Sign in to follow this  
சபேசன்

அணிகள் அறிவோம்!

Recommended Posts

அணிகள் அறிவோம்!

அணிகள் என்றால் என்ன என்ற கேள்வி சிலருக்கு வரலாம். அதை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தமிழ் மொழி தன்னை அழுகுபடுத்துவதற்கு அணிந்து நிற்பவைகளை அணிகள் என்று சொல்லலாம்.

உடலை அழகுபடுத்தவதற்கும், பெருமைப்படுத்துவதற்கும் அணிகலன்களை அணிகிறோம். அதே போன்று தமிழை அழகு படுத்தி, பெருமைப்படுத்துகின்ற வேலையை அணிகள் செய்கின்றன.

அத்துடன் சொல்லப்படுகின்ற கருத்துக்கு ஒரு வலுவை அணிகள் கொடுக்கின்றன.

கவிதைகளில் இந்த அணிகள் இடம்பெறுகின்றன. உரை நடைகளில் இதை பயன்படுத்துபவர்களும் உண்டு.

இன்றைக்கு கவிதை என்பது புதுக்கவிதை, ஹைக்கூ என்று பல வடிவங்களை எடுத்து விட்டன. அவ்வாறான கவிதைகளிலும் அணிகள் இருக்கின்றன.

கவிதை எழுதுபவர்கள் இந்த அணிகள் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.

அணிகள் இரண்டு வகைப்படும்.

1. சொல்லணி

2. பொருளணி

எதுகை, மோனை போன்றவைகள் சொல்லணிக்குள் அடங்குகின்றன.

மிகுதியை உங்களின் வரவேற்பை பொறுத்து எழுதுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

என்னைப்பொறுத்தவரை கவிதைகளை வரையறைகளுக்குள் அழுத்துவதை நான் ஏற்பதில்லை..

சுவாரசியமாக.. சிந்திக்ககூடியவகையில்..அழகாக சொல்லப்பட்டால்..நான் ரசிக்கிறேன்..

ஆனாலும்.. தமிழை சாகடிக்ககூடாது என்பதில் நான் உடன்படுகிறேன்.

தமிழில் நிறைய விடயங்களை நான் அறிந்ததில்லை.

அதலால் நீங்கள் தரும் தகவல்கள் எனக்கும் உதவும்..

என் பிழைகளை யாரும் சுட்டிக்காட்டினால் நான் திருந்திக்கொள்வேன்.

உங்கள் தவிப்பும் தமிழ்ப்பற்றும் எனக்குப் புரிகிறது. நீங்கள் தொடரவேண்டும்.

அதை மற்றவர்கள்..தகவலாக எடுத்துக்கொள்ளட்டும்

மறந்தவர்கள் நினைவுப்படுத்திக்கொள்ளட்டு

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் எப்படித்தான் கவிதை எழுதினாலும், அவைகள் ஒரு வகைக்குள் அடங்குவது போன்று அணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சொல்லணிக்குள் அடங்காது விட்டாலும் பொருளணிக்குள் அடங்கிவிடும்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல முயற்சி சபேசன். கவிதை இலக்கணம் தொடர்பான பல விடயங்களையும் உங்களுடைய இந்தக் கட்டுரைத்தொடரில் எதிர்பார்க்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

அனைத்துக் கவிதைகளும் ஏதோ ஒரு அணிக்குள் எப்படி அடங்குகின்றன என்பதை போகப் போகப் பார்ப்போம்.

இப்பொழுது சொல்லணிகள் பற்றி முதலில் பார்ப்போம்.

சொல்லணிகள் 5 வகைப்படும்.

1. மோனை

2. எதுகை

3. பின்வருநிலை

4. மடக்கு

5. சிலேடை

இதில் எதுகை, மோனை பற்றி அதிகமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலேடையாக பேசுதல் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இப்பொழுது ஒவ்வொன்றாக நோக்குவோம்.

1.மோனை

முதலெழுத்து ஒரே மாதிரி வருவது போன்று தொடுக்கப்படுவது மோனை எனப்படும்.

உதாரணம் :

1.

கள்வன் கண்ணன் கன்னிப்பெண் கமலாவை கரும்புக் காட்டுக்குள் கடத்திச் சென்றான்.

2.

கணக்கின்றித் தவறுசெய்யக்

கணமேனும் கலங்காத

கயவரினைக் கருக்கிடவே

கருவியொன்று செய்யாயோ விஞ்ஞானமே

(மணிவாசகனின் "கருவிசெய் விஞ்ஞானமே" கவிதையில் இருந்து)

3.

வாகரையை

வசமாக்க

வரிந்து கட்டுகிறாய்

வா...

வம்புக்கிழுக்கிறாய்

வந்தடி வேண்டி போ...

(வன்னிமைந்தனின் "கூலிப்படையே ஓடி வா" என்ற கவிதையில் இருந்து)

4.

மயிலும் மானும் மீனும் மோகினி வடிவாய் வந்தது.

கவனிக்க: ஓரே எழுத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான்காவது உதாரணத்தைப் போன்று ம, மா, மீ, மோ போன்று ஒரே எழுத்தின் வரிசை எழுத்துகள் வருவதும் மோனை எனப்படும்.

யாழ் களத்தில் அனேகமான கவிஞர்கள் இந்த முறையிலேயே கவிதை எழுதுகிறார்கள். எதுகையை விட இது இலகுவான முறையாக இருப்பதால் அப்படி இருக்கக்கூடும்.

அடுத்ததாக எதுகை பற்றி பார்ப்போம்.

Edited by சபேசன்

Share this post


Link to post
Share on other sites

எதுகை என்பது இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ஆகும்.

மோனையில் உள்ள வசதி இதில் குறைவு என்பதை இங்கே சொல்ல வேண்டும்.

சொல்லில் வருகின்ற முதல் எழுத்தையோ, அல்லது அதன் மற்றைய வரிசை எழுத்துக்களை உபயோகிக்க முடியும் என்கின்ற பொழுது, பல்லாயிரக் கணக்கான சொற்கள் எமக்கு கிடைக்கும். இது "மோனையில்" உள்ள ஒரு சாதகமான அம்சம் ஆகும்

எதுகையில் இரண்டாவது எழுத்து ஒத்ததாக இருக்க வேண்டும். அத்துடன் அந்த எழுத்தின் வரிசையில் வருகின்ற மற்றைய எழுத்துக்களை உபயோகிக்கவும் கூடாது.

எதுகைக்கு சில உதாரணங்கள்:

1.

மைந்தா..அகமுடைந்து நீ

சிந்தை சினக்காதே - எம்

சொந்தம் தமிழல்லவா - அது

சிந்தும் அமுதல்லவா

இது விகடகவி எழுதிய கவிதை. இதிலே ஒவ்வொரு வரியின் இரண்டாவது எழுத்தும் "ந்" என்று இருப்பதை கவனியுங்கள். (அத்துடன் சிந்தை, சினக்காதே, சொந்தம், சிந்தும் என்றும் மோனையும் இதில் உண்டு. சி, சி, சொ, சி)

2.

விண்ணை விட்டு

மண்ணில் வந்த தேவதை

என்னை வரம் கேட்கிறாள்

என்ன நான் சொல்வது

இது விகடகவியின் "தேவதை ஒரு தேவதை" கவிதையில் இருக்கின்ற வரிகள். விண்ணை, மண்ணில், என்னை, என்ன என்று எதுகை இருப்பதோடு, என்னை, என்ன என்று மோனையும் இருக்கிறது.

3.

தர்க்கம் செய்ய நா இல்லை

தருமம் பேச நாதியில்லை - ஆளும்

வர்க்கம் மட்டுமே பயன்படுத்தும். - என்

வர்ணத்தைக் காட்டி மெய்ப்படுத்தும்.

இது வல்வைசகறா எழுதிய "வெண்புறா" கவிதையில் இருக்கின்ற வரிகள். இதிலும் எதுகையும் உண்டு. மோனையும் உண்டு.

4.

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்.

எதுகையில் சில நெகிழ்வுத்தன்மைகளும் இருக்கின்றன.

தவம் செய்தால்

அகம் நிறையும்

இதையும் எதுகை என்று சொல்லலாம். சொற்கள் வெளிப்படுத்துகின்ற ஒலி ஒத்துப் போகின்றன என்பதால் இது "எதுகை" என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அப்படியே வெண்மை, தன்மை போன்றவகைளும் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதுவே எதுகை ஆகும்.

என்னுடைய பார்வையில் எதுகை, மோனை இரண்டையும் தன்னுடைய கவிதைகளில் பயன்படுத்துபவர்கள் தனித் திறமை கொண்டவர்கள் என்பேன்.

Share this post


Link to post
Share on other sites

வடிவா விளக்கியிருக்கிறிங்க சபேசன் சார்.

பிரயோசனமான தகவல்

உங்கட குறிப்பை பார்த்த பின்னே நானும் கவிதை எழுதத்தான் வேண்டுமா என்ற கேள்வியே எழுகிறது.

சந்தம் அமைந்த கவிதை எதுவென்றாலும் நல்லாய் இருக்கும் எண்றே நான் நினைக்கிறன்

Share this post


Link to post
Share on other sites

இல்லை, நீங்கள் அப்படி நினைக்கக்கூடாது.

கவிதை என்பது எதுகை, மோனை மட்டும் அல்ல. அதில் இன்னும் நிறைய இருக்கிறது. தொடர்ந்தும் விளக்குகின்ற பொழுது உங்களுடையதும் கவிதைதான் என்பதை நீங்கள் உணருவீர்கள். அவசரப்பட வேண்டாம்.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் உங்கள் பணியை :(

Edited by Sujeenthan

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் பல நாட்களாக கவிதை எழுத முயற்சித்தால் என்ன என்று ஒரு ஆசை.. எவ்வாறு தொடங்குவது என்பதுதான் பிரச்சனையாக இருந்தது.. உங்களுடைய இந்த தகவல் மிக்க பிரயோசமாக இருக்கிறது.. தொடருங்கள்...

இத்தொடர் முழுவதையும் வாசித்த பின்னர் கவிதைக்களத்தில் ஒரு வாங்குவாங்குவது என்றுதான் திட்டம்.. சகித்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.. ;)

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் பல நாட்களாக கவிதை எழுத முயற்சித்தால் என்ன என்று ஒரு ஆசை.. எவ்வாறு தொடங்குவது என்பதுதான் பிரச்சனையாக இருந்தது.. உங்களுடைய இந்த தகவல் மிக்க பிரயோசமாக இருக்கிறது.. தொடருங்கள்...

இத்தொடர் முழுவதையும் வாசித்த பின்னர் கவிதைக்களத்தில் ஒரு வாங்குவாங்குவது என்றுதான் திட்டம்.. சகித்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.. ;)

எழுதுங்கோ சார். பார்க்க ஆவலாய் இருக்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

இதுவரை எதுகை, மோனை என்ற இரண்டையும் பார்த்தோம்.

இதில் எட்டு விதமான எதுகை வகைகளும், ஏழு விதமான மோனை வகைகளும் உண்டு.

தொடர்ந்து வருகின்ற சொற்கள் ஒத்த எழுத்தில் வருவதை ஒரு விதமான மோனை என்றும், ஒன்றை விட்டு ஒன்று வருகின்று சொற்கள் ஒரே எழுத்தில் ஒத்த எழுத்தில வருவதை இன்னொரு வகை மோனை என்றும் இப்படி ஏழு வகையாக பிரித்திருப்பர்கள். அதே போன்று எதுகையிலும் பிரித்திருப்பார்கள்.

நாம் அப்படி மிகவும் ஆழமாக போக வேண்டிய அவசியம் இல்லை.

அடிப்படை புரிந்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்கள் ஆழமான கருத்துக்களோடு எதுகை, மோனை இரண்டும் வருமாறு எழுதினால் கவிதை மேலும் இனிமை பெறும்.

இப்பொழுது சொல்லணியில் இருக்கின்ற மற்ற மூன்றையும் பார்ப்போம்.

மடக்கு

சிலேடை

பின்வருநிலை

இவை மூன்றிற்கும் அதிக வித்தியாசம் இல்லை. பல இடங்களில் இந்த மூன்றையுமே சிலேடை என்று அழைப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

இந்த மூன்றைப் பற்றியும் பார்ப்போம்.

யாழ் களத்திலே கறுப்பி "ஒரு சொல் - பல பொருள் என்று ஒரு விளையாட்டை ஆரம்பித்து வைத்தார் அல்லவா?

அங்கே இந்த மூன்றும் இருக்கின்றன.

மடக்கு :

ஒரு சொல் ஒரு வசனத்தில் மீண்டும் மீண்டும் வேறு வேறு அர்த்தங்களில் வருவதை மடக்கு என்று சொல்வார்கள்.

1.

நீர் நீர் ஊற்றும். (நெடுக்காலபோவான் எழுதியது)

2.

நாடி வந்தோரை நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பதில் சிறந்தவர் அவர்.

(ரமா எழுதியது)

3.

நாடு அதை நாடு (கறுப்பி எழுதியது)

இவைகளை மடக்கு என்று சொல்வார்கள். ஒரு சொல் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை வருகிறது. ஆனால் வேறு வேறு அர்த்தங்களை கொடுக்கிறது.

அடுத்ததாக சிலேடையை பார்ப்போம்.

ஒரு சொல் இரண்டு அர்த்தத்தில் வருவதை சிலேடை என்று சொல்வார்கள். மடக்கில் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் வரவேண்டும். சிலேடையில் ஒரு முறைதான் குறிப்பிட்ட சொல் வரும். ஆனால் பல அர்த்தங்களை கொண்டிருக்கும்.

1.

வாரும் இரும்படியும் (மாதுகா எழுதியது)

இதிலே இரும்படியும் என்ற ஒரு சொல், இருந்து படியும் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. இரும்பை அடியும் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.

2.

பூவை (மாதுகா எழுதியது)

இதுவும் இரண்டு அர்த்தங்களை கொடுக்கிறது.

3. தலைவரின் மாவீரர் உரைக்காக காத்திருக்குது பார்

இங்கே பார் என்று சொல்லும் பார்க்கவும் என்ற அர்த்தத்தையும் உலகம் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.

இப்படி ஒரு சொல் இரண்டு அர்த்தங்களை கொடுப்பதை சிலேடை என்று சொல்வார்கள்.

பின்வருநிலை பற்றி நாளை எழுதுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

பின்வருநிலைக்கும் மடக்குக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரு சொல் தொடர்ச்சியாக பல முறை மீண்டும் மீண்டும் வந்து, அது பல பொருள்களை தருவதை பின்வருநிலை என்று சொல்லுவார்கள்.

உதாரணம்:

அவர் அறிவார் அறிவார்

அறிவார் அறிவார்

விளக்கம்: அவரது அறிவை யார் அறிவார்? அறிவுள்ளவர்கள் அல்லது அறிந்தவர்கள் அறிவார்கள்.

இப்படி ஒரு சொல் பல பொருள்களை தருகின்ற பொழுது அவைகளை மடக்கு, சிலேடை, பின்வருநிலை என்று வகைப்படுத்துவார்கள்.

இன்று கவிதைகளில் இந்த முறைகளை பாவிப்பது மிகக் குறைந்து விட்டது.

இங்கு யாழ் களத்திலும் அவ்வாறான கவிதைகள் என்னுடைய கண்ணில் படவில்லை.

கவிஞர்கள் இந்த முறையிலும் கவிதை எழுதிப் பார்ப்பது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது வரை சொல்லணிகளை பார்த்தோம்.

சொல்லணிகளில் முக்கியமான எதுகை, மோனையையும் அறிந்து கொண்டோம்.

இனி கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கின்ற பொருளணிகளைப் பார்ப்போம்.

பொருள் அணிகளை பத்து வகையாக பிரித்துள்ளார்கள். இதில் எல்லாவற்றையுமே ஆழமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பொருளணிகளில் ஒரு சிலவே முக்கியமானவைகள். மற்றையவை ஏறக்குறைய ஓரே மாதிரியானவையே.

இனி முக்கியமான பொருளணிகளை பார்ப்போம்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல விளக்க குறிப்புகள் சபேசன். நன்றி

Share this post


Link to post
Share on other sites

என்னதான் வரைமுறையும் விதியும் தெரிஞ்சாலும் வார்த்தைகள் வரமாட்டுதாமே சபேசன் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

மிக நல்ல முயற்சி. எளிய நடையில் அரிய தகவல்கள். பல பேருக்கு பேருதவியாக இருக்கும். தோழர் சபேசன் அவர்களின் பணி தொடர என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Share this post


Link to post
Share on other sites

சபேசன் அண்ணா!

நீங்கள் எழுதும் இக் கட்டுரையைப் படிக்கும்போது பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை (உவமைக் கவிஞர் சுராதாவின் வரிகள் போல் தொரிகிறது ?). தென்றலாய் மனதை வருடும் வரிகள். நீங்கள் குறிப்பிடும் இலக்கணத் தன்மைகள் இந்தப் பாடலில் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். இனிமையான பாடல். பி.பி. சிறினிவாசின் இதமான குரல் பாடலை மேலும் மெருகூட்டுகிறது.

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து - உன்

எழில்தனைப் பாடவா தமிழைச் சேர்த்து

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே

விளையாடும் வெண்மதி நீதானா

எந்தை முன்னோர்கள் இயல், இசை, நாடகம்

பயின்றதெல்லாம் உன்னிடம்தானா

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்

நீலக் குயிலும் நீதானா

கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே

கவரிமான் என்பதும் உன் இனம்தானா.

Edited by ilango3112

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this