Jump to content

ஜெனீவா மனித உரிமை கழகத்தில் ஒரு முக்கிய நிகழ்வு!


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பசுமைத்தாயகம் ,USTPAC உடன் இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கமைப்பு.

 

ஆட்சிமாற்றத்தின் பின் மேற்குலக நாடுகள் இலங்கை அரசிற்கு நெருக்கடி வராமல் தவிர்ப்பதற்காக மனித உரிமைக் கழகத்தில் மார்ச் 2015 இல் வர இருந்த தீர்மானம் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் சர்வதேச விசாரணையை கைவிட்டு இலங்கை அரசின் உள்ளக விசாரணையாக அதனை நீர்த்து போகச் செய்வதற்கு திரைமறைவில் உலக அரங்கிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச்மாதத்திலிருந்து இந்தப் போக்கினை மாற்றுவதற்காகவும் இத்திரைமறைவுச் சதியினை அம்பலப்படுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவை சகோதர அமைப்புகளுடன் இணைந்து கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகிறது.

 

குறிப்பாக முன்னைய ஸ்ரீலங்கா அரசும் இன்றைய அரசும் உலக அரங்கில் முகம் கொடுக்க தடுமாறும் விடயமாகிய இறுதி யுத்த காலகட்டத்தில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை 6 வருடங்களாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறை தலைவர் திரு.நடேசன், திரு.புலித்தேவன் உற்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நகர்ந்த பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற விபரங்களை ஸ்ரீலங்கா அரசு வெளியிட வேண்டுமென்பதனை வலியுறுத்தும் பல செயற்பாடுகளை பிரித்தானியா தமிழர் பேரவை முன்னெடுத்து வருகிறது.

 

எதிர்வரும் ஜூன் 24ம் திகதி ஜெனீவா வில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகத்தினுள் இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்கண்ட சாட்சியாளர்களை வரவழைத்து நிகழ்வு ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை, பசுமைத்தாயகம், USTPAC என்பன இணைந்து ஒழுங்கு படுத்தியுள்ளன. 29ஆவது கூட்டத்தொடரிற்கு வருகை தந்துள்ள பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல விடயங்கள் ஐநா மன்றத்தில் முன் வைக்கப்பட்டு ஸ்ரீலங்கா அரசு தன் உள்ளக விசாரணை மூலம் நீதியை மூடி மறைப்பதை வெளிக் கொண்டு வருவதுதான் இந்நிகழ்வின் முக்கிய விடயமாகும்.

 

இன் நிகழ்வில் ஸ்ரீலங்கா அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று சரணடைந்தவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் . உலக தமிழ் மக்கள் ஒரு நீதியான சர்வதேச சுயாதீன விசாரணையைத்தான் வலியுறுத்தி வருகின்றார்கள் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்படும்.

 

பிரபல்யம் வாய்ந்தவர்கள் இந்நிகழ்வில் பேச்சாளர்களாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரம் உயிர்களுக்கு நடந்த கொடுமைகள் நீண்ட காலத்திற்கு உலகிடம் மறைக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை ஓயாது செயற்படுவோம் என்று பிரித்தானியா தமிழர் பேரவை தமிழ் மக்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

 

பிரித்தானிய தமிழர் பேரவை

-- 
media@tamilsforum.com

working together for peace with justice and dignity

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் இந்த தளத்தில். மருதருடனும், இன்னுமொருவருடனும் விவாதித்துளேன்.  ஹொங்கோங்க்கினை இழந்து விட்ட மேற்குலகுக்கு, ஒரு பொருளாதார தளம் தேவை படுகின்றனது. ஆசியாவின் 7 பொருளாதார புலிகளும் பிரச்சனை உள்ளவர்கள். தென்கொரியாவின் பிரச்சனை வட கொரியா. தாய்லாந்தின் பிரச்சனை, அரசியல் நிலைப்பாட்டில் தளம்பல். இந்தோனேசியா, மலேசியா முஸ்லிம் நாடுகள். சிங்கப்பூரிலோ 72% சீனர்கள். தைவான், சீனாவின் கழுகுகண்களில். ஹொங்கோங் போயே போய் விட்டது. இலங்கையில் சீனா தென்பகுதியில் புகுந்து விட்டது. மிஞ்சி இருப்பது வட, கிழக்கு. அந்த பகுதிகளின், பூர்வீக  குடிகள் பலர் இப்போது மேலை நாடுகளின் குடிகள். நம்பிக்கை வைக்க கூடியவர்கள். இந்த அகதிகளாக சென்று குடிகளான, 'குடியியல் நிலை' சார்ந்த நம்பிக்கையே, மத்திய கிழக்கில், இஸ்ரேல் என்னும் பலமிக்க நாடு ஒன்றினை அமைக்கவும், இன்றுவரை அமெரிக்க சார்பு நாடாக அது இருக்கவும் முடிந்தது. அந்த நம்பிக்கையே அமெரிக்கா கொண்டுள்ளது. அதனை செயல்படுத்தவே, இப்போதைய அழைப்பு மட்டுமல்ல, கோத்தபாய ஜனாதிபதி ஆகியதும் நடந்தது.  ஒரு போர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரது குரல் சர்வதேசத்தில் வலுவாக இராது என்பதாலேயே, அமெரிக்க குடியுரிமையினை வேகமாக ரத்து செய்து, போட்டி இட வைத்தார்கள்.
  • இதயமே இதயமே இறைவனைத் தேடு இகமதில் இறைவனின் புகழினைப் பாடு (2) உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமும் அடைந்தது (2)  பாறையும் கேடயமுமாம் எந்தன் தந்தையே பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே இறைவனே இறைவனே இறைவனே வானில் நின்று மானிடரைக் காணும் தெய்வமே வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே (2) நீதியும் நேர்மையுமாய் வழி நடத்துமே நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே  இறைவனே இறைவனே இறைவனே இறைவனே இயேசுவின் திருநாம கீதம்      
  • புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா    52 Views இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.   https://www.ilakku.org/?p=47331
  • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏  ஏழையாக வாழ்ந்ததேனோ யா ரசூலுல்லாஹ்    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.