Sign in to follow this  
KING ELLALAN

இளையராஜாவின் தமிழ் உணர்வு பற்றிய நிலைப்பாடு

Recommended Posts

:P இளையராஜாவின் தமிழ் உணர்வு பற்றிய நிலைப்பாடு ;)

இதை அழுத்தி வாசித்தறிக......நன்றி.....நேரடியாக தரமுடியவில்லை

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...mber/221106.asp

Share this post


Link to post
Share on other sites

ஸ்பெஷல் பேட்டியில் மனம் திறக்கிறார் இளையராஜா

வரலாற்று நாய கர்களின் வாழ்க்கை வரலா றைப் படமாக்க முனையும்போது சிற்சில எதிர்ப்புகள், பிரச்னைகள் எழுவது இயல்புதான். ஆனால், வேறு எந்த படமும் இவ் வளவு பிரச்னைகளைச் சந்தித்திருக்குமா என்று எண்ணு மளவுக்கு பெரியார் படம் குறித்து பல பிரச்னைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. லேட்டஸ்டாக, இந்தப் படத்துக்கு ஆத்திகரான தன்னால் இசையமைக்க முடி யாது என்று இளையராஜா மறுத்துவிட்டதாக செய்தி கள் வர... விஷயம் சூடுபிடித்துக் கொண்டது. இளைய ராஜா சொன்னது சரிதான் என்றும், அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்றும் பல முனைகளிலி ருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. பெரியார் படத்துக்குத் தற்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார் வித்யாசாகர்.

இந்நிலையில் இயக்குநர் வேலுபிரபாகரன், தன்னு டைய கடவுள் மறுப்புக் கொள்கையை அடிப்படை யாகக் கொண்ட கடவுள் படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்தார் என்று ஒரு அறிவிப்பை வெளியிட, இளையராஜா உண்மையில் என்ன காரணத்தால் இசையமைக்க மறுத்தார் என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்துள்ளது. இதையடுத்து, அதுகுறித்து அறிந்து கொள்ள முதலில் வேலுபிரபாகரனைச் சந்தித்தோம்...

கடவுள் மறுப்பு பிரசாரத்தை மையமாக வைத்துதான் கடவுள் படத்தை எடுத்தேன். அந்தப் படத்தைத் தன் பின்னணி இசை மூலம் பாமர மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர் ராஜா தான். அதுமட்டுமல்ல... தற்போது நான் எடுத்துவரும் காதல் அரங்கம் என்ற படத்தில் பெரியாராக நான் ஒரு காட்சியில் வந்து, நாத்திக பிரசாரம் செய் கிறேன். சுமார் 12 நிமிடங்கள் வரக்கூடிய அந்தக் காட்சிக்கு அற்புதமாக பின்னணி இசை கோத் துக் கொடுத்திருப்பவர் ராஜா. அவரை அணுக வேண்டிய விதத்தில் அணுகினால், நிச்சயம் செய்து கொடுத் திருப்பார். ஆனால் அப்படிச் செய்யாமல், அவர் ஏதோ வம்படியாக முடியாது என்று மறுத்துவிட்டதைப்போல ஒரு எண்ணத்தைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். உண்மை அதுவாக இருக்காது என்றார்.

இதையடுத்து, உண்மை எதுவென்று அறிந்துகொள்ள இளையராஜாவையே நேரில் சந்தித்தோம்... எடுத்த எடுப் பிலேயே நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ராஜா...

நான் அந்தப் படத்துக்கு இசையமைக்காதது குறித்து ஆளாளுக்கு ஒரு காரணத்தை அவர்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மைக் காரணம் என்ன, நடந்தது என்ன என்பதை இப்போதுதான் உங்களி டம் நான் முதன்முறையாகச் சொல்லப் போகிறேன்...

ஒரு திருமணம் நடக்கிறது... அதற்கு ஒரு சமையல் காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டி ருக்கிறது. கல்யாண வீட்டுக்காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம், இங்கே ஒரு பிரபலமான சமையல்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்துவிட்டார் என்று சொன்னால், அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்தக் கல்யாண சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அதுபோலத்தான் பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை... எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை.!

பிறகு எப்படி இப்படி ஒரு சர்ச்சை எழுந்தது?

உங்கள் மூலமாக இப்போது சொல்கிறேன்... பாரதி படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து, சுபாஷ் சந்திரபோஸ் பற்றி ஒரு படம் எடுக் கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும் என்று கேட்டார். உடனே நான், இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திரபோஸை எந்தக் கோணத்தில் படம் எடுக் கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்ப தைத் தெரிந்துகொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே, படத்தை எடுத்துக் காட்டுங்கள்... பிறகு பார்க்கலாம் என்றேன்.

அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப் பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ, பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஞானராஜசேகரன் ஒரு படைப்பாளி அல்ல... அவர் ஒரு ஆபீஸர். அலுவலகத்தில் உட்கார்ந்து வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு, தன் கீழே வேலை செய்யும் ஏவலர்களை நடத்துவதைப்போல கலைஞர்களையும் நடத்த நினைக்கிறார்.

ஞானராஜசேகரன் உள்ளத் தூய்மையோடும் உயர்வாகவும் பெரியார் படத்தை எடுப்போம் என்று என்னிடம் வரவில்லை. முறையான வழிகளில் என்னை அணுகவும் இல்லை. எந்த ஒரு படைப்பாளிக் கும் கலைஞனுக்கும் உள்ளத்தூய்மை வேண்டும். அப்படி உள்ளவன் இன்னொருவனைக் குற்றம் சொல்ல மாட்டான். என்னை இசையமைக்க அழைக்கவில்லை என்ற உண்மையான காரணம் அவர் மீது இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை பெரியாரின் மாண்பையோ புகழையோ எவனும் தன் இசை யினால் இன்னும் ஒருபடி புதிதாக உயர்த்திவிட முடியாது!

காமராஜரும் உள்ளூர நாத்திகவாதிதான். அவர் படத்துக்கு மட்டும் இளையராஜா இசையமைத்தாரே என்கிறார்களே...?

நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் காமராஜ் படத்துக்கு இசைத்தொண்டு செய்தேன். நான் ஒரு திரா விடக் கழகத்தவன் இல்லையென்றாலும், சுயமரியாதை யோடு உள்ளத் தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்யத் தயங்கி இருக்க மாட்டேன்.

ஆனால், இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார் கள்? அந்தப் படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்

1. இது பெரியாரின் கொள்கைப் பிரசாரப் படமா? 2. பெரியாரின் வாழ்க்கை வரலாறா? 3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா? இந்த மூன்று கேள்விகளுக்கும் நியாயமான விடைகள் இந்தத் திரைப்படத்தில் அமைந்தால், இளையராஜா மட்டுமல்ல... வேறு எந்தக் கொம்பனின் இசையும் பெரியார் படத்துக்குத் தேவையே இல்லை.

பெரியாருக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் என் பெயரை வீணாக இழுக்கிறார்கள்? பெரியாரை கமர்ஷியல் ஆக்க செய்கிற சில்லறைத்தனமான குற்றச்சாட்டு கள் என்மீது வீசப்படுகின்றன. என்னிடம் கொண்டு வந்து கொட்டும் எத்தனையோ குப்பைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். தந்தை பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேனா?

என்னை ராஜசேகரன் புரிந்து கொண்டதைவிட, தமிழக மக்கள் நன்றாகப் புரிந்து, அறிந்து வைத்திருக்கிறார்கள்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் என்னைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். என்மீது சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் துணைபோக மாட்டார்.

சரி... நீங்கள் வேறு ஏதாவது படங்களுக்கு இசை அமைக்க மறுத்தது உண்டா?

எத்தனை படங்கள் என்று கணக்கில் இல்லை! ரஜினி காந்ந் நடித்த படங்களுக்கு ரஜினியே நேரில் வந்து இசையமைக்கக் கேட்டும் மறுத்திருக்கிறேன். பாலச்சந்தரின் அண்ணாமலை திரைப்படத்துக்கு மறுத்தேன். காரணம், அதற்கு முன்னால் கவிதாலயாவில் தயாரித்த புதுப்புது அர்த்தங்கள் படத்தைக் குறிப்பிட்ட தேதியில் வெளியிட வேண்டும் என்பதற்காக, நான் பின்னணி இசை அமைத்துக் கொடுக்காமலேயே என்னுடைய பழைய டிராக்குகளைப் போட்டு நிறைத்துப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்! உதவி இயக்குநர் அனந்துவிடம் என் மனநிலையைத் தெரியப்படுத்தி, நீங்கள் இந்தப் படத்துக்கு ஏதோ ஒரு மியூசிக்கைப் போட்டு விட்டீர்கள்... என்னுடைய பெயர் மட்டும்தான் உங்களுக்குத் தேவை என்று எனக்குப் புரிந்துவிட்டது. டைரக்டரிடம் அடுத்த படத்துக்கு வேலை செய்ய மாட்டேன் என்று கூறிவிடுங்கள் என்றேன்.

அதற்கு அடுத்துதான் அண்ணாமலை தொடங்கி னார்கள். ரஜினி என்னிடம் நேரில் வந்து, சாமி, இந்தப் படத் துக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டார். நான் மறுத்து விட்டேன். பாட்ஷா படத்தி லும் இதேபோல சூழ்நிலை ஏற்பட்டது. ரஜினிதான் நேரில் வந்து கேட்டார். நானும் மறுத்தேன். இந்த இரண்டு விஷ யங்களையும் வெளிப்படுத்தாத ரஜினியும் நானும் இப்போதும் நண்பர்களாகத்தான் இருந்துகொண்டிருக்கி றோம். திரைப்படத்தை மீறிய நட்பு எங்களிடம் இருக்கிறது.

இதேபோல விசு அவர்களின் ஒரு படத்துக்கு இசைய மைக்க மறுத்தேன். உடனே அவர் சொன்ன பதில், இளைய ராஜா இசையமைக்கவில்லை என்றால் அது அவருக்குத் தான் நஷ்டமே தவிர, என் படத்துக்கு இல்லை என்று சொன்னார். அது தன் படத் தின்மீது அவருக்கு இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. ஒரு நல்ல படத்தை இளைய ராஜா இழந்து விட்டார் என்பது அர்த்தம்.

இன்னும் எத்தனையோ படங்களை நான் மறுத்தி ருக்கிறேன். கலையுலகைச் சார்ந்த யாரும் இதை ஒரு செய்தியாக்கி சில்லறை விளம்பரங்களைத் தேடிக் கொண்டதில்லை. இவர்கள் எல்லாம் செய்யாத காரியத்தை ஞானராஜசேகரன் செய் வதைப் பார்த்தால், திரு வேறு, தெள்ளியர் ஆதல் வேறு என்று வள்ளுவர் சொன் னதைப்போல, கலை உலகத் தினர் வேறு, வியாபார உலகத் தினர் வேறு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சிறு வயதிலேயே மேடை யேறி அண்ணன் பாவலரு டன் அரசியல் கட்சி மேடை களில் சமூக விழிப்பு உணர்வு பாடல்கள் பாடியிருக் கிறீர்கள். சமூகப் பார்வையில் பெரியார் பற்றி...

நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நான் ஒரு உண்மையான இசைக் கலைஞன் மட்டுமே. எனக்கு எந்தக் கட்சியின் கொள்கைகளின் மீதும் விருப்பும் கிடையாது, வெறுப்பும் கிடையாது. சிறு வயதில் என்னுடைய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையாக தொடங்கியிருந்தாலும், காலப் பக்குவத்தினாலும் முன்னோர்கள் ஓதுவித்த உயர்ந்த தமிழ் இலக்கியங்களாலும் ஆன்மிக வாழ்க்கையை (இல்லறத்தில் இருக்கும் காரணத்தினால் முழுமையாகத் தொடரமுடியவில்லை என்றாலும்கூட) ஒரு இசைக் கலைஞனாகவும் ஆன்மிக நாட்டம் உடையவனாகவும் இறைவன் என்னை வழிநடத்துகிறான் என்றபடி பேட்டியை முடித்துக் கொண்டார்.

Share this post


Link to post
Share on other sites

இளையராஜாவின் தமிழ் உணர்வைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. ஏனெனில் இவரின் பிள்ளைகள் எத்தனை பேருக்கு ஒழுங்காக தமிழ் தெரியும்?அதுவும் இவரின் செல்லமகளுக்கு எழூத படிக்க தெரியாது.பாடுவது எல்லாம் ஆங்கிலத்தில் எழுதித்தான்!இவருக்கு தலைக்கனம் அதிகம்.தனக்குள் ஆன்மீகம் நிறைய இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் இவர் எரிச்சல் பொறாமை கொண்ட ஒரு சுயநலவாதிக்காரன்.

Share this post


Link to post
Share on other sites

இளையராஜ என்ற மனிதனால் எத்தனை பேர் பழிவாங்கப்பட்டார்கள் என்பது

எத்தனை பேருக்கு தெரியும்...???

தானே ராஜா ..தானே..மந்திரி என்ற நினைப்பு அவருக்கு...

ரகுமானை அமர்த்தி அடிக்க முனைந்தார். அவர் தனது விட முயற்சியாலும்

திறமையாலும் இன்று உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறார்...உலகம் அறிந்த ஒருவராகவும்..இருக்கன்றார்...

அது கண்டு சலித்து கொள்ளாதவர் அவ்வப்போ சாடுவதை காண கூடியதாக உள்ளது...

பவதாரனிக்கு தமிழ் தெரியாது உச்சரிப்பு நச்சரிப்பு தான்...இப்படித்தான் பல பேர்

தங்களுடைய பிள்ளைகளுக்கு தழிழ் தெரியாது ஊருக்கு பாடம் புகட்ட nவிளிக்கிட்டு விடுவார்கள்...

அவர் கிராம புற இசையில் ஞானியாக இருக்கலாம் அதற்காக அவர் சொல்வதெல்லாம் சரியா...??

எத்தனை பாடகர்..பாடகிகளை அவமானம் செய்தார்...

சக பாடகர் முன்னால் திட்டியிருப்பார்...

ஒருவன் தன்னை போல மாற்றானையும் நேசிக்க வேண்டும்..மற்றவனையும் தட்டி கொடுத்து வளர்க்க வேண்டும்

இன்றுவரை அவர் ஏனைய சக இசை அமைப்பாளர்களை சாடுவதை காண கூடியதாக உள்ளது

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்....???

தலைக்கணம் பிடித்தவர்...தான் என்ற ஆணவம்..தனக்கே எல்லாம் தெரியும் என்ற..இறுமாப்பு

இவை எதை காட்டுகின்றன....???

எனவே அவரின் ஒருபக்கத்தை மட்டும் பார்ப்பதை விட்டு

அவர்களின் மறு பக்கத்தையும் பாருங்கள் அதுவே சிறந்தது....

Share this post


Link to post
Share on other sites

சரியாக சொன்னீர்கள் வன்னிமைந்தன்.இவர் இசையமைத்த பாடல்களை விரும்பி கேட்பேன்.உண்மையில் இவருடைய இசை இனியது.இவர் இசையமைத்தபாடல்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.ஆனால் இவர் எப்போதும் வெளிப்படையாக தன்னை ஒரு அப்பாவியாக அறிமுகப்படுத்துவார்.சொந்தசக

Share this post


Link to post
Share on other sites

இப்படியானஒரு மண்டைக்கிறுக்கன். :D:D:D:o:lol:

Share this post


Link to post
Share on other sites

இசைஞானி சாதி வெறி பிடித்தவர் என்று நான் கேள்விப்படவில்லை. அப்படி ஏதாவது சம்பவங்கள் இருந்தால் சொல்லுங்கள்! அறிந்து கொள்கிறேன்.

பாவலரின் மகளின் திருமணம் அல்ல அது. அவருடைய இரண்டாவது அண்ணன் பாஸ்கரின் மகனுடைய திருமணத்திற்குத்தான் (தேவாவின் மகளுடன் நடந்த காதல் திருமணம்) இளையராஜா போகவில்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • 1. கோட்ட வருவதை தமிழரும் முஸ்லீம்களும் 100% சஜித்துக்கு போட்டிருந்தாலும் இந்த முறை தடுத்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் பெருவாரியா அவனுக்கு போட்டிருந்தாலும் அவன் வாயில குத்தித்தான் இருப்பான். 2009 இல் பாற்சோறு ஊட்டிய முஸ்லீம்களுக்கு 2015ற்குள்ளாகவே குத்தின குத்து தெரியும்தானே. இனவாதத்துக்கு நண்பன், வாக்கு போட்டவன் என்பதெல்லாம் கருத்தில்லை. கொழும்பில் 83இல் யுஎன்பி காடையர்கள் அடித்த தமிழர்களில் பெரும்பாலோனோர் பரம்பரை யுஎன்பி வாக்காளர்கள். ஆகவே வாக்கு போடுவதால் இனவாதப் பேயை சாந்தபடுத்த முடியாது. 2. கிழக்கில் இருக்கும் கூட்டமைப்பு எம்பிகள் வீணாய்போனவர்கள். வடக்கு அரசியல்வாதிகள் தம் கதிரையை, ஊரை மிஞ்சி வேறெதையும் சிந்திக்காதவர்கள். அமல், அம்மான் வகையறாக்கள் சுயநலமிகள். அவர்கள் பையை நிரப்புவதோடு சரி.  அப்போ கிழக்கில் என்ன அரசியல் செய்வது? கிழக்கை மையப்படுத்தி, கிழக்கின் மைந்தர்களால், தமிழ்தேசிய அடிப்படையில் ஆனால் அரசோடு சேர்ந்து அபிவிரித்தியையும் மேற்கொள்ள கூடிய, முஸ்லீம்களோடு நம்ப நடக்கும் ஆனால் நம்பி நடக்க்காத ஒரு லாவகமான அரசியலே இப்போதைக்கு கிழக்கில்  தென் வையானதும், சாத்தியமானதும் கூட. இந்த அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பது கிழக்கு சிவில் சமூகத்திடமும், புத்திஜீவிகளுடமும், துடிப்பான படித்த இளைஞர்களிடமும் விடப்படல் வேண்டும். 3. தமிழ்தேசியம் வடக்குக்கு அரசியல்வாதிகளின் சொத்தல்ல. அபிவிருத்தி அரசியல் கருணா பேர்வழிகளின் சொத்தல்ல. இரெண்டையும் இந்த குழுக்களிடம் இருந்து மீட்டு இதயசுத்தியான ஒரு அரசியலை செய்யவேண்டும்.
  • இலங்­கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேர­டி­யாக பல்­வே­று­பட்ட பொரு­ளா­தார, அர­சியல் மாற்­றங்கள் மற்றும் சமய சமூக பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தது. யுத்­தத்தின் அதி­யுச்ச பாதிப்பை தன்­ன­கத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகு­தி­களில் யுத்­தத்தின் பின்னர் பாரிய அளவு இல்­லா­விட்­டாலும் ஒரு அள­விற்கு யுத்­தத்தின் வடுக்­களை குறைப்­ப­தற்­கான அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் இடம் பெற்­றாலும் வடக்கு கிழக்கு பகு­தியில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உள ரீதி­யான பாதிப்பு இது­வரை சரி செய்­யப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. மனி­தர்­க­ளா­கிய நாம் ஏதேனும் பிரச்­சி­னை­க­ளுக்கு அல்­லது கசப்­பான சம்­ப­வங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் போது நாம் அனை­வரும் உள­வியல் ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆளா­கின்றோம். இருப்­பினும் அதன் தாக்­கங்கள் அல்­லது வெளிப்­பா­டுகள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் வேறு­பட்டு காணப்­படும். சிலர் அதனை மன­த­ளவில் சகித்­துக்­கொள்­வார்கள் மற்றும் சிலர் நெருங்­கி­ய­வர்­களின் உத­வியை நாடிச் செல்­வார்கள் இன்னும் சிலர் முறை­யான ஆலோ­ச­னைகள் மூலம் குறித்த வடு­வி­லி­ருந்து மீள முயற்சி செய்­வார்கள். நேர­டி­யாக யுத்­தமும் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையும் வட மாகாண பெண்கள் மத்­தியில் பாரிய அள­வி­லான உள­நல பாதிப்­புக்கு வித்­திட்­டது என்­பது உண்­மை­யாகும். யுத்­தத்­திற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகு­தியில் நிறைய  பெண்கள் வித­வை­க­ளா­கவும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளா­கவும்  குடும்ப பொறுப்­புக்­களை சுமக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. பெரும்­பா­லான பெண்கள் நேர­டி­யாக காணாமல் ஆக்­கப்­பட்ட தங்கள் பிள்­ளை­களை, கண­வனை, சகோ­த­ரனை தேடி தேடி பல்­வேறு கட்ட போராட்­டங்­களை முன்­னெ­டுத்து உள ரீதியில் பாதிக்­கப்­பட்டு தங்கள் வாழ்க்­கையை பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் கொண்டு செல்­கின்­றனர். இது ஒரு புறம் இருக்க யுத்த பாதிப்பில் இருந்து தங்கள் குடும்­பங்­களை மீள் உரு­வாக்கம் செய்ய வேண்டும் என அனேக பெண் தலை­மைத்­துவ குடும்ப பெண்கள் நுண்­நிதி நிறு­வ­னங்­க­ளிடம் நேர­டி­யாக கட­னா­ளி­யாகி உள்­ளனர். இவற்­றுக்கு நேர­டி­யாக நுண்­நிதி கடன்­வ­ழங்கும் நிறு­வ­னங்­களை குறை­கூற முடி­யாது. பல குடும்­பங்கள் குறித்த நுண்­நிதி கடன்­களை பெற்று தமது வாழ்­வா­தா­ரத்தை முறை­யாக கையாண்டு முன்­னேறி வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கதே. ஆனால் இங்கு காணப்­படும் பிர­தான பிரச்­சினை யாதெனின் குறித்த பெண்­க­ளுக்­கான வாழ்­வா­தார மேம்­பாட்டு திட்­டங்கள் தொடர்ந்தும் நடை­பெற்று வந்­தாலும் தேவை­ய­டிப்­ப­டையில் பட்­டி­ய­லிடும் போது அவ்­வ­கை­யான மேம்­பாட்டு திட்­டங்­கள் தேவை­யினை விடவும் மிக குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. அதேபோல் அதி­க­மான குடும்­பங்­களின் வரு­மா­னத்தை விட அவர்­க­ளது செல­வுகள் அதி­க­மாக காணப்­ப­டு­வது, வீண்­வி­ரயம் மற்றும் வரவு செல­வு­களை முறை­யாக கையாள முடி­யாமை போன்ற கார­ணங்­க­ளி­னாலும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள் நுண்­நிதி கடன்­களை மேல­திக சுமை­க­ளாக சுமக்­க­வேண்­டிய நிலை உரு­வா­கின்­றது. இவ்­வாறு அதி­க­ள­வான குடும்ப சுமை கார­ண­மாக ஏற்­ப­டு­கின்ற உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு முறை­யாக சிகிச்­சைகள் பெறா­விடின் குறித்த உள­நல பிரச்­சி­னைகள் அவர்­களை தற்­கொலை போன்ற தவ­றான முடி­வு­களை மேற்­கொள்ள வழி­வ­குக்­கின்­றது. இவ்­வா­றான நிலையில் அவர்­களை நம்­பி­யுள்ள குடும்­பத்தின் நிலைமை கேள்விக் குறி­யா­கின்­றது. இவ்­வா­றான உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை வடக்கு கிழக்கு பெண்கள் அனு­ப­வித்து வரு­கின்ற நிலையில் அர­சாங்கம் முறை­யான ஒரு அர­சியல் சமூக பொரு­ளா­தர சாசன செயற்­றிட்­டத்­தினை மேற்­கொள்­கின்ற போது இவர்­க­ளுக்­கான விசேட அவ­தா­னிப்­புக்­களை உள்­ள­டக்­கு­வது பொருத்­த­மாக காணப்­படும் என்­பது உண்­மை­யாகும் குறிப்­பாக பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு என விசேட தொழில் பயிற்­சிகள், சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் என அனைத்தும் உரிய முறையில் உரு­வாக்­கப்­பட வேண்டும். மேலும் வாழ்­வா­தார உத­விகள், அர­ச­க­ட­னு­த­விகள் என்­பன வழங்­கப்­படும் போது பெண்­த­லை­மைத்­துவ குடும்­பங்கள் நேர­டி­யாக பயன்­பெ­று­வ­துடன் நுண்­நிதி நிறு­வ­னங்­களின் கடன்­ சு­மைக்குள் சிக்­காது பாது­காக்­கப்­ப­டு­வார்கள். அதே நேரத்தில் இளம் வித­வைகள் விட­யங்­களில் அவர்­க­ளுக்­கான அரச வேலை­வாய்ப்­புக்­களை அல்­லது மீள் வாழ்தல் நிலையை உரு­வாக்க வழி ஏற்­ப­டுத்தல் மற்றும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்­கான கல்வி, பாது­காப்பு மற்றும் ஏனைய அத்­தி­ய­ாவ­சிய தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள வழி­வ­குத்தல் என்­பன அவர்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு வழி­வ­குக்கும் அதே­வேளை அவர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்கும் உறு­து­ணையாய் அமையும். அதே நேரத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­டவர் விட­யம்,  யுத்த விசா­ர­ணை, அங்­க­வீனம் உற்ற பெண்கள் விடயம் தொடர்­பாக அர­சாங்கம் உண்­மை­யான பதிலை வழங்­கு­வதே வடக்கு கிழக்கு பெண்­களின் உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை குறைப்­ப­தற்­கான சிறந்த வழி­யாகும். ஓர் பிரச்­சினை அல்­லது மன­வடு சார் அனு­ப­வத்­தினை எதிர்­கொண்ட ஒரு­வரின் உள­நலம் பாதிக்­கப்­ப­டு­வது இயல்­பான விட­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், சிறு­வர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்­காக உளநல ஆலோசகர்கள் மற்றும் உளவள உத்தியோகத்தர்கள் போதுமான அளவு பணியில் அமர்த்துதல் அவர்களுக்கான வாழக்கை மேம்பாட்டுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றேன். இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் ; (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ; (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.     – ஜோசப் நயன் – https://www.virakesari.lk/article/68995
  • அஜந்தா பெரேரா 27,572 வாக்குகளை பெற்றிருந்தார்.
  • எனவே புதிதாக அமையவிருக்கும் அரசில் பெரும்பான்மையாக வந்து 19வது சட்ட திருத்தத்தை இல்லாமல் ஆக்க வேண்டும்.
  • பி.கே.பாலச்சந்திரன் கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று  நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும்  அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.  ஞாயிறன்று  தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் மிகச்சொற்பமாகவே இருக்கும் என்றும் தேர்தல் பிரசார காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருவரில் எவராவது 50 % + 1 வாக்குகளைப் பெறமுடியாமல்போகுமேயானால், இரண்டாவது சுற்றுவாக்கு எண்ணிக்கையை செய்யவேண்டியிருக்கும் என்று கூட முதற்தடவையாக ஊகிக்கப்பட்டது.இருவருமே முதன்மைநிலையான அரசியல்வாதிகள் இல்லை என்பதால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான சாத்தியப்பாடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கோதாபய ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து பிறகு பாதுகாப்புச் செயலாளராக உயர்மட்ட அதிகாரி பதவிக்கு வந்து இறுதியில் அரசியல்வாதியாக வந்தவர்.ஆனால், அவர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர்தான் அரசியல்வாதியானர்.அதனால், அவரின் அரசியல் அனுபவம் பூச்சியமே. மறுபுறத்தில், சஜித் பிரேமதாச அரசியலை தொழிலாகக் கொண்டவர் என்றபோதிலும், பரபரப்பானவரோ  சிறப்பாகக்குறிப்பிடத்தக்கவரோ அல்ல.பெயரளவில் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர், ஆனால் கட்சியின் கொள்கைகளை வடிவமைப்பதில் அவருக்கு எந்த பாத்திரமும் இல்லை. கொள்கைகளை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு நெருக்கமான ஒரு குழுவினருமே தீர்மானிக்கிறார்கள். சஜித் தேசிய பிரச்சினைகளைப் பற்றி பேசுவது அரிது. விரும்பித் தெரிந்தெடுத்துக்கொண்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தனது பணிகளுடன் அவர் திருப்திப்பட்டுக்கொண்டார் போலத் தெரிகிறது. தேர்தல் முடிவுகளை எதிர்வுகூறமுடியாமல் இருந்ததால், நெருக்கமான போட்டி, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை பற்றியெல்லாம் பேசப்பட்டது.   பிரச்சினைகளின் முக்கிய பங்கு  யாழ்ப்பாண மாவட்டத்தையும்  வடக்கு , கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களையும் தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் மிகவும் உயர்ந்தளவு சதவீதமான வாக்குகள் பதிவாகியிருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது இரு பிரதான வேட்பாளர்களுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.அவசரமாக தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகள் தங்களுக்கு இருந்ததால் வாக்களிப்பில் தீவிரமாக பங்கேற்கவேண்டிய தேவையை வாக்காளர்கள் உணர்ந்தார்கள் என்பது தெளிவானது.ஆனால், வாக்காளர்களின் அக்கறைகள் வர்க்கத்துக்கு வர்க்கம், பிராந்தியத்துக்கு பிராந்தியம், இனக்குழுக்களுக்கு குழுக்கள் வேறுபட்டவையாக இருந்தன.அரசாங்கத்திடமிருந்தும் வேட்பாளர்களிடமிருந்தும் தங்களுக்கு தேவையானவை எவை, தேவையில்லாதவை எவை என்பதைப் பற்றிய தெளிவான சிந்தனையை வாக்காளர்கள் கொண்டிருந்தார்கள்.வேட்பாளர்கள் எவற்றைச் செய்யக்கூடிய ஆற்றல்களைக் கொண்டவர்கள் என்பதைப் பற்றிய தெளிவும் வாக்காளர்களுக்கு இருந்தது. அவசரமாக தீர்வுகாணவேண்டிய குறிப்பிட்ட சில  குறைபாடுகளும் அக்கறைகளும் இருந்த காரணத்தினால்தான், ஆரம்பத்தில் உத்தியோகபூர்வமற்ற பகிஷ்கரிப்பு ஒன்று குறித்து மக்கள் சிந்தித்த ( தமிழர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட) வடமாகாணத்தில் மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றார்கள். வடமாகாணத்தில் வாக்களிப்பு வீதம் இலங்கையின் தெற்கையும் மேற்கையும் மத்தியையும் போன்று உயர்வானதாக இல்லாவிட்டாலும் கூட, கணிசமான வீதத்தில் அவர்கள் வாக்களித்தார்கள்.   கோதாபய  கவனம் செலுத்திய பிரச்சினைகள் இலங்கையின் சனத்தொகையில் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்தர்களினதும் (70%) கிறிஸ்தவர்களினதும் அக்கறைகள் மீது கவனம் செலுத்திய காரணத்தினால்,கோதாபய பெரியளவிலான வெற்றியைப் பெற்றார். அவர்களின் ஆதரவை வலுப்படுத்திக்கொள்ளும் கரிசனையில் கோதாபய சிறுபான்மையினத்தவர்களான தமிழர்களும் முஸ்லிம்களும் கிளப்பிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆபத்தானதாக இருந்தாலும் கூட சிங்களப் பெரும்பான்மையினத்தவர்களின் மீது மாத்திரம்  கவனத்தைக் குவிக்கும் இந்த தந்திரோபாயம் அவருக்கு பெரும் பயனைத் தந்தது. கொழும்பு, கண்டி, நுவரேலியா போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்குப் பகுதிகளில்கூட கேதாபயவுக்கு உயர்வான வாக்குகள் கிடைத்தமை இந்த தந்திரோபாயத்தின் வெற்றியை வெளிக்காட்டியது.தனது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கூட சஜித் பிரேமதாசவினால் கணிசமான வாக்குகளைப் பெறமுடியாமல் போய்விட்டது.அந்த அளவுக்கு அவர் பொருத்தமற்றவராகப்போய்விட்டார்.    சிங்களப் பெரும்பான்மையினத்தவர்களின் இரு பிரதான அக்கறைகள் மீது கோதாபய கவனத்தைச் செலுத்தினார். முதலாவதாக,  சோம்பலான அரசாங்கம் ஒன்றுக்கு பதிலாக செய்நோக்கமும் ஆற்றலும் கொண்ட அரசாங்கம் ஒன்றுக்கான தேவை.இரண்டாவது, பயங்கரவாதம் மீண்டும் தலைகாட்டும் போக்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய தேவை.உள்நாட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் குழுவொன்றினால் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ( ஏப்ரில் 21) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் பயங்கரவாதம் மீண்டும் தீவிரமடையக்கூடிய சாத்தியம் குறித்த பீதியை மக்களுக்கு ஏற்படுத்தியது.     ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் விடயத்தில்,சஜித் பிரேமதாசவும் முக்கிய உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பரிதாபகரமான முறையில் தவறியதனால், சுமார் 300 பேர் வரை கொல்லப்பட்டனர்.      மறுபுறத்தில், கோதாபய பிரிவினைவாத விடுதலை புலிகளுக்கு எதிராக பாரம்பரியமான போரையும் பாரம்பரியமுறையில் அல்லாத போரையும் வழிநடத்திய அனுபவம் காரணமாக தீவிரவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஆற்றலைக்கொண்டவராக விளங்குகிறார்.எனவே, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் வாக்குறுதி அளிக்கும்போது அவரின் கூற்றுக்கு ஒரு நம்பகத்தன்மை இருந்தது.     ஆனால், சிவில் சமூகம் மற்றும் ஊடகத்துறை உட்பட இலங்கைச் சமூகத்தின் உயர்குழாம் கோதாபய வெற்றி பெற்றால் போர்க்காலத்தின்போது எடுக்கப்பட்டதைப் போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு மீண்டும் முகங்கொடுக்கவேண்டிவரும் என்று அஞ்சியது.இந்த வர்க்கத்தினர் வெள்ளை வான்களில் ஆட்கள்  கடத்திச்செல்லப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட யுகம் திரும்பிவரும் என்று பீதியைக் கிளப்புவதற்கு சமூக ஊகங்களைப் பயன்படுத்தியது.ஆனால், இந்த பிரசாரம் கைது செய்யப்படுதல் அல்லது கடத்தப்படுதலுக்கான வாய்ப்புகளுக்கு மேலாக பாதுகாப்புக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கின்ற மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.      எடுக்கின்ற சொந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயங்குகின்ற  அல்லது தடுமாறுகின்ற ஒரு அரசாங்கத்தை அல்ல உறுதியான- பலம்பொருந்திய  ஒரு அரசாங்கத்தை விரும்பினார்கள்.சிறிசேன -- விக்கிரமசிங்க அரசாங்கம் அதன் பதவிக்காலம் முழுவதும் தடுமாறிக்கொண்டிருந்ததனால் மக்கள் பெரும் விரக்திக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகியிருந்தனர். கோதாபய விடுதலை புலிகளை தோற்கடித்து  அவர்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றொழித்தது மாத்திரமல்ல, நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் என்ற வகையில் கொழும்பு நகரை மீளக்கட்டியெழுப்பியதையும் கண்ட மக்கள் அவரை ஒரு செயல்வீரராக நோக்கினார்கள்.     உள்நாட்டுப்போரின் காரணமாக 30 வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப்்பணிகள் ராஜபக்சாக்களின் வருகையுடன்தான் மீண்டும் தொடங்கப்பட்டன. போரின் முடிவுக்குப் பின்னரான ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலத்தின்போது இந்தியாவும் சீனாவும் ரயில்வே பாதைகளையும் நெடுஞ்சாலைகளையும் துறைமுகங்களையும் இலங்கையில் நிர்மாணிக்கத்தொடங்கின.     இதற்கு மாறாக, இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைத் தவிர, தனது சாதனைகள் என்று காண்பிப்பதற்கு சஜித் பிரேமதாசவிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. சமூகத்தின் அடிமட்ட மக்களின் தலைவன் என்று தன்னை அவர் வர்ணித்தார்.ஆனால்,அந்த  அடிமட்டத்தில் தன்னால் செய்யப்பட்ட பணிகள் என்று எதையும் காண்பிக்கமுடியவில்லை. பிரேமதாசவின் மரபைப் பற்றி சஜித் பேசினார்.ஆனால், அத்தகைய மரபு எதுவும் இருப்பதை காட்டுவதற்கு அவரிடம் எதுவும் இருக்கவில்லை.     வளர்ச்சியடைந்துவரும் ஒரு  இலங்கைச் சமூகத்துக்கு, குறிப்பாக தென்னிலங்கை சிங்கள சமூகத்துக்கு  பொருத்தமில்லாத வாக்குறுதிகளை சஜித் பிரேமதாச பிரசாரங்களின்போது அள்ளிவீசினார். சிங்கள தென்னிலங்கையில் உள்ள மக்கள் தொழில் வாய்ப்பொன்றைப் பெறுவதற்கோ அல்லது வர்த்தகத்தைச் செய்வதற்கோ அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.ஆனால், இலவசங்களை வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அவர்களைக் கவரவில்லை.பெருந்தோட்டங்களில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளினால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புக்களை ஏற்றுக்கொள்ள மறுத்த பெருமைக்குரிய மக்கள் அவர்கள்.அதன் காரணத்தினால்தான் பிரிட்டிஷ் தேயிலை, ரப்பர் மற்றும் கோப்பி கம்பனிகள் வறுமையினால் பீடிக்கப்பட்டிருந்த இந்தியாவில் இருந்து சுமார் பத்து இலட்சம் தொழிலாளர்களை இறக்குமதி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டன.     பெண்களுக்கு சுகாதார உறைகளை இலவசமாக வழங்குவதாக தேர்தல் பிரசாரங்களின்போது வாக்குறுதியளித்த சஜித் நகைப்புக்கிடமானார்.இலங்கைப் பெண்கள் அந்த உறைகளை பணம் கொடுத்து வாங்கமுடியாத அளவுக்கு வறியவர்கள் அல்ல என்பதை தெரியாதவராக அவர் நடந்துகொண்டார்.     சிங்கள தென்னிலங்கையில் சஜித் பெற்றுக்கொண்ட வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான ஆதரவாளர்களின் வாக்குகளும் சர்வாதிகாரம் மீண்டும் வரக்கூடாது என்று அஞ்சிய அல்லது ராஜபக்சாக்களின் குடும்ப ஆட்சியை விரும்பாத சக்திகளின் வாக்குகளுமேயாகும்.   தமிழ், முஸ்லிம் பகுதிகளின் பிரச்சினைகள்      வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் வேறுபட்டவையாகும்.இவ்விரு மாகாணங்களிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்ட பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள். கோதாபய ஆட்சிக்கு வந்தால் போர்க்காலத்தில் அவரைச் சூழ்ந்திருந்த ( தற்போது ஓய்வுபெற்ற) இராணுவ உயரதிகாரிகளின் உதவியுடன் கடுமையான நிர்வாகத்தை நடத்துவார் என்று தமிழர்கள் பயந்தார்கள். அந்த இராணுவ அதிகாரிகள் போர்க்காலச் சேவைக்காக பாராட்டப்பட்டவர்கள் என்பது மாத்திரமல்ல, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குடிமக்கள் படுகொலைகளுடனும் சம்பந்தப்பட்டவர்கள்.      தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இறுதி நேரத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளினால் ஊக்கம்பெற்ற தமிழர்கள் கோதாபயவை தோற்கடிக்க உறுதிபூண்டார்கள்.சஜித்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழர்கள் நம்பவில்லை, ஆனால் அவருக்கு அளிக்கும் வாக்குகள் கோதாபயவுக்கு எதிரானவை என்று அவர்கள் கருதினார்கள்.     தங்கள் வாக்குகள் வீணாக்கப்படுவதை தமிழர்கள் விரும்பவில்லை.அதன் காரணத்தினால்தான் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும் அவரின் இரத்த உறவுக்காரருமான முன்னாள் தீவிரவாதி எம்.கே.சிவிஜிலிங்கத்தை அவர்கள் அலட்சியம் செய்தார்கள்.      கிழக்கு மாகாணத்திலும் கூட தமிழர்கள் சஜித்தையே ஆதரித்தார்கள்.ஏனென்றால் அவர்கள் கோதாபயவை விரும்பவில்லை. முஸ்லிம்களுடனான குரோதத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களுடன் சேர்ந்து சஜித்தை  ஆதரித்தார்கள் தமிழர்கள்.     முஸ்லிம்கள் நெருக்கடிக்குள்ளான வேளைகளில் அவர்களுக்காக சஜித் குரல்கொடுக்கவில்லை என்றபோதிலும், தங்களுக்கு எதிரான செயற்பாடுகளுடன்  சஜித்தை அவர்கள் தொடர்புபடுத்தியது கிடையாது. மறுபுறத்தில் கோதாபய அளுத்கமவிலும் கண்டியிலும் கலவரங்களைத் தூண்டிய பொதுபல சேனா மற்றும் அதைப்போன்ற தீவிரவாத சிங்கள பௌத்த அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.      ஜனாதிபதி தேர்தலில்  நெருக்கமான போட்டி இருக்கும் என்றும் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான சாத்தியம் எழலாம் என்றும் எல்லோரும் பேசத்தொடங்கியதை அடுத்து இறுதிக்கட்ட பிரசாரங்களில் சற்று பதற்றமடைந்த கோதாபய தனது சட்டத்தரணியான அலி சப்ரியின் உதவியுடன் முஸ்லிம் கல்விமான்கள், புத்திஜீவிகளை அவசரஅவசரமாக சந்திக்கத் தொடங்கினார்.ஆனால், அதனால் எந்த தாக்கமும் ஏற்பட்டதாக இல்லை.     முடிவாக, பெரும்பான்மை சிங்களவர்களின் அக்கறைகள் மீது கவனம் செலுத்திய கோதாபயவிடம் அவற்றுக்கான தீர்வொன்றும் இருந்தது. அதனால்தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று கூறமுடியும்.சஜித்திடம் அவ்வாறு எதுவும் இருக்கவில்லை.தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் தேவைகள் குறித்து கோதாபய பேசவில்லை. ஆனால்,  சஜித் பேசினார்.சிங்களவர்கள் நாட்டின் சனத்தொகையி்ல் 70 சதவீதத்தினர்.அதை ஒரு தந்திரோபாய ரீதியில் நோக்குகையில், சிங்கள பெரும்பான்மையினர் மீது அக்கறை காட்டியதன் மூலமாக கோதாபய விவேகமான காரியத்தைச் செய்தார்.மேலும் சிங்கள பகுதிகளின் வாக்களிப்பு வீதம் தமிழ், முஸ்லிம் பகுதிகளின் வாக்களிப்பு வீதத்தை விடவும் மிகவும் அதிகமாகும்.இது தேர்தல் முடிவுகள் கோதாபயவுக்கு சார்பான முறையில் அமைவதற்கு உதவியது. https://www.virakesari.lk/article/69158