Jump to content

அஜீரணத்தை விரட்டும் அருமருந்து


Recommended Posts

நம் உடலில் பல்­வேறு உறுப்­பு­களின் கூட்டு முயற்­சியால் செரி­மானம் நடை­பெ­று­கி­றது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், கல்­லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்­புகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

health-11.jpg

உணவு செரிப்­பது எப்­படி?நாம் உண்ணும் உண­வா­னது, நாக்கில் உள்ள உமிழ்­நீ­ருடன் கலக்­கி­றது. நாக்­கினால் உணவை புரட்டி, பற்­களால் அரைத்­ததும், தொண்டை வழி­யாக இரைப்­பைக்கு செல்­கி­றது.இரைப்­பைக்குள் உணவு குறைந்­தது 4 மணி நேர­மா­வது இருக்கும்.

இரைப்­பையின் கீழ்ப்­ப­கு­தியில் இருக்கும் சிறு­கு­டலின் சவ்­வுகள் பல்­வேறு மடிப்பு நிலையில் காணப்­படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்­கு­மாக சூழ்ந்திருக்கும். அந்த தசை­களின் உத­வியால், இரைப்­பைக்குள் இருக்கும் உணவு புரட்டி கொடுக்­கப்­படும். இரைப்­பையில் இருந்து வெளி­யாகும் உணவு பொருட்கள், பால் போன்ற திரவ நிலையை அடையும். இதிலும் கரை­யாத உணவுப் பொருட்கள் இருக்கும். அது கொஞ்சம் கொஞ்­ச­மாக சிறு­கு­ட­லுக்குள் தள்­ளப்­படும். அங்­குதான் உணவு முற்­றிலும் ஜீர­ண­மா­கி­றது.

உணவில் இருக்கும் புரதம், சர்க்­கரை மாவு, நிணநீர் போன்­றவை சிறு­கு­ட­லினால் ஜீர­ணிக்­கப்­பட்டு, அவை குடல் உறிஞ்­சி­களால் ரத்­தத்­துக்குள் செலுத்­தப்­ப­டு­கின்­றன. இதற்­கென்று கணை­யத்தில் தக்க அமி­லங்கள் சுரக்­கின்­றன.சிறு­கு­டலின் தொடக்­கத்தில் இட­து­பு­ற­மாக கணையம் இருக்­கி­றது. கல்­லீரல் பித்­தத்தை சுரக்­கி­றது. கணை­யத்­துக்கு ரத்தம் செல்­லும்­போது, இச்­சு­ரப்பு கணை­யத்தை சுரக்கச் செய்­கி­றது. இந்த சுரப்­புகள் ‘என்சைம்’ எனப்­படும் வேதிப்­பொ­ரு­ளாகும்.

என்­சைம்­க­ளா­லேயே நம் உடலில் ஜீரணம் நடை­பெ­று­கி­றது. சுமார் 25 அடி நீளம் இருக்கும் சிறு­கு­டலின் சவ்­வுகள், மிகச் சிறிய விரல் போன்று இருப்­பதால், குட­லுக்கு பல­ம­டங்கு உணவு சத்­துக்கள் கிடைக்­கின்­றன. இதில் செல்லும் உண­வா­னது ஜீர­ண­மாகி, கல்­லீ­ரலில் சத்­தான அமி­லங்­க­ளாக சேமிக்­கப்­ப­டு­கின்­றன.மிகு­தி­யாக உள்­ளவை, ரத்­தத்தின் கல­வை­

யாக மற்ற உறுப்­பு­க­ளுக்குச் செல்லும். உணவில் இருந்து சத்­துக்கள் நீங்­கிய திப்­பிகள் பெருங்­கு­ட­லுக்கு வந்து சேரும். இங்கு சளி சுரக்கும்.

மலத்­துக்கு ஈரம் கொடுப்­ப­தற்கு வேண்­டிய அளவு போக, மிகு­தி­யான நீர்ப்­ப­குதி ரத்­தத்தில் நீக்­கப்­படும்.மேலும் கடி­ன­மான கழி­வுகள், பித்தம், பாக்­டீ­ரியா என்னும் நுண்­ணு­யிர்கள் எல்லாம் சளி­யோடு சேர்ந்து, பெருங்­கு­டலில் உள்ள தசை­களால் ஆச­னத்­துக்குள் தள்­ளப்­படும். இது, பொது­வாக நடை­பெறும் உணவு செரி­மா­ன­மாகும். மேற்­கூ­றிய உறுப்­பு­களில் ஏதேனும் ஒன்று ‘மக்கர்’ செய்தால், உணவு செரி­மானம் ஆவதில் குள­று­படி ஏற்­படும்.

ஆகவே, நாம் உண்ணும் உணவு நம் உட­லுக்கு சக்தி தரக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும். நாக்கு ருசிக்­காக அடிக்­கடி சாப்­பி­டாமல், பசித்­தபின் உண­வ­ருந்த வேண்டும். அதி­க­ளவு உணவு, அடிக்­கடி உணவு, பீட்சா மற்றும் பர்கர் போன்ற மாச் சத்து உண­வு­களை அதிகம் சேர்ப்­பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து உண­வு­களை நிறைய சாப்­பி­டு­வதால் நமக்கு ஜீரண கோளா­றுகள் வரலாம்.

ஜீரண கோளாறை தடுப்­பது எப்­படி?

நம் அன்­றாட வாழ்க்­கையில் இத்­த­கைய இடர்­பா­டு­களை களைய, ஏரா­ள­மான கை வைத்­தி­யங்கள் உள்­ளன.1. ஆப்பிள் பழத்தை சாறு பிழிந்து குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். 2. திராட்டை பழத்தின் கொட்­டையை நீக்­கி­விட்டு, அதை சாறு பிழிந்தும் குடிக்­கலாம். கொய்யா மரத்தின் கொழுந்து இலை­களைப் பறித்து சாப்­பி­டலாம். கொத்­த­மல்லி விதையை வறுத்து சாப்­பிட்டால், ஜீர­ண­மா­காமல் வரும் பேதி நிற்கும். கொஞ்சம் கல் உப்பை வறுத்­ததும் நீரில் கரைத்து, வெறும் வயிற்றில் அரை டம்ளர் குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் முத­லி­ய­வற்றை 100 கிராம் எடுத்து, இவற்­றுடன் பூண்டு 50 கிராம் சேர்த்து பொடி செய்து, சாதத்­துடன் கலந்து சாப்­பி­டலாம்.

ஒரு பங்கு வசம்­புக்கு 10 பங்கு வெந்நீர் சேர்த்து கஷா­ய­மாக வடி­கட்டி, ஒரு டம்ளர் வீதம் குடித்தால் வயிறு மந்தம் நீங்கும். ஒரு துண்டு இஞ்­சியை நன்­றாக அரைத்து, ஒரு டம்ளர் எலு­மிச்சை சாறுடன் சேர்த்து காய்ச்சி வடி­கட்டி குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். சுக்கு, இல­வங்கப் பட்டை, ஏலக்காய் என மூன்­றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, மதிய உணவுக்கு முன் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறு போயே போச்சு!‘இதற்கெல்லாம் நான் தயார்’ என நீங்கள் வயிறு முட்ட சாப்பிடலாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தானே! எனவே, நாள்தோறும் நாம் அளவோடு சாப்பிட்டு, எவ்வித உடல்நலக் கோளாறும் இன்றி நீண்ட நாள் வாழலாம்.

http://www.virakesari.lk/articles/2015/06/25/அஜீரணத்தை-விரட்டும்-அருமருந்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.