Jump to content

பயணங்கள் முடிவதில்லை (Punta cana)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2012 இல் எழுதப்பட்ட பயணக்கட்டுரைத் தொடர் 12 பகுதிகள்

சிதறிய முத்துக்களாக இருந்த தொடரை ஒன்றாக இணைத்து இலகுவாக வாசிக்கவும் எழுதப்பட்ட கட்டுரை வடிவத்தை பாதுகாக்கவும் மீள்பதிவாக்கியுள்ளேன். வாசித்துப்பார்க்காத நண்பர்கள் இலகுவாக முழுவதையும் வாசிக்கக்கூடியவகையில்.......இந்த மீள்பதிவு......

 

பயணங்கள் முடிவதில்லை - 1

(Punta cana)

 

காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட என்னுடைய அனுபவப்பகிர்வுகளை சின்னச் சின்ன கற்பனையூட்டி உங்களுடன் பகிர்கின்றேன். சில சமயங்களில் வெளிப்படையாக எழுத விளையும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் அல்லது பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல் அமைந்துவிடும். இணையவெளியில் இறங்கியிருக்கிறேன். எழுதும் ஆளுமையும்ää துணிவும் என்னோடு உடன் பயணிக்க உங்களுடன் நீண்ட நாட்களுக்குப்பின் இந்தப் பக்கத்தில் இணைகின்றேன்.
சில வாரங்களுக்குமுன் நிறையவே மன உளைச்சல், போராட்டம், குழப்பம். (தனிப்பட்ட வாழ்வில் என்று நினைக்கக்கூடாது) இனம் சார்ந்த சமூக நலன், பெண்கள், பாதிப்புகள் என்று பன்முகப்பட்ட விடயங்களை ஓரிடத்தில் சேர்த்து சில முயற்சிகளை பலரின் உதவிகளைப்பெற்று உருவாக்கும் பெரும் முயற்சியில் விழுந்த பாரிய முட்டுக்கட்டை அல்லது சில குழுமங்களுக்குள் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை அல்லது தமக்குள் முழுமையாக கட்டுப்படுத்தும் குறுகிய போக்குக் கொண்டவற்றின்பால் முயற்சிகள் தகர்க்கப்பட்ட வேதனை சூழ்ந்த பொழுதொன்றில் எனது துணைவரால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பயணம் இது பொதுத்தேவை நோக்கி வேலையிலிருந்து எடுக்கப்பட்ட எனது விடுமுறை நாட்கள் முதன் முறையாக என் குடும்பவாழ்விற்கும், துணைவருடனான இறுக்க நிலைக்கும், பிள்ளைகளின் குதூகலத்திற்கும் பயன்பட்டது. சரி இனி இந்தப்பயணமும் எனது அனுபவங்களுமாக…..
முதலில் மொட்டையாக இந்தப்பயணம் இன்ன இடத்திற்கு என்று எனக்குத் தெரியாத ஒரு நேரம்
“அப்பா….நேய்!” இது நான்
“ம்” இது எனது துணைவர்.
“எனக்கு ஒண்டுமே சொல்ல மாட்டீங்களாம்”
“ம்”
“சொல்லுங்கோப்பா”
“ம்”
“அநேய் ஏனன எல்லாத்திற்கும் “ம்…ம்” எண்டுறியள்?
“ம்”
எனக்கு வந்த கோபத்திற்கு இந்தாளுக்கு உச்சந்தலையில் ஓங்கி “நச்”சென்று குட்டலாமா என்று தோன்றியது. அடக்கிக் கொண்டேன்.
“அப்பேய்;” (கவனிக்கவும் அப்பா…. அப்பேயாக மாறிட்டார்)
“ம்”
கடவுளே… கோயில் மாடு தலையைத் தலையை ஆட்டுற மாதிரி வீட்டு மனுசன் “ம்…ம்” எண்டுறாரே… “ஒழுங்கா கதையுங்கோப்பா”
“சரியடி என்ன?” (குரலில் அலுப்பு கறுமம் பிடிச்சவள் நிம்மதியா பியரைக் குடிக்க விடுறாள் இல்லை என்று நினைச்சிருப்பார்போல..)
அதானப்பா வக்கேசனுக்கு எங்க போகப்போறியள்?
“எங்கேயோ கூட்டிப்போவன்தானே”
“அது தெரியும் எங்க எண்டெல்லோ கேட்கிறன். (எனது குரல் பொறுமையிழப்பதை என்னால் உணரமுடிந்தது.)
“உனக்குச் சொன்னால் நீ முதலிலேயே குழப்பிப் போடுவே…”
“இல்லையப்பா நின் குழப்பேல்ல சொல்லுங்கோவன்”
“உனக்குத் தெரியோணுமோ சண்னனிடம்(இளையமகன்) கேள்”
வாசலில் கிடந்த பழைய செருப்பால எனக்கு நானே அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
“அப்ப நீங்கள் இந்த பியரையும் சிகரெட்டையும் கட்டிக் கொண்டு கிடவுங்கோ” என்றபடி சின்ன மகனிடம் கேள்விகளைத் தொடுத்தேன். அவனிடம் கிடைத்த தகவலின்படி அப்பா விமானப்பற்றுச்சீட்டுக்கள் பதிவு செய்யும் ஒரு அலுவலகத்தில் கிரடிட் கார்ட்டைக் கொடுத்து காசோலையில் கையெழுத்திட்டது என்பது மாத்திரமே…
துணைவருக்கு ஒருவகையான கவலை இருந்தது முன்பு ஒருதடவை அவர் கியூபாவிற்கு அழைத்துச் செல்ல அவர் போட்ட திட்டத்தையெல்லாம் கடைசி நிமிடத்தில் உடைத்து தாயகத்திற்கு அழைத்துச் சென்றேன் அதன்பாதிப்பில் இருந்து அவர் விடுபடாததால் இங்கு செல்லப் போகிறோம் என்பதை என்னிடம் மறைத்தார். அத்தோடு நான் இந்தியா செல்வதற்காகவே இந்த விடுமுறையை வேலையிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டதும் அவருக்கு நன்கு தெரியும். எங்கே கடைசி நிமிடத்தில் தன்னுடைய திட்டத்தை தவிடு பொடியாக்கிவிடுவேனோ என்ற எண்ணம் அவரிடம் குடிகொண்டிருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது. என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது பொதுவிடயங்களில் ஏற்படும் வலிகளை மறந்தும் துணைவரிடம் பகிர்ந்து கொள்வதில்லை காரணம் அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது மட்டுமல்ல தொடர்ந்தும் நான் பொதுப்பணிகளில் ஈடுபடுவதை விரும்பமாட்டார் என்பதும்தான். ஆதலால் பிரச்சனைகள் வலிகளை என்னோடு மட்டுப்படுத்திவிடுவேன். அவற்றின் பாதிப்பை குடும்பத்திற்குள் நுழைய விடுவதில்லை அதன் காரணமாக என்னுடைய நிலைவரத்தை அவர் அறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இதனை அவர் அறியாததால் அவருக்குள் அச்சம் ஏற்பட்டிருந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. அது அனாவசியமானது என்பது எனக்குப் புரிந்தது.
என்னதான் இரகசியமாக வைத்திருந்தாலும் துணைவரின் கூகுள் தேடல் அவர் எங்கே செல்ல ஆயத்தப்படுகிறார் என்பதை எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது. இருந்தாலும் நானும் தெரியாததுபோல் நடிக்க ஆரம்பித்தேன். எதுவரைக்கும் இவர்கள் என்னிடத்தில் மறைப்பார்கள்? நான் ஆர்வப்படாமல் அசட்டையாக இருக்க ஆரம்பித்தேன். அவரால் எனது புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடகடவென்று ஒரே மூச்சில் “புன்ரக்கானா” என்ற கடல் சார்ந்த ஒரு பிரதேசத்திற்கு பயணப்படுவதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதாக ஒப்புவித்தார்….. (அடுத்த வாரம் தொடரும்)

 

250px-Dominican_Republic_%28orthographic

 

பயணங்கள் முடிவதில்லை - 2


மெல்ல வேலையிடத்தில் புன்ரக்கானா போவதற்கு முடிவெடுத்திருப்பதாக என்னுடைய வேலைத்தலத் தோழிகளான இம்சை அரசிகளிடம் தெரியப்படுத்தினேன். எல்லோரும் கொடுப்புக்குள் சிரித்தபடி என்ன பிளான் மினிமூனா? கனிமூனா என்று நாணமில்லாத என்னைக் கேள்விகளால் நாணவைத்துவிட்டார்கள்.  எங்களுடைய பெண்களுக்கு தெரியாத சங்கதிகள் என்ன என்று என்னை மலைக்க வைத்துவிட்டார்கள் :huh: (தந்தையர் தினத்திற்கு அரைமூடிச்சலங்கையை துணைவருக்கு பரிசளிக்கப்போவதாக சொன்ன கில்லாடிகள் ஆயிற்றே அவர்கள்) விரல் நுனிகளில் அவர்கள் உல்லாசப்பயணம் பற்றியும் எந்தெந்த நாட்டில் எந்தெந்த இடத்தில் என்னென்ன இருக்கிறது என்பது சதா கணனிக்குள் மூழ்கிக்கிடக்கும் என்னைவிட அவர்களுக்குத் தெரிந்திருந்திருந்தது. அவர்களுடைய தகவல்கள் எனக்குள் இன்னும் அறியாமை நிறையத் தேங்கிக்கிடப்பதை உணர்த்தியது. இப்போது உண்மையிலேயே ஆண்கள் வெறும் வெங்காயங்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

சரி அடுத்து வீட்டில் பிள்ளைகளை தயார்ப்படுத்தலில் ஈடுபட்டபோது பெரிய பிள்ளைகள் நாசூக்காக மறுத்துவிட்டார்கள். நீங்கள் போய் வாருங்கள் நாங்கள் எங்கள் நண்பர்களுடன்தான் செல்வோம். உங்களுடன் வந்தால் நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு எங்களைச்சுற்றிக் கொண்டே நிற்பீர்கள். உங்களுடைய நேரம் எங்களைக் கண்காணிப்பதிலேயே கரைந்துவிடும் அதனால் நீங்கள் எதிர்பார்க்கும் ஓய்வு உங்களுக்குக் கிடைக்காது. உங்களுக்குத்தான் முக்கியமாக ஓய்வு தேவை. அம்மா இவற்றைப்பற்றி இதற்குமேல் உங்களுக்கு விபரமாக சொல்லமுடியாது என்று நாசூக்காக மறுத்துவிட்டார்கள்.

துணைவருக்கும் எனக்கும் ஒன்றாக விடுமுறை கிடைப்பது என்பது எட்டாக்கனி. மணமான காலத்திலிருந்து இரு தடவைகள்தான் இருவரும் சில வாரங்கள் ஒன்றாக விடுமுறையைக் கழித்திருக்கிறோம் அவையும் உறவுகள் நிறைந்த சூழலில் மனங்கள் பேசாத பொழுதுகளாகவே கழிந்திருந்தன. மேற்குலக வாழ்வின் இயந்திரத்தனமான துரித ஓட்டம் என்பது மனங்களுக்குப் பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டது. மனங்கள் பேசவேண்டுமென்றால் ஓய்வும் தனிமையும் நிச்சயம் வேண்டும். வாழ்வின் நீண்ட பயணத்தில் அப்படி ஒரு ஓய்வும் தனிமையும் எங்களுக்கு அவசியமாக இருந்தது. முன்னைய பொழுதில் நமக்குள்ளான இத்தகைய சூழலை குழப்பியதுபோன்று இம்முறை குழப்பாமல் ஆவலாக பயண ஏற்பாடுகளைச் செய்தேன். முக்கியமாக நுளம்புக்கடியிலிருந்து தப்புவதற்கான பொருட்கள் மற்றும் சூரிய வெப்பத்திலும் , குளோரின் தண்ணீரிலும் சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய கிறீம்வகைகளை எல்லாம் பார்த்து பாரத்து வாங்கி பயணப்பொதிகளில் நிரப்பிக் கொண்டேன்.

பயணம் புறப்படும் நேரமாகியது ரொரன்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் "புன்ரக்கானா"விற்கான விமானம் மாலை 4 மணிக்குப் புறப்படும். அதற்கு முன் சில அலுவல்கள் பார்க்கவேண்டி இருந்தது. அதாவது நாம் வீட்டிலிருந்து புறப்பட்ட வாகனத்தை விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள park & Fly தரிப்பிடத்தில் நிறுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டால் மீண்டும் நாம் திரும்பும்போது எவ்விதக் காத்திருப்பு இன்றி எமது வாகனத்திலேயே வீட்டுக்கு வந்துவிடலாம். விமான நிலையத்திற்கு எம்மைக் கொண்டு சென்று விடுவதற்கும் பின்னர் மீண்டும் எம்மை அழைத்து வருவதற்கும் எவரும் மினக்கெடத்தேவையில்லை. பார்க் அன்ட் ப்ளையிலிருந்து அவர்களின் பேருந்தில் சில நிமிடங்களில் விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.வழிமையாக நாம் கொண்டு செல்லும் பொதிகளை விமானத்தில் போடுவதற்கும் கடவுச்சீட்டையும் விமானச்சீட்டையும் காட்டி இருக்கைகளைப்பதிவு செய்யவும் வரிசையில் நின்று கொண்டோம். எம்மினத்தவர்கள் ஒருவரையும் காணவில்லை. ஆனால் கடவுச்சீட்டை வாங்கி இருக்கைகளை உறுதிசெய்யும் பணியில் ஒரு தமிழர் இருந்தார். எங்களுடைய வரிசையின் முறையில் அவரிடமே நாம் சென்று பதியும் வாய்ப்பு கிடைத்தது.பதிவில் ஈடுபட்டிருந்த தமிழர் என்னுடைய கடவுச்சீட்டில் பெயரைப்பார்த்ததும் சற்று துணுக்குற்று நிமிர்ந்து பார்த்து நீங்கள் இசுலாமியரா என்றார். நான் இல்லை என்றேன். நீங்கள் சிறீலங்காவிற்கு பயமில்லாமல் சென்று வரலாம் என்று சொல்லி புன்னகைத்தார்... தொடர்ந்து எப்படி உங்கள் பேர் இப்படி உள்ளது என்றார்... என்னுடைய தந்தை வைத்தபெயர் என்றேன். அந்தக்காலத்திலேயே இவ்வளவு நாகரீகமாக பெயர் வைத்துள்ளார் உங்கள் தந்தை என்று கிலாகித்தார்.அவருடைய அத்தனை கிலாகிப்பிற்கும் அப்பாற்பட்டவர் எனது தந்தை. அவர் நாகரீகம் கருதி எனக்கு இப்பெயரைச்சூட்டவில்லை. அவருக்குப்பிடித்த இலக்கியம் கருதி இந்த இசுலாமியப் பெயரை எனக்குச் சூட்டியதாக எனது தந்தை இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்னர் எனக்குத் தெரிவித்திருந்தார். இதைக் கடவுச் சீட்டை நோட்டமிடும் அதிகாரியிடம் சொல்லாமல் அவருடைய கிலாகிப்பை ஏற்பதுபோல் புன்னகைத்துக் கொண்டு விமான இருக்கைகளின் இலக்கங்களை சன்னலோரமாக அமையுமாறு பெற்றுக் கொண்டோம்.

விமானத்திற்காக காத்திருக்கும் இடத்தை நோக்கி செல்லும்போது duty free shop கண்ணில் பட்டுவிட்டது தாமதம் துணைவரும் மகனும் அதற்குள் நுழைந்துவிட்டார்கள். வெளியே வரும்போது ஒரு பண்டல் சிகரெட்டும் ஒரு பண்டல் சொக்லேட்டுமாக என்னுடைய முறைப்பைக்கண்டதும் அசடுவழியச் சிரித்தார்கள். உனக்குத் தெரியாது இதில மலிவு அதுதான் வாங்கினனான் என்று ஏதோ ஒரு பெரிய செலவை மிச்சப்படுத்தியதுபோல் பில்டப் காட்டிக் கொண்டிருந்தார் துணைவர்.... நான் அவருடைய கருத்தைக் கேட்காதமாதிரி விமானத்திற்கான காத்திருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டேன். இப்போது என்னைச் சமாளிக்கவேண்டுமே நல்ல பிள்ளையாக பக்கத்திலேயே நெருக்கமாக இருந்து கொண்டார். அப்போது இவருடைய கைத்தெலைபேசி கிணுகிணுத்தது அவருடைய நண்பர் அழைத்திருந்தார். அவர் கடந்த வருடம் நாம் செல்ல இருக்கும் புன்ரக்கானாவிற்கு குடும்பமாகச் சென்று வந்தவர். ஆதலால் அவருக்கு அவ்விடம் பற்றி அதிகமான தரவுகள் தெரிந்திருந்தன. பிள்ளைகளை அழைத்துச் செல்லக்கூடிய இடங்கள் பற்றியும் அங்குள்ள விசேடங்கள் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தவர்...திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு துணைவரிடம் அருகில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுக் கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தார். புன்ரக்கானாவில் இருக்கும் விசேட இடங்களைப்பற்றி நாங்கள் சென்ற மறுநாள் விளக்கம் தரும் சந்திப்பைத் தவறவிடவேண்டாம் அவ்விடத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் "மமகுவா" தருவார்கள் வாங்கிக் கொள் என்றார்....... "மமகுவாவா" அப்படி என்றால் என்ன என்று துணைவர் கேட்க.... மறுபடியும் அருகில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார்..நண்பர். மனுசிதான் பக்கத்தில் இருக்கு என்று துணைவர் சொல்ல "அப்ப நான் பிறகு கதைக்கிறன்" என்று சொல்லி நண்பர் தொலைபேசியைத்துண்டித்துக் கொண்டார்.

(இன்னும் வளரும்)

 

பயணங்கள் முடிவதில்லை - 3


விமானத்தின் இயந்திரங்கள் உறுமத்தொடங்கின. அழகான இளம்பெண்கள் நால்வர் பயணிகளின் இருக்கைகளுக்கு மத்தியில் நின்று விமானப்பயணமுறை மற்றும் விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் எப்படி நம்மை காப்பது என்பதை ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் விளக்கமாகக் கூறும்போது அதற்கேற்ப அவர்களும் சைகைகள் மூலம் பாதுகாப்பு வழிகளை வெளிக்காட்டினார்கள். உறுமிக் கொண்டிருந்த ஆகாய ஊர்தி மெல்ல உருண்டு ஓடுபாதைக்கு வந்து வேகமெடுத்தது. பாதுகாப்புப் பட்டியை அணியும்படி ஒவ்வொருவர் இருக்கைகளுக்கு முன்னால் உள்ள சமிஞ்சை விளக்குகள் எச்சரிக்கை ஒலியுடன் விட்டு விட்டு ஒளிர்ந்தன. பயணிகள் பாதுகாப்புப் பட்டியை சரியாக அணிந்திருக்கிறார்களா என்பதைக் கவனித்து விட்டு பணிப்பெண்கள் தாமும் பாதுகாப்பு பட்டியுள்ள அவர்களின் பிரத்தியேக இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.
நீண்ட ஓடுபாதையின் கீழ் சக்கரங்களின் சுழற்சி அசுரவேகத்தில் இயங்க, காற்றைக்கிழித்துக்கொண்டு…. மேல்நோக்கி கிளம்பி நிலத்திற்கும் தனக்குமான தொடுகையைத் துண்டித்து சில்லுகளை உள்ளடக்கிப் பறந்தது. பயணிகள் அனைவரும் சத்தமின்றி விமானத்தின் சாளரங்கள் ஊடாக வெளியே பார்த்தபடி இருந்தார்கள். சிலர் காதுகளுக்குள் காற்றின் அழுத்தம் தாக்காதவாறு தடுப்புத் தக்கைகளை அணிந்திருந்தார்கள் காதின் அடைப்பைத் தவிர்க்க சிலர் வாய்களை ஆவென அகட்டி திறந்து சத்தமிட்டபடி. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த முறைகளைக் கையாண்டார்கள். முழுக்குடல்களையும் வயிற்றுக்குள் வைத்து காற்றின் அழுத்தம் பூரிக்கு மா பிசைவதுபோல பிசைந்தது. வயிற்றுக்குள் கூச்சம் ஊர்ந்து திரிய சிலர் நெளிந்தார்கள். விமானப்பறப்பின் அனுபவத்தைப்பற்றியே அறியாத காலத்தில் இரு பக்கமும் உந்தி ஆட்டும் பலகை ஊஞ்சல்தான் முதல் பறப்பின் அனுபவமாக எமக்கு இருக்கும் அந்நாட்களில் ஊஞ்சலில் ஆடிய அனுபவங்களை மனம் மீள்பதிவிட்டது….. இந்த ஊஞ்சல் அனுபவத்தைக்கிளறி விட்டபடி ரொரன்டோ பியெர்சன் எயர்போர்ட்டில் இருந்து கிளம்பிய சன்விங் ரொரன்டோ மாநகரத்தை ஒரு சுற்று சுற்றி சென்ரல் ஐலன்ட்டிற்கு மேலாக பறந்து தெற்கு முகமாக செல்ல ஆரம்பித்தது. மாலை நான்கு மணிக்கு பயணமாகையால் இருள் போர்க்காத நிலத்தில் கட்டிடங்களும், புல்வெளிகளும் போட்டிபோட்டு பேரழகூட்டின. பச்சை மதர்போர்ட்டில் கட்டிய ஈயக்குடுவைகள்போல் அடுக்கு மாடிகளும் பலவகையான கட்டிட வடிவங்களும் விமானத்திலிருந்து வெளியே நிலம் நோக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்குப் புலப்பட்டன. ஆகாய ஊர்தி மேற்கிளம்பி தனது சமாந்தரப்பயணிப்பை ஆரம்பிக்கும்போது பயணிகளின் இருக்கைகளுடனான பாதுகாப்புப் பட்டிகளை தளர்த்துவதற்கான சமிஞ்சை விளக்குகள் ஒளிர்ந்தன.
முன்னிருக்கையில் துணைவரும் மகனும் பின்னிருக்கையில் நானும் மகளும் பிள்ளைகள் இருவரும் சன்னல் ஓரமாக இருந்து கொண்டார்கள்…. இப்போது விமானம் நிலப்பகுதியிலிருந்து விலகி கடலுக்கு மேலாக தெற்கு நோக்கி டொமினிக்கன் ரீபப்ளிக் நோக்கி பறந்து கொண்டிருந்தது. சுமூகமான பறப்பை விமானம் மேற்கொண்டதை மகிழ்வு கொள்ளுமுகமாக சம்பெயனை பணிப்பெண்கள் இன்முகத்துடன் பரிமாறினார்கள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த எனது துணை அதனைப் பெற்றுக் கொண்டு என்னை நோக்கி திரும்பும்போது எனது கரங்களில் ஒடுங்கிய கண்ணாடிக்குடுவைபோன்று தயாரிக்கப்பட்ட மெழுகாலான குவளையில் மெல்லிய கண்ணாடிபோன்ற பொன்னிறத்திலான திராவகம் இருந்ததை அவர் விழிகள் வியப்புடன் நோக்கின.

அந்த வியப்பை அப்படியே என்னுடைய விழிகள் பதிவு செய்து நரம்புகள் வழியோடி ஞாபகங்களைச் சேகரித்து வைக்கும் பெட்டகத்திற்குள் சேமித்துக் கொண்டன. சம்பெயன் அருந்தியது மிகவும் உற்சாகமாக இருந்தது. உலகில் வாழும் ஒவ்வொரு செக்கனையும் ஆழமாக நேசித்து அனுபவிக்கவேண்டும் என்ற உந்துதல் அதிகரித்தது. அதிக மதுசாரம் கலக்காத சம்பெயன் அனைத்துப்பயணிகளின் கைகளிலும் இருந்தது. அட இதுதானா சம்பெயனின் சுவை…!
தொடர்ந்து கொரிக்க நொறுக்கு தீனிபோல் சில உப்புக்கலந்த கடலை பருப்புகள் அடங்கிய ஒரு பொட்டலத்தைப் பரிமாறினார்கள் கொரித்துக் கொண்டே நீள்கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பிள்ளைகள் ஐபோட்டில் கேம் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள் சிறிது நேரத்தில் உணவைப் பரிமாறி விட்டு பணிப்பெண்கள் ஓய்ந்தார்கள்…சிலர் உண்ட களைப்பில் சின்ன கோழித்தூக்கம் போட்டார்கள். முன்னால் இருந்த துணைவரும் கண் அயர்ந்துவிட்டார்… நமக்கு பேச்சுத்துணையும் இல்லை…சரி இருக்கவே இருக்கு நல்ல புசுபுசு என்று பஞ்சுப் பொதிகள் போன்று முகில்களும் நீல வானும் கடலும்……
வெளியே அகல விரிந்த கடல் பரப்பை இருள் மெல்ல மெல்ல கவ்வக்கவ்வ அந்த மந்தகாச ஒளியில் காற்றின் தழுவலில் கடல் சிலிர்க்கின்ற அழகு என்பது எவ்வளவு அற்புதமானது. மனதிற்குப் பிடித்தமானவனின் தொடுகையில் மயிர்கூச்செறிந்து சிலிர்க்கும் பெண்ணை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு பேனாவையும் பேப்பரையும் தேடி மனம் அலைந்தது. கைகளும் கண்களும் செயலில் இறங்கினால் கவனம் சிதறிப்போகுமென்று வாழாதிருந்தன. கடலில் தெரிந்த ஒவ்வொரு சிலிர்ப்பையும் மீண்டும் பார்க்கமுடியாது.

அந்த நெளிவு, சுழிவு பல மைல்களுக்கு அப்பால் ஆகாயத்திலிருந்துதான் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்கமுடியும். அட இதென்ன எல்லோரும் மெத்து மெத்தென்ற வெண்மேகங்களின் கொள்ளை அழகைத்தான் வான் பயணத்தில் அதிகம் இரசிப்பார்கள். நான் முகில்களை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு கண்கள் அறியாத காற்றையும் அதன் இருப்பை உணர்த்தும் அதன் சஞ்சரிப்பையும் அல்லவா குறுகுறுவென்று கவனித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இந்தப்பார்வையைத் தாங்கமுடியாமல் இருள்வலி எனக்கு மறைவான பக்கம் நோக்கி ஓட்டமெடுத்தான்.
நேரம் இரவு எட்டரையைத் தாண்டிக்கொண்டிருந்தது. டொமினிக்கன் ரிப்ப்ளிக்கில் உள்ள புன்ரக்கானா விமான நிலையத்தில் நாம் பயணித்த இயந்திரப்பறவை தன் சக்கரங்களைப் பதித்து உருளவிட்டது. நாளொன்றுக்கு பல நூற்றுக்கணக்கான இயந்திரப்பறவைகள் தரிப்பதும் பறப்பதுமாக உள்ள ஒரு மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு சில விமானங்கள் மட்டுமே இறங்கி பறக்கும் மிகச் சிறிய தரிப்பிடத்தில் கிட்டத்தட்ட 200 வரையான பயணிகளுடன் நாமும் புன்ரக்கானா மண்ணில் கால் பதித்தோம். விமான நிலையத்தின் காரியாலயங்கள் தென்னை ஓலைகள் போன்ற அமைப்பையுடைய இன்னொரு வகையான ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. அதன் சுவர்கள் கற்களால் நிரவப்பட்டு அழகாக அமைக்கப்பட்டிருந்தது. எங்கள் ஊரிலும் இதனைப்போன்ற சுவர்கள் உண்டு. கடற்கரை ஓரமாக இந்த அரன் அமைந்திருக்கிறது இப்போது அவை நிறையவே சிதைவடைந்திருக்கின்றன. ஒரு காலத்தில் அவ்விடத்தில் (போர்த்துக்கீசரா ஒல்லாந்தரா என்பது சரியாக தெரியவில்லை) இராணுவம் குடியிருந்த்தாகவும் அந்த சுவர்கள் அவர்களால் அமைக்கப்பட்டதாகவும் கூறுவார்கள் இன்று பழுதடைந்திருந்த நிலையிலிருக்கும் அந்தச்சுவர்களுக்கும் புன்ரக்கானா எயர்போர்ட்டில் இருக்கும் இந்தச்சுவர்களுக்கும் பெரியதொரு ஒற்றுமை
இருப்பதை அந்த இடத்தில் நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் உணர முடிந்தது.


புன்ரக்கானாவில் நாம் எங்கு செல்கிறோம் என்பதனை தெரிவித்து மற்றும் வரிப்பணத்தை அசலுத்திவிட்டு எங்களுக்கான பயணப்பொதிக்குள் உள்ளடக்கப்பட்ட அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தோம். எங்களை நாங்கள் தங்கப்போகும் விடுதிக்கு அழைத்துச் செல்வதற்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் தயாராக நின்றிருந்தன. எங்களுடைய பெயர்களையும் நாங்கள் செல்ல உள்ள விடுதிக்கான பெயர்களையும் உறுதிப்படுத்திக்கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை எல்லோரும் வெவ்வேறு இனமக்களாக இருந்தார்கள். மற்றைய விடுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் புறப்பட்டு அரைமணிநேரத்திற்கு மேலாகியும் நாங்கள் புறப்பட முடியவில்லை. காரணம் எங்களோடு பயணிக்கவேண்டிய நால்வர் விமான நிலையத்தைவிட்டு எங்கள் பேருந்து நிற்கும் தரிப்பிடத்திற்கு வந்து சேரவில்லை. காத்திருப்பு எல்லோருக்கும் அலுப்பை உருவாக்கியது. வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் எல்லோரும் தவித்துக் கொண்டிருப்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டின. சிறிது நேரத்தில் நால்வரில் ஒருவரான ஒரு கறுப்பினப் பெண்மணி வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். இமிக்கிரேசன் அவரை அசௌகரியப்படுத்திவிட்டது காரணம் அவர் யமேக்காவைச் சேர்ந்தவர் என்பதால் இந்தவழியாக அவரின் பயணம் அவர்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியிருந்த்தாகவும் அவர் அருகில் இருந்தவருடன் உரையாடும்போது அறிய முடிந்தது. மீண்டும் இப்போது அரை மணி நேரத்திற்கு மேலாக எங்களின் காத்திருப்பு…இப்போது எல்லோரும் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் விடுபட்ட மூவரையும் தேடி மீண்டும் விமான நிலையத்தின் சுங்கப்பகுதிக்கு செல்ல ஆயத்தமானார்கள் அந்நேரம் இரண்டு கைகளிலும் பெரிய பெரிய கைப்பிடிகள் போட்ட மதுப்போத்தல்களும் கையுமாக அந்த மூவரும் வந்து சேர்ந்தார்கள். வெளிநாட்டு மதுவகை பயணப்பொதிகளுக்குள் அடக்கம் இல்லை என்பதால் அவர்கள் பிரத்தியேகமாக எங்களுடைய யாழில் பிரபலமாக பேசப்படும் மதுவகைகளை விமான நிலையத்திலேயே வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள். பயணிகள் எல்லோரையும் எரிச்சலூட்டி அந்த மூவரும் நடுத்தரவயதைக் கொண்ட வட இந்தியர்கள்


(தொடரும்)

 

 

பயணங்கள் முடிவதில்லை - 4


GRAND-PARADISE-BAVARO_Primary_wide.jpg
வெளியே அந்தி சாய்ந்து அரையிருட்டில் வெம்மை சுமந்த காற்று உடலில் வியர்வையை துளிர்க்க வைத்துக் கொண்டிருந்த பொழுதில். நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்திற்குள் குளிர் மிதமாக தவழ்ந்துகொண்டிருந்தது. வெப்பம் மிகுதியான வரண்டபகுதியை முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தால் உயர்ந்தெழுந்த புழுதி கூறிற்று. அதிக மின்விளக்குகள் இல்லாத ஒடுங்கிய பாதையினூடாக பயணித்துக் கொண்டிருந்தோம். அகன்ற ஒழுங்கமைக்கப்பட்ட நேர்த்தியான பாதையில் நீண்டகாலமாக பயணித்துக் கொண்டிருக்கும் என்போன்றவர்களுக்கு அந்தப் பாதை மிகக்குறுகியதாக இருப்பதில் வியப்பில்லை, இருந்தாலும் என் எண்ணச்சிறகுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று நினைவு வலயங்களுக்குள் பறக்கத் தொடங்கின. எத்தனை குறுக்கலான பாதைகளிலும் எங்கள் பயணிப்புகள் எவ்வித அச்சமுமின்றி சாதுரியமாக மேற்கொள்ளப்பட்ட தருணங்கள் எல்லாம் கண்முன்னே வந்து நின்றன. அகதி வாழ்வின் ஓட்டத்தில் எரிபொருள் வாகனங்கள் உதவாத நேரத்தில் எத்தனை மைல்களை ஈருருளி மூலம் எவ்வளவு சுமைகளுடன் சீரற்றபாதையில் பயணித்திருக்கிறோம். அந்த இருட்டும் காற்றின் வெம்மையும் புழுதிபடர்வும் என்னை மீளமுடியாத கடந்த காலங்களுக்குள் வைத்து கும்மியடித்தன. சுமார் 40ற்கு மேற்பட்ட பயணிகளுடன் கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணிப்புக்கு பின்னர் நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அண்மித்தோம். எங்களுடன் வந்தவர்கள் சிலர் வெவ்வேறு விடுதிகளைத் தெரிவு செய்து முற்பதிவு இட்டிருந்தபடியால் அவர்களை முதலில் அவர்களுடைய விடுதியில் இறக்கிவிட்டுவிட்டு இறுதியாக எம்மை நாம் செல்ல இருந்த Grand Paradice விடுதியில் விடுவதாக வாகன ஓட்டுனரின் உதவியாளர் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கூறினார். முக்கியமாக ஒவ்வொரு பயணிகளிடமும் அடுத்தநாட்காலை விடுதியின் அலுவலகப்பகுதியில் வந்து கூடுமாறும் அங்கு புன்ரக்கானாவிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கான பிரத்தியேக இடங்கள் பற்றியும் அவற்றிற்கு எவ்வாறு பதிவு செய்து செல்வது பற்றியும் விபரங்கள் தரப்படும் ஆதலால் தவறாது அதில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்..
எமது தரிப்பிடம் வந்தது எல்லோரும் ஆவலுடன் இறங்கி தமது உடமைகளை எடுத்துக் கொண்டார்கள். இறங்கிய இடத்தைப்பார்த்ததும் மனம் கொஞ்சம் அதிருப்தி கொண்டது.
எனக்கு மட்டுமல்ல அனைவருக்குந்தான். எனது துணைவர் நீண்ட நேரமாக புகைக்காமல் இருந்ததால் அவசரமாக எல்லோருக்கும் முன்பாக இறங்கி என்னுடைய வெள்ளைச்சகலியை தன்னுடைய உதட்டோடு ஒட்டிக்கொண்டார். சகலி தந்த உற்சாகத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளரை அணுகி எங்களை இறக்கிவிட்ட தரிப்பிடத்தைப்பற்றி தகவல் அறிய முற்பட்டார். நாங்கள் நிற்கும் இடம் Grand Paradiceன் வரவேற்புப் பகுதியைக் கொண்ட முன்பக்கப்பகுதி அல்ல என்றும் இது பின்வழி என்றும் தகவல் கிடைத்தது. மேற்கொண்டு எங்கள் முற்பதிவுகளை உறுதி செய்து கொண்டு எமக்கான அறைகளின் சாவியைப் பெற்றுக் கொண்டோம். கிட்டத்தட்ட பதினைந்திற்கு மேற்பட்ட உயரம் குறைவான தொடர் கட்டிடங்களைக் கொண்ட ஒரு சுற்றுலாத்தளமாகும். ஒவ்வொரு கட்ட்டத் தொகுதியும் அண்ணளவாக 100 முதல்150 வரையான அறைகளைக் கொண்டிருந்தன. எமக்குத் தரப்பட்ட அறை நாம் நின்றிருந்த இடத்திற்கு அண்மையாகவே இருந்ததால் அங்கு நின்ற உதவியாளர்களைத் தவிர்த்து நாமே எமது உடமைகளுடன் அவ்விடத்தை அடைந்தோம். எமக்கான அறை விசாலமாக இருந்தது. ஆனால் நீண்ட நாட்களாக பாவனையில் இல்லாமல் ஈரப்பதனுடன் காற்றின் சுத்திகரிப்பு இல்லாமல் பூட்டிவைக்கப்பட்ட அறையாக இருந்த்து. பூஞ்சனமணம் நாசிக்குள் புகுந்து கொள்ள எனது முகம் சுழித்துக் கொண்டது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டிவேறு கறள் கட்டியிருந்தது. அதனைக் கண்ணுற்றதும் உடனடியாக அவ்விடத்தை மாற்றவேண்டும் என்று கூறி நாங்கள் சாவியைப் பெற்றுக் கொண்ட அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கு எமக்கு முன்பாகவே மூன்று குடும்பங்கள் அதிருப்தியுடன் நின்று கொண்டிருந்தார்கள். உடனடியாக அறைகளை மாற்ற முடியாது நாளை மாலை 3 மணிக்குத்தான் அவற்றை மாற்றலாம் என்று வந்த பயணிகளிடம் அங்கு வேலைக்கு அமர்ந்திருந்த உதவியாளர்கள் கூறி எங்களையும் மீண்டும் பழைய அறைக்கே அனுப்பி வைத்தார்கள். சே….. ஒரு நாள் பாழாய் போய்விட்டதே என்று அலுத்தபடி வந்து குளித்து உடைமாற்றிக் கொண்டோம். பிள்ளைகள் பசிக்கிறது என்று சொல்லும்போதுதான் அட அங்கு வபே 10 மணியுடன் மூடிவிடுவார்களே… முதலில் போய் ஏதாவது ஆகாரம் உண்போம் என்று இரண்டு கட்டிடத் தொகுதிக்கு அப்பால் உள்ள உணவுச்சாலைக்குச் சென்றோம் அங்கு உணவுகள் தீர்ந்தும் இருக்க்க்கூடிய உணவுகள் எமக்குப் பிடிக்காதவையாகவும் இருந்தன. என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த உதவியாளர் ஒருவர் Grand Paradice ன் முதன்மை தளத்திற்கு அருகாமையில் 24 மணிநேரச் சேவையுடன் உணவு விடுதி இருக்கிறது அங்கு செல்லுங்கள் என்றார். சொல்ல மறந்துவிட்டேன் அங்கு உணவுக்கு நாம் பிரத்தியேகமாக பணம் செலவிடத்தேவையில்லை. எல்லாமே எமது விமானப்பதிவினுள் அடக்கம்.
சரி அங்கு போவதற்கு முன்பு கடற்கரை எங்கிருக்கிறது என்று பார்ப்போம் என்று எமக்கு தரப்பட்ட கட்டிடத்திற்கு சுற்று முற்றும் தேடிப் பார்த்தோம் ஊகூம் கண்டு பிடிக்கவே முடியவில்லை. எந்தப்பக்கம் கடல் இருக்கிறது என்று யாரைப் போய் கேட்பது? பிள்ளைகளுடன் ஒரு கொட்டிலில் உட்கார்ந்து கொண்டோம். அப்போது அங்கு வந்தது சின்ன தொடர்வண்டி.
சரி அதில் ஏறி Grand Paradiceன் முகப்புக்குச் செல்வோம் என்று ஏறிக் கொண்டோம் கட்டிடங்கள் கடந்து சின்ன கானகம் போன்ற இருண்ட பாதையினூடாக சுமார் 5 நிமிட ஓட்டத்தின் பின் விடுதியின் முகப்பிற்கு வந்து சேர்நதோம்
.
முகப்பு பிரமாண்டமாகவும், கேளிக்கைக்கூடமாகவும் இருந்தது. நாங்கள் வந்த நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. கேளிக்கைக் கூடத்தில் துள்ளிசையும், மதுரசமும் போட்டிபோட்டு அங்கிருந்தவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன.. நம்முடைய வயிற்றையோ பசி வதஞ்செய்துகொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தக் கேளிக்கைக்கூடத்தைத் தாண்டி வெளியே வந்தோம் நீண்ட நீச்சல் தடாகம் மௌனமாய் விளக்கு வெளிச்சத்தில் பளபளத்த அழகைப்பருகியபடி உணவுச்சாலைக்கு வந்து சேர்ந்தோம். கம்பேக்கர், ப்ரைட் சிக்கன், சலாட் போன்ற உணவுகளும் மென்பானங்களும் இருந்தன. கம்பேக்கரையும் சிக்கனையும் பிள்ளைகள் எடுத்துக் கொண்டார்கள். துணைவர் தனக்கு பசியில்லை நீங்கள் சாப்பிடுங்கள் என்று விட்டார். நான் இரண்டு பாண் துண்டுகளை எடுத்து பட்டரைப் பூசி படாதபாடுபடுத்தும் பசிக்கு தண்டனை கொடுத்தேன்.
உணவை முடித்துக் கொண்டு மீண்டும் விடுதியின் முகப்பு வழிக்கு வரும்போது கசினோ கண்ணில் பட்டது. அப்படியே பக்கத்தில் வந்தவரை அந்தப்பக்கமாக கால்கள் சாய்த்துச் சென்றன. ஒரு நிமிடம் நில் உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்த்து வருகிறேன் என்றவரை அடுத்த கணம் காணவில்லை. எதிரே தண்ணீர் தளதளக்க நீச்சல் தடாகம் அதற்குள் விண் தெரிந்தது முகில் அலைந்தது, மதி சிரித்தது. சத்தியமா நான் மெய் மறந்து போனேன்
.335929.jpg

பிள்ளைகள் வந்த முதல்நாள் குதூகலத்தில் நாலாபக்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அட இப்படியான ஒரு பொழுதை இரசித்துக் கொண்டிருந்தால் கற்பனைகள் கரை புரண்டு எல்லை கடக்கும். எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன். அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன்.


வளரும் :D

 

பயணங்கள் முடிவதில்லை - 5

அடுத்த நாட்காலை விரைவாகவே புலர்ந்தது. இதமான மென்குளிர், கதகதப்பான அணைப்பு சாளரத்திற்கு வெளியே பறவைகளின் ஒலி, எங்கேயோ தூரத்தில் அலையின் இரைச்சல் மனித இரைச்சலற்ற அந்த அதிகாலையில் ரசித்தபடி கண்களை மூடி அனுபவிப்பதில் இருக்கும் திருப்தி.
ரசித்துக் கொண்டு கண்மூடி சாய்ந்திருந்த என்னை துணைவர் உலுப்பி எழுப்பினார் நேரமாகிவிட்டது விடுதியின் முன் முகப்பில் பயணிகளுக்கான தகவல் பொதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று துரிதப்படுத்தினார். நான் சோம்பல் முறித்து எழுமுன் பிள்ளைகள் எழுந்து முகங்கழுவ முற்பட்டு நான் முதல், நீ முதல் என்று பிரச்சனைப்பட ஆரம்பித்துவிட்டனர். ஆகா வீட்டில் பாடசாலைக்கு அனுப்ப நான் எத்தனைதரம் இவர்களைக் கூவி அழைப்பேன் அருகில் சென்று தலையை வருடி எழுப்புவேன் அவர்களும் என்னுடைய தடவலுக்காகச் சுருண்டு சுருண்டு படுப்பார்கள் இங்கு எல்லாம் எதிராக நடக்கிறதே என்று எண்ணிக் கொண்டு அவர்கள் இருவரின் பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தேன். உற்சாகமும் குதூகலமும் அவர்களை ஆட்கொண்டிருந்தன. சாதாரண நாட்களில் அதிகாலையில் நான் எழுந்து அவர்களுக்கு உணவு தயாரித்து விட்டு அவர்களை நித்திரையால் எழுப்பி பாடசாலைக்குத் தயார்படுத்தி காலை உணவை அவர்கள் கைகளில் திணித்துவிட்டு வேலைக்கு சென்று விடுவேன். எனது அருகாமை குறைந்த நாட்களில் அவர்களின் காலை உணவு நான் மாலையில் வேலையால் வரும்போது உணவுமேசையில் அப்படியே தேடுவாரற்றுக்கிடக்கும். அப்பா நான் வேலைக்குப்போன பிற்பாடு கவனித்து பாடசாலை பேரூந்தில் ஏற்றிவிட்டு தானும் வேலைக்குச் சென்று விடுவார். இதுதான் எங்களின் நாளாந்த வாழ்வு. இந்த வாழ்விலிருந்து இந்தப்பயணநாட்கள் வேறுபட்டிருந்தன. அதுவே பிள்ளைகளுக்கான பெரும் உற்சாகத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தது.
காலை உணவை அருந்திவிட்டு முகப்பு விடுதிக்குச் செல்லலாம் என்ற முடிவுடன் காலை உணவை உட்கொள்ளச் சென்றோம். அங்கு பாண், முட்டை,வேக்கொன், சீரியல், பழங்கள், கேக் வகை என்று பல்வேறு உணவுகள் இருந்தன. பிடித்தமான உணவாக உண்டுவிட்டு, விடுதியின் முகப்புக்கு விரைந்தோம். நாங்கள் இருந்த இடத்திற்கும் முகப்புக்குமான தூரத்தைக்கடக்க எங்களுக்கு ஒரு சிறிய தொடர் இருக்கைகளைக் கொண்ட ஊர்தி உதவியது.
137645.jpg?lang=fr

எங்களுக்கு முன்பாகவே வேறு பலரும் அங்கு வந்து காத்திருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் வெவ்வேறு விமான சேவைகளின் மூலம் வந்திருந்த பலர் அவ்விடத்தில் நிறைந்திருந்தனர். இன்னொரு பக்கத்தால் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்தார்கள். ஒவ்வொரு விமானசேவைக்கும் ஒவ்வொரு நபர் விமானத்தின் பெயர் பதிந்த அட்டையுடன் வந்து அந்தந்த விமானத்தில் வந்தவர்களை தம்முடன் வரும்படி அழைத்தார்கள். நாங்கள் பயணித்த சன்விங் விமானத்தின் பெயருடனும் ஒருவர் வந்து அழைத்தார். நாங்கள் எல்லோரும் அவர்பின்னே சென்றோம்.
Facebook_Avatar2_reasonably_small.jpg
ஒரு மண்டபத்தில் எங்களுக்கு இருக்கைகள் தரப்பட்டு புன்ரக்கானாவில் நாம் தரித்து நிற்கும் இடத்திலிருந்து சென்று பார்க்க்க்கூடிய தளங்களையும், கிடைத்தற்கரிய அனுபவங்களையும் பெறக்கூடிய நிகழ்வுகளையும் எது எது எங்கிருக்கிறது என்று விளங்கப்படுத்தினார். ஒரு வர்ணக்கையேட்டில் அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தன. அத்தோடு சலுகைச் சீட்டுக்களும் வழங்கப்பட்டன. அநேகமாக பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு சலுகைச் சீட்டுக்களை வழங்கிப் பெரியவர்களுக்கு செலவு வைக்கும் வியாபாரம் கச்சிதமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. கையேட்டில் உள்ளவற்றைப்பார்க்கும்போது விழிகள் வியப்பில் ஆழ்ந்தன. இனி இந்தக்கையேட்டில் உள்ள இடங்களுக்குச் செல்லவேண்டுமாயின் சன்விங் என்று குறிப்பிட்ட ஒரு மேசைக்கு சென்று பதியச் சொல்லிவிட்டு எங்களுக்குத் தகவல் தந்தவர் விடைபெற்றுக் கொண்டார். இனி எங்கள் முறை நாம் எங்கு எங்கு செல்வதென்று பதிவு செய்யவேண்டும் பதிவு செய்தால்’ மாத்திரமே அதற்கான ஒழுங்குகள் செய்யப்படும். இப்படி ஒவ்வொரு விமான சேவையும் த்த்தமக்கென்று ஒரு பதிவிடத்தை அந்த மண்டபத்தில் உருவாக்கி இருந்தனர். துணைவருக்குத் திண்டாட்டம் எங்களுக்கோ கொண்டாட்டம். ஏனென்றால் சாகசப்பயணங்கள் விளையாட்டுக்கள் என்றால் அவருக்கு பயமோ பயம் எனக்கோ அப்படியான விடயங்கள் என்றால் ஆவலோ ஆவல். இந்தவிடயத்தில் எனக்கும் துணைவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற தேர்வுகள். தொடர்ந்து உங்கள் பார்வைக்காக அந்தக்கையேட்டில் உள்ளவற்றை இங்கு இணைக்கின்றேன் முடிந்தால் நான் எவற்றை தெரிவு செய்திருப்பேன் எனது துணைவர் எவற்றை தெரிவு செய்திருப்பார்? பிள்ளைகள் எவற்றை என்று உங்கள் அனுமானத்தை தாருங்கள். முக்கிய குறிப்பு இந்தப்பயணம் எனது குடும்பப் பயணமாக இருந்தாலும் இந்த இடத்திற்கு எதிர்காலத்தில் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன்.


39.jpg

swim-with-nurse-sharks.jpg








62076698.jpg

இன்னும் வளரும்.

 

பயணங்கள் முடிவதில்லை - 6

எங்களுடைய ஆவல் எல்லை கடந்து பிள்ளைகளும் நானும் போட்டி போட்டுதெரிவு செய்தோம். அப்பா ஒன்றை மட்டுமே இப்போதைக்கு தெரிவு செய்யுங்கள் மற்றவற்றை பின்னர் பதியலாம் என்றார்.
என்னுடைய தெரிவு நீண்ட கயிற்றில் கிளிப் பண்ணி அந்தரத்தில் சறுக்குவது.. பிள்ளைகளின் தெரிவு டொல்பின் மீன்களுடன் நீச்சல் அடிப்பது. துணைவரின் தெரிவு காடுகள், கற்கள், மணல்வெளிகள், சேற்று மடைகள் போன்ற இடங்களில் இலாகவகமாச் செலுத்தக்கூடிய இருவர் அமரும் வாகனப்பயணம். அதில் ஒருவர் ஓட்டுனராகவும் மற்றவர் சகபயணியாகவும் செல்லக்கூடிய ஒரு சாகசம் நிறைந்த வாகன ஓட்டம். முக்கோணமாய் தெரிவுகள் விட்டுக் கொடுப்பது யார்? இந்த புழுதி குடிக்கும் பயணத்தில் மகனுக்கும் அப்பாவோடு பயணிக்கும் ஆவல். என்னுடைய தெரிவுக்கு மகள் தலையசைத்தாள் இருந்தாலும் டொல்பின் நீச்சலில் அவளுக்கு அதிக ஆவல்.. “அப்பா நீங்கள் இந்த கிளிப் கோல்டர் சலஞ்சுக்கு வரமாட்டீங்களா” என்று கேட்க “அடீ அதில தொங்கினால் எனக்கு மூச்சு நின்றிடும் பரவாயில்லையா?” என்று சறுக்கிக் கொண்டார். ஒரு வழியாக பிள்ளைகளின் தெரிவும் அப்பாவின் தெரிவும் பதிவு செய்யப்பட்டன. சரி அவர்கள் வழியில் போவோம் என்று நானும் சம்மதித்தேன்.

இன்னும் பரசூட் பறப்பும், பெரிய சுறாக்கள் , திருக்கைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுடன் கடல்தளத்தில் சேர்ந்து நீச்சலடிப்பது போன்ற த்ரிலிங்கான அனுபவங்கள் கிடப்பில் போடப்பட்டன. அடுத்தடுத்த நாட்களும் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று பதிவு செய்பவர்கள் தெரிவித்தனர். சரி அடுத்த கட்டம் என்ன? கடல் எங்கே இருக்கிறது என்பதை அறியவேண்டும். முகப்புக்கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளங்களை தாண்டிப்போக விளையாட்டுத்திடலும், அனைத்துவகை குளிர்பானங்களும் மதுவகைகளும் நிறைந்த கொட்டகையும எதிரே விரிந்த கடலும் தெரிந்தது. விளையாட்டுத்திடலில் ஆண்கள் பெண்களென கலந்த வகையில் குழுமங்கட்டி கவர்ச்சியும் கலகலப்பானதுமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.



நான் அவற்றை வேடிக்கை பார்க்க பிள்ளைகளுக்கு கோக் வாங்கித் தருவதாக கொட்டகைக்குப் போன மச்சான் இரண்டு மெழுகு கப்களில் கோக்கை நிறைத்து வந்து பிள்ளைகளின் கைகளில் தந்து விட்டு எனக்கு என்ன வேண்டும் என்று கேட்க எனக்கு இப்போது தாகமாக இல்லை வேண்டாம் கடற்கரைப்பக்கமாக செல்கிறேன் அங்கு வாருங்கள் என்று நடக்க முற்பட்டேன். நில் நானும் வாறேன் என்று அவசரமாக கொட்டகை நோக்கிச் சென்றவர் இரு கைகளிலும் பியரை ஏந்தி வந்து ஒன்றை என்னிடம் தந்தார். எனக்கு வந்த கோபத்தில் அசையாமல் அவ்விடத்திலேயே நின்று பியரை விறைத்துப்பார்த்தேன்… நிலமை விளங்கியவர் அது உனக்கு இல்லை அப்படியே கொண்டு வா கடற்கரையில் நடந்துகொண்டே குடிக்க, இதில நடக்கும்போதே ஒன்று முடிந்துவிடும் மறுபடியும் இங்கு வந்து மற்றது எடுக்காமல் தொடரலாம் அது வரைக்கும் நீ உன்னுடையது போன்று கொண்டுவா என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திராமல் பிள்ளைகளுடன் கடற்கரையை நோக்கி நடக்க வெளிக்கிட்டார். கையில் மதுவுடன் கடற்கரையை நோக்கி நடந்த எனக்கு என்னவோபோல் இருந்தது. இயல்பாக மற்றவர்கள் என்னைப்பார்த்துப் புன்னகைப்பதுகூட ஏதோ நக்கலாகவும் மற்றவர்கள் எல்லோரும் என்னையே பார்ப்பதாகவும் மனதில் பிரமை ஆட்டிப்படைத்தது. பலருக்கு மத்தியில் கையில் மதுவுடன் நடப்பது மனதைப் பலவீனமாக்க கையிலுள்ள பியர் மணலில் சிந்தியது. சில அடிகள் முன்னே சென்றவர் ஏதோ மன உந்துதால் என்னைத் திரும்பிப் பார்த்தார். புரிந்திருப்பார் போலும் கண்களால் கெஞ்சினார்.
அழகான கடற்கரைப்பிரதேசம். அலைகள் எழுவதும் ஓய்வதுமாக மனதிற்குள் பதின்மச்சிறுமி உயிர்த்துக் கொண்டாள். பிறகென்ன அலைகளுடன் விளையாட்டு…. காலடியில் மண்ணை கரைத்து அலை என்னைச் சாய்க்க முயல்வதும், மறுபடியும் மறுபடியும் நான் நிலை எடுப்பதுமாக எனக்கு சின்ன வயதிலிருந்தே பரிச்சயமான தோழியுடன் குதூகலித்து கும்மாளமிட்டேன்.



நேரம் போனது தெரியவில்லை. அலையோடு விளையாடியதில் பிள்ளைகளும் நானும் தெப்பமாக நனைவதும் பின்னர் வெயிலின் வெம்மையில் காய்வதுமாக நேரம் நண்பகலைத் தாண்டிக் கொண்டது. பிள்ளைகள் பசிக்கிறது என்றபோதுதான் நேரம் ஞாபகத்திற்கு வர அடடா அறையை மாற்ற 3 மணிக்கு நிற்கவேண்டுமே… உடலில் ஒட்டிய கடலின் உப்பு நீரும் கடற்கரை மணலும் பிசுபிசுவென்று இருந்தாலும் மகிழ்ச்சி பிசுபிசுப்பில்லாமல் மிளிர்ந்து கொண்டிருக்க அவசர அவசரமாக விடுதியில் முகப்பு வாசலூடாக எங்கள் இருப்பிடத்திற்குச் செல்வதற்கான சிறு ஊர்தி நோக்கி வரும்போது சன்விங் உதவியாளர் எம்மை அழைத்துக் கொண்டு பின்னால் ஓடிவருவது தெரிந்தது. இவர் எதற்காக எம்மை அழைக்கிறார் என்று யோசித்துக் கொண்டு நிற்பதற்கிடையில் நாம் செல்லவேண்டிய ஊர்தியும் எம்மைப்போல் அடுத்தடுத்த விடுதிகளுக்குச் செல்லக் காத்திருந்தவர்களை ஏற்றிக் கொண்டு செல்ல ஆயத்தமானது. அவசரமாக ஓடி வந்த பயண உதவுனர் துணைவரின் கைகளில் ஒரு சீவப்பட்ட சின்னத்தடிகள் அடங்கிய போத்தலைத் திணித்துவிட்டு இது எங்கள் சேவையில் பயணத்தை மேற்கொண்ட உங்களுக்கான டொமினிக்கன் ரிப்பப்ளிக்கின் அதி விசேடமான சின்னப்பரிசு என்று கூறி என்யாய் மான் எனச்சிரித்துக் கொண்டே கையசைக்க எங்களுடைய ஊர்தி புறப்பட்டது. சின்னச்சின்னத் தடிகளை காயவைத்து அந்தப் போத்தலினுள் புகுத்தி அடைத்து வைத்திருந்தார்கள். கையில் பியருடன் இருந்த துணைவர் அதை என்னிடம் வைத்திருக்கும்படி தந்தார். எங்களோடு பயணித்தவர்கள் குறும்பாக கண்சிமிட்டிச் சிரித்தார்கள். நானும் காய்ந்த மரமஞ்சள் போன்ற தடிகள் கொண்ட கிட்டத்தட்ட குடிநீர் அவித்துக் குடிக்கும் பக்கற்றுகளில் வருவதுபோன்று அந்தப் போத்தலுக்குள் இருந்த ஏதோ ஒரு மரத்தின் வேர்களை வேடிக்கை பார்த்துக் கொணடிருந்தேன். இதை என்ன செய்வது அவித்துக் குடிப்பதா? இந்த சீவப்பட்ட வேர்கள் ஒரு கிப்ட்டா? இலங்கைக்குப் போனா கறுவாப்பட்டையையும் தேயிலையையும் சாம்பிளுக்குக் கொடுப்பார்களே அதுபோல இதுவும் ஒன்றா?

mamajuna750.gif

வளரும்.....


 

பயணங்கள் முடிவதில்லை - 7

 

நீண்ட இடைவெளியை விட்டுத் தொடர்களை எழுதும்போது அது வாசிப்பவர்களுக்கு அலுப்பைக் கொடுக்கும். அதனைத் தவிர்க்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. முன்பைப்போல எழுத்துக்கள் வசப்பட மறுக்கின்றன. பயணங்கள் முடிவதில்லையை எதிர்பார்க்கும் நண்பர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியாமல் காலமும் கடமைகளும் அலைக்கழிக்கின்றன. ஒரே மூச்சில் எழுதிவிட்டு அமர முடியவில்லை. பயணக்குறிப்பைத் தொலைத்த ஒரு பேனாவிற்கு மீண்டும் மீண்டும் அத்தருணங்களை நினைவு கூறுதல் கொஞ்சம் கடினமாகவே உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் முடிவதில்லை - 7

 

நீண்ட இடைவெளியை விட்டுத் தொடர்களை எழுதும்போது அது வாசிப்பவர்களுக்கு அலுப்பைக் கொடுக்கும். அதனைத் தவிர்க்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. முன்பைப்போல எழுத்துக்கள் வசப்பட மறுக்கின்றன. பயணங்கள் முடிவதில்லையை எதிர்பார்க்கும் நண்பர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியாமல் காலமும் கடமைகளும் அலைக்கழிக்கின்றன. ஒரே மூச்சில் எழுதிவிட்டு அமர முடியவில்லை. பயணக்குறிப்பைத் தொலைத்த ஒரு பேனாவிற்கு மீண்டும் மீண்டும் அத்தருணங்களை நினைவு கூறுதல் கொஞ்சம் கடினமாகவே உள்ளது.

 

 

மதிய உணவை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக நாங்கள் தங்கியிருக்கும் அறையை மாற்ற மீண்டும் நாங்கள் நேற்றிரவு சாவிகளைப் பெற்றுக் கொண்ட அலுவலகத்திற்கு சென்று ஒருவழியாக அறையை மாற்றிக் கொண்டோம். எமக்காக ஒதுக்கப்பட்ட அந்த அறையும் கடற்கரைக்கு அண்மையாக இல்லாமல் அமைந்திருந்தது. அதில் துணைவருக்கு பூரண திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் போய் அலுவலகத்தில் பேசியபோது கடற்கரைக்கு அண்மையாக அறைவேண்டுமென்றால் சிறிது பணம் அதிகம் கட்டவேண்டும் என்று கூறினார்கள் சரி எதற்கும் பணம் கட்டுவதற்கு முன்பு அறைகளை பார்வையிட்டுவிட்டு அதனை மேற்கொள்ளலாம் என்று அறைகளைக்காட்டும்படி கேட்டோம். அறைகளைக் காட்டினார்கள் எனக்கு பிடிக்கவில்லை.. வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்துவிட்டேன். நாம் தற்போது இருக்கும் அறையின் வசதியளவுக்கு அந்த கடற்கரையை அண்மித்த அறை இருக்கவில்லை. இது தொடர்பில் நம்ம மச்சிக்கு பெரிய ஏமாற்றம் நிலைகொண்டது. கடலலையின் ஓசையும் ஏகாந்த இரவும் அவர் ஆசைப்படும் விடயங்களில் எப்போதும் முன் நிற்கும். திருப்தியின்றி ஏற்றுக் கொண்டார். நாளை எங்களுடைய boogie ride முடித்து வந்து அங்குள்ள வேறு விடுதிக்கு மாறுவது பற்றிக் கதைக்கவேண்டுமென்று முடிவு கட்டிக் கொண்டார். இப்போது நாங்கள் இருக்கும் அறையின் பால்கனி வழியாக வெளியே நீச்சல் தடாகத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. பொதுவாக அங்குள்ள எல்லா நீச்சல் தடாகத்துடனும் Barகளும் ஒட்டியே இருந்தன. ஆனால் எங்களுக்கு அண்மையில் உள்ள தடாகம் நாலரை அடி ஆழத்துடன் பிரத்தியேகமாக அமைந்திருந்தது. இதற்குள் பார் இல்லை பிள்ளைகளின் ஆர்வம் நீச்சல்தடாகத்தை நோக்கியிருந்தது உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களுடன் ஒவ்வொரு மணித்துளிகளும் கடந்தன. நீந்தவேண்டும் புறப்பட்டாயிற்று. நாம் தங்கியிருந்த கட்டடத்தை விட்டு கீழே இறங்கி நீச்சல்தடாகத்தை நோக்கி நடக்கும்போது மேலே இரண்டாவது மாடி பல்கனியில் இருந்து ஏகமாக தூசனைச் சொல்லாடல்கள் தமிழில் கேட்டன. சிறிது நடந்திருப்போம் ஒரு குரல் “ அண்ணே நீங்கள் தமிழோ” என்று மேலேயிருந்து ஒலித்தது. நிமிர்ந்து பார்த்து “ஓம் தம்பி” என்று இவரும் கதைக்க மெல்ல மெல்லமாக நான்கு இளைஞர்கள் அந்தப்பல்கனியில் இருந்து எட்டிப்பார்த்து மேலும் கதைக்க ஆரம்பித்தார்கள். சரியாப் போச்சு…… என்னுடைய வீட்டுக்காரனுக்கு கதை கண்ட இடம் கைலாசம்… இனி என்ன இவரைப்பார்த்துக் கொண்டிருந்தால் அப்படியே ஆவென்று கொண்டுதான் நிற்கவேண்டும்… முடிவெடுத்துக் கொண்டு நாங்கள் நீச்சல்குளத்திற்கு சென்று விட்டோம். எங்களைக் காணுமுன் சத்தமாகக் கேட்ட தூசனைகள் பின்னர் ஒலிக்கவில்லை. அந்த இடத்தில் நாம் இருக்கும் வரை அந்த நான்கு தமிழ் இளைஞர்களைத் தவிர வேறு தமிழர்களைச் சந்திக்கவில்லை.
அங்கு ஒவ்வொரு நாளும் இரவு 9 மணியிலிருந்து 11 மணிவரை அரங்க நிகழ்வுகள் நடைபெறும். சிறுபிள்ளைகளுக்கான வேடிக்கைப்போட்டிகளில் ஆரம்பித்து சல்சா நடனங்கள் மியூசிக்கல் நாடகங்கள் என பல்வகையான நிகழ்வுகள் நாளாந்தம் வெவ்வேறாக நடைபெறும்.


இன்று இந்த நிகழ்வுகளைச் சென்று பார்ப்பது என்று பகலில் போட்டிருந்த திட்டத்தை நீண்ட நேர நீச்சல் மூழ்கடித்துவிட்டது. நாளாந்தம் நீச்சலை அரை மணிநேரம் செய்தால் அது உடற்பயிற்சி அதையே திடீரென்று ஒரு நாளில் 4 மணிநேரம் அடித்தால் எப்படி இருக்கும்?. இதை வாசிக்கும்போது சரியான எருமைகள் என்று நீங்கள் நினைப்பது விளங்குகிறது.  நீண்டநேர நீர் விளையாட்டு உடலுக்கு அசதியைக் கொடுக்க ஏற்பட்ட அகோரபசிக்கு உணவுச்சாலையில் அகப்பட்டதை உண்டுவிட்டு சென்று உறங்கியவர்கள்தான் அடுத்த நாட்காலையில்தான் கண் விழித்தோம். அட இன்று boogie ride இற்குப் போகவேண்டுமே எழுந்து அரக்கப்பறக்க காலைக்கடன்களை முடித்துவிட்டு உணவருந்திக் கொண்டோம். நாம் buggie ride இற்கு பதிவுசெய்யும்போது அவர்கள் எம்மை 10 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கும்படி கூறி தாம் அவ்விடத்தில் எம்மைப் பிக்கப் பண்ணுவதாகவும் எம்மை அழைத்துச் செல்பவர்கள் கூறியிருந்தார்கள். அதன்படி நாம் அவ்விடத்தில் 10 மணிக்கு தயாராக நின்றோம் ஒன்றரை மணிநேரக் காத்திருப்பிற்குப் பின் எம்மை ஏற்றிச் செல்ல ஒரு வாகனம் வந்து நின்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அசப்பில் நம்மூர் தட்டிவான்தான். என்ன கொஞ்சம் பெரிதாகவும் நல்ல வர்ணம் பூசப்பட்டும் இருந்த்து. மர இருக்கைகளில் அமர்ந்து மேடுபள்ளமுள்ள ரோட்டில் பயணிப்பது என்னுடைய பிள்ளைகளுக்குப் புதிய அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்கு நகைச்சுவை மிகுந்த சுவார்சியமான பொழுதாகவும் அமைந்தது. முக்கால் மணிநேரத்திற்கு அதிகமாகப் பயணித்து- buggie தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தோம் எங்களுக்கு முன்னராகவே பல வெளிநாட்டவர்கள் அங்கு கூடியிருந்தனர். எல்லோரும் கெல்மெட் சகிதம் கறுப்புக்கண்ணாடி அணிந்து மூக்கு வாய் ஆகியவற்றை கைக்குட்டையால் மூடிக்கட்டி முகமூடிக்கும்பல்போல் காட்சி அளித்தார்கள்.

அந்தத் தரிப்பிடத்தில் இருந்த கடைக்காரன் எங்களிடம் கறுப்புக் கண்ணாடி, கைக்குட்டையை வாங்கும்படி கூறினான். விலையோ எங்களை விலைபேசிவிடும்போன்று இருந்தது. அத்தோடு ஏற்கனவே எம்மிடம் அவை இருந்தன… என்ன காலையில் வெளிக்கிடும் அவசரத்தில் தொப்பிகளைத் தவிர மற்றவற்றை எடுக்கவில்லை. பக்கத்தில் நின்ற துணைவர் கண்ணாடியையும் கைக்குட்டையையும் வாங்க எத்தனித்தபோது நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன் அடுத்து வந்த 15 நிமிடத்திலேயே அது எவ்வளவு தவறு என்பதைப்புரிந்து கொண்டேன். நானும் மகளும் ஒரு ரைட்டிலும் அப்பாவும் மகனும் இன்னொன்றிலும் ஏறிக் கொண்டோம். நூற்றுக்கணக்கான boogie வாகனங்கள் ரோட்டில் வரிசையாக அணிவகுத்து ஓடி கடற்கரையை அடைந்தன இங்கே அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தக்கடற்கரையின் அழகை இரசிக்க ஆரம்பித்தார்கள்.
Punta-Cana-Beach-02.jpg

greenhat.jpg?w=584

பச்சைத் தென்னை ஓலையில் பின்னப்பட்ட தொப்பிகள், சீத்தைத்துணியில் வரையப்பட்ட வர்ண ஓவியங்கள், மரங்களை மணிகளாக அரவி எடுத்து கோர்க்கப்பட்ட மாலைகள் என கைப்பணிப் பொருட்களை அக்கடற்கரையை அண்டிவாழும் மக்கள் ஒவ்வொரு வெளிநாட்டவர்களையும் அணுகி விற்பனை செய்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் அவ்விடத்தில் நின்றுவிட்டு மறுபடியும் இந்த வாகனஅணி புறப்பட்ட்து. இப்போது முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம்.
Dune_Buggy3.jpg?1308854294

மேடு பள்ளங்கள்,பாறைகள், மணற்காடுகள், புழுதிநிலங்கள், சேற்றுமடைகள் எனச் சமாந்தரம் அற்ற வெளிகளில் த்ரிலிங்கான ரைவிங் செய்துகொண்டு சுற்றிவரும்போது ஓரிடத்தில் கொக்கோ, கோப்பி, மாமக்குவா போன்றவற்றைப்பரப்பி ஒரு கொட்டகைக்குள் கொக்கோ,கோப்பி போன்றவை பெறப்படும் விதங்கள் பற்றி விளக்கம் கொடுத்தார்கள். அந்த இடத்தில்தான் இந்த மூலிகை வேர்களின் உபயோகத்தையும் கூறினார்கள். சோடி சோடியாக வந்தவர்கள் மூலிகை வேர்களை ஊறவைத்த ‘ரம்” ஐ ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்க அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்த எமக்கு ஒரு விளாட் மாமரத்தின் காய்கள் கண்களை உறுத்தின.


வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார். அவருக்கு என்வீட்டில் இருக்கும் மாமரங்களில்தான் சிறுவயதில் மட்டுமல்ல பதின்ம வயதுகளிலும் என் பொழுதுகள் கழிந்தனவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாதித்த திமிரில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திய அவரிடம் மாமரக்கிளைகளில் அசையாமல் இருந்து அணில்களை இரசித்த கதைகளைச் சொல்லி அவரின் நிமிர்வை அடக்க விரும்பாமல் இரசித்துக் கொண்டிருக்கும்போது……. அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……





வளரும்.

பயணங்கள் முடிவதில்லை - 8

 

 

ஏழ்மைப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலாவுக்கு தனியாகச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களுடன் பணவலிமையால் சிநேகிதத்தை ஏற்படுத்தி தாம் அங்கு தரித்து நிற்கும் காலம்வரை அவர்களைத் தங்களுக்கு இசைவாக வைத்திருப்பார்கள். எல்லா ஆண்களையும் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்லாவிட்டாலும் கணிசமான அளவு தனியாகச் செல்லும் ஆண்கள் இப்படியான நிலையிலேயே அதிகமாக உள்ளனர். எம்முடைய சமூகத்தை விட மேலைத்தேச சமூகங்களில் இவை அதிகம். மூன்றாந்தர நாலாந்தர நாடுகளில் நிலவும் ஏழ்மையும் வெளிநாட்டு மோகமும் அந்நாட்டில் வறுமையில் இருக்கும் பெண்களின் மனதில் ஆக்கிரமிப்புச் செய்யும் காரணத்தால் சுற்றுலாவுக்கு வந்த ஆண்களின் ஆசைநாயகிகளாக அவர்களும் வலம் வருவார்கள். ஆகக்கூடியது 2 வாரமே. தொடர்ந்து பழையவர்கள் செல்ல புதியவர்கள் வரவு என்று அவர்கள் வாழ்க்கை நிலையற்று அந்தர வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு நிலையான வாழ்வு அமைவதில்லை. வாரவாரம் மாறும் சூழலுக்கு ஏற்ப தம்மை துரிதமாக மாற்றிக் கொள்ளும் இத்தகைய பெண்கள் (இத்தகைய பெண்கள் என்று குறிப்பிடப்படும் பெண்கள் அநேகமாக அங்குள்ள சுற்றுலா விடுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்களாக இருப்பார்கள் பார்வைக்கு மிகவும் இலட்சணமாகவும் வாளிப்பானவர்களாகவும் சிக்கென்றும் அவர்களின் தோற்றம் இருக்கும்) சந்தர்ப்பவசத்தால் தாய்மை நிலையை எட்டும்போது அவர்களுக்கு மிகப்பெரும் சோதனை உருவாகிறது. அமர்த்தப்பட்ட வேலையால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட உள்ளூரில் அவர்களைத் தெரிந்தவர்கள் சிலர் வாழ்வளிப்பதும் பலருக்கு வாழ்வே கேள்விக்குறியாக மீண்டும் மகப்பேற்றுக்குப்பிறகு மீண்டும் வேறு இடங்களில் வேலைக்கு அமர்வதும் தொடர்ந்தும் தவறுகள் நிகழ்வதுமாக அந்தப் பெண்களின் வாழ்க்கையின் ஓட்டம். அப்படியான ஒரு பெண்ணின் குழந்தைதான் இந்தத் தொடரின் கடைசியாக நான் எழுதிய வரிகளின் சொந்தக்காரி.

 

 

தந்தையை அறியாத அக்குழந்தைகள் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளிடத்தில் சிறு காகிதத்துண்டில் ஒரு சின்ன பூவின் படத்தை வரைந்து அதற்குக் கீழே "papa" என்று யாரோ எழுதி கொடுத்த நோட்டை கொடுத்துவிட்டு முகத்தைப்பார்த்தபடி நிற்கும். பயணிகளும் அதை பார்த்துவிட்டு கையில் இருக்கும் பொருட்களை அந்தப் பிள்ளைகளுக்கு பரிசாக வழங்குவர். மேலைத்தேயத்திற்கு இது பெரிய விடயமே அல்ல இதெல்லாம் சாதாரண சங்கதி. தந்தையற்ற அந்தக்குழந்தைகளின் அவலத்தை அந்தச் சுற்றுலாவுக்கு வரும் எத்தனை பயணிகள் உணர்வார்கள்? அந்தக்குழந்தைகளைப் பார்க்கும்போது மனம் கனத்தது. என்னுடைய இளையமகள் அளவு குழந்தை என் துணைவரிடம் கொடுத்த அந்த நோட்டை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது என்று முன்பு எழுதியிருந்தேன். காரணம் நிறத்தால் எங்களைப்போல் இருக்கும் அந்தக்குழந்தை papa என்ற எழுத்துக்களுடன் ஒரு பூவின் படத்தை எனது துணைவரின் கைகளில் கொடுத்துவிட்டு நின்றபோது ஒரு தடவை பூமி ஆடிப்போனதுபோல உணர்ந்தேன். துணைவரைப்பற்றி நன்றாக அறிவேன் இருந்தாலும் ஒரு ஊடலை இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்வோம் என்று மனம் சிந்தித்தது. பின்ன அங்கு போக ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு சண்டை...  ஒரு பேச்சு... ஒரு கோபம் எதுவுமே இல்லாமல் வாழ்க்கை சப்பென்று இருந்தது  கொஞ்சம் மாற்றவேண்டுமெல்லோ… இன்னும் சில குழந்தைகள் எங்களோடு வந்த மற்றைய பயணிகளிடம் இப்படியான துண்டுக்காகிதத்தைக் கொடுத்துவிட்டு பார்த்துக்கொண்டு நின்றார்கள். காகிதத்தை வைத்துக் கொண்டு சிரித்தபடியே நின்ற வீட்டுக்காரனை முறைத்தபடி தந்தையைத் தேடும் குழந்தையிடம் கையிலிருந்த சொக்லேட்களை கொடுத்து அனுப்பிவிட்டு எப்படியாவது இவரை இன்று டென்சன் ஆக்கவேண்டுமே…” என்ன இது?” நேங் என்று விழித்தார் துணைவர் சற்றும் எதிர்பார்க்காத கேள்வி. மீண்டும் என்னுடைய கேள்வி அவரைத்துளைத்தது. "அடி உனக்கு அறிவிருக்கா? யாரோ ஒரு பிள்ளை தந்ததற்கு இப்படி கேட்கிறாய்?" அவருடைய அப்பாவித்தனத்தை மனதிற்குள் இரசித்தபடி பீறி வந்த சிரிப்பை கொடுப்புக்குள் மறைத்தபடி நான் கோபமாக இருப்பதாக கொஞ்சம் நடித்தேன். தவிப்போடு அவர் என்னை சமாதானப்படுத்த எத்தனித்தார் ஆனால் என் திட்டம் தெரிந்து விட்டதுபோலும். கணக்கிலேயே எடுக்காமல் விட்டுவிட்டார்.

 

தொடர்ந்து எங்களுடைய வாகன அணி இன்னும் ஒரு இடத்தை நோக்கி சென்றது. 

 

அட எங்களுடைய நிலாவரை ஆமாம்  அதனை ஒத்த ஒரு ஆழமான நீர்நிலையை அண்மித்தோம். இதன் சிறப்பு என்ன என்றால் இது ஒரு பெரும் பாறைத்தொகுதியின் உள்ளகத்தில் அமைந்திருந்ததுதான் கிட்டத்தட்ட அந்தக்கற்பாறைகளில் இயற்கையாக அமைந்த சமாந்தர வெளிக்கு தாழ்வாகச் சென்ற பாறைப்பாதையினூடாக சென்றால் இவ்விடத்தை அடையலாம். நெடிந்துயர்நத மரங்களில் இருந்து விழுதுகள் இந்த பள்ளத்தாக்கில் படர்ந்திருக்க த்ரில்லான ஆங்கிலபடங்களின் காட்சி மனதிற்குள் ஓடியது.

 

 

கீழ்நோக்கிய பாதை மருங்கில் இரு பக்கமும் உள்ளுர் வாசிகளின் கைவேலையில் உருவாக்கப்பட்ட சிறு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அத்தோடு கிடைத்தற்கரிய  அடையாளங்களையுடைய சிறு கற்களையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள் ஞாபகத்திற்காக சிலர் அவற்றை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள் அகழ்வாராய்ச்சிக்காரர்களுக்கு உபயோகப்படும். :icon_idea:

 
 

நாம் கீழே செல்லச்செல்ல கீழிருந்து ஈரம் சொட்டச் சொட்ட பலர் மேலே வந்துகொண்டிருந்தனர்.

 

பாறைகளால் மூடிய இருளான பகுதிக்குச் செல்லும்போது 'தொபீர் தொபீர்" என்ற சத்தம் அந்த குகைக்குள் எக்கோ பண்ணிப்பண்ணி ஒலித்தது. முன்னுக்கும் பின்னுக்கும் வந்தவர்கள் மேலாடைகளை களைந்து விட்டு இந்த  புன்ரக்கானாவின் ஆழமான நிலாவரைக்குள் குதித்து நீச்சலடித்தார்கள். அந்தக் குறுகிய ஆழமான தண்ணீரில் குதித்தவர்கள் இலகுவாக தெப்பம்போல் மிதந்தார்கள். தண்ணீர் அவர்களை உள்ளே அனுமதிக்காததுபோல் தென்பட்டது இதற்கு எதேனும் விஞ்ஞான விளக்கம் இருக்கலாம். என்னுடைய புகைப்படக்கருவி அவர்களைப்படம் பிடிப்தோடு நிறுத்திக் கொண்டது.

 

இப்படி ஒரு தொடரை எழுதுவதற்கு அப்போதே நினைத்திருந்தால் சில சில்மிசக்காட்சிகளைப்பதிவு செய்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது…. சரி இங்கிருந்தும் புறப்பட்டாச்சா இனிப்புழுதிபற்றைக்காடுகள் ஊடாக மீண்டும் நாம் ஆரம்பித்த இடத்தைச் சென்றடைந்தோம். அங்கு நாங்கள் செய்த பூகி ரைட்சின் படங்களை சீடியில் பதிந்து பெற்றுக் கொண்டு விடுதியை நோக்கி பழைய தட்டி வானில் இன்னும் சில சோடிகளுடன் புறப்பட்டோம். பரட்டைத் தலைகளுடன் மண்சுமந்த மேனியராக பிள்ளைகளும் அப்பாவும் தெரிய அந்தத் தருணத்தை படம்பிடிக்கும் ஆர்வத்தில் நான் அவசரப்பட அந்தத் தோற்றத்தை படம் பிடிக்கவேண்டாம் என்று துணைவர் தடுக்க புகைப்படக்கருவி வைதவறி கீழே விழுந்து மோதியது. :o

 

இன்னும் வரும்.

 

 

பயணங்கள் முடிவதில்லை – 9

 

 

பொதுவாக வீடாக இருந்தாலும் வெளியிடங்களாக இருந்தாலும் ஏன் இந்தத் தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் சினிமா என்றாலும் சீரியல் நாடகங்கள் என்றாலும், தொலைக்காட்சி விவாதங்கள் ஆகட்டும், நாகரீகம் மேம்பட்ட இடமாக இருந்தாலும், நாகரீக வளர்ச்சி குறைந்த இடமாக இருந்தாலும் எல்லா இடத்திலும் பெண்கள் மீதான ஒரு பொதுமைக்கருத்து இருக்கிறது. பெண்கள் எதையும் திருப்திகரமாக ஏற்கும் பக்குவம் இல்லாதவர்கள் திருப்தியற்றவர்கள். இதற்காகவே வேலை மினெக்கெட்டு நிறையப்பேர் கவிதைகள் , கதைகள் , கட்டுரைகள் ,ஆய்வுகள் என்றெல்லாம் எழுதித்தளிளியுள்ளார்கள். இது எவ்வளவு தூரம் உண்மையென்பதை பார்த்தால் விகிதாசாரத்தில் குறைவான ஒரு பகுதியே இத்தகைய கருத்திற்கு உரியவர்களாகவும் விகிதாசாரத்தில் பெரும் பகுதியினர் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைபவர்களாகவும் இருப்பது கண்கூடு… என்னடா இவ பயணக்கட்டுரையையும் அனுபவங்களையும் எழுதும்போது தேவையில்லாத ஒன்றிற்குள் நுழைந்து அளக்க ஆரம்பித்துவிட்டா என்று நினைப்பது தெரிகிறது. எல்லாம் காரணமாகத்தான்.

நேற்றைய நாளின் புழுதிகுளியலை தொடர்ந்து விடுதிக்கு வந்து இரவு உணவு விடுதியில் இருந்து திரும்பும்போது சாப்பிடக்குடிக்கத் தெரியாததுகளை கூட்டி வந்து அநியாயமாக பணத்தைச் செலவழித்ததாக நொய் நொய் என்று மனுசனின் புறுபுறுப்பு என்னப்பா செய்ய இந்தச் சாண் வயித்திற்கு எங்களால இவ்வளவுதான் சாப்பிட முடியும். பிள்ளைகளோ விளையாட்டு பிராக்கில்….

 

முழு பன்றியையும், மாட்டு தொடையையும், வான் கோழியையும் வகைவகையாக சுட்டு வைத்திருந்தார்கள். பாண்வகை, பழங்கள், கேக் வகைகள், வகைவகையான அன்னவகை, தானிய உணவுகள்,யெலி இனிப்புகள் என்று ஒரு உணவுக்குவியலுக்குள் போய் நிற்கும்போதே சுட்ட இறைச்சியின் வாசனை வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. அதிக நேரம் அவ்விடத்தில் நின்றால் வயிற்றுக்குள் இல்லாத உணவு ஓங்காலிப்பாக குடலை வெளியே இழுத்துப் போட்டுவிடும் போல இருந்தது. ஒருவழியாக நாசியின் துவாரங்களின் ஊடாக சுவாசிப்பதைத் தவிர்த்து வாயால் சுவாசித்துக் கொண்டு இரண்டு அன்னாசித்துண்டுகள் ஒரு தார்ப்பூசணித்துண்டு, இரண்டு பப்பாளிப்பழத்துண்டுகள் இவற்றுடன் ஒரு துண்டுப் பாணைச் சாப்பிட்டதற்காக இரவு தூங்கும் வரை ஒரே பேச்சு….ஆயிரம் நுளம்புகள் கடிக்கும் இடத்தில் போய் படுத்திருந்தாலும் நிம்மதியாகத் தூங்கியிருப்பேன். வந்த கோபத்தில் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை போர்த்திக் கொண்டு தூங்கிப்போனேன் பக்கத்தில் பீத்தல் சீலையை வச்சு காதிற்குள் டர் டர்ரென்று கிழிச்ச சத்தத்தில கொஞ்சம் எரிச்சலுடன் கூடிய தூக்கந்தான் வந்தது.

 

 

அடுத்தநாட்காலை இனிமையாக புலர்ந்தது. இன்று வெளியே எங்கும் செல்லாமல் விடுதிக்கான உல்லாசப்பயணிகள் கடற்கரையில் கழிப்பது என்று முடிவெடுத்தோம். காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு அங்கு செல்லும் வேளையில்……இடை மறித்த முகவர் ஒருவர் சில சலுகைகள் அடங்கிய தற்சமயம் நாம் தங்கியிருக்கும் விடுதியில் இல்லாத பலவகையான சிறப்புகள் அடங்கிய ஒரு இடம் பற்றி துணைவருக்குத் தெரிவித்து அதற்குப் போக உங்களுக்கு விருப்பமா அப்படி விருப்பமானால் நீங்கள் சில விண்ணப்ப்ப் படிவங்களை நிரப்பவேண்டும் என்று கூறினார். முக்கியமாக அதன்பால் நம்மாள் ஈர்க்கப்பட வாய்ப்பிருந்தது. நாங்கள் கனடாவில் இருந்து புறப்படும் முன்னர் கூகுள் மூலம் தேடிப்பார்த்த இடங்களை பார்க்கும் எவருக்கும் இயல்பாகவே பிடிக்கும் அத்தகைய வனப்பு மிக்க படங்கள் அவை. ஆனால் நாங்கள் சென்று தங்கிய இடம் அத்தகையது இல்லை… அந்தப்படங்களுக்குரிய இடங்களைத் தேடுவதில் துணைவருக்கு ஆர்வம் இருந்தது. அவருடைய ஆர்வத்திற்குரிய அவ்விடங்களுக்கு நாங்கள் செல்லவேண்டுமென்றால் இந்த விண்ணப்பங்களை நிரப்பினாலே சாத்தியம்… ஆனால் இதில் பெரிய சிக்கலே அடங்கியிருந்தது. அதாவது மேலதிக பணத்தை நாங்கள் செலுத்தவேண்டும். முட்டாளத்தனமாக மேலதிக பணத்தைக் கொடுத்து அவ்விடத்திற்கு செல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது இருப்பதில் திருப்தியாக பிள்ளைகளுடன் அனுபவித்துவிட்டு வருவோம் என்ற என் கருத்தைக் கேட்காமலே….அதிகபடியான பணத்தைச் செலுத்தி விண்ணப்பப்படிவங்களை நிரப்பிக் கொடுத்தார். இதற்காகத்தான் மேலே எழுதினேன் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் தன்மை ஆண்களிடம் கிடையாது….. அன்றைய பகல் பொழுது இந்தப்பதிவுகளுடன் கடக்க நாங்கள் சிறப்பு சலுகைகள் பெற்று தொடர்ந்து வரும் நாட்களில் தங்கப்போகும் விடுதியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் காட்டுவதற்கு அவர்களுடைய பிரத்தியேக மினிவான் ஒன்றில் புறப்பட்டோம் நாங்கள் ஏற்கனவே தங்கியிருந்த விடுதியிலிருந்து ஒரு 5 கிலோமீட்டர் தூரத்தில் அந்த விடுதி அமைந்திருந்தது… எங்களை விடுதியைக்காட்ட அழைத்துச் சென்ற முகவர்கள் ஓரிடத்தைச்சுட்டிக்காட்டி இது சிறீலங்கன் தமிழ்ஸ் வாங்கி விட்டிருக்கும் நிலப்பரப்பு என்று காட்டினார்கள்… சிறு பற்றைகளாக நீண்ட தூரத்திற்கு சில வேப்பமரங்களுடன் அந்தப் பெருங்காணி பிரயோசனம் அற்றதாக இருந்தது…மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலாத்தளத்தை அண்மித்ததாக இருந்த அக்காணியை வாங்கியவர்கள் பயிரச்செய்கைக்குப் பயன்படுத்துவார்களா அல்லது உல்லாச விடுதிகளைக்கட்டி பயணிகளுக்குப் பயன்படுத்துவார்களா என்று மண்டைக்குள் கேள்வி குடைந்து கொண்டிருக்க… விசேட சலுகைகள் அடங்கிய புதிய விடுதிக்கு வந்திறங்கினோம்.

 

பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. இங்கு தொடர்மாடிகளாக விடுதிகள் இல்லை. ஒரு கட்டிடம் நாலு மூலைகளையும் முகப்புகளாக அமைக்கப்பட்ட புதிய கோணத்தில் அறைகள் முகப்பு காற்றோட்டமான வராண்டா, உள்ளே ஒரே சமயத்தில் இருவர் குளிக்கவும், இருவர் முகங்கழுவவும் வசதியான பெரிய குளியலறைகள், அதற்கு மேலதிகமாக யகூசி ….கோப்பி மெசின் , தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி,சோபா, இரண்டு படுக்கை அறைகள் மிக்க் கச்சிதமாக வடிவமைத்திருந்தார்கள். வெளியே எங்கு பார்த்தாலும் சோலைகள், பக்கத்தில் பயமின்றி சேர்ந்து நடக்கும் தோகை மயில்கள்… புன்ரக்கானாவிலே அமைந்திருக்கும் மிகப் பெரிய கசினோ,…. ஓ…. இது விஐபிகள் தங்கும் ஏரியா… கடற்கரையை அண்மித்த பகுதியில்

திறந்தவெளி மசாச் பார், எல்லைகள் நாலாபக்கமும் போடப்பட்ட கடற்கரைப்படுக்கைகள் அதுவும் மெத்தையுடன் கூடியவை……

1155832351.jpg

அந்த விடுதிக்கு அருகமையிலேயே இலவச இன்ரநெற் வசதிகள்….. சரி நம்ம யாழில் என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பார்ப்போம் என்று இன்ரநெட்டில் யாழைத் தேடி உள் நுழைந்தால் சுபேசும், யீவாவும் திண்ணையில் கதையளந்து கொண்டிருந்தார்கள் அப்படியே அவர்களுக்கும்  கலோ சொல்லிவிட்டு இணையத்தை விட்டு வெளியே வந்து மீண்டும் பழைய இருப்பிடத்தை வந்தடைந்தோம் இதற்குள் மதிய உணவு இன்று அப்படியும் இப்படியுமாக பெரிய அளவில் உண்ணவில்லை… நிறையவே களைத்துப்போனோம் நாளை டொல்பின் மீன்களுடன் நீந்துவதற்கு “மனாட்டிப்பார்க்”குக்கு செல்வதற்கான பதிவை முகவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு அந்த அந்தி சாயும் பொழுதில் நீச்சல் குளத்தில் இறங்கி அங்கு மற்றவர்கள் போடும் கும்மாளத்தை மிக மிக இரகசியமாக குறும்புடன் இரசித்தபடி….. நகர்த்தி முடித்தது அன்றைய நாள்.

 

 

இன்னும் வளரும்

 

பயணங்கள் முடிவதில்லை – 10

 

பெண் பலமும் பலவீனமும் அதிகம் உள்ள மானிடவிலங்கு. பலம் எது பலவீனம் எது என்பதை ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளின் இயல்புகளே தீர்மானிக்கின்றன. அதிலும் முக்கியமாக அவள் வளரும் சூழல் அவளை சிறிது சிறிதாக வனைந்து கொள்கிறது. சுற்றிலும் இருக்கக்கூடிய காரணிகள் பெண்ணின் பலத்தையும் பலவீனத்தையும் ஓரிடத்திலேயே மையப்படுத்தி விடுகின்றன. அப்படிப்பட்ட பலம், பலவீனம் வெளிப்படும் இடங்கள் அவர்களை அடியோடு சாய்த்துவிடுவதும் உண்டு. அளவுக்கதிகமாக உச்சத்தில் இருத்திவிடுவதும் உண்டு. ஆண்களின் பலவீனம் பெண்களை பலமுள்ளவர்களாகவும், ஆண்களின் பலம் பெண்களைப் பலவீனமானவர்களாகவும் ஆக்கிவிடுவதை எத்தனையோ இடங்களில் கண்டுள்ளோம். ஒரு அழகிய பெண் இலகுவாக ஆண்களை முட்டாள் ஆக்கிவிடுவாள். அப்பட்டமாக பெண்கள் சார்ந்த இளகிய மனம் படைத்தவர்கள் சில சமயங்களில் தெரிந்துகொண்டே ஏமாறுவதுண்டு. பெண்ணின் சிரிப்பிலும் பார்வையிலும் வெளிப்படும் நளினம் ரசிக்க்க்கூடியதாக இருந்தாலும் பல சமயங்களில் அவை உண்மையற்றவையாகவும் வேசங்கள் நிறைந்ததாகவும் வெளிப்பட்டு ஒட்டு மொத்தப் பெண்களையும் எதிர்பாலர் ஏளனிக்கும், இழிந்துரைக்கவும் வழிசமைத்துவிடுகிறது. ஆண்கள் நளினமாகவோ கம்பீரமாகவோ சரசப்பார்வைகளை வீசினாலும் பெண்கள் அளவுக்கு அவர்களால் வெற்றியடைய முடிவதில்லை. பெண்கள் எவ்வளவு தூரம் கவர்ச்சியாகத் தெரிகிறார்களோ அவ்வளவுக்கும் அதிகமாக அவர்களைச்சுற்றி வன்முறைகளும் பலாத்காரங்களும் இருக்கின்றன. சுய பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கும் இவர்கள் வர்த்தக ரீதியில் எப்போதும் முன்னிறுத்தி வைக்கப்படுகிறார்கள். வர்த்தக ரீதியில் சிரிக்க ஆரம்பிக்கும்போது சங்கடப்படும் பெண் கால ஓட்டத்தில் சிரிப்பையும் சரளமான கவர்ச்சியான உரையாடல்களையும் வெகு இலகுவாக செயல்படுத்தி வெற்றியடைந்து விடுகிறாள். இந்த இசைவாக்கத்திற்கு பொருளாதாரமே முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. ஒரு பெண்ணாக இருந்து பொதுவாக பெண்களை விமர்சிப்பது உங்களுக்குள் வியப்பை உருவாக்கி இருக்கலாம். இந்த இடத்தில் இதனைப்பதிவிடுவது தேவையாக இருக்கிறது.

 

இன்று நாலாம் நாள் மனட்டிப் பார்க் நுழைவாசலுக்குள் முற்பகல் 11 மணியளவில் நுழைந்தோம். பற்றுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு உள்பக்கம் நுழைய….. இரண்டு பஞ்சவர்ணக்கிளிகளுடன் வந்த அந்தப்பார்க்கின் ஊழியர் கிளிகளை எங்களிடம் தந்து படம் எடுக்கும்படி கேட்டுக கொண்டார். கையில் கமேராவை வைத்திருந்த நாமும் விசயம் தெரியாமல் கடகடவென்று பல படங்களுக்கு சிரித்து வைத்தோம். பெரிய பெரிய கிளிகளைத் தோளிலும் கையிலும் வைத்திருந்த மகிழ்வில் பின்னுக்கு வரப்போகும் செலவை உணரவில்லை. அங்கிருந்து அந்தப்பார்க்கை சுற்றிப்பார்க்கப் புறப்பட்டபோது முகப்பில் இருந்த சின்ன சின்ன கடைகளில் இருந்து விற்பனைப் பெண்களும் ஆண்களும் வெளியே வந்து ஒவ்வொரு பயணிகளிடமும் பேச ஆரம்பித்துவிட்டார்கள் அன்புத் தொல்லையாக இருந்தது அவர்களுக்கு வியாபாரம் நடக்கவேண்டும்.

 

எங்களை நோக்கியும் வலிந்து சிரித்தபடி அழகான இளம்பெண் ஒருத்தி வந்தாள். மிகவும் சிநேக பூர்வமாக என்னை அணுகி கை குலுக்கி கதை கொடுக்க ஆரம்பித்தாள். அவள் வியாபாரத்திற்காகத்தான் எம்மை அணுகுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டதால் அவள் எம்மை நோக்கி வரும்போதே தமிழில் துணைவரை எச்சரித்தேன். இளம் பெண்கள் அநேகமாக ஆண்களை நோக்கி தமது வியாபாரத்தை மேற் கொள்ளும்போது அதிகமாக வெற்றியடைவார்கள். இதற்கு எனது வீட்டுக்காரனும் விதிவிலக்கல்ல…. பொதுவாகவே யார் உதவி கேட்டாலும் எதிர்காலம் பற்றி யோசிக்காமல் தன்தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டுவதில் வல்லவரான துணைவர் பெண்பிள்ளைகள் வாயிழந்து கேட்டால் பாவம் என்று சொல்லி இரக்கம் காட்டி உதவுவதில் நம்பர் 1…. காரணம் இல்லாமல் இல்லை எனக்குத்தான் வாயிழந்து சுயம் தொலைந்து உதவி கேட்கும் பழக்கம் இல்லையே ஒரு வேளை அப்படியான குணம் என்னில் இருந்திருந்தால் மற்றவர்களுக்கு உதவுவதை அதிகம் யோசித்திருப்பாரோ என்னவோ… இருந்தாலும் தன்னிடம் பணிந்து நிற்பதில்லை என்று மனதிற்குள் குறை இருக்கும்போல… அல்லது சரியான கிறங்காதவளைக் கட்டியிருக்கிறேன் என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பாரோ என்று பல சமயங்களில் சந்தேகப்படுவதுண்டு. சொல்ல வந்த கதையை விட்டுட்டு எங்கேயோ போய்விட்டேன்.. என்னுடைய எச்சரிக்கையை உள்வாங்கிக் கொண்டவர் எங்கேயோ வேடிக்கை பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தார்.. அட நம்மை நோக்கிவந்த பெண் புத்திசாலியா அல்லது நம்மைப் போல குணஇயல்பு உள்ளவளா என்று தெரியவில்லை நேரே என்னிடமே வந்து சிநேகமானாள். இந்தாளை ஒரு மனிதனாகவே திரும்பியும் பார்க்கவில்லை. நிறைய பண்பானவளாக இருந்தாள் அவளுடைய ஒவ்வொரு மூமென்டும் எனக்குப் பிடித்துப் போயிற்று. அலைபாயும் கண்களையோ, அலைக்கழிக்கும் சிரிப்பையோ அவளுடைய அழகான முகம் வெளிப்படுத்தவில்லை. மிக நாகரீகமான புன்முறுவல் சிநேகமான பார்வை.. ஓகே அவளுடைய அந்தப் பண்புக்காக அவளிடம் பொருள் ஏதேனும் வாங்குவது என்று தீர்மானித்துக் கொண்டேன். அவளின் கடைக்குள் நுழைந்து பொருட்களைப் பார்வையிட்டு இரண்டு மிக மெல்லிய வெள்ளிச் செயின்களை எடுத்துக் கொண்டேன். மனாட்டி பார்க்கின் ஞாபகார்த்தமாக இரண்டு மாபிள்களால் உருவமைக்கப்பட்ட குட்டி டொல்பின் பென்ரன்களைத் தந்து அதில் பெயர் வரைந்து தரவா என்று கேட்டாள். இரண்டு பெண் பிள்ளைகளின் பெயர்களையும் பதிவிட்டு எடுத்துக் கொண்டேன்.

 

தொடர்ந்து சில பறவைகளுக்கான சரணாலயப் பகுதிக்குள் சென்றோம். அதிகமாக எதுவும் இருக்கவில்லை. தொடர்ந்து ஆதிவாசிகள் குடியிருப்புப் பகுதிபோல் அமைக்கப்பட்ட ஒரு வலயத்தை வந்தடைந்தோம். ஆதிவாசிகளாக வேடமிட்ட ஒரு குழு அங்குவந்த சுற்றுலாப் பயணிகளுடன் நின்று படங்கள் பிடித்துக் கொண்டார்கள். கையில் கமேரா இருந்தபடியால் நாம் அதனைத் தவிர்த்துக் கொண்டோம் அப்படி இருந்தும் அவர்கள் விடுவதாக இல்லை… படம் எடுப்பது பிரச்சினை இல்லை  3 படங்கள் 20 அமெரிக்க டொலர்கள் அதற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திற்கும் 6 டொலர்கள் என்று செலவு ஏறும். அதைவிட அங்கு தண்ணீர் உணவு இப்படியாக நிறைய செலவு செய்வதற்கான விடயங்கள் இருந்தன.

 

இந்த ஆதிவாசிகளைப் பார்த்ததும் என்னை அறியாமலே யாழ்களத்து ஆதிவாசியும் எல்லாளமகாராசனும் நினைவுக்கு வந்துவிட்டார்கள். எப்போதோ இவர்கள் எழுதிய வேர்கட்டி ஆடும் ஆதிக்குடியினர் படங்களையும் அலப்பரைகளையும் வாசித்த ஞாபகம். ஆதிவாசிகளின் நடனம் தொடங்கிவிட்டது நிழற்படங்களை எடுப்பதற்காக காத்திருந்த வேளை திடீரென்று கிளிப்பில் எடுத்தால் என்ன என்று எண்ணம் தோன்ற அவர்களின் ஆட்டத்தை அப்படியே பதிவு செய்து கொண்டேன். இது ஒன்றைத்தான் ஆதிவாசிக்காக யாழில் போடுவதற்கு எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டேன்.

 

 

இன்னும் வளரும்

 

 

 

பயணங்கள் முடிவதில்லை -11

 

ஆதிக்குடியினரின் நடனத்தை இரசித்த சுற்றுலாப்பயணிகள் பலர் முறுக்கேறிய அந்த ஆட்டத்தை தாமும் ஆட ஆரம்பித்தனர். இடம் வலமாக அகப்பட்டவர்கள் கையை இழுத்து அவர்கள் ஆடிக் கொண்டிருக்க நாம் அவ்விடத்தை விட்டகன்று டொல்பின் மீன்களின் விளையாட்டுத்திடலுக்கு வந்து சேர்ந்தோம். ஏற்கனவே பேசி இருந்தபடி டொல்பின் மீன்களுடன் நீச்சலில் ஈடுபடுவது என்று அதுவரை நேரமும் உற்சாகமாக இருந்த பிள்ளைகள் இப்போது பயத்துடன் பின்னடிக்க ஆரம்பித்து விட்டார்கள். சரி படமெடுப்பதற்காகவேணும் டொல்பின் நீந்தும் தடாகத்தில் இறங்குமாறு அழைத்தால் அவர்கள் கதறி அடித்துக்கொண்டு எட்டத்தில் போய் நின்று கொண்டார்கள். சரி அவர்களின் அச்சத்தை அதிகரித்து அந்தப் பொழுதை பாழாக்க விரும்பவில்லை.  டொல்பின் மீன்களின் விளையாட்டுத் திடலின் பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டோம். அவ்விடத்தில்

 

பயிற்றப்பட்ட 2 seals அழகாக மனிதர்களின் ஏவலுக்கு ஏற்றபடி தம்மை இயக்கின. தொடர்ந்து மிகப் பெரிய மாமிச மலையாக அவ்விடத்திற்கு ஒரு Walrus ஒன்றை அவ்விடத்திற்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட 9 அடி நீளமாகவும் எடை.. 900 கிலோக்களுக்கு அதிகமாக இருக்கும்போல் இருந்தது. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அப்பிராணி அவர்களின் சொற்படி அவர்கள் ஆட்டுவிக்கும் திசைக்கு நகர்ந்தும் உருண்டும் நடந்தும் பயணிகளை மகிழ்வித்தது. அதனுடைய அத்தனை அசைவுகளையும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகளை நோக்கி அதனிடம் முத்தப்பெற்றுக் கொள்ள விரும்புபவர்களை அழைத்தார்கள். இதற்காவது போங்கோ என்று நம்ம ஆட்களை கலைத்து விட்டு படம் எடுப்பதற்கு தயாராக காத்திருந்தேன்… அருகில் சென்றதும் மலைபோன்ற அப்பிராணிக்கு அருகாமையில் செல்லமாட்டோம் என்று அழ ஆரம்பித்துவிட்டார்கள் பிள்ளைகள்.

Male-Atlantic-walrus-resting-on-beach.jp

தொடர்ந்து வரிசையில் பலர் காத்திருக்க… மற்றையோரின் வேண்டுகோளுக்காக பயங்கரமாக நடுங்கியபடி என்வீட்டுக்காரன் அந்த பிராணியின் அழகான :lol:    முத்தத்தைப் பெற்றுக் கொண்டு எனக்கு அருகாமையில் வந்தமர்ந்தவரின் கைகளை பற்றிப் பார்த்தேன் இன்னும் நடுக்கம் குறையாமல் அதிர்வதை உணரக்கூடியதாக இருந்தது. முத்தம் எப்படி கிண்டலாக கேட்ட என்னை முறைத்துவிட்டு உன்னைவிட அது பரவாயில்லை என்று வாய்க் கொழுப்புடன் பதிலளித்து விட்டு இன்னும் பதறிக் கொண்டு நிற்கும் அவரைப்பார்க்க சிரிப்புத் தாங்க முடியவில்லை. அந்தப்படத்தை இணைத்தால் நீங்களும் சிரிப்பீர்கள் பட் தனிப்பட்ட படங்களை இணைக்க விரும்பவில்லை. நீங்கள் கற்பனையில் அக்காட்சியை பார்த்து சிரித்துக் கொள்ளுங்கள்.

 

தொடர்ந்து டொல்பின்கள் தங்கள் விளையாட்டுக்களைக் காட்ட நாங்கள் அமந்ந்திருந்த திடலின் மையத் தடாகத்திற்கு அழைத்து வரப்பட்டன. அரைமணி நேரம் அவைகளின் அட்டகாசமான விளையாட்டுக்கள் நடந்தன.

 

1301988647EX7U7y.jpg

மிக அருகாமையில் அமர்ந்து அதனை இரசிக்கும்போது மயிர்கூச்செறிந்த்து. மனித விலங்குகள் அந்த கடல்வாழ் உயிரினத்தின் குறும்புகளில் தம்மை மறந்து கிடந்த அற்புதக்காட்சி மறக்க முடியாதது.

 

 

 

அன்றைய மாலை வரை மனட்டி பார்க்கில் கழித்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். முன்னிரவு பொழுதை கடற்கரை மணலில் பிள்ளைகளை விளையாட விட்டுவிட்டு அமர்ந்து கொண்டோம். ஆரவாரமற்ற அமைதியான பொழுதில் அந்தக்கடலைப் பார்க்கப் பார்க்க துக்கம் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. “என்னுடைய தாயகத்தில் இல்லாத வளங்களா?.....

 

tumblr_m3gm2lIKaM1r3a6jho1_500.gif

இப்படி பரிச்சயம் இல்லாத ஏதோ ஒரு நாட்டில் கடலில் கால் நனைத்து மணலில் புதைத்து தொலைந்து போய்விட்ட பழைய நாட்களை நினைவு கூர்ந்து மனதில் குமுறி உலகம் என்ற பரப்பில் மிகக் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட இனமாக உலகெங்குமாக சிதறிய உறவுகளாய் வாழும் இடங்களில் தனித்தீவுகளாய்……” அந்தக்கடலின் ஒவ்வொரு அலைகளும் மறக்காதே மறக்காதே என்று கோபத்தோடு இரைவாதாக பட்டது. இதுநாள் வரை பேசிக் கொள்ளாத நிறைய சிறுபிராயக்கதைகளை நாம் இருவரும் பகிர்ந்து கொண்டோம். பேசவிரும்பாமல் இதுவரைகாலமும் எனக்குள் ஒளிந்திருந்த ஒருத்தி தைரியமாக வெளியே உலவ ஆரம்பித்தாள். பாவம் துணைவர் தாங்கிக் கொண்டார். மிகவும் தெளிவானதாகவும் மனப்பாரங்கள் குறைந்த பொழுதாகவும் அன்றைய இரவு கழிந்தது.

மறுநாட் காலையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி bavara Princess இற்கு மாறிக் கொண்டோம். மதிய வேளையில்… கணனியில் யாழ்க்களத்தை எட்டிப் பார்த்தேன். யாழின் உறுப்பினர் அர்யூனின் தாயார் காலமாகிய துக்கமான செய்தி இருந்தது. அர்யூனின் அம்மா ஒரு ஆசிரியர். கனெடிய வானொலிகளில் 90 களின் மத்திமத்தில் மிகவும் தெளிவான கருத்துரையாடல்களுக்குச் சொந்தக்கார்ர். ஒரு நாளும் அவரை நான் நேரே கண்டதில்லை இருப்பினும் அவருடைய ஆக்கங்கள் கருத்துக்கள் எப்போதுமே நான் விரும்பி வானலைகளில் கேட்கும் விடயங்களாக இருந்தன. அவருடைய இறுதி நிகழ்வில் நான் கனடாவில் இல்லாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாமல் போனது. மற்றைய யாழ் உறவுகள் போனார்களா இல்லையா என்று தெரியாது. துயர் பகிர்வோம் பகுதியில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துவிட்டு திண்ணையில் நின்றவர்களுடன் பேசிவிட்டு விடை பெற்றுக் கொண்டேன். ஒன்று புரிந்தது இப்படித்தான் முன்பு 2010 இல் தாயகத்தில் போய் நின்று கொண்டும் யாழுக்கு வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் தனியார் கணனி நிலையங்களுக்குச் சென்று செய்திகளையும் நண்பர்களின் கும்மாளங்களையும் வாசித்துச் செல்வேன். அங்கிருந்து உறுப்பினர் பதிவுக்குள் உள் நுழைவது தேவையில்லாத சிக்கல்களை தரும் என்பதால் வேறு பெயரில் ஒரு முறை திண்ணையில் வணக்கம் சொல்லிவிட்டு போயிருக்கிறேன். இதில் இருந்து என்ன தெரிகிறது. ஒரு காலமும் …….. மாட்டோம். இடைவெளியை உங்கள் சிந்தனைக்கேற்ப நிரவிக் கொள்ளுங்கள்.

 

yarl_logo.gif

 

சரி இதற்குள்ளும் யாழா என்று நீங்கள் கேட்பது விளங்குது. சரிசரி மன்னித்துக் கொள்ளுங்கள். புதிய இடம் நிறைய வசதிகள் உயர்வகையான மதுபானங்கள், சிறப்பான உணவுச்சாலைகள் முக்கியமாக சைனி, இத்தாலியன், நாள் முழுவதும் சுடச்சுட கிடைக்கும் உணவுகள்  வசதிகள் என்பது மிகப்பருத்த அளவில் இருந்த்தும் இவ்விடத்தில் மறுக்க முடியாது. இதில் ஒரு விடயம் இங்கு வந்த பின் மிகப் பெரிய அளவில் அசடு வழிந்ததும் இவ்விடத்தில்தான். இங்கு உள்ள சிறப்புச் சலுகைகளில் உயர்வகையான வெளிநாட்டுக் குடிவகைகளும் உள்ளடக்கம். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் அந்த இடத்தில் மதுவைப் பெற்றுக் கொள்ளலாம். என்னுடைய வீட்டுக்காரன் பிளாக் லேபலை பணிப்பெண்ணிடம் பெற்றுக் கொண்டு அறைக்கு வரும்போது கூறினார் தான் மறுபடியும்போய் கேட்டால் சரியில்லை நீ உன்னுடைய பங்காக அதனைப் பெற்றுகொண்டு வா என்றார். சரி இன்னும் ஒரு நாள்தானே இருக்கிறது. வாங்கிக் கொடுத்தால் நான் குறைய மாட்டேன் என்ற எண்ணத்தில் அங்கு போய் அந்தப் பெண்ணிடம் எனக்கும் மது தரும்படி கேட்டேன். அவள் எந்த மது வேண்டும் என்று கேட்டாள். நானும் செம நிமிர்வாக பிளாக்லேபில் என்று சொல்லி அதனைச் சுட்டிக்காட்டினேன். அவள் சிரித்தபடியே அது ஆண்கள் அருந்துவது உனக்கு எது வேண்டும் என்றாள். நானும் சளைக்காமல் வீட்டுக்காரன் பார்ட்டிகளில் அருந்தும் ஒவ்வொரு பானமாக்க் காண்பித்தேன் அவளும் சளைக்காமல் எல்லாம் ஆண்களுக்கு உரியது என்று சொல்லிச் சிரித்தாள். ஐடியாத் தந்துவிட்டுப் போன வீட்டுக்காரன் மேல் பயங்கர ஆத்திரம் வந்தது. பணிப் பெண் வெளிப்படையாக இது உனக்கா அல்லது வேறு யாருக்கேனும் எடுக்க வந்தாயா? என்றாள்…. நானும் விட்டுக் கொடுக்காமல் எனக்குத்தான் என்றேன். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்களே… அதைப்போல…. சரி பெண்கள் அருந்துவதில் பெட்டர் எதுவோ அதைத் தா என்றேன் ஏதோ ஒன்றை வார்த்துத் தந்தாள்..

cocktails.jpg

 

 

அருந்திப் பார் முதலில் பிடித்திருந்தால் அதிகம் ஊத்தித் தருகிறேன் என்றாள். என்ன கொடுமையடா சரவணா…. பொறியில் மாட்டிய எலியானேன்.

 

free-cheese-mousetrap-funny-cartoon.jpg

 

 

இன்னும் வளரும்

 

ணங்கள் முடிவதில்லை – 12

 

அப்பணிப்பெண் என் கண்களில் தடுமாற்றத்தையும் கலவரத்தையும் கவனித்திருப்பாள்போல்… ஒரு வில்லத்தனமான தந்திரம் மிக்கச் சிரிப்புடன் ஒரு கிளாசில் அவள் ஏதோ தேன் கலந்த ஒரு மதுபானத்தை ஊற்றி வெறுமனே தந்தாள்… எடுத்த காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும்….. அவளிடம் தோல்வியைத் தழுவ மனம் இடங்கொடுக்கவில்லை. அவள் தந்த்தை அப்படியே வாங்கி ஏற்கனவே மதுவில் பரிச்சயம் உள்ளவள்போல் காட்டிக் கொண்டு ஒரே கவிழ்ப்பில் வாய்க்குள் நிறைத்துக் கொண்டேன். வாய்க்குள் நிறைந்த மது தனது வேலையை உடனேயே காட்ட ஆரம்பித்தது. வாய்க்குள் நிறைந்த மதுவின் ஒரு வித காரமான நெடி நாசி யூடாக மண்டைப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து புகைச்சலை உருவாக்கியது. அடிவயிற்றிலிருந்து குமட்டல் எழுந்து அவதிப்படுத்திக் கொண்டிருக்க பணிப்பெண் என்னை மிகவும் இரசிப்பது தெரிந்தது. சே வீம்புக்கு தேவையில்லா சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு ஒரே மடக்கில் கச்சல் வேப்பெண்ணெயை விழுங்குவதுபோல் விழுங்கித் தள்ள மண்டைப் புகைச்சலும், வயிற்றிலிருந்து எழுந்த குமட்டலும் உள்ளே போன மதுவை அதைவிட வேகமாக வெளியே அனுப்பி வைத்த்து. சிதறி விழுந்த மதுவை மொப் தடியை எடுத்து சுத்தஞ்செய்து கொண்டே உனக்குப் பழக்கமில்லையா என்று கேட்டாள் பணிப்பெண்……. இப்போது தன்னும் உண்மையை ஒத்துக் கொள்ளலாம்தானே.. ஊகூம் இவளிடம் எப்படி?... அப்போதுதான் ஞாபகம் வந்த்து எல்லோருமே மதுபானத்தில் சோடா அல்லது பனிக்கட்டி இல்லது தண்ணீர் கலந்தல்லவா அருந்துவார்கள். நான் அப்படியே வாயில் கொட்டியதால்தான் இப்படியாகி இருக்கவேண்டும்…… கைகொடுத்த ஞாபகத்தை உபயோகித்து நீ எனக்கு சோடா கலக்காமல் தந்துவிட்டாய் அதனால்தான் இப்படி என்று விட்டு இப்போது எனக்கு சுவை பார்க்கத் தந்ததை எனக்கு விட்டுத் தா நான் அறைக்குச் செல்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன்.

வாயில் ஏற்கனவே கொப்பளித்த மதுவின் நெடி அந்தரத்தில் நடப்பதுபோன்ற பிரமையை உண்டாக்கியது. தங்கியிருக்கும் அறைக்கு வருவதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கொண்டு வந்த பானத்தை துணைவர் கையில் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். நான் சொன்னதை விட்டுட்டு நீ எதை எடுத்து வந்தாய் என்று வீட்டுக்காரன் கேட்டது காதில் விழுந்தது.. இவரைப் படிப்பிக்க வேண்டும் என்று கருவிக் கொண்டு அது மிகவும் உசத்தியானது என்று ஆண்களுக்கு நல்லது என்று பணிப்பெண் சொன்னாள் அதுதான் இதனை வாங்கி வந்தேன் என்று  விட்டு காத்திருந்தேன். ஐயா அருந்து; வரை அவ்விடத்தை விட்டகலாமல் சாய்ந்திருந்தேன். ஒரு வாய் அருந்தியவர் உடனேயே துப்பிவிட்டார் என்னடி தேனை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்டு விட்டு அப்படியே கொண்டுபோய் சிங்கிற்குள் ஊற்றிவிட்டு வந்தார். அட தேனையா நான் சுவைபார்த்துவிட்டு இப்படி கிறங்கிப்போய் இருக்கிறேன்?????? எண்ணம் தந்த போதைதான் என்னை இப்படி திணற வைக்கிறதா? சட்டென்று எழுந்து கொண்டேன்…. உண்மைதான்… இருந்தாலும் மதுவின் சாரம் சிறிது தெரியத்தான் செய்த்து… இது சரிவராது போய் நல்ல தோய்ச்சல் அடித்தால்தான் பெட்டர் என்று தோன்றியது.

எந்த ஒரு நாடாக இருந்தாலும் அதற்கென்று பிரத்தியேகமாக கலைவடிவங்கள் இருக்கும் அதற்கு இவ்விடமும் விதிவிலக்கல்ல. இங்கும் ஒவ்வொரு நாளும் முன்னிரவுப்பொழுதில் அதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அரங்கங்களில் கலை நிகழ்வுகள் இடம்பெறும் இன்று மலையில் அவ்விடம் செல்வது என்று முடிவெடுத்துக் கொண்டோம். அதற்காக சில மணி நேரங்கள் இருந்தன. சரி அதற்கு முன்னர் நாம் தங்கியிருக்கும் விடுதியின் சுற்றுப்புறச்சூழலை பார்த்துவரலாம் என்று புறப்பட்டோம். வாவ் எத்தனை மயில்கள் என்ன அழகு….. கலோ ஒருத்தரும் எடக்கு முடக்காக யோசிக்கவேண்டாம்.

peacock-family.jpg

பசுமை நிறைந்த இயற்றை வனப்புப் பொருந்திய அவ்விடத்தில் மயில்கள் மனிதர்களைச் சிறிதளவும் சட்டை செய்யாமல் உலவின. வழமையாக மனிதர்களைக்கண்டால் பறவைகள் பறந்துவிடும் அல்லது விலகிவிடும் இவையோ முற்றிலும் மாறாக நம்மூர் காக்கைகள் நம்மோடு அங்கலாய்ப்பதுபோல் நாம் வாழும் தேசத்தில் புறாக்கள்  நம்மோடு மொய்ப்பதுபோல் இந்த இடத்தில் வனப்பு மிக்க மயில்களும் அவற்றின் குஞ்சுகளும் சூழ்ந்து திரிந்தன. தாயகத்தில் ஒரு காலத்தில் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம் அது…., அக்காலத்தில் திருக்கேதீச்சரத்திற்கு என்னை என்னுடைய பேரன் அழைத்துச் சென்றிருந்தார். அது ஒரு சிவராத்திரி தினத்தை ஒட்டிய நாட்கள் அங்குள்ள மடத்தில் பதிவு செய்து தங்கியிருந்தவேளையில் அதிகாலையில் அகவல் ஒலியிலிருந்து இரவு உறக்கப்போகும்வரை மயில்களும் மந்திகளும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருக்கும் பிரதேசமாக இருந்தது அத்தலம். அங்கு தங்கியிருந்து மயில்களை அருகே அவதானித்த விடயத்தை மீண்டும் பாடசாலை வந்தபோது தோழிகளிடம் கதைகதையாக சொல்லி புளகாங்கிதம் அடைந்த நாட்கள்…. எல்லாம் ஞாபகத்தில் வந்து உலாவியது. அண்மையில் அதே திருத்தலத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் சென்றபோது வெறுமை மட்டுமே மீந்து போயிருந்தது. மயில்கள் உறைந்த பெருமரங்கள் எதுவும் அங்கில்லை. வெறும் கானலாக, பாலாவி தேங்கிய குட்டையாக… பசுமையற்ற நிலையில் வெம்மை தின்ன அந்த நிலம் வரண்டிருந்தது. ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளியில் இராணுவக்காவரண்கள் மட்டும் அந்த தருகள் அற்ற வெறுமைப்படுத்தப்பட்ட மண்ணில் முளைவிட்டிருந்தன. மன்னார் வவுனியா பாதையில் இராணுவ அரண்களைப்பார்த்த அளவுக்கு மக்களைக்காணவில்லை. இவற்றைத் தரிசித்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன இப்போது எப்படியிருக்கிறதோ????

 

எப்படித்தான் எங்கு நின்றாலும் காட்சிகளும் சிந்தனையும் அசுரவேகத்தில் அங்குதான் போய் நிற்கின்றன. மயில்களையும் அவற்றின் திமிர்த்த நடையையும், அகவலையும் மீண்டும் ஒரு முறை நெருக்கமாக நின்று இரசிக்க முடிந்தது. இங்கு இன்னுமொரு காட்சி என்னை வியப்பிற்குள்ளாக்கியது

 

அசப்பில் பனையைப்போல் ஆனால் உயர்ந்து ஓங்கி வளர்வதோ அல்லது நுங்கு பனங்காய் என்பதோ இன்றி இருந்தது. உயரத்தால் உருவத்தால் எல்லாம் மிகச்சிறிய வடிவில் அழகாக இருந்தது. நம்ம சொந்தப்பிள்ளை கற்பகத்தருவின் உறவினரைப்பார்த்த மகிழ்ச்சி மனதில் தோன்றியது. இப்படியே அங்கிருந்த மரங்கள் செடிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த பறவைகள் சரணாலயம் என்பனவற்றைச் சுற்றிவிட்டு ஒரு முறை நீச்சல் தடாகத்தில் அமிழ்ந்து எழுந்து வர கலை நிகழ்வுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது. 3 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதில் நம்மாளுக்கு உடன்பாடு இல்லை கலைகளில் ஈடுபாடில்லாத ஒருத்தியை மணந்திருந்தால் அவருக்கேற்றால்போல் இருந்திருக்கும் தப்புப்பண்ணிட்டாரே… நாங்கள் இருந்த அரங்கிற்கு அருகாமையில்தான் புன்ரக்கானாவின் மிகப்பெரிய கசினோ அமைந்திருந்தது. அதனைத் தரிசிக்கும் ஆவல் அங்கு வந்த நாளிலிருந்து அவருடைய மனதில் ஓடிக்கொண்டே இருந்தது என்று நான் இப்போது சொல்லத்தேவையில்லை முன்னர் நான் எழுதியவற்றிலிருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

grand_palladium_palace_resort_and_spa_al

நாளையுடன் பயணம் முடிகிறது அதற்குள் அங்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக உந்த என்னுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு 20 டொலர்களை கையில் எடுத்துக் கொண்டு பர்சை என்னிடம் தந்துவிட்டு கசினோ செல்வதற்கு புறப்பட அந்நேரம் கலைநிகழ்வுகளும் ஆரம்பமாகியது. புறப்பட்டவர் என்ன நினைத்தாரோ அப்படியே அரங்கின் ஓரமாக நின்று நிகழ்வுகளை இரசிக்க.. அவர் எங்கு நிற்கிறார் என்பதை கவனித்துக்கொண்டே அரங்கில் சல்சா நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர்களின் துரித அசைவில் ஆழ்ந்து போனேன்.

theater-occidental-grand-punta-cana-v341

நிகழ்வு முடிந்து வெளியே வர கையில் வைத்திருந்த 20 டொலர்களை தந்து தான் போகவில்லை என்றார். எனக்குத் தெரியும் அவ்விடத்தில் எங்களைத் தவிர்த்து தனியே செல்ல அவரால் முடியவில்லை. பாசக்காரன். அனுமதி கிடைத்தாலும் மனச்சாட்சி உறுத்திவிட்டது.

 

இரவு 10ஐத் தாண்டிக் கொண்டிருந்தது அங்கிருந்த முகப்பு மண்டபத்தின் சோபா ஒன்றில் சாய்ந்து அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். நாளை ஒருநாள்தான் என்ன செய்யலாம் என்று கலந்து பேசி எங்கும் செல்வதில்லை கடற்கரை நீச்சல்தடாகம் அறை பயண ஆயத்தம் என்று மட்டுப்படுத்திக் கொண்டோம். நாளையுடன் இந்த சுற்றுலா முடிவடைந்துவிடும் என்ற உணர்வுடன் இருக்கும் பொழுதை முற்றுமுழுதாக விளையாடிக் கழித்துக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகள். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி அவர்களை கவனித்துக் கொண்டிருந்த எங்களை அண்மித்த பணிப்பெண் கையில் மது இருந்தது. அதனை நம்மாள் ஏற்கனவே கேட்டிப்பார்போல்….. என்னுடன் இயல்பாக சிநேகமாகக் கதைத்தபடி ஏதாவது அருந்தப்போகிறாயா என்று கேட்டாள் பிள்ளைகளுக்குப் பிரியமான கொட் சொக்கிலேட்டையும் எனக்கு அன்னாசி பழரசத்தையும் தரும்படி கேட்டபோது… இந்த இடத்தின் சிறப்புப் பானத்தை அருந்தியிருக்கிறாயா என்று கேட்டாள் இல்லை என்று நான் கூற தான் அதனைச் சுவையாக உனக்கு எடுத்துவருகிறேன் என்று போனவள் அடுத்த 5 ஆவது நிமிடத்தில் பிள்ளைகளுக்கு கொட் சொக்லேட்டையும் எனக்கு கொக்ரெயில் என்னும் பானத்தையும் கொண்டு வந்து தந்துவிட்டுப்போனாள். பார்க்க விதவிதமான வர்ணங்களுடன் இருந்த அந்தப்பானத்தைக் கொக்ரெய்ல் என்று கூறுவார்கள் என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன்.

signature-cocktails-drinks.jpg

அங்கு உலவிக் கொண்டிருந்த பலரின் கைகளில் இவற்றை ஏற்கனவே கண்டிருந்தாலும் அதனை அறியும் ஆர்வம் ஏற்படவில்லை. இப்போது அதைக் கைகளில் வைத்து வர்ணத்தைப் பார்த்தபடி வரி வரியாக இருந்த ஒவ்வொரு வர்ணத்தில் மேலும் உறிஞ்சும் குழாயை வைத்து சுவை பார்த்தேன். என்ன ஒவ்வொரு பழரசங்களையும் படிப்படியாக திரவவரிகளில் அழகாக இருந்தது…. ஐயய்யோ பழரசங்களின் நடுவே மது… அவ்வளவுதான் அதை அப்படியே கீழே வைத்துவிட்டேன். நல்லகாலம் எல்லாக்கலவையையும் கலந்து குடித்திருந்தால் என்ன நிலமை? அங்கு வேலை செய்யும் பணிப்பெண்கள் சரியான குசும்பிகள் போல,…. வெற்றுக் குவளையை எடுக்க வந்தவள் அதற்குள் இருக்கும் பானத்தைப் பார்த்துவிட்டு உன் மனைவிக்கு இதைப்பருகத் தெரியாதா என்று கேட்டுவைத்துவிட்டு சென்று விட்டாள். பிறகென்ன பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைதான் மறுபடியும் நொய் நொய் என்று கிளம்ப இருங்கோ வாறேன் என்று போய்  ஒரு கிளாசில் ரெட் வைனை வாங்கிக் கொண்டு வந்து நம்மாளுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். நாளைக்கு மைக்கிரென் தலைக்குத்து வந்தால் என்ன நடக்கும் தெரியுந்தானே என்று விட்டு அன்றைய முற்பகலை நினைவில் கூர்ந்து சிறிது சிறிதாக உறிஞ்ச ஆரம்பித்தேன். அறைக்குச் செல்லலாம் என்று பிள்ளைகளை அழைத்தால் அவர்கள் அம்மா இன்று மட்டுந்தானே கொஞ்ச நேரம் விளையாடப்போகிறோம் என்று கொஞ்சல் கெஞ்சல் விட்டு எட்டவாக ஓடினார்கள். அப்பாவுக்கும் அறைக்கு வந்து அடைபட விருப்பமில்லை. சிறிது நேரம் சென்றது ரெட் வைனை அருந்தினால் சும்மா கம்மென்று இருக்கவேண்டியதுதானே. பாழாப்போன மமக்குவா போத்தலும் வேர்களும் அப்போதா ஞாபகம் வரவேண்டும். அது என்ன வேர்? அது அருந்தினால் என்ன செய்யும் என்று அடுக்கடுக்காக கேள்விகளை நம்மாளிடம் கேட்டுத் தொலைக்க எனக்கும் அது பற்றி வடிவாத் தெரியாது இங்கு யாரிடமாவது விசாரித்துப்பார்ப்போம் என்று விட்டு அங்குள்ள பணியாளரிடம் விசாரித்து வந்தார். கிட்டத்தட்ட உற்சாகபானம் என்பது போல சொன்னார். அட பரவாயில்லையே உற்சாகபானம் என்றால் அருந்திப் பார்க்கவேண்டும். அருந்துவதென்றால் அதில் அந்த காய்ந்த வேர்களுக்கு வெந்நீர் ஊற்றவேண்டுமா என்று கேட்க நம்மாள் சிரித்துக் கொண்டே அதற்கு ரம்மும் தேனும் வேண்டும். என்று விட்டு சரி நாங்கள் விடுதிக்குச் செல்வோம் என்று பிள்ளைகளை அழைத்துவந்தார். வரும் வழியில் எனக்கு ஒரே குடைச்சலாக இருந்தது… நம்ம அறையில் ஒரு ரம் போத்தலை வைத்திருக்கிறார்கள் அதை இந்தப் போத்தலுக்குள் விட்டு வைத்தால் சரிதானே… என்று நிறைய அலட்டி இருப்பேன் போலும். வந்த சிறிது நேரத்தில் பிள்ளைகள் உறங்கிவிட்டார்கள். நானும் இவரும் வெளியே வரண்டாவில் உள்ள பிரம்பு நாற்காலியில் இருந்து அந்த கடற்கரைக்காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தோம் இருந்தாலும் நாளையுடன் இந்தப்பயணம் நிறைவு பெற்றுவிடும் என்ற எண்ணம் குழந்தைத்தனமாக எனக்குள்ளும் தொற்றிக் கொண்டது. அதற்குள் இந்த பானம் பற்றி அறிந்து விடவேண்டும்… எல்லாம் ரெட் வைன் செய்த வேலை…. அறைக்குள்ளே போய் ரம் போத்தலையும் மமக்குவா மூலிகைகள் அடங்கிய போத்தலையும் எடுத்து வந்து திருகித் திறக்க முற்பட்டேன். நம்மாளுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை விழுந்து விழுந்து சிரித்தார்… இவர் ஏன் சிரிக்கிறார் என்பது விளங்காமல் முழிக்கும்போது அந்தப்பானம் எதற்காகப் பயன்படுத்துவது என்று சொன்னார் பாருங்கப்பா….. :blink: ஆடிப்போய்விட்டேன். :o  விடயம் தெரியாமல் ஆர்வப்பட்டு, கூனிக்குறுகி போன நிமிடத்தில்……. கைகளில் இருந்த அந்த மூலிகைப்போத்தல் என்னைப்பார்த்து  ஏளனித்திருக்கும். அசடு வழிய அவற்றைக் கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டு திரும்பி வந்தபோது அட நம்மாளைப் பார்க்கவே கண்களை நிமிர்த்த முடியவில்லை. ரொம்ப இரசித்திருப்பார்போல் மெல்ல அருகில் அந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டார். சரி சீன் முடிஞ்சுது.

 

மறுநாள் சிறப்பாக ஏதுமின்றி இருந்தாலும் முந்தைய இரவுச் சம்பவங்கள் என்னை நாணப்படுத்தின. பயண ஆயத்தங்கள் செய்யும்போது கையில் அகப்பட்ட காய்ந்த வேர்கள் அடங்கிய மூலிகைப் போத்தலை மெல்ல எடுத்து அந்த அறையின் அலமாரி மூலையில் வைத்தபோது அதையும் பெட்டியில் வை என்றார். விடயம் அறியாதபோது இலகுவாகத் தொட்டு திருப்பித் திருப்பி பார்த்த போத்தலை இப்போது தொடவே கூசியது. எடுத்து வை என்றபோது நான் அவதானிக்காததுபோல் அவ்விடத்தை விட்டு அகன்று கொண்டேன் மீண்டும் வந்து பார்த்தபோது அந்தக்குடுவை உடைகள் உள்ள பெட்டியின் நடுப்பகுதியில் பத்திரமாக அமர்ந்திருந்தது. கிண்டலாக, கிளுகிளுப்பாக நீண்ட காலத்திற்குப் பின்னர் நம்மாளுடன் இருந்த பொழுதுகளாக இந்தப்பயணம் அமைந்தது. மீண்டும் கனடா வந்து வேலைக்குப் போகும்போது மனதில் உற்சாகம் மிகுதியும் மகிழ்ச்சியும் போட்டிபோட்டன. அந்தப்பயணத்தின் ஞாபகமாக அந்த மூலிகைக்குடுவை பத்திரமாக பெட்டிக்குள் கிடக்கிறது அதனைப்பற்றி சில சமயங்களில் நாங்கள் பேசிக் கொள்வோம். என்னை ரசிக்கவேண்டும் என்றால் நம்மாளுக்கு இந்தக்கிண்டல் இப்போதெல்லாம் கைகொடுக்கிறது.

 

முற்றும்

 

கட்டுரை அல்லது அனுபவப்பகிர்வை முற்றும் போட்டுவிட்டேன் ஆனால் தோகை இழந்த மயிலைப் பார்த்திருக்கிறீர்களா? நான் தோகை இழந்த ஆண் மயிலைப்பார்த்தேன் உபயோகப்படும் என்று படம் பிடித்து வைத்தேன்……

 

எதற்கு என்று கேட்கிறீர்களா???? என்ன சுற்றுலா என்றால் செலவுகள் அதிகம் கிரெடிட் கார்ட்டுகள் துடைத்தெடுக்கப்படும்தானே, இந்த ஆண்மயில் தோகை இழந்ததைப் பார்க்கும்போது கிரெடிட் கார்ட்டில் கடனை அதிகரித்த நம்மாள் ஞாபகந்தான் அடிக்கடி வருகிறது.

 

மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்திருக்கிறது இந்தப்பயணம். வெளிப்படையாக எழுதாதவை பல முடிந்தவரை எழுதி முடித்துள்ளேன். அது ஒரு புது அனுபவந்தானே…. அடுத்ததடவை இப்படி ஏதாவது தொடர்கள் எழுத முற்பட்டால் நிச்சயமாக முடிவுவரை எழுதிவிட்டுத்தான் இங்கு இணைக்கவேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியிருக்கிறது இந்தப்பதிவு

இவ்வளவு நாளும் பொறுமையாக வாசித்த அதேநேரம் மனதிற்குள் இப்படியா எழுதுவது என்று திட்டித்தீர்த்த அனைவருக்கும் நன்றி. இப்போதைக்கு என்னுடைய எழுத்து அலட்டலில் இருந்து தப்பித்துள்ளீர்கள் என்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறேன் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//சரி பெண்கள் அருந்துவதில் பெட்டர் எதுவோ அதைத் தா என்றேன் ஏதோ ஒன்றை வார்த்துத் தந்தாள்..

அருந்திப் பார் முதலில் பிடித்திருந்தால் அதிகம் ஊத்தித் தருகிறேன் என்றாள். என்ன கொடுமையடா சரவணா…. பொறியில் மாட்டிய எலியானேன்.//

 

மேலோட்டமாக வாசித்த போது... இந்தப் பகுதி சிரிப்பை வரவழைத்தது, வல்வை. :D  :lol: 
நேரம் கிடைக்கும் போது... நிச்சயம் முழுவதையும் வாசிப்பேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//சரி பெண்கள் அருந்துவதில் பெட்டர் எதுவோ அதைத் தா என்றேன் ஏதோ ஒன்றை வார்த்துத் தந்தாள்..

அருந்திப் பார் முதலில் பிடித்திருந்தால் அதிகம் ஊத்தித் தருகிறேன் என்றாள். என்ன கொடுமையடா சரவணா…. பொறியில் மாட்டிய எலியானேன்.//

 

மேலோட்டமாக வாசித்த போது... இந்தப் பகுதி சிரிப்பை வரவழைத்தது, வல்வை. biggrin.png  laugh.png 

நேரம் கிடைக்கும் போது... நிச்சயம் முழுவதையும் வாசிப்பேன்.

 

இலையான் கில்லர் இந்தக்கட்டுரைப்பகுதியை நீங்களுமா வாசிக்கவில்லை........confused.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அந்த மமகுவா தொடர் தானேbiggrin.pngbiggrin.pnglaugh.png
அப்போது விடாமல் நாங்கள் வாசிக்க

நீங்களும் விடாமல்  தொடர்ந்து எழுதச் சாதனை படைத்த தொடர்

Link to comment
Share on other sites

தொடருங்கள் சாகாறா.... நானும் இப்ப தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இது கண்ணில் பட்டது நேரம் கிடைக்கும் போது... நிச்சயம் முழுவதையும் வாசிப்பேன் அதுவரை FOLLOW ல் இருக்கும் இடையிடையே படித்து குழப்பகூடாது வல்வை கோழிபொங்கல் மாதிரி உங்கடை பதிவும் ஆற அமர இருந்து படிக்கணும் சகாரா அக்கா .biggrin.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அந்த மமகுவா தொடர் தானேbiggrin.pngbiggrin.pnglaugh.png

அப்போது விடாமல் நாங்கள் வாசிக்க

நீங்களும் விடாமல்  தொடர்ந்து எழுதச் சாதனை படைத்த தொடர்

 

ஒழுக்கமாக பதிவிடும் வாத்தியார் விடாமல் என்னுடைய தாறுமாறான எழுத்தை வாசித்திருக்கிறார்....அது எப்படி நம்ம குழப்படி கூட்டாளி இலையான்கில்லர் மட்டும் வாசிக்காமல் போனார்?.......1323879_lc3a4chelnd-ball-lesung-buch-glc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சாகாறா.... நானும் இப்ப தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

 

வெட்டுக்கிளி,

தொடர் முடிந்து சில வருடங்கள் கடந்துவிட்டன... அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததொடர்களை இணைத்து ஒரே பதிவில் இட்டுள்ளேன்.  கருத்துக்களத்தில்  உறுப்பினராக இல்லாதவர்களால் தொடர்களைத் தேடி வாசிப்பது கடினம் ஒரு சில நண்பர்களிடம் இத்தொடர் எழுதப்பட்ட பதிவின் இணைப்பை வாசிக்கக் கொடுத்தபோது அவர்களால் பக்கம் பக்கமாகச் சென்று முழுமையாக வாசிக்கமுடியவில்லை. அவர்களுக்கு லிங் கொடுத்ததைவிட பக்கம் பக்கமாக சென்று வாசிப்பதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த நேரம் அதிகம் அதனால் நம் கருத்துக்களத்திற்கு அப்பால் உள்ள பலரும் வாசிக்க இந்தவழி இலகுவானது. அது மட்டுமல்ல இந்த எழுத்தை குவியலாக பத்திரப்படுத்தவும் இந்தவகைப்பதிவு உபயோகமாக இருக்கும்.

 

இவர் என்ன மட்டு.......??? எங்கு என்ன நடக்குது என்று தெரியாமலே இருந்திட்டார்...ஓ..... நம்ம பதிவுகளில் வெட்டுக் கொத்துக்கு இடமில்லை என்பதால் இந்தப்பக்கமே வாறேல்லைப்போல....... ஐயா மட்டு நான் இணைத்த பல அழகான படங்களுக்கு di6eagy5T.gifயாழ் இணைய வழங்கி ஓட்டமெற்ரிக்காக தடை வழங்குது...  இந்த வெள்ளிக்கிழமை ஸ்பெசல் படங்களைவிட பெட்டரப்பா.... உங்கள் இணையவழங்கிக்கு ஏதாவது இலஞ்சம் கொடுக்க வழி இருக்கா?flat,550x550,075,f.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இது கண்ணில் பட்டது நேரம் கிடைக்கும் போது... நிச்சயம் முழுவதையும் வாசிப்பேன் அதுவரை FOLLOW ல் இருக்கும் இடையிடையே படித்து குழப்பகூடாது வல்வை கோழிபொங்கல் மாதிரி உங்கடை பதிவும் ஆற அமர இருந்து படிக்கணும் சகாரா அக்கா .biggrin.png

 

இந்தத்தொடரை வாசித்து முடிக்கிற ஆட்களுக்கு சாதனையாளர்விருது கொடுப்பதாக உள்ளேன்...

 

(விருதுக்கு ஆசைப்பட்டாவது யாரேனும் முழுமையாக வாசிக்கமாட்டார்களா என்ற நப்பாசைதான்... எல்லாம் நூல் வெளியீட்டுக்குப் பின்னான கலக்கமான அனுபவந்தான்......)    

       smiley-face-reading-cloud.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா முழுவதும் வாசிக்கவில்லை.

 

ஆனால் படங்கள் காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது.

 

அது என்ன தனிய நின்று நடனமாடகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய தொடரைப் பல தடவைகள் வாசித்திருக்கிறேன்!

 

இதில் புதிதாக எதுவும் உள்ளடக்கியிருக்கிறீர்களோ தெரியாது! இன்னும் வாசிக்கவில்லை!

 

மருந்து என்பது தானே முக்கியம்... அது குளிசையாக இருந்தாலும், திரவமாக இருந்தாலும் அல்லது ஊசியாக இருந்தாலும் அதிக வித்தியாசம் இருக்காது என்றே நினைக்கிறேன்!

 

தொடர்ந்து எழுதுங்கள்,  வல்வை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ! ஆரம்பம் தொடங்கி  அந்தம் வரை ஒரே மூச்சில் படித்து விட்டேன். தங்களின் பயணக் கட்டுரை அந்த மாதிரி உள்ளது.

 

முன்பு மணியனின் (இதயம் பேசுகிறது) பயணக் கட்டுரைகள் விரும்பி வாசிப்பேன்,

பின்பு  சில வருடங்களுக்கு முன் நம்ம அரவிந்தனின் பயணக் கட்டுரைகள் யாழில் வாசித்தேன்.

இன்று இக் கட்டுரை இதய தாகத்தைத் தீர்த்தது.

 

வாழ்த்துக்கள் சகோதரி..!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணத்தொடர் நன்றாக இருந்தது.

2010 ல் நானும் (தனிய அல்ல  :D ) குடும்பத்துடன்  புன்டக்கானா போயிருந்தேன். அதனால் வாசிக்கும்போது பழகிய இடத்துக் கதைபோல் இருந்தது. மிகவும் அனுபவித்த இடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அனுபவங்கள் சற்று மாறுபட்டு இருந்தது.

நானும் ஒரு மம்மாயுவானா வாங்கிவந்தேன், ஆனால் அவர்கள் எனக்கு அது தடிமல், இருமல் போன்றவற்றிற்கு நல்லது என்று தான் சென்னார்கள். 

மீண்டும் இந்தமாதக்கடைசியில் புன்டக்கானாவில் வேறு விடுதிக்கு செல்கிறோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தொடரை வாசித்து முடிக்கிற ஆட்களுக்கு சாதனையாளர்விருது கொடுப்பதாக உள்ளேன்...

 

(விருதுக்கு ஆசைப்பட்டாவது யாரேனும் முழுமையாக வாசிக்கமாட்டார்களா என்ற நப்பாசைதான்... எல்லாம் நூல் வெளியீட்டுக்குப் பின்னான கலக்கமான அனுபவந்தான்......)    

       smiley-face-reading-cloud.jpg

அப்படா ஒரு வழியாய் நேரம் கிடைத்து இன்று படித்து முடிந்தது  இவ்வளவு காலமும் உங்கள் ஆக்கம் படிக்காமல் இருந்ததுக்கு வருந்துகிறேன் நன்றி  அக்கா .மிக நன்றாய் உள்ளது .

புலம் பெயர் ஈழத்தமிழர் வாழ்விற்கும் புன்ரகான விமான நிலையத்துக்கும் மிகப்பெரும் தொடர்பு உள்ளது தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா முழுவதும் வாசிக்கவில்லை.

 

ஆனால் படங்கள் காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது.

 

அது என்ன தனிய நின்று நடனமாடகிறீர்கள்?

தனியவா இருக்காதே கூட்டாளிகள் இல்லாமல் நான் நடனமாடுவதில்லை வடிவா கவனிச்சுப்பாருங்கோ ஈழப்பிரியன்:rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய தொடரைப் பல தடவைகள் வாசித்திருக்கிறேன்!

 

இதில் புதிதாக எதுவும் உள்ளடக்கியிருக்கிறீர்களோ தெரியாது! இன்னும் வாசிக்கவில்லை!

 

மருந்து என்பது தானே முக்கியம்... அது குளிசையாக இருந்தாலும், திரவமாக இருந்தாலும் அல்லது ஊசியாக இருந்தாலும் அதிக வித்தியாசம் இருக்காது என்றே நினைக்கிறேன்!

 

தொடர்ந்து எழுதுங்கள்,  வல்வை!

12 தடவைகள் வாசித்து ஒரு தொடரை எழுதும் கிறுக்கல் பேர்வழிக்கு நிறைந்த உற்சாகத்தை வழங்கி இத்தொடரை முழுமையடைய வைத்ததில் உங்கள் பங்கும் உண்டு ரோமியோ........ இதில் புதிதாக ஒன்றும் இணைக்கவில்லை என்ன பல காட்சிகளை இணையவழங்கி சென்சார் செய்து மறுத்துவிட்டது. பிறகு ஒரு வழியாக படங்களை அகற்றிவிட்டு இணைத்துள்ளேன். நான் நினைக்கிறேன் கண்கவர் காட்சிகளால் யாரும் கெட்டுக் குட்டிச்சுவராகக்கூடாது என்று யாழ் இணைய வழங்கிக்கு மட்டுகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்போல:lol:

 

அட  போங்க ரோமியோ இதையெல்லாம் உபயோகித்துப்பார்த்தால் எல்லோ வித்தியாசம் இருக்கா என்று அறியமுடியும்.... வேர்போத்தல் பெட்டிக்கடியில கிடந்து உளுத்துப்போய்க்கொண்டு இருக்கு..... எதற்கும் இம்முறை போய்வரும்போது மேலதிக விபரங்கள் இருந்தால் அறிந்து எழுதுகிறேன்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ! ஆரம்பம் தொடங்கி  அந்தம் வரை ஒரே மூச்சில் படித்து விட்டேன். தங்களின் பயணக் கட்டுரை அந்த மாதிரி உள்ளது.

 

முன்பு மணியனின் (இதயம் பேசுகிறது) பயணக் கட்டுரைகள் விரும்பி வாசிப்பேன்,

பின்பு  சில வருடங்களுக்கு முன் நம்ம அரவிந்தனின் பயணக் கட்டுரைகள் யாழில் வாசித்தேன்.

இன்று இக் கட்டுரை இதய தாகத்தைத் தீர்த்தது.

 

வாழ்த்துக்கள் சகோதரி..!  :D

ஆதியில் இருந்து அந்தம் வரைக்கும் இலகுவாக வாசிப்பதற்காகத்தான் இந்த மீள்பதிவு. எழுதும்போது தெரியவில்லை...சில வருட இடைவெளிவிட்டு வாசிக்கும்போது அட நாமளும் பரவாயில்லை... ஒரு பயணத் தொடரை எழுதி முடிச்சிருக்கிறேன் என்பது மனதில் மத்தாப்பை விதைக்கிறது.  சுவி அண்ணா உங்கள் வரவுக்கும் வாசிப்பிற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணத்தொடர் நன்றாக இருந்தது.

2010 ல் நானும் (தனிய அல்ல  :D ) குடும்பத்துடன்  புன்டக்கானா போயிருந்தேன். அதனால் வாசிக்கும்போது பழகிய இடத்துக் கதைபோல் இருந்தது. மிகவும் அனுபவித்த இடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அனுபவங்கள் சற்று மாறுபட்டு இருந்தது.

நானும் ஒரு மம்மாயுவானா வாங்கிவந்தேன், ஆனால் அவர்கள் எனக்கு அது தடிமல், இருமல் போன்றவற்றிற்கு நல்லது என்று தான் சென்னார்கள். 

மீண்டும் இந்தமாதக்கடைசியில் புன்டக்கானாவில் வேறு விடுதிக்கு செல்கிறோம். 

 

வாசி பயண அனுபவங்கள் என்பது ஒரே இடமாக இருந்தாலும் ஆளாளுக்கு அவர்களின் மனங்களுக்கு இசைவான மாற்றங்களுடனேயே இருக்கும். அதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கல்ல. பயணக்கட்டுரைகளை வாசகர்கள் சுவார்சியமாக வாசிப்பது அரிது. சிவனே என்று வாசித்த பல அனுபவங்கள் எனக்கும் உண்டு. இந்தக்கட்டுரை ஒரு பயணக்கட்டுரையாக இல்லாமல் ஒரு அனுபவப்பதிவாகவும் பகிர்ந்துள்ளேன். அதற்காக சில கலகலப்பான சம்பவங்களையும் இக்கட்டுரையில் தவறாமல் எழுதியுள்ளேன். இன்னும் விடயங்கள் இருக்கின்றன...  உங்களைப்போல மீண்டும் கிடைக்கும் வக்கேஷனில்  விடுபட்ட இடங்களுக்கு சென்று வருவதாக உள்ளேன். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.