• 1
ராசவன்னியன்

யாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...?

யாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...?   

28 members have voted

 1. 1. யாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...?

  • சூப்பரோ சூப்பர் !
   5
  • நல்லாயிருக்கு !
   9
  • ம்.. பரவாயில்லை..
   4
  • பழைய களமே தேவலை..
   10


Question

இப்பகுதி வெறிச்சோடியிருப்பதால், பிள்ளையார் சுழி போட்டு இங்கே முதல் பதிவை தொடங்குவோம்..:rolleyes:

 

யாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...?

விரும்புபவர்கள் வாக்கு பதியலாம்!..

(வாக்களிப்பவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரியாது..)

நன்றி!

 

டிஸ்கி:

இது அதைரியப்படுத்தும் முயற்சி அல்ல..!

 

 

 

 

Edited by ராசவன்னியன்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Recommended Posts

 • 1

தற்போதைக்கு மேலே உள்ள எதையும் தெரிவு செய்யமுடியவில்லை.

ஆனால் எதுவும் புதிதாக வரும் போது சிக்கலாகவும் ஏற்றுக்கொள்ளக்கடினமானதுமாகத்தான் இருக்கும்

பழகவேண்டும்

இது இணைய உலகில் இந்த மாற்றங்கள் அவசியமானது

எல்லாம் நன்மைக்கே என்றரீதியில் முயல்வோம்...

 

 

Share this post


Link to post
Share on other sites
 • 1

காலம் மாறும்போது.. காலத்துக்கு ஏற்றவாறு நாமும் மாறவேண்டும்!

இல்லாவிட்டால், கற்கால மனிதர்களாகி விடுவோம்!:o

என்னைப் பொறுத்த வரையில்.. யாழைப் பார்ப்பதும்.. பதிவுகள் இடுவதும்.. எழுதுவதும் படங்கள் இணைப்பது முன்னிலும் இலகுவாக உள்ளது!

வேட்டியிலுருந்து காற்சட்டைக்கும்,...சேலையிலிருந்து ஜீன்சுக்கும் மாறும் 'மாற்றத்தை' இலகுவாக ஏற்றுக்கொண்ட எங்களுக்கு... இது பெரிய பிரச்சனை இல்லை!:lol: 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
 • 1

இங்கேதான் புரிதலின் சிரமமே..! :o

xl3sdh-l-610x610-shorts-denim-cute-shirt

வேட்டியிலிருந்தும்,சேலையிலிருந்தும் முழுமையான முழுகாற்சட்டைக்கு மாறலாம், ஆனால் ஃபேஷன் என்று பொத்தலான அரைக்கால் சட்டைக்கு மாறக் கூடாதில்லையா? :lol::)

 

 

இதையாவது போட்டு எதையோ எதையோ மறைக்க முயல்வதும் போற்றுதலுக்குரியது அல்லவா.... :wub:  கந்தையானாலும் கசக்கிக் கட்டு.... :):lol:

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
 • 1

இப்புதிய பதிப்பு நவீன கருவிகளின் மென்பொருளுக்கு வேண்டுமென்றால் எளிதாக பொருந்துவதாக இருக்கலாம்.. ஆனால் பழைய களத்தின் முக்கிய அம்சங்கள் சில சுத்தமாக நீக்கப்பட்டுள்ளது.சில அம்சங்கள், பயனில்லாமல் சுருங்கிவிட்டது..:wub:

 

முக்கியமாக,

திண்ணை:

இதில் நாம் எந்த மீடியாக்களையும்(ஒலி, காணொளி,போட்டோக்கள்) இணைத்து பார்க்க முடியாது..

கடலை போடுபவர்களை மறைந்திருந்து பார்க்க இயலாது..

திண்ணை பதிவுகள் என்றும் நிலைத்திருக்காது & சேமிக்க இயலாது..பார்க்காத உறுப்பினர்கள் பின்னர் வந்து உரையாடல்களை பார்க்க முடியாது.

திண்ணையின் சாளரம் தனியாக கழட்டிவிடப்பட்டுள்ளதால் (Separate window), யாழ் களத்திற்கு தொடர்பில்லாமல், தனியாக திண்ணை இயங்குகிறது. ஆகையால் திண்ணையில் நடக்கும் சுவாரசியமான உரையாடல்கள் களத்தில் உலாவரும் பிற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்க வழியே இல்லை.

திண்ணைக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சந்தையில் கிட்டும் தனிப்பட்ட மென்பொருட்களை (Third party Chat software) இங்கே ஒருங்கிணைக்க இயலுமாவென தெரியவில்லை.

 

நண்பர்கள் குழாம்:

நம்முடன் அடிக்கடி தொடர்பிலுள்ளோரை சேர்த்திணைத்திருந்த இந்த நண்பர்கள் அட்டவணை சுத்தமாக நீக்கப்பட்டுவிட்டது..நண்பர்களுக்கு தனிமடல் அனுப்பவேண்டுமெனில் முகவரியை சுட்டிமூலம் தேடித்தான் அனுப்ப இயலும்.

நமக்கு பச்சைப் புள்ளிகளை யார் யார், எந்தெந்த திரிகளில் குத்தியுள்ளார்கள் என்ற 'Likes' பொத்தான், நம் விவரணையிலிருந்து (Profiles) நீக்கப்பட்டுவிட்டது.

 

வெளி மீடியாக்களின் இணைப்பு:

உங்கள் குழாய்(You tube), சவுண்ட் க்ளவுட்(Sound Cloud) கோப்புகளை இணத்தால், அவை உருமாற்றம்பெற்று, மிகப்பெரியதாக தெரிவதால், கூர்மை மற்றும் கவர்ச்சி இழந்து நிற்கிறது..

ஒரு பதிவை தட்டச்சு செய்து மீடியாவை இணைத்துவிட்டு முழுமையாக பதியுமுன் மீளாய்வு செய்யும் (Preview)ப்ரிவியூ முறை நீக்கப்பட்டுவிட்டது..

 

BBC கோட்:

கணணி புரோகிராம் கோடிங்கில் பழக்கமில்லாதவர்களுக்கும் மிகுந்த வரப்பிரசாதமாக இருந்த இந்த கோடிங் (HTML Codes help) உதவிக்குறிப்புகள், அனுசரனை (Embedding & Support ) முற்றாக நீக்கப்பட்டுவிட்டது..

கவர்ச்சியான ஸ்பாயிலர் (spoiler) மற்றும் பிற வசதிகளை  இனி பயன்படுத்த இயலாது.

 

கள வெளித்தோற்றம் (Appearance, Visual treat, Online status):

களத்தின் லேஅவுட்டை(Layout) நம் விருப்பத்திற்கேற்றார்போல் சுருக்கி, நீட்டி மாற்ற இயலாது.! அவர்கள் என்ன அமைத்துள்ளார்களோ அதை வைத்து நாம் திருப்திகொள்ள வேண்டும்.. களத்தின் தீம்(Theme) மற்றும் வண்ணக்கலவை ஒருங்கிணைப்பு, கவரும் விதமாக குளிர்ச்சியாக(Visual treat) இல்லை. ஒரே வெளிறலாக இருக்கிறது.

களத்தில் தற்பொழுது நிற்பவர்களின் விவரணை உடனடியாக புதுப்பிக்கப்படுவதில்லை (Online users update).. 30 நிமிடங்களாவது இடைவெளியிருக்கிறது..

நாம் களத்தில் மறைவிலிருக்கிறோமா? இல்லை வெளிப்படையாகவே உள்நுழைந்துள்ளோம்மா? என்ற எந்த குறியீட்டு அடையாளமும் (log-in status indication) உறுப்பினருக்கு தெளிவிக்க வசதியில்லை.

 

தேடும் பொறி (Search Engine):

களத்தின் மிக மோசமான நம் பொறுமையை சோதிக்கும் தேடும் பொறிமுறை வடிவமைப்பு இது.. ஒருமுறை தலைப்புகளை தேடி முடிவுகளை திரையில் காண்பிக்கும் இந்த தேடுபொறி, அடுத்து 25 செகண்டுகளுக்கு நம்மை பிற தலைப்புகளை தேட அனுமதிப்பதில்லை.. அதனால் வெறுப்புடன் களத்தை மூடிவிட்டு, அடுத்த இணையத்திற்குச் செல்ல எம்மை தூண்டுகிறது.

 

ஒரு வீட்டில் பலகாலம் பழக்கப்பட்டுவிட்ட நாம், புதிதாக இடம் மாறுகையில் பழகிய வசதிகளை எதிர்பார்ப்பது இயல்பு, பின்னர் வேறு வழியின்றி புதுச் சுழல் கட்டாயபட்டு பழகிவிடும் என்றாலும், நம் மனதை கவர்ந்தவை என்றும் நினைவிலேயே இறுத்தி மனம் ஏங்கும்..

புலம் பெயர்ந்து லொட்டு, லொசுக்கு வசதிகள் கிட்டினாலும், உணர்வோடு ஒன்றிவிட்ட தாய்மண் போல் வருமா? :o

அதுபோலத்தான் யாழின் புதிய மாற்றம், எனக்கு அவ்வளவாக மனதை கவரவில்லை..! ம்..வேறு வழியின்றி போகப்போக பழகிவிடலாம்! :lol:

மற்ற உறுப்பினர்கள், தங்கள் அபிப்ராயத்தையும் வெளிப்படையாக சொன்னால் நன்று..:rolleyes:

நன்றி!

 

மீண்டும் டிஸ்கி:

இது கள மென்பொருளைப் பற்றிய பகுப்பாய்வு மட்டுமே, நிர்வாகத்தை அதைரியப்படுத்தும் நோக்கம் அல்ல!

 

 

Edited by ராசவன்னியன்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
 • 1

திண்ணையின் முக்கியத்துவமே இல்லாமல் போய்விட்டது போல் இருக்கு.  சுத்தமாக எனக்குப் பிடிக்கவே இல்லை. வெட்டவெளியில் கம்பீரமாக நின்ற எதையோ கட்டிடம் கட்டி ஒளித்து வைத்தது போல. 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
 • 1

இப்ப...ஒகே.போலுள்ளது.:)
என்னைப் போன்ற, "பஞ்சி" பிடிச்ச ஆக்களுக்கு...... ஒரு கிழமை, காத்திருக்க வேண்டி  வந்திட்டுது.
ஆனால்.... சூப்பரோ, சூப்பர்.  என்று சொல்ல மாட்டேன்.:lol:

Share this post


Link to post
Share on other sites
 • 0

திருத்தங்களும் மாற்றங்களும் நன்றாகவே உள்ளன.
சில மெருகூட்டல்களின் பின்னர் யாழ் இன்னும் மிளிர்ந்து நிற்கும் என்பது எனது எண்ணம்.

திருத்தங்கள் அனைத்தும் முடிந்த பின்னர் வாக்களிக்கலாம் என நினைக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
 • 0

சிரமம் பாராது வாக்களித்தவர்களுக்கும்விசு மற்றும் வாத்தியார் ஆகியோரின் கருத்திற்கும் மிக்க நன்றி

இந்த வாக்கெடுப்பு, தற்போதைய புது பதிப்பிலுள்ள வசதிகளுக்கும், முந்தைய களத்தின் பல்வேறு அம்சங்களுக்கும், பல்வேறு திரிகளை சிறப்பாக கையாளுதலுக்கும், பிற வெளித்தரவுகளை இணைத்துப் பார்த்தல், உறுப்பினர்களுக்கு எளிமையாக களத்தை கையாளும் வசதி போன்ற அம்சங்களின் ஒப்பீட்டு வாக்கெடுப்பு மட்டுமே..

இவற்றை கருத்திற்கொண்டு வாக்கெடுப்பு முடிவுகள் தெரிவதும் நல்லதுதானே? :)

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
 • 0

நான் கைபேசியிலேயே பச்சை மற்றும் சிகப்பு பட்டன் மட்டுமே பாவிக்கிற ஆள்.  இங்கு எல்லா "ஆப்சன்களுக்குள்ளும்" புகுந்து புறப்படும் பயணீட்டாளர்கள்தான் சரியான கருத்தைத் தெரிவிக்க முடியும்...! :)

Share this post


Link to post
Share on other sites
 • 0

சூப்பரோ, சூப்பர்.

Share this post


Link to post
Share on other sites
 • 0

கடந்த 3 நாட்களாக முதல் பக்கம் அதாவது HOME பக்கம் மாறவே இல்லை. பழைய செய்திகளையே காண்பிக்கிறது. சரி செய்தால் நலம்.

 

Share this post


Link to post
Share on other sites
 • 0

காலம் மாறும்போது.. காலத்துக்கு ஏற்றவாறு நாமும் மாறவேண்டும்!

...

வேட்டியிலுருந்து காற்சட்டைக்கும்,...சேலையிலிருந்து ஜீன்சுக்கும் மாறும் 'மாற்றத்தை' இலகுவாக ஏற்றுக்கொண்ட எங்களுக்கு... இது பெரிய பிரச்சனை இல்லை!:lol:

இங்கேதான் புரிதலின் சிரமமே..! :o

xl3sdh-l-610x610-shorts-denim-cute-shirt

வேட்டியிலிருந்தும்,சேலையிலிருந்தும் முழுமையான முழுகாற்சட்டைக்கு மாறலாம், ஆனால் ஃபேஷன் என்று பொத்தலான அரைக்கால் சட்டைக்கு மாறக் கூடாதில்லையா? :lol::)

 

 

Edited by ராசவன்னியன்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
 • 0

செய்யப்பட வேண்டிய சின்னச் சின்ன அலுவல் இருந்தாலும்.. யாழின் இந்த மாற்றம் இன்றைய இணைய சமூக வலை அமைப்புக்கள் மற்றும்.. கையடக்க இலத்திரனியல் உபகரணங்களில் அப்ஸ்களின் பாவனை வளர்ச்சிக்கு ஏற்ப முகங்கொடுக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு நோக்கினால்.. இந்த மாற்றம் யாழுக்கு அவசியம். நல்லாவும் இருக்குது. :)

மாற்றங்களை மக்கள் உடனடியாக வரவேற்காவிட்டாலும்.. காலப்போக்கில் அதன் தன்மை உணர்ந்து பாராட்டுவது யாழிலும் தொடர்கதை தான். :)

Share this post


Link to post
Share on other sites
 • 0

யாழ் இலகுவாக உபயோகிக்கக் முடிகிறதா? என்ற கேள்விக்கான பதில்கள் தெளிவாக வர இன்னும் சில நாட்கள் எடுக்கலாம். காரணம் எந்தப் பொட்டுக்குள்ளாலும் என்போன்றவர்கள் நுழைந்து வேடிக்கை பார்ப்போம். காரணம் யாழ் இணையத்தின் மீதான அதன் தொழில் நுட்பம் மீதான நீண்டநாள் நம்பிக்கையும் நட்பும் ஆகும். இந்த யாழ்களத்தை குளமாக்கி குட்டையாக்கி அந்த சேற்றுக்குள் தோய்ந்தவர்களுக்கு யாழின் மாற்றங்களை இலகுவாக தமக்கிசைவாக்க மாற்றிவிடமுடியும். எல்லோராலும் அது சாத்தியம் அற்றது. ஆதலால் சிறிது தாமதமாகவே சரியான பதில்கள் கிடைக்கும். கடந்த வெள்ளி சனி வார இறுதி நாட்களில் இங்கு உலாவியதில் சில மாற்றங்கள் அவற்றை கையாள்வது எப்படி என்று சுயம்புவாக இதற்குள் பயணிக்க முடிந்தது. சந்தேகங்கள் வரும்நேரமெல்லாம் திண்ணையில் வெளிப்படுத்தக்கூடிய அதி உச்சப்பரிச்சயம் இருந்தது. எனக்கு போனில் இதனை எப்படி உபயோகிக்க முடிகிறது இலகுவாக இருக்கிறதா என்று தெரியாது... ஆனால் வீட்டு கொம்பியில் தெளிவாக இருக்கிறது. பச்சைச்சிரிப்பு காணாமல் போன குறைதான் தற்சமயம் தெரிகிறது. என்ன பழைய திரிகளுக்கு முகநூலில் கொடுத்த லிங்குகள் எல்லாம் தடைப்பட்டுவிட்டன. மாற்றங்கள் வரவேற்கப்படவேண்டும். தொழில் நுட்பத்தின் வேகத்திற்கேற்ப மாற்றம் செய்யப்படாவிட்டால் பழைய கணக்கில் சேர்த்துவிடுவார்கள். சில நாட்களின் பின்னரே வாக்களிப்பதாக இருக்கிறேன்.:rolleyes:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
 • 0

எனக்கு இதுவரை ஒரு பிரச்சினையும் தெரியவில்லை.. நான் ஆப்பிள் மினி பாவிப்பதால் அஞ்சல் எழுத்து மூலம் நேரடியாக எழுதுகிறேன்.

:o

Share this post


Link to post
Share on other sites
 • 0

சூப்பரோ, சூப்பர்.

சும்மா சூப்பரோ சூப்பர் எண்டிருக்காமல்.......
பழைய பதிப்பிலைலை இல்லாத சுகத்தை புதிசிலை கண்டதை சொல்லி விவரிச்சால் நாங்களும் சந்தோசப்படுவமெல்லே..

Share this post


Link to post
Share on other sites
 • 0

ரொம்ப ரொம்ப சிலோவா இருக்குது - ஏதாவது பண்ணமுடியுமா?

Share this post


Link to post
Share on other sites
 • 0

ஒவ்வொரு தடவையும் புதிதாக அறிமுகப்படுத்தும் போது கொஞ்ச நாட்களுக்கு கஸ்டமாகத் தான் இருந்தது.

இதுவே சிறிது காலம் போன பின் பழக்கத்துக்கு வந்துவிடும்.

பழைய பதிவில் பதிந்தால் ஓரிரு மணி நேரத்தின் பின் தான் நான் பதிந்ததை பார்க்க முடியும்.

இப்போ பதிந்த உடனேயே நான் எழுதியதை பார்க்க கூடிதாக இருந்தது.

இதையே ஒரு தடவை எழுதிய போது விசுகு பகிடியாக உங்கள் கணனிக்கு எத்தனை வயது என்று கேட்டிருந்தார்.

இப்போதும் அதே கணனியில் தான் எழுதுகிறேன்.

சூப்பரோ சூப்பர்.

Share this post


Link to post
Share on other sites
 • 0

திண்ணை ஒன்றுமாய் விளங்கவில்லை .மற்றப்படி சுகம் சுகமே .

Share this post


Link to post
Share on other sites
 • 0

பழையதில் அலெக்ஸ்சா போன்றவைகளுக்கு உண்மையான தரவுகள் குழப்பமானவைகளாக போய் சேர்ந்து கடைசியில் அலெக்ஸ்சா காணாமால் போனது வேறை கதை இதில் அப்படியில்லை சில விடயங்கள் காலம் போக எல்லாம் சரியாகிவிடும் என நம்பலாம்.

Share this post


Link to post
Share on other sites
 • 0

திண்ணையில், கடைசியாக எழுதிய.... ஒரு பதிவு மட்டுமே தெரிகின்றது.:o
முன்பு, மற்றையவர்கள் எழுதிய... 10-15 பதிவுகளாவது  தெரிந்தால் தானே.... வாசிக்க, சுவாரசியமாக இருக்கும்.:)

அத்துடன்.... "வெள்ளைப்  பல்லுடன்" சிரிக்கிற சிமைலி, தலையில் "பல்ப்" பூட்டின சிமைலி ஒன்றையும் காணவில்லை.:rolleyes::lol: 

Share this post


Link to post
Share on other sites
 • 0

உள் நுழையும் பயணர் பெயர் ஆங்கிலத்தில் வைத்திருத்தல் பலவகையில் நன்மை தரும் என்பது என் அனுபவத்தில் காண்பது.      தற்சமயம் வக்கேசனில் வேறு நாட்டில் நிற்கிறேன் இணைய வசதி இருந்தும் தமிழில் எனது பெயர் தெரிவதால் இங்குள்ள கணனியால் உள்வரமுடியவில்லை.........

 

      

Share this post


Link to post
Share on other sites
 • 0

வல்வை அக்கா,
முதலில்.... "வக்கேசனை", சந்தோசமா அனுபவிச்சு போட்டு வாங்கோ....
உள்ளூரிலை எங்களுக்கே.... மன்டையிலை, மயிர் கொட்டுண்டு போச்சு. :lol:

Share this post


Link to post
Share on other sites
 • 0

பழகப் பழக பால் புளித்தது - இறந்தகாலம்.

பழகப் பழக யாழ் இனிக்கும் - எதிர்காலம்.   

hear-hear-hearing-ears-smiley-emoticon-0 

 

 

Share this post


Link to post
Share on other sites
 • 0

பழகப் பழக பால் புளித்தது - இறந்தகாலம்.

பழகப் பழக யாழ் இனிக்கும் - எதிர்காலம்.   

hear-hear-hearing-ears-smiley-emoticon-0 

 

 

ஆகா....ஆகா......
இதுக்குத்த்தான்.... யாழ் களத்தில், பெருசுகள் இருக்க வேணும்.:rolleyes::lol:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Answer this question...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.