Sign in to follow this  
ராசவன்னியன்

இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..!

Recommended Posts

இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..!

யாழ் 'தமிழ் சிறி'யின் நீராகார 'வெள்ளி இரவு' முடிந்து, சனிக்கிழமையாக உதித்திருக்கும் இந்த நாள் இனிய நாள்..!

இப்பொன்னாளில், உங்கள் மன்னனின் வாழ்க்கை பொன்பொழிகளை சற்றே கேட்டு இந்நாளை தொடங்குவோமா..?

70852263.jpg

முள்ளிவாய்க்காலைவிட மிக மோசமான யுத்தம்..!

இரத்தம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது..!!

எங்கு நோக்கினும் பிணக்குவியல்கள், அலறல்கள், உயிர்மூச்சுக்கள்..!!!

போரில் தோற்று வீழ்த்தப்பட்ட இராவணன், தனது இறுதி கணங்களை நெருங்கிக்கொண்டிருந்தான்..

குருதிசகதிக்குள் அமிழ்ந்த இராவணன், மரண எல்லையில் வலியால் முனங்கிக்கொண்டிருந்தான்..

இராமன், இலக்குமணனை அழைத்தான்.. :o

தமையன் சொல்லுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியும் இலக்குமணன்அருகே சென்று, " என்ன செய்ய வேண்டும் அண்ணை..? "  என்றான்.

இலக்குமணா..! உனக்கு மிக முக்கிய வேலை இருக்கிறது.. என்னதான் தீங்கு செய்திருந்தாலும், இராவணன் ஒரு மகாமனிதன்.. வீரமிக்கவன்.. அறிவுஜீவி.. அது மட்டுமல்ல, மிகச்சிறந்த சிவபக்தன்.. சக்ரவர்த்தி.. சங்கீத ஞானமுள்ள பாடகன்.. வீணை வித்வான்.. அனைத்து வேதங்களையும் கரைத்துக் குடித்த அறிஞன்.. ஆகையால் இத்தனை சிறப்புக்களைக் கொண்ட ஒருவன், இவ்வுலகைவிட்டு மறையப்போவதால் அவனுக்கு இறுதி மரியாதை செலுத்தி, அவனிடம் நல்லாசியுடன் அவன் கற்ற அனுபவ கூற்றுக்களை அறிவுரைகளாக கேட்டு வா..!" என கேட்டுக்கொண்டான்..

எப்பொழுதும் கீழ்ப்படியும் இலக்குமணன், தமையன் சொற்படியே இராவணன் குற்றுயிராக வீழ்ந்துகிடக்கும் இடத்திற்கு சென்றான். இராவணின் தலையருகே சென்று, அவனை நோக்கி குனிந்தான். காலடிச்சத்தம் தன்னருகே வருவதைக் கேட்டுணர்ந்த இராவணன், தலையருகே இலக்குமணன் நிற்பதைக் கண்டவுடன் மெளனமாகவே இருந்தான். நீண்டநேரக் காத்திருப்புக்கு பின்னரும் இராவணன் ஒன்றுமே பேசாததால், இலக்குமணன் வெறுப்புற்று திரும்பிவந்து அண்ணன் இராமனிடம் முறைப்பாடு செய்தான்.. :(

புன்னகையுடன் கேட்டுக்கொண்ட இராமன்,

" இலக்குமணா..! தவறு உன்னிடம் உள்ளது.. ஒருவரிடம் எதையும் கற்றுக்கொள்ள அவரிடம் அணுகினால், அவரின் கால்களுக்கருகே நின்று மரியாதையுடன் கேட்கவேண்டுமே தவிர அகந்தையுடன் தலைமாட்டருகே சென்று நிற்கக்கூடாது.. ஆகவே ஒருவருக்கு மரியாதை செலுத்துவது எப்படியென கற்றுக்கொள்.. நீ மறுபடியும் இராவணிடம் சென்று அவனின் காலடியருகே நின்று மரியாதையுடன் கேள்.. நிச்சயம் இராவணன் சொல்வான்..! " என அறிவுறுத்தினான்.

இலக்குமணன் மறுபடியும் இராவணனிடம் சென்று அவனின் காலடியருகே பவ்யமாக நின்றான்.. உயிர்விடும் நிலையிலிருந்த இராவணன் இறுதி மூச்சைசுக்களை விட்டவாறே இலக்குமணனை பார்த்து சிநேகமுடன் புன்னகைத்து வரவேற்றான்..

" அருமை இலக்குமணா.. என்னை நாடி வந்திருக்கிறாய்.. உனக்கு நான் என்ன செய்யவேண்டுமென சொல்..! " என கேட்டுக்கொண்டான்..

இலக்குமணன் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே பணிவுடன் நின்றான்.. புத்திசாலியான இராவணன், இலக்குமணனின் வருகையையும், நோக்கத்தையும் சாதுர்யத்தால் உணர்ந்துகொண்டு இலக்குமணனை அருகே வந்து காதை கொடுக்குமாறு மெல்லிய சைகையில் அழைத்தான்..

இலக்குமணன் பணிவுடன் அணையப்போகும் விளக்காக பிரகாசிக்கும் இராவணனின் முகத்தருகே அவனின் தீர்க்க அறிவுரைகளை கேட்க குனிந்தான்.. :o

அருமை இலக்குமணா..! நான் உனக்கு மூன்றே முன்று அனுபவ அறிவுரைகளை, மனிதகுல வாழ்க்கை நெறிமுறைகளை என் அறிவுரைகளாக சொல்கிறேன் கேள்..!” என காதருகே கிசுகிசுத்தவாறே சொல்லிவிட்டு, கடைசியாக நீண்ட நிம்மதிப் பெருமூச்சை இழுத்துவிட்டு இம்மண்ணைவிட்டு மீளாத் துயிலிலாழ்ந்தான்.. :(:huh:

இராவணன் கடைசியாக இலக்குமணனிடம் போதித்த அந்த அறிவுரைகள், மனிதகுலத்திற்கே மிகமிக அத்தியாவசியமான நெறிப்படுத்தும் பொன்மொழிகளாகும்..

அவை யாவை..? :icon_idea:

இராவண ராச்சிய இந்நாள் பிரஜைகளான யாழ்கள உறவுகளே, உங்கள் மன்னன் அறிவுறுத்திய அந்த பொன்மொழிகளை நீங்கள் அறிந்துகொண்டு பின்பற்றுவது உங்கள் கடமைதானே?

அறிய ஆவலாக உள்ளீர்கள் தானே..?

...

....

....

....

....

....

யாழ் சக்கரவர்த்தி இராவணனின் அறிவுறுத்தல்கள்..!

1. தயவுசெய்து 'வாட்ஸ்அப்'பிலேயே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டாதீர்கள்..

2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்..

3. வாகனம் ஓட்டும்பொழுது கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள்..

இம்மூன்றையும் இதயசுத்தியாக பின்பற்றினால் நீங்கள் வாழ்க்கையில் உய்வீர்கள்..

"இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா தான்..!" :lol:

- அடியேனின் 'உல்டா 'தமிழாக்கம் தான்! 

( அனைவருக்கும் இனிய நாளாகட்டும் ! )

.

Edited by ராசவன்னியன்
  • Like 3

Share this post

Link to post
Share on other sites

யாருடைய ராச்சியமெண்டாலும் எங்களுக்கு எப்பவுமே உய்யலாலா தான்.  :D

Share this post

Link to post
Share on other sites

யாருடைய ராச்சியமெண்டாலும் எங்களுக்கு எப்பவுமே உய்யலாலா தான்.  :D

இருக்கலாம்.. ஆனால் தாய் மண்ணில் 'உய்யலாலா' பாடுவது தனிசுகம் தானே? :icon_idea:

வருகைக்கு நன்றி, 'டண்டணக்கா' ..! ஹாய் டனக்குனக்கா..!! :lol:

Share this post

Link to post
Share on other sites

இதப்படிச்சுட்டு சிரியண்ணே கடுப்படிச்சு வேலைக்கு விடுப்பு எடுக்க  போறார்  பாருங்க .... அப்புறம் நான் திரும்ப உற்சாக பானம் கலக்கி கொடுக்க வேண்டி வரும்... :lol::D

Edited by ராஜன் விஷ்வா

Share this post

Link to post
Share on other sites

இருக்கலாம்.. ஆனால் தாய் மண்ணில் 'உய்யலாலா' பாடுவது தனிசுகம் தானே? :icon_idea:

வருகைக்கு நன்றி, 'டண்டணக்கா' ..! ஹாய் டனக்குனக்கா..!! :lol:

தாய் மண்ணில் உய்யலாலா பாடி ரொம்ப நாளாச்சு வன்னியன் ஐயா. 
எனது முழுபெயரை சொன்னதுக்கு நன்றி ஐயா.
நண்பர்கள் என்னை 3D என்று அழைப்பார்கள்   Full name: டண்டணக்கா டுபுக்கு டணக்குணக்கா 
First Name: Dandanakka 
Middle Name: Dubukku 
Last Name: Danakkunakkaa 
Full Name: 3D 

Share this post

Link to post
Share on other sites

...

நண்பர்கள் என்னை 3D என்று அழைப்பார்கள்   Full name: டண்டணக்கா, டுபுக்கு, டணக்குணக்கா 
First Name: Dandanakka 
Middle Name: Dubukku 
Last Name: Danakkunakkaa 
Full Name: 3D

அருமையான சொற்கள், ஆழ்ந்த கருத்துக்கள், அழகான சிந்தனை..!

ஆனால் பொருள்தான் புரியவில்லை..ஐயா, பொழிப்புரை அருள்க !! :)

Share this post

Link to post
Share on other sites

சிங்களம் இராவணணைத் தேடித்திரிவதாக ஒரு செய்திவந்தது! எங்கள் அன்பான யாழுறவு ராசவன்னியருமா....?? :o 

பாவம்! தமிழ் சிறி. அவர் சுத்தச் சைவப்பழம், வெள்ளிக்கிழமைகளில் பால், பழத்தைத்தவிர வேறெதையும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. :D  :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

அருமையான சொற்கள், ஆழ்ந்த கருத்துக்கள், அழகான சிந்தனை..!

ஆனால் பொருள்தான் புரியவில்லை..ஐயா, பொழிப்புரை அருள்க !! :)

இதோ உங்களுக்காக பொழிப்புரை.  :D

Share this post

Link to post
Share on other sites

இதோ உங்களுக்காக பொழிப்புரை.  :D

Share this post

Link to post
Share on other sites

இதோ உங்களுக்காக பொழிப்புரை.  :D

:(:o

ஓ.. இதுதான் டண்டணக்கா..டணக்குணக்காவா..? :o

இறுதியில் எல்லோருக்கும் 'டண்டணக்கா'தான்னு சொல்லீட்டீங்கள்..! :(

'டுபுக்'காட்டம் இருந்தாலும் பொழிப்புரை நல்லாவே இருக்கு!

உங்கள் குழாயில் தேடியெடுத்து இணைத்துள்ளீர்கள் நன்றி.

Share this post

Link to post
Share on other sites

சிங்களம் இராவணணைத் தேடித்திரிவதாக ஒரு செய்திவந்தது! எங்கள் அன்பான யாழுறவு ராசவன்னியருமா....?? :o 

பாவம்! தமிழ் சிறி. அவர் சுத்தச் சைவப்பழம், வெள்ளிக்கிழமைகளில் பால், பழத்தைத்தவிர வேறெதையும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. :D  :rolleyes:

தமிழர்கள் தேடுவதை கொடுக்காமல், தேவையற்றவர்களை அவர்கள் தேடுவதே பொழைப்பா போச்சுது..! :o:)

தமிழ் சிறி சார், கையால் தொடாமல் பருகி இன்புறுவது பால், ஆப்பிள் மற்ற கலவைகள் கொண்ட நீராகரம் தான், 'வெள்ளித் திண்ணை'யில் அவை மணம் கமழும்..!

கருத்திற்கு நன்றி, பாஞ் ஐயா.

Edited by ராசவன்னியன்

Share this post

Link to post
Share on other sites

பொருள் எங்கேயோ இடிக்குதே...!  அன்று வாட்ஸப் இருந்திருந்தால்.....  , சீதா தனது போனில் செல்பி எடுத்து நாதாக்கு தட்டிவிட  ஒரு 90 கலிபரால் புட்பகம் பூப் பூவாய் பொழிந்திருக்குமே...! :lol::)

சீதாவிடம் கைப்பேசியே கைவசம் இல்லை, இராவணனின் ஆட்கள் அந்தளவிற்கு ஏமாளிகளாக இருக்க வாய்ப்பில்லைதானே..? :D

இராமன் வென்றதும் தமிழனின் உடனிருந்து கொன்றழிக்கும் காட்டிக்கொடுப்புகளால்தான். :(

 தமிழனின் பாட்டன் முருகனா? ராவணனா?  :D
முருகன் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த சீமான் ராவணன் முன்னேற்ற கழகத்தை எப்ப ஆரம்பிக்க போறார்?  :lol:

Share this post

Link to post
Share on other sites

எல்லாம் நல்லாத்தான் இருக்குது வன்னியன் சார்... '2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்..' << இதைத் தவிர..!!  :o

Share this post

Link to post
Share on other sites

 தமிழனின் பாட்டன் முருகனா? ராவணனா?  :D
முருகன் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த சீமான் ராவணன் முன்னேற்ற கழகத்தை எப்ப ஆரம்பிக்க போறார்?  :lol:

(இராவணனன் தமிழனா..? சிங்களனா..? :o )

சீமான், முருகன் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தால் ஈழத்தில் இராவணன் முன்னேற்றக் கழகம் என ஈழத்தலைகள் ஆரம்பிக்க வேண்டியதுதான்.. ஆனால் இதில் சின்ன வரலாற்று ரீதியான சிக்கல் இருக்கிறது..

இத்தனை காலம் மறைமுகமாக தமிழர்களுக்கு இன்னல் கொடுத்த இந்தியா, இராவணன் என்ற பெயரில் ஈழத்தமிழர்கள் கட்சி ஆரம்பித்தால், ராம் ராம் என காட்டுக் கூச்சல் போட்டு (இந்தக் காட்டுக் கூச்சலை இராமேஸ்வரத்தில் தினமும் காணலாம்) வடக்கத்தியானுகள் ஒன்று கூடி வெளிப்படையாக அழிக்க ஆரம்பிப்பானுகள்.. ஒற்றுமையற்ற தமிழினத்தின் கதி அம்போ தான்..

தேவையா?

Share this post

Link to post
Share on other sites

எல்லாம் நல்லாத்தான் இருக்குது வன்னியன் சார்... '2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்..' << இதைத் தவிர..!!  :o

'மது, மாது, புகை' இவற்றை அறவே நாடாதீர்கள் என சான்றோர்கள் இடித்துரைத்துள்ளனர்.. ஆனால் அவரவர்கள் தங்கள் சுயவிருப்பத்திற்கேற்றவாறு தன்னை சமாதானப்படுத்தி போகிக்கின்றனர்..

அதுமாதிரிதான் இந்த வாட்ஸ் அப், முகநூல் மற்றும் கைப்பேசி மோகம்..! :(

வார விடுமுறையாதலால் நேற்றிரவு  உணவகத்தில் ஒரே கூட்டம். வழமையாக நான் சாப்பாட்டிற்கு  செல்லும் உணவகம் சென்று எனது உணவிற்காக காத்திருந்தேன்..

இருக்கையின் எதிர்ப்புறத்தில் ஒருத்தர் கைப்பேசியில் எதையோ நோண்டிக்கொண்டே இருந்தார்.. திடீரென சத்தமாக சிரித்தார்.. பின்னர் 'டொக்கு.. டொக்கு' என டைப் செய்து யாருக்கோ அஞ்சல் செய்தார்..

இடையில் அவருக்கான உணவும் வந்தது.. ஒரு கையில் தோசை வில்லலெடுத்து தின்றுகொண்டே மறுகையால் கைப்பேசியில் அதே நோண்டல், சத்தமுடன் சிரிப்பு.. மற்றவர்களின் முகச் சுளிப்பிற்கு நடுவே அவரின் கைப்பேசி லொள்ளு தொடர்ந்தது.. அவர் உபயோகித்தது முகநூல் மெசெஞ்ஜர்..!

பொது இடத்தில் எப்படி நடந்துகொள்வது என்ற அடிப்படை நாகரீகத்தை இந்த கைப்பேசி மோகம் அழிக்கிறது..

இமிகிரேசன் கியூ, பேங்க் கியூ, சூப்பர் மார்க்கெட் கியூ என எங்கு சென்றாலும் ஆசிய இனத்தவர்களின் கைப்பேசி நாகரீகம், அதன் சார்ந்த நடத்தை படுமோசம்!

அதை சுட்டிக்காட்டவே தமிழாக்கம் செய்து இந்த பதிவை பதிந்தேன். :)

கருத்திற்கு நன்றி சோழியன்!

.

Edited by ராசவன்னியன்

Share this post

Link to post
Share on other sites

இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..!

யாழ் சக்கரவர்த்தி இராவணனின் அறிவுறுத்தல்கள்..!

1. தயவுசெய்து 'வாட்ஸ்அப்'பிலேயே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டாதீர்கள்..

2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்..

3. வாகனம் ஓட்டும்பொழுது கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள்..

இம்மூன்றையும் இதயசுத்தியாக பின்பற்றினால் நீங்கள் வாழ்க்கையில் உய்வீர்கள்..

"இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா தான்..!" :lol:

- அடியேனின் 'உல்டா 'தமிழாக்கம் தான்! 

( அனைவருக்கும் இனிய நாளாகட்டும் ! )

இராவணன், அகில  இலங்கையும் ஆண்ட மன்னன்.

அவனை... யாழ் மன்னனாக குறுகிய நிலப்பரப்புக்குள்.... சித்தரித்தமை கண்டனத்துக்குரியது.

இதனை, சிங்கள பிக்குகள்... யாராவது வாசித்து விட்டு, தங்களது மகாவம்சத்தில்....

இராவணனன் யாழ்ப்பணத்தை மட்டுமே ஆண்டவன் என்று, மாற்றி எழுதி விடுவார்கள் என்று.. அச்சமாக உள்ளது. :D  :lol:

டிஸ்கி: உய்யலாலாவுக்கு..... தமிழ் அகராதிகளிலோ, கூகிளிலோ அரும் சொற்பதங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. :icon_idea:

உய்யலாலா என்றால் என்ன அர்த்தமுன்னு.... வன்னியன் சார் தான் விளக்கணும். :icon_mrgreen:  

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

இராவணன், அகில  இலங்கையும் ஆண்ட மன்னன்.

அவனை... யாழ் மன்னனாக குறுகிய நிலப்பரப்புக்குள்.... சித்தரித்தமை கண்டனத்துக்குரியது.

சிறியேனின் கவனக்குறைவான தவறுக்கு மன்னித்தருள்க..! :(:)

டிஸ்கி: உய்யலாலாவுக்கு..... தமிழ் அகராதிகளிலோ, கூகிளிலோ அரும் சொற்பதங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. :icon_idea:

உய்யலாலா என்றால் என்ன அர்த்தமுன்னு.... வன்னியன் சார் தான் விளக்கணும். :icon_mrgreen:  

'உய்யலாலா' என்பது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு பதம் அல்ல. உய்யல், ஆலா என்ற இரண்டு சொற்களின் கூட்டே அந்தப் பதம். புணர்ச்சி விதிகளின்படி உய்யல் + ஆலா என்ற இரு சொற்கள் கூடி உய்யலாலா என்ற பதம் நமக்குக் கிடைக்கிறது.

அது என்ன உய்யல்? அது என்ன ஆலா? அதை ஏன் இங்கு கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார்? என்ற கேள்விகள் எழுவது இயற்கையே.

நாயகனை தலைவனாக, அரசனாகப் பாவிப்பது என்பது தமிழ் மரபு. கவிஞர் மரபுவழி வந்தவர் என்பதால் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் தலைவனை ஒரு அரசனாகவும், அவன் எவ்வளவு பெரிய நாட்டினை ஆண்டு வருகிறான் என்பதையும் கவிஞர் எடுத்துரைக்கிறார்.

உய்யல் என்றால் உயர்தல்! நம் நாயகனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அப்படி உயர்ந்து நிற்பது எது என்றால் 'ஆலா' என்ற ஒரு பறவையாம். அதனால்தான் அந்த நாட்டில் உயர்ச்சி என்பதே ஆலா எனப் பொருள் வருமாறு கவிஞர் இராவணனின் ராச்சியத்தில் உய்யல் ஆலா என்கிறார்.

ஆலா என்றால் ஆங்கிலத்தில்  Tern என அழைக்கப்படும் பறவை. அதிலும் குறிப்பாக Arctic Tern என்ற வகை ஒன்று உண்டு. இப்பறவை என்ன செய்யும் என்றால் வடதுருவப்பகுதிகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் அங்கிருந்து பறக்கத் தொடங்கி தென் துருவப் பகுதிகளுக்குச் செல்லும். அதே போல தென் துருவத்தில் குளிர் தொடங்கும் முன் மீண்டும் வட துருவத்திற்குப் பறந்து செல்லுமாம். இது அப்படி ஓர் ஆண்டில் பறக்கும் தூரம் 70,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகம்.

இராவணனின் ராச்சியம் அப்படிப் பரந்து விரிந்தது. அதை முழுவதும் பார்க்கக்கூடியது ஆலாப் பறவைகள் மட்டுமே என்று ஒரு வரியில் நாயகனின் பெருமையையும் கூடவே ஒரு அருமையான அறிவியல் குறிப்பையும் தருகிறார் கவிஞர்.

-இணையத்தில் சுட்ட விளக்கத்தின் சுருக்கம் (நன்றி)

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சீரிப்புக்குள் ஒரு சீரியல் துணுக்கையும் சொல்கிறேன்.

உய்யலாலா என்பது கிரிஸ்ணணுக்குப் பாடப்படும் ஒரு வகைத் தாலாட்டு என்பதே நான் கேள்விப்பட்டது.

இராவணன் சொன்ன 4 ம் ரகசியத்தை நிர்வாக தடை செய்துவிட்டது. அது

-

-

-

-

யாழ்.கொம்மில் நேரத்தை வீணடிக்காதீர்கள் :)

Share this post

Link to post
Share on other sites

இராவணன், அகில  இலங்கையும் ஆண்ட மன்னன்.

அவனை... யாழ் மன்னனாக குறுகிய நிலப்பரப்புக்குள்.... சித்தரித்தமை கண்டனத்துக்குரியது.

இதனை, சிங்கள பிக்குகள்... யாராவது வாசித்து விட்டு, தங்களது மகாவம்சத்தில்....

இராவணனன் யாழ்ப்பணத்தை மட்டுமே ஆண்டவன் என்று, மாற்றி எழுதி விடுவார்கள் என்று.. அச்சமாக உள்ளது. :D  :lol:

டிஸ்கி: உய்யலாலாவுக்கு..... தமிழ் அகராதிகளிலோ, கூகிளிலோ அரும் சொற்பதங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. :icon_idea:

உய்யலாலா என்றால் என்ன அர்த்தமுன்னு.... வன்னியன் சார் தான் விளக்கணும். :icon_mrgreen:  

ஐஞ்சு நிமிசத்திலை உய்யலாலாவுக்கு விளக்கம் சிறித்தம்பி.... :D

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

சிறியேனின் கவனக்குறைவான தவறுக்கு மன்னித்தருள்க..! :(:)

'உய்யலாலா' என்பது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு பதம் அல்ல. உய்யல், ஆலா என்ற இரண்டு சொற்களின் கூட்டே அந்தப் பதம். புணர்ச்சி விதிகளின்படி உய்யல் + ஆலா என்ற இரு சொற்கள் கூடி உய்யலாலா என்ற பதம் நமக்குக் கிடைக்கிறது.

அது என்ன உய்யல்? அது என்ன ஆலா? அதை ஏன் இங்கு கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார்? என்ற கேள்விகள் எழுவது இயற்கையே.

நாயகனை தலைவனாக, அரசனாகப் பாவிப்பது என்பது தமிழ் மரபு. கவிஞர் மரபுவழி வந்தவர் என்பதால் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் தலைவனை ஒரு அரசனாகவும், அவன் எவ்வளவு பெரிய நாட்டினை ஆண்டு வருகிறான் என்பதையும் கவிஞர் எடுத்துரைக்கிறார்.

உய்யல் என்றால் உயர்தல்! நம் நாயகனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அப்படி உயர்ந்து நிற்பது எது என்றால் 'ஆலா' என்ற ஒரு பறவையாம். அதனால்தான் அந்த நாட்டில் உயர்ச்சி என்பதே ஆலா எனப் பொருள் வருமாறு கவிஞர் இராவணனின் ராச்சியத்தில் உய்யல் ஆலா என்கிறார்.

ஆலா என்றால் ஆங்கிலத்தில்  Tern என அழைக்கப்படும் பறவை. அதிலும் குறிப்பாக Arctic Tern என்ற வகை ஒன்று உண்டு. இப்பறவை என்ன செய்யும் என்றால் வடதுருவப்பகுதிகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் அங்கிருந்து பறக்கத் தொடங்கி தென் துருவப் பகுதிகளுக்குச் செல்லும். அதே போல தென் துருவத்தில் குளிர் தொடங்கும் முன் மீண்டும் வட துருவத்திற்குப் பறந்து செல்லுமாம். இது அப்படி ஓர் ஆண்டில் பறக்கும் தூரம் 70,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகம்.

இராவணனின் ராச்சியம் அப்படிப் பரந்து விரிந்தது. அதை முழுவதும் பார்க்கக்கூடியது ஆலாப் பறவைகள் மட்டுமே என்று ஒரு வரியில் நாயகனின் பெருமையையும் கூடவே ஒரு அருமையான அறிவியல் குறிப்பையும் தருகிறார் கவிஞர்.

-இணையத்தில் சுட்ட விளக்கத்தின் சுருக்கம் (நன்றி)

வன்னியனின், விளக்கத்தை கேட்டு.....

அப்பிடியே... உடம்பெல்லாம்...... புல்லரிச்சுப் போட்டுது. :D  :lol:  :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

ஐஞ்சு நிமிசத்திலை உய்யலாலாவுக்கு விளக்கம் சிறித்தம்பி.... :D

அட... இந்த "உய்யலாலாவை.... "  தமிழுக்கு அறிமுகப் படுத்தியது, ரஜனி சாரா....

பாட்டில் வரும் உய்யலாலாவின்.... அர்த்தத்தை பார்க்க,

ஏதோ... "கசமுசா....  சமாச்சாரம்" போலை கிடக்கு... குமாரசாமி அண்ணை. :D  :lol:

Share this post

Link to post
Share on other sites

ஐஞ்சு நிமிச விளக்கம்தான் நெஞ்சுக்கு குளிர்ச்சியாய் இருக்கு....!  :lol:  :D

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தென் சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனாவும் அமெரிக்காவும் துடிப்பது ஏன்?- அதிரவைக்கும் பின்னணி! தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது. சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் நுழைந்துள்ளதாலும், சீனாவின் போர் விமானங்கள் அப்பகுதியில் வட்டமிடுவதாலும், பதற்றம் அதிகரித்துள்ளது.   தென் சீனக் கடல்மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. ஏனெனில், மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் எனப் பல நாடுககள் தென் சீனக் கடல்மீது சொந்தம் கொண்டாடுகின்றன. பல காலமாக அமெரிக்கா தென் சீனக் கடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம், தென் சீனக் கடல் முழுக்க கொட்டிக்கிடக்கும் எரிவாயு, எண்ணெய் உட்பட பல இயற்கை வளங்கள். இக்கடல், உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துத் தடங்களில் ஒன்று. உலகின் மூன்றில் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து தென் சீனக் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. சமீபகாலமாக, சீனா இந்தக் கடல் பகுதியைச் சொந்தம் கொண்டாடினாலும், இதுவரை இந்த அளவுக்கு கடுமையாக சீனா நடந்துகொண்டதில்லை. கொரோனா பிரச்னையில் சீனா உள்நாட்டிலும் உலகத்தின் பார்வையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, அமெரிக்கா சீனாவை ஒடுக்க முனைந்துள்ளது. தனது அதிகாரத்தை நிலைநாட்டவும், இழந்த பெயரை மீட்கவும் சீனாவுக்குத் தேவை ஒரேயொரு வெற்றி. தனது ஆளுமையை நிலைநாட்ட எப்போதும் சீனா பிரயோகிக்கும் ஒரே அஸ்திரம் ஆக்கிரமிப்பு அல்லது அச்சுறுத்தல். தற்போது, தென் சீனக் கடலிலும் இதே அஸ்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, கொரோனா வைரஸ் சீனாவை புரட்டிப்போட்டபோதிலும், தென் சீனக் கடலில் தனது செயல்பாடுகளை சீனா குறைத்துக்கொள்ளவில்லை. சர்வதேச விதிமுறைகளை மீறி, சீனா தென் சீனக் கடல்மீது செயற்கை திட்டுகள் அமைத்து, இரு புதிய ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு குழிகள் மற்றும் ராணுவ விமான ஓடுபாதைகள் அமைத்தது. இதன்மூலம் 100 கிமீ சுற்றளவுள்ள பகுதிமீது உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த ஜனவரி முதல் சீனாவின் கடலோர காவல்படை கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் வலம் வரத்தொடங்கியதும், அப்பகுதியில் மீன்பிடிப்பவர்களைத் துன்புறுத்தி விரட்டியதும், வியட்நாமின் மீன்பிடிப் படகை சீனா கண்காணிப்பு கப்பல் மூழகடித்தது என அனைத்தும் தனது பலத்தைக் காட்டுவதற்காகத்தான். ஏற்கெனவே, ஒரு சர்வதேச தீர்ப்பாயம் நீர்வழி உரிமை தொடர்பாக சீனா முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்தது. ஆனால், பெய்ஜிங் இதற்கு அலட்டிக்கொள்ளவில்லை. சீனா வேண்டுமென்றேதான் இப்படி நடந்துகொள்கிறது. பிரச்னையைத் திசைதிருப்பவும், அமெரிக்காவால் ஓரளவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும் தனது அண்டை நாடுகளுக்குக் காட்டவும்தான் சீனா இப்படிச் செய்கிறது என்கிறார்கள், ராணுவ நிபுணர்கள். நாங்கள் நினைத்ததைச் செய்வோம் என்பதைக் காட்டும் வகையில், மேலும் பல பகுதிகளை ஆக்கிரமித்தது. அமெரிக்காவுக்கு இந்தக் கடல் பகுதிமீது எந்த உரிமையும் இல்லாதபோது, அந்தப் பகுதியை சீனா ராணுவமயமாக்குவதை அது விரும்பவில்லை. தனது நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் அச்சம் ஏற்படும் என்பதால், சீனாவை ஒடுக்க நினைக்கிறது. சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளைத் தங்கள் வசம் கொண்டுவந்து, ஒரு சங்கிலித்தொடர் போல அமைத்து, சீனாவுக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது நேரடியாகவோ அல்லது ராணுவரீதியாகவோ சீனாவை அடக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். சமீப காலமாக, சீனாவின் ராணுவம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1991ல் வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா கவனம் செலுத்தியபோது, அந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீனா, தன்னுடைய ராணுவ பலத்தை பிரயோகித்து, அண்டை நாடுகளை அடக்கி, தென் சீனக் கடல்மீது கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதனால், அமெரிக்கா தனது ராஜ தந்திர அணுகுமுறைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.   சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளைத் தங்கள் வசம் கொண்டுவந்து, ஒரு சங்கிலித்தொடர் போல அமைத்து, சீனாவுக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, விமானம்தாங்கிக் கப்பல்கள் தெற்கு பசிபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டன. தைவானுக்கு நவீன ஏவுகணைகளைத் தர முன்வந்துள்ளது. அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலை தென் சீனக் கடலில் நிறுத்தியது. கடந்த ஆகஸ்ட்டில் நவீன ஏவுகணைகளை உற்பத்திசெய்ய, 5,000 கி.மீ தூரம் செலுத்தக்கூடிய ஏவுகணைகள் உற்பத்திக்குத் தடை விதிக்கும் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனால் நவீன ஏவுகணை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவுக்கு இருந்த தடை விலகியது. வான்படையை பலப்படுத்தினால் சீனாவை அடக்க முடியும் என்றும் அமெரிக்கா நம்புவதால், பி 21 ஸ்டெல்த் விமானங்களைப் பயன்படுத்தவும், சூப்பர் ஹார்னெட் ஜெட்டுகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அரசியல் லாபத்திற்காகவும், தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், இரு நாட்டுத் தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அரசியல் விளையாட்டால், இரு நாடுகளுக்கும் பெரிய அளவில் நீண்ட கால பலன் எதுவும் இருக்காது. மொத்தத்தில், பல நாடுகளின் அமைதிக்குப் பங்கம் மட்டுமே ஏற்படும் என்பதை இரு நாடுகளும் உணரவேண்டிய தருணம் இது. https://www.vikatan.com/government-and-politics/international/us-china-governments-on-tug-of-war-for-south-china-sea        
    • உன்னையத்தான்... சொல்லி இருப்பாரு...😀