Jump to content

நீலக் கடலின் ஓரத்தில்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீலக் கடலின் ஓரத்தில்...

 

கூட்டைவிட்டு விடுதலையாகிய ஒரு சிட்டுக்குருவியைப் போல மேலே மேலே இயந்திரப்பறவை இறக்கை விரிக்க கனடாவில் எல்லைகள் புள்ளிகளாக கட்டிடக்காடு, வாகன நெரிசல், வேலைப்பளு, நாளைய ஏக்கம், அனைத்தையும் மூட்டைகட்டி ஓர் மூலையில் போட்டு விட்ட உணர்வுடன் வெட்ட வெளியில்; கொட்டிக் கிடக்கும் கொள்ள அழகை ரசித்தபடி மனம் பரவசத்தில் பரபரக்க வேகமெடுக்கும் வெஸ்ற் ஜெட் விமானத்தினுள் நாம்.

 

WestJet-737-MAX-over-Montreal.jpg

 

விமானத்தினுள் அமர்ந்திருந்த அனைவருமே தம் விடுமுறையை கழிக்கச் செல்பவர்கள் என்றபடியால் அனைவர் முகத்திலும் உல்லாசமான மனநிலை.
எமது குடும்பத்தினர் அறுபது வயது தொடக்கம் ஆறுமாதக் குழந்தைவரை ஏறக்குறைய இருபத்திஜந்து பேர்வரை விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். விமானம் புறப்பட ஆயத்தமாகும் முன்பே என் தம்பியின் மகன் விமான ஓட்டுனரிடம் எம் குடும்பப் பெயரைச் சொல்லி நாம் ஒரு பெரிய குழுவாக உல்லாசப் பயணம் மேற்கொண்டிருப்பதை தெரியப்படுத்தி விட்டார். விமானத்தில் பாதுகாப்பு விளக்கங்களெல்லாம் முடிந்ததும் எம் குடும்பத்தினரின் உல்லாசப்பயணம் பற்றி ஒலிபரப்பாகியது. இளசுகள் அதிகம் கொண்ட குழுவென்ற படியால் உற்சாகத்திற்கு குறைவில்லை.

கியூபா மற்றன்சஸ் நகரில் உள்ள வறடிறோ விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. வெப்பநிலை 25 பாகை. தென்னை மரங்கள் தலையாட்டி வரவேற்றன.

பொதிகள் அனைத்தையும் மோப்பநாய்களின் உதவியுடனும் வழக்கமான உடல் பரிசோதனை, கமரா பரிசோதனை என்று ஏகப்பட்ட பரிசோதனைகள். குழந்தையின் பால் சூடாக்கும் கருவி எம் பெட்டியில் இருந்தது. பெட்டியை திறந்து பார்த்த இளம் பெண் பரிசோதகர் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். சந்தேகத்துடன் தலைமை அதிகாரியை அழைத்தார். அங்கு வந்த தலைமை அதிகாரி அந்தப் பெண்ணை தமது மொழியில் கடுமையாகப் பேசியதும் அப்பெண்ணின் முகம் வாடியதைப் பார்க்க எமக்கு கவலையாக இருந்தது. ஆனாலும் நாம் பலமுறை அது குழந்தையின் பால்புட்டி சூடாக்கும் கருவி என்று சொல்லியும் அவர் புரிந்து கொள்ளாதது அவரது பிழைஎன எண்ணியபடி நாம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.
வெளியே எம்மை ஏற்றிச் செல்ல பெரிய அளவிலான சொகுசுபஸ் வண்டி காத்திருந்தது. அதற்குள் வாகன ஓட்டியைத் தவிர வழிகாட்டி ஒருவர் எம்மை வரவேற்று தமது நாட்டின் நடைமுறைகள் சிறப்புக்கள் வரலாறு பணமாற்று மற்றும் பல விடயங்களை சுருக்கமாக நகைச்சுவையுடன் விபரித்துக் கொண்டு வந்தார்.
எங்கள் ஊர், எங்கள் மண், எங்கள் குடும்பம் என்ற சின்ன வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி செக்கு மாடுகளாய் சுழன்ற நாம் இன்றைய பொழுதுகளில் உலகின் எல்லாத் திசைகளிலும் பரந்து விரிந்து பல இனம் மொழி கலாச்சாரம் பழக்கவழக்கம் என்று எல்லாவற்றிலும் எம் எல்லைகளைத் தாண்டி எம் அடுத்த தலைமுறையினருக்கு ஈடு கொடுக்கும் வகையில்; எம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல்.
கடற் குளியலில் நீச்சலுடை அணியவும் நீச்சல் குளத்தில் நீந்தி மகிழவும் உல்லாசமாய் பல மென் பானங்களைச் சுவைக்கவும் கணவன் மனைவி, காதலன் காதலி, நண்பன் நண்பி கை கோத்து காலாற நடக்கவும் இன்று நம்மவர் தம்மையே மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
தாயகத்தில் சில கடற்கரைகளில் இங்கு நாம் பண்டிகைகளுக்கு அணியும் பளபளக்கும் சுடிதார் போன்ற உடைகளுடன் இளம் பெண்கள் கடலில் குளித்ததைப் பார்த்த என் பிள்ளைகள் திகைத்தனர். இன்று அங்கும் நிலமைகள் மாறிவிட்டன.

கியூபாவின் பழங்கள், கடலுணவு, வாழை, தென்னை போன்ற மரங்கள் பூ மரங்கள் அனைத்தும் எம் தாயகத்தின் மறுபதிப்பாக இருந்தன. சுவையான மாம்பழம் கொய்யாப்பழம் பாப்பாப்பழம் போன்றவையும் போகன்வில்லா, கொன்றை, செவ்வரளி, போன்ற பல பூமரங்களும் வடலி தென்னை என்று எம் மண்ணின் வாசனை மனதெங்கும் தூவானமாய்...

கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்து கிடந்தது நீலக்கடல்.

 

நீலக்கடலும் நீள்விசும்பும் எங்கே முடிவு எங்கே தொடக்கம் என்றில்லாமல் எல்லைகளற்ற வெளியில் இரண்டுமே சங்கமித்துக் கிடந்தன.
அலைக்கரங்கள் தழுவித் தழுவி முத்தமிட்டு ஆனந்தமாய் ஆர்ப்பரித்து கைகொட்டிச் சிரிக்கும் அழகு மங்கையாய் கடற்கரை. வெண்மணற் பரப்பில் விரித்து வைத்த சாய்ந்த இருக்கைகள், நிழற் குடைகள், கடற்குளியல் இப்படியோர் உலகில் எந்தத் தொல்லைகளுமற்று இருந்து விட மாட்டோமா என மனம் ஏங்கியது.

 

11406985_10206871216728551_4722526910069

 

 

11392937_10206871163127211_5148234326888

 

பகல் முழுவதும் ஓய்வாய் நடைப்பயிற்சி உல்லாச பானங்கள் உவப்பான உணவுகள் இரவு நிலவெறிக்கும் நீலக் கடற்கரையில் அலையோசையின் ஆர்ப்பரிப்பில் மனதிற்கு கிளர்ச்சியாய் உறவுகள் அனைவரும் வட்டமாய் அமர்ந்து இசையின் பின்னணி ஒலியில் கைதட்டிப் பாட்டுப்பாடி மகிழ்ந்த அந்த நிமிடங்கள் எம் வீட்டு முற்றமும் நிலாச்சோறும் எம் அன்னை தந்தையுடன் அமர்ந்திருந்து எம் தந்தை ஆமோனியம் இசைக்க நாம் அனைவரும் பாடிக் கழித்த பொழுதுகள் மனதில் பவனி வந்தது.

வெள்ளி நிலா விளக்கேற்றி இருந்த அந்த இரவுப் பொழுதில் வெள்ளை மணல் கொள்ளை அழகு. அலையோசையின் ஆர்ப்பரிப்பு மனதில் துள்ளும் உணர்வு. வானில் ஒளிரும் தாரகைகள் எமைத் தாலாட்டும் பொன்னூஞ்சலாய்.
எமது பிள்ளைகளுடன் கழிக்கும் இவ் இனிய தருணங்கள் எப்பொழுதாவதுதான் எமக்குக் கிடைக்கும். இனிவரும் காலங்கள் அவர்களுக்கானது. இவ்வினிய தருணங்களை, மகிழ்வான நினைவுகளை, மறக்கமுடியாத பொழுதுகளை அவர்களிடம் நாம் விட்டுச் செல்வது அவசியம்.
பாரவண்டிகளாய் சுமைகளைச் சுமந்து சுமந்து சோர்ந்து கிடக்கும் உள்மனம் சுகமாய் வீசும் கடற்காற்றில் பட்டாம் பூச்சிகளாய் சிறகடிக்கத் தொடங்கின. 

11406947_10206871216288540_7612084220031

 

குளுகுளு என்று வீசிய தென்றல் எம் மண்ணில் மணம் சுமந்த சாயலாய்.
தலையாட்டும் தென்னை மரங்களின் அழகை ரசித்தபடி கரை தவழும் அலைகளில் கால் நனைத்தபடி மணல் வீடு கட்டும் மழலைகளாய் மாறிய அந்த மம்மல் பொழுதுகள்; எம் இளமைக்கால நினைவுகளை மனதில் மத்தளமிட்டபடி..

 

பல கண்டங்களில் வசிக்கும் முகம் தெரியாத பல இன மத நிற மக்கள் ஒப்பனைப் புன்னகையுடன் வணக்கம் சொல்லும் பாங்கும் அந்த நாட்டு மக்கள் அனைவரும் 'ஓலா' என்று வணக்கம் சொல்லிப் புன்னகைக்கும் அழகும் இன்னும் எம் காதுகளில் ரீங்காரமிட்டபடி உள்ளன.
பீனகொலாடாவும் சம்பைனும் பல வித மென் பானங்களும் குளிர் பானங்களும் கோப்பி தேனீர் மட்டுமன்றி எம் தாயகத்தில் உள்ளதுபோல் தென்னை மரங்களில் இருந்து உடன் பிடுங்கப்படும் இளநீரும் அனைவரின் தாகம் கீர்க்க உதவின.
பணியாளர்கள் ஒவ்வொருவரும் என்ன வேண்டுமென்று எந்த நேரமும் கேட்டுக் கேட்டு உபசரித்தனர்.
சுவையாக உணவுண்ணும் விருப்புடன் நாம் எடுத்துச்சென்றிருந்த கட்டைச் சம்பலும் பொரித்த மோர் மிளகாயும் எம் உணவின் சுவை குறையாமல் சாப்பிட எமக்குதவியது.

 

11407233_10206871186407793_6894379378147

 

 

11406863_10206871325211263_3322294224974

 

நாம் தங்கி இருந்த விடுதி ஊழியர்கள் கவனிப்பு மிக அருமையாக இருந்தது. நாள் முழுவதும் ஓடிஓடி வேலை செய்தாலும் முகத்தில் சிறிதும் களைப்போ அலுப்போ தெரியாமல் வேலை செய்வதில் ஒருவரை ஒருவர் சளைத்தவராகத் தெரியவில்லை.
விடுதியின் தூய்மையும் நன்றாக இருந்தது.
அன்பளிப்புப் பொருட்களோ பணமோ பெறும் ஒவ்வொரு பணியாளரும் மிகவும் மகிழ்வுடன் நன்றி சொன்னார்கள்.
ஜம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மோட்டார் வண்டிகள் இன்றும் பாவனையில் இருக்கின்றன.
அதில் பயணிக்கும் போது தட்டிவானில் சென்றது ஞபகத்தில்; வந்தது.
'சந்தோசம் தரும் சவாரி போவோம் சலோ சலோ' என்று பாடிய படி குதிரை வண்டிச் சவாரி சென்றதை மறக்க முடியாது.
கருநீலத்தில் அரைவட்டமாய் வானைப் பிரித்த நீலக்கடல்.
கண்ணுக்கெட்டிய தூரம் நீர்ப்பரப்பு.
வெளிர் நீலமாய் கரையோரம்.
அலைதவழும் கடற்கரை.
வெண்மணலில் விதவிதமாய் நீச்சலுடைத் தாரகைகள்.
நீச்சல் தடாகத்தில் நீந்தும் தாமரைகள்.
கொழுத்தும் வெய்யில்.
வியர்க்கும் உடம்பு.
உஸ்ணம் விரட்டும் குளிர்பானங்கள்.
ஆனந்தமாய் கழிந்த அந்த சந்தோசப் பொழுதுகளின இனிய நினைவுகளுடன்;.....அடுத்த விடுமுறை நாட்களுக்காய்.......

 

blau_varadero_4410261e450759f42a469a1420

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவரணம்  மிக அருமை ... கண்டிப்பாக் வாழ்வில் செல்ல வேண்டி இடம் .  சென்ற வருடம் நானும் இது போன்ற ஓரிடத்துக்கு சென்று இருந்தேன்.  மனது ரிலாக்ஸ் ஆகும் ஓரிடம்.  எல்லோரும் ஒரு தடவையாவது  சென்று வாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் கியூபாவின் விவரணப் படம் ஒன்று பார்த்தேன். பெரிய பெரிய கட்டடங்களில் எல்லாம் பிடல் காஸ்ரோ, சேகுவேரா போன்றவர்களின் உருவங்களை பிரமாண்டமாய் கம்பிகளில் செய்து பொருத்தியிருந்தார்கள்.

வீதிகளில் எல்லாம் முந்தைய மாடல் கார்கள்களான பிளைமவுத், ஓப்பல், வைக்ஸ்சோல் , செவர்லட், டொட்ச் எனப் பெரிய பெரிய கார்கள்தான் வீதி முழுதும்....!

 

 

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்தெழுதிய நிலாமதி சுவிக்கும் விருப்புப் புள்ளியிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விவரண எழுத்துநடை உங்களுக்கே கைவந்த கலை, காவலூர் கண்மணி!

 

இராவணன் மீசையின் காய்ந்து போன பூக்கள், காற்றில் உருளும்.. கண்ணகையம்மன் கோவில் கடற்கரையையும்.... பண்ணைப் பாலத்தின் ஓரத்துக் களங்கண்டிகளில் காற்றாடும் கடற்காகங்களையும்.. உங்கள் விவரணம் கண் முன் கொண்டு வந்து சென்றது!

 

மெல்லிய அலைகளின் நகர்வுகளுக்குள்ளும், சிந்துகின்ற நீர்த்துளிகளின் ஓசைகளுக்குள்ளும் .. புகுந்திருக்கும் 'அசைவுகளின் ஆவர்த்தனங்களுக்குள்'.... அகிலத்தின் அசைவுகள் அத்தனையும் மறைந்திருக்கின்றது!

 

அதனைப் புரிந்து அனுபவிப்பவன்... அகிலத்துடன் ஒன்றிப்போகின்றான்!

 

அவனுக்கு மதமோ....சம்பிரதாயமோ... எதுவுமே தேவையில்லை!

 

நன்றி..! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் விவரணத்திற்கு அழகாகப் பதிவிட்ட உங்கள் எழுத்தைப் பார்த்த பொழுது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. அந்த பண்ணைக்கடலையும் பனங்கூடல்களையும் அழகிய கடற்கரைகளையும் எம்மண்ணின் மணத்தையும் நாம் மண்ணோடு போகும் வரை மறக்கமுடியாது. அலைகளின் அசைவுகளுக்குள்ளும் நீர்த்துளிகளின் ஓசைக்குள்ளும் அந்த ஈரநினைவுகள் எம்மை உரசியபடியே இருந்தன. படித்து பதிலிட்டமைக்கு நன்றிகள் புங்கையூரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தோழி கண்மணியின் எழுத்துக்குள் நான் எதிர்பார்ப்பது அதிகம். கிடைப்பது...... தன்னைச்சுற்றி ஒரு வட்டத்தைப்போட்டு அதற்குள் முடங்கும் படைப்பாளியாகத்தான் உலா வருகிறார். தோழிக்குள் இருக்கும் திறமைகளை சகபெண்ணாக நின்று பார்த்து வியப்படைவது நமக்குள் மட்டுமானதாகவே இருக்கிறது. நல்லதோர் பதிவு பயணக்கட்டுரையை கச்சிதமாக சிக்கனமாக எழுதி வாசிப்பவர்களை அலுப்படைய விடாமல் நிறைவாக்கி விட்டீர்கள். உங்கள் பதிவைப் பார்த்தபின்னர் என்னுடைய பயணக்கட்டுரையைத் தொடராக எழுதி வாசிப்பவர்களை அலுப்படைய வைத்துவிட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்குமங்குமாக சிதறிக்கிடக்கும் தொடர்களை ஒழுங்குபடுத்தி பதிவிடவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது இந்தப்பதிவு. அனுபவக்கட்டுரைக்கும் எனக்குள் உருவாக்கிய நேர்த்திக்கும் நன்றி தோழி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா நீங்கள் என்னைத் தோழி என்று அழைத்தாலும் நான் எனது அகவைக்கும் அனுபவத்திற்கும் ஏற்றாற்போல்தான் என் படைப்புக்களை உருவாக்க முடிகிறது. உடைந்து விட்ட சிறகுகளை ஒட்ட வைத்தபடி உயரப்பறக்க முயன்றாலும் வடு தந்த வலி என்னுடன் நிரந்தரமாக நிலைத்து விட்டதை என்னால் மறுக்க முடியவில்லை. உல்லாசப் பயணம் வெளியே உல்லாசமாக இருந்தாலும் உள்ளுக்குள் என் உயிர் உருகுவதை வெளியே கொட்ட முடியாமல் விழுங்கிக் கொள்கிறேன். இது இறைவன் போட்ட வட்டம். அதனால்தான் நீங்கள் எதிர்பார்ப்பதை உங்களுக்ககுத் தர முடியவில்லை. உங்கள் நேரத்தை ஒதுக்கி படித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவினர்கள் சூழ, 25 பேர் விமானத்தில்... உல்லாசப் பயணம் சென்றதை கேட்க எமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
இதற்கு நீண்ட கால திட்டமிடல் இருந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
உல்லாசப் பயணத்தின் போது.... மோர் மிளகாயும், கட்டாச் சம்பல் போத்திலையும் கொண்டு போனதையும் நினைக்க சிரிப்பு வந்து விட்டது.
வித்தியாசமான, அனுபவ பயணக் கட்டுரையை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கண்மணி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது சகோதரர்கள் இருவரைத்தவிர ஏழுபேர் கனடாவில் இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் நாம் ஒன்று சேர்ந்து விடுமுறையைக் கழிப்பதற்கு கொட்டேஜ் போவோம். இம்முறை நீண்ட நாள் ஆயத்தத்துடன் அனைவரும் வேலைக்கு விடுப்பு எடுத்து கியூபா போனோம். மிகவும் சந்தோசமான நாட்கள். விசேடமாக பிள்ளைகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து தமது உறவைப் பலப்படுத்த இப்படியான சுற்றுலாக்கள் உதவுகின்றன. உங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள் தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா.. ஒவ்வொரு வருடமும் உங்க குடும்ப ஒன்றுகூடல் படம்பார்த்து பொறாமையாக இருக்கும்.. சகோதரங்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேணும்.. கண்ணுபடக்குடாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அப்பா எம்மைவிட்டுப் பிரியமுன் மூத்தமகளான என்னிடம் விடுத்த விண்ணப்பம் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றுதான். அவர் எம்மைப் பிரிந்து இருபத்துமூன்று ஆண்டுகளாக அந்த விருப்பத்தை நாம் ஒன்றுகூடும் நேரத்திலெல்லாம் ஞாபகப்படுத்த தவறுவதில்லை. ஒற்றைக் கண்ணில் அடிபட்டால் பதினெட்டுக் கண்களில் வலியெடுக்கும்..... வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சுபேஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.