வதைப் பற்றி சிந்தித்தும் வருவதாக செய்திகள் சொல்கின்றன.

முந்தி சாப்பிட்ட ஆசையில் வருடத்தில் ஓரிருமுறை வாங்கி சுவைத்தாலே ஒழிய நானோ அல்லது என் மனைவியோஒரு போதும் இவற்றை வாங்குவதில்லை.

 

பிள்ளைகளுக்கு கொடுப்பதே இல்லை.

 

அதில் உள்ள nutritious facts இனை பார்த்தாலே தலை சுற்றும். சோடியம் 50% இற்கு மேல் இருக்கும்

அதுவும் சீனத் தயாரிப்பு என்றால் மிக மோசமாக சோடியம், இரசாயனப் பொருட்கள் காணப்படும்

பிள்ளைகளின் மீது அன்பும் அக்கறையும் உள்ள தாய்மார்களும் அப்பாக்களும் இவற்றை ஒரு போதும் வாங்க வேண்டாம்

 

-----------------

 

 

நூடுல்ஸ் எமன்!

 

“சில நிமிடங்களில் தயார்” என சென்டிமென்ட் விளம்பர வார்த்தைகளால் வசீகரிக்கும் நூடுல்ஸில்  ஈயம் (Lead) கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது உத்தரப்பிரதேச அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் (The Food Safety and Drug Administration (FSDA)).

உணவில் 0.01-2.5 பிபிஎம் (ppm) என்ற அளவில் மட்டுமே ஈயம் கலந்திருக்க அனுமதி உண்டு. ஆனால், நூடுல்ஸில் 17.2 பிபிஎம் அளவுக்கு ஈயம் கலந்துள்ளது என்கின்றனர் ஃஎப்.எஸ்.டி.ஏ அதிகாரிகள். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட, ஏழு மடங்கு அதிகம். குறைந்த அளவில் ஈயம் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிட்டாலே, குழந்தைகளின் மூளைத்திறன் (ஐ.கியூ) குறையும், ரத்தசோகை ஏற்படும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

நூடுல்ஸ் என்பது அவசியம் சாப்பிட வேண்டிய உணவே அல்ல. அதில், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் என எந்தச் சத்துக்களுமே இல்லை என்பதுதான் உண்மை. முழுவதுமே மைதாவினால் தயாரிக்கப்பட் டது. கொழுப்பு, உப்பு, மாவுச்சத்து, செயற்கை சுவையூட்டி ரசாயனங்கள் போன்றவை மட்டுமே பிரதானமாக உள்ளன. இதில், தற்போது அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலான அளவு ஈயம் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

“ஈயம் விஷத்தன்மை கொண்டது. இதைச் சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பாதிக்கும். நரம்புப் பிரச்னைகள் ஏற்படும். கடுமையான வயிற்றுவலி வரலாம். வாய் மற்றும் தொண்டை எரிச்சல், அலர்ஜி, தலைவலி போன்ற உபாதைகளும் வரலாம். கருவுற்ற பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் கரு பாதிக்கலாம் என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.

நுாடுல்ஸ் உணவு பற்றி அவர் தரும் அதிர்ச்சி தகவல்கள் இதோ...........

noodles%20right%2011.jpg"பொதுவாக, நூடுல்ஸ் இந்திய உணவே அல்ல. பாரம்பரிய உணவுகளை மட்டுமே நம் உடல் ஏற்கும். நம் மரபியல்ரீதியான பழக்கமும் அதுவே. உடலும் அப்படித்தான் பழகி இருக்கும். சுவைக்காக நூடுல்ஸை விரும்பிச் சாப்பிட்டாலும், அவை செரிக்க இரண்டு நாட்கள் ஆகும். அதில் சேர்க்கப்பட்ட பதப்படுத்திகள், ரசாயனங்கள், அதிக அளவிலான உப்பு, வழவழப்புடன் இருக்க மெழுகு போன்றவை செரிக்க, சில நாட்களாவது பிடிக்கும். இத்தகைய உணவை நாம் சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படும். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, நாளடைவில் நோய்களின் பிடியில் தள்ளப்படுவோம்.

மோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற சோடியம் உப்பு, ஒரு சுவையூட்டி. ஒரு வகையான அமினோ அமிலம். இது, தன் சுவையால் ஒருவரை அடிமையாக்கும் குணம் கொண்டது. குறிப்பாக, குழந்தைகளை மீண்டும் மீண்டும் இதே உணவைச் சாப்பிட வைப்பதற்காக, நூடுல்ஸில் மோனோ சோடியம் க்ளுட்டமேட்டின் அளவை அதிகம் சேர்த்துத் தயாரிக்கின்றனர்.

குழந்தைகள் நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடுவதற்கு இதுவே காரணம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த உப்பு கெடுதியையே உண்டாக்கும். அதிகப்படியான உப்பால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வீக்கமடைதல், மறதி, கவனச்சிதறல் போன்ற பாதிப்புகள் வரலாம். அடிக்கடி தலைவலி, சிறுநீரகப் பாதிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

noodles%20550.jpg

தொடர்ந்து கூறும் அவர், “நேரமின்மை காரணமாக ‘சில நிமிடங்களில் உணவு தயார்’ என்பதால், பெற்றோர்களும் நூடுல்ஸ் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகளும் அதன் சுவைக்கு அடிமையாகி, ‘நூடுல்ஸ் தந்தாலே போதும்’ என்று திருப்தி அடைகின்றனர்.

அதே இரண்டு நிமிடங்களில், சிவப்பு அவல் மற்றும் கேழ்வரகு மாவைக்கொண்டு விதவிதமான ரெசிப்பிகளைச் செய்துகொடுக்கலாம்.  

முந்தைய இரவு ஊறவைத்த கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, ராஜ்மா, மக்காச் சோளம் போன்ற சுண்டல் வகைகளை, குக்கரில் வைத்துச் சமைத்தால், இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும். காய்கறி சாலட், ஃப்ரூட் சாலட், பிரட் டோஸ்ட் போன்றவை தயார் செய்ய, ஐந்து நிமிடங்கள் போதும்.

கேரட் ஜூஸ், பேரீச்சை ஜூஸ், தேங்காய் பால் போன்ற ஆரோக்கிய பானங்கள் செய் வதற்கான நேரமும் குறைவுதான். இப்படி, ஆரோக்கிய உணவுகளைத் தேர்ந்தெடுத் துக் கொடுப்பதால், குழந்தைகளுக்கு நோய்கள் நெருங்காது. பணமும் விரயமாகாது. உடல் ஆரோக்கியமும் பெருகும்” என்கிறார்.

சுவையான, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதற்கு, அதிக அக்கறை,கொஞ்சம் மெனக்கெடுதல் போதும். இதுதான் பெற்றோர்கள், பிள்ளைகளுக்குத் தரும் ஆரோக் கிய செல்வம்.  டயட்டீஷியன் சொல்வதை கேட்போம், பிள்ளைகள் எதிர்காலத்தை காப்போம்!

-ப்ரீத்தி
படங்கள்: கபிலா காமராஜ்

 

http://www.vikatan.com/news/article.php?aid=47019

 

  • Like 7

Share this post


Link to post
Share on other sites

நன்றி இணைப்புக்கு!


சைனீஸ் இதுகளைத் தானே சாப்பிடுகின்றார்கள்!

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி.நிழலி.

 

இனி மேல் கட்டாயம் வாசிக்க என்று செய்தி இருந்தால்

 

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டு விடவும்.

 

சும்மா பிச்சுக்கிட்டு ஓடுமில்ல.

Share this post


Link to post
Share on other sites

வாய்க்கு ருசியாகவும், சமைக்க சுலபமாகவும்... இருப்பதால்,
இதனை விரும்பிச் சாப்பிடுவதுண்டு. இனி மேல்... அவதானமாக இருக்க வேண்டும்.
 

Share this post


Link to post
Share on other sites

மாகி நூடுல்ஸ் கேடானதா?- பரிசோதிக்கிறது கர்நாடக அரசு

 

Maggi_2413234f_2417235f.jpg

 

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிம் மாநிலங்களில் மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளுக்குத் தடை விதிக்க தீவிரமாக ஆலோசிக்கப்படும் நிலையில், கர்நாடக அரசும் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய கர்நாடக மாநில உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், "மகாராஷ்டிரம், உத்திரப் பிரதேச மாநிலங்களின் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில், இந்த உணவு வகையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
மாகி நூடுல்ஸ் உணவைப் பரிசோதிப்பதற்கும் நடவடிக்கைக்கு, மாநில சுகாதாரத் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளோம். அந்த ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டியது உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கடமை. மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும். இந்த வாரத்திலேயே நூடுல்ஸ் பாக்கெட் மாதிரிகள் சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படும். பின்னர், அதன் முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும்" என்றார் அவர்.
 
 
 
 
நிச்சயமாக இது கேடானது, எனது மகனுக்கு 2 முறை இதனால் உடல் நலகுறைவு ஏற்பட்டது. எனது மகன் படிக்கும் பள்ளியிலும் இதை கொண்டுவர வேண்டாம் என்று அறிவுர்த்தி உள்ளார்கள். முதலில் இது சம்பந்தமான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். இதை பார்த்துதான் சிறுவர்கள் அதை விரும்பும் நிலை ஏற்பாடுகிறது.
 
Irfan  
 
 
 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு உந்த நூடுல்ஸ் சுவை பிடிக்கவில்லை. அதனால் வீட்டில் செய்வதும் இல்லை. எங்கயாவது பார்ட்டி எண்டு போனால் மற்ற உணவுவகைகளுடன் சேர்த்து கொஞ்சமா சாப்பிட்டு இருக்குறான் . வீட்டில் பெரும்பாலும் சோறு கறி பிட்டு இடியப்பம் போன்ற சாப்பாடுதான். :icon_idea:  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

இங்கு இங்கிலாந்தில்  போர்ட் கெல்த் இப்பத்தான் தூக்கத்தில் இருந்து எழும்பி உள்ளார்கள் கடந்த வாரம் வந்த கொண்டஇனர் நாப்பதடி கப்பல் சரக்கு பெட்டி முழுவதும் மகி நூடில்ஸ் எரிக்க சொல்லி உத்தரவு வந்துள்ளது இறக்குமதி பண்ணியவர்  பட்டேல் துள்ளிக்கொண்டு திரிகின்றார் . நம்மாட்கள்  பொன்னி ரைஸ் ,தேங்காய் ,மிளக்காயதுள் ,மகி என கலந்து கட்டி அடிப்பதால்  இரண்டு மூன்று கொண்டைனர்  தப்பி வந்துள்ளது ஆகவே தமிழ்கடைகளில் மகி வரும் யாராவது உள்ளூர் கவன்சில் டிராடிங் agent அல்லது பூட் ஹெல்த இன்ஸ்பெக்டர்  இடம் கொம்பிளைன்ட்  கொடுக்கும்மட்டும் வியாபாரம் கொடிகட்டும் .

Edited by பெருமாள்

Share this post


Link to post
Share on other sites

நிழலி,

முடிந்தால் மாகாண உணவுப் பாதுகாப்பு பிரிவுக்கு (Food Safety Authority) இது பற்றி தெரிவித்து விடுங்கள். இந்திய , UK தடைகள் குறித்தும், இங்கே தாராளமாக விற்கப்படுவதை அவர்கள் அறிந்து இருக்கிறார்களா என்றும் போட்டு, ஒரு பிரதி, cc, Ottawa மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதகவும் காட்டுங்கள்.

அவர்கள் தேவையானதை செய்வார்கள்.

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

நானும் இந்த நூடுல்ஸ் வெறும் மாவில் சில பதார்த்தங்கள் சேர்த்துச் செய்கின்றார்கள் என நினைத்திருந்தேன். இதில் இவ்வளவே கேடு இருப்பதை இப்பதான் அறிகின்றேன்.  நன்றி நிழலி.

 

வீட்டில் இவை பாவிப்பது குறைவுதான்....! நம்மட உணவு வகைகள்தான் தினமும்...!!! :)

Share this post


Link to post
Share on other sites

சீன உணவகங்களில் சூப், உணவுகள் போன்றவற்றில் மோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற சோடியம் உப்பு சேர்க்காத பதார்த்தங்களே இல்லை. அது வெறும் சுவைக்காகமட்டுமே சேர்க்கப்படுகிறது.

இந்த உப்பை சீன, மளிகைக் கடைகளில் வாங்கலாம்... எம்மவர்கள் சிலரும் இதை வாங்கி வீட்டில் உபயோகிப்பதை அவதானிக்க முடிகிறது. மற்றும் தமிழ் வைபவங்களுக்கு உணவு வகைகளை விநியோகிப்பவர்களும் இதை உபயோகிப்பது ஆங்காங்கே இலட்பெறுகிறது.

 

சீனர்கள் இந்த உப்புடன் சீனியையும் சேர்த்து பாவிப்பதால், இதனால் ஏற்படும் பாதிப்பு மட்டுப்படுகிறது என்கிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites

இங்கே தமிழ்க்கடைகளில்  சனங்கள் இந்த  நூடில்சைப் பெட்டி பெட்டியாகத் தோளில் சுமந்து செல்வதைக் கண்டிருக்கின்றேன். விலையையும் கொஞ்சம்  குறைத்து விட்டால் சொல்லத் தேவையில்லை.

இணைப்பிற்கு நன்றி நிழலி 

Share this post


Link to post
Share on other sites

நானும் இந்த நூடுல்ஸ் வெறும் மாவில் சில பதார்த்தங்கள் சேர்த்துச் செய்கின்றார்கள் என நினைத்திருந்தேன். இதில் இவ்வளவே கேடு இருப்பதை இப்பதான் அறிகின்றேன்.  நன்றி நிழலி.

 

வீட்டில் இவை பாவிப்பது குறைவுதான்....! நம்மட உணவு வகைகள்தான் தினமும்...!!! :)

 

எங்கடை சாப்பாடுகளின்ரை தரம் மணம் சுவைக்கு உவங்கடை சாப்பாடு கிட்டவும் வராது... :)

Share this post


Link to post
Share on other sites
இணைப்பிற்கு நன்றி நிழலி,
மோனோ சோடியம் க்ளுட்டமைட் பாவிப்பது சம்மந்தமாக ஓரளவு விழிப்புணர்வு இருந்தது.
முடிந்தளவு "க்ளுட்டன்   ப்ரீ" பொருள்கள் தான் வாங்குவேன்.
பொடியன்கள் பள்ளிக்கு கொண்டுசெல்ல .... இருந்துட்டு எப்போவாவது "அவசர" தேவைக்காக வாங்குவேன்... இனிமேல் அதுவும் இல்லை.
"ஆட்டிஷம்", "ADHD" போன்ற பல உடல் /மன ரீதியான சூழ்நிலைகளுக்கும் இவை ஏதுவாக அமைகின்றன.

Share this post


Link to post
Share on other sites

நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித்துக்கு நோட்டீஸ்: ரசாயன உப்பு அதிகம் உள்ளதாக புகார்

 

madhuri_2422036f.jpg

மாதுரி தீட்ஷித்
 
நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள, பிரபல பாலிவுட் நடி கைக்கு உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இரண்டு நிமிடங்களில் தயாரிக்க கூடிய நூடுல்ஸ் விளம்பரத் தூதுவராக பாலிவுட் நடிகை மாதுரி தீக் ஷித் நிய மிக்கப்பட்டுள்ளார். இந்த நூடுல்ஸை குழந்தைகள், சிறுவர்கள் விரும்பி உண்கின்றனர். அவர்களை கவரும் வகையில் நூடுல்ஸ் விளம்பரங்கள் அமைந் துள்ளன.
 
இந்நிலையில், உத்தரப் பிரசேத்தை சேர்ந்த உணவு பாது காப்பு நிர்வாக அமைப்பு, நூடுல் ஸின் சேம்பிள்களை சேகரித்து ஆய்வு செய்தது. அப்போது, அதில் மோனோசோடியம் குளூடாமேட் என்ற உப்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குழந்தைகளின் வளர்ச் சியை பாதிக்கக் கூடியது என்று தெரி வித்தது.
 
இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் விற்பனைக்கு அனுப் பப்பட்ட நூடுல்ஸ்களை உடனடியாக திரும்பப் பெறும் படி அதை தயாரிக்கும் நிறுவனத்துக்கு உத்தரவிடப் பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதையடுத்து, விளம்பரங் களில் நடித்துள்ள மாதுரிக்கு, உத்தராகண்ட் மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “2 நிமிடங்களில் நூடுல்ஸ் தயார் என்றும் சத்தானது என்றும் விளம்பரங்களில் கூறி நடித்துள்ளீர்கள். எந்த வகையில் இந்த நூடுல்ஸ் சத்தானது என்பதை 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
 
நோட்டீஸுக்கு 15 நாட்களுக் குள் நடிகை மாதுரி பதில் அளிக்காவிட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மகிமானந்த் ஜோஷி நேற்று தெரிவித்தார்.
 
இதனிடையே நூடுல்ஸில் மோனோ சோடியம் குளுடா மேட் அளவுக்கு அதிகமாக இல்லை என்று நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
'விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது'
 
‘நூடுல்ஸ்’ விளம்பரத்தில் நடித்த நடிகை மாதுரி தீக் ஷித் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.சங்கர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
 
உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள்,நகைகள் போன்றவற்றை வியாபாரம் செய்ய பல நிறுவனங்கள் உள்ளன. இவற்றை மக்களிடம் விளம்பரப்படுத்த சினிமா நடிகர்களை அந்த நிறுவனங்கள் நடிக்க வைக்கின்றன.
 
இந்நிலையில் நிறுவனத்தின் பொருள் தரமற்றது என தெரியவந்தால், அதற்காக விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது வழக்கு தொடர முடியாது. ஏனென்றால் நடிகர்களை பார்த்து நுகர்வோர் பொருட்களை வாங்குவதில்லை. பொருட்களை விற்கும் நிறுவனத்தின் தரத்தை பார்த்துதான் பொருட்களை வாங்குகின்றனர்.
 
மேலும் நுகர்வோர் பொருட் களை வாங்குதன் மூலம் கிடைக் கும் லாபம் சம்பந்தப்பட்ட நிறு வனத்துக்குதான் கிடைக்கிறது.
 
விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த பொருளை முன்னிலைப்படுத்துகின்றனர்.அவ்வளவு தான். இதற்காக அவர்கள் மீது சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் இடமில்லை.
 
நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட நடிகை விளக்கம் அளித்தால் மட்டும் போதும். மற்றபடி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதுகுறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லக்‌ஷ்மி நாராயணன் கூறும்போது, “உணவு பாது காப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி, தவறாக வழி நடத் தும் விளம்பரங்கள் வெளியிடப் பட்டால், அந்த பொருளின் தயாரிப் பாளர் மீது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது போன்ற பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பவர்களிடம் விளக்கம் மட்டுமே கேட்க முடியும். விளம்பரத்தில் நடித்ததற்காக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார்.
 
http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7263380.ece?homepage=true

 

Share this post


Link to post
Share on other sites

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய அமிதாப், மாதுரி, பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு: தேவைப்பட்டால் கைது செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவு

பி.டி.ஐ.

COMMENT (31)   ·   PRINT   ·   T+  
 
 
 
 
 
amitabh_2425974f.jpg
 

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது பிஹார் மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேவை ஏற்பட்டால் அவர்களை கைது செய்யலாம் என்றும் பிஹார் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பெற்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட கூடுதல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவர் மனு தாக்கல் செய்தனர்.

அதில், சமீபத்தில் தாங்கள் மேகி நூடுல்ஸை வாங்கி சமைத்து சாப்பிட்டோம். அதையடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இப்போது அதில் ரசாயன உப்பு அதிகம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அந்த நிறுவனம் மற்றும் அதன் விளம் பரத்தில் தோன்றி மக்களை தவறாக வழிநடத்தியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டு மென்று மனுவில் கோரியிருந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நெஸ்லே நிறுவனத்தின் இரு அதிகாரிகள், மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். போலீஸ் விசாரணைக்கு தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உணவுப் பொருளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருளை கலப்பது, தீமையான உணவை விற்பது, ஏமாற்றுதல் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு துணை போகுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் தடை

கேரள அரசு நேற்று மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

 

ஹரியாணா மாநில அரசு இந்த விஷயத் தில் நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளது.

அதே நேரத்தில், மேகி நூடுல்ஸை வெளியில் உள்ள ஆய்வகத்திலும், தங்களது சொந்த ஆய்வகத்திலும் பரிசோதித்துள்ளதாகவும், அது சாப்பிடு வதற்கு ஏற்றதுதான் என்றும் நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.

Untitled_2424236f_2424328c.jpg
தரம் குறித்த அச்சமும் சந்தேகமும் எழும் சூழலில், நுகர்ப் பொருட்கள் குறித்த புகார் எழும்போது, அவற்றை விளம்பரங்களில் பரிந்துரைக்கும் நட்சத்திரங்கள் மீதும் நடவடிக்கை தேவை என்ற கருத்து...
மிகவும் சரியானதே : 74% சரியல்ல : 11% விவாதத்துக்கு உரியது : 15%
மொத்த வாக்குகள்: 3856

http://tamil.thehindu.com/india/மேகி-நூடுல்ஸ்-விளம்பரத்தில்-தோன்றிய-அமிதாப்-மாதுரி-பிரீத்தி-ஜிந்தா-மீது-வழக்கு-பதிவு-தேவைப்பட்டால்-கைது-செய்யலாம்-என-நீதிமன்றம்-உத்தரவு/article7274814.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites

லக்னோ: மேகி நூடுல்ஸ் இன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கி நொந்து போய்க் கிடக்கிறது. மேகி நூடுல்ஸின் அபாயகரமான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை வி.கே.பாண்டே என்பவருக்குத்தான் போய்ச் சேர வேண்டும். டெல்லியில் மேகி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்தத் தடை தொடரும். நெஸ்லே இந்தியா நிறுவனமும் மேகியால் பெரும் சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாற வி.கே.பாண்டேதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாது. அதைப் பற்றிப் பார்ப்போம். வி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார். 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர். இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டவர். இதற்கு முன்பு பிரிட்டானிகா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர் பாண்டே. இவர் போட்ட வழக்கால், தனது பத்திரிகை விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் கலரில் போட்டு வந்தது. ஆனால் பாண்டே போட்ட போட்டால் சிவப்பு கலரில் போட ஆரம்பித்தது. லக்னோவைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனமான வாஹித் பிரியாணி மீதும் கேஸ் போட்டவர் பாண்டே. பிரியாணியில் அவர்கள் சேர்க்கும் நிறத்தில் சர்ச்சை இருப்பதாக பிரச்சினை கிளப்பினார் பாண்டே. 2014ம் ஆண்டு மார்ச் 10ம் தேதிதான் மேகிக்கு பிரச்சினை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார். நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்எஸ்ஜி கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே. இதனால் கடுப்பான பாண்டே மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால் சற்று அதிர்ந்தது நெஸ்லே. கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக ரூ. 1000 கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆ்ய்வகத்திலும் மேகியின் குட்டு உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் பெரும் சிக்கலானது. இதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. இன்று நாடு முழுவதும் இது பரவியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/meet-the-whistleblower-know-how-the-controversy-unfolded-228051.html


கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது.

03-1433329589-nestle-nan-pro45.jpg

குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது. இந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்குகளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் நெஸ்லேவின் பால் பவுடரால் புது சர்ச்சை வெளியாகியுள்ளது. கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். டாக்சி டிரைவரான இவர் தனது குழந்தைக்கு வழக்கமாக வாங்கும் நெஸ்லே பால் பவுடரை வாங்கியுள்ளார். 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 டப்பாவை அவர் வாங்கினார். இவருக்கு 18 மாதத்தில் ஒரு குழந்தையும், இன்னும் ஒரு இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். 18 மாதக் குழந்தைக்கு இவர் பேபி பார்முலாவைக் கொடுத்து வருகிறார். இரட்டைக் குழந்தைகளுக்காக இந்த நெஸ்லே பால் பவுடரை அவர் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்து டப்பாவைத் திறந்து பால் பவுடரை எடுக்க முயன்றபோது உள்ளே புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ஆனந்த். மேலும் அவரது குழந்தைக்கு 2 நாட்கள் கழித்து தோலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் குறித்து நெஸ்லேவின் வாடிக்கையாளர் பிரிவில் புகார் கொடுத்தார் பிரேம் ஆனந்த். இதையடுத்து உள்ளூர் ஏரியா மேனேஜர் கிருஷ்ணபெருமாளுக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு நெஸ்லேவிடமிருந்து நோட்டீஸ் போனது. அவர் வேறு பால் பவுடர் டப்பாவைத் தருவதாக பிரேம் ஆனந்த்திடம் கூறினார். ஆனால் அதை ஏற்க பிரேம் ஆனந்த் மறுத்து விட்டார். இதையடுத்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் அந்த பால் பவுடரை சோதனை செய்ய நெஸ்லே பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால் அதையும் பிரேம் ஆனந்த் ஏற்கவில்லை. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே பாரபட்சமற்ற நடுநிலையான விசாரணை தேவை என்று பிரேம் ஆனந்த் கூறி விட்டார். இந்த நிலையில் இந்த பால் பவுடரை கோவையில் உள்ள உணவு ஆய்வுகத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 28 உயிருள்ள புழுக்கள் இருந்ததும், 22 சிறிய வகை புழுக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நுிர்வாகத் துறையை அணுகி இந்த பால் பவுடரின் சாம்பிளை அவர்களிடம் கொடுத்து புகார் செய்தார் பிரேம் ஆனந்த். இந்தப் பவுடர் மாதிரியை ஆய்வு செய்த அங்குள்ள நிபுணர்கள் இந்த பால் பவுடர் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளனர். இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-man-stumbles-as-he-finds-live-larvae-nestle-milk-powder-228036.html

 

இந்தியாவின் கலப்படங்களால் உலக தரம் மிக்க உணவு நிறுவனங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது

Edited by BLUE BIRD

Share this post


Link to post
Share on other sites

மேகி (#BanMaggi)-ட்விட்டர் காமெடி கலாட்டா

 
1.jpg
சமுக அவலங்களை துள்ளி குதித்து எள்ளி நகைப்பதில் தமிழ் நையாண்டி டிவிட்டர்களை மிஞ்ச யாராலும் முடியாது 

மேகி நூடுல்ஸில் அதிக அளவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளதாக சில மாநிலங்களில் தடை செய்யப் பட்டுள்ள நிலையில்........

1.jpg

அதன் விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர்  நடிகைகள் .மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துள்ளது 

இதனால் மற்ற விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஜுரம்  எனக்கும் சென்னை அமிர்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் நடிகை ராதிகா

இன்னும் சில குளிர்பான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் ஆர்யா,விஷால்....போன்றவர்கள் பயத்தில் பிதற்றுகிறார்கள்

இத்தகைய நிலைக்கு  எத்தனையோ சமுக புரட்சி செய்துள்ள முகநூல்,ட்விட்டர்....போன்ற சமுக வலைத்தளங்களே காரணம்

 
3a.jpg
The Protagonist ‏@arvinfido  

மனைவி: ராத்திரி மேகி ஓகே'வா?

 கணவன்: அது சாப்பிட கூடாதாம். பேப்பர் பாக்கலையா?

மனைவி: ஐயோ. சரி உப்மா பண்ணவா?

 கணவன்: போற உசுரு மேகிலேயே போகட்டும்..\

நதி முகம் @nadhimugam 
மேகி சத்தான உணவு என்று தீர்ப்பு வர வேண்டுமா ??? 
கேஸை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும்
 
bharanidharan ‏@bharanidharan06 
அதுக்காக எனக்கு குமாரசாமிதான் நீதிபதியா வேணும்னு  
மேகி கம்பெனிக்காரன் கேக்குறது எல்லாம் ஓவர்யா
 
 
குட்டி :) ‏@7da_kutty 
மேகி பேன் பண்ணிட்டாங்க! 
ஒயின்ஷாப் டைம் குறைச்சிட்டாங்க!! 
உலகம் அழியப்போறதுக்கான அறிகுறி தெரியுது!
 
பேங்க் ஆபிசர் ‏@Sathish26990 
இடியாப்பத்தின் வாழ்வுதனை மேகி கவ்வும் 
மீண்டும் இடியாப்பமே வெல்லும்
1.jpg
மைக்கிள் செல்வம் ‏@Michael_selvam  

வெங்கடேஷ் ஆறுமுகம் 2 hrs · வீட்டுக்கு வாங்களேன் ப்ரண்ட்ஸ் 
4 பாக்கெட் மேகி இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசுவோம்.
 
புதிரா புனிதமா @Puthira  

மேகி,நூல்டுஸ் க்கு தடை செய்த மாதிரி 
அப்படியே உப்புமாவுக்கும தடை பன்னிட்டா 
புண்ணியமா போகுமா எஜமான் . 
# பொண்டாட்டி அடிக்கடி கொடுக்கிற தண்டனை.
 
AaUf_r95_bigger.jpgநரேந்திர மோடி ‏@narendrermodi 
மேகி வந்ததும் என்ன மறந்துட்டாய்ங்க.. 

இவிங்களுக்கு சுயநினைவு வருவதுக்குள்ள பக்கத்துல இருக்க அண்டார்டிக்கா போயிட்டு வந்துடனும். என்னா வெயில்..

 
1.jpg
சாம்ராட் ‏@Its_SaamRaat 
மேகி விளம்பரத்துல நடிச்சவர கைது பண்றீர். இங்க ஒருத்தன் "கோக் குடிடா ராப் பண்ணுடா."ன்னு பாடினான். அவன என்ன பண்ண போறீர்

சிந்தனைவாதி @PARITHITAMIL  

மேகி நூடுல்ஸ் விவகாரம்: அமிர்தா அம்மணிக்கு ஜூரம் அடுத்து பெப்ஸி, கோக் விளம்பரத்தில் நடித்த நம் கூத்தாடிகள் என்ன ஆவார்களோ? தல தப்பிச்சு

piramanayagam @kprcpn 

மேகி குழந்தைகளின்உடல் நலத்திற்க்கும் கேடுன்னு ஒரு வரிய போட்டு விற்பனைக்கு செய்ங்க நாங்க சரக்க அப்படித்தேன் ஒரு வரிய போட்டு விக்கிறோம்
 
1.jpg
Siva♥Nakshatra ‏@mistrysiva 
வக்கீல் வண்டு முருகன்: என் கட்சிக்காரர் mr.குருவிகூடு மேகி பாக்குறதுக்கு நாக்குபூச்சி மாதிரி இருக்கறதுனால கொஞ்சம் மருந்து அடித்திருக்கிறார்
 
வெங்கடேஷ் ஆறுமுகம் ‏@venkatesh6mugam 
மேகிக்குறள்1  
மேகி செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
இடியாப்பம் செய்து விடல்.

1.jpg
சிங்கத்தின் கர்ஜனை @AandeaDA  

நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பழி போடக்கூடாது- குஷ்பூ#ஒரு மேகி பாக்கெட்டை வாங்கி அவங்க சாப்பிட்டா வழக்கை வாபஸ் வாங்கிடலாம் மேடம்
 
இதுபோன்ற கணக்கற்ற குறும்பதிவுகள் ட்விட்டர்,பேஸ்புக் வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதைப் பற்றியே பேச்சு...... 

ஆனால் ஊடகங்களும் இந்த அவலத்திற்கு பொறுப்பு என்பதை மறந்துவிட்டு........ 

 
உண்மையில் மேகி நூடுல்ஸ் மட்டுமல்ல எல்லா நூடுல்ஸ்களிலும் எல்லா சுவையான நொறுக்கு தீனிகளிலும் சுவைக்காக பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன

 

نكهات كيميائية ......

Posted by ‎عبدالله بن عثمان الغامدي‎ on Tuesday, May 19, 2015

சிந்தனைவாதி @PARITHITAMIL  

நூடுல்ஸ் டேஸ்ட்க்கு அதிலுள்ள flover-ல் ஒரு பட்டாசுக்கான வெடிமருந்தே இருக்குதாம் வீடியோ ஆதாரம்

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு # ஏன்டா தயாரிச்சவங்கள விட்டுட்டு நடிச்சவங்க மேல கேஸா?இதுதான் உங்க ஜனநாயகமா? நல்லா இருக்குடா உங்க நியாயம்?

 
 
 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நூடுல்ஸ் பிரியர்களே கவலை வேண்டாம் இதைப் பார்த்து வீட்டில் சமையுங்கோ  :D 

 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this