Sign in to follow this  
Manivasahan

ஒண்ணுமே புரியல உலகத்தில... -- அரசியல்வாதிகள் றேஞ்சுக்கு வந்திட்ட எங்கள் 'கடவுள்மார்'

Recommended Posts

 
 
எலக்சன் காலத்தில இவர் எங்களுக்கு நல்லது செய்வார் இவர் எங்களைக் காப்பாற்றுவார் எண்டு நம்பிக்கை வைச்சு ஒராளுக்கு வாக்களிப்பம். அவர் வெண்டதும் ஏதோ நாங்களே வெண்டது மாதிரி சந்தோசப்படுவம். கேக் வெட்டுவம் கொண்டாடுவம். ஆனால் மனிசன் பாளிமென்றுக்குள்ளை போய் கொஞ்சம் பகட்டுகளைக் கண்டதும் ஆள் மாறிப் போயிடும். ஆளைக் காணவே கிடைக்காது. நாங்கள் எதாவது கடிதத்தை மனுவைப் போட்டாலும் பதில் கிடைக்காது. என்னடாவெண்டு வெறுத்துப் போய் அடுத்த எலக்கசினிலை வேறையாளுக்குப் பின்னாலை போவம்.  அந்தாள் பேசிற பேச்சை வைச்சுப் பாத்து இந்தாள் எங்களைக் காப்பாற்றும் எண்டு முறிஞ்சு வேலை செய்வம். அந்தாளும் தன்ரை புத்தியைக் காட்டிப் போட்டு நாங்கள் கேக்கிற கதைக்கிற ஒண்டைடயும் காதிலை வாங்காமல் த்னரை பாட்டைப் பாக்கும். இப்படியே நாங்களும் மாறி மாறி இந்தாள் செய்யும் இந்தாள் செய்யும் எண்டு ஓடித் திரிவம். இது அரசியல்வாதிகளின்ரை கதை.
 
இப்ப எங்கடை கடவுள்மாருக்கும் இதே நிலைதான். முந்தியெல்லாம் ஊரிலை இருக்கேக்கை முருகன் அம்மன் சிவன் பிள்ளையார் எண்டு கொஞ்சப் பேரைப் பற்றித் தான் கேள்விப்பட்டனாங்கள். அவைக்குப் பின்னாலை அவை எல்லாம் செய்வினம் எண்டு போட்டு அபிசேகம் அது இது எண்டு ஓடுப்பட்டுத்திரிஞ்சம். அவைக்கு தங்கடை குடும்பப் பிணக்குகளைப் பாக்கவே நேரங்காணாது. அதுக்குள்ளை இந்தச் செல்லடி பொம்மர் அடி எண்டு அவையளும் ஓடுப்பட்டுத் திரிஞ்சதாலையோ என்னவோ அவை எங்களைக் கவனிக்க இல்லை. 
 
உவை சரிவர மாட்டினம் எண்டு நாங்களும் ஐயப்பன் ஆஞ்சநேயர் எண்டு புதுக் கோஸ்டிக்குப் பின்னாலை திரியத் தொடங்கினம். அவைக்குக் கோயில் கட்டினம். கூத்தாடினம். ஆவையும் தங்கடை புத்தியைக் காட்டிட்டினம். முள்ளிவாய்கக்கால் வ்நதால்என்ன சுனாமி வ்நதால் என்ன எண்டு மூச்சுக் காட்டாமல் இருந்திட்டம்.
 
எங்களை ஏமாத்தினால் நாங்கள் விட்டுவைப்பமே. உவையும் வெலைக்கு ஆகாது எண்டு நினைச்சுப் போட்டு உசிருள்ள சாமிகளைத் தேடிப் பிடிச்சம். சாயிபாபா, அம்மா பகவான் எண்டு ஆயிரத்தெட்டு புதுக் கடவுளுகள் எங்களுக்குக் கிடைச்சினம். அவைக்கு ஆராத்தி எடுத்தம். அவையும் மூச்சுக் காட்டுறதாக் காணேல்லை. இனி ஆரைப் பிடிக்கலாம் எண்டு ஐடியாச் சொல்லுங்கோவன்....
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

 நாங்கள் செய்த கர்மாவை நாங்கள் தான் அனுபவிக்க வேண்டும்.கால் போக வேண்டிய இடத்தில் நகம் போனால் அது தான் கடவுள்.இல்லையென்றால் ஏமாற்றி பிழக்கத்தெரியணும் அது நாம் எமக்கு சேர்க்கும் கர்மா, அதை பிறிதொரு பொழுதில் அனுபவிப்போம்.இதுதான் வாழ்க்கையடா சாமி .எனக்கு தெரிந்தவர் ஒருவர் கனரகவாகனச் சாரதி.சென்ற முறை மலையேறும் போது இதயவலி வந்து அந்த இடத்திலேயே மரணமானார்.கனடாவில் இருந்திருந்தால் சிலவேளை பிழைத்திருக்கக் கூடும் அல்லது ஐயப்பன் எனது வாசலில் ஒரு பக்தன் துடிக்கிறான் என்று காப்பாற்றியிருக்கலாம்.அவரது கர்மா அது.மனச் சந்தோசத்துக்காக ஒவ்வொருவரும் பறக்கிறார்கள். தங்களிடம் உள்ள பிழையான சுய புத்திகளை மாற்றுவார்களா? அப்படி மாற்றினால் கடவுளே வீட்டுக்கதவைத்தட்டி நலம் விசாரிப்பாரே!(இது எனது கருத்து மட்டுமே)

Share this post


Link to post
Share on other sites

கடவுள் மேல் முழு நம்பிக்கையுடன் தான் மனிதன் செயற்படுகிறானா அல்லது தனது துன்பத்துக்கு வழியைக் காண முடியாமல் வேறு வழியின்றி கடவுள் என்ற கற்பனையை நம்புகிறானா என்பதுவும் ஒரு கேள்வி...

Share this post


Link to post
Share on other sites

இனி ஆரைப் பிடிக்கலாம் எண்டு ஐடியாச் சொல்லுங்கோவன்.

பெரும்பான்மை மக்கள் யாரை பிடிக்கினமோ அவையளை நாங்களும் பிடிச்சால் சிந்திக்க வேண்டிய  அவ‌சியமில்லை.கும்பலுடன் கோவிந்தா போட்டால் எல்லாம் வெற்றியே:D

Share this post


Link to post
Share on other sites

 

பெரும்பான்மை மக்கள் யாரை பிடிக்கினமோ அவையளை நாங்களும் பிடிச்சால் சிந்திக்க வேண்டிய  அவ‌சியமில்லை.கும்பலுடன் கோவிந்தா போட்டால் எல்லாம் வெற்றியே:D 

அதுதானே  பெயரிலேயே இருக்கோல்லியோ ......யாரை அடுத்து பிடிக்கலாம் என்று  
உண்மையாகவே கடும் கடவுள் தான்  எவ்வளவு தப்பு செய்தாலும் தண்டனை மட்டும் இல்லை 
மாடு தின்னக்கூடாது ஆனால் குசினிக்குள் இருந்து தின்னலாம் ....குசினிக்குள் இருந்தால் அது மாடு இல்லை கண்டியளோ 

Share this post


Link to post
Share on other sites

எமது வளர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரும் தவறு உள்ளதாக நான் நினைக்கிறேன்!

எதையும் அப்பு சாமியிடம் கேட்டுப் பெறலாம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் புதைந்து போகின்றது!

பிற்கால வாழ்வின் பிரச்சனகளை எதிர்நோக்க முடியாமல்.. அப்பு சாமியிடமே கையேந்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது!

இது தான் உண்மையான காரணம் என நினைக்கிறேன்!

இதுவே வெறும் சரியை, கிரியையுடன் மட்டும் எமக்கும், இறைவனுக்குமான தொடர்பை மட்டுப்படுத்தி வைத்திருக்கக் காரணமுமாகும்!

அதற்கடுத்த நிலைகளான யோக, ஞான நிலைகளை நினைத்துப் பார்க்கக் கூட எமக்கு அவகாசமில்லை! :wub:

இதே போல மேல் நாட்டினர்.. ஏசுவிடமிருந்து 'லௌகீகப் பொருட்களுக்காக' இரந்து பிரார்த்திப்பதை நான் அவதானித்ததில்லை!

ஆனால் எமது சமூகத்திலுள்ள கிறிஸ்தவரும்.. யேசுவிடம்.. சைவர்களான எம்மைப்போலவே.. தமது தேவைகளுக்காகப் பிரார்த்திப்பதை அவதானித்துள்ளேன்!

ஆக.. இது மதங்களில் உள்ள தவறென்பதிலும் பார்க்கவும்..எமது வளர்ப்பு முறையிலுள்ள தவறே என்று நான் நினைக்கிறேன்!

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

எமது வளர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரும் தவறு உள்ளதாக நான் நினைக்கிறேன்!

எதையும் அப்பு சாமியிடம் கேட்டுப் பெறலாம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் புதைந்து போகின்றது!

பிற்கால வாழ்வின் பிரச்சனகளை எதிர்நோக்க முடியாமல்.. அப்பு சாமியிடமே கையேந்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது!

 

ஆனால் எமது சமூகத்திலுள்ள கிறிஸ்தவரும்.. யேசுவிடம்.. சைவர்களான எம்மைப்போலவே.. தமது தேவைகளுக்காகப் பிரார்த்திப்பதை அவதானித்துள்ளேன்!

ஆக.. இது மதங்களில் உள்ள தவறென்பதிலும் பார்க்கவும்..எமது வளர்ப்பு முறையிலுள்ள தவறே என்று நான் நினைக்கிறேன்!

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்:)

Share this post


Link to post
Share on other sites
 
. அவையும் மூச்சுக் காட்டுறதாக் காணேல்லை. இனி ஆரைப் பிடிக்கலாம் எண்டு ஐடியாச் சொல்லுங்கோவன்....

 

உங்களுக்கு என்ன குறை..?

பெயரும் அந்த மாதிரி பொருந்துது..

ஒரு நாலு முழவேட்டி (சுத்திக்கட்டப்படாது)

திறந்த மேனி

யாரும் இதுவரை சொல்லாத இரு சொல்லில் ஒரு தத்துவம்..

பணம்  புகழ் ...... கொட்டும்

அதிரும் இல்ல.....

 

இங்க கொஞ்சப்பேர் சொல்லிக்கொண்டு திரியினம்

ஒரு நாளைக்கு வருவாய் என...

உங்களிடம் வந்துவிடுகின்றேனே....:)

 

Edited by விசுகு
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அட கடவுளா

அந்தாள் (இருந்தால்) தன்ரை இரண்டு மூன்று பெண்டாட்டிய பார்ப்பானா அல்லது உங்களை பார்ப்பானா. - நான் இந்து

அதுசரி ஏன் இந்த கடவுளுக்கெல்லாம் ஓழுங்கான அப்பன் இல்லை.

உந்த விளையாட்டுக்கு நான் வரல்ல.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this