Jump to content

நிருமாநிசனின் பேட்டி - அண்மைய லண்டன் சந்திப்புக்கள் தொடர்பாக


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
 • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமாரே!

இங்கு நீங்கள்/நாங்கள் ஏன் கொதிக்கிறோம், குதிக்கிறோம்? உண்மைச்செய்திகள் உடஉடனே வெளியே வருகின்றமையால்!

ஆனால் அங்கோ(தாயகத்தில்) இதயங்களால் ஒன்றுபட்டு விட்ட "பின்வாசல்", சிங்கக்கொடி தாங்கிய திருமலை சிங்கன் போன்றோரின் கூத்துக்கள் எல்லாம் வெளிவருவதில்லை. அங்கு ஊடகம் என்றால் அது உதயன் பத்திரிகைதான். உதயனை வைத்திருப்பது மாபியா சரவணபவன். உதயனில் எச்செய்திகள் வரவேண்டும், வரக்கூடாது என்பதனை மாபியாக்கள் வடிகட்டி விடுகிறார்கள்.

சொல்லப்போனால் புலம்பெயர் எம்மவர்களின் ஆதங்கங்கள் ஒரு கை ஓசையாகவே கேட்கப்போகின்றனவா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

CTR,நிமோ ,தேவா 

புல்லரிக்குது .எழுதினால் யாழே மணக்கும் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
லண்டன் பேச்சு தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை விமர்சனம்!

June 19, 2015

லண்டன் பேச்சு தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை விமர்சனம்! 0

by tmdas5@hotmail.com • TGTE

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுக்காக பேசுவதற்கு உலக தமிழர் பேரவைக்கு மக்கள் ஆணையில்லை என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட்சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றத்துக்கு செனட் சபையினால் அறிவுறுத்தல் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

லண்டனில் அண்மையில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியமை தொடர்பிலேயே இந்த குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதில், இலங்கைக்கு வெளியில் வாழும் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப யோசனைகளையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

1). இரண்டு மடங்கானாலும், எமது இலக்குகளில் இருந்து மாறிச்செல்லக்கூடாது.

-இலங்கையில் குற்றமிழைத்தோரை ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

-தமிழீழ இறைமைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

2). இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு அவசர தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியம். எனினும் அதனைக்கொண்டு தமிழர்களை இலங்கை அரசாங்கம் பிரித்து விடுவதற்கு வழியேற்படுத்திவிடக்கூடாது. எங்களை பலவீனப்படுத்தி அதன் மூலம் அவர்கள் கூறுகின்றதை ஏற்றுக்கொள்ள எங்களை உந்துவதற்கு இடமளிக்கக்கூடாது.

3). உடனடி தேவை என்ற அடிப்படையில் அவை, தனியாக நோக்கப்பட்டு அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர வேண்டும். எனினும் அது நாம் ஏற்கனவே இழந்துள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறைமை என்பவற்றுடன் இணைக்கப்படக்கூடாது.

4.) இலங்கை அரசாங்கத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அல்லது தெரிவுச் செய்யப்படாத அமைப்புக்கள், தமிழீழ மக்களின் எதிர்காலம் தொடர்பில் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பொது விவாதம் ஒன்றைக்கோர வேண்டும் என்றும் செனட்சபை கோரியுள்ளது.

அ) எனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், இலங்கையின் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு உட்பட்ட அனைத்து நீதி மறுப்புகளுக்கும் எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்.

ஆ) சர்வதேச ரீதியாக இலங்கையின் மனித உரிமைமீறல் நடவடிக்கைகள் தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இ) லண்டனில் பேசப்பட்ட புனர்வாழ்வு விடயங்களில் உண்மைதன்மை இருக்குமாயின் அதற்கு பங்களிக்க வேண்டும்.

ஈ) இலங்கைக்குள் சர்வதேச மன்னிப்புசபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகள் குழு என்பவற்றை அனுமதிக்குமாறு கோர வேண்டும்.

உ) இலங்கையின் பொருட்களை பகிஸ்கரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் ஈழத்தமிழர்கள் எதிர்கால பேச்சுக்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஓரங்கட்டப்படுவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

விவாதிக்கப்படவேண்டிய கருத்துக்கள்

1) புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கப்படாமை

2) சொந்தக்கட்சியின் முழு ஆதரவில்லாமல், தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் லண்டன் பேச்சு தொடர்பில் பொதுஅறிக்கை ஒன்றை வெளியிட்டமை.

3) அரசியல் தீர்வு குறித்து பேசப்படாமல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் நடவடிக்கை பெரும்பாலும் நிதிசேகரிப்பை கருத்திற்கொண்டதாகும்

4) இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையானது தமிழர்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லும் வகையில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை அழைத்து பேசியமை, செப்டெம்பர் மாத ஜெனீவா அமர்வில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணையை பிந்திப்போடுவதற்கான முயற்சியாகும்.

5) லண்டன் பேச்சுவார்த்தை, சிறிசேன அரசாங்கத்துக்கு எதிர்வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்களுக்கு உதவும்

6) புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான பிரதிநிதிகள் என்று தம்மை அழைப்பவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர்.

7) சிறிசேன அல்லது விக்கிரமசிங்க ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையை நிராகரித்தால், ஐக்கிய நாடுகள் பேரவைக்கு எதுவும் செய்ய முடியாது.

8) தமிழர்களின் சுயநிர்யணத்துக்கான வாக்கெடுப்பு, ஐக்கிய நாடுகளின் தலைமையில் இலங்கை படையினருக்கு பதிலாக சர்வதேச படையினர் நிலைநிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்

9) “பயங்கரவாதிகள்”(தமிழர்களை) தாம் அழித்ததாக இலங்கை அரசாங்கம் கூறுமானால், பயங்கரவாதத்துக்கு தடைச்சட்டத்துக்கு எதிராக பேசும் அனைத்து மனித உரிமை அமைப்புக்களும் தமது நிலைப்பாட்டில் இருந்து விலக வேண்டியேற்படும். அவ்வாறெனில் பயங்கரவாதிகள் என்போர் யார்? யாருக்காக அந்த சட்டம் அமுலாக்கப்படும் என்ற இரட்டைநிலைக் குறித்து ஆராயவேண்டும்.

10) போர்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணை என்பது ஏற்கமுடியாது.

11) தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் சிறிசேன அரசாங்கம் நம்பிக்கையான எதனையும் செய்யவில்லை.

12) வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய இனப்படுகொலை என்ற யோசனையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழர் பிரச்சினையை தீர்க்க முதலாவது அங்கீகாரமாக இருக்கலாம். அத்துடன் இது இலங்கையின் அரசியல் அமைப்பினது 6வது திருத்தத்தை மீறும் செயற்பாடாகாது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை உறுப்பினர்கள்-

1) ராம்சே கிளார்க்( அமரிக்காவின் முன்னால் சட்டமா அதிபர்)
2) ரொபட் எவான்ஸ்( ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்)
3) டேனியல் மாயன்( சூடான் மக்கள் விடுதலை இயக்கம்)
4) எம் மனோகரன்( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்-மலேசியா)
5) கிள்ளஸ் பிக்கியூஸ்( பிரான்ஸி;ன் சட்டத்தரணி)
6) டேவிட் மாட்டஸ்( கனடாவின் மனித உரிமை சட்டத்தரணி)
7) ரோய் செட்டி( தென்னாபிரிக்கா)
8) சத்தியா சிவராமன்( ஊடகவியலாளர்- இந்தியா)
9) பிரையன் செனவிரட்ன( சிங்கள மருத்துவர்- அவுஸ்திரேலியா)
10) உஸா ஸ்ரீஸ்கந்தராஜா(கனடாவின் எழுத்தாளர்)
11) சத்திஸ் முனியாண்டி( உலக தமிழ் காங்கிரஸ் செயலாளர்-மலேசியா)
12) நாகலிங்கம் ஜெயலிங்கம்( இலங்கை தமிழ் சங்க முன்னாள் தலைவர், உலக தமிழர் இணைப்பு குழுவின் முன்னாள் தலைவர்- அமெரிக்கா)
13) பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன்- இந்தியா
14) தரணி சரன்( உலக தமிழ் அமைப்பின் முதல் தலைவர்- அமெரிக்கா)
15) ராஜரட்ணம் சுப்பிரமணியம்( கல்வியாளர்-கனடா)

 

சி ரி ஆர் வானொலி சி எம் ஆர் வானொலியின் கீழ்த்தான் இயங்குகின்றது.இவர்கள் எல்லாம் வியாபாரிகள் இவர்களிடம் தமிழ் தேசியம் கிடையாது.தற்போது கனடாவில் எந்த ஊடகமும் தேசியத்தை மதிக்கவில்லை.உலகத்தமிழர் தங்கள் பெயர் அழியக்கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு பரிஸில் என்ன நடந்தது.உண்மையான செயற்பாட்டாளற்கு இங்கேயும் இப்படியும் நடக்கலாம்.

Link to post
Share on other sites

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை தேர்தலில் வென்ற கூட்டமைப்பின் தலைவரால் எடுக்கப் பட்ட முடிவை, வெளிவிவகார பொறுப்பாளர் நடைமுறைப்படுத்துறார். இதை தேர்தலில் நிக்கவே ஆளில்லாமல் திண்டாடி, போட்டி இன்றி தேர்வாகியோரால் நடத்தப்படும் நட்டுக் கழண்ட அரசு விமர்சிப்பது காமெடியிலும் காமெடி.

 

நாட்டில் உங்கள் புலம்பலை யாரும் கண்டு கொள்வதில்லை. அங்கே இப்போ தமிழ் டெட் மன்னிக்கவும் தமிழ் நெட் உட்பட சகல காமெடித் தளங்களும் கிடைக்கிறது. மக்கள்தான் உவற்றை சீந்துவதும் இல்லை.

 

வேணுமெண்டால் புலியிட்ட அடிச்ச காசை கொண்டு ஒன்ணே முக்கால் பேப்பர் என்று ஒரு நாளிதழை யாழில் இலவசமாய் வெளியிடுங்களேன்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை தேர்தலில் வென்ற கூட்டமைப்பின் தலைவரால் எடுக்கப் பட்ட முடிவை, வெளிவிவகார பொறுப்பாளர் நடைமுறைப்படுத்துறார்.

அண்ணோய் சேகோ, ஏதோ உங்கடை பாட்டுக்கு அவிட்டு விடுகிறீர்கள், கேட்கிறவன் கேணையன் என்றால்(ஒன்று இரண்டு பார்சலுகள் ஓடி வந்து விசிலடிக்கும்), உங்கள் காட்டில் மழை!

1) மக்களால் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வாசல் சும் சும்?

2) பின்வாசல் எப்போ வெளிவிவகார பொறுப்பாளர் மட்டும் ஆனார்? உள்விவகாரம், சிரானி பண்டாரநாயக்கா விவகாரம், சந்திரிக்கா/மைத்திரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டாம், உங்களை நம்புகிறோம் என்ரது ... இப்படி பல பல

3) அறளை பெயர்ந்த சிங்கக்கொடி ஏந்திய தமிழரசு கட்சி தலைவர், கூட்டமைப்புக்கு ஏனைய இச்சந்திப்பு தொடர்பாக அறிவித்தாரா? அதற்கு மேல் அங்கு மாவைக்கோ, சிறிதரனுக்கோ, அரியேந்திரன் போன்ற தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்/பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கும் தெரியாதாம்!

இன்று சிங்களத்தினால் 2010இற்கு சிங்களத்தினால் தமிழ் தலைவராக வளர்த்தெடுக்கப்படும் பின்வாசல் சும் சும், அறளை பெயர்ந்த சம்பந்தனை மிக சுலபமாக ஏமாற்றி தன் கூத்துக்களை ஆடுகிறார். 

யாராவது சிங்களத்தினால் வளர்த்தெடுக்கப்படும் தமிழ்த்தலைவர் பின்வாசல் சுமந்திரனின்டதமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்டத்தின் 2010இற்கு முன்னமான காத்திரமான பங்களிப்பை கூற முடியுமா? 2010இற்கு முன் பின்வாசல் எங்கிருந்தார்?

இப்பேச்சு வார்த்தை பின்வாசலினால் அறளைபெயர்ந்தவருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இரகசியமாக, லண்டனில் நடாத்தவே திட்டமிடப்பட்டது. ஆனால் கசிந்து விட்டது. பின் என்ன?  டமிழ் மக்களின் அன்றாட பிரட்சனை பேச லண்டன் வந்தாராம்! நாம நம்பீட்டோம்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாதிரி இமானுவேல், அரசியல் அறிஞர் சுரேனுக்கு ஆப்படித்த சந்திரிக்கா!

http://www.tamilsvoice.com/archives/46648

 

Link to post
Share on other sites

அண்ணோய்,

சோத்துப் பாசல் என்று திட்டுவது அர்ஜூனை. எனக்கு உமா சிவப்போ நீலமோ எண்டும் தெரியாது. அந்த குப்பாடிக் கூட்டத்துக்கும் எனக்கும் ஓர் தொடர்புமில்லை.

பிவாசு (அட அதுதாங்க பின் வாசல் சுமந்திரன்) கூட்டமைப்பினால் வெளிவிவகாரத்து நியமிக்கப் பட்டுள்ளார். சுரேஸ் ஊடக பேச்சாளர்.

யார் நியமித்தது? கூட்டமைப்புத்தான்.

தேத எல்லாத்தையும் பானு, ரமேஸ், சூசை, சொர்ணம், தீபனுக்குச் சொல்லி விட்டா செய்தார்? இல்லையே? சிலதை தமிழ் செல்வன் ஊடு, அல்லது பொட்டு ஊடு மட்டும் செய்யவில்லையா? அப்படித்தான் இதுவும். மங்களவும் கூட மைத்திரிக்கும் ரணிலுக்கும் மட்டுமே சொல்லி இருந்தார்.

 

2010 ற்கு முன் விக்கி, சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. காரணம் அப்போ தேதாவின் பேச்சுக்கு ஆமாம் சாமி போடுவோர்கு மட்டுமே இடமிருந்தது. அந்த கேவலம் கெட்ட அரசியலை இவர்கள் செய்ய விரும்பவில்லை.

 

 

Link to post
Share on other sites

 

சொல்லப்போனால் புலம்பெயர் எம்மவர்களின் ஆதங்கங்கள் ஒரு கை ஓசையாகவே கேட்கப்போகின்றனவா?

இதுதான் யதர்த்தம். தலைமை செயலகம், சர்வதேச த செ, ந க அ, நெடியவன் உள்பட்ட எல்லா புலவாளி (லு) களும், ஊரில் மக்களை பொறுத்தவரை செல்லாக் காசுகள். வெறும் கடையில்தான் 6 வருசமா டீ ஆத்துறீங்க என்பது ஜி ரி எப் க்கும் அடிகளாருக்கும் புரியதொடங்கியிருப்பது போல் உங்களுக்கும் இப்ப கொஞ்சம் புரிதல் ஏற்படுகுது போல இருக்கு. நல்ல அறிகுறி.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் இந்த தளத்தில். மருதருடனும், இன்னுமொருவருடனும் விவாதித்துளேன்.  ஹொங்கோங்க்கினை இழந்து விட்ட மேற்குலகுக்கு, ஒரு பொருளாதார தளம் தேவை படுகின்றனது. ஆசியாவின் 7 பொருளாதார புலிகளும் பிரச்சனை உள்ளவர்கள். தென்கொரியாவின் பிரச்சனை வட கொரியா. தாய்லாந்தின் பிரச்சனை, அரசியல் நிலைப்பாட்டில் தளம்பல். இந்தோனேசியா, மலேசியா முஸ்லிம் நாடுகள். சிங்கப்பூரிலோ 72% சீனர்கள். தைவான், சீனாவின் கழுகுகண்களில். ஹொங்கோங் போயே போய் விட்டது. இலங்கையில் சீனா தென்பகுதியில் புகுந்து விட்டது. மிஞ்சி இருப்பது வட, கிழக்கு. அந்த பகுதிகளின், பூர்வீக  குடிகள் பலர் இப்போது மேலை நாடுகளின் குடிகள். நம்பிக்கை வைக்க கூடியவர்கள். இந்த அகதிகளாக சென்று குடிகளான, 'குடியியல் நிலை' சார்ந்த நம்பிக்கையே, மத்திய கிழக்கில், இஸ்ரேல் என்னும் பலமிக்க நாடு ஒன்றினை அமைக்கவும், இன்றுவரை அமெரிக்க சார்பு நாடாக அது இருக்கவும் முடிந்தது. அந்த நம்பிக்கையே அமெரிக்கா கொண்டுள்ளது. அதனை செயல்படுத்தவே, இப்போதைய அழைப்பு மட்டுமல்ல, கோத்தபாய ஜனாதிபதி ஆகியதும் நடந்தது.  ஒரு போர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரது குரல் சர்வதேசத்தில் வலுவாக இராது என்பதாலேயே, அமெரிக்க குடியுரிமையினை வேகமாக ரத்து செய்து, போட்டி இட வைத்தார்கள்.
  • இதயமே இதயமே இறைவனைத் தேடு இகமதில் இறைவனின் புகழினைப் பாடு (2) உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமும் அடைந்தது (2)  பாறையும் கேடயமுமாம் எந்தன் தந்தையே பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே இறைவனே இறைவனே இறைவனே வானில் நின்று மானிடரைக் காணும் தெய்வமே வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே (2) நீதியும் நேர்மையுமாய் வழி நடத்துமே நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே  இறைவனே இறைவனே இறைவனே இறைவனே இயேசுவின் திருநாம கீதம்      
  • புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா    52 Views இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.   https://www.ilakku.org/?p=47331
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.